PDA

View Full Version : 2006 ல் சாதனை முயற்சி



Shanmuhi
01-01-2006, 01:21 PM
2006 ல் சாதனை முயற்சி

தாத்தா ஆறுதலாக சாய்மனைக்கதிரையில் அமர்ந்து இருந்து இளைப்பாறிக் கொண்டு இருந்தார். இதைப்பார்த்த அவரது பேரனுக்கும் தாத்தாவுக்கும் இடம்பெற்ற உரையாடல் இது.

பேரன் :- உன்னிட்ட ஒரு கேள்வி கேட்கனும்

தாத்தா :- என்னடாப்பா கேட்கப்போறே

பேரன் :- என்னோட அப்பா உங்கட பிள்ளைதானே ?

தாத்தா :- இதிலே என்னடா சந்தேகம் உனக்கு..?

பேரன் :- அதுக்கில்ல ஒரு புத்திசாலி பிள்ளையாய் பெற்றிருக்கலாமே.. ?

தாத்தா :- உன் அப்பாவுக்கு புத்தி இல்லை என்று சொல்கிறாயா ?

பேரன் :- அப்பா போட்டுக் கொடுக்கின்ற கணக்கு எல்லாம் தப்பாயிருக்கிறதே.. நான் தான் தினமும் பிரம்படி வாங்கிக் கட்டிக்கொள்றன்.

தாத்தா :- வீட்டுக்கணக்குக்கு நீ ஏன் உன் அப்பாவிடம் போறாய். என்னிடம் வரவேண்டியதுதானே..


பேரன் :- போ தாத்தா உனக்குத்தான் வயதாகி விட்டதே

தாத்தா :- 90 வயசு ஒரு வயசா. 92 வயது தாத்தா எல்லாம் உலக சாதனை செய்யினம் உனக்குத் தெரியுமா..?

பேரன் :- என்ன சாதனை தாத்தா...?

தாத்தா :-அமெரிக்காவில 92 வயசுல ஒரு ஆண், குழந்தைக்கு தகப்பனாக இருக்கிறார். அவரோட மனைவிக்கு 38 வயதுதான்.

பேரன் :-அப்போ அப்பாவுக்கும் பிள்ளைக்கும் வயது வித்தியாசம் 92.. ஆ...

தாத்தா :-அந்த தாத்தாவின் பெயர் கின்னஸ் புத்தகத்திலும் வந்து விட்டது.

பேரன் :- சீரியஸாக கேட்கிறேன் உனக்கு 90 வயது தானே ஆகிறது. இன்னொரு கலியாணம் பண்ணிக்கொண்டால் என்ன ?

தாத்தா :- :cry: :cry: :cry:

பேரன் :- ஏன் தாத்தா இப்படி சின்னபிள்ளை மாதிரி தேம்பி தேம்மி அழுறே யோசனை தப்பாக சொல்லிவிட்டேனா..?

தாத்தா :- உன் யோசனை நல்லதுதான். இந்த புது ஆண்டில் அப்படி ஒரு சாதனை செய்யத்தான் வேண்டும்.ஆனால் அதற்கு உன் பாட்டி அனுமதி கொடுக்க மாட்டாளே... அதை நினைக்கத்தான் எனக்கு அழுகை அழுகையாய் வருகிறது. மனசுக்கு வயசில்லை என்பதை என் பத்தினி அறிவாளா...? ? ?

aren
01-01-2006, 02:20 PM
தாத்தாவிற்கு அப்படி ஒரு ஐடியா இருக்கிறதா? பரவாயில்லை, பேரன் மூலமாகவாது அவர் ஆசைக்கு மீண்டும் ஒரு உயிர் கிடைக்கட்டும்.

பரஞ்சோதி
02-01-2006, 03:47 AM
தாத்தா வருசா வருடம் இப்படி வருத்தப்படுகிறாரே!

தாமரை
02-01-2006, 03:57 AM
என்ன ஆணாதிக்கம் பாருங்கள்..இதே சாதனையை பாட்டி முறியடிக்க தாத்தா உதவி செய்யக் கூடாதா?

sarcharan
02-01-2006, 04:40 AM
ஆஹா.....வருசா வருசம் இவர் மாதிரி தாத்தாக்கள் இப்படி ஆசைப்பட்டுக்கொண்டே போனால் இந்தியா வெளங்கீரும்......

gragavan
02-01-2006, 04:53 AM
தாத்தா.....இதெல்லாம் வேண்டாம்.....அப்புறம் பாட்டி பல்லைப் பேத்தா-ன்னு நீங்க அழ வேண்டியிருக்கும்.

தாமரை
02-01-2006, 06:47 AM
தாத்தா.....இதெல்லாம் வேண்டாம்.....அப்புறம் பாட்டி பல்லைப் பேத்தா-ன்னு நீங்க அழ வேண்டியிருக்கும்.
அவர்கிட்டே கேட்டா அவரே கழற்றி கொடுத்திடுவார்.. எதுக்கு அவ்வளவு கஷ்டம்...?

gragavan
02-01-2006, 07:25 AM
அவர்கிட்டே கேட்டா அவரே கழற்றி கொடுத்திடுவார்.. எதுக்கு அவ்வளவு கஷ்டம்...?சரி மாத்திச் சொல்றேன்.

தாத்தா இதெல்லாம் வேண்டாம். அப்புறம் பாட்டி முட்டியப் பேத்தான்னு அழ வேண்டியிருக்கும். :D :D :D

sarcharan
02-01-2006, 07:45 AM
பாத்து அதுக்கும் முட்டில ப்ளேட்டு அது இதுன்னு ஏதாவது நொண்டிச்சாக்கு வைச்சிருப்பாரு.....
:(



சரி மாத்திச் சொல்றேன்.

தாத்தா இதெல்லாம் வேண்டாம். அப்புறம் பாட்டி முட்டியப் பேத்தான்னு அழ வேண்டியிருக்கும். :D :D :D

பாரதி
02-01-2006, 06:58 PM
:) :) :p

aren
02-01-2006, 10:57 PM
தாத்தா வருசா வருடம் இப்படி வருத்தப்படுகிறாரே!

உங்களிடம் போனவருடம் அதைப்பற்றி சொன்னாரா?

நீங்கள் தாத்தாவிற்காக ரொம்பவும் வருத்தப்படுவது போலிருக்கிறது.

இளசு
03-01-2006, 08:15 PM
ஏற்கனவே வாசித்ததுபோல் இருக்கிறதே சண்முகி அவர்களே..

நான் இவ்வாறு நினைப்பது சரியா தவறா?