PDA

View Full Version : இந்தியா - பாகிஸ்தான் தொடர்



aren
24-12-2005, 04:40 AM
இன்று தேர்வுக்குழுவினர் கலந்தாலோசித்து இந்தியக் குழுவைத் தேர்வு செய்யப்போகிறார்கள்.

யார் யார் இருப்பார்கள் என்று ஒரு யூகம் செய்யலாமா?

எனக்குத் தெரிந்து 16 ஆட்டக்காரகள் இதோ:

1. திராவிட்
2. ஷேவாக்
3. டெண்டுல்கர்
4. லஷ்மன்
5. பதான்
6. கும்ளே
7. ஹர்பஜன்
8. யுவராஜ் சிங்
9. தோனி
10 கைஃப்
11. வாசீம் ஜாஃபர்
12. காம்பீர்
13. அகர்கர்
14. ஆர்.பி. சிங்
15. ஜாஹீர் கான்
16. கங்குலி

முரளி கார்த்திக்கிற்கு சந்தர்பம் கிடைப்பது சந்தேகமே. காரணம் கும்ளேயும், ஹர்பஜனும் நன்றாக பந்து வீசுவதால் அவர்கள் இருவருக்குமே சான்ஸ் கிடைக்கும்.

இந்தியாவிற்கு வேகப்பந்துவீசை ஆடுவதற்கு கொஞ்சம் கஷ்டப்படுமாகையால் அவர்கள் பிட்ச் தயரிக்கும்பொழுது அது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும்படி செய்வார்கள். ஆகையால் நாம் அதிகமாக வேகப்பந்து வீச்சாளர்களை நம்புவதே நல்லது. ஆகையால் பதான், அகர்கர், ஆர்.பி. சிங் மற்றும் ஜாஹீர் கான் ஆகியோர் அணியில் இடம் பெறுவார்கள்.

கங்குலிக்கு எப்படி 11-ல் இடம் கொடுப்பார்கள் என்று தெரியவில்லை. கைஃப்பிற்கு பதில் திராவிட் முதல் டெஸ்டில் இடம் பெறுவார். அதனால் காம்பீருக்கும் பதில் கங்குலி இடம் பெற்றாலும் பெறலாம். அப்படியானால் யார் தொடக்க ஆட்டக்காரராக இடம் பெறுவார். கங்குலி களத்தில் இறங்கினாலும் இறங்குவார். இல்லையென்றால் பதான் அல்லது திராவிட் அல்லது தோனி தொடக்க ஆட்டக்காரராக இறங்கலாம்

இது கங்குலிக்கு ஒரு முக்கியமான தொடராக இருக்கும். இதுவேகூட கடைசி தொடராகவும் இருக்கலாம்.

நம் தேர்வுக்குழுவினர் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கலாம்.

நன்றி வணக்கம்
ஆரென்

அறிஞர்
24-12-2005, 05:32 AM
நல்ல விவாதம் ஆரென்...

கங்குலிக்கு இடம் உண்டா என்பது சந்தேகம்.. கிரிக் இன்போவில் உள்ள தகவல் படி.. இடம் இல்லை என்று கூறியுள்ளனர்.

ஆனால் அவரை தேர்வு செய்ய வாய்ப்புள்ளது. கைப் டெஸ்ட் டீமில் இருக்க மாட்டார்....

இன்சமாம் வேகப்பந்துக்கு சாதகமாக பிட்ச்சை தயாரிக்க சொல்லியிருக்கிறார்.

முதலையை தண்ணீரில் சந்திப்பது போல் உள்ளது இப்போட்டி... தொடரை சமன் செய்தாலே போதுமானது.. என்ன செய்ய போகிறார்கள் என்று பார்ப்போம்...

aren
24-12-2005, 05:38 AM
முதலையை தண்ணீரில் சந்திப்பது போல் உள்ளது இப்போட்டி... தொடரை சமன் செய்தாலே போதுமானது.. என்ன செய்ய போகிறார்கள் என்று பார்ப்போம்...

நிச்சயமாக இந்த தொடர் சாப்பலின் கோச்சிங்கிற்கு ஒரு சவாலாகவே இருக்கும். இந்தியாவில் இந்தியர்களை வெல்வத் அவ்வளவு சாத்தியமில்லை. ஆகையால் இந்தியாவில் பெற்ற வெற்றிக்கு சாப்பல் மட்டுமே காரணமில்லை. இதற்கு யார் கோச்சாக இருந்தாலும் நிச்சயம் இந்தியா சிறப்பாக செய்திருக்கும். ஆகையால் சாப்பலின் கோச்சிங் திறமையை காண்பிக்க பாகிஸ்தான் ஒரு சிறந்த தளம். அங்கே நம் மக்கள் சிறப்பாக ஆடவேண்டும்.

ஆகையால் இந்தத் தொடர் நிச்சயம் சவாலாகவே அமையும் நம் இந்திய வீரர்களுக்கு. டெண்டுல்கர் இந்த தொடரில் அடிப்பாரா என்று தெரியவில்லை.

சோஹிப் அக்தரும், ரானாவும், அப்துல் ரசாக்கும், முகமது சாமியும் சிறப்பாக பந்து வீசக்கூடியவர்கள். அதுவும் அவர்களுது ஆடும் களத்தில். நிச்சயம் நம் மக்களுக்கு இது ஒரு சவாலாகவே அமையும்.

என்ன செய்யப்போகிறார்கள் என்று பொருத்திருந்து பார்க்கலாம்.

aren
24-12-2005, 05:40 AM
பாகிஸ்தானின் முக்கிய பலம், அவர்களுடைய கோச் பாப் ஊல்மர். அவருக்கு நம் மக்களின் பலவினம் நன்றாகத் தெரியும்.

அவர் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர்களை நம் இந்திய வீரர்களின் இடுப்பை குறிபார்த்து பந்தை வீசச்சொல்வார். நம் மக்கள் அதை எதிர்த்து விளையாடவேண்டும். உயரம் அதிகமாக இருக்கும் லஷ்மன் மட்டுமே அந்த பந்துகளை எதிர்த்து ஆடும் திறமை படைத்தவர். டெண்டுல்கரும், திராவிடும் அந்த பந்தை ஆடும் திறமை படைத்தவர்கள்.

உதயா
24-12-2005, 05:45 AM
தாங்கள் இருவருமே.. கேள்வியும் கேட்டு பதிலும் தந்து விட்டீர்கள். நான் இப்போது ஆமாம் சாமி.

கங்கூலிக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் இல்லையா? காம்பீரை எடுத்து விட்டு கங்கூலியை சேர்க்கலாம், டெண்டுல்கரும் கங்கூலியும் துவக்க ஆட்டக்கர்களாக இறங்கலாம்.

aren
24-12-2005, 06:57 AM
கங்குலிக்கும் இடம் கொடுத்துவிட்டார்கள். எதிர்பார்த்தபடியே ஜாஹீர் கானுக்கும் இடம் கிடைத்துள்ளது. இரண்டாவது விக்கெட் கீப்பராக பார்த்தீவ் படேலுக்கும் இடம் கிடைத்துள்ளது.

முகமது கைஃப்பிற்கும் முரளி கார்த்திக்கிற்கும் இடமில்லை.

உதயா
24-12-2005, 07:29 AM
நல்ல செய்தி

அறிஞர்
24-12-2005, 03:59 PM
கங்குலியின் திறமையை நிரூபிக்க நல்ல வாய்ப்பு என்ன செய்கிறார் எனப்பார்ப்போம்.. பார்த்தீவ் படேலுக்கும் வாய்ப்பு.......

தினேஷ் கார்த்திக் பாவம்.....

பரஞ்சோதி
24-12-2005, 05:26 PM
கிரிக்கெட் புலி என்பதை ஆரென் அண்ணா நிறுபித்து விட்டார். பாராட்டுகள்.

மிகச்சரியான கணிப்பு.

பார்த்திவ் பட்டேல் ஏன் என்று புரியவில்லை, ஒரு வேளை வெத்தான போட்டிகளுக்கு பட்டேல் கீப்பீங் செய்யலாம்.

உதயா
24-12-2005, 05:43 PM
டோனி இப்ப நல்ல கீப்பிங். பார்த்தீவ் பதிலாக கைஃபை சேர்த்திருக்கலாம்.

aren
26-12-2005, 12:23 AM
இந்திய வீரர்களுக்கு 2006 வருடத்து காண்டிராக்ட் கொடுத்திருக்கிறார்கள். அதில் கங்குலியையும் சேர்த்திருக்கிறார்கள். இது எதற்கு என்று தெரியவில்லை. இவர் பாகிஸ்தான் தொடருக்குப்பின் குழுவில் இருப்பாரா என்பது சந்தேகமே. அப்படியானால் எதற்காக அவருக்குக் கொடுத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஏற்கெனவே அவரை அகமதாபாத் டெஸ்டில் நீக்கியது பெரிய சர்சையை கிளப்பியது காரணமாக இருக்கலாமோ?

"ஏ" கிரேடில் இருப்பவர்கள்:

ராகுல், சச்சின், கங்குலி, ஷேவாக், கும்ளே, ஹர்பஜன், லஷ்மன் மற்றும் பதான்.

"பி" கிரேடில் இருப்பவர்கள்

தோனி, யுவராஜ், கைஃப் மற்றும் அகர்கர்

"சி" கிரேடில் இருப்பவர்கள்

காம்பீர், ஜாஹீர்கான் மற்றும் முரளி கார்த்திக்.

இதில் ஜாஹீர்கான் பி கிரேடிலிருந்து கீழிறக்கப்பட்டிருக்கிறார். பதான் பி கிரேடிலிருந்து ஏ கிரேடிற்கு சென்றிருக்கிரார். ஆனால் தோனி நேரடியாக பி கிரேடிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

நிறைய முரண்பாடு இருப்பது போல் தெரிகிறது அல்லவா?

பதான் சிறப்பாக ஆடியதால் அவருக்கு உயர்வு கொடுத்துள்ளது வரவேற்கத்தக்கது. ஆனால் பாவம் ஜாஹீர்கானை கீழிறக்கியது கொஞ்சம் அதிகம் என்றுதான் தோன்றுகிறது. அதற்குக்காரணம் அவர் இனிமேல் ஒரு நாள் தொடரில் ஆடமாட்டார் என்று தெரிவதால், டெஸ்ட் தொடருக்கு மட்டும் ஆடுவதால் அவருடைய தொகையை குறைத்திருக்கலாம். அப்படியானால் இது லஷ்மனுக்கும் கும்ளேக்கும் கங்குலிக்கும் பொருந்துமே? அதை ஏன் கடைபிடிக்கவில்லை.

தோனிக்கு கிரேட் சி கொடுத்துவிட்டு அடுத்த ஆண்டு கிரேட் பி கொடுத்திருக்கலாம் என்பது என்னுடைய கருத்து.

அதே போல் அகர்கருக்கும் கிரேட் ஏ கொடுத்திருக்கலாம் அவருடைய அனுபவத்தை கணக்கில்கொண்டு.

பயங்கரமாக அரசியல் இதிலு விளையாடுகிறதோ என்னவோ? யார் கண்டது.

mania
26-12-2005, 02:46 AM
கிரிக்கெட் புலி என்பதை ஆரென் அண்ணா நிறுபித்து விட்டார். பாராட்டுகள்.

மிகச்சரியான கணிப்பு.

பார்த்திவ் பட்டேல் ஏன் என்று புரியவில்லை, ஒரு வேளை வெத்தான போட்டிகளுக்கு பட்டேல் கீப்பீங் செய்யலாம்.

இதை நான் இரண்டு நாள் முன்னயே சொன்னேன். :D அதை நான் கிண்டல் செய்கிறேனோ என்று ஆரென் சந்தேகப்பட்டார்.:rolleyes: இப்போ பாருங்க என்ன நடந்தது என்று.....!!!!!:rolleyes: :D :D
பாராட்டுகள் ஆரென்.....!!!!!:D
அன்புடன்
மணியா....:D

அறிஞர்
27-12-2005, 01:28 PM
கலக்கல் ஆரென்.

மன்றத்தின் சிறப்பு நிருபர்.. ஆரென் வாழ்க....

அறிஞர்
27-12-2005, 01:29 PM
இதை நான் இரண்டு நாள் முன்னயே சொன்னேன். :D அதை நான் கிண்டல் செய்கிறேனோ என்று ஆரென் சந்தேகப்பட்டார்.:rolleyes: இப்போ பாருங்க என்ன நடந்தது என்று.....!!!!!:rolleyes: :D :D
பாராட்டுகள் ஆரென்.....!!!!!:D
அன்புடன்
மணியா....:D நீங்க சொன்னா மட்டும் எல்லாருக்கும் சந்தேகம் வருதோ.... :cool: :cool: :cool:

இளையவன்
07-01-2006, 11:15 AM
பாகிஸ்தான் ஏ அணிக்கு எதிரான பயிற்சி போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணியினர் 4 விக்கட் இழப்புக்கு 298 ஓட்டங்களை எடுத்துள்ளனர். ஆட்டமிழந்த நால்வருமே அரைச்சதம் அடித்தது குறிப்பிடத்தக்க அம்சமாகும். சச்சின் 74, ராவிட் 63, ஜபார் 58 மற்றும் கம்பீர் 53.

aren
07-01-2006, 01:19 PM
இந்த மாட்சில் அடித்து பிரயோஜனமில்லை. டெஸ்ட் தொடரில் அடிக்கட்டும். ஷோவைப், ரானா, சாமி, கனேரியா ஆகியார் பலி போட காத்துக்கொண்டிருக்கிறார்கள். அங்கே போய் தங்களுடைய திறமையை காட்டட்டும்.

aren
07-01-2006, 01:22 PM
டெஸ்ட் தொடரில் இந்தியா யாரை தொடக்க ஆட்டக்காரர்களாக களத்தில் இறக்கும்.

நிச்சயம் ஷேவாக் உறுதி. இன்னொருவர் யாராக இருக்கும். காம்பீருக்கு மறுபடியும் வாய்ப்பு கிடைக்குமா? வாசீம் ஜாஃபருக்கு சான்ஸ் கிடைக்குமா, அதுவும் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களை சந்திக்கமுடியுமா?

அப்படியானால் யார் ஷேவாக்குடன் களத்தில் இறங்குவார்கள்.

இந்தியா முதலில் பேட் செய்யும் போலிருந்தால், ரிஸ்க் எடுக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். ஆகையால் பதானை இறக்கினாலும் இறக்கலாம். அல்லது கங்குலிக்கு வேறு எங்கேயும் இடமில்லாதலால் அவரை இறக்குவார்களா?

சிண்டைமுடிச்சுக்க வைக்கும் கேள்வி? முதல் நாளன்று நிச்சயம் தெரிந்துவிடும்.

பரஞ்சோதி
08-01-2006, 03:29 AM
இந்த மாட்சில் அடித்து பிரயோஜனமில்லை. டெஸ்ட் தொடரில் அடிக்கட்டும். ஷோவைப், ரானா, சாமி, கனேரியா ஆகியார் பலி போட காத்துக்கொண்டிருக்கிறார்கள். அங்கே போய் தங்களுடைய திறமையை காட்டட்டும்.

அண்ணா, என்ன பூச்சாண்டி காட்டுறீங்க.

இவர்கள் எல்லாம் நமக்கு ஜீஜீப்பி. இவர்களின் அப்பன்களையே நாம் தூக்கி சாப்பிட்டோம். வென்று காட்டுவோம், கவலை வேண்டாம்.

அப்புறம் ஒரு செய்தி, முதன் முறையாக எங்க கம்பெனியில் இண்டர் டிபார்ட்மெண்ட் கிரிக்கெட் போட்டி நடக்குது, மொத்தம் 32 அணிகள், இரவில் நடக்குது, 12 ஓவர் போட்டிகள். என்னுடைய அணியை முன்னணி அணியாக நினைக்கிறாங்க, பார்க்கலாம், என்ன நடக்குதுன்னு.

பென்ஸ்
08-01-2006, 03:36 AM
வாழ்த்துகள் பரம்ஸ்....
ஜெயிக்கபோறது நீங்கதான் என்று தெரிந்தும் ஏன் இந்த சிறு சந்தேகம்??? தைரியமா போங்கயா....

aren
08-01-2006, 04:16 AM
பரம்ஸ், உங்கள் அணி வெல்ல என்னுடைய வாழ்த்துக்கள். ஸ்கோர் யார் குறிக்கப்போகிறார்கள் என்று கவனிக்கவும். மக்கள் இதில் விளையாடி விடுவார்கள். நீங்கள் கவனிக்குமுன் எல்லாம் எல்லைகடந்து போய்விடும். ஆகையால் உங்களுடைய ஒரு ஆளையும் ஸ்கோர் குறித்துவைத்துக்கொள்ளச் சொல்லவும்.

ஆடுவதற்கு ஆள் தேவையா? நம் மன்ற மக்கள் நிறையபேர் வருவார்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
08-01-2006, 04:17 AM
அண்ணா, என்ன பூச்சாண்டி காட்டுறீங்க.

இவர்கள் எல்லாம் நமக்கு ஜீஜீப்பி. இவர்களின் அப்பன்களையே நாம் தூக்கி சாப்பிட்டோம். வென்று காட்டுவோம், கவலை வேண்டாம்.



நான் பூச்சாண்டி காட்டவில்லை. உண்மை நிலைமையை எடுத்துக்கூறினேன். அவ்வளவுதான்.

யார் தொடக்க ஆட்டக்காரராக வருவார்கள் என்று நீங்கள் சொல்லவேயில்லையே. இதுவும் கங்குலி எந்த இடத்தில் ஆடுவார் என்பது இரண்டுமே இந்திய அணியின் கேள்விக்குறி. நீங்கள் உங்களுக்குத் தெரிந்ததை எடுத்துவிடுங்களேன்.

நன்றி வணக்கம்
ஆரென்

இளையவன்
08-01-2006, 06:44 AM
அண்ணா, என்ன பூச்சாண்டி காட்டுறீங்க.

முதன் முறையாக எங்க கம்பெனியில் இண்டர் டிபார்ட்மெண்ட் கிரிக்கெட் போட்டி நடக்குது, மொத்தம் 32 அணிகள், இரவில் நடக்குது, 12 ஓவர் போட்டிகள். என்னுடைய அணியை முன்னணி அணியாக நினைக்கிறாங்க, பார்க்கலாம், என்ன நடக்குதுன்னு.

பரம்ஸ் உங்களது அணி வெற்றிபெற வாழ்த்துக்கள்

aren
08-01-2006, 09:45 AM
நமது இந்தியக்குழு இப்பொழுது அனுபவத்திற்காக ஒரு போட்டி பாகிஸ்தானின் "ஏ" குழுவுடன் ஆடுகிறது. பாகிஸ்தான் அந்த ஆட்டத்திற்கு ஒரு மட்டமான பிட்ச் கொடுத்திருக்கிறது. நிச்சயம் இந்த மாதிரி பிட்ச் டெஸ்ட் தொடருக்கு இருக்காது. அப்படியிருக்கையில் இந்த மாதிரி ஒரு பிட்ச் கொடுத்து அதில் மாட்ச் வைத்திருப்பது ஏதோ ஒரு குறியோடுதான் என்று நினைக்கத் தோன்றுகிறது. இதில் ரன் அடித்தவர்கள் எளிதாக டெஸ்ட் தொடரில் ஆடிவிடலாம் என்று கணக்கு போட்டு ஆட வருவார்கள் என்று பாகிஸ்தான் நினைக்கிறது போலிருக்கிறது.

கொடுத்த வாய்ப்பை பயன்படுத்தி நம் முன் ஆட்டக்காரர்கள் அனைவரும் குறைந்தது 50 ரன்களாவது அடித்துவிட்டு தங்களுடைய இடத்தை காப்பாற்றிக்கொண்டுவிட்டார்கள். இதனால் காம்பீருக்கு மறுபடியும் சான்ஸ் கிடைக்குமா என்று தெரியவில்லை. பொருத்திருந்து பார்க்கவேண்டும்.

எனக்குத் தெரிந்து முதல் டெஸ்ட் தொடரின் 11 உறுப்பினர்கள்:

1. திராவிட்
2. ஷேவாக்
3. சச்சின்
4. லஷ்மன்
5. யுவராஜ்
6. தோனி
7. பதான்
8. அகர்கர்
9. ஹர்பஜன்
10. கும்ளே
11. கங்குலி

இதில் ஷேவாக்குடன், பதான், கங்குலி அல்லது தோனி ஆகியோரில் ஒருவர் தொடக்க ஆட்டக்காரராக உள்ளே வரக்கூடும் என்று நினைக்கிறேன்.

பாகிஸ்தான் நிச்சயம் வேகப்பந்தாளர்களுக்கு சாதகமாகவே பிட்ச் தயார் செய்யும். ஆகையால் ஹர்பஜனுக்கு பதில் காம்பீரை உள்ளே கொண்டுவந்து அவரை தொடக்க ஆட்டக்காரராக இறக்கினாலும் இறக்கலாம். கங்குலியின் மிதமான வேகப்பந்துவீச்சை உபயோகித்துக்கொண்டாலும் கொள்ளலாம். பந்து ஸ்பின் எடுக்கும் பட்சத்தில் டெண்டுல்கரும், ஷேவாக்கும் சுழற்பந்து வீசலாம்.

இது என்னுடைய கணிப்புதான். திராவிடும், சாப்பலும் என்ன நினைக்கிறார்கள் என்று நமக்குத் தெரியாது.

பார்க்கலாம் என்ன நடக்கிறதென்று.

பரஞ்சோதி
08-01-2006, 06:43 PM
வாழ்த்துகள் பரம்ஸ்....
ஜெயிக்கபோறது நீங்கதான் என்று தெரிந்தும் ஏன் இந்த சிறு சந்தேகம்??? தைரியமா போங்கயா....

நன்றி பென்ஸ்,

கோப்பை வாங்கி, புகைப்படம் எடுத்து ரொம்ப நாட்கள் ஆகுது. கடவுள் சித்தமும் கூடவே இருந்தால் கண்டிப்பாக என் புகைப்படம் கொடுக்கிறேன்.

அறிஞர்
12-01-2006, 08:07 PM
இன்று டெஸ்ட்....

கடைசி 11 பேரை தேர்வு செய்ய அனைவரும் குழம்பிய நிலையில்

கம்பீரா அல்லது ஜாபாரா - இருவரும் பயிற்சி ஆட்டத்தில் நன்றாக விளையாடினர்.... கம்பீருக்கு அதிக வாய்ப்பு உள்ளது

ஜாகீர்கான் அல்லது ஆர்.பி.சிங் - இருவரும் பெரிதாக ஜொலிக்கவில்லை.. ஜாகீர்கானுக்கு வாய்ப்பு அதிகம். பதான், அகர்கார் இடம் பெறுவார்கள் என எண்ணுகிறேன்.

யுவராஜ் அல்லது கங்குலி - யுவராஜ் பயிற்சி ஆட்டத்திலும், கங்குலி தமிழகத்திற்கான ஆட்டத்திலும் சிறப்பாக விளையாடினார்கள்.. யாரை நீக்குவது என்பது பெரிய பிரச்சனையே..... கங்குலியை முதல் போட்டியில் உட்கார வைத்துவிட்டு... இரண்டாம் ஆட்டத்தில் வாய்ப்பை பற்றி யோசிப்பார்கள்....

கும்ப்ளே, ஹர்பஜன் சிங் இருவரும் இடம் பெறுவார்களா என்பதும் சந்தேகமே..

என்னுடைய தேர்வு

1. திராவிட்
2. ஷேவாக்
3. சச்சின்
4. லஷ்மன்
5. கம்பீர் அல்லது ஜாபர்
6. யுவராஜ் அல்லது கங்குலி
7. தோனி
8. பதான்
9. அகர்கர்
10. ஹர்பஜன் அல்லது ஜாகீர் கான்
11. கும்ளே

aren
12-01-2006, 10:31 PM
எனக்குத் தெரிந்து முதல் டெஸ்டிற்கு தேர்வு பெறுபவர்கள் இவர்களாக இருக்கலாம்:

1. ஷேவாக்
2. காம்பீர்
3. திராவிட்
4. சச்சின்
5. லஷ்மன்
6. கங்குலி
7. யுவராஜ்
8. தோனி
9. பதான்
10. அகர்கர்
11. கும்ளே

கங்குலி மிதமான வேகப்பந்து வீசக்கூடியவராததால், அவருக்கு உள்ளே இடம் கிடைக்கும். அது தவிற இந்தியா முதலில் ஆடினால் எவ்வளவு ரன்கள் குவிக்க முடியுமோ அவ்வளவு குவிக்கவேண்டும். ஆகையால் கங்குலியை இரண்டு விதத்திலும் உபயோகிக்கமுடியுமாதலால் அவருக்கு 11-ல் இடம் கிடைக்கும்.

பிட்ச் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அனுகூலமாக இருப்பதால், நிச்சயம் இரண்டும் சுழற்பந்து வீச்சாளர்களை உபயோகிக்க மாட்டார்கள். ஆகையால் பதான், அகர்கர் மற்றும் கங்குலியை அதற்கு உபயோகிப்பார்கள். சுழற்பந்துக்கு கும்ளே, ஷேவாக், சச்சின் மற்றும் யுவராஜ் உள்ளனர். ஆகையால் கவலையில்லை.

எனக்குத் தெரிந்து இவர்களாகத்தான் இருக்கும்.

சாப்பலும், திராவிடும் என்ன நினைக்கிறார்களோ, தெரியாது.

நிச்சயம் கங்குலி 11-ல் இருப்பார், குறைந்தது முதல் டெஸ்டிற்காகவாவது. அதில் சோபிக்கவில்லையென்றால் அடுத்த டெஸ்டில் சான்ஸ் இருக்காது.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
13-01-2006, 07:10 AM
பாகிஸ்தான் 110க்கு ஒரு விக்கெட்டே இழந்திருக்கிறது மதிய இடைவேளை வரை. இப்படி பொளக்கிறார்களே. போகிற போக்கைப் பார்த்தால், கங்குலிதான் வந்து பந்து வீசி ஐந்து விக்கெட்டுக்களையாவது அவர் சாய்க்கவேண்டும் என்று தோன்றுகிறது.

என்ன ரொம்ப எதிர்பார்க்கிறேனா? என்ன செய்வது வேறு யாரும் ஒன்னுமே செய்ய மாட்டேன்கிறார்களே.

அறிஞர்
13-01-2006, 03:22 PM
முதல் ஆட்ட முடிவில் 326/2...

யூனிஸ்கான்.... முதலில் பதான் பந்துவீச்சில் எல்.பி. ஆனார்...... ஆனால் அவுட் கொடுக்கவில்லை...

இந்த ரன் மிக அதிகம்..... கண்டிப்பாக 550-600 எடுத்து டிக்ளர் செய்வர். இந்தியா கவனமுடன் ஆடவேண்டும்... மூன்றாம், நான்காம் நாள் பந்துவீச்சுக்கு சாதகமாக அமையும்.

aren
14-01-2006, 07:53 AM
600க்கு மேல் அடித்துவிட்டார்கள். சாஹிட் ஆஃப்ரிதி 90ம் கம்ரான் அக்மல் 50ம் அடித்துவிட்டார்கள்.

இது எங்கே போய் முடியுமோ என்று தெரியவில்லை.

இந்தியா இந்த டெஸ்டை டிராதான் செய்யமுடியும். செய்வார்களா?

லஷ்மனும், திராவிடும் அடிக்கவேண்டும்.

aren
14-01-2006, 08:44 AM
679/7க்கு பாகிஸ்தான் டிக்ளர் செய்துவிட்டார்கள்.

நம் மக்கள் இப்பொழுது அவர்களுடைய ஆட்டத்தைத் தொடங்கவேண்டும். யார் தொடக்க ஆட்டக்காரர்களாக வருவார்கள் என்று தெரியவில்லை. கங்குலி இறங்குவார் என்று நினைக்கிறேன்.

aren
14-01-2006, 01:02 PM
நம்ம பசங்க தேறுவார்களா?

'தலை' நம்ம பசங்களோடு நிலையைப் பார்த்தீர்களா?

இளையவன்
15-01-2006, 12:23 AM
முதல் இரண்டு நாளும் துடுப்பாட்டத்துக்கு சாதகமாக இருந்த மைதானம் இன்றும் நாளையும் பந்து வீச்சாளருக்கு கைகொடுக்கும் என்று வருகிற செய்திகள் கவலைதரும் விடயமாக இருந்தாலும் பலமான துடுப்பாட்ட வரிசையைக்கொண்ட நமது அணி நல்ல ஸ்கோர் எடுத்து இந்தப்போட்டியை சமன்செய்வார்கள் என நம்புவோம்.

பரஞ்சோதி
15-01-2006, 03:41 AM
மைதானம் பேட்டிங்க் சொர்க்கலோகமாம். அவங்க அடிக்கும் போது நம்ம ஆளுங்க மட்டும் என்ன சும்மாவா? அடிப்பாங்க கவலை வேண்டாம்.

இளையவன்
15-01-2006, 11:01 AM
http://i21.photobucket.com/albums/b287/athiradiblogspot/57941.jpg

மழை குறுக்கீட்டால் இன்று 15ஓவர்களே வீசப்பட்ட நிலையில் ஆட்டம் நிறுத்தப்பட்டபோது இந்தியா விக்கட் இழப்பின்றி 145 ஓட்டங்களை எடுத்துள்ளது. சேவாக் 89 பந்துகளில் 96 ஓட்டங்களை எடுத்துள்ளார்

தஞ்சை தமிழன்
15-01-2006, 01:45 PM
அனைவருக்கும் எனது அன்பான வணக்கம்

இத்தனை மோசமான பிட்சினை உருவாக்கியதை பற்றி இப்போது ஆலோசிப்பது உசிதம் என நினைக்கிறேன். எப்படியானும் மேட்ச் டிராதான் என்பது நிச்சயம்.

இப்படி ஒரு மோசமான செத்துப்போன பிட்ச் உருவாக்கியது நம்மை கண்டு பாகிஸ்தான் அணி பயந்துதான் முக்கிய காரணமாக இருக்க முடியும். நம்மிடம் டிரா செய்தாலே அவர்கள் வெற்றி பெற்றது போலத்தான். இங்கிலாந்திடம் அவர்கள் செயித்தது மயிரிழையில்தான் என்பதை நாம் மறக்க முடியாது.

aren
15-01-2006, 02:16 PM
இன்னும் இரண்டு நாட்கள் உள்ளன. அது முடிந்தவுடன் இதைப் பற்றி பேசலாமே.

மழை பெய்திருக்கிறது. நான்காவது நாள் என்ன ஆகுமோ தெரியவில்லல. அது முடியட்டும்.

aren
15-01-2006, 02:17 PM
தலை - நீங்கள் மாட்ச் பார்ப்பது பற்றி பிரதீப்பிடம் சொல்லிவிட்டீர்களா? இன்று கொஞ்சம் வானம் மப்பாக இருந்ததே. அதனால் கேட்டேன்.

பரஞ்சோதி
15-01-2006, 03:24 PM
ஒரே ஒரு மைதானத்தை அதிவேகப்பந்து வீச்சுக்கு ஏற்ற மாதிரி செய்து, அதில் வெற்றி பெற்று தொடரை எடுக்க பாகிஸ்தான் நினைத்திருக்கிறது. மேலும் அவர்கள் பேட்ஸ்மேன்கள் நம்பிக்கை பெற முதல் போட்டியை வெத்து மைதானமாக தயாரித்து இருக்கிறார்கள்.

இங்கிலாந்து போன்ற நாடுகள் இந்திய துணைக்கண்டத்தில் ஸ்பின் பந்து வீச்சில் ஆட்டம் இழப்பது தெரிந்தது தானே.

என்னமோ சோயிப் அக்தர் போடும் பந்து எல்லாம் விக்கெட்டை எகிற வைப்பது போல் பில்டப் செய்து விட்டார்கள், உலககோப்பையில் சச்சின் அடித்த சிக்ஸர் அடிக்கடி கனவில் வந்து மிரட்டுது என்று சொன்னவர் தான் அக்தர் என்பதை மறக்க வேண்டாம்.

aren
16-01-2006, 12:33 AM
டாஸ் வென்றது பாகிஸ்தானுக்கு சாதகமாக அமைந்துவிட்டது. இல்லையென்றால் மாட்ச் வேறு மாதிரியாக சென்றிருக்கலாம். அவர்களால் கும்ளேயின் ஐந்தாவது நாள் பந்துவீச்சை சமாளிக்கமுடியுமா என்றால் சந்தேகமே.

மதி
16-01-2006, 10:21 AM
வாழ்த்துக்கள்...சேவாக் மற்றும் ட்ராவிட்.
பிட்ச்சில் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக எதுவுமே இல்லை.
முன்னூறு ரன்களை கடந்து சாதனை புரிய சேவாகிற்கு நல்லதொரு வாய்ப்பு.
அவர் அதை சரியாய் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

உதயா
16-01-2006, 12:46 PM
நம்மவர்களும் சலைத்தவர்கள் அல்ல என்பதை நிருபித்து விட்டார்கள். என் வாழ்த்துக்கள்.

பரஞ்சோதி
16-01-2006, 05:24 PM
நான் முன்பே சொன்னேனுல்ல, பாகிஸ்தான் பயல்க இங்கிலாந்தை வெற்றி கொண்டதால் ரொம்பவே பிலிம் காட்டி விட்டாங்கன்னு, இப்போ பாருங்க சேவாக், டிராவிட் பிச்சு எடுத்துட்டாங்க தானே.

pradeepkt
17-01-2006, 04:09 AM
இல்லையா பின்ன?
அதுவும் இன்னும் 11 ஓட்டங்கள் எடுத்தால் என்னமோ புது சாதனை வேற இருக்காமே...
இந்த வருண பகவான் வேற வந்து காரியத்தைக் கெடுக்கிறார். இத்தனைக்கும் நான் இன்னைக்குக் காஃபிடேரியா பக்கம் போகவே இல்லை :)

aren
17-01-2006, 04:23 AM
இல்லையா பின்ன?
அதுவும் இன்னும் 11 ஓட்டங்கள் எடுத்தால் என்னமோ புது சாதனை வேற இருக்காமே...
இந்த வருண பகவான் வேற வந்து காரியத்தைக் கெடுக்கிறார். இத்தனைக்கும் நான் இன்னைக்குக் காஃபிடேரியா பக்கம் போகவே இல்லை :)

அதுக்கு காரணம் நீங்கள்தான் என்று யாரோ கடைவீதியில் நேற்று பேசிக்கொண்டது காதில் விழுந்தது.

என்ன 'தலை' நான் சொல்வது சரிதானே?

mania
17-01-2006, 06:06 AM
அதுக்கு காரணம் நீங்கள்தான் என்று யாரோ கடைவீதியில் நேற்று பேசிக்கொண்டது காதில் விழுந்தது.

என்ன 'தலை' நான் சொல்வது சரிதானே?

:D:D :D ஏதோ மாட்டு பொங்கல் வந்ததோ பிழைத்தது.....:rolleyes: :rolleyes: :D :D ப்ரதீப்பும் பிசியா இருந்தான்......இவங்களும் ரன் அடித்தாங்க....:D :D
அன்புடன்
மணியா....:D :D

Mathu
17-01-2006, 09:22 AM
:D:D :D ஏதோ மாட்டு பொங்கல் வந்ததோ பிழைத்தது.....:rolleyes: :rolleyes: :D :D ப்ரதீப்பும் பிசியா இருந்தான்......இவங்களும் ரன் அடித்தாங்க....:D :D
அன்புடன்
மணியா....:D :D

பிரதீபு பார்த்துப்பா போற போக்க பார்த்தா கொம்பியூட்டர புடுங்கிட்டு
வயல்ல இறக்கி விட்டுருவாங்க போல இருக்கு. :D :eek:

Mathu
17-01-2006, 09:30 AM
முதல் விக்கட் பறிபோயிருக்கிறது செவாக் 254, 247 பந்துகளில். வாழ்த்துகள்.
ஆனாலும் இன்று மழை பெயரால் சொதப்பல்,

pradeepkt
17-01-2006, 10:00 AM
ஒரு வழியா மேட்ச் டிரா ஆயிருச்சு... :D :D :D
தலை,
என்னைக் கிண்டல் பண்றது இருக்கட்டும் மாட்டுப் பொங்கல் அன்னிக்கு நீங்க என்ன பண்ணீங்க?

mania
17-01-2006, 10:04 AM
ஒரு வழியா மேட்ச் டிரா ஆயிருச்சு... :D :D :D
தலை,
என்னைக் கிண்டல் பண்றது இருக்கட்டும் மாட்டுப் பொங்கல் அன்னிக்கு நீங்க என்ன பண்ணீங்க?

:D :D நானா.....???? உன்னை பிடிக்கலாம்னு (ஃபோனில்தான்)....:rolleyes: :rolleyes: :D பாத்தேன்.....நீ பிடிபடவேயில்லை....:rolleyes: :D :D
அன்புடன்
அலங்காநல்லூர் மணியா...:D :D

aren
17-01-2006, 10:19 AM
:D :D நானா.....???? உன்னை பிடிக்கலாம்னு (ஃபோனில்தான்)....:rolleyes: :rolleyes: :D பாத்தேன்.....நீ பிடிபடவேயில்லை....:rolleyes: :D :D
அன்புடன்
அலங்காநல்லூர் மணியா...:D :D

ஃபோன்ல நீங்க எப்படி பிடிக்கமுடியும். சரி விடுங்க.

aren
17-01-2006, 10:20 AM
ஒரு வழியா மேட்ச் டிரா ஆயிருச்சு... :D :D :D
தலை,
என்னைக் கிண்டல் பண்றது இருக்கட்டும் மாட்டுப் பொங்கல் அன்னிக்கு நீங்க என்ன பண்ணீங்க?

நிச்சயம் உங்கள் தலை தப்பித்தது என்றே சொல்லலாம் இல்லையா?

இந்தியா ஜெயிக்கிரா மாதிரி இருந்து மழை வந்திருந்தால், கொஞ்சம் நினைச்சு பாருங்க.

sarcharan
17-01-2006, 10:41 AM
நிச்சயம் உங்கள் தலை தப்பித்தது என்றே சொல்லலாம் இல்லையா?

இந்தியா ஜெயிக்கிரா மாதிரி இருந்து மழை வந்திருந்தால், கொஞ்சம் நினைச்சு பாருங்க.


அதுதான் ஜெயம் ரவியும், ஷ்ரேயாவும் மேட்ச் பாக்க வரலியே அப்புறம் என்ன.....

aren
17-01-2006, 11:12 AM
அதுதான் ஜெயம் ரவியும், ஷ்ரேயாவும் மேட்ச் பாக்க வரலியே அப்புறம் என்ன.....

பிரதீப் நண்பர் என்கிறீர்கள். நம்ம பிரதீப் பற்றி அவ்வளவா தெரியாது என்று நினைக்கிறேன். அதனால்தான் இப்படி எழுதுகிறீர்கள்.

அறிஞர்
17-01-2006, 03:07 PM
சாதனை (413 ரன்) பண்ணாமல் அவுட் ஆனதில் வருத்தம். பாகிஸ்தானை அவர்கள் நாட்டில் வறுத்ததில் இன்பம்...

mania
18-01-2006, 04:32 AM
சாதனை (413 ரன்) பண்ணாமல் அவுட் ஆனதில் வருத்தம். பாகிஸ்தானை அவர்கள் நாட்டில் வறுத்ததில் இன்பம்...

கண்டிப்பாக வருத்தம் தான். :mad: முழுவதுமாக ஆட்டம் இல்லாமல் போயிருந்தால் அது ஒரு மாதிரி இருந்திருக்கும் (மழை இல்லாமல் இருந்திருந்தால் சாதனை புரிந்திருக்கலாம் என்று). நாலாவது நாள் மாலை அம்பயர்கள் பேட் லைட் ஆஃபர் பண்ணியபோது தொடர்ந்து ஆடியிருந்தால் நிச்சயம் சுலபமாக அந்த இலக்கை தாண்டியிருப்பார்கள்,. ஏன் தொடர்ந்து ஆடவில்லை என்று தெரியவில்லை...???:rolleyes:
வருத்தத்துடன்
மணியா....:eek:

aren
20-01-2006, 11:05 AM
இரண்டாவது டெஸ்ட் நாளை ஆரம்பிக்கிறது. இதில் யார் இருப்பார்கள். இந்திய அணியில் மாற்றம் இருக்காது என்று நினைக்கிறேன். அப்படி மாற்றம் என்றால், அகர்கருக்கு பதில் ஆர்.பி. சிங்கை உள்ளே கொண்டுவரலாம், ஆனால் அவர் சோபிக்கவில்லையென்றால் பின் விளைவுகளை ஏற்படுத்தலாம்.

பாகிஸ்தானில், சாமியை கழட்டிவிட்டு வேறு ஒரு வேகப்பந்து வீச்சாளரை உள்ளே கொண்டுவரலாம். அது அப்துல்ரசாக்காக இருக்குமா? இல்லது முகமது ஆசிப்பாக இருக்குமா? உமர்குல் டீமில் இருக்கிறாரா? அப்படி அவர் டீமில் இருந்தால் அவரை உள்ளே கொண்டுவரலாம். இந்தியாவிற்கு எதிராக ஆடிய போட்டியில் நன்றாக பந்துவீசினார்.

aren
20-01-2006, 12:25 PM
நாளைக்கு இந்தியா டாஸ் வெல்லவேண்டும் போலிருக்கிறது. திராவிட் டாஸ் வென்று பாட் செய்யவேண்டும் என்று நினைக்கிறேன். ஏனெனில் ஐந்தாவது நாள் ஆட்டம் சுழற்பந்து விச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

பென்ஸ்
20-01-2006, 03:25 PM
கிரிகெட் விமர்சனம் என்றால் ஆரென் தான்...

கணிப்புகள் கூட பத்திரிகை மற்றும் தொலைக்காட்சியில் செய்பவர்களை
விட சிறப்பாக இருக்கிறது... ஆரெனுக்கு ஒரு ஓஓஓஓஓஓஓஓ....

aren
20-01-2006, 04:04 PM
கிரிகெட் விமர்சனம் என்றால் ஆரென் தான்...

கணிப்புகள் கூட பத்திரிகை மற்றும் தொலைக்காட்சியில் செய்பவர்களை
விட சிறப்பாக இருக்கிறது... ஆரெனுக்கு ஒரு ஓஓஓஓஓஓஓஓ....

ஹலோ தீஸீஸ் முடிச்சாச்சா? அதை கவனியுங்கள், இல்லையென்றால் மாட்சைப் பார்க்கமுடியாது.

அறிஞர்
21-01-2006, 02:13 AM
கங்குலிக்கு இடம் உண்டா...... என்ற விவாதம் உள்ளதே...
-----
இலவசமாக.. வின் ஆம்ப் மூலம் கிரிக்கெட் பார்க்கலாம்..

முயன்று பாருங்கள்

அறிஞர்
21-01-2006, 03:28 AM
நான் நினைத்த மாதிரி கங்குலிக்கு ஆப்பு வச்சுட்டாங்க

அறிஞர்
21-01-2006, 03:29 AM
பாகிஸ்தான் டாஸ் வென்று முதலில் ஆடுகிறது

பரஞ்சோதி
21-01-2006, 03:52 AM
ஆடுகளம் லாகூர் மைதானம் போலவே இருப்பதாக செய்தி. முதலில் ஆடி 500 ரன்கள் மேல் எடுத்தால் பாகிஸ்தான் நெருக்கடி கொடுக்கலாம். அணியில் மீண்டும் இடம் பிடித்த ஜாகிர் கலக்க வாழ்த்துகள்.

aren
21-01-2006, 03:59 AM
பாகிஸ்தான் இரண்டு பந்து வீச்சாளர்களைத் தூக்கிவிட்டு, ஒரு பந்து வீச்சாளரையும், ஒரு ஆல்ரவுண்டரையும் தேர்ந்தெடுத்திருக்கிறது. இதனால் அவர்கள் தங்களுடைய பேட்டிங்கை மேன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

இந்தியா ஒரு பந்து வீச்சாளரையும், ஒரு பேட்ஸ்மேனையும் கழட்டிவிட்டு, இரு பந்து வீச்சாளர்களை களத்தில் இறக்கியிருக்கிறது. பந்துவீசும் திறன் அதிகரித்திருந்தாலும் பாட்டிங்கில் ஒரு படி இறங்கியிருக்கிறோம்.

பாகிஸ்தான் முதலில் ஆடுவதால், அவர்கள் திறமையாக ஆடி 500 ரன்கள் எடுத்துவிட்டால், நம்மால் தாக்குபிடிக்க முடியுமா என்று தெரியாது.

கங்குலியை வேண்டுமென்றே பழிவாங்கியிருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.

இந்தியா ஜெயித்துவிட்டால் ஒன்றும் பிரச்ச்னையில்லை.

அறிஞர்
21-01-2006, 04:04 AM
ஆர்.பி.சிங் பவுலிங்க் நன்றாக உள்ளது.

முதல் பாலில் விக்கெட் கிடைக்கவேண்டியது..... கும்ப்ளே சுதார்க்காததால்.. கோட்டை விட்டு விட்டார்.

aren
21-01-2006, 04:16 AM
முதல் டெஸ்டில் பட் ரன் அடிக்காத்தால் இந்த முறை நிச்சயம் ரன் அடிக்க முயற்சி செய்வார். அதுபோல் மாலிக்கின் நிலைமை ஒவ்வொரு டெஸ்டிலும் நிர்ணயம் செய்யபடும், ஆத்லால் அவர் எவ்வளவு ரன்கள் எடுக்கமுடியுமோ அவ்வளவு எடுக்க முயற்சி செய்வார்.

இந்த இரண்டு தொடக்க ஆட்டக்காரர்களும் தாங்கள் முதல் ரன் எடுக்க பாடுபடுவார்கள். அதனால் ரன்கள் மெதுவாக நகரலாம். நம் மக்கள் இதை யோசித்து அவர்களை அவுட் ஆக்க, காட்ச் பிடிக்கும் வகையில் பீல்டிங்கை செட் செய்யவேண்டும். பந்து வீச்சாளர்களும் ரன்களை கட்டுப்படுத்துவதை விட்டுவிட்டு விக்கெட் எடுக்கும் விதமாக பந்துவீசவேண்டும்.

அறிஞர்
21-01-2006, 04:33 AM
மெதுவாகவா,.,,,, ரன் ரேட் நல்ல நிலையில் செல்கிறது....ஓவருக்கு ஒரு 4 அடிக்கிறார்கள்

அறிஞர்
21-01-2006, 04:41 AM
முதல் விக்கெட்.. ஆர்.பி.சிங் எடுத்தார்...

மாலிக் அவுட்.. பாக் 49-1

அறிஞர்
21-01-2006, 05:14 AM
இரண்டாம் விக்கெட் ஜாகீர் கானுக்கு

65-2 பாக்

aren
21-01-2006, 01:44 PM
மரண அடி அடித்திருக்கிறார்கள் போலிருக்கிறது. நல்லவேளை நான் இன்று மாட்ச் பார்க்கவில்லை, தப்பித்தேன். இல்லையென்றால் மண்டையை பிய்த்துக்கொண்டிருப்பேன். நல்ல காலம்.

பிழைத்துக்கொண்ட
ஆரென்

aren
22-01-2006, 01:15 PM
ஜாஹீர் கானும், ஆர்.பீ.சிங்கும் நன்றாக பந்து வீசியிருக்கிறார்கள். அடுத்த ஆட்டத்தில் இவர்களுக்கு சான்ஸ் இருக்குமா அல்லது இந்த ஒரு டெஸ்ட் மட்டும்தானா?

அடுத்த ஆட்டத்தில் ஹர்பஜன் இருப்பார் என்பது சந்தேகமே.

aren
23-01-2006, 07:57 AM
யுவராஜும் அவுட்.

ஒரு பேட்ஸ்மேன் குறைவு நமக்கு. கங்குலி இருந்திருந்தால் இப்பொழுது நன்றாக இருந்திருக்கும்.

அறிஞர்
23-01-2006, 07:43 PM
யுவராஜும் அவுட்.

ஒரு பேட்ஸ்மேன் குறைவு நமக்கு. கங்குலி இருந்திருந்தால் இப்பொழுது நன்றாக இருந்திருக்கும்.அதுக்கு தான் டோனி உள்ளாரே... இந்த ரன் குவிப்பு போதுமானது... டிரா செய்வதற்கு :D :D

aren
23-01-2006, 09:34 PM
அதுக்கு தான் டோனி உள்ளாரே... இந்த ரன் குவிப்பு போதுமானது... டிரா செய்வதற்கு :D :D

இன்னும் கடல் முழுமையாக தாண்டவில்லை. 147 ரன்கள் எடுக்கவேண்டும். ஒரு விக்கெட் விழுந்தாலும் நமக்கு பிரச்சனைகள் வரலாம்.

நாம் நான்காவது இன்னிங்க்ஸ் ஆடுவது கொஞ்சம் கஷ்டம், அதுவும் கனேரியா நன்றாக பந்துவீசக்கூடியவர். ஆகையால் நாம் எவ்வளவு ரன்கள் அடிக்கமுடியுமோ அவ்வளவு அடித்தால்தான் நமக்கு நல்லது.

பரஞ்சோதி
24-01-2006, 03:12 AM
தோனி அட்டகாசமான ஆட்டம், பதானின் ஆட்டத்தில் பக்கம் இருக்கிறது. இருவருக்கும் பாராட்டுகள்.

அறிஞர்
24-01-2006, 04:04 AM
தோனியும், பதானும் பொறுப்புடன் ஆடுகிறார்கள்... இன்றைய ஆட்டம் நம் கட்டுப்பாட்டில் இருந்தால் நல்லது...

அறிஞர்
24-01-2006, 04:41 AM
அவசரப்பட்டு.. தோனி அவுட்டாகிட்டார்... இனி பவுலர்கள்.. அனைவரும் பேட்டிங்கில் கலக்கப்போகிறார்கள்

மதி
24-01-2006, 08:02 AM
இந்திய அணி 603 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்துவிட்டது..சிறப்பாக ஆடிய தோனி, பத்தான், ஹர்பஜனுக்கு பாராட்டுக்கள்...

aren
24-01-2006, 08:49 AM
இந்திய அணி 603 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்துவிட்டது..சிறப்பாக ஆடிய தோனி, பத்தான், ஹர்பஜனுக்கு பாராட்டுக்கள்...

ஹர்பஜன் பந்துவீச்சில் ஆஃப்ரிடி சிக்ஸர் அடித்தார், அதுபோல் ஆஃப்ரிடி பந்துவீச்சில் ஹர்பஜன் சிக்ஸர் அடித்தார் தானிக்கு தீனி மாதிரி.

அறிஞர்
24-01-2006, 01:34 PM
என்ன ஆரென் நான் சொன்ன மாதிரி மேட்ச் டிராவை நோக்கி செல்கிறது.....

பாகிஸ்தான் விக்கெட்டுகள் இன்னும் 3 விக்கெட்டுகளை சாய்த்திருந்தால், இந்தியாவுக்கு வெல்ல வாய்ப்பு இருந்திருக்கும்.

வாய் சவுடால் பேசிய சோயாப் இங்கும் ஜொலிக்கவில்லை.... சர்ச்சைக்குரிய சச்சின் விக்கெட் மாத்திரம் கிடைத்தது

aren
24-01-2006, 01:54 PM
இந்தமாதிரி பிட்ச் தயார் செய்தால் என்ன செய்வது. சோயப் அல்லது யார் பந்து வீசினாலும் ஒன்றும் செய்யமுடியாது. பாகிஸ்தானின் இந்த அனுகுமுறை எதனால் என்று தெரியவில்லை.

அடுத்த டெஸ்ட் நிச்சயம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நம்புகிறேன். ஆகையால் ஹர்பஜனை கழித்துவிட்டு ஒரு பேட்ஸ்மேனை உள்ளே கொண்டுவரலாம். கங்குலியை பிடிக்கவில்லையென்றால் வேறு யாரையாவது உள்ளே கொண்டுவரலாம்.

aren
24-01-2006, 01:56 PM
சச்சினுடையை விக்கெட் எப்படியிருந்தாலும், நான் சச்சின் ரன் அடிப்பார் என்று எதிர்பார்க்கவில்லை. பழைய ரெக்கார்டுகளைப் பார்த்து இன்னும் நாம் சச்சனை நம்பியிருக்ககூடாது. புது ஆட்களை தயார் செய்யவேண்டும்.

aren
25-01-2006, 01:30 PM
மட்டமான பிட்ச் மறுபடியும் தயார் செய்து இரண்டு டெஸ்டுகளை அநியாயமாக வீணடித்துவிட்டார்கள். இதன் காரணம் என்னவென்று தெரியவில்லை. பாகிஸ்தானில் பாகிஸ்தான் இந்தியாவிடம் தோற்கக்கூடாது என்பதாலா?

அடுத்த டெஸ்டில் எப்படியும் வெற்றி பெற பாகிஸ்தான் முயற்சிக்கும். ஆகையால் நிச்சயம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாகவே பிட்ச் இருக்கும். ஆகையால் ஹர்பஜன் அடுத்த டெஸ்டில் இருப்பது கொஞ்சம் கஷ்டம் என்று நினைக்கிறேன். அவருக்கு பதில் கங்குலி உள்ளே வரலாம்.

ஆர்.பீ.சிங்கும், ஜாஹீர் கானும் நன்றாக பந்து வீசியதால் அவர்கள் இருவரும் அடுத்த டெஸ்டிலும் இருப்பார்கள். அப்படியானால் அகர்கர் வெளியே இருப்பார்.

கங்குலியை சாப்பலுக்கு, திராவிடுக்கும் பிடிக்காததால் கங்குலிக்கு பதில் வாசீம் ஜாபரை உள்ளே கொண்டுவந்தாலும் வரலாம்.

பரஞ்சோதி
25-01-2006, 05:51 PM
பிட்ச் தயாரிப்பதில் கேப்டன் இன்சமாம் தலையிட்டதாக தெரிகிறது. முதன் முறையாக இன்சமாம் கேப்டனாக இருந்து இந்தியாவிடம் தோற்ற சாதனை இருக்கிறது, எனவே இந்த முறையும் அப்படி ஆகாமல், குறைந்த பட்சம் டிரா செய்தாலே போதும் என்ற நிலையில் மைதானம் தயார் செய்ய சொல்லியிருக்கிறார்.

இது போன்ற மைதானங்கள் பேட்ஸ்மேனின் ரெக்கார்ட் செய்ய உதவ மட்டுமே செய்யும். வந்தவன், போனவன் எல்லாம் அடிக்க பாவம் சச்சின் மட்டும் ரன் அடிக்கவில்லை.

அவரது அவுட் கூட இல்லை. அதிஷ்டம் இல்லாதவராக இருக்கிறார். கடைசி டெஸ்ட் எப்படி இருக்கும் என்றும் தெரியலை.

இந்தியா பாகிஸ்தான் என்றாலே போட்டிகள் படு விறுவிறுப்பாக இருக்கும், இப்போட்டிகள் படு மோசம், யாருமே விருப்பம் காட்டவில்லை.

அறிஞர்
25-01-2006, 10:55 PM
இரண்டாம் டெஸ்டில் ஆர்.பி சிங்கிற்கு மேன் ஆப் த மேட்ச் வியப்பாக உள்ளது. சில முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஆனால் பாலோ ஆன் ஆகாமல் காத்த டோனி, பதான் சிறப்பாக தெரிகிறார்கள்.

பாக்கின் யுனிஸ்கான் 2 இன்னிங்ஸிலும் நல்ல ரன்கள் பெற்றுள்ளார்....
----
மூன்றாவது போட்டியில் கண்டிப்பாக ரிசல்ட் கிடைக்கும் என்கிறார்கள்... பொறுத்திருந்து பார்ப்போம்...
--
மீண்டும் கங்குலிக்கு இடம் மறுக்கப்படலாம்....

aren
26-01-2006, 12:37 AM
இது தெரிந்துதானோ என்னவோ தூர்தர்ஷன் இந்தமுறை நேரடி ஒளிபரப்பு டெஸ்ட் போட்டியைச் செய்யவில்லை. இதனால் தூர்தர்ஷனுக்கு பல கோடிகள் நஷ்டமில்லாமல் தப்பியது.

அறிஞர்
28-01-2006, 08:28 AM
மூன்றாவது டெஸ்டுக்கு கங்குலி அணிக்குள் வருவார் எனச்செய்திகள் உள்ளது.

விக்கெட் எதுவும் எடுக்காத ஹர்பஜன் ஓரங்கட்டப்படலாம்.

ஜாகிர்கான் அல்லது அகர்கர் - யார் அணியில் இருப்பது என்பது அடுத்தப்போட்டி....

aren
28-01-2006, 02:21 PM
இந்திய அணியில் ஒரேயொரு மாற்றம் மட்டுமே இருக்கும். கங்குலி உள்ளே வருவார் அவருக்கு பதில் ஹர்பஜன் வெளியேறலாம். ஆனால் இதுதான் கங்குலிக்கு கடைசி டெஸ்டாக இருக்கும் அவர் ரன் எதுவும் எடுக்காமல் இருந்தால். அப்படி ரன் அடித்துவிட்டால் அடுத்த டெஸ்டிற்கு ஆட இடம் கிடைக்கலாம். பொருத்திருந்து பார்க்கவேண்டும்.

இரண்டாவது டெஸ்டில் சிறப்பாக பந்து வீசிய ஜாஹீர் கான் இந்த டெஸ்டிலும் ஆடுவர் என்று நினைக்கிறேன்.

பாகிஸ்தான் குழிவில் சோஹிப் மாலிக் இல்லாததால், கம்ரான் தொடக்க ஆட்டக்காரராக இருப்பார் என்று நினைக்கிறேன். அல்லது ஆஃப்ரிடி தொடக்க ஆட்டக்காரராக உள்ளே வரலாம். மாலிக்க்கிற்கு பதில் உமர்குல் உள்ளேவரலாம், இதனால் அவர்களுடைய வேகப்பந்து வீச்சு பெருமளவு கூடும்.

இந்த டெஸ்ட் வேகப்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமாக இருக்குமாதலால், யார் டாஸ் ஜெயித்தாலும் முதலில் பந்து வீசுவதே சாலச்சிறந்தது. மாறி பேட்டிங் எடுத்தால் தேனீர் இடைவேளைக்குள் இன்னிங்க்ஸ் முடிய வாய்ப்பு இருக்கிறது. இந்த டெஸ்டில் ஆர்.பி. சிங்கும் பதானும் சிறப்பாக பந்து வீச வாய்ப்பிருக்கிறது. அப்படி ஆர்.பி.சிங் சிறப்பாக பந்துவீசிவிட்டால் அடுத்த மூன்று அல்லது நான்கு டெஸ்டுகளுக்கு அவருக்கு தொடர்ந்து வாய்ப்பிருக்கிறது. அவருடைய வருங்காலத்தை முடிவு செய்யும் டெஸ்டாக இது அமையலாம்.

என்னுடைய ஊகம், முதல் பேட் செய்யும் குழு 250 - 280 ரன்களுக்குள் ஆட்டம் இழந்துவிடும். அடுத்த ஆடும் குழு யோசித்து ஆடினால் 350 - 400 ரன்கள்வரை எடுக்கலாம், அதனால் இரண்டாவது ஆடும் குழுவிற்கு வெற்றிவாய்ப்பு அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது. ஐந்தாவது நாளில் கும்ளேயின் பந்துவீச்சையும், கனேரியாவின் பந்துவீச்சையும் ஆடுவது கடினம்.

எப்படியிருந்தாலும் இந்த டெஸ்ட் சீரியைசை முடிவுசெய்யும் டெஸ்ட். ஆகையால் அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

இந்திய அணியில் டெண்டுல்கரும், கங்குலியும் அரை சதமாவது அடிக்க முனைவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். எப்பொழுதும்போல் பதானும் அடிப்பார் என்று நினைக்கிறேன். மற்றவர்கள் எப்படி என்று தெரியாது.

பாகிஸ்தான் அணியில் சல்மான் பட் குறைந்தது அரை சதம் அடிப்பார் என்று நினைக்கிறேன். இதுவரை அடித்த கம்ரான், யூனிஸ், யூசுப், ஆஃப்ரிடி ஆகியோர் இந்த முறை அடிக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். இன்சுமானும், பட்டும் அடிக்க வாய்ப்பிருக்கிறது.

என்னுடைய ஆருடம்படி இந்த டெஸ்டை வெல்ல இந்தியாவிற்கு வாய்ப்பிருக்கிறது.

டாஸில் நிச்சயம் திராவிட் வெல்வார். ஆகையால் அவர் முதலில் பந்துவீசுவார் என்று எதிர்பார்க்கிறேன். ஆகையால் இந்திய வெல்ல வாய்ப்புகள் அதிகம்.

பொருத்திருந்து பார்க்கலாம்.

இந்தியா வெல்ல அனைவரும் வாழ்த்தலாம்.

நன்றி வணக்கம்
ஆரென்

பென்ஸ்
28-01-2006, 02:57 PM
நன்றி ஆரென்....

:-)

aren
28-01-2006, 02:58 PM
நன்றி ஆரென்....

:-)

எதுக்கு.

பென்ஸ்
28-01-2006, 03:03 PM
சிறிது காலமாக நான் கிரிகெட்டில் அதிகம் கவனம் செலுத்தியதில்லை...
ஆனால் மன்றம் வந்த பிறகு, உங்கள் எல்லோரது கருத்துகள், கருத்து
கணிப்புகள் எல்லாம் பார்த்த பிறகு, அதை ஒப்பிட முதலில்
பார்த்தேன், இப்போது சிறிது (பழைய) குஷியுடனேயே பார்க்கிறேன்...

அதுதான் நன்றி...

aren
28-01-2006, 03:06 PM
சிறிது காலமாக நான் கிரிகெட்டில் அதிகம் கவனம் செலுத்தியதில்லை...
ஆனால் மன்றம் வந்த பிறகு, உங்கள் எல்லோரது கருத்துகள், கருத்து
கணிப்புகள் எல்லாம் பார்த்த பிறகு, அதை ஒப்பிட முதலில்
பார்த்தேன், இப்போது சிறிது (பழைய) குஷியுடனேயே பார்க்கிறேன்...

அதுதான் நன்றி...

அப்போ அந்த குஷியுடனேயே உள்ளேவந்து உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள். நாங்களும் கொஞ்சம் தெரிந்துகொள்கிறோம்.

நான் கிரிக்கெட் விளையாடுவதைவிட்டு பல வருடங்கள் ஆகிவிட்டது. இப்பொழுதெல்லாம் வெறும் செய்திகளும் இருக்கும் விஷயங்களை மட்டுமே படித்து கிரிக்கெட் ஆடிய சந்தோஷத்தை அடைகிறேன்.

aren
28-01-2006, 03:34 PM
இன்சுமானால் இந்த டெஸ்டில் ஆடமுடியவில்லையென்றால் இந்த பிட்சில் இருக்கும் புற்களை எடுத்துவிடுவார்கள் என்று நினைக்கிறேன். அப்படி நடந்தால் இந்த டெஸ்டும் டிராவிலேயே முடியும் என்று நினைக்கிறேன்.

அறிஞர்
28-01-2006, 05:19 PM
எதுக்கு. மன்றத்தின் சிறப்பு கிரிக்கெட் ஆய்வாளர் பணிக்கு....

அறிஞர்
28-01-2006, 05:20 PM
இன்சுமானால் இந்த டெஸ்டில் ஆடமுடியவில்லையென்றால் இந்த பிட்சில் இருக்கும் புற்களை எடுத்துவிடுவார்கள் என்று நினைக்கிறேன். அப்படி நடந்தால் இந்த டெஸ்டும் டிராவிலேயே முடியும் என்று நினைக்கிறேன். ரொம்ப தெளிவா இருக்காங்க... தோற்க கூடாதுன்னு.... :rolleyes: :rolleyes:

aren
29-01-2006, 04:13 AM
முதல் ஓவரிலேயே பதான் ஹாட்ரிக் எடுத்துவிட்டார். அவருக்கு நம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வோம்.

இதுவரை நடந்த டெஸ்ட் தொடரிலேயே இது இரண்டாவது தடவை முதல் ஓவரில் ஹாட்ரிக் கிடைத்திருக்கிறது. பாராட்டுக்கள்.

இளையவன்
29-01-2006, 04:24 AM
முதல் ஓவரிலேயே பதான் ஹாட்ரிக் எடுத்துவிட்டார். அவருக்கு நம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வோம்.




வாழ்த்துக்கள் பதான்.

aren
29-01-2006, 04:33 AM
நான்காவது விக்கெட்டும் விழுந்துவிட்டது.

பைசல் இக்பால் அவுட். ஜாஹீர் கானுக்கு விக்கெட்.

aren
29-01-2006, 04:56 AM
ஐந்தாவது விக்கெட்டும் விழுந்துவிட்டது.

ஆஃப்ரிதி அவுட் ஆகிவிட்டார்.

aren
29-01-2006, 04:57 AM
இம்ரான் பர்ஹாத் அவுட். ஆறுவிக்கெட் காலி.

ஆர்.பி.சிங் பந்துவீச்சில் அவுட் ஆகிவிட்டார்.

poo
29-01-2006, 05:04 AM
வைச்சா குடுமி, அடிச்சா மொட்டை!!!

இளையவன்
29-01-2006, 05:05 AM
பாகிஸ்தானை 150க்குள் கட்டுப்படுத்துவார்களா?

aren
29-01-2006, 05:08 AM
பாகிஸ்தானை 150க்குள் கட்டுப்படுத்துவார்களா?

இன்னும் கொஞ்ச நேரத்திற்கு பிட்ச் அப்படித்தான் இருக்கும். இந்த சமயத்தில் சரியாக ஆடிவிட்டால், நிச்சயம் அவர்கள் 200-க்குமேல் அடிக்க வாய்ப்பிருக்கிறது.

நேற்று இரவு நான் கணிச்ச ஸ்கோரான 250 - 280 அடிப்பார்கள் என்று நினைக்கிறேன்.

aren
29-01-2006, 05:15 AM
அநியாயமாக எல்பி கொடுக்கவில்லை. அப்துல் ரசாக்கிற்கு அதிர்ஷ்டம் அடிக்கிறது. பாவம் ஜாஹீர்கான்.

இளையவன்
29-01-2006, 08:42 AM
அக்மலை அவுட்டாக்கமல் விட்டால் பின்வரிசை ஆட்டக்காரர்களின் துணையுடன் அணியின் எண்ணிக்கையை 300க்கு மேல் உயர்த்தி விடுவார்போல் உள்ளது

உதயா
30-01-2006, 02:17 AM
எப்படியோ அவர்களை அவுட் ஆக்கி, நாமும் 4 பேரை இழந்து விட்டோம். கங்கூலி/யுவராஜ் ரன் கூட்டுவார்களா?

பெருமூச்சு விடவேண்டியது தான்!!

aren
30-01-2006, 02:20 AM
கங்குலிக்கு இந்த டெஸ்ட் மேக் ஆர் பிரேக். ஆகையால் அவர் உயிரைக்கொடுத்து ஆடியாகவேண்டும், அதுவும் இந்தியடீம் அவருடைய முழு ஒத்துழைப்பை நம்பியிருக்கிறது. அவர் ஆடுவாரா என்பதை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும். அடிக்கவேண்டும். பார்க்கலாம்.

aren
30-01-2006, 02:36 AM
முதல் ஒரு மணி நேரம் ஆட்டம் ரொம்பவும் முக்கியம். நம் மக்கள் எப்படியாவது நன்றாக தடுத்து ஆடிவிட்டால் 300 - 350 ரன்கள் வரை எளிதாக அடிக்கமுடியும். ஆகையால் கங்குலி, யுவராஜ், தோனி மற்றும் பதானை இந்தியா ரொம்பவும் நம்பியிருக்கிறது.

முதல் இரண்டு மணி நேர ஆட்டம் யார் வெற்றி பெருவார்கள் என்று வழிவகுத்துவிடும்.

அறிஞர்
30-01-2006, 07:00 AM
எங்கத்த... எல்லாரும் போயிட்டாங்க... பாகிஸ்தான் ரன்னை தொடுவதே குதிரை கொம்பாக உள்ளது

இளையவன்
30-01-2006, 07:48 AM
எங்கத்த... எல்லாரும் போயிட்டாங்க... பாகிஸ்தான் ரன்னை தொடுவதே குதிரை கொம்பாக உள்ளது

பதானிருக்கப் பயமேன்?

இளையவன்
30-01-2006, 08:04 AM
பாகிஸ்தானை இரண்டாவது இன்னிங்சில் 225க்குள் அவுட்டாக்கினால்தான் எமக்கு வெற்றி உறுதியாகும். செய்வார்களா நம்மவர்கள்?

அறிஞர்
30-01-2006, 01:28 PM
பாகிஸ்தானை இரண்டாவது இன்னிங்சில் 225க்குள் அவுட்டாக்கினால்தான் எமக்கு வெற்றி உறுதியாகும். செய்வார்களா நம்மவர்கள்? அவர்கள் போகிற போக்கை பார்த்தால் 400ரன் எடுப்பார்கள் போல்... இந்தியாவுக்கு கொஞ்சம் உதறல்.....

aren
30-01-2006, 01:30 PM
அவர்கள் போகிற போக்கை பார்த்தால் 400ரன் எடுப்பார்கள் போல்... இந்தியாவுக்கு கொஞ்சம் உதறல்.....

இந்தியா விட்டுக்கொடுக்காமல் ஆடவேண்டும். மனதை தளர விடக்கூடாது. ஒரு விக்கெட் விழுந்தாலும் எல்லாம தலை கீழாக மாறிவிடலாம், ஆகையால் விடாமுயற்சி தேவை.

அறிஞர்
01-02-2006, 05:51 AM
என்ன யாருடைய பேச்சையும் காணோம்..

607 ரன் எடுக்கவேண்டும்...

இந்தியாவின் முதல் இரண்டு விக்கெட்டுகளும் வீழ்ந்தது...

டெண்டுல்கர் இந்த மேட்சிலாவது விளையாடுவாரா?

தாமரை
01-02-2006, 06:03 AM
விதி விளையாடினால்தான் உண்டு.

Mathu
01-02-2006, 09:51 AM
இந்தியா 208 இக்கு 6 விக்கட்டுகளை இளந்து விட்டது ரொனியும் கை விட்டு விட்டார்

Mathu
01-02-2006, 09:53 AM
யுவராஜ்சிங், பதன் பார்க்கலாம் பதன் கை கொடுக்கிறாரா என்று

Mathu
01-02-2006, 09:55 AM
ஜாராவது நெற்றில் பார்க்க விரும்பினால் எனக்கு பி.எம் போடவும்

Mathu
01-02-2006, 09:57 AM
மூடிடு வேர வேலை பார்ப்பம் பதனும் கைவிட்டார்....

pradeepkt
01-02-2006, 11:01 AM
நல்ல வேலை செஞ்சீங்க மது...
பாத்திருந்தீங்கன்னா டென்ஷன் ஏறிருக்கும்...
மக்கள் 341 ரன் வித்தியாசத்தில் தோத்துட்டாங்க.

பாகிஸ்தான் அணிக்கு வாழ்த்துகள்

aren
01-02-2006, 12:39 PM
பிரதீப், நீங்க ரொம்ப நேரம் இன்னைக்கு மாட்ச் பார்த்த்தாக நியூஸ் வருது.

அறிஞர்
01-02-2006, 01:42 PM
நல்ல வேளை நான் பார்க்கலை....

இப்படியா தோப்பாங்க..... ஏதோ மேட்ச் பிக்ஸிங்க் போல் இருந்தது அனைவரின் ஆட்டமும்......

முதலில் டாஸ் ஜெயித்தும் கோட்டை விட்டு விட்டனர்....

யாரை குறை சொல்வது... பாக் அணியின் பேட்டிங்க் அருமை...

சேப்பலுக்கு முதல் ஆப்பு.....

pradeepkt
01-02-2006, 02:15 PM
பிரதீப், நீங்க ரொம்ப நேரம் இன்னைக்கு மாட்ச் பார்த்த்தாக நியூஸ் வருது.
ஆரென் அண்ணா,
போதுமே...
நான் மேட்ச் பார்க்காமல் இருந்தாலும் தோற்கக் கூடிய அணிதான் நம்ம அணின்னு நிரூபணம் ஆயிருச்சு...
இனிமேல் தலை இதுக்கு நாந்தான் காரணமுன்னு சொல்ல முடியாது.

இடுக்கண் வந்ததால் நகும்,
பிரதீப் :D :D :D

அறிஞர்
06-02-2006, 02:11 PM
என்னது யாரும் கிரிக்கெட் பத்தி பேசுறது இல்லையா...

சச்சினை டீமை விட்டு தூக்கவேண்டும் என்றார்கள்.. ஒரு 100 அடித்துவிட்டார்.

முதல் ஒரு நாள் போட்டி - எதிர்பாராத தோல்வி

mania
07-02-2006, 03:21 AM
எவ்வளவு ஓட்டங்கள் எடுத்து என்ன பயன். சரியான பந்து வீச்சு இல்லையே....?? முரளி கார்த்திக் ஒரு ஓவரில் 3 வைட் பந்துகள் போட்டால் எப்பிடி ஜெயிக்க முடியும்.....????
வருத்தத்துடன்
மணியா.....:eek:

aren
07-02-2006, 04:02 AM
எல்லோரும் சாப்பலின் பேச்சைக் கேட்டு நல்லா பந்து வீசக்கூடிய கும்ளேயை வெளியே அனுப்பினார்கள். ஆனால் இந்த மாதிரி நேரத்தில் அவர் இல்லாமல் நம் மக்கள் அவதிப்படுவதைப் பார்க்கும்பொழுது வேதனையாக உள்ளது.

திராவிடுன் ஸ்திரமில்லாத தன்மை வெளிப்படுகிறது. திராவிடால் திறமையாக முடிவுகள் எடுக்க முடியவில்லை. யாராவது உள்ளேயிருந்து பிரஷர் கொடுக்கிறார்களா அல்லது அவருக்கு அந்த திறமையில்லையா என்று தெரியவில்லை.

பேசாமல் ஒரு நாள் போட்டிக்கான காப்டன்ஸியை ஷேவாக்கிற்கு கொடுக்கலாம். கைஃப் வேறு தன்னுடைய திறமையை காட்டியிருக்கிறார். அவரையும் கொஞ்சம் கவனித்து ஒரு நாள் போட்டிக்கு இந்த இருவரில் ஒருவரை காப்டனாக நியமிக்கலாம்.

கங்குலியை கழித்தது வெறும் அரசியல் சதி என்று நிரூபணம் ஆகிறது. அவரை எடுத்துவிட்டு மற்றர்களை உள்ளே கொண்டுவந்தும் நிலமை மாறவில்லை.

அறிஞர்
10-02-2006, 06:11 PM
மீண்டும் பேட்டிங்க் பிட்ச்சில் சந்திக்கிறார்கள்... (2வது ஒரு நாள் போட்டி ராவல்பிண்டியில்) என்ன நடக்கிறது எனப்பார்ப்போம்.

டாஸ் ஜெயிப்பது முக்கியம்.

ஹர்பஜன், சோயப் அக்தர் இடம் பெறமாட்டார்கள்

aren
10-02-2006, 10:51 PM
போன ஆட்டத்தை அநியாயமாக கோட்டை விட்டுவிட்டார்கள். இந்த ஆட்டத்தில் ஜெயிப்பது கொஞ்சம் கடினமே. டாஸ் பாகிஸ்தான் வென்றுவிட்டால் மாட்சும் அவர்களுக்கே போகும் என்று நினைக்கிறேன்.

டாஸ் நாம் வென்றால் வெற்றி வாய்ப்பு கிடைக்க வாய்ப்பிருக்கிறது, ஆனால் நம் மக்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்பதைப் பொருத்தே அது அமையும்.

இந்த மாட்சிலாவது ஷேவாக் அடிப்பாரா? சச்சின் போன முறை அடித்துவிட்டதால் இந்த முறை அடிப்பார் என்று தோன்றவில்லை.

சுரேஷ் ரைனாவை உள்ளே கொண்டுவரலாம் என்பது என்னுடைய கருத்து.

அறிஞர்
13-02-2006, 03:25 PM
சூப்பரோ சூப்பர் ஆட்டம்.....

முசாரப் முன்னிலையில் தோனி ஆட்டம் கலக்கலோ கலக்கல்.... சச்சின், யுவராஜ், பதான், ஆர்.பி.சிங்க் ஆட்டங்களும் சூப்பர்

நன்கு ரசித்து மேட்ச் பார்த்தேன்

அழகன்
13-02-2006, 03:35 PM
இன்றைய ஆட்டம் படு சூப்பர் தோனிக்கு என் வாழ்த்துக்கள்.

அறிஞர்
13-02-2006, 06:33 PM
இன்றைய ஆட்டம் படு சூப்பர் தோனிக்கு என் வாழ்த்துக்கள்.ஆட்டம் பார்த்திங்களா அன்பரே

தாமரை
14-02-2006, 03:56 AM
ஆட்டம் பார்த்திங்களா அன்பரே
தோனி இந்தியாவைக் கரை சேர்த்த தோணி..

aren
14-02-2006, 04:58 AM
வெற்றி பெற்ற இந்தியாவிற்கு என் வாழ்த்துக்கள்.

இன்னும் இரண்டு போட்டிகள் உள்ளன. என்ன செய்கிறார்கள் என்று பார்போம்.

பரஞ்சோதி
14-02-2006, 05:03 AM
அருமையான போட்டி, காண கண் கோடி வேண்டும்.

சச்சினை விமர்சனம் செய்தவங்க எல்லாம் தங்கள் வாயை நல்லா சோப்பு போட்டு தான் கழுவ வேண்டும் என்பது போல் அடித்து விளாசி விட்டார்.

aren
14-02-2006, 10:48 AM
அருமையான போட்டி, காண கண் கோடி வேண்டும்.

சச்சினை விமர்சனம் செய்தவங்க எல்லாம் தங்கள் வாயை நல்லா சோப்பு போட்டு தான் கழுவ வேண்டும் என்பது போல் அடித்து விளாசி விட்டார்.

ஆனால் அநியாயமாக சச்சின் சதம் அடிக்கவேண்டிய நேரத்தில் மறுபடியும் அப்துல்ரசாக் பந்துவீச்சில் அவுட் ஆகிவிட்டாரே? சதம் அடித்திருக்கலாம்.

யுவராஜ் சிங்கின் ஆட்டமும் தோனி ஆட்டமும் நன்றாக இருந்தது. தோனி மாட்சை இந்தியாவிற்கு சாதகமாக மாற்றிவிட்டார். யுவராஜின் அனுபவம் நன்றாகத் தெரிந்தது இந்த மாட்சில்.

மதி
16-02-2006, 07:42 AM
இன்றைய ஆட்டத்தின் போக்கு இந்தியாவிற்கு சாதகமாக உள்ளதே...
இறுதியில் ஜெயிக்கப் போவது யார்.?

தாமரை
16-02-2006, 08:55 AM
இன்றைய ஆட்டத்தின் போக்கு இந்தியாவிற்கு சாதகமாக உள்ளதே...
இறுதியில் ஜெயிக்கப் போவது யார்.?
சிம்பு!!!
முடிஞ்சா பதிலுக்கும் கேள்விக்கும் முடிச்சு போடுங்க பார்ப்போம்

sarcharan
16-02-2006, 09:06 AM
யாரது சிம்பு?


சிம்பு!!!
முடிஞ்சா பதிலுக்கும் கேள்விக்கும் முடிச்சு போடுங்க பார்ப்போம்

மதி
16-02-2006, 09:12 AM
யாரது சிம்பு?

அதானே.. யாரது..!

தாமரை
16-02-2006, 09:24 AM
சிம்பு!!!
முடிஞ்சா பதிலுக்கும் கேள்விக்கும் முடிச்சு போடுங்க பார்ப்போம்
மன்மதனில் சிம்பு டயலாக்..

மன்மதனில் சிம்பு டயலாக்..

யார் முதல்ல வர்ராங்க அப்படிங்கறது பெருசு இல்லை..
கடைசியில யார் ஜெயிக்கிறாங்கங்கறது தான் முக்கியம்..

மறைமுகமாய் தனுஷுக்கு சொன்னது இது.

மதி
16-02-2006, 09:27 AM
மன்மதனில் சிம்பு டயலாக்..

மன்மதனில் சிம்பு டயலாக்..

யார் முதல்ல வர்ராங்க அப்படிங்கறது பெருசு இல்லை..
கடைசியில யார் ஜெயிக்கிறாங்கங்கறது தான் முக்கியம்..

மறைமுகமாய் தனுஷுக்கு சொன்னது இது.
நல்ல வேளை...
இங்க யாரும் கையை ஆட்டி பேசற ஆளில்லையே..அப்புறம் யார சொல்றீயளோன்னு நெனச்சேன்..

ஆக மொத்தம் பாரதம் வெல்லும்-ங்கறீங்க..

மதி
16-02-2006, 09:28 AM
ஆஹா மனுசன் கலக்குவாருன்னு பாத்தா அவுட்டாயிட்டாரே..
சச்சின் - 0

pradeepkt
16-02-2006, 03:47 PM
ஆனா அருமையா மேட்ச் மட்டுமில்லை, இந்த சீரிஸையே ஜெயிச்சாச்சே... இனிய பழிவாங்கல்...
இந்திய அணிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

ஆரென் அண்ணா,
இன்னைக்கு நான் நிஜமாவே ஆபீசில் இல்லை :D :D