PDA

View Full Version : ஏதோ சொல்கிறாய்...



தாமரை
29-12-2005, 10:01 AM
கண்ணிமையை காற்றோடு
அற்புதமாய் அசைத்து -
கால்கொலுசை சத்தமிட்டு,
கலுக்கென்று சிரித்து -

ஏதோ சொல்கிறாய்
என்பது புரிகுதடி,
என்ன சொல்கிறாய்
என்பதுதான் புரியவில்லை-

நிமிடம் ஒருமுறை
நின்றெனைப் பார்த்து -
நகங்களுக்கு நோகாமல்,
நாணத்தோடு கடித்து -
ஏதோ நினைக்கிறாய்
என்பது தெரிகுதடி,
என்ன நினைக்கிறாய்
என்பதுதான் தெரியவில்லை -

பூம்பாதம் நிலம்படாது -
நுனிவிரலால் நடந்து,
உள்ளங்கையில் முகம்புதைத்து
கனியிதழ்தான் சிவந்து,
ஏதோ உணர்த்துகிராய்
என்பது தெரிகுதடி,
என்ன உனர்த்துகிராய்
என்பதுதான் புரியவில்லை -

தாமரை
30-12-2005, 03:32 AM
என்னவோ சொல்ல வந்தேன்..என்னவென்று புரியவில்லை...
இமைக்கும் இருதயத்துக்கும்
ஒரு போட்டி,
யார் வேகமாய் சிற்கடிப்பார் என்று,
இமையா இதயமா என்றுதான்
யார் ஜெயித்தார் என்பது போலத்தான்
என்னவோ சொல்ல வந்தேன்
எப்படியென்று புரியவில்லை....

சிரித்ததா சிணுங்கியதா
யாரறிவார் கால்கொலுசை...
மெட்டி துணை கேட்டு
கொஞ்ச நாளாய் அடம்பிடிக்கும்
அது போல் எதையோதான்
உங்களிடமும் கேட்டிருக்கும்...
நீங்களே கேளுங்கள் எனத்தான்
என்னவோ சொல்ல வந்தேன்...
எப்படியென்று புரியவில்லை...

நிமிடத்திர் கொருமுறை
நின்றும்மைப் பார்த்தேனா...
இதென்ன அபாண்டம்...
இன்னும் ஒருமுறையே
முழுதாகப் பார்க்கவில்லை..

நகமும் கடிக்கவில்லை
நாணமும் படவில்லை...
கைப்பட்ட வேம்பு
இனிக்குதென்று யாரோ சொன்னார்
நிஜமா என சோதித்து
என்னவோ சொல்ல வந்தேன்
எப்படியென்று புரியவில்லை..

நான் நடக்கும் பாதையிலே
பூக்களைத்தான் யார் விரித்தார்
செக்கச் சிவந்திருக்கும்
அது பூவா இல்லை
பூத்த இதயமா?
தவறிக் கால்பட்டு..
துடி துடித்து போகுமென
தத்தி தத்தி நடந்தேன்...
தவறென்ன கண்டு விட்டீர்..

என் கை என் முகம்..
புதைப்பதுவும் என்னிஷ்டம்...
பெண்ணிதயம் புரியாமல்
புதிராய் பார்ப்பவரே
இதழ் சிவந்தாலென்ன..
விழி சிவந்தாலென்ன
உமக்கெதற்கு என்றுத்தான்
என்னவோ சொல்ல வந்தேன்
என்னவென்று புரியவில்லை..

pradeepkt
30-12-2005, 07:33 AM
இப்படிப் புரியாமலே இருந்தா எப்படிங்க...
கொஞ்சம் முயற்சி பண்ணுங்க, கண்டிப்பாப் புரிஞ்சிரும் :D

mukilan
30-12-2005, 07:46 AM
இப்படிப் புரியாமலே இருந்தா எப்படிங்க...
கொஞ்சம் முயற்சி பண்ணுங்க, கண்டிப்பாப் புரிஞ்சிரும் :D

ஆமா! இவருக்கு எல்லாமும் புரிஞ்சு போனது போலத்தான்!

மதி
30-12-2005, 07:54 AM
கடசீல புரிஞ்சுதா? புரியலீயா..?
புரியர மாதிரி சொல்லுங்கோ..!

தாமரை
30-12-2005, 08:36 AM
நித்தமுனை நினைத்ததற்க்கு....

எதிர்பார்த்த எண்ணங்களேனோ
ஏட்டிலெங்கும் இல்லையடி
இமைக்கும் இதயத்துக்கும் போட்டியாம்!!
இல்லையென்று சொல்லவில்லை-
சிறகடிக்கும் போட்டிதான்,
சற்றுமதில் ஐயமில்லை-
யாரைக்கன்டு போட்டி??-
அதைத்தான் எதிர்பார்த்தேன்
அதுதான் ஏட்டிலில்லை.

சத்தமிட்ட கொலுசு
கேட்டது மெட்டியென்கிறாய்-
கால்கொலுசின் காதலில்
கால்பங்கு உனக்கிருந்தால்
கண்களால் கேட்டிருக்கலாம்
கவிதையாய் கூறியிருக்கலாம்-
அதைத்தான் எதிர்பார்த்தேன்
அதுதான் ஏட்டிலில்லை.

கைபட்ட வேம்பு
இனிக்குதென்று யாரோ சொன்னாராம்-
சொன்னது நான்தான்
சொன்னவனை மறந்தது
முதல் குற்றம்-
சொன்னவனிடம் கொடுதிருக்க வேண்டும்
உன்கையை சோதித்துப் பார்க்க-
இது இரண்டாவது குற்றம்;
மன்னிப்பாவது கேட்டிருக்கலாம் மறந்ததற்க்கு-
அதைத்தான் எதிர்பார்த்தேன்
அதுதான் ஏட்டிலில்லை.

உன் பாதையெங்கும் பூத்திருப்பது பூவல்ல
இதயம்தான்
மென்பாதம் நோகாமல்
இருப்பதற்காக எங்கெங்கும்
இதயம் வைத்தது நான்தான்..
துள்ளித் தாண்டி
தொடாமல் பொனதால்
மிதித்துவிட்டாய் இதயத்தை-
"பாதையெங்கும் பூத்திருக்கும் உன்
காதல் இதயத்தில்
கால்படக் கூடதென்று
துள்ளினேன் என் தலைவா"
அதைத்தான் எதிர்பார்த்தேன்
அதுதான் ஏட்டிலில்லை.

உன் கை உன் முகம்..
புதைப்பதுவும் உன்னிஷ்டம்...
உன்னிஷ்டத்தில் நீ புதைத்தது
உன் முகத்தையல்ல
யென் மனதை -

"நாணத்தின் நிறத்தை
நீங்கள் நோக்கக் கூடதென்று
நினைத்தே என்
முகம் புதைத்தேன்"
அதைத்தான் எதிர்பார்த்தேன்
அதுதான் ஏட்டிலில்லை.

இத்தனை கதைகளை
மொத்தமாய் தத்தை நீ
சத்தமாய் சொல்வதேனோ??
நித்தமுனை நினைத்ததற்கு
நீ கொடுக்கும் பரிசு
கட்டுக் கதைகளா ?????

தாமரை
30-12-2005, 08:45 AM
எண்ணங்களை
ஏட்டிலே பதித்து விட்டு...
கன்னங்களை கையில் பதித்து
மோட்டு வளையில் முகம் தேடி...
வாட்டமாய் நிற்காமல்
வீட்டு வாசல் தெளிக்கயிலே
பாட்டு கலந்து தெளிக்கின்றேன்..
கேட்டவருக்கு புரியவில்லை..

ஏடெடுத்து தேடிவிட்டால்
எண்ணங்கள் புரிந்திடுமோ..

இமைகள் துடிக்கையிலே..
இதழ்கள் துடிக்கையிலே..
கரங்கள் நடுக்கத்திலே..
என்ன சொல்ல நினைத்தேன் என
ஏடெடுத்து தேடிவிட்டால்
என்னத்தான் புரிந்து விடும்..

இது
இதயத்தில் மையம் கொன்ட
பூகம்பம் என்று..

வீட்டு பாடமைய்யா..
விளக்கி சொல்ல யாருமில்லை...


என் இதயதை களவாடி விட்டு
"என் இதயத்தை" காலில் போட்டால்
கொலுசு தானே கொஞ்சிப் பேசும்..

கண்கள் வழி பாலமிட்டு
கவனமாய் அனுப்பி இருந்தால்..
கொலுசிக்கிந்த கொழுப்பு வருமா..


வேம்பு இனிக்குதென
வீம்பாய் பேசிவிட்டு...
குற்றமென்ன என்னிடம் கண்டீர்
நானென்ன கசந்தா விட்டேன்..

என்கையை நானேன் கொடுக்க..
என் இதயத்தை கேட்டு விட்டா எடுத்தீர்..
ஏடெடுத்து படித்தீரே..
என்னத்தான் படித்து விட்டீர்...


பாதையெங்கும் விரித்து வைக்க
எப்படி வந்தது
இத்தனை இதயம்..

அப்படியென்றால்..
என்னெஞ்சில் துடிப்பது
யாரிதயம்..

குற்றம் மேல் குற்றமாய்
கூசாமல் கூறிவிட்டு
மற்றுமென்ன தேடுகின்றீர்
இதயமில்லா ஏட்டினிலே..


இதயத்தை
புதைத்து வைத்தேன்..
திருடி கொண்டு விட்டீர்,
முகத்தை புதைத்து
வைத்தேன்..
நிமிர்துவதற்கு என்ன தயக்கம்..

ஏட்டுப் பாடம் படித்து படித்து
என்னவெல்லாம் மறந்து விட்டீர்...
வீட்டு பாடம் இருக்குதென்ற
எண்ணமும் நீர் மறந்தீர்..

புள்ளி வைத்தேன்
கோடிழுத்தேன்..
என் கோலமென்ன காட்டி விட்டேன்..
அள்ளி யெடுப்பதுவோ
அறியாமல் மிதிப்பதுவோ
பூசணிப் பூவிட்டு
பேரழகாய் பார்ப்பதுவோ
என்ன செய்வீர் இனிமேலும்
ஏடெடுத்து படிப்பீரோ
இல்லை வீடு வரை வருவீரோ..

pradeepkt
30-12-2005, 08:50 AM
செல்வன்,
ஒவ்வொரு கவிதையையும் தனித்தனிப் பதிவுகளாய்ப் போடுங்கள்.
மக்கள் கருத்துச் சொல்ல வசதியாக இருக்கும்.

தாமரை
30-12-2005, 08:58 AM
செல்வன்,
ஒவ்வொரு கவிதையையும் தனித்தனிப் பதிவுகளாய்ப் போடுங்கள்.
மக்கள் கருத்துச் சொல்ல வசதியாக இருக்கும்.

இந்த நான்கு கவிதைகள் வினா விடை முறையில் அமைந்துள்ளதால் ஒன்றாய் இருப்பதே உத்தமம் என எண்ணுகிறேன்...

தனித்தனி கவிதைகளாய் இருப்பின், என்ன கேள்விக்கு என்ன பதில் என்று தேடித்தேடி அனுபவிக்க வேண்டி இருக்கும்.

அனைத்தையும் ஒன்றாய் படித்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்.

அல்லிராணி
04-01-2006, 10:03 AM
என் இதயதை களவாடி விட்டு
"என் இதயத்தை" காலில் போட்டால்
கொலுசு தானே கொஞ்சிப் பேசும்....

அதானே! அவங்கவங்க லெவலுக்கு தானே டீல் பண்ண முடியும்




பாதையெங்கும் விரித்து வைக்க
எப்படி வந்தது
இத்தனை இதயம்..

அப்படியென்றால்..
என்னெஞ்சில் துடிப்பது
யாரிதயம்....

அப்படி போடு அருவாளை




புள்ளி வைத்தேன்
கோடிழுத்தேன்..
என் கோலமென்ன காட்டி விட்டேன்..
அள்ளி யெடுப்பதுவோ
அறியாமல் மிதிப்பதுவோ
பூசணிப் பூவிட்டு
பேரழகாய் பார்ப்பதுவோ
என்ன செய்வீர் இனிமேலும்
ஏடெடுத்து படிப்பீரோ
இல்லை வீடு வரை வருவீரோ..

வந்தாரா?

அறிஞர்
04-01-2006, 10:46 PM
இப்படியே இருக்கட்டும்.. அழகாக உள்ளது....

கேள்வி, பதில் போல....

கண்ணிமைத்து, கால் கொலுசை ஆட்டி, நகம் கடித்து..... கூறும் மொழிகளின் அர்த்தம் புரிந்துவிட்டால்... அநேக வாலிபர்கள் தெளிவாக இருப்பாங்களே....

அருமையான வரிகள்.. ஒவ்வொன்றும் அருமை.. தொடருங்கள்

தாமரை
05-01-2006, 04:08 AM
இப்படியே இருக்கட்டும்.. அழகாக உள்ளது....

கேள்வி, பதில் போல....

கண்ணிமைத்து, கால் கொலுசை ஆட்டி, நகம் கடித்து..... கூறும் மொழிகளின் அர்த்தம் புரிந்துவிட்டால்... அநேக வாலிபர்கள் தெளிவாக இருப்பாங்களே....


பெண்களின் சைகை மொழிகள் புரிந்து விட்டால் வாலிபர்கள்
தெளிவாக இருப்பார்களா இல்லை குழம்பி விடுவார்களா?

கண்ணும், கைவிரலும், இதழும், கொலுசும் ஒரே விஷயம் பேசி நான் பார்த்ததில்லை. அப்ப நீங்க..........

தாமரை
09-01-2006, 11:34 AM
[QUOTE=stselvan]
இமைகள் துடிக்கையிலே..
..
[QUOTE]

கண்ணுக்குள் உமை வைத்து
இமைக் கதவை மூடி இருந்தேன்...
பொல்லாத புழுக்கமென
மறுபடியும்
திறந்து விட்டேன்..
காற்றுச் சக்களத்தி,
கண்டபடி உரச
கோபத்தில் சாத்தி விட்டேன்..
ஏதோ குரல் கேட்டேன்...
யாரோ சொன்னார்கள்...
ஏன் பட பட வென
உன் இமைகள்
துடிக்கின்றன...
என் வலி
எனக்கல்லவா தெரியும்...

gragavan
09-01-2006, 12:30 PM
[quote=stselvan]
இமைகள் துடிக்கையிலே..
..
[quote]

கண்ணுக்குள் உமை வைத்து
இமைக் கதவை மூடி இருந்தேன்...
பொல்லாத புழுக்கமென
மறுபடியும்
திறந்து விட்டேன்..
காற்றுச் சக்களத்தி,
கண்டபடி உரச
கோபத்தில் சாத்தி விட்டேன்..
ஏதோ குரல் கேட்டேன்...
யாரோ சொன்னார்கள்...
ஏன் பட பட வென
உன் இமைகள்
துடிக்கின்றன...
என் வலி
எனக்கல்லவா தெரியும்...கண்ணுக்குள் அவன் இருப்பதால் இமைகள் வலிக்கின்றனவா? இல்லை காற்றுச் சக்களத்தி அவனை உரசியதால் இமைகள் வலிக்கின்றனவா?

அறிஞர்
09-01-2006, 10:05 PM
கண்ணும், கைவிரலும், இதழும், கொலுசும் ஒரே விஷயம் பேசி நான் பார்த்ததில்லை. அப்ப நீங்க.......... இதில் பல எக்ஸ்பீரியண்ஸ் உண்டுப்பா... (மனைவி படிக்கமாட்டார் என்ற தைரியம்தான்)....

அறிஞர்
09-01-2006, 10:05 PM
[quote=stselvan][quote=stselvan]
இமைகள் துடிக்கையிலே..
..
கண்ணுக்குள் அவன் இருப்பதால் இமைகள் வலிக்கின்றனவா? இல்லை காற்றுச் சக்களத்தி அவனை உரசியதால் இமைகள் வலிக்கின்றனவா?ஆஹா இராகவா..... காற்று சக்களத்தி கொடுக்கும் தொல்லைதான்....

அவன் இருப்பது.. இன்பத்திலும்.. இன்பம் அல்லவா

தாமரை
10-01-2006, 04:58 AM
வலி இமைகளுக்கல்ல. இதயத்திற்கு..

தலைவனின் புழுக்கமா?
இல்லை
சக்களத்தியை சமாளிப்பதா?

ஆதவா
22-12-2006, 07:22 AM
இதோ வந்திட்டேன் இங்கு
சூரியனின் பார்வையாக...
அமைத்திடுவேன் செல்வரே
விடைகள் கோர்வையாக!!

ஷீ-நிசி
22-12-2006, 08:24 AM
கண்ணுக்குள் உமை வைத்து
இமைக் கதவை மூடி இருந்தேன்...
பொல்லாத புழுக்கமென
மறுபடியும்
திறந்து விட்டேன்..
காற்றுச் சக்களத்தி,
கண்டபடி உரச
கோபத்தில் சாத்தி விட்டேன்..
ஏதோ குரல் கேட்டேன்...
யாரோ சொன்னார்கள்...
ஏன் பட பட வென
உன் இமைகள்
துடிக்கின்றன...
என் வலி
எனக்கல்லவா தெரியும்...

செல்வன் வாய்ப்பே இல்ல.. மிக மிக அருமை.......

ஆதவா
22-12-2006, 08:58 AM
கண்ணுக்குள் உமை வைத்து
இமைக் கதவை மூடி இருந்தேன்...
பொல்லாத புழுக்கமென
மறுபடியும்
திறந்து விட்டேன்..
செல்வன் வாய்ப்பே இல்ல.. மிக மிக அருமை.......

ஷீ நான் இன்னும் கவிதைகள் படிக்கவில்லை... படித்துவிட்டு சொல்லுகிறேன்

நம்பிகோபாலன்
22-12-2006, 03:11 PM
காதலியிடம் பேசினாலே தீர்வு தெரிந்து விடும்...

leomohan
22-12-2006, 03:20 PM
கண்ணிமையை காற்றோடு
அற்புதமாய் அசைத்து -
கால்கொலுசை சத்தமிட்டு,
கலுக்கென்று சிரித்து -

ஏதோ சொல்கிறாய்
என்பது புரிகுதடி,
என்ன சொல்கிறாய்
என்பதுதான் புரியவில்லை-

நிமிடம் ஒருமுறை
நின்றெனைப் பார்த்து -
நகங்களுக்கு நோகாமல்,
நாணத்தோடு கடித்து -
ஏதோ நினைக்கிறாய்
என்பது தெரிகுதடி,
என்ன நினைக்கிறாய்
என்பதுதான் தெரியவில்லை -

பூம்பாதம் நிலம்படாது -
நுனிவிரலால் நடந்து,
உள்ளங்கையில் முகம்புதைத்து
கனியிதழ்தான் சிவந்து,
ஏதோ உணர்த்துகிராய்
என்பது தெரிகுதடி,
என்ன உனர்த்துகிராய்
என்பதுதான் புரியவில்லை -

அருமை. அருமை.

நம்பிகோபாலன்
22-12-2006, 03:23 PM
இவ்ளோ ஐயமா நேரகாவே கேட்டுவிட வேன்டியது தானே

இளசு
24-12-2006, 12:02 PM
பெண்களின் சைகை மொழிகள் புரிந்து விட்டால்
வாலிபர்கள் தெளிவாக இருப்பார்களா இல்லை குழம்பி விடுவார்களா?

கண்ணும், கைவிரலும், இதழும், கொலுசும் ஒரே விஷயம் பேசி நான் பார்த்ததில்லை. அப்ப நீங்க..........

புரிந்து விட்டாலா??????

என்ன புரியாமல் பேசுகிறீர்கள் செல்வன்...:confused:

கவிதை முழுதுமே அருமையாக...

அதில் உச்சம் இந்த வரி:

'தொடாததால் மிதித்துவிட்டாய்'

காதல் ஓர் இனிய முரண்!


பாராட்டுகள்..

guna
25-12-2006, 05:29 AM
நீங்களே கேள்வியும் கேட்டு, நீங்களே பதிலையும் தந்து.......,
செல்வன் அண்ணா அழகான கவிதைகள்..
ஒவ்வொரு வரியும் அருமை, எப்படி தான் இப்படியெல்லம் யோசிச்சு இருகீங்களோ தெர்யல..

செல்வன் அண்ணாவின் பழைய பதிவை, மீண்டும் தோண்டியெடுத்து கொடுத்தமைக்கு நன்றிகள் ஆதவா..

சீக்கரமா படிசிட்டு பதில் கவிதை எழுதுங்க ஆதவா..

குணா

தாமரை
26-12-2006, 12:49 PM
நீங்களே கேள்வியும் கேட்டு, நீங்களே பதிலையும் தந்து.......,
செல்வன் அண்ணா அழகான கவிதைகள்..
ஒவ்வொரு வரியும் அருமை, எப்படி தான் இப்படியெல்லம் யோசிச்சு இருகீங்களோ தெர்யல..

செல்வன் அண்ணாவின் பழைய பதிவை, மீண்டும் தோண்டியெடுத்து கொடுத்தமைக்கு நன்றிகள் ஆதவா..

சீக்கரமா படிசிட்டு பதில் கவிதை எழுதுங்க ஆதவா..

குணா


இதுக்குப் பதிலா? இதுக்குப் பதிலா கொஞ்சம் சமூகத்துப் பக்கம் போயிரலாம்.. வரதட்சணை நம்பிக்கைத்துரோகம்.. ஆணா பெண்ணான்னு ஆயிரம் களங்கள் இருக்கு,

ஆனால் ஒரே ஒரு விதிமுறைதான்.. முன்னவர் சொன்னது நடக்கவேயில்லை எனச் சொல்லக் கூடாது.. அதை நடந்ததாக்கி வேறு அர்த்தம் தான் தரவேண்டும்..

அமரன்
27-07-2007, 03:26 PM
கேள்வியும் கேட்டு பதிலும் சொல்லி பாடமே நடத்தியிருக்கிறார் அண்ணாச்சி.

ஓவியா
02-09-2007, 10:11 PM
கண்ணிமையை காற்றோடு
அற்புதமாய் அசைத்து -
கால்கொலுசை சத்தமிட்டு,
கலுக்கென்று சிரித்து -

ஏதோ சொல்கிறாய்
என்பது புரிகுதடி,
என்ன சொல்கிறாய்
என்பதுதான் புரியவில்லை-

நிமிடம் ஒருமுறை
நின்றெனைப் பார்த்து -
நகங்களுக்கு நோகாமல்,
நாணத்தோடு கடித்து -
ஏதோ நினைக்கிறாய்
என்பது தெரிகுதடி,
என்ன நினைக்கிறாய்
என்பதுதான் தெரியவில்லை -

பூம்பாதம் நிலம்படாது -
நுனிவிரலால் நடந்து,
உள்ளங்கையில் முகம்புதைத்து
கனியிதழ்தான் சிவந்து,
ஏதோ உணர்த்துகிராய்
என்பது தெரிகுதடி,
என்ன உனர்த்துகிராய்
என்பதுதான் புரியவில்லை -

அடடே, கவிதை ரொம்பவே அமர்க்களமாக இருக்கு, மூனே வரி மொத்தமும் சொல்லியாச்சு, பலே, ரசித்தேன். சொற்சுவை பிரமாதம்.

ஆறும் ஆழமில்லை, அது கலக்கும் கடலும் ஆழமில்லை, அப்படி இருக்கு பெண் வர்கத்தினரின் (அவளின்) மனதிலிருந்து வரும் எண்ணம்தான் என்ன என்று எனக்கு புரியவில்லையென்றால்!!! என்ன அர்த்தம்???

பழைய பஞ்சாங்கத்தை மீண்டும் படிக்கறீகனு அர்த்தம். அறைத்த மாவையே அரைகறீகனு அர்த்தம். உல*கில் இன்னுமொரு க*ண்டுப்பிடிப்பு இன்னும் 'பென்டீங்கில்' இருக்குனு அர்த்த*ம் :musik010:

lolluvathiyar
03-09-2007, 04:14 PM
தாமரை கவிதையை படிச்சு முடிச்சி மறுபடியும் படிச்சு முடிச்சு

எத்தனை தடவை படிச்சாலும் எனது பின்னூட்டம் மன்னிக்கவும் ஒரே வரிதான் போடமுடியும்
"அனுபவிச்சு எழுதீட்டாரு"

மன்மதன்
04-09-2007, 12:37 PM
"அனுபவிச்சு எழுதீட்டாரு"

ஆமாமாம்.. எல்லாக்கேள்விக்கும் விடையும் வடையும் கிடைத்ததா தாமரை..

அக்னி
06-09-2007, 09:34 AM
முத்தாக கவிதைகள்...
அதற்கு முத்தாய்ப்பாக பின்னூட்டங்கள்...

இமைகளின், இதயத்தின்
துடிப்புக்கள் உன்னிடம்...
இன்னுமா புரியவில்லை,
எனது வலிகளைப் பிரதிபலிக்கின்றன,
உனது அங்கங்கள் என்று...
உனக்குள் நான் அடங்கிவிட்டதால்....

பாராட்டுக்கள் தாமரை அண்ணா...
நாங்கள் இன்னும் நனையவேண்டும்...
உங்கள் கவிச்சாரல்களில்...

தாமரை
20-08-2010, 10:15 AM
இமைகளின், இதயத்தின்
துடிப்புக்கள் உன்னிடம்...
இன்னுமா புரியவில்லை,
எனது வலிகளைப் பிரதிபலிக்கின்றன,
உனது அங்கங்கள் என்று...
உனக்குள் நான் அடங்கிவிட்டதால்....

.

அக்னி ரொம்பத்தான் அடங்கிட்டாரு போல!!!

இதுக்குப் பேருதான் தீர்க்க (அட தீர்க்கறது இல்லப்பா.. இது ஞான திருஷ்டி)
தரிசனம்.