PDA

View Full Version : டிசம்பர் 26,2004 சுனாமி.



Mano.G.
23-12-2005, 05:09 AM
நீ அமைதியாய் இருப்பதை கண்டோம்,
அமைதியின் சொரூபமோ என நினத்தோம்
உன் அழகை கண்டு மகிழ்ந்தோம்
உன்னுள் அடங்கிய அதிசயங்களை கண்டு வியந்தோம்
உன்னுள் காணும் இரகசியங்காளை கண்டு தயங்கினோம்


எல்லாவற்றுக்கும் மேலாக
அழிப்பதிலும் நீ வல்லவன் என்பதை
காண்பித்தாயே
கடந்த டிசம்பர் 26,2004
மறக்க முடியுமா,
இல்லை நினைக்காமல்
இருக்கத்தான் முடியுமா

சுனாமியே , உன்
வருகையை நாங்கள்
வரவேற்கவில்லை.



மனோ.ஜி

mukilan
23-12-2005, 05:14 AM
சென்ற வருடத்தின் கருப்புநாட்கள் அவை ! எப்படி மறக்க முடியும். சுனாமி! நீ பிரளயத்தின் பினாமி! என்று வைரமுத்துவின் வரிகள் விளக்கிய நிதர்சனம். இயற்கையே! போதும் உன் சீற்றம்.

pradeepkt
23-12-2005, 05:29 AM
இனி உலகம் இனிமை காணட்டும்.
சுனாமியில் பரிதவித்தோர் மகிழ்வை அடையட்டும்.

பென்ஸ்
23-12-2005, 06:11 AM
சுனாமி...
நீ எங்களிடமிருந்து
எடுத்து சென்றதை எல்லாம்
நீயே வைத்துகொள்,
திருப்பித்தர கூட
இனி நீ வரவேன்டாம்...


இன்னும் மறக்க முடியவில்லை சிதைந்த மனங்களையும் புதைந்த பினங்களையும்... அன்று உயிர் நீத்த அனைவருக்கும் என் அஞ்சலி...

என் அத்தானின் சகோதரன் காஸ்ட்ரோ (38), அவர் மகன் ஆஸிக் (3), மகள் ஆஸ்மி (2) இவர்களுக்காகவும் என் பிராத்தினைகள்...

aren
23-12-2005, 06:16 AM
என் வாழ்க்கையில் உண்மையான கரிநாள் 26.12.2004. அது இனிமேல் வரவே வேண்டாம்.

பென்ஸ், உங்களுடைய குடும்பத்திலும் சோகம் நிகழ்ந்த்தா? என்னுடைய ஆழ்ந்த வருத்தங்கள்.

இறந்த அனைவருக்கும் என்னுடைய பிரார்த்தனைகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

kavitha
24-12-2005, 03:00 AM
உலுக்கிய கிலுக்கிப்பிடி (நன்றி: இளசு அண்ணா) மீண்டும் நிகழ வாய்ப்பிருப்பதாய் செய்தி அறிவுப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன. பாதுகாப்பாய் இருப்போம். அனைவருக்காகவும் பிரார்த்திப்போம்.

இளசு
28-12-2005, 12:42 AM
பூமித்தட்டுகள் புரண்டு பின் சமனானது


சின்ன இயற்கை நிகழ்வு..

எத்தனை எத்தனை உயிரிழப்பு... மன அமைதி அழிப்பு..


ஊழிக்காலம் என்னும் சொல்லுக்கு விளக்கமாய் வந்த
ஆழிப்பேரலை...

தொடரும் மழை -புயல், பனிப்பொழிவு எல்லாமே
சுனாமியின் வாரிசுகளா?


இனி வராது என விழைவோம்..

வந்தால் ஒரு உயிரும் விழாது என பாதுகாக்க முயல்வோம்..


அஞ்சலிக்கவிதைக்கு நன்றி மனோஜி..