PDA

View Full Version : நடு நிசி நாய்கள்



ப்ரியன்
23-12-2005, 09:37 AM
நடு நிசி நாய்கள்
*********************

இரவில் அப்படி இப்படி
திரும்பி புரண்டுப்
படுக்கையில் தூக்கம்
கலைந்து போகும்
சில நாட்கள்!

பக்கத்து வீட்டு
மரம் அசைதலில்
பேய் கண்டுபிடித்து
மனம் கிலி கொள்ளும்
சில நேரம்!

மாலையெல்லாம்
அமைதியாய்
கம்பம் தேடிய
நாய்கள் குரைத்துத் தொலைக்கும்;
அவ்வப்போது
குலை நடுங்க வைக்கும்!

சின்னதொரு வயதில்
இருட்டியப் பின் கடைக்கு
செல்லும் நாட்களில்
தூரத்தில் வரும் அப்பனை
அடையாளம் காணாமல்
பேய் வருதென் பயந்து
பதுங்கியதும்;
டவுசரைப் பிடித்தப் படி
துணைக்கு சத்தமாய்
பாட்டை நடுங்கியபடி
கத்திச் சென்ற
நினைவுகளும்;
மனதில் நின்று ஊஞ்சலாடி
மெல்லியதாய் புன்னகை
பூக்கச் செய்யும்!

அது தொடர்ந்து
என்னைப் போல
எதைக் கண்டு
பயந்து கத்துகின்றனவோ
இந்நடு நிசி நாய்கள்! - என
எண்ணும் கணம்
இன்னும் பயங்கரமாக கத்தி
பயமுறுத்தி தொலையும்!

ஆனாலும்,
எந்த நாயும்
சொல்லியதில்லை என்னிடம்
இரவில் கத்தும் ரகசியத்தை;
ஏனோ நானும்
இதுநாள் வரை கேட்டதில்லை
அவ்ரகசியத்தை!

- ப்ரியன்.

பி.கு : பெஞ்சமின் அறிவுறுத்தியபடி இனி தனித் தனித் திரிகளில் என் கவிதைகள் தொடரும்.

thirukanaga
23-12-2005, 11:12 AM
நானும் ஒரு நாயிடமும் கேட்கவில்லை இன்னும்
காதைக்கொடுக்கலாம் திரும்பிவருமென்று நம்பிக்கை இருந்தால்

kavitha
24-12-2005, 03:14 AM
நானும் ஒரு நாயிடமும் கேட்கவில்லை இன்னும்
காதைக்கொடுக்கலாம் திரும்பிவருமென்று நம்பிக்கை இருந்தால்

ஹஹ்ஹா...ஹா..
நம்பிக்கை மட்டுமல்ல..தைரியமும் வேண்டும்.

ப்ரியன் உங்கள் கவிதைகளை வலைப்பூவில் வாசித்தேன். மிக அருமையாக இருந்தன.


என்னைப் போல
எதைக் கண்டு
பயந்து கத்துகின்றனவோ
இந்நடு நிசி நாய்கள்!

உண்மையும் கூட அதுதான். எந்த விலங்குகளும் தாமாக ஆபத்தை விளைவிக்காது (பழக்கப்படுத்தாவிட்டால்).

aren
24-12-2005, 04:26 AM
கவிதை அருமை. ஆனால் மிருகங்களும் பறவைகளும் முன்வரும் இயற்கை ஆபத்தை முன்னதாகவே கண்டுபிடித்துவிடும் என்று சொல்வார்கள்.

நாய்கள் சில சமயங்களில் கத்துவது வேறு ஏதாவது விஷயத்திற்காகவும் இருக்கலாம்.

திருநெல்வேலியின் இருக்கும் கரடிப்பட்டி என்ற கிராமத்தில் நிறைய தற்கொலைகள் நடப்பதாகவும் அதற்குக் காரணம் இந்த பேய் பிசாசு பயம்தான் காரணம் என்று இன்று சன் டிவியில் சொன்னார்கள்.

thirukanaga
24-12-2005, 09:24 AM
நாய்கள் போல் மனிதன் மாறுவதை முன்னரே நாய்கள் கண்டுபிடித்துதானோ கத்துகின்றன

பென்ஸ்
24-12-2005, 05:30 PM
இம்ம் நல்ல கவிதை ப்ரியன்.. நானும் பல நாட்கள் வீட்டின் ஜன்னலின்
அசைந்து திரியும் வாழை இலையை பார்த்து பயந்து போய்
போர்வையை தலை மேல் போர்த்தி படுத்தும் உள்ளே அது அசைவதாய் தெரியும்...

எலிகள் ஓடும் சப்தம் பேயின் சலங்கை ஒலியாய் தோன்றும்,
அப்போது பார்த்துதான் விட்டின் முன்னால் உள்ள முல்லையும்
மலரும்... தென்றலின் தேனிசையும் பேயின் பாடலாய் தோன்றும்...

எங்கோ ஒரு நாய் குலைக்க துவங்க, நானும் விழித்துதான் இருக்கிறேன் என்று சொல்லும் மற்ற நாய்களும்...

வீட்டின் அருகே ஒரு குளம், அதன் அருகே ஒரு கோவில், சாஸ்தா
கோவில், சாத்தான் என்று மருவியது... வருடத்திற்க்கு ஒரு முறை
பூஜை இட வ்ருபவர்களை விட யவரும் அந்த பக்கம் போவது கிடையாது, அங்கு
இருட்டியப் பின் கடைக்கு
செல்லும் நாட்களில்
தூரத்தில் வரும் அப்பனை
அடையாளம் காணாமல்
பேய் வருதென் பயந்து
பதுங்கியதும்;
டவுசரைப் பிடித்தப் படி
துணைக்கு சத்தமாய்
பாட்டை நடுங்கியபடி
கத்திச் சென்ற
நான் உங்கள் கவிதையை பார்த்த போது மீண்டும் ஒரு முறை வீடு சென்று வந்தேன்....

இன்னும் முயர்ச்சிக்கவில்லை... மயன்று பார்க்கிறேன் எதாவது ஒரு நாயாவது என் நன்பனாக இருந்தால்...
(ஏற்க்கனவே நான்னும் என் தெருவில் ஒரு நாயும் எதோ ஆங்கில பட ஸ்டைலில் முறைத்து கொள்கிறோம்...)

வாழ்த்துகள் ப்ரியன்...

இளசு
28-12-2005, 12:37 AM
புரிபடாத எதுவுமே
பயம் அல்லது கோபம் தரும்..

பயம் சில நேரம் தாக்குதலாய் மாறி வரும்..

ஆசையை வென்றவரும் - அனைத்து பயங்களையும் வெல்வதரிது..


பகுத்தறிந்து பாதி பயம் விலக்கிவிட்டீர்கள் ப்ரியன்..

இன்னும்..?

உய்த்தறிந்து குரைக்கும் நாய்களை கேட்டறிவதா?
திருகனகா கருத்தைக் காது கொடுத்து கேட்டால்
புதுபயம் முளைக்கிறதே..!!!!

பென்ஸ்
28-12-2005, 09:58 AM
புரிபடாத எதுவுமே
பயம் அல்லது கோபம் தரும்..

பயம் சில நேரம் தாக்குதலாய் மாறி வரும்..

ஆசையை வென்றவரும் - அனைத்து பயங்களையும் வெல்வதரிது..


பகுத்தறிந்து பாதி பயம் விலக்கிவிட்டீர்கள் ப்ரியன்..



மேலே சொல்ல பட்டது "பெண்களை தவிர" மீதி எல்லாவற்றிக்கும் தானே இளசு????

ப்ரியன்
07-01-2006, 05:07 AM
எனக்கு மன நிறைவை தந்த என் கவிதை ஒன்றிற்கு இதனை பின்னூட்டம் கிட்டியது என் பாக்கியம் மட்டற்ற மகிழ்ச்சி

/*நானும் ஒரு நாயிடமும் கேட்கவில்லை இன்னும்
காதைக்கொடுக்கலாம் திரும்பிவருமென்று நம்பிக்கை இருந்தால்*/

திருகனகாமனிதனிடம் கொடுத்தாலே திரும்பி வருமா எனத் தெரியவில்லை இந்நாட்களில் பழக்கமில்லா நாய்களை எப்படி நம்புவது?

/*ப்ரியன் உங்கள் கவிதைகளை வலைப்பூவில் வாசித்தேன். மிக அருமையாக இருந்தன. */

நன்றி கவி,வாசித்தமைக்கும் இங்கு பாராட்டியமைக்கும்

/*கவிதை அருமை. ஆனால் மிருகங்களும் பறவைகளும் முன்வரும் இயற்கை ஆபத்தை முன்னதாகவே கண்டுபிடித்துவிடும் என்று சொல்வார்கள். */

நன்றி ஆரன்...உண்மை விலங்குகள் இயற்கை ஆபத்துக்களை முன்னமே அறிகின்றன என்பது உண்மையே சுனாமி,பூகம்பம் போன்றவை எற்படும்போது விலங்குகள் முன்னமே அறிகின்றன என்பது நிரூபிக்கப்பட்டுள்ளன...அவை இன்னமும் இயற்கையை ஒட்டியே வாழ்வதால் அவைகளினால் இயற்கை மாற்றங்களை அறியமுடிகிறது ஆனால் மனிதன் என்ற மிருகம் என்றோ தன்னை இயற்கையிலிருந்து துண்டித்துக் கொண்டானே :(

/*இம்ம் நல்ல கவிதை ப்ரியன்..*/

நன்றி பெஞ்சமின்...

/*எலிகள் ஓடும் சப்தம் பேயின் சலங்கை ஒலியாய் தோன்றும்,*/

அது எலிகள் என்று எனக்குத் தோன்றவில்லை பெஞ்சமின் அவை சுவர் கோழிகள் எனப்படும் ஒரு வகை பூச்சி (வண்டு) இனங்கள் இரவில் சுவற்றில் ஊர்ந்து செல்லும் போது சலங்கை ஒலியை எழுப்பும் நீங்கள் வெளிச்சம் காட்டினால் சப்தம் நின்றுவிடும்...

எல்லோருக்குமான அநுபவம்தானே இந்த பேய் அநுபவங்கள் :)

/*
புரிபடாத எதுவுமே
பயம் அல்லது கோபம் தரும்..
*/

உண்மை இளசு

பாம்பைக் கண்டால் படையே நடுங்கும் ஆனால் அதே பாம்பை நீங்கள் துன்புருத்தினால்தான் தற்காப்புகாகத்தான் தாக்கும் எந்தப் பாம்பும் கடிக்கவேண்டும் என்ற வேறியோடு திரிவதில்லை பயத்தோடு தான் திரிகின்றன..

பி.கு: தாமதமான சுருக்கமான பதிலுரைக்கு மன்னிக்க :)...கடந்த பத்து நாட்களாக உடல்நலம் சரியில்லாமல் (டைபாயிட் காய்ச்சல்) இருந்ததால் பதில் அனுப்ப தாமதமாயிற்று.இப்போது உங்கள் அன்பாலும் இறைவன் அருளாலும் பூரண குணமடைந்து சுகமாக உள்ளேன்.

இளசு
07-01-2006, 10:53 PM
அன்பு ப்ரியன்,

தாமதம்.. மன்னிப்பு எல்லாம் எதுக்கு?
நீங்கள் காய்ச்சலில் இருந்து தேறி வந்ததே பெருமகிழ்ச்சி எங்களுக்கு.

நல்ல ஓய்வு , உணவு எடுத்து உடல்நலம் தேற்றவும்...

பென்ஸ்
13-01-2006, 10:35 AM
ப்ரியன்,

நலம்தானே???

மீண்டும் சிறிது நாட்களாக காணமுடியவில்லை என்பதால் ஒரு கரிசனத்துடன் கூடிய நலவிசாரிப்பு.....

:) :)

ப்ரியன்
17-01-2006, 11:21 AM
அக்கறை எடுத்துக் கொண்டமைக்கு நன்றி இளசு,பெஞ்சமின்...காய்ச்சலுக்காக விடுமுறை எடுத்ததால் பின் தங்கிய வேலைகள் அதிகமாகிவிட்டன பெஞ்சமின் அதனாலேயே படிப்பதும் எழுதுவதும் குறைந்து போயின...மற்றபடி எல்லாம் நலமே