PDA

View Full Version : ரசத்தில் நவரசம்......



தாமரை
28-12-2005, 10:51 AM
(நவ)ரசம் ..
கண்ணே!
உன் கைபட்டு
கரைந்ததில்
ஆனந்தமாய்
கண்ணீர் விட்டதோ புளி..
...
...
...
...
ரசத்தில்
உப்பு கொஞ்சம் தூக்கல்தான்
- தாமரை

பென்ஸ்
28-12-2005, 10:58 AM
ரசத்தில் நவரசம்......
--------------------------------------------------------------------------------

(நவ)ரசம் ..
கண்ணே!
உன் கைபட்டு
கரைந்ததில்
ஆனந்தமாய்
கண்ணீர் விட்டதோ புளி..
...
...
...
...
ரசத்தில்
உப்பு கொஞ்சம் தூக்கல்தான்
- தாமரை



இதையும் தாங்கள் unicode-ல் பதிக்கலாமே......

பென்ஸ்
28-12-2005, 10:59 AM
கவிதை... கலக்கல்....

வாருங்கள் தாமரை(ச்)செல்வன்....

இந்த ச் -ல இத்தனை விஷ்யமா??????

தாமரை
28-12-2005, 12:04 PM
என்
மனைவியும்
ஒரு
மலர்தான்...

...
...
..

"காளி" ·பிளவர்"

அறிஞர்
28-12-2005, 02:52 PM
சிரிப்பு வரும் கவிதைகள்... இது எந்த பகுதியில் வைப்பது......

aren
28-12-2005, 11:12 PM
"காளி" பிளவர் - நன்றாக ஒப்பிட்டிருக்கிறீர்கள். பார்த்து எழுதுங்க. உங்க மனைவி பார்த்துவிடப்போகிறார்கள். அப்புறம் மொத்துதான்.

தாமரை
29-12-2005, 04:02 AM
குறிப்பு : என் மனைவி இன்டர்னெட் பார்ப்பதில்லை...

பின்குறிப்பு : நான் கவிதை எழுதுவேன் என்று என் மனைவியை யாராலும் நம்ப வைக்க முடியாது...

பின் பின் குறிப்பு : எனக்கு தமிழ் ஒழுங்காக படிக்க தெரியும் என்றே பல பேர் நம்புவதில்லை....

பெருகி வரும்
மணல் கொள்ளைகளுக்கு
ஒரு முற்றுப் புள்ளி...

சிமெண்ட்
தொழிலாளிகளின்
சுவாசக் கோளாறுகளுக்கு
ஒரு விடிவு காலம்..

மாற்று கண்டுபிடித்து விட்டாள்
என்
மனைவி...

யுரேகா...
யுரேகா....

...

....
...
....

..

...
மைசூர் பாகு...


தாமரை.

pradeepkt
29-12-2005, 09:00 AM
ஆனாலும் உங்களுக்கு ரொம்பத் தான்யா தைரியம்.
மன்றத்தில் மூத்தவர்களே சொல்லப் பயப்படும் விஷயங்களைப் போட்டு உடைத்து விட்டீர்கள் போல... :D

தாமரை
29-12-2005, 10:05 AM
ஆனாலும் உங்களுக்கு ரொம்பத் தான்யா தைரியம்.
மன்றத்தில் மூத்தவர்களே சொல்லப் பயப்படும் விஷயங்களைப் போட்டு உடைத்து விட்டீர்கள் போல... :D


உடைக்க முடியலைன்னு தானே சொன்னேன் மைசூர்பாகை!!!!!

sarcharan
29-12-2005, 11:54 AM
ஹேங்....
ஆனாலும் உடைக்க முடியலைன்னு சொல்லீட்டீங்களே......

உண்மையில் அது மைசூர்பாகைத்தானா?
இல்ல ஒரு சின்ன சந்தேகம்......
:p


உடைக்க முடியலைன்னு தானே சொன்னேன் மைசூர்பாகை!!!!!

aren
29-12-2005, 01:03 PM
மாற்று கண்டுபிடித்து விட்டாள்
என்
மனைவி...

யுரேகா...
யுரேகா....

...

....
...
....

..

...
மைசூர் பாகு...


தாமரை.

இது உணமையாக இருந்தாலும் ரொம்பவும் தைரியம்தான்.

கல்யாணம் இன்னும் ஆகவில்லையென்று தெரிகிறது.

தாமரை
30-12-2005, 03:47 AM
கண்ணே! உன் கைபட்டு ------ காதல்
கரைந்ததில் ------- கருணை
ஆனந்தமாய் கண்ணீர் விட்டதோ புளி..----- மகிழ்ச்சி
...
...
ரசத்தில் உப்பு கொஞ்சம் தூக்கல்தான் -- ஹாஸ்யம் (நகைச்சுவை)

இதை சொல்லும் போது எனக்கு ------ வீரம்
கேட்டவுடன் மனைவிக்கு ------- குழப்பம்

சிறிது நேரம் கழித்து ---- கோபம்
என் மனைவியின் கோபம் கண்டு எனக்கு ------ பயம்
என் மனைவி பாத்திர வீசல் ----- ரௌத்திரம்
கடைசியில் என் நிலை ------- சோகம்....

ரசத்தில் நவ ரசம் ---- நிஜம் தானே......

gragavan
30-12-2005, 04:42 AM
அடேங்கப்பா.......நவரசக் கவிஞர் செல்வன் என்று பட்டந்தான் கொடுக்க வேண்டும். ரசம் நல்ல ரசம்.

அல்லிராணி
03-01-2006, 09:21 AM
குடித்ததே இல்லையென்றீர்
பின்னால்
இப்போ குடிப்பது இல்லையெறீர்
பின்னால்
இனிமே குடிக்க மாட்டேனென்றீர்
இப்போ
கொஞ்சம் கொஞ்சமா
குறைச்சிக்கறேன்
என்கிறீர்

உப்பு அதிகம் போட்டு
என்ன பிரயோஜனம்?
உரைக்கலியே!!!

pradeepkt
03-01-2006, 11:27 AM
வாங்க அல்லிராணி
உங்களைப் பத்தி ஒரு அறிமுகத்தை அறிமுகம் பகுதியில போடுங்களேன்

aren
03-01-2006, 11:31 AM
குடித்ததே இல்லையென்றீர்
பின்னால்
இப்போ குடிப்பது இல்லையெறீர்
பின்னால்
இனிமே குடிக்க மாட்டேனென்றீர்
இப்போ
கொஞ்சம் கொஞ்சமா
குறைச்சிக்கறேன்
என்கிறீர்

உப்பு அதிகம் போட்டு
என்ன பிரயோஜனம்?
உரைக்கலியே!!!

வாருங்கள் அல்லிராணி. உங்கள் வரவு நல்வரவாகட்டும். ஆனால் பேருதான் கொஞ்சம் பயமுறுத்துகிறது.

தாமரை
03-01-2006, 12:10 PM
குடித்ததே இல்லையென்றீர்
பின்னால்
இப்போ குடிப்பது இல்லையெறீர்
பின்னால்
இனிமே குடிக்க மாட்டேனென்றீர்
இப்போ
கொஞ்சம் கொஞ்சமா
குறைச்சிக்கறேன்
என்கிறீர்

உப்பு அதிகம் போட்டு
என்ன பிரயோஜனம்?
உரைக்கலியே!!!

அய்யய்யோ மாட்டிகிட்டனே...
(வடிவேலு .. கை குடுப்பா ஒரு மாதிரியா சமாளிக்கலாம்..)

ம்ம்ம்

குடித்ததே இல்லை என்றேன்
உன் கண்களில்
மது உண்டென்று
நானா கண்டேன்?

இப்போ குடிப்பது
இல்லையென்றேன்
உன் கண்ணை
பார்க்கவில்லை
என்று பொய்யா சொன்னேன்?

இனிமே குடிக்க
மாட்டேனென்றேன்
திரும்பப் பார்க்கும் தைரியம்
இல்லை என்றேன்


கொஞ்ச கொஞ்சமாய்
குறைத்துக் கொள்கிறேன்
என்கிறேன்
கண்ணை விலக்க
மனமில்லாமல்

-------------------------------
ஆத்தாடி என்னை விட்ருங்கோ......

:eek: :eek: :eek: :eek: :eek:

sarcharan
03-01-2006, 12:46 PM
அது என்ன இந்த கவிகள்:D (திருமணமானவர்கள் )மட்டும் எப்படி இதுமாதிரி சவாலை(உண்மைகளை) சமாளிக்கிறார்கள்?:D

நானும் எவ்வளவு நேரம் தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது.... மாதிரியா?:p





அய்யய்யோ மாட்டிகிட்டனே...
(வடிவேலு .. கை குடுப்பா ஒரு மாதிரியா சமாளிக்கலாம்..)

ம்ம்ம்

குடித்ததே இல்லை என்றேன்
உன் கண்களில்
மது உண்டென்று
நானா கண்டேன்?

இப்போ குடிப்பது
இல்லையென்றேன்
உன் கண்ணை
பார்க்கவில்லை
என்று பொய்யா சொன்னேன்?

இனிமே குடிக்க
மாட்டேனென்றேன்
திரும்பப் பார்க்கும் தைரியம்
இல்லை என்றேன்


கொஞ்ச கொஞ்சமாய்
குறைத்துக் கொள்கிறேன்
என்கிறேன்
கண்ணை விலக்க
மனமில்லாமல்

-------------------------------
ஆத்தாடி என்னை விட்ருங்கோ......

:eek: :eek: :eek: :eek: :eek:

இளசு
03-01-2006, 08:01 PM
மைசூர்பாகை மண்டையில் ஓங்கி மனைவி இறக்கி இருந்தால்
மன்றத்தில் பெங்களூர்க்காரரின் நவரசம் பாய்ந்திருக்குமா?

மனைவி இல்லாத இடங்களில் வரும் வீரமே அலாதிதான்..

ஒன்பது ரசங்களின் கூட்டுப் பறிமாறல் சுவை..

வாழ்த்துகள் செல்வன்..


அல்லிராணி, ஆரம்பமே அசத்தல். நல்வரவு..

இருவரும் கலகலவென பலப்பல பதிவுகள் தர வாழ்த்துகள்..

பென்ஸ்
04-01-2006, 06:32 AM
ஐயோ ஐயோ.... சூப்பர் அப்பு...

தாமரை
04-01-2006, 07:49 AM
மைசூர்பாகை மண்டையில் ஓங்கி மனைவி இறக்கி இருந்தால்
மன்றத்தில் பெங்களூர்க்காரரின் நவரசம் பாய்ந்திருக்குமா?

மனைவி இல்லாத இடங்களில் வரும் வீரமே அலாதிதான்..

ஒன்பது ரசங்களின் கூட்டுப் பறிமாறல் சுவை..

வாழ்த்துகள் செல்வன்..


அல்லிராணி, ஆரம்பமே அசத்தல். நல்வரவு..

இருவரும் கலகலவென பலப்பல பதிவுகள் தர வாழ்த்துகள்..
மைசூர் பாகால் அடிக்கணுமா.. அது முடியாது..
வேணுமானால் அதை செய்த வாணலியால் அடிக்கலாம்..

அவ்வளவு பிணைப்பு! ஹி ஹி ஹி

தாமரை
04-01-2006, 07:58 AM
என்
மனைவியும்
ஒரு
மலர்தான்...

...
...
..

"காளி" ·பிளவர்"

சமாளிப்ஸ் நெம்பர் 2:

அது வந்து அது வந்து... உலகத்தில ஆயிரக்கணக்கான பூ இருக்கலாம்..
கண்ணுக்கு அழகா.. நல்ல வாசனையா...
ஆனால்
மனுசனுடைய பசியை போக்க உதவுவது இரண்டே பூக்கள்தான்..
ஒண்ணு வாழைப்பூ இன்னொண்ணு காளி ·பிளவர்..

வாழைப்பூ கூம்பி இருக்கும்...காளி·பிளவர் மலர்ந்து இருக்கும்...
அதனாலதான் காளி·பிளவர்ன்னு சொன்னேன்

அக்காங்....

அல்லிராணி
04-01-2006, 09:47 AM
சமாளிப்ஸ் நெம்பர் 2:

மனுசனுடைய பசியை போக்க உதவுவது இரண்டே பூக்கள்தான்..
ஒண்ணு வாழைப்பூ இன்னொண்ணு காளி பிளவர்..

வாழைப்பூ கூம்பி இருக்கும்...காளிபிளவர் மலர்ந்து இருக்கும்...
அதனாலதான் காளிபிளவர்ன்னு சொன்னேன்

அக்காங்....


கொஞ்ச கொஞ்சமாய்
குறைத்துக் கொள்கிறேன்
என்கிறேன்
கண்ணை விலக்க
மனமில்லாமல்....



விழுங்கி விடுகிற மாதிரி பார்க்கறதுங்கறது இதுதானா?

தாமரை
04-01-2006, 01:11 PM
அது வந்து ...

நாக்கின் உதவியால் தான் பேசறோம் அதே மாதிரி நாக்கின் உதவியால் தான் சாப்பாட்டு ருசியை அறிகிறோம்..

அதனால பேச்சுல சாப்பாட்டு வாசனை வரத்தான் செய்யும்...

(அப்பு! சமாளிப்பு திலகம்னு பட்டம் இருந்தா குடுங்களேன்)

pradeepkt
04-01-2006, 01:43 PM
இந்த சமாளிஃபிகேஷன்னு ஒரு தியரி இருக்கே
அதைக் கண்டு புடிச்சது நீங்கதானோ?

Iniyan
04-01-2006, 08:40 PM
ஆகா. அசத்துறீங்களே

அறிஞர்
04-01-2006, 10:04 PM
மைசூர் பாகால் அடிக்கணுமா.. அது முடியாது..
வேணுமானால் அதை செய்த வாணலியால் அடிக்கலாம்..

அவ்வளவு பிணைப்பு! ஹி ஹி ஹிவாணலியோடுதான் சாப்பிட வேண்டுமா.... :eek: :eek: :eek:

அறிஞர்
04-01-2006, 10:05 PM
இந்த சமாளிஃபிகேஷன்னு ஒரு தியரி இருக்கே
அதைக் கண்டு புடிச்சது நீங்கதானோ? பிரதீப்புக்கு ஒன்னுமே தெரியாதா..... :rolleyes: :rolleyes: :rolleyes:

அறிஞர்
04-01-2006, 10:05 PM
சமாளிப்ஸ் நெம்பர் 2:வாழைப்பூ கூம்பி இருக்கும்...காளிபிளவர் மலர்ந்து இருக்கும்...
அதனாலதான் காளிபிளவர்ன்னு சொன்னேன்

அக்காங்....அது சரி "காளியா, காலியா"

தாமரை
05-01-2006, 03:56 AM
அது சரி "காளியா, காலியா"

இலக்கணப்படி ..Cauliflower -- காளிஃபிளவர் என்பது தான் சரியான உச்சரிப்பு.

Califlower - காலிஃபிளவர்

gragavan
05-01-2006, 05:50 AM
இலக்கணப்படி ..Cauliflower -- காளிஃபிளவர் என்பது தான் சரியான உச்சரிப்பு.

Califlower - காலிஃபிளவர்இவ்வளவு கஷ்டப் பட வேண்டாமுண்ட்டுதான் வடக்குல அத கோபிங்குறாங்க. இத ஆலுவோடையும் பன்னீரோடையும் பட்டாணியோடையும் பாலக்கோடையும் கலப்பு மணம் செஞ்சி விதவிதமா ஐட்டங்களை அள்ளி விடுறாங்க.....

aren
05-01-2006, 06:04 AM
இவ்வளவு கஷ்டப் பட வேண்டாமுண்ட்டுதான் வடக்குல அத கோபிங்குறாங்க. இத ஆலுவோடையும் பன்னீரோடையும் பட்டாணியோடையும் பாலக்கோடையும் கலப்பு மணம் செஞ்சி விதவிதமா ஐட்டங்களை அள்ளி விடுறாங்க.....

நாக்குலே எச்சில் வரும்படி செய்துவிட்டீர்களே.

இன்றே கோபி சாப்பிடவேண்டும் என்று தோன்றுகிறது.

தாமரை
05-01-2006, 06:12 AM
நாக்குலே எச்சில் வரும்படி செய்துவிட்டீர்களே.

இன்றே கோபி சாப்பிடவேண்டும் என்று தோன்றுகிறது.

பெங்களூர் கோபி மஞ்சூரியன் படு பயங்கர ருசி.
மாலை ஒரு கட்டு கட்டிர வேன்டியதுதான்.

ஒரு வேளை கோகுலத்தில் கூட என்னை மாதிரியே யாராவது இருந்திருப்பாங்களோ..

"கோபி" கைகள் அப்படின்னு அந்தப் பெண்களை அழைத்தார்களே!!

gragavan
05-01-2006, 07:48 AM
பெங்களூர் கோபி மஞ்சூரியன் படு பயங்கர ருசி.
மாலை ஒரு கட்டு கட்டிர வேன்டியதுதான்.

ஒரு வேளை கோகுலத்தில் கூட என்னை மாதிரியே யாராவது இருந்திருப்பாங்களோ..

"கோபி" கைகள் அப்படின்னு அந்தப் பெண்களை அழைத்தார்களே!!ஆமாமா! இன்னைக்கு மதியம் கூட அதத்தான் சாப்பிட்டேன். நல்லாத்தான் இருந்துச்சி. லேசா இனிப்பும் உறைப்புமா!

கோபியோட கைகள் சும்மாயிருக்கைலைன்னா கோபிகைகள் ஒருவழி பண்ணீருவாங்க. எச்சரிக்கை செல்வம்.

pradeepkt
05-01-2006, 11:53 AM
நம்ம ஊர்லதான்யா
கோபாலை (gopal) ஐக்கூட கோபால்னு cobol னு சொல்லி ஒரு கம்பியூட்டர் புரொபஷனல் ஆக்கீருவாங்க...
ராகவன் எச்சரிக்கையைக் கவனமா வச்சிக்கிருங்கப்பு

தாமரை
06-01-2006, 07:31 AM
அல்வா முதன் முதல்ல கொடுத்தது யாரு தெரியுமா?

gragavan
06-01-2006, 08:05 AM
அல்வா முதன் முதல்ல கொடுத்தது யாரு தெரியுமா?நீங்களா?

தாமரை
06-01-2006, 08:07 AM
இல்லை ..ஔவையார்....

gragavan
06-01-2006, 09:15 AM
இல்லை ..ஔவையார்....ஔவையாரா? எப்படிச் சொல்றீங்க? நாலு கொடுத்து மூனு வாங்குனத வெச்சிச் சொல்றீங்களா?

தாமரை
06-01-2006, 09:26 AM
அதேதான்!!!


பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் - கோலம்செய்
துங்கக் கரிமுகத்து தூமணியே நீயெனக்கு
சங்கத் தமிழ்மூன்றும் தா

gragavan
06-01-2006, 09:36 AM
அதேதான்!!!


பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் - கோலம்செய்
துங்கக் கரிமுகத்து தூமணியே நீயெனக்கு
சங்கத் தமிழ்மூன்றும் தாஅப்போ ஆனைக்கு அல்வா வாங்குன வகைக்கான செலவு சரிதாங்குறீங்க!

தாமரை
06-01-2006, 09:43 AM
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு

கலந்து அப்படீங்கற வார்த்தை தான் டேஞ்சர் ...

வெல்லப்பாகுல, பருப்பு (பாதாம்.. பிஸ்தா.. பாசிப்பருப்பு இந்த மாதிரி)
போட்டு பாலும் தேனும் சேர்த்து கலந்து கிண்டினா கிடைப்பது என்ன?

அல்வாதானே..

மூணு குடு நாலு தர்ரேன்னு சொல்லிட்டு ஒண்ணுதானே கொடுக்கிறாங்க.. அதுவும் அல்வா..

அறிஞர்
09-01-2006, 10:02 PM
என்னப்பா ஒவ்வொருத்தரும் ஒவ்வொருத்தருக்கா.. அல்வா கொடுக்கிறீங்க..

lavanya
10-01-2006, 10:43 PM
சுவையாய் போகிறது பதிவு..அனைவரும் வரிந்து கட்டிக்கொண்டு வாருகிறார்கள்..

தாமரை
12-01-2006, 04:27 AM
எங்க வார்ரது? எல்லோரும் கால்ல ஆணியடிச்குகிட்டு நிக்கிறாங்களே. போஸ்டிங்குக்காக ஔவையாரையெல்லாம் வம்புக்கு இழுக்க வேண்டியதா இருக்கு.

பென்ஸ்
12-01-2006, 04:46 AM
செல்வன்... அப்படியே ஐவர் அணி பதிவுக்கு போங்க...
அங்க ஒரு கூட்டம் ஏதோ பெரிய பிஸ்தா பருப்புகளட்டும் லோள்ளு பன்னிக்கிட்டு இருக்காங்க...
அப்படியே ஒரு மிரட்டு மிரட்டுறது....

என்ன பயமா இருக்கோ... பயப்படமாட்டிங்க.. நீங்க தமிழனாச்சே....

pradeepkt
12-01-2006, 05:22 AM
பென்ஸூ இதைத்தான் எங்க ஊர்ல "ஊரான் வீட்டுப்புள்ளைய வச்சி ஆழம் பாக்குறது"ன்னு சொல்லுவாங்க
உங்களுக்குச் செல்வன் மேல என்னய்யா கோவம்?

தாமரை
12-01-2006, 05:30 AM
ஸேம் சைடு கோல் போட்டு ரொம்ப நாளாச்சு.. ஒண்ணு போட்டு பார்ப்பமா?

அதை கண்டுக்காதீங்க பிரதீப்...
நெருப்பு எரிஞ்சதுன்னா நடுங்கறவங்க :cool: குளிர் காயத்தான் செய்வாங்க..

தாமரை
23-03-2006, 01:11 PM
செல்வன்... அப்படியே ஐவர் அணி பதிவுக்கு போங்க...
அங்க ஒரு கூட்டம் ஏதோ பெரிய பிஸ்தா பருப்புகளட்டும் லோள்ளு பன்னிக்கிட்டு இருக்காங்க...
அப்படியே ஒரு மிரட்டு மிரட்டுறது....

என்ன பயமா இருக்கோ... பயப்படமாட்டிங்க.. நீங்க தமிழனாச்சே....
உங்க ஆசையை நிறைவேத்திட்டேன்னு நினைக்கிறேன்:rolleyes: :rolleyes: :rolleyes:

ஓவியா
20-06-2006, 01:41 PM
கண்ணே! உன் கைபட்டு ------ காதல்
கரைந்ததில் ------- கருணை
ஆனந்தமாய் கண்ணீர் விட்டதோ புளி..----- மகிழ்ச்சி
...
...
ரசத்தில் உப்பு கொஞ்சம் தூக்கல்தான் -- ஹாஸ்யம் (நகைச்சுவை)

இதை சொல்லும் போது எனக்கு ------ வீரம்
கேட்டவுடன் மனைவிக்கு ------- குழப்பம்

சிறிது நேரம் கழித்து ---- கோபம்
என் மனைவியின் கோபம் கண்டு எனக்கு ------ பயம்
என் மனைவி பாத்திர வீசல் ----- ரௌத்திரம்
கடைசியில் என் நிலை ------- சோகம்....

ரசத்தில் நவ ரசம் ---- நிஜம் தானே......

தாமரை சார் சும்மா அட்டகாசமா, அசத்தலா, அருமையாய் உள்ளது உங்கள்...ரசத்தில் நவ ரசம்

vckannan
02-08-2006, 01:30 PM
கண்ணே! உன் கைபட்டு ------ காதல்
கரைந்ததில் ------- கருணை
ஆனந்தமாய் கண்ணீர் விட்டதோ புளி..----- மகிழ்ச்சி
...
...
ரசத்தில் உப்பு கொஞ்சம் தூக்கல்தான் -- ஹாஸ்யம் (நகைச்சுவை)

இதை சொல்லும் போது எனக்கு ------ வீரம்
கேட்டவுடன் மனைவிக்கு ------- குழப்பம்

சிறிது நேரம் கழித்து ---- கோபம்
என் மனைவியின் கோபம் கண்டு எனக்கு ------ பயம்
என் மனைவி பாத்திர வீசல் ----- ரௌத்திரம்
கடைசியில் என் நிலை ------- சோகம்....

ரசத்தில் நவ ரசம் ---- நிஜம் தானே......

பாத ரசத்த தவிர எல்லா ரசமும் காதல்ல உண்டு போல

பா அருமை வேறென்ன

vckannan
02-08-2006, 01:34 PM
உப்பு அதிகம் போட்டு
என்ன பிரயோஜனம்?
உரைக்கலியே!!!
எப்படி உறைக்கும் அவருதான் உறை(பழய நம்பர் கடை சரக்கு பாக்கெட்) பார்ட்டி ஆச்சே

தாமரை
07-08-2006, 03:51 PM
எப்படி உறைக்கும் அவருதான் உறை(பழய நம்பர் கடை சரக்கு பாக்கெட்) பார்ட்டி ஆச்சே

உறைக்கு உரைக்காது என்பவரே ஊறுகாய்க்கு பதில் சொல்லுங்களேன்..!

ஆதவா
11-05-2007, 07:38 PM
செல்வன் அண்ணா...

உண்மையில் சிரித்தே விட்டேன். ஆனால் அதற்குள் அடங்கிய விஷயங்கள் (நவரசம்) எப்படி.... ??? சொல்லின் வேந்தர் பட்டம் அருமையா பொருந்தும்... அதிலும் அதை விரித்து சொன்னது.. உண்மையிலேயே வியந்துவிட்டேன்.... திரி முழுவதுமே படிக்கவேண்டிய விடயம்..

அக்னி
13-06-2007, 11:56 AM
தாமரையின் நவரசமும் அல்வாவும்
பரிமாறப்பட்டு நாளானாலும்
இன்னமும் சுவைக்கிறதே...

அல்லிராணியின், சீண்டல்கள்
சிங்காரங்கள்...

அறிஞர்
13-06-2007, 02:20 PM
புதியவர்கள்.. படித்து மகிழ்வதில்.... தாமரை மகிழ்ச்சியடைவார்.

அக்னி
13-06-2007, 04:23 PM
புதியவர்கள்.. படித்து மகிழ்வதில்.... தாமரை மகிழ்ச்சியடைவார்.
தாமரை மகிழ்ச்சியில் விரிந்தால்,
நாம் தா மரையாகத் துள்ளி மகிழலாம்...

அமரன்
13-06-2007, 05:30 PM
செல்வன் அண்ணா...

உண்மையில் சிரித்தே விட்டேன். ஆனால் அதற்குள் அடங்கிய விஷயங்கள் (நவரசம்) எப்படி.... ??? சொல்லின் வேந்தர் பட்டம் அருமையா பொருந்தும்... அதிலும் அதை விரித்து சொன்னது.. உண்மையிலேயே வியந்துவிட்டேன்.... திரி முழுவதுமே படிக்கவேண்டிய விடயம்..
கம்பன் வீட்டுக் கட்டுத் தறியே கவிபாடும் பொழுது...அன்னைஅகமாம் தாமரை சொல்லாடுவதில் ஏது ஆச்சரியம்.

என்
மனைவியும்
ஒரு
மலர்தான்...

...
...
..

"காளி" பிளவர்"
இதற்கு அப்புறமும் காலி ஆகாமல் இருக்கின்றீர்களே. ஒத்துக்கொள்கிறேன். இணையத்தில் வலம் வருவதில்லை என்று.

தாமரை
13-06-2007, 05:32 PM
கம்பன் வீட்டுக்கைதடியே கவிபாடும்போது அன்னைஅகமாம் தாமரை சொல்லாடுவதில் ஏது ஆச்சரியம்.

இதற்கு அப்புறமும் காலி ஆகாமல் இருக்கின்றீர்களே. ஒத்துக்கொள்கிறேன். இணையத்தில் வலம் வருவதில்லை என்று.


கம்பன் வீட்டுக் கட்டுத் தறியே கவிபாடும் பொழுது...

கம்பர் ஒரு நெசவாளக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதை விளக்கும் பழமொழி..

அமரன்
13-06-2007, 05:34 PM
கம்பன் வீட்டுக் கட்டுத் தறியே கவிபாடும் பொழுது...

கம்பர் ஒரு நெசவாளக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதை விளக்கும் பழமொழி..
என் வேகலில் தமிழுக்கு அவலம்.
மாற்றிவிட்டேன்

ஓவியா
20-06-2007, 08:00 PM
புதியவர்கள்.. படித்து மகிழ்வதில்.... தாமரை மகிழ்ச்சியடைவார்.

சில பதிவுகளை எத்தனை முறை படித்தாலும் அலுக்காது, அது போல் இதும்.

ம*ன்ற*த்தில் நான் ப*டித்து ர*சித்த* ப*திவில் இதுவும் ஒன்று.

நன்றி தாமரையண்ணா.

அமரன்
21-06-2007, 12:49 PM
சில பதிவுகளை எத்தனை முறை படித்தாலும் அலுக்காது, அது போல் இதும்.
ம*ன்ற*த்தில் நான் ப*டித்து ர*சித்த* ப*திவில் இதுவும் ஒன்று.
நன்றி தாமரையண்ணா.

ஔவையார் பேத்தி சொல்றாங்க நம்புவோம்.

ஓவியா
21-06-2007, 05:16 PM
ஔவையார் பேத்தி சொல்றாங்க நம்புவோம்.

போற்றிப்புகழப்படும் ஔவையாரின் பேத்தி என்று சொல்லி மன்றத்தில் என்னை பெரும்புள்ளியாக்கி விட்டீர்களே. வாழ்க உங்க தொண்டு.


அப்பாடி பல்ட்டி அடிக்க கற்றுகொண்டது, சில சமயம் சிந்திக்க நல்ல பயனை தருகின்றது.

அமரன்
21-06-2007, 05:19 PM
போற்றிப்புகழப்படும் ஔவையாரின் பேத்தி என்று சொல்லி மன்றத்தில் என்னை பெரும்புள்ளியாக்கி விட்டீர்களே. வாழ்க உங்க தொண்டு.
அப்பாடி பல்ட்டி அடிக்க கற்றுகொண்டது, சில சமயம் சிந்திக்க நல்ல பயனை தருகின்றது.


அப்போ நீங்களும் அல்வாப்பாட்டிதானா.....:sport-smiley-018: :sport-smiley-018:

ஓவியா
21-06-2007, 05:22 PM
அப்போ நீங்களும் அல்வாப்பாட்டிதானா.....:sport-smiley-018: :sport-smiley-018:

அல்வா கொடுப்பது எங்க பாட்டி, நமக்கு பட்ஜெட் பத்தாது அதனால் அடியேன் வெறும் தனண்ணீர்தான் காட்டுவேன்.

விகடன்
13-08-2007, 03:47 AM
தாமரை அண்ணாவின் பூத்துக்குலுங்கும் சிரிப்புக் கவிகள் நன்றாக இருக்கிறது. மேலும் பின்னூட்டங்களிற்கு அளித்த பதில் பின்னூட்டங்கள் சிறப்பு.

பாராட்டுக்கள் அண்ணா.

kampan
13-08-2007, 04:14 AM
நான் ஓவியனிடம் ஒன்று கேட்கவேண்டும் பாட்டி மட்டும்தான் அல்வா கொடுப்பாவா? நீங்கள் வேறுயாரிடமோ அல்வா வாங்கியதாக அறிகிறேன் அது உண்மையா? இல்லை வதந்தியா? என்னை தண்டித்து விடாதீர்கள்

அமரன்
13-03-2008, 03:29 PM
கோபத்துக்கும் ரௌத்திரத்துக்கும் என்னங்க வேறுபாடு? நீண்டநாள் சந்தேகம்.. தீர்த்து வைங்க...

யவனிகா
13-03-2008, 03:56 PM
கோபத்துக்கும் ரௌத்திரத்துக்கும் என்னங்க வேறுபாடு? நீண்டநாள் சந்தேகம்.. தீர்த்து வைங்க...

தாண்டவத்துக்கும், ருத்திர தாண்டவத்துக்கும் உள்ள வித்தியாசம்:lachen001::lachen001::lachen001:

ஓவியன கேளுங்க...

கரண்டி மட்டும் வந்தா கோபம்...

கரண்டியோட, தட்டு, டம்ளர் எல்லாம் சேந்து வந்தா ரௌத்திரம்..

சொல் வேந்தே....சரிதானா...சொல்வேந்தே?

அமரன்
13-03-2008, 04:00 PM
ஓ...
இதுதானா அது...
எதுக்கும் பீக்ல இருக்கிற ஓவியன்கிட்டவும் கேட்டுக்கிறேன்..:)

தாமரை
13-03-2008, 04:31 PM
கோபம் செயலாக மாறுவது ரௌத்ரம்.
ரௌத்ரம் என்பது வடமொழிச் சொல். அழிக்கவல்லது,,


கோபம் செல்லக் கோபமாக சிணுங்கலாகக் கூட இருக்கலாம். பொய்க்கோபம்.. ஆக கோபம் என்பது சிறிசிலிருந்து பெரிசு வரை..

ரௌத்ரம் என்பது வெறிகொண்டு ஆடுவது.. கையில கிடைச்சதை எல்லாம்

தூக்கி வீசி.. கல்யாணம் ஆச்சுன்னா புரியும். ;):D:eek::eek::eek::D

அப்பப்ப யவனிகா ரௌத்ரம் கொள்வாங்கன்னு நுரையீரல் வீக்கங்களைக் காட்டி பெருமூச்சு விட்டதா வதந்தி :smilie_abcfra: தெரியலைப்பா:D:D:D

அமரன்
13-03-2008, 05:01 PM
பாரதியார் கண்ட புதுமைப் பெண்கள் பலர் ரௌத்திரம் பழகி இருக்கிறார்கள் என்பது புலப்படுகிறது. நன்றி அண்ணா.

தாமரை
14-03-2008, 12:20 AM
பாரதியார் கண்ட புதுமைப் பெண்கள் பலர் ரௌத்திரம் பழகி இருக்கிறார்கள் என்பது புலப்படுகிறது. நன்றி அண்ணா.

பாரதியார் காணாத புதுமைப் பெண்ணும் கூட.. :D:D:D

ஓவியா
29-04-2008, 11:46 AM
பாரதியார் காணாத புதுமைப் பெண்ணும் கூட.. :D:D:D

:D:D:D:D


ரௌடிஷம் என்பதனை தான் ரௌத்திரம் என்கிறீர்களா???

:eek:

தாமரை
29-04-2008, 01:55 PM
ரௌத்திரம் என்பது ரியாக்டிவ்..
ரௌடியிஷம் ப்ரோஆக்டிவ்..

ரௌத்திரம் கோபம் வரும் பொழுது ஏற்படும் பின்விளைவு
ரௌடியிஷம் கோபத்தை பின் விளைவாய் ஏற்படுத்துவது ;)

ஓவியா நீங்க ரௌடியா? ரௌத்ரியா?

ஓவியா
29-04-2008, 05:29 PM
ரௌத்திரம் என்பது ரியாக்டிவ்..
ரௌடியிஷம் ப்ரோஆக்டிவ்..

ரௌத்திரம் கோபம் வரும் பொழுது ஏற்படும் பின்விளைவு
ரௌடியிஷம் கோபத்தை பின் விளைவாய் ஏற்படுத்துவது ;)

ஓவியா நீங்க ரௌடியா? ரௌத்ரியா?

50/50 :D:D:D

தாமரை
29-04-2008, 06:09 PM
பாவம்

மண்டை வீங்கப் போகும் அந்தக் கொண்டவர்

ஓவியா
29-04-2008, 06:28 PM
பாவம்

மண்டை வீங்கப் போகும் அந்தக் கொண்டவர்

கொண்டவருக்கு :medium-smiley-044: மண்டையில் ஒரு கொண்டையா!!!!

அனுராகவன்
30-04-2008, 12:23 AM
தாமரையின் நவரசம் அருமை...
மற்றவரின் பின்னோட்டங்களும் அருமையுள் அருமை..
ம்ம் என் நன்றியும்,வாழ்த்துக்கள்..

Ravee
06-10-2010, 01:00 PM
குடித்ததே இல்லையென்றீர்
பின்னால்
இப்போ குடிப்பது இல்லையெறீர்
பின்னால்
இனிமே குடிக்க மாட்டேனென்றீர்
இப்போ
கொஞ்சம் கொஞ்சமா
குறைச்சிக்கறேன்
என்கிறீர்

உப்பு அதிகம் போட்டு
என்ன பிரயோஜனம்?
உரைக்கலியே!!!


அல்லி ராணியின் அறிமுகம் கிடைத்தது .
பின்னோக்கி போய் பார்த்தேன்
ஆரம்ப கவிதையே சுருக் ......

ஆமாம் ........................

இப்போதும் அவருக்கு உரைத்த மாதிரி தெரியலையே ...
கண்ணால் கண்டதும் உண்மை .... ஹா ஹா ஹா.........:lachen001: