PDA

View Full Version : இலவச மென்பொருள் GIMP - 2

рокро╛ро░родро┐
04-01-2006, 04:53 PM
GIMP - Graphical Image Manipulation Program

படங்களை உருவாக்க, படங்கள் மற்றும் புகைப்படங்களில் தேவையான மாற்றங்களை செய்வதற்கான இந்த ஜிம்ப் மென்பொருள், யுனிக்ஸ் மற்றும் லினக்ஸ் இயங்குதளங்குகளில் உபயோகிப்பதற்காகத்தான் கண்டுபிடிக்கப்பட்டது. விண்டோஸ் இயங்குதளங்களில் 'பெயிண்ட்' தவிர்த்து, பெரும்பாலும் அடோப் ╖போட்டோ ஷாப், கோரல் டிரா, இர்╖பான் வியூ போன்ற மென்பொருட்கள் உபயோகிக்கப்பட்டு வருகின்றன. இதில் இர்╖பான் வியூ இலவச மென்பொருளாக கிடைக்கிறது. கூடுதல் வசதிகள் நிறைந்த மேலும் பல மென்பொருட்களும் சந்தையில் விலைக்கு கிடைக்கின்றன.

தற்போது விண்டோஸில் இயங்குவதற்கான ஜிம்ப் 2 மென்பொருள் பதிவிறக்கத்திற்கு கிடைக்கிறது. கிட்டத்தட்ட அடோப் ╖போட்டோஷாப் மென்பொருளில் இருக்கும் அத்தனை வசதிகளும் இதிலும் இருக்கின்றனவாம். இந்த மென்பொருளை உபயோகிப்பதற்கு முன்னர் GTK+ (GIMP Tool Kit) என்ற மென்பொருளை நிறுவிக்கொள்ள வேண்டும். முதலில் GTK+ நிறுவிய பின்னர், ஜிம்ப்-ஐ நிறுவ வேண்டும். நிறுவும் போது, "Select Components" - தலைப்பில் "Full Installation" என்பதை தேர்வு செய்திருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும். மென்பொருளை நிறுவும் போது default ஆக உள்ளவற்றில் எதையும் மாற்றத் தேவையில்லை. மிகவும் உபயோகமான இந்த மென்பொருட்கள் இலவசம்தான் என்பது பயனாளர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாகும்.

நான் பதிவிறக்கி உபயோகம் செய்து பார்த்தேன். நன்றாகத்தான் இருக்கிறது. மென்பொருளில் உள்ள வசதிகளை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள இன்னும் சில காலம் பிடிக்கும் என்று நினைக்கிறேன். விரும்புபவர்கள் பதிவிறக்கி உபயோகம் செய்து பாருங்கள்.

பதிவிறக்குவதற்கான சுட்டி:
http://gimp-win.sourceforge.net/stable.html

paarthiban
04-01-2006, 05:20 PM
நன்றி பாரதி சார்.

роЪрпБро╡рпЗродро╛
04-01-2006, 07:17 PM
மிக்க நன்றி அண்ணா!

pradeepkt
05-01-2006, 06:09 AM
சுவேதா....
வந்துட்டியாம்மா....
உன்னைக் காணாம அண்ணன்களோட கண்ணு பூத்துப் போச்சேம்மாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
தலை கூட ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம தவிச்சுப் போயிட்டாரு :D

роЕро┤роХройрпН
11-01-2006, 09:30 AM
இறக்கியாகிவிட்டது நன்றிகள் பல பாரதி அவர்களே.

arul5318
17-06-2006, 04:15 PM
இந்த மென்பொருளை உபயோகிப்பதன் மூலம் என்ன பலன் கிடைக்கும் என்பதை சற்று விரிவாக கூறுங்களேன்.

рокро╛ро░родро┐
17-06-2006, 05:15 PM
[quote=பாரதி]
படங்களை உருவாக்க, படங்கள் மற்றும் புகைப்படங்களில் தேவையான மாற்றங்களை செய்வதற்கான இந்த ஜிம்ப் மென்பொருள்......

.........அடோப் ╖போட்டோஷாப் மென்பொருளில் இருக்கும் அத்தனை வசதிகளும் இதிலும் இருக்கின்றன.

роЪрпБро╡рпЗродро╛
30-06-2006, 05:55 PM
சுவேதா....
வந்துட்டியாம்மா....
உன்னைக் காணாம அண்ணன்களோட கண்ணு பூத்துப் போச்சேம்மாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
தலை கூட ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம தவிச்சுப் போயிட்டாரு :D

ஓ அப்படியாஆஆஆ

рооропрпВ
02-07-2006, 10:06 AM
எங்கட ஊரில போட்டோ சொப்பே 100 ருபாவிற்கு வாங்கலாம் பிறகு எதுக்கு இந்த செயலி எல்லாம்........:D :D :D

рокро╛ро░родро┐
02-07-2006, 12:51 PM
எங்கட ஊரில போட்டோ சொப்பே 100 ருபாவிற்கு வாங்கலாம் பிறகு எதுக்கு இந்த செயலி எல்லாம்........:D :D :D

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி மயூரேசன்.

1. 100 ரூபாய்க்கு, உரிமம் பெற்ற விற்பனையாளரிடமிருந்து அசல் "போட்டோ ஷாப்" மென்பொருளை வாங்க முடியுமா...?!! ஆச்சரியமாக இருக்கிறதே...?!

2. அங்கு 100 ரூபாய்க்கு மதிப்பு இல்லையா...?!

3. எவ்வளவோ இடையூறுகளுக்கு மத்தியில், லாப நோக்கின்றி மக்களுக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டு வரும் திறவூற்று மென்பொருட்களை வரவேற்கவில்லை என்றாலும் எதிர்க்காமல் இருக்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து.

роЗро│роЪрпБ
02-07-2006, 09:50 PM
சுட்டிக்கு நன்றி பாரதி.

திறவூற்று மென்பொருள் பற்றிய உன் கருத்துகளுடன் முழுமையாக உடன்படுகிறேன்.

рооропрпВ
03-07-2006, 06:52 AM
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி மயூரேசன்.

1. 100 ரூபாய்க்கு, உரிமம் பெற்ற விற்பனையாளரிடமிருந்து அசல் "போட்டோ ஷாப்" மென்பொருளை வாங்க முடியுமா...?!! ஆச்சரியமாக இருக்கிறதே...?!

2. அங்கு 100 ரூபாய்க்கு மதிப்பு இல்லையா...?!

3. எவ்வளவோ இடையூறுகளுக்கு மத்தியில், லாப நோக்கின்றி மக்களுக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டு வரும் திறவூற்று மென்பொருட்களை வரவேற்கவில்லை என்றாலும் எதிர்க்காமல் இருக்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து.

பாரதி மன்னிச்சுக் கொள்ளுங்க நான் நகைச்சுவை நோக்கில்தான் அப்படி சொன்னேன். நான் கூறியதில் தப்பிருந்தால் மன்றத்து உறவுகள் முன்னிலையில் உஙகளிடம் மன்னிப்பு கோருகின்றேன்.

கேள்விக்கான பதில்கள்....
1.100 ரூபாவிற்கு உரிமம் பெற்ற பதிப்பல்ல.. இலங்கையில் பதிப்புரிமைச்சட்டம் அவ்வளவு இறுக்கமில்லை அதுதான் இந்த விளைவு.

2.100 ரூபாவிற்கு 2 கிலோ சம்பா அரிசி வேண்டலாம். பெறுமதியை தெரிந்துகொள்ளுங்கள்

3.என்றும் திறவூற்று மென்பொருட்களை நான் எதிர்க்கவில்லை... அதை ஆதரிக்கின்றேன். உங்கள் கருத்தில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை......

рокро╛ро░родро┐
03-07-2006, 07:45 PM

அன்பு நண்பரே,

மன்னிப்பு கோருவதெல்லாம் அதிகபட்சமானது-தேவை இல்லாதது.

நீங்கள் முன்பு கூறியது நகைச்சுவை என்றாலும், சட்டத்திற்கு புறம்பான செயலை ஊக்குவிப்பது போல ஆகக்கூடும் என்பதாலேயே என் கருத்தை தெரிவித்தேன்.

உங்கள் உடன் பதிலுக்கும் மிக்க நன்றி.

роЕро▒ро┐роЮро░рпН
03-07-2006, 08:43 PM
நல்ல தகவல் பாரதி.. காலம் கழித்து கண்டாலும்... பயனுள்ளதே

рооропрпВ
04-07-2006, 08:33 AM
அன்பு நண்பரே,

மன்னிப்பு கோருவதெல்லாம் அதிகபட்சமானது-தேவை இல்லாதது.

நீங்கள் முன்பு கூறியது நகைச்சுவை என்றாலும், சட்டத்திற்கு புறம்பான செயலை ஊக்குவிப்பது போல ஆகக்கூடும் என்பதாலேயே என் கருத்தை தெரிவித்தேன்.

உங்கள் உடன் பதிலுக்கும் மிக்க நன்றி.
நன்றி பாரதி

viju
07-10-2006, 06:48 PM
எப்படி அசைபடங்களை பகிர்ந்து கொள்வது அனைவரிடமும் ...அதற்கூறிய சாப்ட்வேர் பிளீஸ்