PDA

View Full Version : மோசமான தம்பி யார்?

gragavan
05-01-2006, 08:35 AM
மன்றத்து நண்பர்களே. சென்ற விவாதத்தில் நல்லவன் யாரென்று விவாதித்தோம். இந்தத் திரியில் கெட்டவன் யாரென்று விவாதிப்போம்.

இலக்கியத்தில் பல தம்பிகள் உள்ளனர். இவர்களில் மோசமான தம்பி யார் என்று இங்கு முடிவெடுப்போமா? (அரசியல் பேசவில்லை என்று தெளிக.)

சிங்கமுகாசுரன்
சுக்ரீவன்
வீடணன்
கும்பகருணன்
விகர்ணன்

வேறு யாரையும் நீங்கள் சேர்க்க விரும்பினால் அவரையும் விவாதத்தில் சேர்த்துக் கொள்ளலாம்.

என்ன தயாரா?

தாமரை
05-01-2006, 08:48 AM
தம்பியாக பிறந்தால் அண்ணனுக்காக சாகவேன்டும் என்பது மூட நம்பிக்கை. இந்த மூட நம்பிக்கை வளரக் கூடாது, தர்மத்தின் பக்கமே மக்கள் நிற்க வேண்டும். எனவே நன்றி கெட்ட தம்பி என்ற வார்த்தையை கண்டித்து, இந்த வாக்கெடுப்பிலிருந்து வெளிநடப்பு செய்கிறேன்

gragavan
05-01-2006, 08:50 AM
அடடே! என்ன செல்வம் இது. சரி. நன்றி கெட்ட என்பதை விடுவோம். மோசமான என்று வைத்துக் கொள்வோமே! வாங்க வாங்க. இப்படி ஓடிப் போனா எப்படி?

gragavan
05-01-2006, 08:51 AM
செல்வம். நன்றி கெட்டங்கறத எடுத்தாச்சு. வாங்க இப்ப வந்து கருத்துகள வையுங்க. என்னைய வையாதீங்க.

தாமரை
05-01-2006, 08:58 AM
கண்ணன், லக்குமணன், பீமன், சகுனி இவர்களையும் சேர்க்கலாமே

gragavan
05-01-2006, 10:03 AM
ரொம்பச் சரி. கண்ணன், இலக்குவன், பீமன்...சரி. சகுனி யாருக்குத் தம்பி? காந்தாரிக்கு அண்ணன் தானே சகுனி!

ஐயா அட்மினிஸ்டிரேட்டர், இந்த மூனு பேரையும் pollல சேத்துருங்கய்யா!

sarcharan
05-01-2006, 10:18 AM
அண்ணா
நீங்கள் தப்பித்துக்கொள்ள ஒரு நொண்டிச்சாக்கு கிடைத்துவிட்டது....

ஹ்ம்ம்ம் இந்த கவிஞர்களே இப்படித்தான் போல:rolleyes: :D

தம்பியாக பிறந்தால் அண்ணனுக்காக சாகவேன்டும் என்பது மூட நம்பிக்கை. இந்த மூட நம்பிக்கை வளரக் கூடாது, தர்மத்தின் பக்கமே மக்கள் நிற்க வேண்டும். எனவே நன்றி கெட்ட தம்பி என்ற வார்த்தையை கண்டித்து, இந்த வாக்கெடுப்பிலிருந்து வெளிநடப்பு செய்கிறேன்

gragavan
05-01-2006, 10:25 AM
அண்ணா
நீங்கள் தப்பித்துக்கொள்ள ஒரு நொண்டிச்சாக்கு கிடைத்துவிட்டது....

ஹ்ம்ம்ம் இந்த கவிஞர்களே இப்படித்தான் போல:rolleyes: :Dதப்பிக்கிறவங்க தப்பிக்கட்டும். உங்க கருத்தைச் சொல்லுங்க. ஓட்டையும் போடுங்க.

தாமரை
05-01-2006, 10:25 AM
அண்ணா
நீங்கள் தப்பித்துக்கொள்ள ஒரு நொண்டிச்சாக்கு கிடைத்துவிட்டது....

ஹ்ம்ம்ம் இந்த கவிஞர்களே இப்படித்தான் போல:rolleyes: :D

என்னை அண்ணா என்று அழைத்திருக்கிறீர்கள்.. இதை மனதில் வைத்துக் கொண்டு சொல்லவும்

தம்பியாக பிறந்தால் அண்ணனுக்காக சாகவேன்டும் என்பது மூட நம்பிக்கை.

இக்கருத்து சரியா தவறா?
இதுக்குப் பேரு போட்டு வாங்குறது...:D :D :D :D :D B)

gragavan
05-01-2006, 10:44 AM
என்னை அண்ணா என்று அழைத்திருக்கிறீர்கள்.. இதை மனதில் வைத்துக் கொண்டு சொல்லவும்

தம்பியாக பிறந்தால் அண்ணனுக்காக சாகவேன்டும் என்பது மூட நம்பிக்கை.

இக்கருத்து சரியா தவறா?
இதுக்குப் பேரு போட்டு வாங்குறது...:D :D :D :D :D B)ஐயா இதெல்லாம் இருக்கட்டும். மொதல்ல மேல இருக்குறவகள்ளயும் நீங்க சேத்தவகள்ளயும் யாரு மோசமானவுக?

தாமரை
05-01-2006, 11:10 AM
வேற யாரு கண்ணன் தான்.. அண்ணன் விருப்பத்துக்கு மாறாக தங்கையை அர்ச்சுனன் தூக்கிப் போக உதவியன்.. அண்ணனிருக்க துவாரகையை தானே ஆண்டவன்.. இன்னும் எவ்வளவோ சொல்லிக் கொண்டு போகலாம்..

சுக்ரீவன் அண்ணனை நன்கு மதித்து நடந்து வந்தான்.. ஆனால் அண்ணன் தன் மனைவியைக் கைப்பற்றிய பின்புதான் மனைவியை மீட்க போராடினான்..

வாலி சுக்ரீவனை அவன் மனைவியுடன் விரட்டி விட்டு இருந்தால் சுக்ரீவன் ராமனனிடம் கைகோர்த்தே இருக்க மாட்டான். ரிஷ்யமுக பர்வததிலேயே காலத்தை கழித்திருப்பான்.

aren
05-01-2006, 11:12 AM
இப்போது இன்னொரு புதுச்சண்டை ஆரம்பமாயிட்டுசா? பலே!! பலே!!

தொடரட்டும்.

gragavan
05-01-2006, 11:28 AM
செல்வம், கண்ணனை எப்படிச் சொல்றது? ஏன்னா துவாரகையே கண்ணன் உருவாக்கிய நகரந்தானே. அப்புறம் அண்ணனுக்கு அங்க எப்படிப் பதவி கிடைக்கும்.

அண்ணனுக்குப் பிடிக்காதவன் கூட தங்கச்சிய ஓட வெச்சது உண்மைதான். ஆனா தங்கச்சிக்கு அவனப் பிடிச்சிருந்ததே. ஓடலைன்னா மனசுக்குப் பிடிக்காதவனோட அண்ணன் அவளுக்கு கலியாணம் கெட்டி வெச்சிருப்பானே.

gragavan
05-01-2006, 11:31 AM
சுக்ரீவன் அண்ணனை நன்கு மதித்து நடந்து வந்தான்.. ஆனால் அண்ணன் தன் மனைவியைக் கைப்பற்றிய பின்புதான் மனைவியை மீட்க போராடினான்..

வாலி சுக்ரீவனை அவன் மனைவியுடன் விரட்டி விட்டு இருந்தால் சுக்ரீவன் ராமனனிடம் கைகோர்த்தே இருக்க மாட்டான். ரிஷ்யமுக பர்வததிலேயே காலத்தை கழித்திருப்பான்.
சுக்ரீவன மோசமான தம்பீன்னு முடிவு சொல்ல முடியாது. ஏன்னா...அவன் அண்ணனுக்குத் தம்பியா நல்லாத்தான் இருந்தான். அண்ணன் வந்து அடிச்சு வெரட்டுனப் புறந்தான் காட்டுக்குள்ள வந்திருந்தான். பொண்டாட்டிய வேற அண்ணன் பிடுங்கிக் கிட்டான். கொரங்குகள்ள இது சகஜமுன்னு வெச்சுக்கோங்களேன். ஏன்னா....அண்ணனுக்கு அப்புறம் தாரைய தம்பிதான காப்பாத்தி வெச்சுருந்தான். தனக்கு அப்புறம் அண்ணன் மகந்தான் பட்டத்துக்கு வரனுமுன்னு அங்கதனுக்குத்தான் இளவரசுப் பட்டமும் கட்டினான்.

gragavan
05-01-2006, 11:35 AM
சிங்கமுகன் எப்படி? அவனத் திட்டி யாரும் சொல்லலையே?

தாமரை
05-01-2006, 11:40 AM
ஏம்ப்பா.. அஸ்வமேத யாகம் செஞ்சு தர்மன் சக்கரவர்த்தியாக பாடுபட்டவன் யாரு? பீமனும் அர்ச்சுனனும்..

ராமன் அஸ்வமேத யாகம் செஞ்சப்ப குதிரை பின்னாடி போனது யாரு, லக்குவணும் சத்ருக்கனனும்..

மதுரா தலை நகரா இருந்தப்பவும் வசுதேவருக்கு பின்னால கண்ணன் தான் அரசன்.. அண்ணன் ஆளனணும் அப்படின்னு மூச்சு கூட விடலியே...

அர்ச்சுனன் உயர்ந்தவன் என்றால் அண்ணனுக்கு எடுத்துச் சொல்லி போராடிப் பார்த்தானா? இல்லையே!

தம்பியோட டாமினேஷன் அப்படின்னா அது பலராமன் கண்ணன் விஷயத்தில்தான்.

குடும்பம்னா முதல்ல மூத்தவங்களுக்கு மரியாதை தரணும். மூத்தவங்க தப்பு செஞ்சா எடுத்துச் சொல்லணும்.. கேட்கலைன்னா அப்புறமாதான் நடவடிக்கை.

தாமரை
05-01-2006, 11:42 AM
சிங்கமுகன் எப்படி? அவனத் திட்டி யாரும் சொல்லலையே?

ஓட்டுப் போட்டு நீங்களே திட்டிப் பாருங்களேன்

gragavan
05-01-2006, 11:45 AM
ஏம்ப்பா.. அஸ்வமேத யாகம் செஞ்சு தர்மன் சக்கரவர்த்தியாக பாடுபட்டவன் யாரு? பீமனும் அர்ச்சுனனும்..

ராமன் அஸ்வமேத யாகம் செஞ்சப்ப குதிரை பின்னாடி போனது யாரு, லக்குவணும் சத்ருக்கனனும்..

மதுரா தலை நகரா இருந்தப்பவும் வசுதேவருக்கு பின்னால கண்ணன் தான் அரசன்.. அண்ணன் ஆளனணும் அப்படின்னு மூச்சு கூட விடலியே...

அர்ச்சுனன் உயர்ந்தவன் என்றால் அண்ணனுக்கு எடுத்துச் சொல்லி போராடிப் பார்த்தானா? இல்லையே!

தம்பியோட டாமினேஷன் அப்படின்னா அது பலராமன் கண்ணன் விஷயத்தில்தான்.

குடும்பம்னா முதல்ல மூத்தவங்களுக்கு மரியாதை தரணும். மூத்தவங்க தப்பு செஞ்சா எடுத்துச் சொல்லணும்.. கேட்கலைன்னா அப்புறமாதான் நடவடிக்கை.கம்சன் கிட்ட இருந்து மதுரையக் காப்பாத்துனதே கண்ணந்தானே. அப்புறம் எப்படி உரிமை அண்ணனுக்குப் போகும். குதிரைக்குப் பின்னாடிதான தம்பிங்க போனாங்க. ஆனா இங்க அண்ணனே தம்பிக்குப் பின்னாடி போனதுதான நடந்தது. பலராமன் போயி கம்சனக் கொன்னிருந்தா பதவி அவனுக்குக் கிடைச்சிருக்கும். ஒப்புக்குச் சப்பாணியா அண்ணன் இருந்தா என்ன செய்ய?

இதே மாதிரி அண்ணன் திருதிராஷ்டிரன் குருடனா இருந்தப்ப தம்பி பாண்டு பதவிக்கு வரலையா?

gragavan
05-01-2006, 11:46 AM
ஓட்டுப் போட்டு நீங்களே திட்டிப் பாருங்களேன்சிங்கமுகன் என்னப் பொருத்தவரைக்கும் நல்லவன். அதுனால நான் அவனத் திட்ட மாட்டேன். நான் போட்டா வீடணனுக்குத்தான் ஓட்டு போடுவேன்.

sarcharan
05-01-2006, 11:54 AM
சரியாச்சொன்னீங்க

ஐயாமாரே,

சமுத்திரம், நாட்டாமை மற்றும் பல எம்.ஜி.ஆர் படங்கள
பாத்ததில்லையா?

ஓ நீங்க ஸ்டாலின், மு.க. முத்து பத்தி சொல்றீங்களா?B)

ஏம்ப்பா.. அஸ்வமேத யாகம் செஞ்சு தர்மன் சக்கரவர்த்தியாக பாடுபட்டவன் யாரு? பீமனும் அர்ச்சுனனும்..

ராமன் அஸ்வமேத யாகம் செஞ்சப்ப குதிரை பின்னாடி போனது யாரு, லக்குவணும் சத்ருக்கனனும்..

மதுரா தலை நகரா இருந்தப்பவும் வசுதேவருக்கு பின்னால கண்ணன் தான் அரசன்.. அண்ணன் ஆளனணும் அப்படின்னு மூச்சு கூட விடலியே...

அர்ச்சுனன் உயர்ந்தவன் என்றால் அண்ணனுக்கு எடுத்துச் சொல்லி போராடிப் பார்த்தானா? இல்லையே!

தம்பியோட டாமினேஷன் அப்படின்னா அது பலராமன் கண்ணன் விஷயத்தில்தான்.

குடும்பம்னா முதல்ல மூத்தவங்களுக்கு மரியாதை தரணும். மூத்தவங்க தப்பு செஞ்சா எடுத்துச் சொல்லணும்.. கேட்கலைன்னா அப்புறமாதான் நடவடிக்கை.

தாமரை
05-01-2006, 11:56 AM
கம்சன் கிட்ட இருந்து மதுரையக் காப்பாத்துனதே கண்ணந்தானே. அப்புறம் எப்படி உரிமை அண்ணனுக்குப் போகும். குதிரைக்குப் பின்னாடிதான தம்பிங்க போனாங்க. ஆனா இங்க அண்ணனே தம்பிக்குப் பின்னாடி போனதுதான நடந்தது. பலராமன் போயி கம்சனக் கொன்னிருந்தா பதவி அவனுக்குக் கிடைச்சிருக்கும். ஒப்புக்குச் சப்பாணியா அண்ணன் இருந்தா என்ன செய்ய?

இதே மாதிரி அண்ணன் திருதிராஷ்டிரன் குருடனா இருந்தப்ப தம்பி பாண்டு பதவிக்கு வரலையா?
ஜராசந்தன் கிட்ட தர்மர் போய் சண்டை போட்டிருந்தா தெரியும் சேதி..

பலராமன் பாவம் அப்பாவி..அங்க கீனமானவர்கள் அரசராய் இருத்தல் தவிர்க்கப் படவேன்டும் அப்படிங்கற விதியின் அடிப்படையில் தான் பான்டு ராஜா ஆனார்.

பலராமன் ஒப்புக்கு சப்பாணி இல்லை.. அவருடைய கதாயுத பிரயோகமும் மற்றும் பலமும் ஈடற்றவை..

பாரதப் போரிலே 100 கௌரவ சகோதிரர்களை கொன்றது பீமன். பீஷ்மர், த்ரோணர், கர்ணன், அஸ்வத்தாமா இவர்களை வீழ்த்தியது அர்ச்சுனன். ப்ளன்போட்டுக் குடுத்தது கண்ணன். தர்மன் ராஜா.

அரசனைக் வென்றவன் அரசன் அப்படின்னா பீமன் தானே அரசனாக ஆகி இருக்கணும்

pradeepkt
05-01-2006, 12:06 PM
அதானே பாத்தேன்..
வேக வேகமா வீடணனுக்கு ஓட்டுப் போடுறேன்னு சொல்லிட்டீங்களா...
ஏன்னா அவனும் சுக்ரீவனும்தான் உங்க லிஸ்ட்டுல odd men out. அதில பாருங்க, வீடணன் தன் மனக் கருத்துப் படி நடந்தான். நல்ல அண்ணனுக்கு நல்ல தம்பியா இருந்திருக்க வேண்டியதுதான். ஆனா அவனுக்கு வாய்ச்ச அண்ணன் அப்படி!
என்ன செய்வான் பாவம்? அத்தோட இலங்கை அரசுப் பதவி வேற இந்திரஜித்துக்குப் போயிருக்கும். சொல்லிப் பாத்தான், வேகலை, நேரா வந்து எதிரி கால்ல விழுந்துட்டான்...

pradeepkt
05-01-2006, 12:07 PM
சுக்ரீவனுக்கு ஒரு நியாயம் இருக்குன்னா வீடணனுக்கும் இருக்கு. இதில சேஃபா ரெண்டு பேருக்கு ஓட்டுப் போடுற மாதிரி இல்லையே, நான் ரெண்டு பேருக்கு எப்படிப் போடுறது?

gragavan
05-01-2006, 12:08 PM
ஜராசந்தன் கிட்ட தர்மர் போய் சண்டை போட்டிருந்தா தெரியும் சேதி..

பலராமன் பாவம் அப்பாவி..அங்க கீனமானவர்கள் அரசராய் இருத்தல் தவிர்க்கப் படவேன்டும் அப்படிங்கற விதியின் அடிப்படையில் தான் பான்டு ராஜா ஆனார்.

பலராமன் ஒப்புக்கு சப்பாணி இல்லை.. அவருடைய கதாயுத பிரயோகமும் மற்றும் பலமும் ஈடற்றவை..

பாரதப் போரிலே 100 கௌரவ சகோதிரர்களை கொன்றது பீமன். பீஷ்மர், த்ரோணர், கர்ணன், அஸ்வத்தாமா இவர்களை வீழ்த்தியது அர்ச்சுனன். ப்ளன்போட்டுக் குடுத்தது கண்ணன். தர்மன் ராஜா.

அரசனைக் வென்றவன் அரசன் அப்படின்னா பீமன் தானே அரசனாக ஆகி இருக்கணும்துரியோதனன் அரசன் இல்லையே. அரசன் திருதிராஷ்டிரந்தானே. அப்புறம் எப்படி பீமன் அரசனாக முடியும்.

அர்ச்சுனனுக்கு நாடாளத் தெரியுமா? அவனுக்கு ஊரூருக்கு ராணிகளை அல்டாப்பு பண்ணவே நேரம் சரியா இருந்தது. இதுல அரசாட்சிய அவன நம்பி எப்படிக் குடுக்குறது.

பலராமருக்கு ஒடம்பு பலம் இருந்திருக்கலாம். பீமனுக்குந்தான். ஆனா ஆட்சி செய்ய அறிவு பலம் வேணுமுய்யா! அது தருமர்கிட்டயும் கண்ணன் கிட்டயும் மத்தவங்களை விட நெறையவே இருந்தது.

aren
05-01-2006, 12:09 PM
சிலபேருடைய கதைகள் எனக்கு தெரியாததால் இந்த போட்டியில் எப்படி கலந்துகொள்வது என்று தெரியாமல் முழிக்கிறேன்.

gragavan
05-01-2006, 12:14 PM
அதானே பாத்தேன்..
வேக வேகமா வீடணனுக்கு ஓட்டுப் போடுறேன்னு சொல்லிட்டீங்களா...
ஏன்னா அவனும் சுக்ரீவனும்தான் உங்க லிஸ்ட்டுல odd men out. அதில பாருங்க, வீடணன் தன் மனக் கருத்துப் படி நடந்தான். நல்ல அண்ணனுக்கு நல்ல தம்பியா இருந்திருக்க வேண்டியதுதான். ஆனா அவனுக்கு வாய்ச்ச அண்ணன் அப்படி!
என்ன செய்வான் பாவம்? அத்தோட இலங்கை அரசுப் பதவி வேற இந்திரஜித்துக்குப் போயிருக்கும். சொல்லிப் பாத்தான், வேகலை, நேரா வந்து எதிரி கால்ல விழுந்துட்டான்...ஆக இந்திரஜித்துக்குப் பதவி போயிருமுன்னுதான் விட்டுட்டு வந்தானா? நல்ல தம்பிய்யா! பதவிக்காகதான் வந்தான்னு சொல்றீங்க. இது நியாயமா? அவனுக்குப் பரிஞ்சு நீங்க பேசுறதும் நாயமா?

gragavan
05-01-2006, 12:15 PM
சிலபேருடைய கதைகள் எனக்கு தெரியாததால் இந்த போட்டியில் எப்படி கலந்துகொள்வது என்று தெரியாமல் முழிக்கிறேன்.தெரிஞ்ச கதைகள எடுத்து விடுங்க ஆரென். எல்லாருக்கும் எல்லாந் தெரியுமா! இருக்குற மாவுல பணியாரம்.

தாமரை
05-01-2006, 12:15 PM
துரியோதனன் அரசன் இல்லையே. அரசன் திருதிராஷ்டிரந்தானே. அப்புறம் எப்படி பீமன் அரசனாக முடியும்.

அர்ச்சுனனுக்கு நாடாளத் தெரியுமா? அவனுக்கு அல்டாப்பு பண்ணவே நேரம் சரியா இருந்தது. இதுல அரசாட்சிய அவன நம்பி எப்படிக் குடுக்குறது.

பலராமருக்கு ஒடம்பு பலம் இருந்திருக்கலாம். பீமனுக்குந்தான். ஆனா ஆட்சி செய்ய அறிவு பலம் வேணுமுய்யா! அது தருமர்கிட்டயும் கண்ணன் கிட்டயும் மத்தவங்களை விட நெறையவே இருந்தது.

அப்படி வாங்க வழிக்கு...

ஸோ கண்ணன் அர்ச்சுனன் மாதிரி இல்லைன்றீங்க..
ஸொ தர்மனோட அதிபுத்திசாலிதனம் தான் நாலு தம்பியையும் கூட அவங்களோட மனைவையும் வச்சு சூதாட சொல்லுச்சு..அப்படீங்கறீங்க

அர்ச்சுனனும், பீமனும் சபதமிட்டப்ப தர்மர் என்னப்ப செஞ்சுகிட்டிருந்தார்?

போதும்பா போதும்..

gragavan
05-01-2006, 12:21 PM
அப்படி வாங்க வழிக்கு...

ஸோ கண்ணன் அர்ச்சுனன் மாதிரி இல்லைன்றீங்க..
ஸொ தர்மனோட அதிபுத்திசாலிதனம் தான் நாலு தம்பியையும் கூட அவங்களோட மனைவையும் வச்சு சூதாட சொல்லுச்சு..அப்படீங்கறீங்க

அர்ச்சுனனும், பீமனும் சபதமிட்டப்ப தர்மர் என்னப்ப செஞ்சுகிட்டிருந்தார்?

போதும்பா போதும்..தருமரு செஞ்சது தப்புதான். தப்பே செய்யலைன்னு நான் சொல்லலை. ஆனா ஆட்சித்திறமுன்னு வரும் போது அவரு கொஞ்சம் வெவரமான ஆளத்தான் இருந்துருக்காரு போல.

நான் சொல்ல வந்ததெல்லாம் கண்ணன் அரசனாகத் தகுதி உள்ளவங்குறதுதான். கண்ணன் ஜெயிச்சி அரசனானதால தருமரும் அதையே செஞ்சிருக்கனுமுன்னு எப்படி எதிர் பாக்கலாம். அங்க கத வேற. இங்க கத வேற. ரெண்டையும் ஒப்பிடக் கூடாது.

மதுரைய விடுங்க. தன்னால ஒரு புது நகரமே உண்டாக்க முடியுமுன்னு நிரூபிச்சி, அத உருவாக்கியும் காட்டி, மக்களை அங்க போய் குடி வெச்சு......இதெல்லாம் செஞ்சது கண்ணன். கூடவே ஏரப் புடிச்சிக்கிட்டு நின்னது பலராமன். அந்த ஏரக் கொண்டு உழுதுருந்தாக் கூட ரெண்டு நெல்லு மொளச்சிருக்கும்.

தாமரை
05-01-2006, 12:31 PM
தருமரு செஞ்சது தப்புதான். தப்பே செய்யலைன்னு நான் சொல்லலை. ஆனா ஆட்சித்திறமுன்னு வரும் போது அவரு கொஞ்சம் வெவரமான ஆளத்தான் இருந்துருக்காரு போல.

நான் சொல்ல வந்ததெல்லாம் கண்ணன் அரசனாகத் தகுதி உள்ளவங்குறதுதான். கண்ணன் ஜெயிச்சி அரசனானதால தருமரும் அதையே செஞ்சிருக்கனுமுன்னு எப்படி எதிர் பாக்கலாம். அங்க கத வேற. இங்க கத வேற. ரெண்டையும் ஒப்பிடக் கூடாது.

மதுரைய விடுங்க. தன்னால ஒரு புது நகரமே உண்டாக்க முடியுமுன்னு நிரூபிச்சி, அத உருவாக்கியும் காட்டி, மக்களை அங்க போய் குடி வெச்சு......இதெல்லாம் செஞ்சது கண்ணன். கூடவே ஏரப் புடிச்சிக்கிட்டு நின்னது பலராமன். அந்த ஏரக் கொண்டு உழுதுருந்தாக் கூட ரெண்டு நெல்லு மொளச்சிருக்கும்.
அரசாளும் தகுதிங்கறது இங்க ஒரு பிரச்சனை இல்லை,,,

அண்ணனுக்கு நல்ல தம்பியா இருந்தாராங்கறது தான் பிரச்சனை..

பலராமனை அரசனாக்கி பக்க பலமா நின்னிருந்தா அப்ப சொல்வேன்.. சபாஷ் தம்பி!!!

அதைச் செய்யலை..பேச வந்துட்டாங்க

இந்திரபிரஸ்தத்தை மயனின் மூலம் உருவாக்கியது அர்ச்சுனன்.. அறிவாளின்னா சகாதேவன் .. அய்யா... அண்ணன் அப்படிங்கற ஸ்தானத்துக்காக தர்மன் மன்னன் ஆனான். (மக்களும் விரும்பினாங்க அப்படிங்கறது ஒரு விஷயம்..)

பலராமனும் கண்ணனுக்கு ஈக்வலா சாகஸம் செய்து இருக்கார்.. ஞாபகம் இருக்கட்டும்

பென்ஸ்
05-01-2006, 12:55 PM
அட பாவிகள... ஒரு மீட்டிங் போயிட்டு வாறதுக்குள்ளால 3 பக்கம் போயிட்டிங்களே???

நான் சுக்கிரீவனுக்கு ஓட்டு போட்டேன்யா....
தம்பியா அவன்.. தறுதலை,
அண்ணனை கொல்ல ஒரு கூலியாளை அழைத்து வந்தவந்தானே...

தாமரை
05-01-2006, 01:07 PM
எல்லா பதிவுகளையும் நிதானமா படிச்சுட்டு ஒரு முடிவுக்கு வந்து ஓட்டு போட்டு இருக்கணும் நீங்க...

பென்ஸ்
05-01-2006, 01:12 PM
ம்ம்ம்.. அது சரிதான்...
ஆனால், ஒருவனை சுத்தமா புடிக்கவே புடிக்காது என்று இருக்கும் போது, அப்படி படித்தாலும் பயன் இல்லை...
நண்பர்களே, கண்ணை மூடி தைரியமா ஓட்டு போடுங்கள் சுக்ரிவனே மோசமான தம்பி....

போடுங்கையா ஓட்டு சுக்கிரிவனை பாத்து...
போடுங்கையா ஓட்டு சுக்கிரிவனை பாத்து...

aren
05-01-2006, 01:22 PM
எனக்கு புராணக்கதைகள் அவ்வளவாகத் தெரியாது. எனக்குத் தெரிந்தவரையில், மோசமான தம்பிகள் என்றால் அது சுக்ரீவனையும், விபூஷணனையும் தான் நான் சொல்லுவேன்.

சுயநலத்திற்காக தங்களுடைய அண்ணனின் சாவிற்கு காரணமாக இருந்தவர்கள்.

இதில் ஒருவரை தேர்ந்தெடுக்கவேண்டுமென்றால் எப்படி. கொஞ்சம் யோசிக்கவேண்டும்.

pradeepkt
05-01-2006, 04:10 PM
ஆமா ஆரென் அண்ணா
இவங்க ரெண்டு பேருமே மோசமானவங்கதான்... இதில யாரு ரொம்ப மோசமானவங்கன்னு சொல்லவே முடியாது.

ராகவனுக்கு வீடணனை மட்டும் புடிக்காதுங்கறதால அவரு சுக்ரீவனுக்கு வக்காலத்து வாங்கினாலும் வாங்கலாம்... ஆனால் அது செல்லுபடியாகாது. ஓடிப்போன அண்ணன் பொண்டாட்டிய வச்சிக் காப்பாத்துனானாம், என்னய்யா கூத்து இது? சுக்ரீவனுக்கு மகன் கெடையாது, அதுனால அங்கதனை வச்சிக்கிட்டான். அதுவும் ஏன்? அங்கதனைப் பாத்துக்கிறச் சொல்லி ராமன் முன்னாடி, கவனிக்க, ராமன் முன்னாடி வாலி வாக்குறுதி வாங்கிக்கிட்டான்.

அதே மாதிரி வாலி செத்தவுடனே மழை பெய்யுறதுதான் சாக்குன்னு ஜல்ஸா பண்ணிட்டு இருந்தார் சுக்ரீவ மகாராசா... அண்ணன் எப்பக் காலியாவான், திண்ணை எப்பக் காலியாகும்கிறது இவருகிட்ட இருந்துதானய்யா வந்திருக்கணும்... :D :D அப்புறம் ராமன் டென்ஷன் ஆகி மவனே இப்ப எம்பொண்டாட்டியக் கண்டுபுடிடான்னா நீ அடுத்தவன் பொண்டாட்டியோட கார்காலத்தைக் களி(ழி)க்கிறியான்னு ஒரு போடு போடவும், சுக்ரீவன் பயந்து போயி சீதையத் தேடுறதுக்கு ஆளனுப்பினான். அப்படி ராமன் கோவப் படலைன்னா அங்கதனுக்கு எங்க எளவரசுப் பதவி, தம்பி புதுசா ஒரு எளவரசரை உருவாக்க முயற்சி பண்ணிட்டு இருந்திருப்பார்... ஹூம்!

வீடணனாவது அண்ணன் செஞ்ச தப்புக்காக அவன் பின்னாடி போவாம வெளிய வந்தான். சுக்ரீவ மகாராசா சொந்த அண்ணனைக் கொல்றதுக்காக ராமன்கிட்ட டீல் போட்டுக்கிட்டாரு. எப்படிப் பாத்தாலும் ரெண்டு பயலும் நல்ல தம்பிக கெடையாது. ரொம்ப மோசமான பயகதேன்.

pradeepkt
05-01-2006, 04:11 PM
மோசமான தம்பின்னா... எங்க வீட்டுலயும் ஒரு பய இருக்கான், மோசமான பய... அவனுக்கு ஓட்டுப் போடக் கூடாதா :D :D :D

தாமரை
06-01-2006, 04:19 AM
ஆமா ஆரென் அண்ணா
இவங்க ரெண்டு பேருமே மோசமானவங்கதான்... இதில யாரு ரொம்ப மோசமானவங்கன்னு சொல்லவே முடியாது.

.
வீடணன் ராவணனின் ரகசியங்களை ராமனுக்கு புட்டு புட்டு வைத்தான். மாய சீதையை இந்திரஜித்து வெட்டிய போதும், இந்திரஜித்து யாகம் செய்து தன் வலிமையை பெருக்கிக் கொண்ட போதும், மயில் ராவணன் ராம லக்குவணரை கவர்ந்த போதும் கும்பகர்ணன் போருக்கு வந்த போதும் பெருந்துணையாய் இருந்து காத்தவன் வீடணன்.

சுக்ரீவன் அடியாளை கூட்டிகிட்டு வந்தா, வீடணன் அடியாளாவே மாறிட்டான்.. யார் துரோகின்னு நீங்களே முடிவு பண்ணிக்குங்க.

சுக்ரீவன் தனக்காக வாலியைக் கொல்ல வைத்தான்.. வீடணன் யாருக்காக?

pradeepkt
06-01-2006, 04:37 AM

அப்ப வாலிக்கு எதிராளி பலத்துல பாதி போயிரும்னு ராமனுக்குத் தானாவா தெரிஞ்சுது... சுக்ரீவந்தானய்யா சொல்லிக் குடுத்தான். வாலியின் உயிரை எடுக்கக் கூடிய அளவு செஞ்ச இந்த ஒரு துரோகம் போதாதா?

வீடணன் வேற யாருக்காகய்யா அண்ணனை ராமனை எதிர்க்கச் சொன்னான்? அத்தனை புத்தி சொல்லியும் திருந்தாத ராவணனுக்காக சாகாதது அவன் தப்புன்னா, சுக்ரீவன் தனக்காக, தன் சுகத்துக்காக அண்ணனைக் கொல்ல வச்சதாய்யா நல்லது... நீங்களே உங்க வாயால மாட்டிக்கிட்டீங்க... :D :D
ராமன்கிட்ட வந்து சேந்தப்பவே வீடணன் அவன்கிட்ட சரணடைஞ்சிட்டான். எல்லா ரகசியத்தையும் சொல்லுவேன்னு சொல்லித்தானய்யா வந்து சேந்தான். அவன் எப்ப ராமன் படையில இணைஞ்சானோ அப்பயே எல்லா ரகசியத்தையும் சொல்ல வேண்டியது அவன் கடமையாயிருச்சுல்ல

இப்பச் சொல்லுங்க யாரு பெரிய துரோகின்னு! என் கூற்று ரெண்டு பேருமே ஒரே குட்டையில் மட்டைகள்தான்!

gragavan
06-01-2006, 05:30 AM
மோசமான தம்பின்னா... எங்க வீட்டுலயும் ஒரு பய இருக்கான், மோசமான பய... அவனுக்கு ஓட்டுப் போடக் கூடாதா :D :D :Dஅதெல்லாம் முடியாது. இத ஏத்துக்குற முடியாது. தப்பு. தப்பு. தப்பூன்னேன்.

gragavan
06-01-2006, 05:48 AM
ஆமா ஆரென் அண்ணா
இவங்க ரெண்டு பேருமே மோசமானவங்கதான்... இதில யாரு ரொம்ப மோசமானவங்கன்னு சொல்லவே முடியாது.

ராகவனுக்கு வீடணனை மட்டும் புடிக்காதுங்கறதால அவரு சுக்ரீவனுக்கு வக்காலத்து வாங்கினாலும் வாங்கலாம்... ஆனால் அது செல்லுபடியாகாது. ஓடிப்போன அண்ணன் பொண்டாட்டிய வச்சிக் காப்பாத்துனானாம், என்னய்யா கூத்து இது? சுக்ரீவனுக்கு மகன் கெடையாது, அதுனால அங்கதனை வச்சிக்கிட்டான். அதுவும் ஏன்? அங்கதனைப் பாத்துக்கிறச் சொல்லி ராமன் முன்னாடி, கவனிக்க, ராமன் முன்னாடி வாலி வாக்குறுதி வாங்கிக்கிட்டான்.

அதே மாதிரி வாலி செத்தவுடனே மழை பெய்யுறதுதான் சாக்குன்னு ஜல்ஸா பண்ணிட்டு இருந்தார் சுக்ரீவ மகாராசா... அண்ணன் எப்பக் காலியாவான், திண்ணை எப்பக் காலியாகும்கிறது இவருகிட்ட இருந்துதானய்யா வந்திருக்கணும்... :D :D அப்புறம் ராமன் டென்ஷன் ஆகி மவனே இப்ப எம்பொண்டாட்டியக் கண்டுபுடிடான்னா நீ அடுத்தவன் பொண்டாட்டியோட கார்காலத்தைக் களி(ழி)க்கிறியான்னு ஒரு போடு போடவும், சுக்ரீவன் பயந்து போயி சீதையத் தேடுறதுக்கு ஆளனுப்பினான். அப்படி ராமன் கோவப் படலைன்னா அங்கதனுக்கு எங்க எளவரசுப் பதவி, தம்பி புதுசா ஒரு எளவரசரை உருவாக்க முயற்சி பண்ணிட்டு இருந்திருப்பார்... ஹூம்!

அது எப்படி? வீடணனைப் பிடிக்காதுன்னு சுக்ரீவனப் பாராட்டுரேன்னு சொல்லலாம். சுக்ரீவன் கிட்ட நல்ல பண்பே இல்லையா?

அண்ணன அரக்கன் கொன்னுட்டான்னுதான் கல்லை வெச்சு குகைய அடச்சான். அப்புறம் வந்தும் பதவி ஏற்கலை. அமைச்சருகள்ளாம் வற்புறுத்தி பதவியக் குடுத்தாங்க. ஆனா அண்ணன் வந்துட்டான். அண்ணா வான்னுதான் கூப்புட்டான். நாற்காலிய விட்டு எறங்குனான். ஆனா அந்த அண்ணன் அடிச்சுச் தொரத்துனான். ஊருக்குள்ள வந்த கொன்னுபுடுவேன்னான். அதுனாலதான் காட்டுல இருக்க வேண்டியதாப் போச்சு. பெறகு வந்தவரு கூட சேந்து அண்ணன அடிக்க வேண்டியதாப் போச்சு. மறைஞ்சிருந்து அம்பு விட்டது ராமன் செஞ்ச தப்பு. அத சுக்ரீவன் மேல ஏத்த முடியுமா?

ஆனா வீடணன் கதை அப்படியா? அண்ணனோட உயிர் ரகசியத்தையே போட்டுக் குடுத்தான். இத்தனைக்கும் இராவணன் அவனைப் பொழப்பு போன்னு விட்டுட்டான். அடிக்கலை செய்யலை. இவன் தாறுமாறாப் பேசுனாலும் "
யய்யா நீ அங்க போகனுமுன்னாலும் போன்னு" விட்டவன். ராணுவ ரகசியம், உயிர் ரகசியம் அத்தனையும் தெரிஞ்சவன கொன்னிருக்கனும் அன்னைக்கே. பாவம். ராவணன் நல்லவன். அதான் தம்பி பழி வாங்கீட்டான். எல்லாம் பதவி படுத்தும் பாடு. என்னோட ஓட்ட வீடணனுக்குத்தான் போடுவேன்.

gragavan
06-01-2006, 05:53 AM
அப்ப வாலிக்கு எதிராளி பலத்துல பாதி போயிரும்னு ராமனுக்குத் தானாவா தெரிஞ்சுது... சுக்ரீவந்தானய்யா சொல்லிக் குடுத்தான். வாலியின் உயிரை எடுக்கக் கூடிய அளவு செஞ்ச இந்த ஒரு துரோகம் போதாதா?

வீடணன் வேற யாருக்காகய்யா அண்ணனை ராமனை எதிர்க்கச் சொன்னான்? அத்தனை புத்தி சொல்லியும் திருந்தாத ராவணனுக்காக சாகாதது அவன் தப்புன்னா, சுக்ரீவன் தனக்காக, தன் சுகத்துக்காக அண்ணனைக் கொல்ல வச்சதாய்யா நல்லது... நீங்களே உங்க வாயால மாட்டிக்கிட்டீங்க... :D :D
ராமன்கிட்ட வந்து சேந்தப்பவே வீடணன் அவன்கிட்ட சரணடைஞ்சிட்டான். எல்லா ரகசியத்தையும் சொல்லுவேன்னு சொல்லித்தானய்யா வந்து சேந்தான். அவன் எப்ப ராமன் படையில இணைஞ்சானோ அப்பயே எல்லா ரகசியத்தையும் சொல்ல வேண்டியது அவன் கடமையாயிருச்சுல்ல

இப்பச் சொல்லுங்க யாரு பெரிய துரோகின்னு! என் கூற்று ரெண்டு பேருமே ஒரே குட்டையில் மட்டைகள்தான்!
தொரத்தியடிச்ச அண்ணன் கிட்ட இருந்து பொண்டாட்டியக் காப்பாத்தனும். அதுக்குதானய்ய வழியப் பாத்தான் சுக்ரீவன்.

வீடணுக்கு அப்படி என்ன கஷ்டம்? ராவணன் அவனுக்கு ஒரு கெடுதி பண்ணலையே? இத்தனைக்கும் வீடணன் போனப்புறமும் அவன் பொண்டாட்டி புள்ளைகள் லெங்கைலதான இருந்தாங்க. இராவணன் அவங்களுக்கு ஒரு கெடுதி பண்ணலையே. நல்லாத்தான வெச்சிருந்தான். அப்படி இருந்த அண்ணன இப்படிப் பண்ணீட்டானே. இந்த வீடணன்.

pradeepkt
06-01-2006, 06:23 AM
இன்னைக்குக் கொஞ்சம் வேலை, இருங்க நாளைக்கு உங்க சுக்ரீவனை ஒரு கை பாக்குறேன்.

gragavan
06-01-2006, 06:59 AM
இன்னைக்குக் கொஞ்சம் வேலை, இருங்க நாளைக்கு உங்க சுக்ரீவனை ஒரு கை பாக்குறேன்.சரி. இன்று போய் நாளை வாரும். வந்து சுக்ரீவன் காலை வாறும். வாறித்தான் பாரும்.

தாமரை
06-01-2006, 07:26 AM
அண்ணன்மாரே!!!! இவர்களின் அண்ணன்கள் தவறு செய்பவர்கள்.. கண்ணனின் அண்ணன் தர்மவான்.. என்ன கொஞ்சம் கோபம் அதிகம்.. அந்த அண்ணனை மதிக்கலியே கண்ணன்...... அதுதான் என் கோபம்

gragavan
06-01-2006, 07:39 AM
அண்ணன்மாரே!!!! இவர்களின் அண்ணன்கள் தவறு செய்பவர்கள்.. கண்ணனின் அண்ணன் தர்மவான்.. என்ன கொஞ்சம் கோபம் அதிகம்.. அந்த அண்ணனை மதிக்கலியே கண்ணன்...... அதுதான் என் கோபம்ஐயா! பலராமனுக்கே நல்லாத் தெரியும். கண்ணனுக்கு முன்னாடி தான் ஒன்னுமில்லைன்னு. அதுனாலதான் சும்மாயிருந்தாரு. அவரே சும்மாயிருந்துருக்காரு. நீங்க கேக்குறது துவாரைக்கே கேக்கும் போல இருக்கே.

அது சரி. அண்ணனுக்கு உயிரக் குடுக்குறது மூடத்தனமுன்னா....தான் உண்டாக்கிய நாட்டையும் பதவியையும் அண்ணன் அப்படீங்குற ஒரே காரணத்துக்காக் குடுக்குறதும் மூடத்தனந்தான்.

தாமரை
06-01-2006, 07:51 AM
ஐயா! பலராமனுக்கே நல்லாத் தெரியும். கண்ணனுக்கு முன்னாடி தான் ஒன்னுமில்லைன்னு. அதுனாலதான் சும்மாயிருந்தாரு. அவரே சும்மாயிருந்துருக்காரு. நீங்க கேக்குறது துவாரைக்கே கேக்கும் போல இருக்கே.

அது சரி. அண்ணனுக்கு உயிரக் குடுக்குறது மூடத்தனமுன்னா....தான் உண்டாக்கிய நாட்டையும் பதவியையும் அண்ணன் அப்படீங்குற ஒரே காரணத்துக்காக் குடுக்குறதும் மூடத்தனந்தான்.
கண்ணன் செஞ்சது தப்பு அப்படின்னு சொல்ல வரவில்லை.. நீங்க சொல்லறதை பார்த்தா பலராமன் ஒரு அறிவில்லாதவர் அப்படீங்கற அர்த்தம் வருது.. மதுராவுக்கு கம்சனை ஜெயிக்க கண்ணன் போனப்ப கூடவே வந்து மல்லர்களையும் யானைகளையும் கொன்று உதவி செய்தவர் பலராமர். கதாயுத போரில் ஈடு இணையற்றவர்.. பீம துரியோதனருக்கு கதாயுதப் பயிற்சி அளித்தவரே பலராமர் தான்.

அப்புறம் ஆதிசேடனாகிய லக்குவனுக்கு ராம் அவதாரத்தில் நல்ல தம்பியாக இருந்து சேவை செய்ததால் அடுத்த அவதாரத்தில் சேவை செய்து தன் கடனைக் கழிக்க தம்பியாய் அவதரிப்பேன் என்று ராமன் உரைத்ததாக துணைக்கதையும் உண்டு.

gragavan
06-01-2006, 08:15 AM

என்ன பல்டி இது. கண்ணன் செஞ்சது தப்பு இல்லைன்னா? அவன் எப்படி மோசமான தம்பியா ஆவான்.

பலராமரை நான் ஒன்னும் குறைச்சுச் சொல்லலை. அவருக்குன்னு சில நல்ல தகுதிகள் இருக்கு. நல்ல குஸ்தி போடுவாரு. நாலு ஆளு வந்தாக்கூட நாரு ஆளாக் கிளிச்சிப் போடுவாரு. அதெல்லாம் இல்லைன்னு சொல்லல. ஆனா ஆட்சி செய்யுறதுக்கு அது மட்டும் போதுமா? கண்ணன் வீட்டுல மூத்தது மோளை. இளையது காளைன்னுதான் நான் சொல்ல வந்தேன்.

அப்படீன்னா, கண்ணன் மோசமான தம்பி இல்லைன்னு நீங்க ஒத்துக்கிறீங்க. சரிதானா?

தாமரை
06-01-2006, 08:22 AM
கும்பகர்ணனுக்கு ஓட்டு போட்டவர் கும்பகர்ணனுடைய வண்டவாளத்தை தண்டவாளம் ஏற்றவும்..

gragavan
06-01-2006, 09:20 AM
கும்பகர்ணனுக்கு ஓட்டு போட்டவர் கும்பகர்ணனுடைய வண்டவாளத்தை தண்டவாளம் ஏற்றவும்..அதான! கும்பகருணனைப் போன்ற உலகமகா உத்தமனை மோசமென்று ஓட்டு மட்டும் போட்டுட்டு ஓடலாமா? அந்த பால் மனத்தானை பச்சிளம் குணத்தானை இப்படி மோசம் என்று அபாண்டம் சுமத்தியது யார்? யார்? யார்?

தாமரை
06-01-2006, 09:31 AM
ஆமாம் ..

அண்ட ரண்டமெல்லாம் நடுங்கிட நடுங்கிட
உண்ட சோறையெல்லாம் செரித்திடும் செரித்திடும் சூரன்
பட பட பட வீரன்..

அவரையா குற்றம் சொன்னீர்

pradeepkt
06-01-2006, 09:51 AM
சரி. இன்று போய் நாளை வாரும். வந்து சுக்ரீவன் காலை வாறும். வாறித்தான் பாரும்.
வாருறேனய்யா வாருறேன்...
சுக்ரீவன் நல்லவன்னு சொல்ல உங்களுக்கு என்ன துணிச்சல்?

pradeepkt
06-01-2006, 09:53 AM
ஏய்யா இதுல யாரு யாருக்கு ஓட்டு போட்டாகன்னு தெரிய வழி இல்லையா... அனேகமா அது ஓட்டுப் பெட்டியை உருவாக்கியவருக்குத் தெரிஞ்சிருக்கணுமே...

என்னவோ இன்னைய நிலைமையில நம்ம சுக்குதான் முன்னிலை வகிக்கிறாரு.... ஓட்டை முடிச்சிக்கிருவமா ராகவா?

தாமரை
06-01-2006, 09:56 AM
அதுக்குள்ளயா? இன்னும் ஒருவாரம் ஓடட்டும்.. ஒரு 25 பேராவது ஓட்டு போடணும்..

pradeepkt
06-01-2006, 10:03 AM
ஐயையோ, நான் இன்னும் 19 தடவை ஓட்டுப் போடணுமா?

gragavan
06-01-2006, 10:07 AM
வாருறேனய்யா வாருறேன்...
சுக்ரீவன் நல்லவன்னு சொல்ல உங்களுக்கு என்ன துணிச்சல்?உண்மையச் சொல்லும் பொழுது துணிச்சல் தானா வரும். அதான் சுக்ரீவன் கெட்டவன் இல்லைன்னு சொல்லும் போதும் வந்தது.

gragavan
06-01-2006, 10:11 AM
ஏய்யா இதுல யாரு யாருக்கு ஓட்டு போட்டாகன்னு தெரிய வழி இல்லையா... அனேகமா அது ஓட்டுப் பெட்டியை உருவாக்கியவருக்குத் தெரிஞ்சிருக்கணுமே...

என்னவோ இன்னைய நிலைமையில நம்ம சுக்குதான் முன்னிலை வகிக்கிறாரு.... ஓட்டை முடிச்சிக்கிருவமா ராகவா?ஐயோ! எனக்கும் அதக் கண்டுபிடிக்கத் தெரியலையே! யாராவது பெசல் பெர்மிசன் இருக்குறவுக கண்டு பிடிங்கய்யா! கண்டு பிடிங்க!

சுக்குன்னு ஓட்டு விழுந்தது ஏதோ கூட்டுச் சதியென்று நினைக்கின்றேன். வீடணன் கூட்டத்தார் செய்த சதி. அதை ஒத்துக்கொள்ள முடியாது. இப்பொழுதுதான் போட்டி தொடங்கியிருக்கிறது.

உலகமகா உத்தமன் கும்பகர்ணனை மோசம் எனக்கூறி ஓட்டுப் போட்டிருக்கிறார்கள். அவர்கள் வந்து கருத்தை முதலில் முன் வைக்கட்டும்.

ஆனா ஒன்னு பாத்தீகளா! சிங்கமுகாசுரனை ஒருத்தரும் ஒன்னும் சொல்லலை. உத்தமன் அவன். மாமேதை.

gragavan
06-01-2006, 10:13 AM
ஐயையோ, நான் இன்னும் 19 தடவை ஓட்டுப் போடணுமா?அடடே! அப்ப விழுந்த அத்தன ஓட்டும் நீங்க போட்டதா? இதெல்லாம் உங்களுக்கு எதுக்குய்யா!

தாமரை
06-01-2006, 10:15 AM
விகர்ணனை விட்டுட்டீங்களே! தங்கம்னா தங்கம்..... என்னை வெட்டிட்டு தான் அண்ணனை தொட முடியும் அப்படின்னு பீமனிடம் மார்தட்டி நின்ன மாவீரன்

தாமரை
06-01-2006, 10:19 AM
ஐயையோ, நான் இன்னும் 19 தடவை ஓட்டுப் போடணுமா?
இப்பதான் தெரியுது 9 வதா ப்ரதீப் பேரையும் சேத்துடுங்க ...
6. கண்ணன், 7. பீமன் 8.இலக்குவண் 9.ப்ரதீப்

gragavan
06-01-2006, 10:22 AM
விகர்ணனை விட்டுட்டீங்களே! தங்கம்னா தங்கம்..... என்னை வெட்டிட்டு தான் அண்ணனை தொட முடியும் அப்படின்னு பீமனிடம் மார்தட்டி நின்ன மாவீரன்ஆமாமா! விகருணனும் சிங்கமுகனும் இந்த விஷயத்துல ஒன்னுதான். ரெண்டு பேருமே அண்ணன் தப்பு செய்யும் போது எடுத்துச் சொல்றாங்க. ஆனா அண்ணனுகதான் கேக்கவேயில்லை. ரெண்டு பேருக்குமே முடிவு தெரியும். தெரிஞ்சும் போய்ச் சண்ட போட்டாங்க. ஆயிரம் இருக்கலாம். எங்கண்ணன் மேல கைய வெக்க விடுவேனான்னு சண்டை போட்டாங்க. விகர்ணன உருட்டி சப்பாத்தி மாவு பெசஞ்ச பீமனே அதுக்கு ரொம்ப வருத்தப் படுறான்.

சிங்கமுகாசுரன் சொல்லீட்டுத்தான் போறான். இந்தாப்பா அண்ணா. சண்டைன்னு வந்துருச்சு. நீ செஞ்சது தப்புன்னாலும் நான் அங்க போக மாட்டேன். ஏன்னா வந்துருக்குறது கடவுள். அவர் கைல எது கெடைச்சாலும் பெரசாதமுன்னு போருக்குப் போறான். போனவன் தன்னுடைய முழுத்திறமையையும் காட்டுறான். ஆனா ஆண்டவன் கட்டளைக்கு முன்னாடி அரசகட்டளை நிக்குமா? அதுனாலதான் சிங்கமுகனைக் கொல்லாம அம்மனுக்கு சிங்க வாகனமா அனுப்பி வெச்சாரு முருகரு.

அதுனாலதான் பாருங்க, தன்னோட மகன் பானுகோபன் எறந்தப்பக் கூட அழுகாத சூரன், சிங்கமுகனும் அவ்வளவுதான்னு தெரிஞ்சதும் கதறி அழுகுறான். அங்க நிக்குதுய்யா பாசம்.

gragavan
06-01-2006, 10:23 AM
இப்பதான் தெரியுது 9 வதா ப்ரதீப் பேரையும் சேத்துடுங்க ...
6. கண்ணன், 7. பீமன் 8.இலக்குவண் 9.ப்ரதீப்இத எப்படிச் செய்யுறது. எய்யா ஸ்பெசல் பெர்மிசன் உள்ளவங்க இந்தப் பேரெல்லாம் சேக்கக் கூடாதா?

pradeepkt
06-01-2006, 11:09 AM
ஆக என் பேரைச் சேக்குறதா முடிவு பண்ணிட்டீங்க...
பாருங்க, பாரதி அண்ணன், இளசு அண்ணா, பரம்ஸ் அண்ணா, மனோ அண்ணா, ஆரென் அண்ணா (முக்கியமா இவருதான்) எல்லாரும் ஆளுக்கு ரெண்டு ஓட்டாப் போட்டு என்னை ஜெயிக்க வைக்கப் போறாங்க பாருங்க :D :D :D

pradeepkt
06-01-2006, 11:11 AM
அதுனாலதான் பாருங்க, தன்னோட மகன் பானுகோபன் எறந்தப்பக் கூட அழுகாத சூரன், சிங்கமுகனும் அவ்வளவுதான்னு தெரிஞ்சதும் கதறி அழுகுறான். அங்க நிக்குதுய்யா பாசம்.

ராவணன் இந்த விசயத்தில கொஞ்சம் உஷாரு, மொதல்ல கும்ப்ஸை அனுப்பிட்டுக் கடைசியாத்தான் மகனை அனுப்பினான். கும்ப்ஸ் செத்தப்ப குமுறிக் குமுறி அழுதான். ஆனால் இந்திரஜித்து இந்திர பதவி அடைஞ்சப்ப இடிஞ்சே போயிட்டான்...
ஒருவேளை வீடணன் செத்திருந்தா விக்கி விக்கி அழுதிருப்பானோ? :D :D

pradeepkt
06-01-2006, 11:15 AM
அதுக்குள்ள யாருய்யா வீடணனுக்கு ரெண்டு கள்ள ஓட்டுப் போட்டது?
மரியாதையாச் சொல்லீருங்க,
நான் இதைக் கண்டு புடிக்க முடியாதுன்னு சொன்னாலும் சொன்னேன், ஒடனே எல்லாரும் பாஞ்சு போயிக் கள்ள ஓட்டுப் போட்டுட்டீகளே...

aren
06-01-2006, 12:15 PM
ஐயா! நாட்டையும் பதவியையும் அண்ணன் அப்படீங்குற ஒரே காரணத்துக்காக் குடுக்குறதும் மூடத்தனந்தான்.

இந்த மாதிரி நடக்கவில்லையென்றால் நமக்கு சிலப்பதிகாரம் கிடைத்திருக்குமா? நான் சேரன் செங்குட்டுவனையும், இளங்கோவையும் சொல்கிறேன்.

ஒரு மானிட பிறவியே இப்படி செய்யும்பொழுது, கண்ணன் நிச்சயம் செய்திருக்கனும்.

குட்டையை குழப்பும்
ஆரென்

aren
06-01-2006, 12:16 PM
எல்லாரும் திமுகவில இருந்தீங்களோ, விஞ்ஞானபூர்வமா ஊழல் செய்யக் கத்திருக்கீங்க?

...

இது தேவையில்லாதது. நன்றாக நடந்துகொண்டிருக்கும் ஒரு விவாதத்தில் இது தேவையா? நீக்கிவிடலாமே?

அன்புடன்
ஆரென்

gragavan
06-01-2006, 12:22 PM
ஆக என் பேரைச் சேக்குறதா முடிவு பண்ணிட்டீங்க...
பாருங்க, பாரதி அண்ணன், இளசு அண்ணா, பரம்ஸ் அண்ணா, மனோ அண்ணா, ஆரென் அண்ணா (முக்கியமா இவருதான்) எல்லாரும் ஆளுக்கு ரெண்டு ஓட்டாப் போட்டு என்னை ஜெயிக்க வைக்கப் போறாங்க பாருங்க :D :D :Dஆகா ஒங்க பெருமை ஊருக்கே தெரியுமே........இதுக்கு மேல நாஞ் சொல்ல என்ன இருக்கு.

aren
06-01-2006, 12:24 PM
ஆக என் பேரைச் சேக்குறதா முடிவு பண்ணிட்டீங்க...
பாருங்க, பாரதி அண்ணன், இளசு அண்ணா, பரம்ஸ் அண்ணா, மனோ அண்ணா, ஆரென் அண்ணா (முக்கியமா இவருதான்) எல்லாரும் ஆளுக்கு ரெண்டு ஓட்டாப் போட்டு என்னை ஜெயிக்க வைக்கப் போறாங்க பாருங்க :D :D :D

ஜெயிச்ச என்ன பண்ணப்போறீங்க. ஏதாவது உலகிற்கு நண்மை விளையுமா? சொல்லுங்க செஞ்சுடறோம்.

gragavan
06-01-2006, 12:26 PM
ராவணன் இந்த விசயத்தில கொஞ்சம் உஷாரு, மொதல்ல கும்ப்ஸை அனுப்பிட்டுக் கடைசியாத்தான் மகனை அனுப்பினான். கும்ப்ஸ் செத்தப்ப குமுறிக் குமுறி அழுதான். ஆனால் இந்திரஜித்து இந்திர பதவி அடைஞ்சப்ப இடிஞ்சே போயிட்டான்...
ஒருவேளை வீடணன் செத்திருந்தா விக்கி விக்கி அழுதிருப்பானோ? :D :Dஅதுக்கு வாய்ப்பு வெக்காமத்தான் எங்க அடிச்சா என்ன ஆகுமுன்னு வீடணன் சொல்லிக் குடுத்துட்டானே. அது மட்டுமா, இந்திரஜித்து யாகம் பண்ற எடம், அது இது எதுன்னு வகையில்லாமக் காட்டிக் கொடுத்திருக்கான். அண்ணன் போக்குப் பிடிக்கலைன்னா நடுநிலையா இருந்திருக்கக் கூடாதா! அத விட்டுட்டு! அதுவும் பொண்டாட்டி புள்ளைகளக் கூட்டீட்டுக் கூடப் போகாம....என்ன ஆளுய்யா இந்த வீடணன்.

gragavan
06-01-2006, 12:41 PM
இந்த மாதிரி நடக்கவில்லையென்றால் நமக்கு சிலப்பதிகாரம் கிடைத்திருக்குமா? நான் சேரன் செங்குட்டுவனையும், இளங்கோவையும் சொல்கிறேன்.

ஒரு மானிட பிறவியே இப்படி செய்யும்பொழுது, கண்ணன் நிச்சயம் செய்திருக்கனும்.

குட்டையை குழப்பும்
ஆரென்என்ன ஆரென். குட்டையக் கொழப்புறேன்னு குட்டைக்குள்ளையே விழுந்துட்டீங்க போல.

அண்ணனுக்காக பதவியைக் குடுக்குறது நியாயமுன்னு சொன்னா..அண்ணனுக்காக உயிரக் கொடுக்குறதும் நியாயந்தான். இது சரீன்னா. அது சரி. அது தப்பூன்னா இது தப்பு. அதை இந்த வாதத்தை வச்சவரே ஒத்துக்கிட்டாரே!

தாமரை
09-01-2006, 04:46 AM
அண்ணனுக்காக பதவியைக் குடுக்குறது நியாயமுன்னு சொன்னா..அண்ணனுக்காக உயிரக் கொடுக்குறதும் நியாயந்தான். இது சரீன்னா. அது சரி. அது தப்பூன்னா இது தப்பு. அதை இந்த வாதத்தை வச்சவரே ஒத்துக்கிட்டாரே!
என்னுடைய வாதத்தை குழப்பிமில்லாம புரிந்து கொள்ள வேண்டும்..

நல்லவன் என்பது வேறு.. நல்லதம்பி என்பது வேறு.. எல்லா நல்லவனும் நல்லதம்பி ஆவதில்லை.. ஆனால் நல்லதம்பி நல்லவனாக் இருந்தே ஆக வேண்டும். அண்ணனிடம் உள்ள பாசத்தினால் மட்டுமே ஒருவன் நல்லதம்பி ஆகமுடியாது..

அதனால் தான் சொல்கிறேன் கண்ணன் நல்லவனாக இருக்கலாம்.. நல்ல தம்பி இல்லை...

pradeepkt
09-01-2006, 04:53 AM
நல்ல தம்பிங்கறது ஒரு நல்ல படம்
என் எஸ் கே - அட அதாங்க நிறைய அறிவுரை எல்லாம் சொல்லி சோக்கா நடிப்பாரே, அவரு நடிச்சது...

gragavan
09-01-2006, 04:58 AM
என்னுடைய வாதத்தை குழப்பிமில்லாம புரிந்து கொள்ள வேண்டும்..

நல்லவன் என்பது வேறு.. நல்லதம்பி என்பது வேறு.. எல்லா நல்லவனும் நல்லதம்பி ஆவதில்லை.. ஆனால் நல்லதம்பி நல்லவனாக் இருந்தே ஆக வேண்டும். அண்ணனிடம் உள்ள பாசத்தினால் மட்டுமே ஒருவன் நல்லதம்பி ஆகமுடியாது..

அதனால் தான் சொல்கிறேன் கண்ணன் நல்லவனாக இருக்கலாம்.. நல்ல தம்பி இல்லை...அது எப்படி? ஒருத்தன் நல்லவனா இருந்தா...அவன் நல்ல தம்பியாவும் இருப்பான். அதுல சந்தேகமே இல்லை. கண்ணன் நல்லவன்னா அவன் நல்ல தம்பியும் கூட.

ஒருத்தன் நல்ல தம்பியாக் கூட நடந்துக்க முடியலைன்னா அவன் எப்படி நல்லவனா ஆவான்?

கண்ணன் நல்ல தம்பி.
வீடணன் மோசமான தம்பி.
சுக்ரீவனும் நல்ல தம்பிதான்.
சிங்கனும் விகர்ணனும் தம்பிக்கு இலக்கணங்கள்.

gragavan
09-01-2006, 04:59 AM
நல்ல தம்பிங்கறது ஒரு நல்ல படம்
என் எஸ் கே - அட அதாங்க நிறைய அறிவுரை எல்லாம் சொல்லி சோக்கா நடிப்பாரே, அவரு நடிச்சது...ரொம்பத் தேவை. பின்னாடி இதே பேருல கார்த்திக் நடிச்சு கூட ஒரு படம் வந்துச்சி. தெரியுமா?

கலைவாணரக் குத்தம் சொல்றதே எல்லாருக்கும் வேலையாப் போச்சு.......

pradeepkt
09-01-2006, 05:17 AM
ராகவா,
கலைவாணர நான் குத்தம் சொன்னேன்னு எப்படிச் சொல்றீங்க... அறிவுரை சொல்றதும் அதுவும் மக்கள் மனதில பதியுற மாதிரி சோக்கா அறிவுரை சொல்றதும் நடிக்கிறதும், அதை நான் சொல்லிப் பாராட்டுறதும் உங்களுக்குக் குத்தம் சொல்ற மாதிரி ஆச்சா?

இதே மாதிரின்னா நீங்க வீடணனை ரொம்பப் பாராட்டுறீங்க போல...

தாமரை
09-01-2006, 05:26 AM
அது எப்படி? ஒருத்தன் நல்லவனா இருந்தா...அவன் நல்ல தம்பியாவும் இருப்பான். அதுல சந்தேகமே இல்லை. கண்ணன் நல்லவன்னா அவன் நல்ல தம்பியும் கூட.

ஒருத்தன் நல்ல தம்பியாக் கூட நடந்துக்க முடியலைன்னா அவன் எப்படி நல்லவனா ஆவான்?

கண்ணன் நல்ல தம்பி.
வீடணன் மோசமான தம்பி.
சுக்ரீவனும் நல்ல தம்பிதான்.
சிங்கனும் விகர்ணனும் தம்பிக்கு இலக்கணங்கள்.
நல்லவரெல்லாம் நல்லதம்பியா இருக்க முடியாது.. உதாரணம் - ...கர்ணன்... ஹா..ஹா..ஹா..

ஆமாம் கும்பகர்ணன் கடைசித் தம்பியா இல்லை நடுத்தம்பியா?

ஒரு நல்லகாரியத்தை பலவிதங்களில் செய்யலாம்.. கண்ணன் மரியாதை தெரியாத புள்ள அவ்வளவு தான்.

சும்மா ஒரு உதாரணம் சொல்றேன்..

1. நீங்கள் 10,000 ரூபாய் ஒரு பள்ளிக்கு நன்கொடை தருகிறீர்..

2. நீங்கள் 10,000 ரூபாயை என் தந்தையின் கையில் கொடுத்து ஒரு பள்ளிக்கு நன்கொடை தரலாம் என் சொல்கிறீர்கள்

எண் 1. ல் நீங்கள் நல்லவர்
எண் 2. ல் நீங்கள் நல்ல பிள்ளை

pradeepkt
09-01-2006, 05:28 AM
அது எப்படி? ஒருத்தன் நல்லவனா இருந்தா...அவன் நல்ல தம்பியாவும் இருப்பான். அதுல சந்தேகமே இல்லை. கண்ணன் நல்லவன்னா அவன் நல்ல தம்பியும் கூட.

ஒருத்தன் நல்ல தம்பியாக் கூட நடந்துக்க முடியலைன்னா அவன் எப்படி நல்லவனா ஆவான்?

கண்ணன் நல்ல தம்பி.
வீடணன் மோசமான தம்பி.
சுக்ரீவனும் நல்ல தம்பிதான்.
சிங்கனும் விகர்ணனும் தம்பிக்கு இலக்கணங்கள்.
அதெப்படி, ஒரு நல்லவன் நல்ல தம்பியா இருக்குறதும் இல்லாதததும் அவனவன் அண்ணனைப் பொறுத்தது.
வாலி, ராவணன் மாதிரி அண்ணன்கள் இருந்தா தம்பி நல்லவனா இருக்க அவசியம் இல்லை. அதனால சுக்ரீவனும், வீடணனும் மோசமான தம்பிகள்.
இதில் சுக்ரீவனுக்கு ஒரு மாத்துக் கூட குறைவோ அதிகமோ இல்லை வீடணன். லட்சுமணன் சரியாத்தான் கேட்டான் ராமனை, "அண்ணே! சொந்த அண்ணனையே மறைஞ்சிருந்து கொல்ல உன்னைக் கேக்குறானே இந்தக் கேடுகெட்ட பய! நாளைக்கு உன் சம்சாரத்தை இவனை நம்பித் தேடறேங்கறியே" அப்படின்னு! அப்ப ராமன், நான் இவனை மட்டும் நம்பலை தம்பி, இவன் கூட இருக்கிற சக்திவாய்ந்த அமைச்சர்கள் (அனுமான், ஜாம்பவான்) போன்றவர்களைத்தான் நம்புறேன். போதாக்குறைக்கு 70 வெள்ளம் (இது என்ன கணக்குன்னு கம்பரைத்தான் கேக்கணும்) வானர சேனை வேற இருக்கே, அதை உபயோகப் படுத்திக்கலாமேங்கறான்!

இரண்டு அண்ணன்களும் வலிமையானவர்கள், மோசமானவர்கள். இருவரிலும் ஒப்பிட்டாலும் வாலி வலிமையானவன், ராவணனை ஜஸ்ட் லைக் தட் வாலில் கட்டித் தூக்கி வந்தான். அப்புறம் ராவணன் ஸாரி கேட்டு ஓட வேண்டியதா இருந்துச்சு. வாலியை மறைஞ்சிருந்து அம்பெய்த பிறகு, அவன் ராமனிடம், "ஏய்யா நீயெல்லாம் ஒரு தெய்வப் பிறவியா? என்கிட்ட சொல்லீருந்தேன்னா ராவணனை ஒரு நிமிசத்தில கட்டி உன் காலடியில போட்டிருப்பனே, நீ மறைஞ்சிருந்து கொல்லுவேன்னு நான் எதிர் பார்க்கலையேங்கறான்!" என்ன செய்ய? சுக்குவின் ஆட்சி வெறித் தூண்டுதல் அப்படி! சுக்கு நல்லவனா இருந்திருந்தா, ராமன்கிட்ட "இந்தாப்பா, என் அண்ணன் என்னைப் பொறுத்தவரை கெட்டவன், ஆனா பலசாலி, சொன்னா ஒரு நிமிசம் உன் பொண்டாட்டியத் தூக்கிட்டு வந்து உன் பக்கத்துல சேத்திருவான், நீ அவன்கிட்ட போயிச் சொல்லி, அப்படியே என்னையும் மன்னிக்கச் சொல்லீரு!" அப்படின்னு சொன்னா அவன் மனுசன், ஸாரி, கொரங்கு! அப்படிச் சொல்லாம தனியா "நீ அவனை மறைஞ்சுருந்து கொன்னுரு! நான் அவன் வசம் இருக்குற வானர சேனைகளை வச்சு உன் பொண்டாட்டியக் கண்டு புடிக்கிறேன்!" அப்படின்னு சொன்னானே அவனெல்லாம் ஒரு கொரங்கு... இதில அவன் நல்ல தம்பிக் கொரங்கு! அவனுக்கு நீங்க வக்காலத்து வேற... என்னமோ போங்கய்யா!

இதுக்காக நான் திரும்ப கம்பராமாயணத்தில கிஷ்கிந்தா காண்டம் வரைக்கும் படிக்க வேண்டி இருந்தது. இதில பாருங்க! வீடணன் மோசமான தம்பிங்கறதில எனக்கு மாத்துக் கருத்து இல்லை, அதுனால திரும்ப யுத்தகாண்டம் படிச்சி அதுக்கும் ஏதாச்சும் கருத்து இருந்தாச் சொல்லுவேன்! ஆனா இப்ப வரைக்கும் படிச்சதிலையே சுக்கு ஒரு டுபுக்கு என்று தெளிவாத் தெரிஞ்சிருச்சு!

pradeepkt
09-01-2006, 05:31 AM
அதுக்கு வாய்ப்பு வெக்காமத்தான் எங்க அடிச்சா என்ன ஆகுமுன்னு வீடணன் சொல்லிக் குடுத்துட்டானே. அது மட்டுமா, இந்திரஜித்து யாகம் பண்ற எடம், அது இது எதுன்னு வகையில்லாமக் காட்டிக் கொடுத்திருக்கான். அண்ணன் போக்குப் பிடிக்கலைன்னா நடுநிலையா இருந்திருக்கக் கூடாதா! அத விட்டுட்டு! அதுவும் பொண்டாட்டி புள்ளைகளக் கூட்டீட்டுக் கூடப் போகாம....என்ன ஆளுய்யா இந்த வீடணன்.
அண்ணன் போக்கு புடிக்கலைன்னு சும்மாவா இருந்தான் சுக்ரீவன்?
இதே மாதிரி வீடணன் ராவணன் கொஞ்ச நாள் பாதாள உலகத்தில சண்டை போடப் போயி இவன் அரசாட்சியைக் கைப்பத்தி இருந்தா, ராவணன் அவனை அங்ஙனயே துண்டு துண்டா வெட்டிப் போட்டிருப்பான்...

pradeepkt
09-01-2006, 05:42 AM
இது தேவையில்லாதது. நன்றாக நடந்துகொண்டிருக்கும் ஒரு விவாதத்தில் இது தேவையா? நீக்கிவிடலாமே?

அன்புடன்
ஆரென்
நீக்கிவிட்டேன் ஆரென் அண்ணா
வழக்கமாக எதிர்க்கட்சிகள் ஆதாரமில்லாமல் இருக்கையில் உபயோகப் படுத்தும் வார்த்தைகள் அவை. அதனால் உபயோகப் படுத்தினேன்.
வேறு எந்த உள்நோக்கமும் இல்லை.
சுட்டிக் காட்டியமைக்கு நன்றி

அன்புடன்
பிரதீப்
இதை அப்படியே உங்க கோட்-ல இருந்தும் எடுத்துருங்க ஹிஹி :D :D

gragavan
09-01-2006, 05:44 AM
ராகவா,
கலைவாணர நான் குத்தம் சொன்னேன்னு எப்படிச் சொல்றீங்க... அறிவுரை சொல்றதும் அதுவும் மக்கள் மனதில பதியுற மாதிரி சோக்கா அறிவுரை சொல்றதும் நடிக்கிறதும், அதை நான் சொல்லிப் பாராட்டுறதும் உங்களுக்குக் குத்தம் சொல்ற மாதிரி ஆச்சா?

இதே மாதிரின்னா நீங்க வீடணனை ரொம்பப் பாராட்டுறீங்க போல...அது வேற இது வேற. கலைவாணருன்னாலே நீங்க என்ன சொல்வீங்கன்னு நல்லாத் தெரியுமே...அதுனால சொன்னேன்.

gragavan
09-01-2006, 05:46 AM
நல்லவரெல்லாம் நல்லதம்பியா இருக்க முடியாது.. உதாரணம் - ...கர்ணன்... ஹா..ஹா..ஹா..

ஆமாம் கும்பகர்ணன் கடைசித் தம்பியா இல்லை நடுத்தம்பியா?

ஒரு நல்லகாரியத்தை பலவிதங்களில் செய்யலாம்.. கண்ணன் மரியாதை தெரியாத புள்ள அவ்வளவு தான்.

சும்மா ஒரு உதாரணம் சொல்றேன்..

1. நீங்கள் 10,000 ரூபாய் ஒரு பள்ளிக்கு நன்கொடை தருகிறீர்..

2. நீங்கள் 10,000 ரூபாயை என் தந்தையின் கையில் கொடுத்து ஒரு பள்ளிக்கு நன்கொடை தரலாம் என் சொல்கிறீர்கள்

எண் 1. ல் நீங்கள் நல்லவர்
எண் 2. ல் நீங்கள் நல்ல பிள்ளை ஐயா கருணன் அல்லாருக்கும் அண்ணன். அவனுக்குத்தான் தம்பி தருமன். பேசாம லிஸ்ட்டுல தருமனையும் சேக்கனும் போலயே. அண்ணன நாமளே கொன்னுட்டோமுன்னு தெரிஞ்ச பிறகும் அவன் போரைத் தொடர்ந்தானே.

அதே மாதிரி ஒங்க வழிக்கே நானும் வாரேன். கண்ணன் நல்ல தம்பியில்லை. ஆனா கெட்ட தம்பியுமில்லை. நம்ம மோசமான தம்பி யாருன்னு பேசுறதுனால கண்ணன் கொஞ்சம் பின் வாங்குறார்னு நெனைக்கிறேன்.

pradeepkt
09-01-2006, 05:48 AM
இப்படியேக் கொஞ்சம் கொஞ்சமா சுக்குக்கும் சொல்லுவீங்க பாருங்க! சுக்கு நல்ல தம்பின்னு கேட்டவுடனே எனக்கு அப்படியே புல்லரிச்சுருச்சு

gragavan
09-01-2006, 05:55 AM
அதெப்படி, ஒரு நல்லவன் நல்ல தம்பியா இருக்குறதும் இல்லாதததும் அவனவன் அண்ணனைப் பொறுத்தது.
வாலி, ராவணன் மாதிரி அண்ணன்கள் இருந்தா தம்பி நல்லவனா இருக்க அவசியம் இல்லை. அதனால சுக்ரீவனும், வீடணனும் மோசமான தம்பிகள்.
இதில் சுக்ரீவனுக்கு ஒரு மாத்துக் கூட குறைவோ அதிகமோ இல்லை வீடணன். லட்சுமணன் சரியாத்தான் கேட்டான் ராமனை, "அண்ணே! சொந்த அண்ணனையே மறைஞ்சிருந்து கொல்ல உன்னைக் கேக்குறானே இந்தக் கேடுகெட்ட பய! நாளைக்கு உன் சம்சாரத்தை இவனை நம்பித் தேடறேங்கறியே" அப்படின்னு! அப்ப ராமன், நான் இவனை மட்டும் நம்பலை தம்பி, இவன் கூட இருக்கிற சக்திவாய்ந்த அமைச்சர்கள் (அனுமான், ஜாம்பவான்) போன்றவர்களைத்தான் நம்புறேன். போதாக்குறைக்கு 70 வெள்ளம் (இது என்ன கணக்குன்னு கம்பரைத்தான் கேக்கணும்) வானர சேனை வேற இருக்கே, அதை உபயோகப் படுத்திக்கலாமேங்கறான்!

இரண்டு அண்ணன்களும் வலிமையானவர்கள், மோசமானவர்கள். இருவரிலும் ஒப்பிட்டாலும் வாலி வலிமையானவன், ராவணனை ஜஸ்ட் லைக் தட் வாலில் கட்டித் தூக்கி வந்தான். அப்புறம் ராவணன் ஸாரி கேட்டு ஓட வேண்டியதா இருந்துச்சு. வாலியை மறைஞ்சிருந்து அம்பெய்த பிறகு, அவன் ராமனிடம், "ஏய்யா நீயெல்லாம் ஒரு தெய்வப் பிறவியா? என்கிட்ட சொல்லீருந்தேன்னா ராவணனை ஒரு நிமிசத்தில கட்டி உன் காலடியில போட்டிருப்பனே, நீ மறைஞ்சிருந்து கொல்லுவேன்னு நான் எதிர் பார்க்கலையேங்கறான்!" என்ன செய்ய? சுக்குவின் ஆட்சி வெறித் தூண்டுதல் அப்படி! சுக்கு நல்லவனா இருந்திருந்தா, ராமன்கிட்ட "இந்தாப்பா, என் அண்ணன் என்னைப் பொறுத்தவரை கெட்டவன், ஆனா பலசாலி, சொன்னா ஒரு நிமிசம் உன் பொண்டாட்டியத் தூக்கிட்டு வந்து உன் பக்கத்துல சேத்திருவான், நீ அவன்கிட்ட போயிச் சொல்லி, அப்படியே என்னையும் மன்னிக்கச் சொல்லீரு!" அப்படின்னு சொன்னா அவன் மனுசன், ஸாரி, கொரங்கு! அப்படிச் சொல்லாம தனியா "நீ அவனை மறைஞ்சுருந்து கொன்னுரு! நான் அவன் வசம் இருக்குற வானர சேனைகளை வச்சு உன் பொண்டாட்டியக் கண்டு புடிக்கிறேன்!" அப்படின்னு சொன்னானே அவனெல்லாம் ஒரு கொரங்கு... இதில அவன் நல்ல தம்பிக் கொரங்கு! அவனுக்கு நீங்க வக்காலத்து வேற... என்னமோ போங்கய்யா!

இதுக்காக நான் திரும்ப கம்பராமாயணத்தில கிஷ்கிந்தா காண்டம் வரைக்கும் படிக்க வேண்டி இருந்தது. இதில பாருங்க! வீடணன் மோசமான தம்பிங்கறதில எனக்கு மாத்துக் கருத்து இல்லை, அதுனால திரும்ப யுத்தகாண்டம் படிச்சி அதுக்கும் ஏதாச்சும் கருத்து இருந்தாச் சொல்லுவேன்! ஆனா இப்ப வரைக்கும் படிச்சதிலையே சுக்கு ஒரு டுபுக்கு என்று தெளிவாத் தெரிஞ்சிருச்சு!நீங்க சொல்றதும் நியாயம் மாதிரிதான் இருக்கு. ராமன் வந்ததும் நேரடியா வாலி கிட்ட போகச் சொல்லீருக்கலாம். ஆனா செய்யலை. இது பத்தி தாரையும் ஒரு இடத்துல புலம்புறான்னு நெனைக்கிறேன்.

வாலியக் கொன்னது சரிதான்னு கம்பரும் சொல்லலை. வால்மீகியும் சொல்லலை. ரெண்டு பேருமே வாலி கேள்வி கேக்குறான்னு சொல்லீட்டு இராமன் அமைதியாவே இருந்தான்னு முடிக்கிறாங்க.

gragavan
09-01-2006, 05:57 AM
இப்படியேக் கொஞ்சம் கொஞ்சமா சுக்குக்கும் சொல்லுவீங்க பாருங்க! சுக்கு நல்ல தம்பின்னு கேட்டவுடனே எனக்கு அப்படியே புல்லரிச்சுருச்சுஅட இதமா பதமா எடுத்துச் சொன்னா கேட்டுக்குறது. இதுல என்ன இருக்கு.....

பரஞ்சோதி
09-01-2006, 06:04 AM
நான் இராகவன் அண்ணாவுக்கு மோசமான தம்பி. :)

pradeepkt
09-01-2006, 06:09 AM
ஐயா அதைத்தான் சொல்றேன்.
வீடணன் நல்ல தம்பி இல்லை, அதில சந்தேகமே கிடையாது. அதே மாதிரிதான் சுக்குவும். அதுனாலதான் நான் ரெண்டு ஓட்டுக் கேட்டேன் :D

pradeepkt
09-01-2006, 06:09 AM
நான் இராகவன் அண்ணாவுக்கு மோசமான தம்பி. :)
நான் உங்களுக்கு நல்ல தம்பி :)

gragavan
09-01-2006, 06:43 AM
நான் இராகவன் அண்ணாவுக்கு மோசமான தம்பி. :)யப்பா பரஞ்சோதி....என்ன திட்டம் வெச்சிருக்கன்னு சொல்லீருப்பா....ஏன்னா மேல இருக்குற தம்பிகள்ளாம் செஞ்சதை நினைச்சா திக்குன்னு இருக்குது.

gragavan
09-01-2006, 06:45 AM
நான் உங்களுக்கு நல்ல தம்பி :)சொல்லிக்கிரதுல ஒன்னும் கொறச்சல் இல்ல.............

pradeepkt
09-01-2006, 07:53 AM
ஏன் நல்ல தம்பியா நாங்க நடக்கலையா????

pradeepkt
09-01-2006, 07:58 AM
ஆமா எங்க நம்ம பென்ஸூ பரம்ஸ் அண்ணா ஆகியோரைக் காணோம்?

gragavan
09-01-2006, 08:27 AM
ஏன் நல்ல தம்பியா நாங்க நடக்கலையா????நீங்க நல்ல தம்பீன்னு ஒங்க அண்ணன் சொல்லனும். இங்க பட்டியல் போட்டவுகள்ள சிங்கனும் கண்ணனும் மட்டுமே அண்ணன் வாயால நல்ல தம்பீன்னு பேரு வாங்கீருக்காங்க. மத்தவங்களுக்கு அந்தப் பெருமை இல்லை. விகருணனை துரியோதனன் திட்டியே தீத்தான். ஆனான் அவன் செத்தப்ப...துரிக்குக் கோவம் வருது அவ்வளவுதான். ஆனா சூரன் அப்படியில்லை......தம்பி பொண்டாட்டி போனா இன்னொன்னு கட்டிக்கலாம்...பிள்ளை போனா இன்னொன்னு பெத்துக்கலாம்...தம்பிக்கு எங்க போவேன். அதுலயும் ஒன்னப் போல தம்பிக்குன்னு பொலம்புறான்.

gragavan
09-01-2006, 08:29 AM
ஆமா எங்க நம்ம பென்ஸூ பரம்ஸ் அண்ணா ஆகியோரைக் காணோம்?அவங்கவங்க அண்ணன் கிட்ட நல்ல பேரு வாங்கப் போயிருக்காங்களோ என்னவோ!

sarcharan
09-01-2006, 10:44 AM
பரம்ஸ் அண்ணா,
நீங்கள் எதற்கும் அஞ்சான் ஏனெனில்

"தம்பிகளுடையான் படைக்கு அஞ்சான்...."
உங்கள் தம்பிகள்
பிரதீப்பு, சரவணன், ராகவன்,பென்ஸு.....

ஆனால் இவர்களில் மோசமான தம்பி யார் என்று ஒரு போட்டி .....
வேண்டாம் வைக்காதீர்கள் என்று சொல்ல வந்தேன்...
ஹி ஹி....

அவங்கவங்க அண்ணன் கிட்ட நல்ல பேரு வாங்கப் போயிருக்காங்களோ என்னவோ!

அறிஞர்
09-01-2006, 09:31 PM
இது யாருடைய தம்பிகள்....

இராகவன், பிரதீப், பென்ஸ், சரவணன், பரம்ஸின் தம்பிகளா>>>

gragavan
10-01-2006, 08:02 AM
இது யாருடைய தம்பிகள்....

இராகவன், பிரதீப், பென்ஸ், சரவணன், பரம்ஸின் தம்பிகளா>>>இருக்குற கொழப்பம் போதாதுன்னு இது வேறையா............அது சரி. உங்க அண்ணன் யாரு? அவருகிட்ட இதே கேள்வியக் கேப்போம்.

தாமரை
10-01-2006, 08:12 AM
இருக்குற கொழப்பம் போதாதுன்னு இது வேறையா............அது சரி. உங்க அண்ணன் யாரு? அவருகிட்ட இதே கேள்வியக் கேப்போம்.
பேர் - அறிஞர் - அண்ணா கிட்டயே உங்க அண்ணா யாருண்ணு கேள்வியா? குசும்புதான்

gragavan
10-01-2006, 08:37 AM
பேர் - அறிஞர் - அண்ணா கிட்டயே உங்க அண்ணா யாருண்ணு கேள்வியா? குசும்புதான்பேர் அறிஞர்னா...பேருக்கு அறிஞரா? ஆனாலும் தாமரைக்கு ரொம்பவே குசும்புதான். :D :D :D

தாமரை
10-01-2006, 09:19 AM
இந்தப் பிரித்து பதம் எழுதுதல் செஞ்சது 1983 ல்.

இன்னொரு சாம்பிள்...

ஜன+நாய்+கம் = மக்கள் - நாய் - கோந்து .. மும்மொழி திட்டத்தில் உருவான முதல் வார்த்தை.

gragavan
10-01-2006, 09:23 AM
இந்தப் பிரித்து பதம் எழுதுதல் செஞ்சது 1983 ல்.

இன்னொரு சாம்பிள்...

ஜன+நாய்+கம் = மக்கள் - நாய் - கோந்து .. மும்மொழி திட்டத்தில் உருவான முதல் வார்த்தை.அடேங்கப்பா.......இந்த வம்பெல்லாம் அப்பவேவா!!!!!!!

அறிஞர்
10-01-2006, 07:45 PM
இது என்ன தம்பிகள் பகுதியா..... வம்பு பகுதியா.. நாய் கோந்து... என....

தாமரை
27-01-2006, 09:04 AM
இதை சீக்கிரம் முடியுங்களேன்

aren
27-01-2006, 10:22 AM
இதை அவ்வளவு சீக்கிரம் ராகவனனும், பிரதீப்பும் முடித்துவிடுவார்களா என்ன?

pradeepkt
27-01-2006, 01:02 PM
இதை அவ்வளவு சீக்கிரம் ராகவனனும், பிரதீப்பும் முடித்துவிடுவார்களா என்ன?
அதென்ன சந்தடி சாக்கில ராகவனையும் ராவணனையும் கலந்துட்டீங்க? :D

sarcharan
27-01-2006, 01:35 PM
அப்போ ப்ரதீப்புக்கு 10 தலையா?
10 தலைக்கும் ஒரே நேரத்துல தலைவலி வந்தா என்ன பண்ணுவான்?
:D :D :D :D :D

அதென்ன சந்தடி சாக்கில ராகவனையும் ராவணனையும் கலந்துட்டீங்க? :D

pradeepkt
30-01-2006, 05:21 AM
எனக்குத் தலையும் (அதுவும் பத்து) புரியலை வாலும் (சரவணன்) புரியலை :D :D