PDA

View Full Version : மனதிலறைந்த சிலுவை



ilanthirayan
23-12-2005, 03:00 PM
உறவு உயிர்
துறந்து போக

உணர்வு நிலை
குலைந்து போக

நினைவில் ரணம்
நிறைந்து போக

வாழ்வின் அடி
அசைந்து போக

கரையிற்கடல் கால்
வைத்துப் போக

மனதிலறைந்த சிலுவை
மறக்காது போகும்

ஓராண்டு வந்து
சேர்ந்ததம்மா....

உங்கள் நினைவுகளுடன்
இன்றும் நாங்கள்.....


( சுனாமியில் தம் இனிய உறவகளைப் பறி கொடுத்து துவண்டு போன இதயங்களுக்குச் சமர்ப்பணம்.)

aren
23-12-2005, 03:04 PM
உங்களுடன் சேர்ந்து நானும் என்னுடைய நினைவஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Mano.G.
23-12-2005, 11:44 PM
ஓராண்டு ஆயினும்
உன் வரவின் நினைவு
பல ஆண்டுகள்
மனதை வருத்த செய்யும்


சுனாமி பேரலையில்
உயிர் நீத்தோருக்கு
நினைவாஞ்சலி

மனோ.ஜி

kavitha
24-12-2005, 03:07 AM
திரும்ப திரும்ப நினைக்க மனபாரம் சிலுவையாய் அழுத்தவே செய்கிறது. கவிதை நன்று இளந்திரையன்!
அந்த ஆத்மாக்கள் சாந்தியடைய எனது பிரார்த்தனைகளும்.

ilanthirayan
25-12-2005, 01:34 PM
சுனாமியின் அதிர்வுகள் காலகாலமாக நெஞ்சில் விரிந்து கொண்டே இருக்கும்.

தமிழன் வரலாற்றுக்கும் கடல் கோள்களுக்கும் காலமெல்லாம் தொடர்புண்டு . கடல் கொண்ட குமரி காவிரிப்பூம் பட்டினம் என்று அதற்கும் அப்பால் பக்றுளி ஆறும் மேரு மலையும் கொண்ட பரந்த லெமூரியக் கண்டமும்... தமிழர் சரித்திரம் தன்னை தன்னுடன் கொண்டு ஆழ்ந்த சமுத்திரத்தில் அமிழ்ந்து கிடக்கின்றது.

இளைய தலை முறையினர் என்றாலும் சரித்திர ஆதாரங்களைத் திரட்டும் முயற்சியில் ஈடுபட வேண்டும். கடல் கொண்டிருந்த மகாபலிபுரத்தின் சரித்திர சின்னங்கள் இக்கடல் கோளினால் வெளிக்கொணரப் பட்டுள்ளது.

இதுவே மேலை நாட்டினரென்றால் தங்கள் வரலாற்றுச் சரிதத்தை ஒழுங்கு படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டிருப்பார்கள். ஒன்றுமே இல்லாத ரைற்றானிக்கையே விழுந்து விழுந்து தோண்டுகிறார்கள்.

தமிழ் நாட்டில் தமிழ் உணர்வுள்ள தலமைகள் இல்லாதிருந்த அரசியல் சூழ்நிலமையும் இதற்கு ஒரு காரணம் என்று நினைக்கின்றேன்.

தொழில் நுட்ப, கணணியியல் அறிவு பெற்ற தலை முறையிலும் இதுபற்றிய முயற்சிகள் காணப் படுகின்றனவா? .. என்ன?

நடந்ததைக் குறை சொல்லும் வீணே காலவிரயம் செய்யும் குறுகிய வட்டத்திற்குள் இந்த இளைய தலை முறையும் அமிழ்ந்து போய் விடுமோ?

வலைப் பூக்களில் நடந்து கொண்டிருக்கும் ஒன்றுமே இல்லாத அரசியல் காட்சிகளைப் பார்க்கும் போது அப்படித் தான் எண்ணத் தோன்றுகின்றது.

இளசு
28-12-2005, 12:31 AM
இயற்கையால் நிகழ்ந்த சோகங்கள் பற்றியும்
செயற்கையாய் நிகழும் சில அலட்சியங்கள் பற்றியும்

உங்கள் உணர்வுகளில் நானும் பங்கேற்கிறேன் இளந்திரையன்..

வெற்றுப் பிரச்சினைகள் - போன மாதம் பற்றி எரிந்து இந்த மாதம்
அதை மறந்தே போய்விடும் கவைக்குதவாத பிரசினைகளை
வியாபாரத்துக்காக ஊதிவிடும் இதழ்கள், கட்சிகளை விஞ்சி
இளைய -இணைய தலைமுறையும் வறட்டு விவாதம்/ விரயம் செய்வதை என்னவென்று சொல்ல?

ilanthirayan
29-12-2005, 01:13 AM
ஒவ்வொரு கவிதை கவிதையாகப் படித்து விமர்சனமும் உற்சாகமும் தரும் உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.

சிறப்பாக கவிதை பற்றியோ அல்லது அது ஏற்படுத்தும் மன நெகிழ்வுகள் பற்றிய எண்ணங்களையோ எடுத்து வரும் இளசு அவர்களினதும் ஆரன் அவர்களினதும் பின்னூட்டங்கள் கவிதானுபவத்தை மீண்டும் மீண்டும் திரும்பிப் பார்க்க வைக்கின்றன.

அந்த வகையில் இவர்கள் சிறப்புக்குரியவர்கள். மீண்டும் நன்றிகள்.