PDA

View Full Version : நீளும் பொழுது



ilanthirayan
28-12-2005, 12:33 AM
கழுவித் துடைத்து
நாரி நிமிர்த்த
சுருட்டி இழுக்கும்
முதுகு வலி

ஈரம் துடைக்கும்
விரல்கள்
சிக்கிக் கொள்ளும்
கிழிசல்

'அம்மா வர்ரேன்'
கனத்துத் தொங்கும்
வார்த்தைகள்
வீட்டின் திசைகளுக்குள்
ஒட்டிக் கொள்ளும்

முன் படிகள்
கால்கள் தாண்ட
குளிர் காற்றின்
உரசலில்
விடைக்கும் மூக்கு
'ச்..சூ......ய் '

கந்து வட்டிக்
கடன்காரன்
கண்ணீர் தீர்த்த
பட்டினிப் பிள்ளை
ஊதல் காற்றில்
போதை தீர்க்கும்
புருஷன்

யார்
நினைத்திருப்பார்கள் ?

பிசிறிய ஒளியில்
வெளுத்திருந்த
பிறை
மரங்களின் தலையில்
ஒழுகிய
வெளிச்சக் கரைசல்
இருட்டைப் பறித்து
துப்பிய வழி

கொடிய விஷங்கள்
கருக்கும்
கணங்களுள்
எட்டி வைக்கும்
கால்களில்
நீளும் பொழுது

இளசு
28-12-2005, 12:45 AM
தீப்பெட்டி வேலைக்குப்போகும்
கந்தகத்தில் வெந்த பிஞ்சு..

பொறுக்கவில்லை நெஞ்சு..


உங்கள் கவிதைக் கட்டுமானம் நன்று இளந்திரையன்..

பாராட்டுகள்..

பென்ஸ்
22-02-2006, 03:58 PM
அருமையான கவிதை இளந்திரையன்...
இதற்கு முன்னும் வாசித்தேன்... ஆனால் பதில் எழுத முடியவில்லை...
தாமதமான பதிலுக்கு மன்னிகவும்....


கந்து வட்டிக்
கடன்காரன்
கண்ணீர் தீர்த்த
பட்டினிப் பிள்ளை
ஊதல் காற்றில்
போதை தீர்க்கும்
புருஷன்


முழு கவிதையின் வலிக்கும் இந்த வரிகளே காரணம் அல்லவா???

தன் முதுகில் பாரம் சுமந்து
தன் குழந்தையை
புத்தக பையை சுமக்க வைக்கவேண்டாம்...

குடியில் ஓடையில் உறங்கி விட்டு
மறுநாள் குடிப்பதற்க்காக
குழந்தையின் புத்தகத்தை அடகு வைக்க வேண்டாம் அல்லவா...

வளப்பதற்கு வக்கு இல்லை என்றால் பெற்று கொள்ளும் இவனையும்,
குடித்து வந்தாலும் உலை வைத்து சாப்பாடு போடும் அவளையும் -முதலில்
வெட்டி போட வேண்டும் என்ற கோபம் வரும்....

ஆனாலும், வேறும் கவிதைகளிலும், நண்பர்களிடம் மட்டுமே இதை
ஆவேசமாக கட்ட என்னால் முடிகிறது, இவர்களுக்கு உதவுவோம்
என்று யாராவது வரும் போது நானும் ஒரு சாதாரன
சுயனலவாதியாய்....

ஆனாலும், மனதில் உள்ள தீபொறி தீயாய் எரியும் நாள் தூரத்தில் இல்லை....

Shanmuhi
22-02-2006, 05:32 PM
கொடிய விஷங்கள்
கருக்கும்
கணங்களுள்
எட்டி வைக்கும்
கால்களில்
நீளும் பொழுது
Ţ ը.
š..

sarcharan
23-02-2006, 03:09 AM
நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மாந்தரை.....

ப்ரியன்
23-02-2006, 11:37 AM
இளந்திரையன் அருமையான கவிதை தந்தீர்...

குறைவான எழுத்துக்கள் ஆனாலும் ஆழமான வரிகள்

சிறந்த கட்டுமானம் :) வாழ்த்துகள்

பெஞ்சமின் சொன்னது போல் அந்த சோம்பேறி கணவன் அவனால் வந்துதானே இவை எல்லாம்...