PDA

View Full Version : ஏன் கலங்குகின்றாய்



thirukanaga
23-12-2005, 11:37 AM
அலறல்கள் பதறல்கள்
ஆளுக்கொரு பிதற்றல்கள்
நிலையில்லா உலகினிலே
நீ நானென்ற உளறல்கள்

கடலை நீ பார்த்து
கண்டு களிக்கின்றாய்
கடலே கிட்ட வந்தால்
காதைதூரம் ஓடுகின்றாய்

கடல்மீன் நீ பிடித்து
கறிசமைத்துண்கின்றாய்
கடலே உன்னைக்கொன்றால்
கடற்கோள் என்கின்றாய்

நல்லதெல்லாம் நடந்துவிட்டால்
நாயகனே என்கின்றாய்
நாசங்கள் நடந்துவிட்டால்
இயற்கையில் பழி போடுகின்றாய்

உனக்கு துயர் வருமென்று
உலகையே அழிக்கின்றாய்
உலகமே உனையழித்தால்
நீ ஏன் கலங்குகின்றாய்

Mano.G.
23-12-2005, 11:50 PM
அலறல்கள் பதறல்கள்
ஆளுக்கொரு பிதற்றல்கள்
நிலையில்லா உலகினிலே
நீ நானென்ற உளறல்கள்


உனக்கு துயர் வருமென்று
உலகையே அழிக்கின்றாய்
உலகமே உனையழித்தால்
நீ ஏன் கலங்குகின்றாய்


இதுதான் மனித நீதியோ


மனோ.ஜி

kavitha
24-12-2005, 02:44 AM
நாசங்கள் நடந்துவிட்டால்
இயற்கையில் பழி போடுகின்றாய்
முள்ளின் மீது நம் கால் பட்டாலும்... முள் குத்திவிட்டது என்று தானே சொல்கிறோம். சரியாகச் சொன்னீர்கள் கனகா.

நெற்றியடிகளாய் உங்கள் கவிதைகள். தொடருங்கள். நன்றி. :)