PDA

View Full Version : சில துணுக்குகள் சிரி(சகி)க்க.....sarcharan
28-12-2005, 12:52 PM
சில துணுக்குகள் சிரி(சகி)க்க.....


நிருபர்: நீங்க சமீபத்துல நடிச்சு வெளியாகின பயங்கர படத்தை பார்த்தேனுங்க

நடிகை: அது பயங்கர படம் இல்லங்க. நான் மேக்கப் இல்லாம நடிச்ச படம்
======================
டாக்டர் : வாயை நல்லா திறங்க
நோயாளி : ஆ!

டாக்டர் : இன்னும் நல்லா திறங்க
நோயாளி : ஆ!ஆ!ஆ!

டாக்டர் : வாயை இன்னும் நல்லா திறங்க
நோயாளி : ஆ!ஆ!ஆ!ஆ!ஆ!

டாக்டர் : இன்னும் நல்லா திறங்க
நோயாளி : ஆ!ஆ!ஆ!ஆ!ஆ!ஆ!ஆ!

டாக்டர் : இன்னும் நல்லா திறங்க
நோயாளி : நீங்க உள்ளே போய்தான் வைத்தியம் செய்யமுடியும்னா எனக்கது வேண்டாம் டாக்டர் :)
=========================

அறிஞர்
28-12-2005, 03:53 PM
டாக்டர் : இன்னும் நல்லா திறங்க
நோயாளி : நீங்க உள்ளே போய்தான் வைத்தியம் செய்யமுடியும்னா எனக்கது வேண்டாம் டாக்டர் :)
=========================அவன் என்ன பண்ணுவான்.. திரும்ப திரும்ப திறக்க சொன்னா...

எக்ரே... எதுவும் இல்லாமல்.. நேரிடியாக பார்த்து வைத்தியம் கொடுப்பார் போல

அறிஞர்
28-12-2005, 03:54 PM
சில துணுக்குகள் சிரி(சகி)க்க.....
நிருபர்: நீங்க சமீபத்துல நடிச்சு வெளியாகின பயங்கர படத்தை பார்த்தேனுங்க

நடிகை: அது பயங்கர படம் இல்லங்க. நான் மேக்கப் இல்லாம நடிச்ச படம்
= பல நடிகைகளை மேக்கப் இல்லாமல் பார்க்கவே முடியாது

aren
29-12-2005, 12:07 AM
பல நடிகைகளை மேக்கப் இல்லாமல் பார்க்கவே முடியாது

இது உண்மைதான். நம்ம பசங்க கோயிலெல்லாம் கட்டுகிறார்கள் நடிகைகளுக்கு. அவர்களை மேக்கப் இல்லாமல் பார்த்தால் ஓடி விடுவார்கள். நம்ம பக்கத்துவீட்டு பைங்கிளியே மேல் என்று சொல்வார்கள்.

அறிஞர்
29-12-2005, 02:54 AM
நம்ம பக்கத்துவீட்டு பைங்கிளியே மேல் என்று சொல்வார்கள். வீட்டில்லுள்ள பைங்கிளி அடிக்க போறாங்க....

aren
29-12-2005, 03:52 AM
வீட்டில்லுள்ள பைங்கிளி அடிக்க போறாங்க....

நான் சொன்னது நம்ம பசங்க என்று. நான் என்னச் சொன்னேனா?

இப்படி குடும்பத்தில் குழப்பம் விளைவிக்காதீர்கள். ஏற்கெனவே நமக்கு ரொம்ப நல்ல பேரு. இதில் நீங்கள் வேறு எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுகிறீர்கள்.

ஆளை விடுங்கப்பா!!! நான் இந்த விளையாட்டிற்கு வரவேயில்லை.

ஜீட் விடும்
ஆரென்

sarcharan
20-01-2006, 03:31 PM
அவன் திடீர் பணக்காரனான பிறகும் கூட ஆள் மாறவே இல்ல

எப்படி சொல்றீங்க?
எனக்கு தரவேண்டிய 100 ரூபாவ இன்னும் தரலை
==================
இந்த ஆபிஸூல நீ மேனேஜரா இல்ல நானா?

நீங்க கோபப்படுற அளவுக்கு நான் என்ன சார் செஞ்சேன்?

அட அது இல்லய்யா.. எனக்கு கொஞ்சம் ஞாபக மறதி அதுதான் கேட்டேன்...
===============

டாக்டர் தெரியாம காசை முழுங்கிட்டேன்

அம்பது காசா இல்ல ஒரு ரூபா காசா இல்ல ரெண்டு ரூபா காசா?
அது தான் தெரியாம காசை முழுங்கிட்டேன்னு சொல்றேன் இல்ல....
=====================

சரவணன்: பென்ஸூ உங்க காதலி பாக்யாவுக்கு குங்குமம் கொடுத்தீங்களே.. அவ பதிலுக்கு இதயம் கொடுத்தாளா?

பென்ஸூ: அவ இதயம் கொடுப்பதை ப்ரதீப்பு பாத்துப்புட்டு அவ அண்ணன் தினகரனுக்கு சாவி கொடுத்துட்டான்...:)
==================

டாக்டர்: எங்க "ஆ" காட்டுங்க பார்ப்போம்...
நோயாளி: ஏன் டாக்டர் நீங்க "ஆ" பார்த்ததே இல்லயா?
=====================

நகை போடாமல் இருப்பதே மேல்

ஏன்?

நகை போட்டா அது ஃபீமேல்
====================

உங்க பையன் சிகரெட் பிடிக்கறானே... உங்களுக்குத்தெரியுமா?

எனக்கு சிகரெட் பிடிக்க தெரியாதுங்களே....
=========================
உக்கார முடியாத தரை எது?

புளியோதரை
===============

நண்டு கர்ப்பமா இருக்கு...

அப்போ பிரக-நண்டு
================

நான் மேல படிக்கபோறேன்

Mayல விடுமுறை ஆச்சே...
===================

மாங்கா மடையனை சிங்கம் கடிச்சா என்ன ஆகும்?

தின்னுடும்...

இல்ல புளிக்குதுன்னு துப்பிடும்

==============

:p :D

sarcharan
20-01-2006, 03:47 PM
தம்பி இந்த சட்டை தீபாவளிக்கு எடுத்ததா?
இல்ல எனக்கு எடுத்தது.
=====================

ராகவன்:என்ன இது ஸ்பிரே வாசம் பிணத்துக்கு அடிக்கிறமாதிரி இருக்கு?

சரவணன்: வெங்கடேஸ்வரன் "பாடி ஸ்பிரே " அடிச்சிருக்கார்....

=========

ஆசிரியர்: முட்டைபோடும் ஆனா குஞ்சு பொறிக்காது. அது என்ன இனம்?

பென்ஸூ: கணக்கு வாத்தியார் இனம்

=============

சார் உங்க நாய் கட்டி போட்டு இருக்கா?
இல்ல எங்க நாய் குட்டி தான் போட்டு இருக்கு
==============

கடவுள் நம்ம பாவத்தை எல்லாம் மன்னிக்கனும்னா நாம என்ன பண்ணணும்?

வேற என்ன பாவம் தான்..
==================

ஆனாலும் இவரு ரொம்ப முன் ஜாக்கிரதைப்பேர்வழி... டிரைவர் கிட்ட மெதுவா போ மெதுவா போன்னு படுத்தறார்...

அதில் என்ன தப்பு?

அட டிரைவர் நடந்து போயிட்டு இருக்கார் சார்
======================

சோம்பேறிகளுக்கான போட்டியில் உனக்கு முதல் பரிசு கிடைச்சுதாமே?

போட்டிக்கு பெயர் கொடுத்துட்டு கலந்துக்கவே இல்லை

பென்ஸ்
20-01-2006, 04:29 PM
சரவணன்....
யப்பா, அறுபட்டு வலிதாங்க முடியாம ஆஸ்பத்ரி போனா, அங்க
தமிழ்மன்றமே நிக்குது....
உள்ளே "வணக்கம் டாக்டர்" என்று போனா நம்ம இளசும் ஒரு பெரிய
கட்டோட இருக்கார்......

இதில் சில நான் முன்பே வாசித்தது போல் இருக்கிறது, பத்திரிகையில்
வெளியாகி இருந்தால் குறிப்பு தருவது நலம் :)

sarcharan
23-01-2006, 11:40 AM
இவை எல்லாம் எனக்கு மின்னஞ்சலில் வந்தவை...
அடியேன் யாம் பெற்ற இன்பம்(துன்பம்!!) பெறுக இவ்வையகம் என்னும் கொள்கை உடையவன்.. ஹி ஹி அதுதான்......
சரவணன்....
யப்பா, அறுபட்டு வலிதாங்க முடியாம ஆஸ்பத்ரி போனா, அங்க
தமிழ்மன்றமே நிக்குது....
உள்ளே "வணக்கம் டாக்டர்" என்று போனா நம்ம இளசும் ஒரு பெரிய
கட்டோட இருக்கார்......

இதில் சில நான் முன்பே வாசித்தது போல் இருக்கிறது, பத்திரிகையில்
வெளியாகி இருந்தால் குறிப்பு தருவது நலம் :)

அறிஞர்
24-01-2006, 03:33 AM
நீங்க பெற்ற இன்பத்தை எல்லாருடனும் பகிர்ந்ததில் சந்தோசம் அன்பரே..... தொடருங்கள்.... பென்ஸூ போட்டிக்கு எடுத்துவிடலையா

பரஞ்சோதி
24-01-2006, 04:18 AM
என்ன சரவணன், உங்க அட்டகாசம் தாங்க முடியலை, அதிலும் உங்க புகைப்படம் அருமை, ரொம்பவே இளமையா, இராகவன் அண்ணா மாதிரியே இருக்கீங்க.

gragavan
24-01-2006, 10:35 AM
என்ன சரவணன், உங்க அட்டகாசம் தாங்க முடியலை, அதிலும் உங்க புகைப்படம் அருமை, ரொம்பவே இளமையா, இராகவன் அண்ணா மாதிரியே இருக்கீங்க.யாருப்பா அது சந்தடி சாக்குல....என்னய வம்புக்கிழுக்குறது.....சரவணன் போட்ட படத்துல இருக்குறது டாம் ஹாங்ஸ்....இப்ப டாவின்சி கோடு படத்துல கோடு போட்டு நடிக்கிறாராம்.

sarcharan
24-01-2006, 11:30 AM
பரம்ஸ் அண்ணா,
சந்தடி சாக்குல ராகவனை அண்ணன் என்று சொல்லிவிட்டீங்க...

இருந்தாலும் ராகவரு அவ்வளவு மூத்தவரா? நம்பமுடியலையே....
அவரோட வலைப்பூ பாத்தா அப்படி தெரியலை ஒரு வேளை மார்ஃபிங் போட்டோவா....?:Dஎன்ன சரவணன், உங்க அட்டகாசம் தாங்க முடியலை, அதிலும் உங்க புகைப்படம் அருமை, ரொம்பவே இளமையா, இராகவன் அண்ணா மாதிரியே இருக்கீங்க.

anbudayan
25-01-2006, 06:35 AM
அருமை அருமை

sarcharan
30-01-2006, 02:13 PM
தெருவில் ஒரு சவ ஊர்வலம் வருகிறது. உடனே பந்தயம் போடுவதை தொழிலாக கொண்ட இருவர்(!!!!!) தம் தொழிலைத் தொடங்குகின்றனர்.

கே. ஆர்: செந்தில் அந்த சவப்பெட்டியில் சிலுவைக்குறி உள்ளது. அதனால அதுக்குள்ளே இருப்பவர் கிறிஸ்தவராகத்தான் இருக்கணும். என்ன 100 ரூபா பந்தயமா?

செந்தில் .பா: அப்படின்னா நான் பந்தயத்துல தோத்துட்டேன். அவரு செத்தவரா இருக்கணும்னு நெனெச்சேன்.

பிரதீப்பு: ஹி ஹி பந்தயம் கட்டிய இருவரும் என் நண்பர்கள் தான்.

தமிழ்மன்ற மக்கள் : !!!!!!!:eek:
பென்ஸூ: :D :D

aren
30-01-2006, 02:33 PM
தமிழ்மன்ற மக்கள் : !!!!!!!:eek:


ஐப்பா, பார்த்துப்பா. ஒரேயடியாக இப்படி அடிக்கிறீர்கள்.

'தலை' கொஞ்சம் கவனியுங்க.

அறிஞர்
30-01-2006, 07:45 PM
தலை ஓய்வெடுக்கிறார் போல்... ஆளையே அவ்வளவா காணோம்

தாமரை
31-01-2006, 05:27 AM
நண்டு கர்ப்பமா இருக்கு...

அப்போ பிரக-நண்டுஅப்போ தவளை கர்ப்பமா இருந்தா?

Frog - னண்ட்.

சுவேதா
02-02-2006, 04:09 AM
சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

sarcharan
02-02-2006, 11:21 AM
அது என்ன "கோடு போட்டு நடிக்கிறது"?


யாருப்பா அது சந்தடி சாக்குல....என்னய வம்புக்கிழுக்குறது.....சரவணன் போட்ட படத்துல இருக்குறது டாம் ஹாங்ஸ்....இப்ப டாவின்சி கோடு படத்துல கோடு போட்டு நடிக்கிறாராம்.

தாமரை
02-02-2006, 12:46 PM
அந்த அலுவலகத்தில் பெண் ஊழியர்களுக்கு சம்பளம் குறைச்சலாம்...

ஏனாம்

பெண் என்றால் பேயும் ( PAY ) இறங்குமாம்..

சுவேதா
02-02-2006, 03:51 PM
ஹி...ஹி.. கலக்கல்

sarcharan
03-02-2006, 02:19 PM
செல்வன்: கணக்குல ஏதாவது சந்தேகம் இருந்தா என்னை கேளு.
செல்வனின் பிள்ளை: வேணாம்ப்பா நானே தப்பா போட்டுக்கறேன்.

ஹி ஹி சும்மா

aren
03-02-2006, 02:45 PM
செல்வன்: கணக்குல ஏதாவது சந்தேகம் இருந்தா என்னை கேளு.
செல்வனின் பிள்ளை: வேணாம்ப்பா நானே தப்பா போட்டுக்கறேன்.

ஹி ஹி சும்மா

நல்லகாலம் அவன் சரவணன் கிட்டே கேட்டுக்கிறேன் என்று சொல்லவில்லை. சொல்லியிருந்தால் தப்பாக தெரிந்ததும் மறந்து போயிருக்கும்.

பென்ஸ்
03-02-2006, 03:37 PM
சரவணன் மகன்: அப்பா.. நாய் ஏன் கல்யாணம் பண்ணமாட்டேங்குது???
சரவணன்: அது ஏற்கனவே நாய் வாழ்க்கை வாழுது இல்லையா அதுதான்.....

அறிஞர்
03-02-2006, 09:22 PM
அட... திருமண வாழ்க்கை நாய் வாழ்க்கையா......

ஆரென், தலை கொஞ்சம் கவனிங்க.....

அறிஞர்
03-02-2006, 09:23 PM
பேய் சிரிப்பும் அருமை...

சுவேதா.. அப்ப உனக்கும் பேய் கம்மிதானாம்....

பென்ஸ்
04-02-2006, 06:14 AM
பேயாக இருந்தால் pay அதிகமா இருக்குமோ??? சுவேதா, உன் பே(ய்) எப்படியம்மா????

aren
04-02-2006, 11:42 AM
அட... திருமண வாழ்க்கை நாய் வாழ்க்கையா......

ஆரென், தலை கொஞ்சம் கவனிங்க.....

ஆமாம். இது உண்மைதானே!!!. இல்லையா?

aren
04-02-2006, 11:43 AM
பேயாக இருந்தால் pay அதிகமா இருக்குமோ??? சுவேதா, உன் பே(ய்) எப்படியம்மா????

சுவேதாவை என்ன சொல்கிறீர்கள் நீங்கள்? அதுவும் நம்ம சுவாதாவை இப்படியா?

சிண்டுமுடிஞ்சுவிடும்
ஆரென்

தாமரை
06-02-2006, 10:58 AM
சரவணன் மகன்: அப்பா.. நாய் ஏன் கல்யாணம் பண்ணமாட்டேங்குது???
சரவணன்: அது ஏற்கனவே நாய் வாழ்க்கை வாழுது இல்லையா அதுதான்.....
கல்யாண வாழ்க்கை நாய் வாழ்க்கை இல்லை..

1. நாய்க்கு ஒழுங்கான சாப்பாடு. கிடைக்கும். பிஸ்கட்.. பெட்-ஷாப் ல இருந்து ப்ரோட்டின் ரிச் டயட் என்று எக்கசக்கம்

2. நாயை கொஞ்சி குளிப்பாட்டுவாங்க..

3. நாய் கூட தினம் வாக்கிங் போவாங்க..

நாய் வாழ்க்கை எவ்வளவோ மேல் பெஞ்சமின்

தாமரை
06-02-2006, 11:11 AM
சுவேதாவை என்ன சொல்கிறீர்கள் நீங்கள்? அதுவும் நம்ம சுவாதாவை இப்படியா?

சிண்டுமுடிஞ்சுவிடும்
ஆரென்

பெண் பேய்கள் பிசாசுகள் என்று அறியப்படும்.

அவை மோகினிப் பிசாசு...கொள்ளிவாய்ப் பிசாசு.. அழகுப் பிசாசு (பிபாஷா பாசு(பிபாசு பிசாசு)).. பிரியமான பிசாசு... என பலவகைப்படும்...

மதி
06-02-2006, 11:13 AM
பெண் பேய்கள் பிசாசுகள் என்று அறியப்படும்.

அவை மோகினிப் பிசாசு...கொள்ளிவாய்ப் பிசாசு.. அழகுப் பிசாசு (பிபாஷா பாசு(பிபாசு பிசாசு)).. பிரியமான பிசாசு... என பலவகைப்படும்...

நடுவுல எங்கிருந்து பிபாசு பிசாசு வந்திச்சு..:confused: :confused:

மதி
06-02-2006, 11:15 AM
கல்யாண வாழ்க்கை நாய் வாழ்க்கை இல்லை..

1. நாய்க்கு ஒழுங்கான சாப்பாடு. கிடைக்கும். பிஸ்கட்.. பெட்-ஷாப் ல இருந்து ப்ரோட்டின் ரிச் டயட் என்று எக்கசக்கம்

2. நாயை கொஞ்சி குளிப்பாட்டுவாங்க..

3. நாய் கூட தினம் வாக்கிங் போவாங்க..

நாய் வாழ்க்கை எவ்வளவோ மேல் பெஞ்சமின்

நீங்க பெருமூச்சு விடறது இங்க கேக்குது..
இப்படி ஒரு பொறாமையா நாய் மேல...

செல்வன்,
உங்க வீட்டு போன் நம்பர குடுங்க...
என்னன்னு வெசாரிக்கலாம்..

தாமரை
06-02-2006, 11:18 AM
நடுவுல எங்கிருந்து பிபாசு பிசாசு வந்திச்சு..:confused: :confused:
மனசிலிருந்து தான்:D :D :D

பென்ஸ்
06-02-2006, 01:25 PM
பெண் பேய்கள் பிசாசுகள் என்று அறியப்படும்.

அவை மோகினிப் பிசாசு...கொள்ளிவாய்ப் பிசாசு.. அழகுப் பிசாசு (பிபாஷா பாசு(பிபாசு பிசாசு)).. பிரியமான பிசாசு... என பலவகைப்படும்...
செல்வன்..அப்பப்பா இதே மாதிரி நல்ல டிப்ஸ் கொடுங்க... நாங்களும்
வேளியே உபயோகிப்போமில்ல....

ஆமா இந்த கொள்ளிவாய் பிசாசுன்ன "தம்" அடிக்கிற பிகருங்களா???

மதி
06-02-2006, 01:31 PM
செல்வன்..அப்பப்பா இதே மாதிரி நல்ல டிப்ஸ் கொடுங்க... நாங்களும்
வேளியே உபயோகிப்போமில்ல....

ஆமா இந்த கொள்ளிவாய் பிசாசுன்ன "தம்" அடிக்கிற பிகருங்களா???

அட அட அட..
ஐயா பென்ஸ்..
எங்கிருந்தையா..உமக்கு இப்படி எல்லாம் தோணுது....:D :D

தாமரை
07-02-2006, 06:33 AM
செல்வன்..அப்பப்பா இதே மாதிரி நல்ல டிப்ஸ் கொடுங்க... நாங்களும்
வேளியே உபயோகிப்போமில்ல....

ஆமா இந்த கொள்ளிவாய் பிசாசுன்ன "தம்" அடிக்கிற பிகருங்களா???

நல்லாப் புரிஞ்சிகிட்டீங்க வாழ்த்துக்கள்..
உமக்கு அழகிய பிசாசு பிடிக்க வாழ்த்துக்கள்..

pradeepkt
07-02-2006, 06:54 AM
பிடிக்கிற பிசாசு கொள்ளிவாய்ப் பிசாசா இருந்துறப் போவுது...
அப்புறம் பென்ஸூ பொட்டிக் கடைகளுக்குக் காசு குடுத்தே கரைஞ்சு போயிருவாரு :D

தாமரை
07-02-2006, 07:05 AM
பிடிக்கிற பிசாசு கொள்ளிவாய்ப் பிசாசா இருந்துறப் போவுது...
அப்புறம் பென்ஸூ பொட்டிக் கடைகளுக்குக் காசு குடுத்தே கரைஞ்சு போயிருவாரு :D

மோகினிப் பிசாசுக்கு நகைகடை புடைவைக் கடை பில் குடுக்குறதை விட கொள்ளி வாய் பிசாசுக்கு பொட்டிக் கடை அக்கவுன்ட் செட்டில் பண்ணறது ரொம்ப சுலபம்..:D :D :D :D :D

gragavan
07-02-2006, 07:44 AM
மோகினிப் பிசாசுக்கு நகைகடை புடைவைக் கடை பில் குடுக்குறதை விட கொள்ளி வாய் பிசாசுக்கு பொட்டிக் கடை அக்கவுன்ட் செட்டில் பண்ணறது ரொம்ப சுலபம்..:D :D :D :D :Dஐயா பிரதீப்பு பொட்டிக் கடைன்னு சொல்லலை. boutique கடைன்னு சொல்ல வந்தாரு. சரிதான பிரதீப்பு..... :D :D :D :D

தாமரை
07-02-2006, 07:56 AM
ஐயா பிரதீப்பு பொட்டிக் கடைன்னு சொல்லலை. boutique கடைன்னு சொல்ல வந்தாரு. சரிதான பிரதீப்பு..... :D :D :D :D
இதுக்குப் பேர்தான் சப்பைக் கட்டு கட்டறது

சரி சரி வழியுது துடைச்சிக்குங்க..

கொள்ளி வாய் பிசாசு பிடிச்சிருசின்னா.. 2 டிப்ஸ்.

1. மருத்துவ காப்பீடு எடுங்க.. உங்க பணப்பை காலியாகாது

2. ஆயுள் காப்பீடு எடுங்க... லாபம் வர்ர சான்ஸ் இருக்கு,...

(இதைத்தான் சிக் ஜோக் என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்)

Mathu
07-02-2006, 09:17 PM
அட... திருமண வாழ்க்கை நாய் வாழ்க்கையா......

ஆரென், தலை கொஞ்சம் கவனிங்க.....

எதை அறிஞர் நாயையா? :confused:

mania
08-02-2006, 04:43 AM
எதை அறிஞர் நாயையா? :confused:

:D :D :D :D
அன்புடன்
மணியா....:D :D

sarcharan
21-03-2006, 07:57 AM
ஆசிரியர் : திருக்குறளை இயற்றியவர் யார்?
பிரதீப்பு : திருவள்ளுவர்.

ஆசிரியர் : கம்பராமாயனத்தை இயற்றியவர் யார்?
பிரதீப்பு : கம்பர்

ஆசிரியர் : சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார்?
பிரதீப்பு : சிலம்பரசன்.
ஆசிரியர் : !!!!!:confused: :confused: :confused:
ஆசிரியர் : அடுக்குத்தொடருக்கு ஒரு உதாரணம் சொல்லு
பிரதீப்பு : தெரியாது தெரியாது தெரியாது.
ஆசிரியர் : வெரிகுட் வெரிகுட் வெரிகுட்.

தமிழ்மன்றமக்கள் : :angry: :angry: :angry:

pradeepkt
21-03-2006, 10:27 AM
தம்பி,
நம்ம தமிழ் வகுப்புகளில என்ன நடந்ததுன்னு நினைவிருக்கா?
:D :D :D

sarcharan
21-03-2006, 10:49 AM
ஞாபகம் வருதே...:p :p
ஞாபகம் வருதே...:p :p :p
சரி சரி அதை எல்லாம் எதுக்கு இப்போ ஞாபகப்படுத்திக்கிட்டு....;) ;) ;)

தம்பி,
நம்ம தமிழ் வகுப்புகளில என்ன நடந்ததுன்னு நினைவிருக்கா?
:D :D :D

sarcharan
28-12-2006, 06:49 AM
It was discovered by an Indian. Try it out yourself.

Microsoft Word ல்

=rand (200, 99) என்று டைப் செய்து ENTER தட்டவும்

ஹி ஹி

என்ன கொடுமை சரவணன்....

sarcharan
28-12-2006, 06:49 AM
http://word.mvps.org/FAQs/Formatting/DummyText.htm


The Rand function is used to generate the text:
"The quick brown fox jumps over the lazy dog."

The first parameter (200 in your example) is the number of rows, and the second (99) is the number of columns.

For instance:
=RAND(1,1) just returns a single generated phrase
=RAND(2,1) generates two (rows) of text
=RAND(100,1) generates one hundred rows
=RAND(1,2) generates two (columns)
=RAND(2,2) generates two rows each with two columns


The formula is used to pre-fill documents with a phrase that contains every letter of the alphabet (a "panagram") so that the characteristics of a font type can be seen.

The facility is known as an "Easter Egg" as it is not widely documented (by Microsoft).

sarcharan
24-01-2008, 10:36 AM
தொழில் பக்தி (http://www.tamilmantram.com/photogal/index.php?n=329)

sarcharan
24-01-2008, 10:55 AM
பழைய வேலைக்காரி

அவர்: திருச்சியில உன் ஜாடையில ஒரு பையனைப் பார்த்தேன்டா!

இவர்: (உள்ளே நோக்கி மனைவியிடம்) அடியே! நம்ம வீட்டு பழைய வேலைக்காரி எங்க போனான்னு தெரியிலேன்னு சொன்னியே... அவ திருச்சியிலதான் இருப்பாளாட்டம் இருக்கு!


ஆபரேஷன் ரூம்


டாக்டர் ஆஸ்பத்திரிக்கு வந்ததும் ஆபரேஷன் ரூம்ல அரைமணி நேரம் பூஜை பண்ணிட்டுத்தான் வேறு வேலையே பார்ப்பாரு!

ஏன்?

பழைய ஆவிங்க ஏதாவது அங்க இருந்தா ஓடத்தான்!

வயிறு ஆபரேஷன்

பேஷண்டுக்கு வயித்துலதானே ஆபரேஷன்.. எதுக்குக் குப்புறப்படுக்க வச்சிருக்கீங்க?

டாக்டர் முன்னாடி கார் மெக்கானிக்கா இருந்தவராம்! `பெட்டுக்கடியில படுத்துக்கிட்டுத்தான் ஆபரேஷன் செய்வாராம்!


பெண் போலீஸ்

லாக்கப் கைதிக்குப் பாதுகாப்பாய் பெண் போலீஸைப் போட்டுட்டுப் போனது தப்பாப் போச்சா, ஏங்க?

அந்த கைதி அவ அழகை வர்ணிச்சி நைசா பூட்டைத் திறக்கச் சொல்லித் தப்பிச்சி ஓடிட்டான்!


பணத்தை எங்க எடுக்கணும்

டாக்டர்: அஜய் லேபாரட்டரியில ரத்தம், சிறுநீர், டெஸ்ட் எடுத்துக்கிட்டு, டாக்டர் குருமூர்த்தி கிட்டே இ.சி.ஜி. எடுத்துகிட்டு, அப்படியே குமார் எக்ஸ்ரேவிலே எக்ஸ்ரே எடுத்துக்கிட்டு, தும்பி ஸ்கேன் சென்டர்ல முழுசா ஒரு ஸ்கேன் எடுத்துக்கிட்டு...

பேஷண்ட்: அப்படியே பணத்தை எங்க எடுத்துக்கிட்டு வர்றதுன்னும் சொல்லிடுங்க டாக்டர்...!

அறிஞர்
24-01-2008, 03:31 PM
பெண் போலீஸ்

லாக்கப் கைதிக்குப் பாதுகாப்பாய் பெண் போலீஸைப் போட்டுட்டுப் போனது தப்பாப் போச்சா, ஏங்க?

அந்த கைதி அவ அழகை வர்ணிச்சி நைசா பூட்டைத் திறக்கச் சொல்லித் தப்பிச்சி ஓடிட்டான்!
பெண் மனம் புரிந்த நல்ல கைதிகள்... :cool::cool::cool::cool:

அறிஞர்
24-01-2008, 03:32 PM
தொழில் பக்தி (http://www.tamilmantram.com/photogal/index.php?n=329)

????????????? இது என்னாது சார்... :mini023::mini023::mini023::confused::confused::confused:

அனுராகவன்
24-01-2008, 03:49 PM
நண்பரே எல்லா நகைச்சுவையும் நல்ல வாய் விட்டு சிரிக்க வைத்துவிட்டது..
என் சந்தோசம் கலந்த வாழ்த்துக்கள்.
ம்ம் தொடருங்கள்

மனோஜ்
24-01-2008, 03:58 PM
அனைத்தும் அருமை நன்றி நன்றி நன்றி
தொடர்ந்து தாருங்கள்

sarcharan
25-01-2008, 06:25 AM
சுறுசுறுப்பான ஊழியர் (http://www.tamilmantram.com/photogal/index.php?n=331) :aetsch013:

மலர்
25-01-2008, 06:48 AM
சுறுசுறுப்பான ஊழியர் (http://www.tamilmantram.com/photogal/index.php?n=331) :aetsch013:


அப்படியே இது யாருன்னும்
சொல்லியிருங்கண்ணா... :D :D

இத் யம் அண்ணா எங்க ஓடுறீங்க....??
முகமூடி வாங்கவா... ஹீ..ஹீ....

மதி
25-01-2008, 06:52 AM
அப்படியே என்னை பாக்கற மாதிரி இருக்கு..!
என்ன கம்ப்யூட்டர் மட்டும் மிஸ்ஸிங்

மலர்
25-01-2008, 07:17 AM
அப்படியே என்னை பாக்கற மாதிரி இருக்கு..!
என்ன கம்ப்யூட்டர் மட்டும் மிஸ்ஸிங்
அது வேற ஒண்ணுமில்லை..
மதி நீங்க தூங்கி தூங்கி வழியுறத பாத்து பக்கத்து கேபின் ஆள் ஆட்டைய போட்டுட்டார்..... :D :D

"இருந்தாலும் பக்தா... உன் உண்மையை மெச்சினோம்....
கலியுகத்தில் இப்பிடி ஒரு உண்மைவாதியா என்று"
"என்ன வரம் வேண்டுமோ கேள்..."
(அதுக்காக அய்கேஷ் வேணுமின்னு.. கேட்டு அய்கேஷ் மேல கண்ணு வைக்கப்படாது..
அப்புறம் கண்ணை நோண்டிடுவேன்...)

மதி
25-01-2008, 07:59 AM
அது வேற ஒண்ணுமில்லை..
மதி நீங்க தூங்கி தூங்கி வழியுறத பாத்து பக்கத்து கேபின் ஆள் ஆட்டைய போட்டுட்டார்..... :D :D

"இருந்தாலும் பக்தா... உன் உண்மையை மெச்சினோம்....
கலியுகத்தில் இப்பிடி ஒரு உண்மைவாதியா என்று"
"என்ன வரம் வேண்டுமோ கேள்..."
(அதுக்காக அய்கேஷ் வேணுமின்னு.. கேட்டு அய்கேஷ் மேல கண்ணு வைக்கப்படாது..
அப்புறம் கண்ணை நோண்டிடுவேன்...)
தாயே என்னே உன் தயை.. உங்க ஐ-கேஷ் எல்லாம் வேண்டாம்...
குபேரனை என்கிட்ட அனுப்பிடு அது போதும்.. அப்புறம் உமக்கே வட்டிக்கு விடப் போறேன்..

மலர்
25-01-2008, 08:10 AM
குபேரனை என்கிட்ட அனுப்பிடு அது போதும்.. அப்புறம் உமக்கே வட்டிக்கு விடப் போறேன்..
அஸ்கு பிஸ்கு.... :icon_shout::icon_shout::icon_tongue::icon_tongue:
என்ன ஒரு வில்லத்தனம்.....:sauer028: :sauer028:

மதி
25-01-2008, 08:12 AM
அஸ்கு பிஸ்கு.... :icon_shout::icon_shout::icon_tongue::icon_tongue:
என்ன ஒரு வில்லத்தனம்.....:sauer028: :sauer028:

:D:D:D:D:D
:icon_ush::icon_ush::icon_ush::icon_ush::icon_ush:

prady
04-02-2008, 08:46 AM
நகைச்சுவை எல்லாமே சிரிக்கிற மாதிரி இருக்கு. ஹி..ஹி..

ஜெகதீசன்
05-02-2008, 07:00 AM
கொஞசம் கடி கொஞ்சம் சிரிப்பு பரவால்ல தொடருங்கோல ஆனா ரொமப கடிக்காம

sarcharan
05-02-2008, 11:38 AM
சூடானால் (http://www.tamilmantram.com/photogal/index.php?n=342)

மன்மதன்
05-02-2008, 01:50 PM
எல்லாமே கலக்கல்ஸ்..ஸ்.ஸ்..

மலர்
05-02-2008, 02:33 PM
சூடானால் (http://www.tamilmantram.com/photogal/index.php?n=342)ஆஹா....
இதுக்க்காக தான் நான் எப்பவும் என் மூளையை பிரிஜ்குள்ளே பூட்டி வச்சிப்பேன்.......

sarcharan
29-02-2008, 09:02 AM
ரஜினிகாந்த் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும்...
எதுக்கும் இந்த சுட்டிகளைத் தட்டுங்க...

1. சீரியஸ்1 (http://www.chotocheeta.com/2008/01/11/some-jokes-about-rajnikanth/)

2. சீரியஸ்2 (http://www.funtoosh.com/dj.php?details=IND~348)

3. சீ(றி)ரீயஸ் 2 (http://forums.sureshkumar.net/jokes-pranks-quotes/2707-rajnikanth-joke.html)

tamilambu
04-03-2008, 05:27 PM
சரவணன் மகன்: அப்பா.. நாய் ஏன் கல்யாணம் பண்ணமாட்டேங்குது???
சரவணன்: அது ஏற்கனவே நாய் வாழ்க்கை வாழுது இல்லையா அதுதான்.....

ஏங்க இந்த விசயம் உங்க மனைவிக்கு தெரியுமா?

sarcharan
27-07-2011, 11:07 AM
தேர்வு அறையில்...
மாணவன்: ஆல் தி பெஸ்ட்!
மாணவி: ஆல் தி பெஸ்ட்!
மாணவன் பெயில்.... மாணவி 80%
நீதி: நல்லவங்க வாக்கு மட்டும்தான் பலிக்கும்....

நாட்டாமை: என்ரா... பசுபதி...எக்ஸாம்’க்கு பெவிகால் எடுத்துட்டுப் போற?
பசுபதி: அய்யா.. கொஸ்டின் பேப்பர் லீக் ஆகிப் போச்சாம்..
நாட்டாமை: என்ர தம்பி சிங்கம்டா.. சிங்கம்டா..... சிங்கம்டா..

லவ் லட்டருக்கும், எக்ஸாம்’க்கும் என்ன வித்தியாசம்?
லவ் லெட்டர்: மனசுக்குள்ள நிறைய இருக்கும்.. ஆனா எழுத வராது...
எக்ஸாம்: மனசுக்குள்ள ஒண்ணுமே இருக்காது... ஆனா நிறைய எழுதுவோம்...

கணவன்: காலெண்டர்’ல என்னப் பாக்குற?
மனைவி: பல்லி விழும் பலன்...
கணவன்: கொண்டா.. நான் பாக்குறேன்... அது சரி... பல்லி எங்க விழுந்தது?
மனைவி: நீங்க சாப்ட்ட சாம்பார்ல...

aren
27-07-2011, 11:29 AM
உண்மைதான், நல்லவங்க வாக்குத்தான் எப்போதும் பலிக்கும்.

சான்வி
27-07-2011, 11:48 AM
:lachen001::lachen001:

ரசித்தேன், சிரித்தேன், எடுத்தேன், குடித்தேன், நகைச்சுவைத் தேன்.

அருமையான பகிர்வுகள்

sarcharan
26-08-2011, 07:14 AM
http://www.youtube.com/watch?v=LiG7BP5lvOk&feature=player_embedded


http://www.youtube.com/watch?v=YOE0tBMQ52M&feature=player_embedded

seguwera
26-08-2011, 09:06 PM
நல்லாருக்கு இன்னும் பதிவிடுங்கள்

issa
05-09-2011, 03:11 PM
சிரிப்புகள் அனைத்துமே அருமை

vseenu
20-09-2011, 03:21 PM
நகைச்சுவை பகிர்வுக்கு நன்றி

sarcharan
14-10-2011, 10:34 AM
இப்பதிப்பு சிரிப்புக்காக எழுதிய ஒன்று. காந்திஜியை புண்படுத்த அல்ல.. தயவாய் மன்னிக்க.

ஒரு சமயம் காந்திஜிக்கும் கஸ்தூரிபைக்கும் மத்தியில் சண்டை வந்து விட்டது. காந்தி கோபம் கொண்டு உன்கூட வாழ்வதை விட தவம் புரிவதே மேல் என்று காட்டுக்கு சென்று தவம் புரிந்தாராம்.

கடவுள் உடனே அவர் முன்தோன்றி, "குழந்தை உனக்கு என்ன வரம் வேண்டும், கேள்"
காந்திஜி (கோபத்தோடு) : எனக்கு ஒரு மயிரும் வேண்டாம்
கடவுள்: ததாஸ்து... அப்படியே ஆகட்டும்...
என்று கூறிவிட்டு மறைந்துவிட்டார்.

இப்போழ்து புரிந்ததா காந்திஜிக்கு என் தலையில் வழுக்கை என்று? :D

sarcharan
16-01-2012, 02:41 PM
வாசமில்லா வடை இது
வயிற்றில் போய் குடையுது
சீனி இல்ல காப்பி இது
சீரணிக்க மாட்டேங்குது
ஏதேதோ பண்டம்
என் காசு தண்டம்

ஜென்டில்மன் படப்பாடல்
====================
சூட் எடுத்து போட்டுக்கோ
விக் எடுத்து மாட்டிக்கோ
மொட்ட மண்டை முருகேசா..

Khadalan
20-01-2012, 10:33 AM
வளைச்சு வளைச்சு கடிக்கிறீர்களே!! முடியலே..

matheen
22-01-2012, 01:21 PM
ஹாஹாஹாஹா..........

sarcharan
07-03-2012, 10:08 AM
நண்பர்களே,
வாழ்க்கை பாதையில் மேடு, பள்ளம், கல், மண், முட்கள், பாறைகள் எல்லாம் இருக்கும்.

நீதி: ஆகவே மறக்காமல் காலணி அணிந்து செல்லுங்கள்

sarcharan
07-03-2012, 10:16 AM
காதலன்: அன்பே! இந்தா லட்டு
காதலி: லட்டை சாப்பிட்டுவிட்டு, என்ன டார்லிங் விசேஷம்?
காதலன்: இன்னியோட ஒரு வருஷம் முடிஞ்சு போச்சு.
காதலி: ஒ! நமது சந்திப்பை சொல்லறீங்களா?
காதலன்: இல்லை நீ சாப்பிட்ட லட்டுவை பத்தி சொன்னேன்! ;)

Dr.சுந்தரராஜ் தயாளன்
11-03-2012, 07:48 AM
நண்பர்களே,
வாழ்க்கை பாதையில் மேடு, பள்ளம், கல், மண், முட்கள், பாறைகள் எல்லாம் இருக்கும்.

நீதி: ஆகவே மறக்காமல் காலணி அணிந்து செல்லுங்கள்

மிகவும் அருமை...சிரிக்க மட்டும் அல்ல சிந்திக்கவும் உகந்தது :)