PDA

View Full Version : மேலும் ஒரு இந்திய சாதனையாளர்.



பாரதி
02-01-2006, 05:06 PM
பரிமஜன் நேகி - இந்த 12 வயது இந்திய சதுரங்க வீரர் உலகத்திலேயே மிகக்குறைந்த வயதில் இண்டர்நேஷனல் மாஸ்டர் பட்டத்தை வென்றுள்ளார். 12 வயது 325 நாட்களில் இந்தப்பட்டத்தை அவர் வென்றுள்ளார். இங்கிலாந்தில் நடைபெற்று வரும் "ஹேஸ்டிங்ஸ் மாஸ்டர்ஸ்" சதுரங்கப்போட்டியில், முதல் நான்கு சுற்றுகளில் 3.5 புள்ளிகள் பெற்றதன் மூலம் இந்த சாதனையை அவர் படைத்துள்ளார். இந்தப்போட்டியில் இப்போது வரை 3.5 புள்ளிகள் பெற்ற ஐந்து பேருடன் முதல் இடத்தில் இருக்கிறார்.
புது தில்லியில் உள்ள அமிட்டி பள்ளியில் பயின்று வரும் நேகி கஜக்கிஸ்தானை சேர்ந்த பயிற்சியாளர் இ.விலாடிமிரோவ் அவர்களின் பயிற்சியை திறம்பட உபயோகித்துக் கொண்டுள்ளார்.

11 வயது 5 மாதங்கள் ஆகியிருந்த போது, 2004 ஆம் வருடம் பியல் சதுரங்கப் போட்டியில் சுவிட்சர்லாந்தின் கிராண்ட் மாஸ்டர் இவான் நெமெட்டை தோற்கடித்து, மிகக்குறைந்த வயதில் ஒரு கிராண்ட் மாஸ்டரை வெற்றி கொண்ட இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.

இனி மீதம் உள்ள ஐந்து சுற்றுகளில் மூன்று புள்ளிகள் பெற்றால் மிகக்குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றவர் என்கிற பெருமையை அவர் அடையலாம்.

உலக ஜுனியர் சதுரங்க வீரர் தரப்பட்டியலில் ஹரிகிருஷ்ணா இரண்டாம் இடத்திலும், பெண் சதுரங்க வீராங்கனைகளுக்கான தரப்பட்டியலில் கோனேரு ஹம்பி இரண்டாம் இடத்திலும் இருக்கின்றனர். சசிகிரண், விஜயலட்சுமி ஆகியோரும் உலக அளவில் குறிப்பிடத்தகுந்த இடங்களில் இருக்கின்றனர்.

சதுரங்க விளையாட்டில் இந்தியாவின் எதிர்காலம் பிரகாசமாக இருப்பது கண்கூடாக தெரிகிறது.

பரஞ்சோதி
02-01-2006, 07:10 PM
பரிமஜன் நேகி கிராண்ட் மாஸ்டர் பட்டம் வெல்ல வாழ்த்துகள்.

aren
02-01-2006, 10:52 PM
சாதனையாளர்களின் வரவு தொடரட்டும். அதற்கு என் வாழ்த்துக்கள்.

கிரிக்கெட்டிலிருந்து கொஞ்சம் மாறி மற்ற விளையாட்டுகளையும் ஊக்குவிப்போம்.

அறிஞர்
03-01-2006, 02:26 AM
புத்தாண்டில் அருமையான செய்தி. சாதனைகள் தொடரட்டும்.. இந்தியாவுக்கு பெருமை சேர்க்கட்டும்.

pradeepkt
03-01-2006, 07:06 AM
அருமை.
பார் போற்ற வாழ்க.

gragavan
03-01-2006, 07:51 AM
பரிமஜன் நேகிக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகள். இந்தியாவிற்கு பெருமையும் தனக்குப் புகழும் தேடிக் கொள்ள அவரை வாழ்த்துகிறேன்.

இளசு
03-01-2006, 08:09 PM
நல்ல பதிவு பாரதி. நன்றி.

சாதனையாளர் நேகிக்கு நம் வாழ்த்துகள்..


பாரதம் கண்டுபிடித்த விளையாட்டு செஸ். அதில் இத்தனை இந்தியர்கள் சாதிப்பது கூடுதல் பெருமை.