PDA

View Full Version : பயோடேட்டா...

தாமரை
30-12-2005, 09:57 AM
பெயர் --------------: சி. தாமரைச்செல்வன்.
பிறந்த நாள் --------: கீலக வருடம் வைகாசி மாதம் 2-ம் தேதி.
பிறந்த இடம் -------: சேலம்.. தமிழ்நாடு.. இந்தியா.
படிப்பு --------------: பட்டப் படிப்பு (பொறியியல்).
தொழில் ------------: கனவு காண்பது
கனவு --------------: தொழில் முன்னேற்றம்
நிஜத்தொழில் --------: கணிப்பொறி மென்னுட்பம்
படித்தது ------------: மூகாம்பிகை பொறியியல் கல்லூரி
பிடித்தது ------------: உலகம் சுற்றுதல்( கொஞ்சம் பெருசா ஊர் சுத்துறது..)புகைப்படம் பிடித்தல், சமையல் ( மற்றவர்களின்..)
கதை ( அளத்தல்..), கவிதை, சினிமா
நண்பர்கள் -----------: நிறைய..
எதிரிகள் -------------: என் வாய்..
பிடித்த நடிகர் --------: ரஜினி
பிடித்த நடிகை -------: ஐஸ்வர்யா ராய்.. அசின், த்ரீஷா, ஜோதிகா ;( சினேகா (பொதுவா அழகா சிரிக்கிறவங்க எல்லாமே பிடிக்கும்)
பிடித்த கவிஞர் ------: கண்ணதாசன்..
பிடித்த தலைவர் -----: காமராஜர்
பிடித்த உணவு -------: மீன், கருவாடு, கோழி, பிட்ஸா, முட்டை அயிட்டங்கள்
பிடித்த இசையமைப்பாளர்----: மெல்லிசை மன்னர்
சுகமான விஷயம் -----------: சோம்பேறித்தனம்
பிடித்த விளையாட்டு --------: கிரிக்கெட், டென்னிஸ்..பேஸ்கட்பால்

(பயோடேட்டா அப்டு டேட்டா இருக்க வேணும்ல அதனால தான்)

மதி
30-12-2005, 10:15 AM
ஆஹா..நம்மூரில தான் படிச்சீயளா...?

தாமரை
30-12-2005, 10:54 AM
களமாவூர்... கீரனூர் .. பசுமை மாறா நினைவுகள்...

இந்த வருடம் என் மகனுக்கு நான் படித்த கல்லூரியைக் காட்டி
பேரானந்தம் அடைந்தேன்....

அறிஞர்
30-12-2005, 01:57 PM
அருமையான அறிமுகம்.... நன்றி....

களமாவூர்... கீரனூர் .. பசுமை மாறா நினைவுகள்...

இந்த வருடம் என் மகனுக்கு நான் படித்த கல்லூரியைக் காட்டி
பேரானந்தம் அடைந்தேன்....எல்லாம் நம்மூரு பக்கம் தான்.... பையன் என்ன சொன்னான்....

aren
30-12-2005, 02:12 PM
நல்ல அறிமுகம்.

செல்வன் அவர்களுக்கு தமிழ் நடிகைகள் யாரும் பிடிக்காதோ?

பரஞ்சோதி
30-12-2005, 06:47 PM
அடடே, தாமரைச்செல்வன், இதில் என்ன இச் இருக்குது.

அப்புறம் எனக்கு பிடித்தது எல்லாம் உங்களுக்கும் பிடித்து இருக்குது.

தாமரை
02-01-2006, 03:45 AM
தமிழ் நடிகை...????
மிகச் சிறந்த தமிழ் நடிகை "மனைவி" தான் ..

இந்த பதில் நிறைய ஆண்களுக்கு பொருந்தும் என நினைக்கிறேன்...

அப்புறம்...

இதில் இருக்கும் "இச்"
---------------------------------------------------------------
தொழில் ------------: கனவு காண்பது
கனவு --------------: தொழில் முன்னேற்றம்

gragavan
02-01-2006, 04:59 AM
வாங்க செல்வம். வாங்க. நீங்களும் பெங்களூருலதான் இருக்கீங்களா! ரொம்ப நல்லது.

உங்களுக்குப் பிடிச்ச கவிஞரு, தலைவரு, உணவு, இசையமைப்பாளரு எல்லாம் எனக்கும் பிடிக்கும். நானும் வைகாசீலதான் பொறந்தேன். ஆனா தேதியெல்லாம் தெரியாது.

தாமரை
02-01-2006, 05:20 AM
வைகாசி - யில பொறந்தாலும்.. "வை - காசு" ன்னு சொல்ல மாட்டேன்

gragavan
02-01-2006, 05:24 AM
வைகாசி - யில பொறந்தாலும்.. "வை - காசு" ன்னு சொல்ல மாட்டேன்அட எகன மொகனயெல்லாம் வகனையாத்தான் இருக்கு.....இதுவும் வைகாசி விசேசமோ?

aren
02-01-2006, 05:31 AM
அட எகன மொகனயெல்லாம் வகனையாத்தான் இருக்கு.....இதுவும் வைகாசி விசேசமோ?

ஏன் உங்களுக்கும் எகன மொகனயெல்லாம் வகனையா வருமோ?

தாமரை
02-01-2006, 05:35 AM
அப்படியல்ல ஆரென்... வைகாசி என்பது மே மாதம்.. சித்திரை கடைசி ஏழு நாட்கள் மற்றும் வைகாசி முதல் ஏழு நாட்கள் அக்னி நட்சத்திரம்.. கத்திரி வெய்யில்... கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருக்கும்..

sarcharan
02-01-2006, 05:37 AM
செல்வன்,
நானும் மூகாம்பிகை கல்லூரியில் தான் படித்தேன்(1999ம் ஆண்டு நிறைவு செய்தேன்)..

தாமரை
02-01-2006, 05:50 AM
சரவணன் எந்த வருடம் படித்தீர்கள் என்று கேட்டு என் வயசை கண்டு பிடிக்க முயற்சி செய்யாதீங்க.

gragavan
02-01-2006, 05:57 AM
ஏன் உங்களுக்கும் எகன மொகனயெல்லாம் வகனையா வருமோ?அப்படீன்னு நான் சொல்லலீங்க. சொல்லலீங்க. சொல்லவே இல்லீங்க. ஆனா முயற்சி செஞ்சிப் பாப்பேன்.:)

aren
02-01-2006, 05:59 AM
சரவணன் எந்த வருடம் படித்தீர்கள் என்று கேட்டு என் வயசை கண்டு பிடிக்க முயற்சி செய்யாதீங்க.

பெரிய மார்க்கண்டேயன் என்று நினைப்போ உங்களுக்கு.

aren
02-01-2006, 06:00 AM
அப்படீன்னு நான் சொல்லலீங்க. சொல்லலீங்க. சொல்லவே இல்லீங்க. ஆனா முயற்சி செஞ்சிப் பாப்பேன்.:)

அப்படி ஒரு பயம் தேவைதான்.

என்ன "தலை" நான் சொல்வது சரீங்களா?

தலையையும் இங்கே வம்புக்கு இழுக்கும்
ஆரென்

pradeepkt
02-01-2006, 06:29 AM
தமிழ் வருசத்தைப் பாத்தா நீங்க எப்பப் பொறந்தீங்கன்னு தெரிஞ்சிறப் போவுது... சரவணா, சிஐடி வேலை பாரு ராசா!

அப்புறம் நானும் வைகாசியில (அட மதுரையிலதேன்) பொறந்தேன்.

தாமரை
02-01-2006, 06:36 AM
அப்புறம் நானும் வைகாசியில (அட மதுரையிலதேன்) பொறந்தேன்.

மதுரையில வைகாசின்னா மாதமா? தெருவா? இல்லை இரண்டுமா?

மதுரையில.. எல்லா மாசப் பேரிலும் நாலு நாலு தெரு இருக்குமே...

gragavan
02-01-2006, 07:14 AM
அப்படி ஒரு பயம் தேவைதான்.

என்ன "தலை" நான் சொல்வது சரீங்களா?

தலையையும் இங்கே வம்புக்கு இழுக்கும்
ஆரென்பயமா? அப்படீன்னா? சுயமாச் சொன்னா பயமாச் சொல்றான்னு நெனைக்கிறீங்களா? நாங்க நல்லாரணி.

gragavan
02-01-2006, 07:16 AM
தமிழ் வருசத்தைப் பாத்தா நீங்க எப்பப் பொறந்தீங்கன்னு தெரிஞ்சிறப் போவுது... சரவணா, சிஐடி வேலை பாரு ராசா!

அப்புறம் நானும் வைகாசியில (அட மதுரையிலதேன்) பொறந்தேன்.அட வைகை ஓடுற ஊருல வைகாசில பொறந்தது நீங்கதானா?

தாமரை
02-01-2006, 10:49 AM
பயமா? அப்படீன்னா? சுயமாச் சொன்னா பயமாச் சொல்றான்னு நெனைக்கிறீங்களா? நாங்க நல்லாரணி.

நாமார்க்கும் குடியல்லோம் நமனை யஞ்சோம்...

சரி சரி சரி...... நான் கல்லூரியின் "மூத்த" மாணவர்களில் ஒருவன் (1985-1989)..

மூகாம்பிகை முத்தமிழ் மன்ற (மூகாம்பிகை பொறியியல் கல்லூரி) முதல் செயலாளர்

sarcharan
02-01-2006, 12:34 PM
ஆத்தீ......

அம்புட்டு பெரியவுகளா நீஹ........

அப்போ ஒரு இள(இப்போ ஒரு கிழ!!!) முத்தமிழ் மன்ற செயலாளருன்னு சொல்லுங்க....

;) :p :rolleyes: :cool:

நாமார்க்கும் குடியல்லோம் நமனை யஞ்சோம்...

சரி சரி சரி...... நான் கல்லூரியின் "மூத்த" மாணவர்களில் ஒருவன் (1985-1989)..

மூகாம்பிகை முத்தமிழ் மன்ற (மூகாம்பிகை பொறியியல் கல்லூரி) முதல் செயலாளர்

தாமரை
03-01-2006, 05:19 AM
ஆத்தீ......

அம்புட்டு பெரியவுகளா நீஹ........

அப்போ ஒரு இள(இப்போ ஒரு முதிய!!!) முத்தமிழ் மன்ற செயலாளருன்னு சொல்லுங்க....

;) :p :rolleyes: :cool:

நீங்க வைகாசில பொறந்தீங்க அப்படின்னீங்க

அப்போ இள..
இப்போ கிழ ..
அப்படின்னு போடாமா.. முதிய அப்படின்னு போட்டு சந்தத்துக்கு சங்கு ஊதிட்டீங்களே!!!

இளசு
03-01-2006, 08:20 PM
வாங்க வாங்க.. பென்ஸ், பிரதீப், மதி, முகிலன், ராகவன், சரவணன், ஜீவா, பரம்ஸ்..

எல்லாரும் ஓடியாங்க..

கலகலப்பாய் ஒரு ரவுசு பார்ட்டி வரவு..

தலை, ஆரென் கிட்ட இப்பக்கி கூட்டிட்டு போவாதீங்க.. சொல்லிட்டேன்..

வாருங்கள் செல்வன். சிரிக்க சிரிக்க பேசும் உங்களின் சிநேகிதக் கூட்டத்தில் நானும் சங்கமம்..

aren
04-01-2006, 01:12 AM
தலை, ஆரென் கிட்ட இப்பக்கி கூட்டிட்டு போவாதீங்க.. சொல்லிட்டேன்..

..

நானும் தலையும் ரொம்ப நல்லவர்கள். எங்களை ..............

சரி போங்க. நீங்களே சொல்லிப்புட்டீங்க. நாங்க என்ன செய்யமுடியும். நாங்கள் வாயில்லாப்பூச்சிகள்.

ஹீம்....

ஒன்றும் செய்யமுடியாமல்
ஐயோபாவம் ஆரென்

பென்ஸ்
04-01-2006, 06:16 AM
இப்ப எல்லாம் மன்றம் வந்திட்டு நான் வயிறு வலித்து போகிறேன்... சிரிச்சு சிரிச்சு கண்ணிர்ர் வருது... இந்த மத்தியில இன்னொரு N2O-வா????

வாங்க வாங்க.... கலக்கிருவோம்

(தலை, ஆரென் னுக்கு எதிரா ஒரு கும்பலை கிளப்பி விடனும்... இளந்திரையன், செல்வன் இவங்களை வைத்து முதலில் கிளப்பி விடலாமோ???)

aren
04-01-2006, 06:26 AM
(தலை, ஆரென் னுக்கு எதிரா ஒரு கும்பலை கிளப்பி விடனும்... இளந்திரையன், செல்வன் இவங்களை வைத்து முதலில் கிளப்பி விடலாமோ???)

எங்கிருந்து இத்தனைபேர் கிளம்பியிருக்கிறீர்கள். இப்படி நல்லவர்கள் மேல் மற்றவர்களை ஏவி விடலாமா? அது பாவமில்லையா?

நல்லவன்
ஆரென்

தாமரை
04-01-2006, 07:53 AM
ஏவி விட நாங்கள் அம்பு அல்ல..
அமைதியாய் இருந்து விட்டால் வம்பு இல்ல...
ஆரவாரம் செய்வது பண்பு இல்ல...
ஏன்னா...
தினம் தினம் மல்லுகட்ட தெம்பு இல்ல..

pradeepkt
04-01-2006, 10:00 AM
இப்ப எல்லாம் மன்றம் வந்திட்டு நான் வயிறு வலித்து போகிறேன்... சிரிச்சு சிரிச்சு கண்ணிர்ர் வருது... இந்த மத்தியில இன்னொரு N2O-வா????

வாங்க வாங்க.... கலக்கிருவோம்

(தலை, ஆரென் னுக்கு எதிரா ஒரு கும்பலை கிளப்பி விடனும்... இளந்திரையன், செல்வன் இவங்களை வைத்து முதலில் கிளப்பி விடலாமோ???)
இது என்னய்யா இது புதுசா வேதியியல் சூத்திரம் எல்லாம் சொல்றீங்க,
ஒரு வேளை எதிரணியில ஐக்கியமாகத் திட்டமோ???

தாமரை
04-01-2006, 12:41 PM

அட நான் நைட்ரஸ் ஆக்சைட் இல்லீங்கோ
நவரச ஆக்ஸைடுங்கோ

தாமரை
06-01-2006, 10:12 AM
குறுகிய காலத்தில் 100 பதிவுகள் செய்ததற்கு எதாவது பரிசு உண்டா?

pradeepkt
06-01-2006, 11:13 AM
நீங்க வந்தன்னைக்கே எங்க இதயத்தில இடம் குடுத்துட்டோமே... இப்ப ஹைதராபாது ரியல் எஸ்டேட்டை விட காஸ்ட்லியாச்சே அது... :D :D

பாராட்டுகள்!!! இன்னும் இதுபோல் ஆயிரமாயிரம் பதிவுகள் போடுங்க, நாங்க ரசிக்கிறோம்

aren
06-01-2006, 01:12 PM
இது என்னய்யா இது புதுசா வேதியியல் சூத்திரம் எல்லாம் சொல்றீங்க,
ஒரு வேளை எதிரணியில ஐக்கியமாகத் திட்டமோ???

அவர் வந்த பொழுதிலிருந்தே எதிரணியில்தான் இருக்கிறார். நீங்கள் இதுவரை என்ன நினைத்துக்கொண்டிருந்தீர்கள்.

aren
06-01-2006, 01:15 PM
குறுகிய காலத்தில் 100 பதிவுகள் செய்ததற்கு எதாவது பரிசு உண்டா?

100க்கே பரிசு கேட்டால் இன்னும் 1000, 10000 என்று நீங்கள் பதிவுகள் செய்தால் நாங்கள் என்ன பரிசுதான் கொடுப்போம்.

இப்போதைக்கு, ஒரு சபாஷ்!!! இதையே இப்பொழுது பரிசாக எடுத்துக்கொள்ளுங்கள்.

இளசு, பரம்ஸ், மன்மதன் ஆகியோர் என்னை கவனிக்கிறார்கள். ஆகையால் கொஞ்சம் அடக்கிவாசிக்கிறேன், ஏனெனில் அவர்களுக்கு பரிசு கொடுத்து நமக்கு கட்டுப்படியாகாது.

aren
06-01-2006, 01:16 PM
நீங்க வந்தன்னைக்கே எங்க இதயத்தில இடம் குடுத்துட்டோமே... இப்ப ஹைதராபாது ரியல் எஸ்டேட்டை விட காஸ்ட்லியாச்சே அது... :D :D

பாராட்டுகள்!!! இன்னும் இதுபோல் ஆயிரமாயிரம் பதிவுகள் போடுங்க, நாங்க ரசிக்கிறோம்

உங்கள் இதயத்தில் இடம் கொடுத்து என்ன பிரயோஜனம். யாராவது ஒரு அழகான பெண் வந்தால் எங்களை காலிபண்ண சொல்லிவிட்டு அவர்களுக்கு இடம் கொடுத்துவிடுவீர்கள்.

நமக்கு நம்ம வாடகை வீடே மேலப்பா? செல்வம் உங்களுக்கும்தானே?

அறிஞர்
06-01-2006, 02:47 PM
குறுகிய காலத்தில் 100 பதிவுகள் செய்ததற்கு எதாவது பரிசு உண்டா?வாழ்த்துக்கள் என்றும் உண்டு.... கலக்கலாக எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துக்கிறீர்கள்.... மற்றவர்கள் சந்தோசபடுத்துவதுவே... சிறந்த வரம் (பெரிய பரிசு) அல்லவா..... அது இருக்கும்போது.. எதுக்கு சின்ன சின்ன பரிசு எல்லாம்....:) :)

தாமரை
09-01-2006, 04:17 AM
நீங்க வந்தன்னைக்கே எங்க இதயத்தில இடம் குடுத்துட்டோமே... இப்ப ஹைதராபாது ரியல் எஸ்டேட்டை விட காஸ்ட்லியாச்சே அது... :D :D

பாராட்டுகள்!!! இன்னும் இதுபோல் ஆயிரமாயிரம் பதிவுகள் போடுங்க, நாங்க ரசிக்கிறோம்

எனக்கு பேராசையெல்லாம் கிடையாது. ஹைதராபாத்தில் ஒரு அரை கிரவுண்ட் கூட போதுமென்னும் பொன் மனது என்னுடையது

pradeepkt
09-01-2006, 04:51 AM
உங்க மனசு வைரம்யா...
இன்னும் கொஞ்ச நாளில என் தலையில முக்கால் கிரவுண்டு காலி நிலம் இருக்கும் அதை எடுத்துக்கிருங்க... :D :D

தாமரை
09-01-2006, 05:04 AM
களிமண் பூமியா? நாங்க ஏரி ஆக்ரமிப்பு செய்வதில்லை:D :D :D

ஓவியா
23-11-2006, 08:11 PM
ஆரேன் அண்ணா கடி-கடிச்சு இப்பதான் படிகின்றேன்....சூப்பர்

அனைத்து பதிவையும் படித்தேன் (40)

நல்லா சிரித்தேன்

ஓரே ஜாலியா இருந்தது....:D :D :D :D

pradeepkt
24-11-2006, 04:05 AM
அடேயப்பா...
தாமரையின் ஆரம்ப கால வண்டவாளங்களைக் கூட விடாமல் மீண்டும் எடுத்துக் கொடுக்கிறீர்களே ஓவியா???
என்னே உம் பண்பு, அன்பு, வம்பு, தும்பு, சிம்பு???

தாமரை
24-11-2006, 04:34 AM
அடேயப்பா...
தாமரையின் ஆரம்ப கால வண்டவாளங்களைக் கூட விடாமல் மீண்டும் எடுத்துக் கொடுக்கிறீர்களே ஓவியா???
என்னே உம் பண்பு, அன்பு, வம்பு, தும்பு, சிம்பு???

அடிக்காதீங்க இப்படி சொம்பு
கையில வச்சிருக்கேன் கம்பு
தாமரையை நம்பு
தகாது இந்தக் குறும்பு

மயூ
24-11-2006, 05:05 AM
அடிக்காதீங்க இப்படி சொம்பு
கையில வச்சிருக்கேன் கம்பு
தாமரையை நம்பு
தகாது இந்தக் குறும்பு

எதுக்கு இந்தக் கோபம்
விட்டிடுங்க அவங்க பாவம்
நீங்க சீறினா நாகம்
கொத்திடாதீங்க அவங்க பாவம்
அப்புறம் தேடனும் பரோபகாரம் :D :D :D :D :D :D :D

மயூ
24-11-2006, 05:07 AM
அடேயப்பா...
தாமரையின் ஆரம்ப கால வண்டவாளங்களைக் கூட விடாமல் மீண்டும் எடுத்துக் கொடுக்கிறீர்களே ஓவியா???
என்னே உம் பண்பு, அன்பு, வம்பு, தும்பு, சிம்பு???

எதுக்கு இந்த நேரத்தில பாழாப்போன சிம்புவையெல்லாம் ஞாபகப் படுத்துறீங்க...???
வல்லவன் எண்டு ஒரு படம் வீட்டிலே குடும்பத்துடன் பார்க்கப்போயி வேண்டிக்கட்டினது ஞாபகம் வருது

தாமரை
24-11-2006, 05:15 AM
எதுக்கு இந்தக் கோபம்
விட்டிடுங்க அவங்க பாவம்
நீங்க சீறினா நாகம்
கொத்திடாதீங்க அவங்க பாவம்
அப்புறம் தேடனும் பரோபகாரம் :D :D :D :D :D :D :D

பரோபகாரம் = பர + உபகாரம்

அதாவது முன்பின் தெரியாதவர்களின் உதவி..
இங்க முன்பின் தெரியாதவங்க யாரு மயூரேசா?

தாமரை கொத்தலை
அதுக்காக வைக்கலாமா வெத்தலை
அனாவசியமா கத்தலை
இவங்களுக்கு இத்தனை கொடுத்து பத்தலை

sarcharan
24-11-2006, 05:29 AM
ஹா ஹா ஹா சபாஷ் சரியான போட்டி...

pradeepkt
24-11-2006, 05:34 AM
எதுக்கு இந்த நேரத்தில பாழாப்போன சிம்புவையெல்லாம் ஞாபகப் படுத்துறீங்க...???
வல்லவன் எண்டு ஒரு படம் வீட்டிலே குடும்பத்துடன் பார்க்கப்போயி வேண்டிக்கட்டினது ஞாபகம் வருது
உனக்கு என்ன நெஞ்சழுத்தம் இருந்தா சிம்பு படம் பார்க்கப் போயிருப்ப? அதுவும் குடும்பத்தோட... :eek:
சரி இதுவும் ஒரு பாடம்தான்... நிற்க, இந்தப் படமும் ஓடுதாமேங்க நம்மூருல??? மக்களே, உண்மையா? :rolleyes:

மயூ
24-11-2006, 05:35 AM
பரோபகாரம் = பர + உபகாரம்

அதாவது முன்பின் தெரியாதவர்களின் உதவி..
இங்க முன்பின் தெரியாதவங்க யாரு மயூரேசா?

தாமரை கொத்தலை
அதுக்காக வைக்கலாமா வெத்தலை
அனாவசியமா கத்தலை
இவங்களுக்கு இத்தனை கொடுத்து பத்தலை

உங்கள் நக்கல் கவிதைக்கு யாரும் அவ்வளவு லேசில் பதில் கவிதை எழுத முடியாது!!!:D :D
ஒரு தடவை பட்டா திருந்தனும்
இல்லைன்னா வாழ்க்கை முழுக்க வருந்தனும்:D :eek:

sarcharan
24-11-2006, 05:37 AM
எதுக்கு இந்த நேரத்தில பாழாப்போன சிம்புவையெல்லாம் ஞாபகப் படுத்துறீங்க...???
வல்லவன் எண்டு ஒரு படம் வீட்டிலே குடும்பத்துடன் பார்க்கப்போயி வேண்டிக்கட்டினது ஞாபகம் வருது

தம்பி மயூரேசா,
உன் குடும்பத்து மேல அப்படி என்னப்பா கோபம்??? சிம்பு படம் பாக்க வெச்சுட்ட????

இன்னொரு தரம் இது ரிப்பீட்டு ஆட்டுன்னா
அப்புறம் வந்த்தே கோபம்
பிடி சாபம்ன்னு சாபம் ஏதாவது குடுத்துற போறாங்க..

மயூ
24-11-2006, 05:37 AM
ஹா ஹா ஹா சபாஷ் சரியான போட்டி...

என்ன இங்க சரோசா தேவியும் வைஜந்திமாலாவுமா ஆடிக்கிட்டு இருக்கிறாங்க!!!:D :D

sarcharan
24-11-2006, 05:40 AM
உங்கள் நக்கல் கவிதைக்கு யாரும் அவ்வளவு லேசில் பதில் கவிதை எழுத முடியாது!!!:D :D
ஒரு தடவை பட்டா திருந்தனும்
இல்லைன்னா வாழ்க்கை முழுக்க வருந்தனும்:D :eek:

என்ன சிம்பு படம் பாத்து அந்த தாடிக்காரரு மாதிரியே பேச ஆரம்பிச்சுட்டீரு...

பாத்து அப்புறம் உங்க கவிதைகளை கரடியோட கடின்னு சொல்லீறப்போறாங்க....

மயூ
24-11-2006, 05:41 AM
தம்பி மயூரேசா,
உன் குடும்பத்து மேல அப்படி என்னப்பா கோபம்??? சிம்பு படம் பாக்க வெச்சுட்ட????

இன்னொரு தரம் இது ரிப்பீட்டு ஆட்டுன்னா
அப்புறம் வந்த்தே கோபம்
பிடி சாபம்ன்னு சாபம் ஏதாவது குடுத்துற போறாங்க..

ஐயா இப்ப அலேர்ட்டு இனி தப்பு செய்ய மாட்டாரு!!!!!
டேய் சிம்பு மயூரேசன் கையில மாட்டிடாதடா!!!
எல்லாம் சரி என்ன நாயன்தாராவை சிம்பு கைகழுவிட்டதாக ஒரு கேள்வி உண்மையா!

டேய் சிம்பு
எதுக்குடா இந்த வம்பு
நீ ஒரு தும்பு
வைச்சுக்காத வீண் வம்பு
அப்புறம் தேடுவே அம்புலென்சு

மயூ
24-11-2006, 05:43 AM
என்ன சிம்பு படம் பாத்து அந்த தாடிக்காரரு மாதிரியே பேச ஆரம்பிச்சுட்டீரு...

பாத்து அப்புறம் உங்க கவிதைகளை கரடியோட கடின்னு சொல்லீறப்போறாங்க....

கரடி கடிச்சா கடி
ஆனா மயூரேசன் கடிச்சா மரண அ(க)டி :D

sarcharan
24-11-2006, 05:46 AM
கரடி கடிச்சா கடி
ஆனா மயூரேசன் கடிச்சா மரண அ(க)டி :D

சந்தேகமே இல்லை மக்கா

வல்லவன் படம் பாத்து ஒரு
நல்லவன் இப்படி ஆகிவிட்டான்

ராகவரு மாதிரி சொன்னா.... ஹ்ம்ம்ம் என்ன செய்ய...:eek:

மயூ
24-11-2006, 05:51 AM
சந்தேகமே இல்லை மக்கா

வல்லவன் படம் பாத்து ஒரு
நல்லவன் இப்படி ஆகிவிட்டான்

ராகவரு மாதிரி சொன்னா.... ஹ்ம்ம்ம் என்ன செய்ய...:eek:

எங்கோ கிடந்தது செல்வரின் பதிவு
அதை கிண்டி எடுத்தது ஓவியாவின் துணிவு
மீண்டும் சீண்டுவது பிரதீப்பின் லொள்ளு
இதைப்பார்த்து சில்லிட்டது தாமரையின் முள்ளந்தண்டு
இடையில் கவிதை புனைவது மயூரேசரல்ல அந்த சிம்பு

சரி இத்தோட இன்னிக்கு ஒதுங்கிக்கிறேன்... சாப்பாட்டு நேரம் போய் விழுங்கோணும்!

மதி
24-11-2006, 06:08 AM

மயூரா..
எப்படி இருக்க...? உடல்நிலை சரியாகிவிட்டதா???

ஆனாலும் இப்படியா டி.ஆர் ரசிகனாவது???

guna
24-11-2006, 06:38 AM
தாமரை அண்ணா..
இங்கே பன்னது போதும் வம்பு..
"ஒருவர் ஒரு வரி கதை"யில் தேவைப் படுது உங்க பங்கு..
"நானே ஆரம்பிச்சு வைகறேன்'ன்னு சொன்னீங்க முன்பு..
இப்போ உங்களை காணலையே அங்கு..
ஆரம்பித்தவரே முடிச்சும் வைக்கிறது தானே நம்ம பண்பு?

அண்ணா, இது கோரிக்கை தான் கோவிச்சுக்காதிங்க..

sarcharan
24-11-2006, 08:20 AM
நீங்கள் எல்லா உண்மைகளையும் சொல்ல வேண்டும் என்றில்லை-
ஆனால் நீங்கள் சொல்வதெல்லாம் உண்மையாக இருக்கட்டும்..

நீங்கள் திருமணமானவரா????

தாமரை
24-11-2006, 08:32 AM
என்ன சிம்பு படம் பாத்து அந்த தாடிக்காரரு மாதிரியே பேச ஆரம்பிச்சுட்டீரு...

பாத்து அப்புறம் உங்க கவிதைகளை கரடியோட கடின்னு சொல்லீறப்போறாங்க....
யாரது சரவணனா? என்னப்பா இன்னும் கல்யாணம் முடியலையே? எப்படி இந்தப் பக்கம்?

தாமரை
24-11-2006, 08:40 AM
தாமரை அண்ணா..
இங்கே பன்னது போதும் வம்பு..
"ஒருவர் ஒரு வரி கதை"யில் தேவைப் படுது உங்க பங்கு..
"நானே ஆரம்பிச்சு வைகறேன்'ன்னு சொன்னீங்க முன்பு..
இப்போ உங்களை காணலையே அங்கு..
ஆரம்பித்தவரே முடிச்சும் வைக்கிறது தானே நம்ம பண்பு?

அண்ணா, இது கோரிக்கை தான் கோவிச்சுக்காதிங்க..
அது நாளை பார்த்து ஒட்டு வேலை செய்ய வேண்டியது.. நேர் செய்யறேன்.. எல்லாத்தையும் நேர் செய்யறேன்..
மனுஷனுக்கு இருக்குறது ஐம் புலன்ஸ்
அவன் போறதோ ஆம்புலன்ஸ்

தாமரை
24-11-2006, 09:50 AM
தாமரை அண்ணா..
இங்கே பன்னது போதும் வம்பு..
"ஒருவர் ஒரு வரி கதை"யில் தேவைப் படுது உங்க பங்கு..
"நானே ஆரம்பிச்சு வைகறேன்'ன்னு சொன்னீங்க முன்பு..
இப்போ உங்களை காணலையே அங்கு..
ஆரம்பித்தவரே முடிச்சும் வைக்கிறது தானே நம்ம பண்பு?

அண்ணா, இது கோரிக்கை தான் கோவிச்சுக்காதிங்க..
கோரிக்கை வச்சது தங்கை
கொடுத்துட்டேன் என் பங்கை
சும்மா கிடந்த சங்கை
ஊதினாள் ஓவிய மங்கை
மலேசிய பணம் சிங்கை
எண்ணிச் சிவந்த செங்கை
பொங்கி வரும் கங்கை
போல எழுதும் எங்கை
இனி வேடிக்கைப் பார் நான் வாங்கும் வாங்கை
எதிரியின் கை வீங்கிற வீங்கை
பாடு அண்ணனோட ஸாங்கை
அண்ணன் எப்பவுமே வேங்கை

ஓவியா
24-11-2006, 06:11 PM
அடேயப்பா...
தாமரையின் ஆரம்ப கால வண்டவாளங்களைக் கூட விடாமல் மீண்டும் எடுத்துக் கொடுக்கிறீர்களே ஓவியா???
என்னே உம் பண்பு, அன்பு, வம்பு, தும்பு, சிம்பு???

:D :D :D

எதுக்கு இந்த நேரத்தில பாழாப்போன சிம்புவையெல்லாம் ஞாபகப் படுத்துறீங்க...???
வல்லவன் எண்டு ஒரு படம் வீட்டிலே குடும்பத்துடன் பார்க்கப்போயி வேண்டிக்கட்டினது ஞாபகம் வருது

மாயூ எடுத்து கொடுத்தற்க்கு நன்றி
உடனே போய் வல்லவனை பார்கிறேன்

ஓவியா
24-11-2006, 06:12 PM
கரடி கடிச்சா கடி
ஆனா மயூரேசன் கடிச்சா மரண அ(க)டி :D

சிக்கன்குனியா...:eek: :eek: :D

ஓவியா
24-11-2006, 06:21 PM
செல்வன் அண்ணா
உங்க கவிதைகள் அனைத்தும் சக்கப்போடு போடுது

இப்பதான் இந்த வார்த்தை ரொம்ப தேவைப்படுகின்றது....

அருமையான பதிவு....
மறவாமல் தொடரவும் நண்பர்களே

சங்கூதும்
ஓவியா

guna
25-11-2006, 12:51 AM
நீங்கள் திருமணமானவரா????

ஏன் திடீர்ன்னு குணா கிட்ட இப்படி ஒரு கேள்வி சரவணன்..

ஏன் திருமணம் ஆனவங்க தான் உண்மைகளை சொல்ல சொல்லி கேட்பாங்களா?
இல்லை திருமணமானவங்க தான் எல்லா உண்மைகளையும் மறைப்பாங்களா?

எது எப்படியோ குணா வேலை செஞ்சுகிட்டே படிக்கர மாணவி, மனைவி கிடையாது..

guna
25-11-2006, 01:25 AM
கோரிக்கை வச்சது தங்கை
கொடுத்துட்டேன் என் பங்கை
சும்மா கிடந்த சங்கை
ஊதினாள் ஓவிய மங்கை
மலேசிய பணம் சிங்கை
எண்ணிச் சிவந்த செங்கை
பொங்கி வரும் கங்கை
போல எழுதும் எங்கை
இனி வேடிக்கைப் பார் நான் வாங்கும் வாங்கை
எதிரியின் கை வீங்கிற வீங்கை
பாடு அண்ணனோட ஸாங்கை
அண்ணன் எப்பவுமே வேங்கை

கோரிக்கையை நிறைவேத்தினதுக்கு நன்றிகள் அண்ணா..

எல்லாம் சரிதான், அது என்ன"மலேசிய பணம் சிங்கை"
ஒன்னும் புரியலையே?

தாமரை
25-11-2006, 01:58 AM
கோரிக்கையை நிறைவேத்தினதுக்கு நன்றிகள் அண்ணா..

எல்லாம் சரிதான், அது என்ன"மலேசிய பணம் சிங்கை"
ஒன்னும் புரியலையே?
ஏதோ விளம்பரத்தில் கேட்ட ஞாபகம்.. விலை 2 மலேசிய சிங்கைகள்..

மலேசிய சிங்கை
எண்ணிச் சிவந்த செங்கை
ஓவிய நங்கை

தாமரை
25-11-2006, 02:03 AM
நீங்கள் திருமணமானவரா????
கல்யாணம் ஆகாதவங்க உண்மையை உரைப்பாங்க :) :) :)
ஆனவங்க உண்மையை மறைப்பாங்க:rolleyes: :rolleyes: :rolleyes:
ஆனா கல்யாணம் ஆகப் போகும் உம்மைப் போன்ற சில பேர்
உரைப்பதா மறைப்பதான்னு முழிப்பாங்க :eek: :eek: :eek:

ஓவியா
25-11-2006, 11:35 AM
ஏதோ விளம்பரத்தில் கேட்ட ஞாபகம்.. விலை 2 மலேசிய சிங்கைகள்..

மலேசிய சிங்கை
எண்ணிச் சிவந்த செங்கை
ஓவிய நங்கை

அண்ணா இது என்னாண்ணா,
கவிதை விளங்கவில்லையே?

எனிவேய்..:angry:
இது கண்டிப்பா எனக்கு அல்லதானே....

தாமரை
26-11-2006, 02:29 AM
அண்ணா இது என்னாண்ணா,
கவிதை விளங்கவில்லையே?

எனிவேய்..:angry:
இது கண்டிப்பா எனக்கு அல்லதானே....

:D :D :D :D :D

மயூ
27-11-2006, 03:04 AM
மயூரா..
எப்படி இருக்க...? உடல்நிலை சரியாகிவிட்டதா???

ஆனாலும் இப்படியா டி.ஆர் ரசிகனாவது???

நலம் நலம் கொழும்பு வந்து விட்டேன்....
இப்போது பூரண நலம்.:D

மயூ
27-11-2006, 03:07 AM
:D :D :D

மாயூ எடுத்து கொடுத்தற்க்கு நன்றி
உடனே போய் வல்லவனை பார்கிறேன்

வேணா! வேணா அப்புறம்... நான் பொறுப்பில்லை :eek: :eek:

மயூ
27-11-2006, 03:08 AM
சிக்கன்குனியா...:eek: :eek: :D

அது மயூரேசன் கடிச்சா இல்லை
மயூரேசனுக்கு நுளம்பு கடிச்சா :D

தாமரை
06-12-2007, 01:36 PM
கல்யாணம் ஆகாதவங்க உண்மையை உரைப்பாங்க :) :) :)
ஆனவங்க உண்மையை மறைப்பாங்க:rolleyes: :rolleyes: :rolleyes:
ஆனா கல்யாணம் ஆகப் போகும் உம்மைப் போன்ற சில பேர்
உரைப்பதா மறைப்பதான்னு முழிப்பாங்க :eek: :eek: :eek:

இப்ப இது சில பேருக்கு பொருத்தமா இருக்குதேங்கற எண்ணத்தில வெளிய கொண்டு வர்ரேன்

அக்னி
06-12-2007, 03:07 PM
இப்ப இது சில பேருக்கு பொருத்தமா இருக்குதேங்கற எண்ணத்தில வெளிய கொண்டு வர்ரேன்
ஓரமாய் தூங்கிய திரி
விழி மலர்த்துகின்றது...
யதார்த்தமா? செல்வ
ன் சதியா?

மதி
06-12-2007, 03:12 PM
ஓரமாய் தூங்கிய திரி
விழி மலர்த்துகின்றது...
யதார்த்தமா? செல்வ
ன் சதியா?
அட:):)

தாமரை
06-12-2007, 04:01 PM
எல்லா தீயும் தான் அக்னி.:)

அமரன்
06-12-2007, 04:33 PM
அட' தீக்குமா??

அக்னி
06-12-2007, 04:55 PM
அமர தீயும் ரசிப்புத்தானே...

ஓவியன்
06-12-2007, 05:00 PM
கல்யாணம் ஆகாதவங்க உண்மையை உரைப்பாங்க :) :) :)
ஆனவங்க உண்மையை மறைப்பாங்க:rolleyes: :rolleyes: :rolleyes:
ஆனா கல்யாணம் ஆகப் போகும் உம்மைப் போன்ற சில பேர்
உரைப்பதா மறைப்பதான்னு முழிப்பாங்க :eek: :eek: :eek:

இப்ப இது சில பேருக்கு பொருத்தமா இருக்குதேங்கற எண்ணத்தில வெளிய கொண்டு வர்ரேன்

வெளியே கொண்டு வருவதெல்லாம் சரிதான், உரைப்பதா மறைப்பதா என்று சிலர் முளித்தது உங்களுக்கு எப்படித்தான் தெரிந்ததோ தெரியலையே....!! :rolleyes:

ஓவியன்
06-12-2007, 05:03 PM
ஓரமாய் தூங்கிய திரி
விழி மலர்த்துகின்றது...
யதார்த்தமா? செல்வ
ன் சதியா?

சதியோ
விதியோ
யாமறியேன்
ஆனால் இனி
அக்னி
கதிமட்டும்
யாமறிவேன்.....!!!

:violent-smiley-010::violent-smiley-010::violent-smiley-010::violent-smiley-010::violent-smiley-010::violent-smiley-010::violent-smiley-010::violent-smiley-010:

தாமரை
06-12-2007, 05:03 PM
வெளியே கொண்டு வருவதெல்லாம் சரிதான், உரைப்பதா மறைப்பதா என்று சிலர் முளித்தது உங்களுக்கு எப்படித்தான் தெரிந்ததோ தெரியலையே....!! :rolleyes:

உரைத்துப் பார்த்துதான்:lachen001::lachen001::lachen001:

அமரன்
06-12-2007, 05:05 PM
உரைத்துப் பார்த்துதான்:lachen001::lachen001::lachen001:
சேதாரம் இல்லையா?:confused:

ஓவியன்
06-12-2007, 05:06 PM
உரைத்துப் பார்த்துதான்:lachen001::lachen001::lachen001:

உரைத்துப் பார்த்ததை
உரசிப் பார்த்தால்
உரித்த வெங்காயமாய்
உறைக்குமே........!! :rolleyes:

....................................

உரித்த வெங்காயமாய் கடைசியில் உள்ளே ஒன்றுமிராது என்று சொன்னேனுங்கோ...!! :icon_rollout:

அக்னி
06-12-2007, 05:45 PM
களமாவூர்... கீரனூர் .. பசுமை மாறா நினைவுகள்...

வேட்டையாடு விளையாடு கீரனூரா...:smilie_abcfra:

ஆதவா
07-12-2007, 04:15 AM
வாங்க அண்ணே! நல்வரவு... :D

ஓவியன்
07-12-2007, 04:29 AM
வாங்க அண்ணே! நல்வரவு... :D

அடடே சந்தடி சாட்டில் அண்ணையை வரவேற்க மறந்திட்டமே.........!!
ஞாபகமூட்டியமைக்கு மிக்க நன்றிகள் ஆதவா.........!! :)

வாங்க அண்ணே.......
வாங்க.......!! :D:D:D

தொழில் ------------: கனவு காண்பது
கனவு --------------: தொழில் முன்னேற்றம்

தொழில் -- கனவுகாண்பது -- கனவு -- தொழில் முன்னேற்றம்.....!! :D
அப்போ, உங்க தொழிலே தொழில் முன்னேற்றம் தானா........??? :icon_rollout:

தாமரை
07-12-2007, 04:39 AM
வேட்டையாடு விளையாடு கீரனூரா...:smilie_abcfra:

ஆமாம், கௌதம் மேனன் எங்களுடைய ஜீனியர்.:)

தாமரை
07-12-2007, 04:40 AM
அடடே சந்தடி சாட்டில் அண்ணையை வரவேற்க மறந்திட்டமே.........!!
ஞாபகமூட்டியமைக்கு மிக்க நன்றிகள் ஆதவா.........!! :)

வாங்க அண்ணே.......
வாங்க.......!! :D:D:D

தொழில் -- கனவுகாண்பது -- கனவு -- தொழில் முன்னேற்றம்.....!! :D
அப்போ, உங்க தொழிலே தொழில் முன்னேற்றம் தானா........??? :icon_rollout:

நல்லா புரிஞ்சிகிட்டிருக்கீங்க.. இது ஒரு முடிவில்லா தொடர் (இன்ஃபனைட் லூப்)

அமரன்
08-12-2007, 07:52 AM
தமிழ் நடிகை...????
மிகச் சிறந்த தமிழ் நடிகை "மனைவி" தான் ..

இதை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.. காரணங்கள்.

நடிகை என்றது
இப்போதுள்ள சிறந்த நடிகைகளின் தமிழ்.

ஓவியன்
08-12-2007, 08:31 AM
இதை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.. காரணங்கள்.

நடிகை என்றது
இப்போதுள்ள சிறந்த நடிகைகளின் தமிழ்.

வாழ்க்கை நாடகத்தில் எல்லோருமே நடிகர், நடிகைகள் தானே அமரா......?!! :rolleyes:

ஆதவா
08-12-2007, 09:12 AM
இதை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.. காரணங்கள்.

நடிகை என்றது
இப்போதுள்ள சிறந்த நடிகைகளின் தமிழ்.

எலி அகப்படுது....

அமரன்
08-12-2007, 09:36 AM
வாடிக்கை எலியல்லவா? பொறியின் பொரி நிச்சயமல்லவா?

ஆதவா
08-12-2007, 09:59 AM
வாடிக்கை எலியல்லவா? பொறியின் பொரி நிச்சயமல்லவா?

பொரி வைப்பதே பொரிக்கத்தான்...

அமரன்
10-12-2007, 09:21 AM
பொரி வைப்பதே பொரிக்கத்தான்...
இன்னும் நடக்கலையே:confused:

நுரையீரல்
16-12-2007, 02:54 AM
தாமரை... உங்க பயோடேட்டா கலக்கலா இருக்கு... தலைப்பு ஆங்கில வார்த்தையாக இருந்தாலும், உள்ளே இருக்கும் விஷயங்கள் தமிழில் இருப்பது சிறிய முரண்படு...

பிடித்த நடிகைகளின் பெயரில், மும்தாஜ், நமிதா, ஷக்கிலா... வரவில்லையே?

வெற்றி
20-02-2009, 09:52 AM
எங்க ஊர்காரர் தாமரை அண்ணா
மனிதர் தங்கத்திலும் தங்கம்.....நடையில் சிங்கம்......

subashinii
24-02-2009, 09:51 PM
அன்பு வணக்கங்கள் தாமரை