PDA

View Full Version : உலாவியில் தமிழ் எழுத்துருக்கள்



рокро╛ро░родро┐
02-01-2006, 05:37 PM
சில காலமாகவே வேகமாக இயங்கும் உலாவி என்ற பெயர் பெற்ற "╖பயர் பாக்ஸ்" ( Fire Fox ) உலாவியில் தமிழ் எழுத்துருக்கள் கொண்ட வலைத்தளங்களைப் பார்வையிடுவதில் சிரமம் இருந்து வந்தது. அந்த சிரமத்தை நீக்கும் வகையில் ஒரு இலவச மென்பொருள் வெளியிடப்பட்டுள்ளது. உலாவி 0.9.x - 1.6a1 பதிப்புகள் கொண்டவர்களுக்கு பயனளிக்கும்.

தேவைப்படுபவர்கள் அந்த மென்பொருளை இறக்கிக்கொள்ள சுட்டியைத் தட்டுங்கள்.

https://addons.mozilla.org/extensions/moreinfo.php?application=firefox&id=873

இந்த மென்பொருளை உருவாக்கப்பாடுபட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்.

பின்குறிப்பு: நண்பர்களே, தற்போது என்னிடம் ╖பயர் பா╖க்ஸ் உலாவி இல்லாததால் சோதனை செய்து பார்க்க இயலவில்லை. இருக்கும் நண்பர்கள் முயற்சி செய்து பார்க்கவும்.

aren
02-01-2006, 10:55 PM
உலாவி - இது என்ன? கொஞ்சம் விளக்கமாக கூறினால் என்னைப்போன்றோர்களுக்கும் கொஞ்சம் புரிந்துகொள்ள வசதியாக இருக்கும்.

chellam
03-01-2006, 04:47 AM
என்னிடம் பயர்பாக்ஸ் உலாவி இருக்கிறது. நான் முயன்று பார்க்கிறேன்.

рокро╛ро░родро┐
03-01-2006, 04:25 PM
உலாவி - இது என்ன? கொஞ்சம் விளக்கமாக கூறினால் என்னைப்போன்றோர்களுக்கும் கொஞ்சம் புரிந்துகொள்ள வசதியாக இருக்கும்.

அன்பு ஆரென்,

இணையத்தளத்தில் உலாவி வருவதற்காக உள்ள மென்பொருட்களை 'உலாவி' என்று அழைக்கிறோம்.

உதாரணமாக இண்டர்நெட் எக்ஸ்புளோரர், ஓபரா, நெட்ஸ்கேப் போன்றவை உலாவிகளே. இந்த வரிசையில் தற்போது உலகமெங்கும் மிகவும் பிரபலமடைந்து வரும் உலாவிதான் இந்த பயர் பாக்ஸ் எனும் நெருப்பு நரி! இதில் வேகமாக இணையத்தளங்களை பார்வையிட முடிவதாக கேள்வி. விரைவிலேயே நான் பரிசோதித்து விடுவேன்.

роЗро│роЪрпБ
03-01-2006, 07:56 PM
என்னிடம் IE தான் பாரதி. நெருப்பு நரி (???!!!) உலாவி உள்ளவர்கள் சோதித்துப் பார்த்து சொல்லுங்கள்..

рокро╛ро░родро┐
04-01-2006, 04:44 PM
அன்பு நண்பர்களே, நான் நெருப்பு நரியையும், அதில் உபயோகிப்பதற்கான தமிழ் எழுத்துருக்களையும் நிறுவிப் பார்த்து விட்டேன். நன்றாக இருக்கிறது. முதன் முதலாக உபயோகப்படுத்தியதாலோ என்னவோ இண்டர்நெட் எக்ஸ்புளோரரை விட அதிக வேகத்தைக் காண இயலவில்லை. ஒருவேளை திரும்ப திரும்ப உபயோகிக்கும் போது வேகமாக இயங்கக்கூடும் என்று கருதுகிறேன். எப்படி என்றாலும் நெருப்பு நரியில் முதலில் தமிழ் எழுத்துருக்களை காண இயலாமல் இருந்த நிலை இப்போது மாறி விட்டது மகிழ்ச்சிக்குரிய செய்திதான். அதிவேக இணையத்தொடர்பு வைத்திருப்பவர்கள் யாரேனும் உபயோகித்திருந்தால் அறியத்தாருங்கள். மிக்க நன்றி.

aren
04-01-2006, 10:39 PM
நெருப்புக்கோழி கேள்விப்பட்டிருக்கிறேன். இது என்ன "நெருப்பு நரி". பேர் கேட்க நன்றாகத்தான் உள்ளது.

"உலாவி" என்றால் இதுதானா? என்னிடமும் IE தான் உள்ளது.

இந்த உலாவி உள்ள மற்றவர்களும் சோதித்துப்பார்த்துவிட்டு சொன்னால் என்னைப் போன்றவர்களும் அதற்கு மாறுவதற்கு வசதியாக இருக்கும்.