PDA

View Full Version : என் அன்புத் தோழி!!!.



தாமரை
03-01-2006, 05:14 AM
ஓ! பிரிய சினேகிதியே..
என் இதயத்தின் ஏடுகளை
நான் அறியாமலேயே
படித்தவளே ...

தாய் மடிக்குப் பிறகு
உன் எழுத்துக்களில் தான்
என் மனம் குழந்தையாய்
உறங்குகிறது..

இந்த அன்பு...
இந்த பிரியம்..
என்னிடம் வார்த்தைகள் இல்லை

பிரிய சினேகிதியே
பிரியா சினேகிதியே..
பிறந்து வருவோமா
இன்னுமொருமுறை..

நீயின்றி போய்விட்ட காலங்கள்
எனக்கு திரும்ப வேண்டும்
உன்னோடு கழிக்க..

.

pradeepkt
03-01-2006, 07:08 AM
ப்ரிய சினேகிதியே
ப்ரியா சினேகிதியே..
பிறந்து வருவோமா
இன்னுமொருமுறை..
நீயின்றி போய்விட்ட காலங்கள்
எனக்கு திரும்ப வேண்டும்
உன்னோடு கழிக்க..
நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.
இது மட்டும் பிரியான்னு இருக்கணுமோ...
அல்லது உங்க சினேகிதி பேரு ப்ரியாவா?

தாமரை
03-01-2006, 07:52 AM
நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.
இது மட்டும் பிரியான்னு இருக்கணுமோ...
அல்லது உங்க சினேகிதி பேரு ப்ரியாவா?

ப்ரியா என்று சிலபல சினேகிதிகள் உண்டுதான்.. ஆனால் இக்கவிதையின் நாயகி அவர்களில் ஒருவரும் அல்ல,.

இது என்பது எழுத்துப் பிழைதான் திருத்திவிடுகிறேன்

aren
03-01-2006, 07:53 AM
கவிதை நன்றாக உள்ளது. தொடருங்கள்.

இளசு
03-01-2006, 08:11 PM
நட்பு பாராட்டும் நல்ல கவிதை. வாழ்த்துகள் செல்வன்.

பென்ஸ்
04-01-2006, 06:47 AM
காதலின் வலியை கூட ஒரு நல்ல நட்பு குணப்படுத்திவிடும்,
நட்பின் பிரிவை... நட்பு மட்டுமே

தாய் மடிக்குப் பிறகு
உன் எழுத்துக்களில் தான்
என் மனம் குழந்தையாய்
உறங்குகிறது..


அருமையான வரிகள்...
நட்பின் வார்த்தைகள், தாய் மடியின் சுகம்...

அறிஞர்
04-01-2006, 10:49 PM
பிரிய சினேகிதியே
பிரியா சினேகிதியே..
பிறந்து வருவோமா
இன்னுமொருமுறை..

நீயின்றி போய்விட்ட காலங்கள்
எனக்கு திரும்ப வேண்டும்
உன்னோடு கழிக்க.. வாழ்வின் இன்பமே... நல்ல நட்புக்கள்தான்......
மீண்டும் பிறந்து ஒன்றாய் விளையாடி
பேசி, மகிழ்ந்து..... நாட்களை கழிக்க யாருக்குதான் ஆவலில்லை.

அருமை... என்னுடைய மலரும் நினைவுகளை தூண்டிவிட்ட கவிதை....

தாமரை
05-01-2006, 04:01 AM
அருமை... என்னுடைய மலரும் நினைவுகளை தூண்டிவிட்ட கவிதை....

என்ன செய்வது வசந்தம் என்பது வருடத்தில் சில நாட்கள் மட்டுமே வருவது...

வருஷமெல்லாம் வசந்தம் என்பது சினிமா பெயரோடு நின்று விடுகிறது

இளந்தமிழ்ச்செல்வன்
19-02-2006, 01:58 AM
தாய் மடிக்குப் பிறகு
உன் எழுத்துக்களில் தான்
என் மனம் குழந்தையாய்
உறங்குகிறது..

பிறந்து வருவோமா
இன்னுமொருமுறை..



தொண்டை அடைக்க விழிகளை நனைய வைத்த வரிகள்.

தாமரை
23-03-2006, 12:42 PM
வாழ்வின் இன்பமே... நல்ல நட்புக்கள்தான்......
மீண்டும் பிறந்து ஒன்றாய் விளையாடி
பேசி, மகிழ்ந்து..... நாட்களை கழிக்க யாருக்குதான் ஆவலில்லை.

அருமை... என்னுடைய மலரும் நினைவுகளை தூண்டிவிட்ட கவிதை....

மலரும் நினைவுகளில்
மூழ்கி விட்ட அறிஞரே
இங்கே ஒரு உலகம்
காத்திருக்கிறது
திரும்ப வாருங்கள்

இல்லையெனில்..
எங்கோ கேட்கும் தமிழோசை
அங்கும் இதேபோல்
உங்கள் வசனம்...

ஓவியன்
12-07-2007, 10:12 PM
பிரிய சினேகிதியே
பிரியா சினேகிதியே..
பிறந்து வருவோமா
இன்னுமொருமுறை..

நீயின்றி போய்விட்ட காலங்கள்
எனக்கு திரும்ப வேண்டும்
உன்னோடு கழிக்க..

என் ஞாபகங்களையும் கிளறி விட்டதே! :D

அமரன்
13-07-2007, 11:10 AM
தாமரை அண்ணாவின் தோழிக்கு எழுதிய கவிதை..பிரிந்தும் "பிரியா"த தோழியை மீண்டும் பிறந்து வா என்று அழைப்பது அந்த பருவகாலத்தை மீண்டும் கடந்துவர நினைப்பதுபோல் இருகிறது....தப்பென்றால் மன்னித்து விடுங்கள்...

பூமகள்
11-01-2008, 05:24 PM
பிறந்து வருவோமா
இன்னுமொருமுறை..

நீயின்றி போய்விட்ட காலங்கள்
எனக்கு திரும்ப வேண்டும்
உன்னோடு கழிக்க..
வாழ்வில் பல நட்புகளைக் கடந்து வந்தாலும், சில நட்புகள் கொஞ்ச காலம் முன்னரே கிடைத்திருந்தால் எத்தனை சந்தோசம் இருந்திருக்கும் என்று உணர முடியும்...!
மனம் தொட்ட வரிகள்..! :icon_b:
அத்தகைய சிறந்த நட்பு பற்றிய நல்லதொரு கவி தாமரை அண்ணா.
பாராட்டுகள். :)

தாமரை
12-01-2008, 02:00 AM
தாமரை அண்ணாவின் தோழிக்கு எழுதிய கவிதை..பிரிந்தும் "பிரியா"த தோழியை மீண்டும் பிறந்து வா என்று அழைப்பது அந்த பருவகாலத்தை மீண்டும் கடந்துவர நினைப்பதுபோல் இருகிறது....தப்பென்றால் மன்னித்து விடுங்கள்...

கேட்டதில் தவறில்லை,, கேள்வியில் தவறு.. என்ன தவறு என்று யார் கவலைப் படப் போகிறார்கள்? விளக்கம் கொடுக்க வாய்ப்பளித்தமைக்கு நன்றி.

சில உறவுகள் காலம் கடந்து கிடைப்பதுண்டு. அந்த உறவுகளும் எட்டாத் தோலைவில் இருக்கையில் அந்த உறவின் அருமையை, இனிமையை அனுபவித்த பின் ஆற்றாமையால் உண்டாகும் எண்ணம் அது.

இன்னொரு விஷயம்.. நான் இருகூறாக வாழ்கிறேன்.. மனதால் ஒரு வாழ்க்கை, உடலால் ஒரு வாழ்க்கை.. என் மன வாழ்க்கையில் டைம் மெஷின் உண்டு.. எனக்குப் பிடித்த வாழ்க்கையை, வாழ்க்கையின் எந்தப் பருவத்திற்குச் சென்றும் அங்கு என்னைச் சுற்றிக் கற்பனைப் பாத்திரங்கள், உண்மைப் பாத்திரங்களைப் படைத்து கற்பனையில் வாழ்ந்து பார்ப்பேன்..
உதாரணமாக அறுபது வயதில் பென்ஸூம், மதியும் நானும் இப்படி...

அப்படி ஒரு நண்பரை என் வாழ்வின் குழந்தைப் பருவம், இளமைப் பருவாம் என சூழல்களில் பொருத்தி வாழ்ந்து பார்த்து ஆதங்கத்தினில் எழுதிய கவிதை இது.. பலப்பலக் கவிதைகள் யாருக்காக எழுதப் பட்டனவோ அவர்களின் கண்ணில் படுவதில்லை. இக்கவிதைக்கு அந்தக் குறை இல்லை... இதை முதலில் நான் அனுப்பியதே அந்தத் தோழிக்குத்தான்.. 9 வருடங்கள் முன்பு...

இன்று இம்மன்றத்தில் கூட இரு நட்புகள் அப்படி உண்டு, தடம்பிசகாத அன்பு மாத்திரமே இதன் அடிப்படை,, வேற்று உணர்வுகள் வர வாய்ப்பே இல்லை.. ஏனென்றால் அப்போது நான் காதலித்துக் கொண்டிருந்தேன்.. வெகு தீவிரமாக.. உங்கள் அண்ணியை.. :D:D:D

ஆமாம் என் கல்யாண நிச்சயம் ஆனபின் நான் இன்றைய ஓவியன் போல இருந்த காலத்தில் எழுதிய கவிதை இது.;)

யவனிகா
12-01-2008, 04:31 AM
எதிர் பாலில் இனியதாய்,ஒத்த அலைவரிசையுடன்...ஒரு சினேகம் கிடைப்பது மிக அரிது.ஆனால் கண்டிப்பாகத் தேவையான ஒன்று.

எல்லா விசயங்களையும் விவாதிக்கும் படியாக,விசமம் இல்லாத கிண்டல்களுடன்,ஆபத்தில் அணைத்துக் கொள்ளும் அன்புடன்,எல்லை மீறி உறவைக் கொச்சைப் படுத்தாத...ஆனால் அதே நேரம் இவனோட எல்லா விசயங்களையும் பகிர்ந்துக்கலாம் என்ற நம்பிக்கையுடனான...கண்டிப்பாக ஓரளவுக்காவது கற்பனை வளம் உடைய...நல்ல சினேகிதனோ சிநேகிதியோ கிடைக்கும் பட்சத்தில் வாழ்க்கை இன்னும் அழகாகும். ரசனைக்குரியதாகும்.தாமரை...சில காலங்களேனும் உங்களுக்கு அந்த நட்பு கிடைக்கப்பெற்றதே...நீங்கள் அதிர்ஷ்டசாலி தான்.

சுகந்தப்ரீதன்
12-01-2008, 05:08 AM
பிரிய சினேகிதியே
பிரியா சினேகிதியே..
பிறந்து வருவோமா
இன்னுமொருமுறை..
..
அன்பின் ஆழமும் அதை இழந்த பின் மீண்டும் பெற்றுவிட துடிக்கும் யதார்த்தமான ஏக்கமும் அழகாய் வெளிபடும் வரிகள்..!

வாழ்த்துக்கள் தாமரை அண்ணா..!

க.கமலக்கண்ணன்
12-01-2008, 05:17 AM
அசத்தாலான கவிதை

அருமையான தோழி

அத்தனையும்

அன்பு கரைதிரண்டு ஓடுகிறது

அட்டகாச கவிதைக்கு வாழ்த்துக்கள்...

செல்வா
12-01-2008, 05:51 AM
ம்ம்......... கொடுத்து வைத்தவர் நீங்கள்.....

சாலைஜெயராமன்
13-01-2008, 01:39 AM
எதிர் பாலில் இனியதாய்,ஒத்த அலைவரிசையுடன்...ஒரு சினேகம் கிடைப்பது மிக அரிது.ஆனால் கண்டிப்பாகத் தேவையான ஒன்று.


ஆனால் அதே நேரம் இவனோட எல்லா விசயங்களையும் பகிர்ந்துக்கலாம் என்ற நம்பிக்கையுடனான...கண்டிப்பாக ஓரளவுக்காவது கற்பனை வளம் உடைய...நல்ல சினேகிதனோ சிநேகிதியோ கிடைக்கும் பட்சத்தில் வாழ்க்கை இன்னும் அழகாகும்.


இதில் உமர்கயாம் பாடல் ஒன்று தருகிறேன் யவனிகா.

இல்லாப் பொருளுக்கு ஏங்காமல்
இருக்கும் பொருளை எண்ணாமல்
எல்லாம் வல்ல இறைபெருமான்
இறங்கியளித்தபடி வாங்கி
நல்லோர் அறிஞர் நட்பை நீ
நாளும் நாளும் நாடுவையேல்
நில்லா உலகில் நிலைத்த சுகம்
நீண்டு வளரும் நிச்சயமே,

ஒரு படைப்பாளிக்கு ஒரு நல்ல ரசிகன் தேவை. ஆனால் ஒரு நல்ல ரசிகன் படைப்பாளியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

அறிவுக்கு ஒத்த வழிகாட்டியான ஒரு அறிவுடைய ஆசான் ஒவ்வொருவருக்கும் அவசியம் தேவைதான். அந்தத் துணை ஆண் பெண் என்ற பால் பேதமற்ற ஒரு ஆரோக்கியமான உறவாக இருக்கும் பட்சத்தில் என்ன ஒரு வரமாகும்.

உடல் இச்சைகளும் அதற்காக ஏற்படுத்தப்பட்ட திருமண பந்தங்களும் ஒரு போலிச் சடங்குகள் தானே. கருத்துக்களுடன் ஒத்துப் போகாத எத்தனையோ உறவுகள் திருமணம் என்ற சடங்கினால் கட்டுண்டு காலமெல்லாம் இனிய உறவின்றி தவிப்பதும் சாபமே.

உடல் துணைக்கான உறவுகள் நிலை பெறுவதில்லை. ஒரு சிறிது காலத்தில் அது சலிப்புற்று நிறைவு கண்டுவிடும். அறிவு சார்ந்த துணை காலத்திற்கும் வாழும். அது உடல் தாண்டிய ஒரு உலகத்தில் ஒப்பற்ற வாழ்வு வாழ வழிகோலும். நல்ல அறிவு சார்ந்த நட்பு காலத்தாலும் அழியாது.

அது இங்கே நமது மன்றத்தில் சற்று அதிகமாகவே கிடைக்கிறது. நல்ல கருத்துக்களைப் படைத்த தாமரை மற்றும் மன்ற உறுப்பினர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.

அமரன்
01-03-2008, 08:19 PM
தமிழ்மேல் பிடிப்பு ஏற்பட்ட காலத்தில், நானும் ஏதாவது எழுதவேண்டும் என்று என்னுள் ஏற்படுத்தப்பட்ட உந்துதலால், எல்லாவற்றையும் ஒரேநாளில் கற்றுத்தெளியவேண்டும் என்ற பேராசையால், கத்துக்குட்டித்தனத்துடன்/ஆர்வக்கோளாறுடன் மேம்மோக்காகப் படித்து இட்ட பின்னூட்டப் பதிவு. இப்போது படிக்கும்போது கவிதையில் தாற்பரியம் புரிகிறது. செல்வண்ணாவின் விளக்கம் மென்மேலும் தெளியவைக்கிறது. நன்றிகள் அண்ணா!

ஓவியா
04-03-2008, 09:06 PM
இன்று இம்மன்றத்தில் கூட இரு நட்புகள் அப்படி உண்டு, தடம்பிசகாத அன்பு மாத்திரமே இதன் அடிப்படை,, வேற்று உணர்வுகள் வர வாய்ப்பே இல்லை.. ஏனென்றால் அப்போது நான் காதலித்துக் கொண்டிருந்தேன்.. வெகு தீவிரமாக.. உங்கள் அண்ணியை.. :D:D:D

அண்ணா இது எனக்கு விளங்கவில்லை, கொஞ்சம் விளக்கவும்.

இரண்டா???? :sauer028::sauer028::sauer028: