PDA

View Full Version : பரராஜசிங்கத்திற்கு "மாமனிதர்" விருது



இளையவன்
24-12-2005, 10:05 PM
ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக்கொலை!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் துப்பாக்கியால் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.15 மணியளவில் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
http://www.eelampage.com/d/p/2005DEC/20051225002.jpg
மட்டக்களப்பு நகரின் மத்தியில் உள்ள பிரதான வீதியில் அமைந்துள்ள செயின்ட் மேரீஸ் கோ கதீட்ரல் தேவாலயத்தில் நத்தார் பண்டிகைப் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த போது 2 அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

ஜோசப் பரராஜசிங்கத்தின் துணைவியார் சுகுணம் பரராஜசிங்கமும் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து மிக ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தத் தாக்குதலில் மேலும் 8 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சனிக்கிழமை இரவு 10.30 மணிக்கு இந்த தேவாலயத்துக்கு ஜோசப் பரராஜசிங்கம் சென்றுள்ளார். மட்டக்களப்பு ஆயர் கிங்ஸ்லி சுவாமிப்பிள்ளை வழிபாடுகளை 11.30 மணிக்குத் தொடங்கியுள்ளார்.

1934 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் நாள் ஜோசப் பரராஜசிங்கம் பிறந்தார். இவருக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர்.

மட்டக்களப்பு அரச செயலகத்தில் வரைபட பணியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அதன் பின்னர் தினபதி என்ற தமிழ் நாளிதழின் பகுதிநேர ஊடகவியலாளராக பொதுவாழ்க்கையைத் தொடங்கினார். சுகுணம் ஜோசப் என்ற பெயரில் தொடர்ந்து ஆக்கங்களை அவர் எழுதி வந்தார்.


1990 ஆம் ஆண்டு சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினராக முதன் முதலில் இவர் தெரிவு செய்யப்பட்டார்.

1994 ஆம் ஆண்டு சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு - கிழக்கில் மிக அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளராக மீண்டும் ஜோசப் பரராஜசிங்கம் தெரிவு செய்யப்பட்டார்.

கடந்த 2000 ஆம் ஆண்டு தேர்தலின் போதும் அதிக வாக்குகள் பெற்று தெரிவானார் ஜோசப் பரராஜசிங்கம்.

2002 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது தேசியப் பட்டியலினூடாக அவர் நாடாளுமன்றத்துக்கு தெரிவானார்.

ஆங்கிலத்தில் நல்ல புலமை பெற்ற சில தமிழ் அரசியல்வாதிகளுள் ஜோசப் பரராஜசிங்கமும் ஒருவர்.

பொதுநலவாய நாடாளுமன்ற உறுப்பினர்களின் அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் சார்க் நாடுகளின் நாடாளுமன்றக் குழு உறுப்பினராகவும் பதவி வகித்தார் ஜோசப் பரராஜசிங்கம்.

நன்றி: புதினம்

இளையவன்
24-12-2005, 10:12 PM
அகிம்சை வழியில் தமிழர்களுக்காக குரல் கொடுத்துக்கொண்டிருந்த ஒரு மனிதன் பேரினவாதப் பசிக்குப்பலியாகிவிட்டான் என்றான் என நினைக்கும்போது தமிழர்களின் நெஞ்சங்கள் வேதனையால் தவிக்கின்றன. சிறிலங்கா இராணுவப்புலனாய்வுப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் உணர்வாளர் பரராஜசிங்கம் ஐயா அவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்

aren
25-12-2005, 04:29 AM
இவரை யார் கொலை செய்திருப்பார்கள். ராணுவம் தன்னுடைய நடவடிக்கைகளை திசை திருப்ப இவரை கொன்றார்களா?

அவருடைய குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இளையவன்
25-12-2005, 06:08 AM
இவரை யார் கொலை செய்திருப்பார்கள். ராணுவம் தன்னுடைய நடவடிக்கைகளை திசை திருப்ப இவரை கொன்றார்களா?

.

வழமைபோல இவரின் கொலையை விடுதலைப்புலிகளிடமிருந்து பிரிந்து சென்ற கருணா குழு செய்ததாகவே அரசாங்கம் கூறும். ஆனால் கருணாகுழு என்பது இராணுவத்துடன்தான் சேர்ந்தியங்குகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும் (யுத்த நிறுத்த கண்காணிப்புக்குழுவினர் உட்பட) அரசாங்கத்தின் கட்டளைக்கமையவே பரராஜசிங்கம் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது நடுநிலைப் பார்வையோடு இலங்கை நிலவரங்களை உற்று நோக்குகிற அனைவருக்குமே புரியும்.

இளையவன்
25-12-2005, 10:05 AM
ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை: தமிழீழ விடுதலைப் புலிகள் கண்டனம்
தமிழ்த் தேசப்பற்றாளரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்த் தேசப் பற்றாளரும் மனித உரிமை விழுமியங்களை மதித்து மனித உரிமை மேம்பாட்டுக்காக உழைத்தவருமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள் மட்டக்களப்பு நகரின் இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள சென் மேரிஸ் தேவாலயத்தில் 24 டிசம்பர் 2005 நள்ளிரவு அன்று நத்தார் பண்டிகை ஆராதனையில் ஈடுபட்டிருந்த வேளையில் சிறிலங்காப் படைப் புலனாய்வுத்துறையினரும் அவர்களது கருணா குழு, ஈ.பி.டி.பி உள்ளிட்ட ஒட்டுக்குழுவினராலும் கொடூரமாகச் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி அவரது மனைவி திருமதி சுகுணம் உட்பட ஆராதனையில் ஈடுபட்டிருந்த ஏழு பேர் காயமடைந்திருக்கின்றனர்.

வருகைக்கால ஆராதனையில் கலந்து தனது மக்களின் சமாதானத்திற்காகவும் விடுதலைக்காகவும் மன்றாட்டுச் செய்துவிட்டுப் பேராயரிடமிருந்து நற்கருணைப் பிரசாதம் பெற்றுத் திரும்புகையில் தேவாலயத்திற்குள் புகுந்திருந்த சிறிலங்காப் படைப் புலனாய்வாளர்களும் ஒட்டுக் குழுவினரும் இணைந்து இந்தத் தேசப்பற்றாளரைத் துப்பாக்கிச் சூட்டில் கொடூரமாகக் கொன்றுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

தமிழ் மக்களின் மனித உரிமைகளுக்காகச் சர்வதேச அரங்கிலும், இராஜதந்திர அரங்கிலும் குரல் எழுப்பி, மனித உரிமை அமைப்புக்களோடு தொடர்புகளைப் பேணி வடக்கு - கிழக்கு மனித உரிமைச் செலகத்தின் உருவாக்கத்திற்காகவும் அதன் வளர்ச்சிக்காகவும் அரும்பாடுபட்ட இந்த மனித உரிமைச் செயற்பாட்டாளரை சிறிலங்கா படைப் புலனாய்வுத்துறையினர் மண்ணில் வீழ்த்தியுள்ளனர்.

ஜாதிக ஹெல உறுமய போன்ற தெற்கின் இனவாத சக்திகளின் கரம் சிறிலங்காப் படைப் புலனாய்வுத்துறை வரை நீண்டு செயற்படுவதை திட்டமிட்ட இக்கொலை நிரூபித்து நிற்கின்றது. மக்கள் தொண்டனாக தமிழ்த் தேச விடுதலைக்காகவும் மனித உரிமை மேம்பாட்டிற்காகவும் அயராது உழைத்த இவரை இந்த இனவாத சக்திகள் மரணிக்கச் செய்திருக்கின்றன.

இந்த ஈவிரக்கமற்ற கொடூரக் கொலையினை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

அன்னாருடைய மறைவினால் துயருறும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கின்றோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: புதினம்

இளையவன்
25-12-2005, 11:54 AM
ஜோசப் பரராஜசிங்கத்திற்கு "மாமனிதர்" விருது வழங்கி கெளரவம்

மட்டக்களப்பு தேவாலயத்தில் இன்று அதிகாலை படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்துக்கு தமிழீழ தேசியத்தின் அதி உயர் விருதான "மாமனிதர்" விருதை தமிழீழ விடுதலைப் புலிகள் வழங்கி கௌரவித்துள்ளனர்.


விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் கையொப்பமிட்டு வெளியிட்டுள்ள அறிக்கை:

சுயநலவாழ்வைத் துறந்து, பொதுநல சேவையை இலட்சியமாக வரித்து, அந்த உயர்ந்த இலட்சியத்திற்காக உறுதியோடு உழைத்த ஒரு உத்தம மனிதரை இன்று தமிழீழ தேசம் இழந்துவிட்டது. தமிழீழ மண்ணினதும் தமிழீழ மக்களினதும் விடிவிற்காக ஓயாது ஒலித்த ஒரு உரிமைக்குரல் இன்று ஒடுங்கிவிட்டது. பகைவனின் கோழைத்தனமான கோரமான தாக்குதலுக்கு ஒரு மகத்தான மனிதர் பலியாகிவிட்டார். இது தமிழீழ விடுதலை வரலாற்றில் நிகழ்ந்த மாபெரும் துயர நிகழ்வு.

திரு. ஜோசப் பரராசசிங்கம் அவர்கள் ஒரு அபூர்வமான மனிதர், அசாத்தியமான குணவியல்புகள் கொண்டவர். இனிமையான பேச்சும், எளிமையான பண்பும், பெருந்தன்மையான போக்குமே அவரது ஆளுமையின் சிறப்பியல்புகள். நெஞ்சில் உறுதியும் நேர்மையும் கொண்ட ஒரு உன்னதமான அரசியல்வாதி. தமிழீழ மக்களால் பெரிதும் போற்றப்பட்ட சிறந்த மனித உரிமைப் போராளி. அனைவரையும் கவர்ந்த ஒரு தமிழினப் பற்றாளர். இவரது சாவு தமிழர் தேசத்திற்கு என்றுமே ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு.

சிங்கள பௌத்த பேரினவாதத்தின் அடக்குமுறைக்குள் வாழ அவர் என்றும் விரும்பியதில்லை. இந்த அடக்குமுறைக்குள் தமிழீழ மக்களது வாழ்வு சிக்குண்டு சிதைந்து போவதை அவர் அறவே வெறுத்தார். இந்த அடக்குமுறையில் இருந்து தமிழீழ மக்கள் முற்றாக விடுபட்டு, விடுதலை பெற்று சுதந்திரமாக கௌரவமாக நிம்மதியாக வாழ்வதையே தனது வாழ்வின் இலட்சியமாக அவர் வரிந்து கொண்டார். இந்த இலட்சியத்தால் உந்தப் பெற்று தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு என்றும் உறுதுணையாக நின்றார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் அதன் இலட்சியத்தையும் முழுமையாக முழுமனதுடன் ஏற்று தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்கு பெரும் பங்களிப்புச் செய்தார். பல்வேறு சிக்கலான சூழ்நிலைகளில் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கும் ஆபத்துகளுக்கும் மத்தியில் மிகுந்த துணிவுடன் தமிழ்த் தேசியத்திற்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் பல்வேறு வழிகளில் கைகொடுத்து உதவினார். மட்டக்களப்பு மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினராகவும், வடக்கு கிழக்கு மனித உரிமைகள் செயலகத்தின் நிறுவுனர்களில் ஒருவராகவும் தமிழீழ மக்களது உரிமைக்காக இடையறாது தொடர்ந்து உழைத்தார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நியாயங்களையும் உண்மைகளையும் உலகுக்குப் பரப்புரை செய்தார். அன்னார் ஆற்றிய அரும்பணிகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை என்றுமே பாராட்டுக்குரியவை.

திரு. ஜோசப் பரராசசிங்கம் அவர்களின் இனப்பற்றிற்கும் விடுதலைப் பற்றிற்கும் மதிப்பளித்து, அவரது விடுதலைப் பணியை கௌரவிக்கும் முகமாக "மாமனிதர்" என்ற அதியுயர் தேசிய விருதை அவருக்கு வழங்குவதில் நான் பெருமையடைகின்றேன். சத்திய இலட்சியத்திற்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களைச் சாவு என்றும் அழித்துவிடுவதில்லை. சரித்திர நாயகனாக எமது தேசத்தின் ஆன்மாவில் அவர் என்றும் வாழ்வார்.

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"

இப்படிக்கு
வே. பிரபாகரன்
தலைவர்
தமிழீழ விடுதலைப் புலிகள்
தமிழீழம்.

பென்ஸ்
25-12-2005, 03:50 PM
பரராஜசிங்கத்திற்கு எனது அஞ்சலி...
அவரது ஆத்மா சாந்த்தியடைய எனது பிராத்தனைகளும்...

aren
25-12-2005, 11:42 PM
இந்த அறிக்கையின் மூலம் புலிகள் இந்த கொடூரத்தைச் செய்யவில்லை என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள்.

அப்படியானால் இது யாருடைய வேலை?

இளையவன்
26-12-2005, 01:52 AM
மகிந்த, சிறிலங்கா புலனாய்வுத்துறைதான் பொறுப்பு: சர்வதேச தமிழர் கூட்டமைப்பு கண்டனம்

ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைக்கு சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, சிறிலங்கா இராணுவ புலனாய்வுத்துறைதான் பொறுப்பு என்று சர்வதேச நாடுகளில் செயற்படும் 150 தமிழர் அமைப்புகளின் கூட்டமைப்பான சர்வதேச தமிழர் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.


அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:

மனித உரிமைகளின் பெயரால், ஜனநாயகம், மதம் மற்றும் இன நல்லிணக்கம், நீதி நேர்மை ஆகியவற்றின் பெயரால் எதுவித தாமதமுமின்றி சர்வதேச சமூகமானது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரும் மனித உரிமைச் செயற்பாட்டாளருமான ஜோசப் பரராஜசிங்கம் படுகொலைக்கு கண்டனம் தெரிவிக்க முன்வர வேண்டும்.

நத்தார் பண்டிகை ஆராதனை நிகழ்வில் பங்கேற்றிருந்தபோது நள்ளிரவில் அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். சிறிலங்கா புலனாய்வுத்துறையினரும் அவர்களுடன் வடக்கு - கிழக்கில் சேர்ந்தியங்கும் குழுவினரும் மேற்கொண்டிருக்கும் இந்தப் படுபாதகக் குற்றச்செயலுக்கு சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சதான் பொறுப்பேற்க வேண்டும்.

இலங்கை இனப்பிரச்சனைக்கு அமைதி வழியில் தீர்வு காண வேண்டும் என்று வாதாடி வந்த உண்மையான ஜனநாயகவாதி ஜோசப் பரராஜசிங்கம். வடக்கு - கிழக்கு மனித உரிமைச் செயலகமான நிசோரின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவர் அவர். யுத்த நிறுத்தம் ஒப்பந்தம் உருவாவதற்கு முன்பே சிறிலங்கா அரசும் விடுதலைப் புலிகளும் பேச்சுகள் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியவர். அமைதிப் பேச்சுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரிக்க வேண்டும் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியில் வாதாடியவர்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது அவரது உயிருக்கு பலமுறை அச்சுறுத்தலை இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் குழுக்களும் புலனாய்வுத்துறையினரும் விடுத்திருந்தனர். அந்த அச்சுறுத்தல்களிலிருந்து தப்பிய அவர் நத்தார் ஆராதனை நிகழ்விலே சுட்டுக்கொல்லப்பட்டுவிட்டார்.

இலங்கையில் அனைத்துமே அமைதியிழந்துவிட்டது அனைத்துமே வெளிச்சத்தில் இல்லை இப்போது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: புதினம்

இளையவன்
26-12-2005, 09:11 AM
தமிழினத்தின் இலட்சியத்திற்கு பெரும் அச்சுறுத்தல்: படுகொலைக்கு கூட்டமைப்பு பலத்த கண்டனம்

தமிழினத்தின் இலட்சியத்திற்கு விடுக்கப்பட்ட மிகப் பெரும் அச்சுறுத்தலே ஜோசப் பரராஜசிங்கம் எம்.பி.யின் படுகொலையென தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெளியுறவுக் குழுவின் தலைவரான பராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பாக கூட்டமைப்பினர் மூத்த உறுப்பினரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவைசேனாதிராஜா தெரிவிக்கையில் கூறியதாவது;

தாயகக் கோட்பாடு தமிழ்தேசியம் தொடர்பான நிலைப்பாட்டில் இறுதிவரை உறுதியாக செயற்பட்டவர் ஜோசப் பரராஜசிங்கம்.

தாயகக் கோட்பாடு தமிழ் தேசியம் என்பவற்றை சீரழிப்பதற்கான இனவாதச் சக்திகளின் சதிவலைக்குள் நுழைந்துள்ளவர்களாலேயே இந்தப் படுகொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சமாதான சூழ்நிலையில் தமிழினத்தின் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் மிகப் பெரும் அச்சுறுத்தலே இந்தப் படுகொலைச் சம்பவமாகும்.

எமது இலட்சியத்திற்கு விடுக்கப்பட்ட இந்த அச்சுறுத்தலை எதிர் கொண்டு தமிழினம் எதிர்காலத்தில் ஒன்றுபட்டு செயற்படுவதன் மூலமே ஜோசப்பரராஜசிங்கத்தின் கனவை நனவாக்க முடியும் என்றும் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

செல்வம் அடைக்கலநாதன்

தமிழினத்தின் விடுதலைக்கு ஜனநாயக ரீதியில் பெரும் பலத்துடன் செயற்பட்ட அற்புதமான மனிதர் ஜோசப் பரராஜசிங்கம் என்று தமிழீழ விடுதலை இயக்க (ரெலோ) த்தின் தலைவரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழினத்தின் தாயகக் கோட்பாடு இலட்சியம் என்பவற்றை சீரழிக்க முற்படும் இனவாத சதிகாரர்களின் சதிவலைக்குள் அகப்பட்டுப் போயுள்ள கோழைத்தனமானவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்தப் படுகொலைச் சம்பவத்தை தமிழினம் ஒரு போதும் மன்னிக்கப் போவதில்லை.

அரசபயங்கரவாதத்தால் கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான அனைத்துப்படுகொலைச் சம்பவங்களையும் அன்றைய நெருக்கடியான காலகட்டத்திலும் துணிச்சலுடன் வெளிக்கொணர்ந்த மதிப்புக்குரியவர் ஜோசப் பரராஜசிங்கம்.

இழப்புகளுக்கு மத்தியிலும் துணிச்சலுடன் வீறு கொண்டெழும் தமிழினத்தை துப்பாக்கி முனைகளால் ஒரு போதும் அடக்க முடியாது என்றும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

சுரேஷ் பிரேமச்சந்திரன்

கிழக்கு வாழ் தமிழ் மக்களின் அவலங்களையும் துயரங்களையும் நெருக்கடியான காலகட்டத்தில் துணிச்சலுடன் வெளிக்கொணர்ந்தவர் ஜோசப் பரராஜசிங்கம் என்று ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர். எல்.எவ்.) யின் செயலாளர் நாயகமும் யாழ். மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கிழக்கிலுள்ள புத்திஜீவிகளை அழித்துதொழித்து அங்குள்ள தமிழ்மக்களை அரசியல் ரீதியாக தனிமைப் படுத்தப்படும் நடவடிக்கையின் ஒரு வெளிப்பாடே ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவமாகும்.

அதி உச்ச பாதுகாப்பு நிறைந்த மட்டக்களப்பு நகரிலுள்ள தேவாலயமொன்றில் வைத்து இடம் பெற்ற இந்தப் படுகொலைச் சம்பவத்திற்கு அரசாங்கமே பதில் சொல்ல வேண்டுமென்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஈழவேந்தன்

மூத்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கத்தின் சடுதியான மறைவு தமிழினத்திற்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பாகும். குறிப்பாக தென் தமிழ் ஈழமாகிய மட்டக்களப்பு மண்ணைக் காப்பாற்ற நாம் பெரும் முயற்சி எடுத்துவருகின்ற இவ்வேளையில் அம்மண்ணின் மைந்தர் மட்டக்களப்பு தூய மரியாள் தேவாலயத்தில் பாதுகாப்போடு வந்த நிலையிற்கூட ஈவிரக்கமற்ற முறையில் தேவாலயத்தினுள்ளேயே துப்பாக்கி முனைக்கு பலியானது எமக்குத் தாங்கமுடியாத துயரினைத் தருகிறது. மென்மைப் போக்கோடு அவர் காட்சியளித்த நிலையிலும் மென்மையான சொற்களை அவர் கையாண்ட போதும் கொள்கையில் மிக்க உறுதி படைத்தவர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மா.கா. ஈழவேந்தன் தெரிவித்தார்.

ஜோசப் பரராஜசிங்கம் அவர்களை நாம் நீண்ட காலமாக அறிவோம். மட்டக்களப்பு மண்ணோடு ஒட்டி உறவு கொண்ட காலம் தொட்டு அவரும் அவர் குடும்பமும் எமக்கு மிக நெருங்கியவர்களாகின்றனர். அவர் பூக்கும் புன்முறுகல் அனைவரையும் ஆட்கொள்ளும் தன்மை உடையது.

கிழக்கு மாகாணத்தை வட மாகாணத்தில் இருந்து பிரிக்கும் சதி முயற்சியை முறியடித்து நாம் ஒன்றுபட்டு வாழ்ந்தால் தான் எமக்கு வாழ்வு உண்டு என்பது அவரின் உறுதியான கோட்பாடு.

முதிர்ச்சி பெற்றுள்ள மூத்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினரான இவரை நாம் இழந்துள்ளோம். கிழக்கு மாகாணத்தில் இவர் மறைவினால் ஏற்பட்ட வெற்றிடத்தை எளிதில் நிரப்புவது கடினம்.

மட்டக்களப்பு மரியாள் தேவாலயத்தில் இரக்கமே உருவான இயேசுவை வழிபட்ட நிலையில் நத்தார் திருநாளில் தேவாலயத்தினுள்ளேயே அவர் சாகடிக்கப்பட்டது மன்னிக்கமுடியாத கொடூரமான வடிவம் கொண்டுள்ள கருணா குழுவுமே சேர்ந்து செய்துள்ளது என்பது எமது ஊகம். நடைபெற்ற நிகழ்ச்சிகள் அனைத்தையும் உற்றுப்பார்க்கின்றபோது எமது ஊகம் தவறவில்லை என்பது எமது நம்பிக்கை.

பாதுகாப்போடு வந்த இவரையே பரமன் கோயிலில் பலியெடுத்த இப்பாவிகளை நாம் மன்னித்தாலும் இரக்கத்தின் உருவான இயேசு கூட மன்னிப்பாரா என்பது கேள்வி.

எனினும், எதையும் தாங்கும் இதயத்தோடு எம் இலட்சியத்தை அடையும் வரை எம்பணியைத் தொடர்வதே அவருக்கு நாம் செய்யும் கைமாறாகும். உள்ள உயிர் ஒன்றுதான். அது என்றோ ஒருநாள் போகப்போவது உறுதிதான். அது தமிழ் மண்ணிற்காகப் போகட்டும் என்று உறுதி பூணுவோமாக.

அறிஞர்
27-12-2005, 01:26 PM
அன்னாரின் இறப்பு சோகமான செய்தி.... அன்னாரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

விருது சந்தோசமான செய்தி.. வழங்கிய தமிழ் நெஞ்சங்களுக்கு நன்றி.

இளையவன்
27-12-2005, 08:03 PM
மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்திற்கு தேசியத் தலைவர் அஞ்சலி
http://www.eelampage.com/d/p/2005DEC/20051228001.jpg
http://www.eelampage.com/d/p/2005DEC/20051228002.jpg

சுபன்
28-01-2006, 07:09 PM
இதை செய்தது யார் என்பது சொல்லி தெரிய வேண்டிய விடயமல்ல