PDA

View Full Version : பவர்பாயிண்ட் ஸ்லைடுகளைக்கொண்டு சிடி/டிவ



aren
28-12-2005, 01:51 PM
1. ஸ்லைடுகளைக் கொண்டு சிடி/டிவிடி

http://www.dinamalar.com/2005Dec23compumalar/Computermala-1.jpg

பவர் பாயிண்ட் பிரசன்டேஷனில் நாம் தயாரிக்கும் ஸ்லைடுகளை டிவிடி பிளேயரில் இயங்க வைத்து, காட்டும் காட்சிகளைச் சிறப்பாக அமைக்கலாம். அதற்கான வழிகள் இங்கு தரப்படுகின்றன.

பவர்பாயிண்டில் உள்ள எல்லா ஸ்லைடுகளையும் தனித்தனி இமேஜ் பைல்களாக மாற்றி, பின்பு இந்த எல்லா இமேஜ் பைல்களையும் தொகுத்து ஒரு சிடி/டிவிடி தயாரிக்கலாம். ஆனால் அதில் உயிரோட்டம் இருக்காது. அனிமேஷன் மற்றும் டிரான்சிஷன் (Animation & transition) தரும் அற்புதமான விளைவுகள் அந்த சிடியில்/டிவிடியில் இருக்காது.

ஒரு பவர்பாயிண்ட் ஸ்லைடுஷோவை இயக்கும்போது அதில் நீங்கள் பார்க்கிற அனிமேஷன் மற்றும் டிரான்சிஷன் எபக்டுகளை எவ்வித மாற்றமுமின்றி அப்படியே சிடியிலும்/டிவிடியிலும் பார்க்க முடியும். அதற்கு நீங்கள் Camtasia அல்லது Snagit என்ற விசேஷ சா ப்ட்வேரைப் பயன்படுத்தித் திரையில் தெரிகிற காட்சிகளைக் கைப்பற்ற வேண்டும். எப்படி செய்வது என்பதை பின்பு பார்ப்போம்.

தேவையான சாப்ட்வேர்கள் மற்றும் ஹார்ட்வேர்கள்:

சிடியில் எழுத சிடி ரைட்டர் உங்களிடம் இருக்க வேண்டும். அதுபோல் டிவிடியில் எழுதுவதாக இருந்தால் டிவிடி ரைட்டர் வேண்டும்.

பவர்பாயிண்ட் ஸ்லைடு ஷோவை திரையில் ஓட விடவேண்டும். திரையில் தெரிகிற காட்சிகளை அனிமேஷன் மற்றும் டிரான்சிஷன் எ பக்டுடன் சேர்த்துக் கைப்பற்றி அதை கம்ப்யூட்டரில் ஒரு வீடியோ பைலாகச் சேமிக்க வேண்டும். திரையில் ஓடுவதைக் கைப்பற்ற சாப்ட்வேர் தேவை. கீழேயுள்ள இரண்டில் ஒன்றை நீங்கள் பயன்படுத்தலாம்: Camtasia / Snagit

வீடியோ பைலாகக் கம்ப்யூட்டரில் சேமிக்கப் பட்டுள்ளதை சிடி அல்லது டிவிடிக்கு ஏற்றவாறு மாற்ற கீழே தரப்பட்டுள்ள சாப்ட்வேரில் ஒன்றை பயன்படுத்தலாம். Nero Vision Express, TMPGEn

பவர்பாயிண்ட் ஸ்லைடு ஷோவை வீடியோவாக மாற்ற:

முதலில் பவர்பாயிண்ட் ஸ்லைடு ஷோவைத் திறந்து கொள்ளுங்கள். அதன் முதல் மற்றும் கடைசி ஸ்லைடுகளில் ஒன்றும் இல்லமல் வெற்றாக இருப்பது நல்லது. எனவே Slide Layout என்பதில் Blank என்று வருகிற ஸ்லைடை பவர்பாயிண்டின் முதல் மற்றும் கடைசி ஸ்லைடுகளில் நுழையுங்கள் இதற்கு Insert=> New slide கட்டளையை நீங்கள் பவர்பாயிண்டில் பயன்படுத்த வேண்டும்.

முதல் ஸ்லைடைத் தேர்வு செய்யுங்கள். Slideshow=>Slide Transition கட்டளையை கொடுங்கள். On Mouse Click என்ற செக் பாக்ஸில் டிக் அடையாளத்தை கொண்டு வந்து Ok செய்யுங்கள.


.PPT என்ற எக்ஸ்டென்ஷன் கொண்ட உங்கள் பாவர்பாயிண்ட் பைலை .PPS என்ற முறைக்கு மாற்றவேண்டும். எனவே பவர்பாயிண்டில் File=>Save As கட்டளையைக் கொடுங்கள். Save as type என்பதில் Powerpoint Show (*.pps) என்றிருப்பதை தேர்வு செய்து Save பட்டனை அழுத்துங்கள். பவர்பாயிண்டை மூடிவிடுங்கள்.

டிவிடியின் தெளிவு (resolution) 720 x 480 ஆகும். இந்தத் தெளிவைக் கம்ப்யூட்டரில் கொண்டு வர முடியாது. எனவே இதற்கு அண்மையில் உள்ள கம்ப்யூட்டர் ஏற்கிற 800 x 600 தெளிவைக் கொண்டு வர வேண்டும். எனவே டெக்ஸ்க்டாப்பின் வெற்றிடத்தில் ரைட்கிளிக் செய்து Properties கட்டளையைத் தேர்வு செய்யுங்கள். Settings டேபை அழுத்துங்கள். Screen area என்ற ஸ்லைடரை இழுத்து 800 by 600 pixels மதிப்பிற்குக் கொண்டு வாருங்கள். colors என்பதில் 24 பிட் அல்லது 32 பிட் இருக்கும்படி பார்த்து கொண்டு OK செய்யுங்கள்.

உங்களிடம் உள்ள Camtasia அல்லது Snag It புரோகிராமை இயக்குங்கள். ஸ்க்ரீனில் தெரிவதை கைப்பற்ற என்ன கட்டளை என்பதை பார்த்து அதை இயக்குங்கள். எடுத்துக்காட்டாக Camtasia சாப்ட்வேரில் Capture=>Input=>Screen எனக் கட்டளை உள்ளது. இந்த கட்டளை சாப்ட்வேருக்கு சாப்ட்வேர், பதிப்பிற்கு பதிப்பு மாறுபடலாம்.

திரையில் தெரிவதை கைப்பற்றி என்ன பைலாகச் சேமிக்க வேண்டும் என்பதைத் தெரிவிக்க வேண்டும். நமக்கு AVI பைலாக அதைச் சேமிக்க வேண்டும். எனவே அதற்கான கட்டளையைக் கொடுங்கள்.

.PPS எக்ஸ்டென்ஷனில் சேமிக்கப்பட்டுள்ள பவர்பாயிண்ட் பைலை, விண்டோஸ் எக்ஸ்புளோரரில் கண்டுபிடித்து டபுள்கிளிக் செய்யுங்கள். முதல் ஸ்லைடு திரையில் தெரியும்.

Camtasia அல்லது Snagit என்பதில் Start Recording செய்வதற்கான கீயை அழுத்துங்கள். எடுத்துக்காட்டாக F9 கீயை Camtasia அழுத்த வேண்டும். பதிவு செய்கிற வேலை துவங்கும்.

ஒவ்வொரு ஸ்டைலாக ஓட விடுங்கள். ஸ்லைடில் உள்ளதை படிப்பதற்கு நேரம் கொடுக்க வேண்டும். இறுதி ஸ்லைடு வந்தவுடன் Stop Recording செய்வதற்கான கீயை அழுத்துங்கள். எடுத்துக்காட்டாக F10 கீயை Camtasia அழுத்த வேண்டும்.

Camtasia அல்லது Snag It புரோகிராமி"ல File=>Save As கட்டளை கொடுங்கள். Save as type என்பதில் AVI Files (*.avi) என்பதைத் தேர்வு செய்யுங்கள். பைலிற்கு பெயரைக் கொடுத்து Save பட்டனை அழுத்துங்கள்.

வீடியோ பைலை மூவியாக மாற்றி சிடி/டிவிடி டிஸ்க்கில் எழுத:

TMPGnc அல்லது Nero Vision Express சாப்ட்வேரை இயக்குங்கள். அங்கு Make DVD அல்லது Made as போன்ற மெனு இருக்கும். அதை கிளிக் செய்யுங்கள். அதன் பின்பு Made New Movie மெனுவை கிளிக் செய்ய வேண்டும். Browse பட்டனை அழுத்தி, முந்தைய தலைப்பில் கூறியபடி சேமிக்கப்பட்ட .AVI பைலைத் தேர்வு செய்யுங்கள்.

பொதுவாக NTSC பார்மட்டில் சிடி/டிவிடி டிஸ்க்கைத் தயாரிப்பதற்கான செட்டிங் TMPGEnc அல்லது Nero Vision Express சாப்ட்வேரில் இருக்கும். அதை நமது இந்திய முறையான PAL பார்மட்டிற்கு மாற்றுங்கள்.
உங்களிடம் உள்ள சிடி/டிவிடி ரைட்டருக்கான சாப்ட்வேர் கொண்டு PAL முறைக்கு மாற்றப்பட்ட பைலை சிடி/டிவிடி டிஸ்க்கில் எழுதுங்கள்.

நன்றி: தினமலர்

pradeepkt
29-12-2005, 04:01 AM
அருமையான தகவல்
நன்றி ஆரென் அண்ணா

aren
29-12-2005, 01:34 PM
அருமையான தகவல்
நன்றி ஆரென் அண்ணா

எனக்கு எதற்கு நன்றி சொல்கிறீர்கள். இந்த தகவலை நான் தினமலர் இணையத்திலிருந்து எடுத்து இங்கே பதிவு செய்தேன்.

இது மன்ற நண்பர்களுக்கு உதவியாக இருந்தால் அந்த நன்றி தினமலர் இணையத்தையே சாரும்.

நன்றி வணக்கம்
ஆரென்

இளந்தமிழ்ச்செல்வன்
29-12-2005, 07:34 PM
நண்பர்களே நான் ஒரு பவர்பாயிண்ட் ஷோ தயாரித்து அதற்க்கு பாஸ்வேர்ட் கொடுத்தேன். தற்போது அந்த பாஸ்வேர்டை நீக்கமுடியவில்லை. ஆபிஸ் 2003 பயன்படுத்தினேன்.

மதி
30-12-2005, 05:39 AM
நண்பர்களே..
Microsoft Powerpoint 2003-ல் பவர்பாயிண்ட் ஸ்லைடுகளை உருவாக்கி தங்களுக்கு தேவையான Animation & transition ஆகியவற்றை கொடுத்து pps file-ஆக save பண்ணுங்கள்.
பின் PowerPoint-ல் File --> Package to CD option-ஐ தேர்வு செய்யவும்.
பின் அதில் வரும் options-ஐ பின்பற்றவும்.
அதன் பின் மேற்சொன்னவாறு Nero Express CD Writer மென்பொருள் மூலம் CD/DVD-ல் பதியலாம்..
http://office.microsoft.com/en-us/templates/TC011996181033.aspx?CategoryID=CT011815311033

நான் இதை முயற்சித்துப் பார்க்கவில்லை. முயன்று இந்த முறை பலன் தருகிறதா என்று சொல்லுங்கள்.
மேலும் எனக்குத் தெரிந்து password protect- பண்ணப்பட்ட pps file-ல் password மாற்ற முடியாது. தங்களிடம் original ppt இருந்தால் வேறொரு pps file தான் உருவாக்க முடியும்.
இதுவும் நான் படித்தது தான்..

பாரதி
31-12-2005, 06:15 PM
நல்ல தகவல்களை தேடித்தந்தமைக்கு மிக்க நன்றி ஆரென். மேலதிக விபரங்கள் தந்த ராஜேஷ¤க்கும் நன்றி.

இளசு
03-01-2006, 08:25 PM
நன்றி அன்பின் ஆரென் ( & தினமலர்) , ராஜேஷ்.

தேவை இருப்பின் சட்டென பயன்படுத்த மன்றத்தில் இப்பதிவு இருப்பது தெம்பு..

paarthiban
04-01-2006, 05:18 PM
நல்ல பயனுள்ள தகவல்கள். நன்றி .