PDA

View Full Version : என்னவன்!



நிலா
21-04-2003, 10:28 PM
அவனை
மலரென்று சொன்னால்
வண்டும் உறவாடும்!
வானென்று சொன்னால்
மேகம் மோகம் கொள்ளும்!
நிலவென்று சொன்னால்
சூரியன் துணையிருக்கும்!
வெயிலென்று சொன்னால்
நிழலும் நின்றிருக்கும்!
மழையென்று சொன்னால்
மண்ணும் மகிழ்ந்திருக்கும்!
காற்றென்று சொன்னால்
கடப்போரைக் கவர்ந்திழுக்கும்!
யாவரும் உரிமையோடு உறவுகொள்ள
அவன் என்ன பொதுச்சொத்தா?

அவன் என்னவன்......
ஒப்பீட்டில் அடங்காதவன்!

lingam
21-04-2003, 10:30 PM
காதல் போதையிலே உன்னவனை பற்றி ரொம்ப்பத்தான் புகழ்கிறீர்கள் :-)

நிலா
21-04-2003, 10:36 PM
அதுக்கு நீங்க ஏங்க புகைவிடுறீங்க?

gans5001
22-04-2003, 02:26 AM
பாத்துப்பா.. கைகலப்பில் முடிந்து விடப்போகிறது (நாரதர் போஸ்ட் பண்ணாததால் நான்)

gankrish
22-04-2003, 06:34 AM
நிலா உம்மவரை பொத்தி வைத்துக் கொள்ளவும் இல்லையென்றால் இங்கே......

poo
22-04-2003, 04:06 PM
வண்டாய்..
மேகமாய்.. சூரியனாய்...
எல்லாமுமாய் நீ இருந்துவிட்டால்
உன்னவன் உள்ளம் மகிழுமல்லவா?!!..

-பாராட்டுக்கள் நிலா!!!

இளசு
22-04-2003, 04:08 PM
நிலவின் புகழுரையும்
பூவின் பொறுப்புரையும்
அருமை அருமை....
அண்ணனுக்குப் பெருமை!

நிலா
23-04-2003, 12:41 AM
பாராட்டி என்னை மகிழ்வித்தமைக்கு நன்றிகள் பல!