PDA

View Full Version : சேரன் வில்லொன்று கண்டேன்...



தாமரை
29-12-2005, 08:23 AM
சேரன் வில்லொன்று கண்டேன்
பாண்டி மீனோடு அங்கே
சோழ ராஜ தேவி - சேதி சொல்ல வாநீ

தேவலோக கன்னி இங்கு தேனைக் கொஞ்சம் அள்ளி வந்து
போதையேற தான் கொடுத்த காதல் தேவி உன்னிடத்தில்
-----சேரன் வில்லொன்று கண்டேன்...

ராகம் பாட ஆசையில்லையா - என்னோடு நீ
ஜோடி சேர தேவையில்லயா...
எந்தன் காதல் தேவி - வசந்தம் உந்தன் மேனி
பார்வையோடு பார்வை சேர நாளும் நாளும் ஏங்கினேன்
வேலை தேடி வந்தேன் - மனம் வெந்து போக நின்றேன்

தேவலோக கன்னி இங்கு தேனைக் கொஞ்சம் அள்ளி வந்து
போதையேற தான் கொடுத்த காதல் தேவி உன்னிடத்தில்

----சேரன் வில்லொன்று கண்டேன்..

தேடி வந்த சொந்தமல்லவா - என் ராணி இது
போன ஜென்ம பந்தமல்லவா
அன்ன நடை கொஞ்ச - மின்னல் இடை கெஞ்ச
சின்ன சின்ன அடியெடுத்து என்னருகில் ஓடிவா

தாகத்தோடு நின்றேன் - நீ மேகம் போல வந்தாய்
தேவலோக கன்னி இங்கு தேனைக் கொஞ்சம் அள்ளி வந்து
போதையேற தான் கொடுத்த காதல் தேவி உன்னிடத்தில்

----சேரன் வில்லொன்று கண்டேன்...

pradeepkt
29-12-2005, 09:06 AM
ஐயா, இது என்ன மெட்டுக்கு அமைக்கப் பட்ட பாட்டா...
பல்லவி சரணமெல்லாம் தூக்குது...

தாமரை
29-12-2005, 09:58 AM
ஆமாம் ... மெட்டுக்கு அமைந்த பாட்டுதான்..

ஓவியன்
08-09-2009, 05:03 AM
ஆஹா செல்வண்ணாவின் காதல் கவிதை ஒன்று இத்தனை நாட்களுக்கு பின் என் கண்களிலே மாட்டியிருக்கே... :):):)