PDA

View Full Version : உயிர்ப் படிமங்கள் (அ.மை.16)



இளசு
28-12-2005, 12:51 AM
உயிர்ப் படிமங்கள்


(Fossils என்னும் சொல்லுக்கு இணையாக உயிர்ப்படிமங்கள் எனும்
இனிய இச்சொல்லைத் தந்து உதவிய
இளவல்கள் பிரதீப், முகிலன் ஆகியோருக்கு
எனது சிறப்பு நன்றிகள்....)



கான்ராட் கெஸ்னர் ( Conrad Gesner 1516 -65)

அறிவியல் மைல்கற்கள் -16


15-ம் பாகம் - உடற்கூறியல் இங்கே:

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5988


----------------------------------------------------------------

வாழுகின்ற மக்களுக்கு
வாழ்ந்தவர்கள் பாடமடி....


முன்னொரு காலத்தில் மடிந்த உயிர்கள்
மண்ணில் புதைந்து படிமங்களாகி
சொல்லும் வரலாறுகள் ஏராளம்..

அந்த ' மண்ணில் தெரியும் கதைகளை'ப் படித்து
உலக, உயிர் வளர்ச்சியை கற்றுக்கொண்டு கற்பித்தவர்கள் பலராகும்.
அந்த சாதனையாளர் வரிசையில் முதல் மரியாதைக்குரியவர்
இந்த மைல்கல் நாயகர் கான்ராட் கெஸ்னர்.

இயற்கையாளரும் ( Naturalist) மருத்துவருமான கெஸ்னர்
16ம் நூற்றாண்டில் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்தவர்.
அக்காலகட்டத்தின் மிகப்பெரிய இயற்கையாளராய் மதிக்கப்பட்டவர்.
49 வயது மட்டுமே அவரின் ஆயுள். 1565 -ல் பிளேக் நோயால் இந்த
அறிவுப்பயணம் பாதியில் முடித்துவைக்கப்பட்டது.

ஆனால் அதற்குள் கெஸ்னர் சாதித்தவை பிரமிக்கவைப்பவை.
அவரின் மரணத்தின்போது அவர் ஏற்கனவே வெளியிட்டவை ஒன்றல்ல..இரண்டல்ல..
72 அறிவு நூல்கள்.. மேலும் 18 நூல்களை பாதிக்கு மேல் எழுதியபடியே.......

என்ன ஒரு உத்வேகம், குறிக்கோள், ஒருமித்த சிந்தனை, ஓயா உழைப்பு இருந்தால்
இத்தனையும் கைகூடி இருக்கும்? எண்ணவே மலைக்கிறது!

கெஸ்னரின் முக்கிய படைப்புகள்:

1) Historia Animolium - அதுவரை பூமியில் அறியப்பட்ட அத்தனை மிருகங்களைப்
பற்றிய முழுமையான தொகுப்பு நூல்.

2) Bibliotheca Universalis - ஹீப்ரூ, கிரேக்கம், லத்தீன் மொழிகளில் அதுவரை வெளிவந்த
மொத்த நூல்களின் தொகுப்பு - நூல் பற்றிய சுருக்கம், விமர்சனம் ஆகியவற்றோடு.

3 ) இந்த மைல்கல் நாயகர் விருதை அவருக்கு வாங்கித்தந்த - De Rerum Fosilium -
பூமியில் இருந்து அகழ்ந்தெடுக்கப்பட்டவை பற்றிய புதுமையான நூல்.

அன்று கெஸ்னரின் கண்ணோட்டப்படி உயிர்ப்பொருளோ, கனிமப்பொருளோ -
பூமியின் அடுக்குகளில் படிந்திருந்த அனைத்துமே பாசில்கள்தாம்.
இன்றும் கூட ஒரு படிமம் உயிரியின் படிமமா அல்லவா என்று உறுதியாக சொல்ல முடியாத
நிலை இருக்கிறது - செவ்வாய்க்கிரகத்தின் சிறுபடிமங்களைப் போல.

எனவே அக்காலத்தில் ஒரு படிமம் எந்த வகையில் உருவாகி இருக்கும் என
புத்தம் புதிய அறிவொளி பாய்ச்சிய கெஸ்னரும் மயங்கியதில் ஆச்சரியமில்லை.
அதுவரை உலகம் கண்டறியாத இப்புதிய அறிவியல் பிரிவை ஆரம்பித்து வைத்த
கெஸ்னர் மிகத்துல்லியமாக படங்கள், மரச்செதுக்கல் மாடல்கள் கொண்டு
வரும் சந்ததியினருக்கு அளித்த மாபெரும் கொடை இந்நூல்.
படிமம் கிடைத்த இடம், நுட்மான விவரிப்பு, அறிவார்ந்த தொகுப்பு, அடுத்த தலைமுறை
அடையாளம் காண ஏதுவாய் படங்களுடன் இவர் வழங்கிய பாசிலிய நூல்
பல கண்டுபடிப்புகளின் முன்னோடி.

ஆகாயத்தில் இருந்து விழுந்ததாக நம்பப்பட்ட ' நாக்குக்கல்' (Tongue stone) உண்மையில்
சுறா மீனின் பல்லின் படிமம் என்று கண்டு சொன்னவர் கெஸ்னர்.
கடல்வாழ் உயிரின் படிமம் உள்நிலப்பரப்புகளில் எப்படி வந்தன என்பது உள்ளிட்ட
பல கேள்விகளை எதிர்கால அறிவியலார் எழுப்பி , காம்ப்ரியன் சகாப்தம் உள்ளிட்ட
உயிர் தோற்றம் பற்றிய கோட்பாடுகள் பின்னர் விருட்சமாய் எழுந்ததற்கு
விதை போட்டவர் - இம்மைல்கல் நாயகர் கான்ராட் கெஸ்னர்.

பாரதி
30-12-2005, 12:36 AM
கான்ராட் கெஸ்னர்
உலகத்தின் உயிரினங்கள் குறித்து ஏற்படும் சந்தேகங்களை அறிந்து கொள்ள வழிகாட்டியவர் குறித்து அறிவித்தமைக்கு மிக்க நன்றி அண்ணா.
உங்கள் மைல்கற்கள் - எப்போதும் படிமங்கள் ஆகாமல் மன்றத்தின் ஒளி விளக்காக விளங்க வாழ்த்துக்கள்.

பரஞ்சோதி
30-12-2005, 08:29 AM
மீண்டும் எனக்கு தெரியாத மைல்கல் நாயகரை அறிய வைத்த மன்ற நாயகருக்கு நன்றி.

aren
30-12-2005, 02:18 PM
கான்ராட் கெஸ்னர் பற்றி கேட்டிருக்கிறேன். ஆனால் அவர் என்ன செய்தார் என்று தெரியாது. எனக்கு புரியும்படி விளக்கிய இளசு அவர்களுக்கு நன்றி.

இப்படி தெரியாத ஐட்டமா எப்படி நீங்கள் தேடிப்பிடித்து இங்கே அளிக்கிறீர்கள் என்பது நிஜமாகவே எனக்கு விநோதமாக உள்ளது. உங்களிடம் ஒரு விஷயத்திலாவது போட்டி போட்டு நானும் பதில் சொல்லவேண்டும் என்று பார்க்கிறேன். அது இந்த் ஜன்மத்தில் முடியாது போலிருக்கிறது.

என் மகள் அடிக்கடி, டாவின்சி கோட் (Davinci Code) என்கிறாள். புரியமாட்டேன் என்கிறது நமக்கு. அது பற்றி ஏதாவது தெரியுமா?

aren
05-01-2006, 02:26 PM
அடுத்தது எங்கே இளசு அவர்களே.

திங்கள் முதல் காத்திருக்கிறேன். வேலை மிகுதியாக உள்ளதா? அப்படியென்றால் அதை முதலில் கவனிக்கவும்.

நன்றி வணக்கம்
ஆரென்

இளசு
05-01-2006, 09:52 PM
தம்பிகள் பாரதி, பரம்ஸ் ஆகியோரின் ஊக்குவிப்புக்கு நன்றி.

அன்பின் ஆரென், இதோ இன்று அடுத்த பாகம் பதிந்துவிட்டேன்.

(பெரியகாந்தம், தலை என்றெல்லாம் வருவதால், அது மணியா பற்றிய பதிவென்று நினைக்க வேண்டாம்.....)

இத்தொடருக்கு நீங்கள் அளிக்கும் ஆதரவுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்..

aren
05-01-2006, 10:33 PM
நன்றி இளசு அவர்களே.

gans5001
09-01-2006, 10:32 AM
உங்கள் பன்முகங்கள் வியக்க வைக்கின்றன...! வாழ்த்துக்கள் (வந்து விட்டேன் நண்பரே.. நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட இடைவேளைக்குப்பிறகு)
அன்புடன்
கன்ஸ்

இளசு
09-01-2006, 11:10 PM
வாருங்கள் வாருங்கள் அன்பு நண்பரே..

சென்ற ஆண்டில் என் வனவாசம்..
பிறகு உங்களை மன்றத்தில் காணாமல் மனச்சோகம்..

இன்று நல்ல நாள்.. நீங்கள் வந்த நாள்..

ஆத்ம தொடர்புள்ள சிநேகிதம் கண்டு அளவற்ற மகிழ்ச்சியில் நான்..

வருக கன்ஸ்.... வருக வருக நண்பா...

பென்ஸ்
10-01-2006, 04:29 AM
அருமையான பதிவுகள்... ஒரு முறைக்கு இரு முறை நான் படிக்கும்
ஒரு பதிவு இது... (மனப்பாடம் பன்னும் முயர்ச்சிதான்)...

இளசு... அருமையோ அருமை....

kavitha
10-01-2006, 07:50 AM
"அவரின் மரணத்தின்போது அவர் ஏற்கனவே வெளியிட்டவை ஒன்றல்ல..இரண்டல்ல..
72 அறிவு நூல்கள்.. மேலும் 18 நூல்களை பாதிக்கு மேல் எழுதியபடியே.......

என்ன ஒரு உத்வேகம், குறிக்கோள், ஒருமித்த சிந்தனை, ஓயா உழைப்பு இருந்தால் இத்தனையும் கைகூடி இருக்கும்?"
விலங்குகள், பிரபஞ்ச - வரலாறு, படிமங்களைப்பற்றிய நூல்களைத்தந்த கான்ராட் கெஸ்னரைப்பற்றித் தெரியத்தந்தமைக்கு நன்றிகள் அண்ணா. இவர்களின் சாதனைகள் நமக்கும் ஓர் ஊக்கமருந்து.


கெஸ்னர் மிகத்துல்லியமாக படங்கள், மரச்செதுக்கல் மாடல்கள் கொண்டு
வரும் சந்ததியினருக்கு அளித்த மாபெரும் கொடை இந்நூல்.
படிமம் கிடைத்த இடம், நுட்மான விவரிப்பு, அறிவார்ந்த தொகுப்பு, அடுத்த தலைமுறை அடையாளம் காண ஏதுவாய் படங்களுடன் இவர் வழங்கிய பாசிலிய நூல் பல கண்டுபடிப்புகளின் முன்னோடி.

எரிமலைக்குழம்பிலிருந்து கிடைக்கும் படிமங்களான கடப்பா, லைம் ஸ்டோன், மொசைக் கற்களைப்பற்றி எனது குழந்தையின் பாட நூலிலிருந்து அறிந்துகொண்டேன். இவரது நூல்களைப்படித்தால் இது குறித்து இன்னும் நிறைய அறிந்துக்கொள்ள ஏதுவாக இருக்கும். இயற்கை ஒரு புதிரான புதையல்! நன்றி அண்ணா.