PDA

View Full Version : சில தத்துவங்கள்!

mukilan
23-12-2005, 03:59 AM
மின்னஞ்சலில் வந்த தத்துவங்களின் மொழிபெயர்ப்பு!

1.ஆம்பளைக்கு அடிபட்டா தூக்கிட்டுப் போக ஆம்புலன்ஸ் இருக்கு
பொம்பளைக்கு அடிபட்டா தூக்கிட்டுப் போக பொம்புலன்ஸ் இருக்கா?

2.தண்ணியிலே மீன் இருக்குறதால தண்ணீ நான் -வெஜ் ஆகாது

3.நடந்து போனாக் கால் வலிக்கும். ஆனா கால் வலிச்சா நடக்க முடியுமா?

4.காலைக்கடிக்குற செருப்பால முள்ளைக் கடிக்க முடியாது.

5. எவ்வளவுதான் நீச்சல் தெரிஞ்சாலும் ஒரு டம்ளர் தண்ணியிலே நீந்த முடியாது கண்ணா.

6.சைக்கிள் நின்னாலும் சக்கரம் சுத்தும், ஆனால் சக்கரம் நின்னால் சைக்கிள் சுத்துமா!

7.கண்ணா அயர்ன் பாக்ஸால அயர்ன் பண்ண முடியும், ஆனா பென்சில் பாக்சால பென்சில் செய்ய முடியாது!

mania
23-12-2005, 04:04 AM
அட்ரா சக்கை.....அட்ரா சக்கை....:D :D :D
அன்புடன்
மணியா...:D :D

mania
23-12-2005, 04:16 AM
சில பூத்துவங்கள் (பூவின் தத்துவங்கள்).....
1) செல்லுல பாலன்ஸ் இல்லேன்னா கால் பண்ணமுடியாது.....:rolleyes: ஆனா மனுஷனுக்கு கால் இல்லேன்னா பேலன்ஸ் பண்ணமுடியாது.....!!!!????:D :D
2)பஸ் ஸ்டாண்ட்.....பஸ் போன பிறகும் அங்கேயே நிற்கும்.....ஆனா சைக்கிள் ஸ்டாண்ட் சைக்கிள் போனால் கூடவே போயிடும்.....ஹி...ஹி...ஹி...:rolleyes: :D :D
அன்புடன்
மணியா...:D :D
(டெயிலி என்னை போட்டு தாக்குறான்.... நீங்களும் கொஞ்சம் அனுபவிங்க....ஹி...ஹி..ஹி...):D :D

mukilan
23-12-2005, 04:27 AM
தலை இன்னும் சில பல தத்துவங்கள் இருக்கு. அதில நம்ம சுவேதா பேரோட ஒன்னு கூட இருக்கு. நான் தான் போனா போகுதுன்னு விட்டிட்டேன்.

mania
23-12-2005, 04:29 AM
தலை இன்னும் சில பல தத்துவங்கள் இருக்கு. அதில நம்ம சுவேதா பேரோட ஒன்னு கூட இருக்கு. நான் தான் போனா போகுதுன்னு விட்டிட்டேன்.

ஹி...ஹி...ஹி....தனிமடல்....???:rolleyes:
ஆர்வத்துடன்
மணியா....:D

mukilan
23-12-2005, 04:38 AM
ஹி...ஹி...ஹி....தனிமடல்....???:rolleyes:
ஆர்வத்துடன்
மணியா....:D
அனுப்பிட்டேன் தலை!:D :D

gragavan
23-12-2005, 04:38 AM
ஹி...ஹி...ஹி....தனிமடல்....???:rolleyes:
ஆர்வத்துடன்
மணியா....:Dஎனக்கு எனக்கு எனக்கு...............

பென்ஸ்
23-12-2005, 04:39 AM
அனுப்பிட்டேன் தலை!:D :D

முகில்ஸ்... நண்பா.... எனக்கு...

pradeepkt
23-12-2005, 04:40 AM
அதானே இந்த மாதிரி தனிமடல் எல்லாம் வாங்குறதுக்குன்னே நம்ம நாலு பேரு இருக்கோமில்ல?
முகில்ஸ், கவனிங்க :D

mukilan
23-12-2005, 04:40 AM
தலை பேசாம இங்க பதிஞ்சிருங்க! நான் தப்பிச்சேன் அப்பா! சுவேதாவைக் காலை வாறறதுக்கு இத்தனை பேர் இருப்பீங்கன்னு தெரியாமப் போச்சு. என்னதான் எதிரணியாக இருந்தாலும் பொழைச்சிப் போகுதுன்னு விட்டிடலாமா. தலை தீர்ப்பு சொல்லுங்க!

mania
23-12-2005, 04:43 AM
:D :D :D ஹா....ஹா.....ஹா.....:D :D :D (மிகிலனின் தனிமடல் கண்டு )
அன்புடன்
மணியா...:D :D

gragavan
23-12-2005, 04:48 AM
ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹோ
(ஞானும் தனிமடல் கண்டு)

pradeepkt
23-12-2005, 04:50 AM
ஹைய்யோ ஹைய்யோ...
என்னாது இது சின்னப் புள்ளைத்தனமா இருக்கு?
எனிவே, நேனு கூட தனிமடலை சூஸ்தானு :D

பென்ஸ்
23-12-2005, 04:53 AM
பின்னே.. ஞானும் கன்டல்லோ... கலக்க்யல்லா முகிலா.. நீ எந்தா இதின வேன்டி பிறத்தெக கோர்ஸ் வல்லதும் எடுக்குனுன்டா???

அறிஞர்
23-12-2005, 05:08 AM
அருமை.... மீண்டும் இங்கு படிப்பதில் சந்தோசம்...

அது என்னப்பா சுவேதாவை வைத்து.... ஓட்டுறீங்க...

mukilan
23-12-2005, 05:11 AM
பின்னே.. ஞானும் கன்டல்லோ... கலக்க்யல்லா முகிலா.. நீ எந்தா இதின வேன்டி பிறத்தெக கோர்ஸ் வல்லதும் எடுக்குனுன்டா???

ஞான் கோர்ஸ் அல்லாம் எடுக்கலை கண்டா! இதி என்னா நிங்கள் குழப்பம் விளைவிக்கப் பரயுரது!

aren
23-12-2005, 06:23 AM
செம்ம கடிப்பா!!!

நன்றாக இருந்தது. இன்னும் இருந்தால் இங்கே அனுப்பிவையுங்கள்.

gragavan
23-12-2005, 08:04 AM
செம்ம கடிப்பா!!!

நன்றாக இருந்தது. இன்னும் இருந்தால் இங்கே அனுப்பிவையுங்கள்.யாரை வையச் சொல்றீங்க? இதெல்லாம் சரியில்லீங்க.

மதி
27-12-2005, 09:17 AM
முகிலனின் பாதையை பின்பற்றி...:p :p
1. பத்து எறும்பு ஒரு யானைய கடிக்க முடியும் ஆனா 10 யானையால ஒரு எறும்ப கடிக முடியாது...
2. கொசு கடிச்சா யானைக்கால் வரும் ஆனா யானை கடிச்சா கொசுகால் வராது..
3. போலீசுக்கும் பொறுக்கிக்கும் என்ன வித்தியாசம்..:
"அடி-தடி" செஞ்சா பொறுக்கி
"தடி-அடி" செஞ்சா போலீசு
4. பால் கொட்டினா வேற பால் வாங்கலாம்
அரிசி கொட்டினா வேற அரிசி வாங்கலாம்.
தேள் கொட்டினா வேற தேள் வாங்க முடியுமா?
5. க்ரீம் பிஸ்கட்ல க்ரீம் இருக்கும் ஆனா
நாய் பிஸ்கட்ல நாய் இருக்காது..:D :D :D :D

(யாரும் அடிக்க வந்துடாதீங்கப்பூ...):eek: :eek:

aren
27-12-2005, 09:47 AM
உருளைக்கிழங்கு போண்டாவில் உருளைக்கிழங்கு இருக்கும்
ஆனால் மைசூர் போண்டாவில் மைசூர் இருக்காது.

sarcharan
27-12-2005, 09:59 AM
ஐயா முகிலரே,

எப்படி எப்படி அய்யா இது?

எங்க இருந்து தான் இப்படி எல்லாம் தோணுதோ...?

ஹ்ம்ம் .....

மின்னஞ்சலில் வந்த தத்துவங்களின் மொழிபெயர்ப்பு!

1.ஆம்பளைக்கு அடிபட்டா தூக்கிட்டுப் போக ஆம்புலன்ஸ் இருக்கு
பொம்பளைக்கு அடிபட்டா தூக்கிட்டுப் போக பொம்புலன்ஸ் இருக்கா?

2.தண்ணியிலே மீன் இருக்குறதால தண்ணீ நான் -வெஜ் ஆகாது

3.நடந்து போனாக் கால் வலிக்கும். ஆனா கால் வலிச்சா நடக்க முடியுமா?

4.காலைக்கடிக்குற செருப்பால முள்ளைக் கடிக்க முடியாது.

5. எவ்வளவுதான் நீச்சல் தெரிஞ்சாலும் ஒரு டம்ளர் தண்ணியிலே நீந்த முடியாது கண்ணா.

6.சைக்கிள் நின்னாலும் சக்கரம் சுத்தும், ஆனால் சக்கரம் நின்னால் சைக்கிள் சுத்துமா!

7.கண்ணா அயர்ன் பாக்ஸால அயர்ன் பண்ண முடியும், ஆனா பென்சில் பாக்சால பென்சில் செய்ய முடியாது!

அறிஞர்
27-12-2005, 01:20 PM
என்னப்பா.. ஒருத்தரு மாத்தி ஒருத்தர்.. இந்த கடி கடிங்கிறீங்க....

கலக்குங்க.... ராஜேஷ், ஆரென் கடிகளும் அருமை

பென்ஸ்
28-12-2005, 10:50 AM
இன்னைக்கு இ-மெயிலில் வந்த்தது...

உலகம் தெரியாம வளந்தால் அவன் வெகுளி
கிரிக்கெட் தெரியாம வளந்தால் அவன் கங்கூலி

பாலில் இருந்து பால்கோவா பண்ணலாம்.. ஆனா
ரசத்தில் இருந்து ரசகுல்லா பண்ண்முடியுமா??

மீன் "தண்ணி"யில இருக்கிறதால அதை
அரேஸ்ட் பண்ண முடியுமா????

என்னதான் மீனுக்கு நீந்த தெரிஞ்ச்சாலும்
மீன் குளம்புல நீந்த முடியாது...

இந்த மாதிரி ஒரு தொடரை தொடங்கியவனை கண்டுபிடித்து, அடிய போடனும்... முகில்ஸ் உங்களை இல்லை... உன்மையிலையே துவங்கியவனை... ;-)

அறிஞர்
28-12-2005, 02:56 PM
கலக்கு ராசா.. கலக்கு... உங்க காட்டுல மழைதான்...

தொடங்கினவனை அடிக்கனும்ணா.. தொடருகிற உம்மை என்ன பண்ணுறது

mukilan
28-12-2005, 04:25 PM
இந்த மாதிரி ஒரு தொடரை தொடங்கியவனை கண்டுபிடித்து, அடிய போடனும்... முகில்ஸ் உங்களை இல்லை... உன்மையிலையே துவங்கியவனை... ;-)

ஹை! இது எப்படி? ஒருத்தர் மேல நல்லா வஞ்சம் வச்சிக்கிறதாமா! அப்பால... அது உன்னைச் சொல்லல கண்ணு! வேறாளச் சொன்னேங்கறது! ஏங்கண்ணா? உங்களுக்கு என்ற மேல கோபம் இருந்தா தனியா ஒரு கடுதாசி அனுப்பி இருக்கலாம்ல!:D :D

mukilan
28-12-2005, 04:29 PM
ஐயா முகிலரே,

எப்படி எப்படி அய்யா இது?

எங்க இருந்து தான் இப்படி எல்லாம் தோணுதோ...?

ஹ்ம்ம் .....

வாங்க சரண். நான் இதை தமிழ் மொழிபெயர்ப்புதான் செஞ்சேன். எழுதினது எல்லாம் பிரதீப்பு மற்றும் மன்றத்தில உள்ள மற்ற மென்பொருள் வல்லுனர்கள் போல யாரோ தான் (நீங்களும் சேர்ந்துதானே). உங்களுக்கு சம்பளம் கொடுத்து கம்யூட்டர் முன்னால உக்கார வெச்சு... இவிங்க அழிச்சாட்டியம் தாங்க முடியலை பாஸூ!:D ஒரே அலப்பரையைக் கெளப்புராய்ங்க!

மதி
29-12-2005, 03:24 AM
எழுதினது எல்லாம் பிரதீப்பு மற்றும் மன்றத்தில உள்ள மற்ற மென்பொருள் வல்லுனர்கள் போல யாரோ தான் (நீங்களும் சேர்ந்துதானே). உங்களுக்கு சம்பளம் கொடுத்து கம்யூட்டர் முன்னால உக்கார வெச்சு... இவிங்க அழிச்சாட்டியம் தாங்க முடியலை பாஸூ!:D ஒரே அலப்பரையைக் கெளப்புராய்ங்க!
சத்தியமான உண்மை முகில்..

pradeepkt
29-12-2005, 08:55 AM
வாங்க சரண். நான் இதை தமிழ் மொழிபெயர்ப்புதான் செஞ்சேன். எழுதினது எல்லாம் பிரதீப்பு மற்றும் மன்றத்தில உள்ள மற்ற மென்பொருள் வல்லுனர்கள் போல யாரோ தான் (நீங்களும் சேர்ந்துதானே). உங்களுக்கு சம்பளம் கொடுத்து கம்யூட்டர் முன்னால உக்கார வெச்சு... இவிங்க அழிச்சாட்டியம் தாங்க முடியலை பாஸூ!:D ஒரே அலப்பரையைக் கெளப்புராய்ங்க!
முகில்ஸூ
இதுக்கும் ஏய்யா என்னை வம்பிழுக்குற...
கம்பியூட்டர் முன்னால ஒக்கார வைக்கிறது வரைக்கும் சொல்லிட்டு மீதிய விட்டுட்டீரு...
பாஸூ, இப்படியே போனா பென்ஸூ உங்களை ஆக்கீருவாரு ஃபியூஸூ... ஹா ஹா :D

மதி
29-12-2005, 08:59 AM
முகில்ஸூ
இதுக்கும் ஏய்யா என்னை வம்பிழுக்குற...
கம்பியூட்டர் முன்னால ஒக்கார வைக்கிறது வரைக்கும் சொல்லிட்டு மீதிய விட்டுட்டீரு...
பாஸூ, இப்படியே போனா பென்ஸூ உங்களை ஆக்கீருவாரு ஃபியூஸூ... ஹா ஹா :D
ஏங்க குத்தமுள்ள நெஞ்சு குறுகுறுதாக்கும்...:D :D :p

pradeepkt
29-12-2005, 09:07 AM
மதி,
நான் உங்களுக்கும் சேத்துத்தான் சொன்னேன்...
உங்களுக்குக் கொஞ்சம் ஜாஸ்தியாக் குறுகுறுத்துருச்சோ :D :D :D

மதி
29-12-2005, 09:15 AM
மதி,
நான் உங்களுக்கும் சேத்துத்தான் சொன்னேன்...
உங்களுக்குக் கொஞ்சம் ஜாஸ்தியாக் குறுகுறுத்துருச்சோ :D :D :D
சத்தியமாண்ணா...:mad: :mad: :mad:
ரொம்பவே..:confused: :confused:

pradeepkt
29-12-2005, 09:17 AM
சரி சரி
இந்த மாதிரி இன்சைடர் மேட்டர் எல்லாம் உள்ளயே போட்டு அமுக்குங்க :D :D

மதி
29-12-2005, 09:19 AM
சரி சரி
இந்த மாதிரி இன்சைடர் மேட்டர் எல்லாம் உள்ளயே போட்டு அமுக்குங்க :D :D
அடடா..
இப்பவாவது புரிஞ்சதே....!:) :)

தாமரை
29-12-2005, 09:44 AM
முள்ளை முள்ளால எடுக்கலாம்...
விஷத்தை விஷத்தால முறிக்கலாம்...
வைரத்தை வைரத்தால அறுக்கலாம்....

ப்ளேடை ப்ளேடால அறுக்க முடியுமா?????

அப்படியே அறுத்தாலும்..
அறுக்கிற ப்ளேடு அறுபடுமா?
அறுபட்ற ப்ளேடு அறுக்குமா?

தாமரை
29-12-2005, 09:48 AM
------------------------------------------------------------
2)பஸ் ஸ்டாண்ட்.....பஸ் போன பிறகும் அங்கேயே நிற்கும்.....ஆனா சைக்கிள் ஸ்டாண்ட் சைக்கிள் போனால் கூடவே போயிடும்.....ஹி...ஹி...ஹி...
------------------------------------------------------------
எங்க வருது... எங்க ஊரு சாமி தியேட்டர் சைக்கிள் ஸ்டாண்ட்ல சினிமா பார்க்க போய் சைக்கிள ஸ்டாண்ட்ல விட்டேன். திரும்பி சைக்கிள எடுத்தா சைக்கிளோட ஸ்டாண்ட் மட்டும் தான் வருது.. சைக்கிள் ஸ்டாண்ட் வரலியே...?

sarcharan
29-12-2005, 11:51 AM
அண்ணா எந்த ஊருண்ணா உங்க ஊரு.....
ரொம்ப நல்ல ஊரு போல.....

இவுக ஊருக்கு வண்டியில போறவங்க சாக்குரதயா போங்கங்கோ...

------------------------------------------------------------
2)பஸ் ஸ்டாண்ட்.....பஸ் போன பிறகும் அங்கேயே நிற்கும்.....ஆனா சைக்கிள் ஸ்டாண்ட் சைக்கிள் போனால் கூடவே போயிடும்.....ஹி...ஹி...ஹி...
------------------------------------------------------------
எங்க வருது... எங்க ஊரு சாமி தியேட்டர் சைக்கிள் ஸ்டாண்ட்ல சினிமா பார்க்க போய் சைக்கிள ஸ்டாண்ட்ல விட்டேன். திரும்பி சைக்கிள எடுத்தா சைக்கிளோட ஸ்டாண்ட் மட்டும் தான் வருது.. சைக்கிள் ஸ்டாண்ட் வரலியே...?

ilanthirayan
31-12-2005, 12:30 AM
அட செம தூள்ப்பா....

நம்ம அக்கவுண்ட்டுக்கு சில துணுக்குங்கோ....

- கண்ணுல குத்தினா தண்ணீ வரும்
தண்ணீல குத்தினா கண்ணு வருமா?

-பாக்க வெட்டுனா பாக்கு வெட்டி
மண்ணை வெட்டுனா மண்வெட்டி
மனுசன வெட்டினா ......?????

வெட்ட வர முன்னே ஜூட்.....

தாமரை
04-01-2006, 12:47 PM
முட்டையை உடைக்காம
ஆம்லெட் போட முடியாது
சட்டை அழுக்காகம
சாதிக்க முடியாது..
--------
செல்வன் யுனிகோடில் எழுதுங்கள்

pradeepkt
04-01-2006, 01:40 PM
என்னய்யா வெட்டுக்குத்துன்னவுடனே ஒரே கட்டம் கட்டமாப் போட்டு சரணடைஞ்சிட்டீங்க...
யூனிகோடுக்கு வாங்க ராசா

அறிஞர்
04-01-2006, 10:08 PM
முட்டையை உடைக்காம
ஆம்லெட் போட முடியாது
சட்டை அழுக்காகம
சாதிக்க முடியாது..
சட்டை அழுக்காகனுமா என்ன சாதிக்க....

அறிஞர்
04-01-2006, 10:08 PM
செல்வனின் தாக்குதல்கள் அருமையோ அருமை.. தொடருங்க...

இளசு
04-01-2006, 10:11 PM
முகிலனில் ஆரம்பித்து தலை மார்க்கமாக சரவணன் வரை
சரவெடி ரவுசு விடும் இப்பதிவு -- வயிற்றுவலி வர சரியான வழி..

படிக்கவந்தா வயிறு வெடிக்க வச்சிடுவீங்க போல..

ரொம்ப நன்றி மக்களே - வாய்விட்டு சிரிக்க வச்சதுக்கு..

தாமரை
05-01-2006, 03:49 AM
சட்டை அழுக்காகனுமா என்ன சாதிக்க....

சட்டையே தேவையில்லை சாதிக்க ---- காந்தி:)

அறிஞர்
09-01-2006, 10:03 PM
சட்டையே தேவையில்லை சாதிக்க ---- காந்தி:):D :D :D :D அப்ப நீங்க... :D :D

தாமரை
10-01-2006, 12:09 PM
1. பேன்ட் போட்டு முட்டிபோட முடியும் ஆனா முட்டிபோட்டு பேன்ட் போட முடியுமா...........

2. ஃபேனுக்கும் ரெக்கை இருக்கு. பறவை-க்கும் ரெக்கை இருக்கு. ஃபேனால பறக்க முடியாது. பறவை-ஆல சுத்த முடியாது.

3. டூல் பாக்ஸ் ல டூல பார்க்க முடியும்... மேட்ச் பாக்ஸ் ல மேட்ச பார்க முடியுமா!!!

4. இருக்குறப்ப என்ன தான் காம்ப்ப்ளான், போர்ன்விடா குடிச்சாலும் செத்ததுக்கு அப்புறம் எல்லாருக்கும் பால் தான்

5. சௌத் இந்தியா-ல நார்த்தங்காய் கிடைக்கும். ஆனா, நார்த் இந்தியா-ல சௌத்தங்காய் கிடைக்குமா?!

6. பச்சை மொளகாயிலே பச்சை இருக்கும் ஆனா கொடமொளகாயிலே கொட இருக்குமா

7. லன்ச் பேக்ல லன்ச் எடுத்துட்டு போகலம்... ஆனா ஸ்கூல் பேக்ல ஸ்கூல் எடுத்துட்டு போக முடியது..

8. எவ்வளவு பெரிய ஆளா இருந்தலும், வீட்டு சமையலுக்கு பருப்பு கடையில தான் வங்கணும்....

9. மெழுகை வச்சு மெழுகு வத்தி செய்யலாம்... ஆனா கொசுவை வச்சு கொசு வத்தி செய்ய முடியாது....

10. கோவில் மணியை நம்ம அடிச்சா சத்தம் வரும்... கோவில் மணி நம்மள அடிச்சா ரத்தம் வரும்

மதி
10-01-2006, 01:46 PM
அய்யா.. செல்வரே..!
இங்கு ரத்த ஆறாக ஓடுது...!
எனக்கு எதாவது ஆச்சுனா நீர் தான் மருத்துவ செலவ ஏத்துக்கனும்..:angry: :angry:

அறிஞர்
10-01-2006, 07:35 PM
அய்யா.. செல்வரே..!
இங்கு ரத்த ஆறாக ஓடுது...!
எனக்கு எதாவது ஆச்சுனா நீர் தான் மருத்துவ செலவ ஏத்துக்கனும்..:angry: :angry:நீங்க திரும்ப கடிங்க... இரத்தத்துக்கு இரத்தம் சரியாகிடும்...

அறிஞர்
10-01-2006, 07:38 PM
2. ஃபேனுக்கும் ரெக்கை இருக்கு. பறவை-க்கும் ரெக்கை இருக்கு. ஃபேனால பறக்க முடியாது. பறவை-ஆல சுத்த முடியாது.
இரண்டு ரெக்கையில பேனை பார்த்தது இல்லையே...... :confused: :confused: :confused:

2. ஃபேனுக்கும் ரெக்கை இருக்கு. பறவை-க்கும் ரெக்கை இருக்கு. ஃபேனால பறக்க முடியாது. பறவை-ஆல சுத்த முடியாது. இது கொஞ்சம் ஒத்துப்போகமல் இருக்கு போல....:rolleyes: :rolleyes: :rolleyes:

10. கோவில் மணியை நம்ம அடிச்சா சத்தம் வரும்... கோவில் மணி நம்மள அடிச்சா ரத்தம் வரும் மணி ஏம்பா நம்மள அடிக்குது... B) B) B)

pradeepkt
11-01-2006, 03:40 AM
எங்க பக்கத்து வீட்டு மணிகிட்ட சொன்னா வந்து அடிச்சிட்டுப் போறாரு...
ஆனா உங்க பக்கத்து வீட்டு மணிகிட்ட சொல்லீராதீங்க, கடிச்சு வச்சிரும்...

mania
11-01-2006, 04:02 AM
:D :D :D அசாத்திய கடியா இருக்கே எல்லாம்......!!!!!ம்ம்ம்ம்ம் இன்னும் கொஞ்சம் கொடுங்கப்பா....!!!:D :D
அன்புடன்
மணியா...:D

அறிஞர்
11-01-2006, 03:19 PM
எங்க பக்கத்து வீட்டு மணிகிட்ட சொன்னா வந்து அடிச்சிட்டுப் போறாரு...
ஆனா உங்க பக்கத்து வீட்டு மணிகிட்ட சொல்லீராதீங்க, கடிச்சு வச்சிரும்... மணி, மணின்னு அடிக்கடி சொல்லி மணியாவை நியாபகப்படுத்துறீங்க....

தாமரை
12-01-2006, 04:35 AM
இரண்டு ரெக்கையில பேனை பார்த்தது இல்லையே...... :confused: :confused: :confused:

பேனுக்கு இறக்கை கிடையாது நண்பரே...:D :D :D :D :D

மணி ஏம்பா நம்மள அடிக்குது... B) B) B)

செல்வி தோடர் பார்க்கலையா?

அடடா அடுத்த ஒண்ணு...
மணி அடிக்கும்..
மணியா கடிப்பார்..

பென்ஸ்
12-01-2006, 04:48 AM
செல்வன் போட்டு தாக்குறிங்க....
எலா ஐவர் அணி ... நான் சின்ன பையனு தானே சீண்டுறிங்க,
அண்ணன் செல்வன் சிங்கத்துக்கிட்ட மோதி பாருங்கல...

pradeepkt
12-01-2006, 05:27 AM
பென்ஸூ
ஏன் இவ்வளவு பயம்?
பல திரிகளிலும் எங்க புராணத்தைப் பாடுறீங்க?
அதுக்குப் பதிலா அங்க வந்து தைரியமாச் சொல்ல வேண்டியதுதானே... நாங்க என்ன உங்கள மென்னு தின்னுருவமோ...
:D

அறிஞர்
12-01-2006, 03:45 PM
செல்வி தோடர் பார்க்கலையா?
அடடா அடுத்த ஒண்ணு...
மணி அடிக்கும்..
மணியா கடிப்பார்.. செல்வியா யாரது....... :p :p :p தோடர் இனத்து பெண்ணா.....

மணியாவின் கடி என்ன புதுசா.....

venkateshwaran_d1976
13-01-2006, 03:04 AM
பேண்ட்ல ஜிப் வைக்கலாம் ஆனால் ஜிப்ல பேண்ட் வைக்க முடியுமா?

sarcharan
13-01-2006, 03:06 AM
பேண்ட்ல ஜிப் வைக்கலாம் ஆனால் ஜிப்ல பேண்ட் வைக்க முடியுமா?

அப்போ பைஜாமா குர்தால என்ன வைப்பீங்க வெங்கடேஸ்வரன்.....?B) :confused:

pradeepkt
13-01-2006, 01:28 PM
அப்போ பைஜாமா குர்தால என்ன வைப்பீங்க வெங்கடேஸ்வரன்.....?B) :confused:
ம்ம்ம், நெறைய பாக்கெட்டு வைப்பாரு... :rolleyes:

aren
14-01-2006, 02:55 AM
ம்ம்ம், நெறைய பாக்கெட்டு வைப்பாரு... :rolleyes:

அதிலே பணமும் வைப்பாரு.

mania
18-01-2006, 05:59 AM
ரன்னிங் ரேஸிலே கால் எவ்வளவுதான் வேகமா ஓடீனாலும் பரிசு வாங்கறது என்னமோ கைதான்....!!!!!:rolleyes:

சோடாவை ஃப்ரிட்ஜிலே வைச்சா கூலிங் சோடா ஆகும்......அதுக்காக அதை வாஷிங் மெஷின்ல வைச்சா வாஷிங்சோடா ஆகுமா....???:rolleyes:

கீ ரோஸ்ட்டிலே கீ இருக்கும்......பேப்பர் ரோஸ்ட்டிலே பேப்பர் இருக்குமா....??:rolleyes:

தண்ணீரை தண்ணின்னு சொல்லலாம்....ஆனா பன்னீரை பன்னின்னு சொல்லமுடியுமா....???:rolleyes:

காக்கா என்னதான் கறுப்பா இருந்தாலும் அது போடுற முட்டை வெள்ளைதான்........ஆனா முட்டை என்னதான் எள்ளையா இருந்தாலும் வெளில வர காக்கா குஞ்சு கறுப்புதான்....!!!!:rolleyes:

கடிபட்ட வெறியில்
மணியா....:D :D

மதி
18-01-2006, 06:16 AM

தல,
நீங்க பட்ட கடி போதாதுன்னு..எங்களையும் கடிக்கனுமா?

Mano.G.
18-01-2006, 07:05 AM
"கண்ணுல ஏன் தண்ணிவருது
ஏன்னா அது ஐஸ் (eyes)"

"தலை சுத்துதா
முதுக பார்க்கலாமே"

சும்மா கடிச்சு பார்த்தேன்
உங்கள மாதிரி கடிக்க முடியலப்பா

மனோ.ஜி

மதி
18-01-2006, 07:17 AM
"கண்ணுல ஏன் தண்ணிவருது
ஏன்னா அது ஐஸ் (eyes)"

"தலை சுத்துதா
முதுக பார்க்கலாமே"

சும்மா கடிச்சு பார்த்தேன்
உங்கள மாதிரி கடிக்க முடியலப்பா

மனோ.ஜி
ஐயா,
அதுக்கெல்லாம்..வலிமையான பற்கள் வேணும்.:D :D :D :D

பென்ஸ்
18-01-2006, 07:25 AM
ஐயா,
அதுக்கெல்லாம்..வலிமையான பற்கள் வேணும்.:D :D :D :D

தலைக்கு மட்டும் வலிமையான பல் இருக்க என்ன,????... :rolleyes: :rolleyes: :rolleyes:
அவரை போல எப்பவும் ஒரு "பிளேடை" கையில் வைத்திருந்தால் போதும்....:D :D

mania
18-01-2006, 07:59 AM
தலைக்கு மட்டும் வலிமையான பல் இருக்க என்ன,????... :rolleyes: :rolleyes: :rolleyes:
அவரை போல எப்பவும் ஒரு "பிளேடை" கையில் வைத்திருந்தால் போதும்....:D :D

:D :D அது கூட நான் பஸ்ஸிலே போகும்போது ஒருத்தன் என் பாக்கெட்டிலே போட்டதாக்கும்......சரி வேஸ்ட் பண்ணுவானேன்னுதான் இப்படி.....!!!:rolleyes: :rolleyes: :D :D
அன்புடன்
ப்ளேட் மணியா....:D :D

gragavan
18-01-2006, 08:21 AM
:D :D அது கூட நான் பஸ்ஸிலே போகும்போது ஒருத்தன் என் பாக்கெட்டிலே போட்டதாக்கும்......சரி வேஸ்ட் பண்ணுவானேன்னுதான் இப்படி.....!!!:rolleyes: :rolleyes: :D :D
அன்புடன்
ப்ளேட் மணியா....:D :Dவழக்கமா எடுக்கத்தான் பிளேடு கொண்டு வருவாங்க. ஆனா உங்க கிட்ட அது பலிக்காம போட்டுட்டுப் போயிட்டானே.

பென்ஸ்
18-01-2006, 08:34 AM
:D :D அது கூட நான் பஸ்ஸிலே போகும்போது ஒருத்தன் என் பாக்கெட்டிலே போட்டதாக்கும்......சரி வேஸ்ட் பண்ணுவானேன்னுதான் இப்படி.....!!!:rolleyes: :rolleyes: :D :D
அன்புடன்
ப்ளேட் மணியா....:D :D

தலை.. நாங்க கிண்டல் அடிச்ச சின்ன பிள்ளை மாதிரி "ஆ ஆஆ" அப்பிடின்னு அழனும்....
திரும்ப "ஆமா ஆமா" என்று சொல்லபிடாது....
சொன்னா நான் அழுதிடுவேன்.....

mania
18-01-2006, 09:00 AM
தலை.. நாங்க கிண்டல் அடிச்ச சின்ன பிள்ளை மாதிரி "ஆ ஆஆ" அப்பிடின்னு அழனும்....
திரும்ப "ஆமா ஆமா" என்று சொல்லபிடாது....
சொன்னா நான் அழுதிடுவேன்.....

ஆ......ஆ......ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ.......போதுமாஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ:D

அன்புடன்
ஆமணியா....:D :D

gragavan
18-01-2006, 09:01 AM
தலை.. நாங்க கிண்டல் அடிச்ச சின்ன பிள்ளை மாதிரி "ஆ ஆஆ" அப்பிடின்னு அழனும்....
திரும்ப "ஆமா ஆமா" என்று சொல்லபிடாது....
சொன்னா நான் அழுதிடுவேன்.....நீங்க சாதாரணமா (சதாரணமான்னும் சொல்லலாம்.) பேசும் போதே அழுகுற மாதிரிதான் இருக்குன்னு சொல்லிக்கிறாங்க..இதுல அழுதுட்டீங்கன்னா..........

mania
18-01-2006, 09:22 AM
வழக்கமா எடுக்கத்தான் பிளேடு கொண்டு வருவாங்க. ஆனா உங்க கிட்ட அது பலிக்காம போட்டுட்டுப் போயிட்டானே.

:D :D எடுக்கத்தான் வந்தான்....:D :D என் பாக்கெட்டின் பரிதாப நிலையை பார்த்து கடுப்பாகி.....கொண்டுவந்த ப்ளேடை என் பாக்கெட்டிலே போட்டுவிட்டான்.....:rolleyes: :rolleyes: :D :D
அன்புடன்
எம்ப்டி மணியா....:D :D

aren
18-01-2006, 09:55 AM
கடிபட்ட வெறியில்
மணியா....:D :D

தலை,

செம்ம கடி. எவ்வளவு நாள் தாக்கமோ. ஒரே நாளில் இப்படி கொட்டிவிட்டீர்களே!!! நம்ம பசங்க துண்டைக்காணோம் துணியைக்காணோம்னு ஓடறாங்களே.

அத்தனை கடிகளும் அருமை (வலித்தாலும்). இன்னும் இருந்தால் தொடருங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
18-01-2006, 09:56 AM
"கண்ணுல ஏன் தண்ணிவருது
ஏன்னா அது ஐஸ் (eyes)"

"தலை சுத்துதா
முதுக பார்க்கலாமே"

சும்மா கடிச்சு பார்த்தேன்
உங்கள மாதிரி கடிக்க முடியலப்பா

மனோ.ஜி

நன்றாகத்தான் உள்ளது. இன்னும் கொஞ்சம் பற்களை கூராக்குங்கள், இன்னும் கடிக்கலாம்.

aren
18-01-2006, 09:56 AM
தலைக்கு மட்டும் வலிமையான பல் இருக்க என்ன,????... :rolleyes: :rolleyes: :rolleyes:
....:D :D

என்ன சொல்றீங்க நீங்க.

'தலை' இதை கொஞ்சம் பாருங்க.

aren
18-01-2006, 09:58 AM
நீங்க சாதாரணமா (சதாரணமான்னும் சொல்லலாம்.) பேசும் போதே அழுகுற மாதிரிதான் இருக்குன்னு சொல்லிக்கிறாங்க..இதுல அழுதுட்டீங்கன்னா..........

நல்லகாலம் பார்க்க நான் பக்கத்தில் இல்லை. ராகவனும், ராஜேஷீம் பாவம்.

aren
18-01-2006, 09:59 AM
:D :D எடுக்கத்தான் வந்தான்....:D :D என் பாக்கெட்டின் பரிதாப நிலையை பார்த்து கடுப்பாகி.....கொண்டுவந்த ப்ளேடை என் பாக்கெட்டிலே போட்டுவிட்டான்.....:rolleyes: :rolleyes: :D :D
அன்புடன்
எம்ப்டி மணியா....:D :D

அவனுக்குத் தெரியவில்லை போலும், வீட்டில் மீனாட்சி ஆட்சி என்று.

பரிதாப்பட்டு கொஞ்சம் பணம் வைத்துவிட்டுப் போனானா? செய்தாலும் செய்திருப்பான்.

மதி
18-01-2006, 09:59 AM
நல்லகாலம் பார்க்க நான் பக்கத்தில் இல்லை. ராகவனும், ராஜேஷீம் பாவம்.
இப்பவாச்சும் எல்லாருக்கும் புரிஞ்சா சரி..:mad: :mad: :D :D

mania
18-01-2006, 10:31 AM
அவனுக்குத் தெரியவில்லை போலும், வீட்டில் மீனாட்சி ஆட்சி என்று.

பரிதாப்பட்டு கொஞ்சம் பணம் வைத்துவிட்டுப் போனானா? செய்தாலும் செய்திருப்பான்.

:rolleyes: :rolleyes: உங்களுக்கு எப்பிடி தெரியும் அது....????:rolleyes: :rolleyes: குடும்பத்தில் குழப்பம் பண்ணாதீர்கள்....:rolleyes: :confused: :D ஆனா இப்போ இல்லை....:D :D மீனாட்சி வீட்டை காலி செய்து போய்விட்டாள்.....:D :D இப்போ நானும் என் மனைவியும்தான் என் வீட்டில்......:D :D
அன்புடன்
மணியா:D

Mano.G.
18-01-2006, 11:40 AM

தலை இது கடிக்கெல்லாம் பெரிய கடி நல்லாவே சிரிச்சேன்

மனோ.ஜி

அறிஞர்
07-02-2006, 07:08 PM
இந்த வார விகடனில் வந்தது

கோல மாவில்
கோலம் போடலாம்
கடலை மாவில்
கடலை போடமுடியுமா?

பொங்கலுக்கு
கவர்மெண்ட் லீவு
கொடுக்குறாங்க.
ஆனா இட்லி, தோசைக்கு
லீவு கிடைக்குதா?

அறிஞர்
07-02-2006, 07:10 PM
ஸ்கூல் டெஸ்ட்டில்
பிட் அடிக்கலாம்
காலேஜ் டெஸ்ட்டில்
பிட் அடிக்கலாம்
பிளட் டெஸ்ட்டில்
பிட் அடிக்க முடியுமா?
---
இதையொட்டி நம் கடி..

ஸ்கூல் டெஸ்ட்டில்
முட்டை வாங்கலாம்
கிரிக்கெட் டெஸ்ட்டில்
முட்டை வாங்கலாம்
பிளட் டெஸ்ட்டில்
முட்டை வாங்க முடியுமா?

mania
08-02-2006, 03:39 AM
:D :D :D
அன்புடன்
மணியா...:D

sarcharan
17-02-2006, 06:18 AM
ஏனுங்க ....
நமக்கு முன்று சந்தேகமுங்க

1) "சரக்கு" ரயில் தள்ளாடுங்களா?
2) மன"பிராந்தி" க்வாட்டர் எவ்வளவுங்கோ?
3) "தண்ணி" பாம்புக்கு எப்போ போதை தெளியும்?

:confused: :confused: :confused: :confused:

தாமரை
17-02-2006, 06:27 AM
ஏனுங்க ....
நமக்கு முன்று சந்தேகமுங்க

1) "சரக்கு" ரயில் தள்ளாடுங்களா?
2) மன"பிராந்தி" க்வாட்டர் எவ்வளவுங்கோ?
3) "தண்ணி" பாம்புக்கு எப்போ போதை தெளியும்?

:confused: :confused: :confused: :confused:
சரவணன், ஏன் இப்படி ஆச்சு? யார் அந்த துரோகி?:confused: :confused: :confused:

sarcharan
17-02-2006, 07:50 AM
முக்காலியில் உட்காரலாம் நாற்காலியில் உட்காரலாம்
ஆனால் தக்காளியில் உட்காரமுடியுமா?

என்ன தான் ஜாவாவில "த்ரெட்" இருந்தாலும் அதை வைச்சு துணி நெய்ய முடியுமா?

நாம அடிச்சா அது மொட்டை தானா விழுந்தா அது சொட்டை

மேல இருந்து கீழே விழுந்தால் அது அருவி
கீழே இருந்து மேல பறந்தால் அது குருவி

பாம்பு எத்தனை தடவை படம் எடுத்தாலும் அதால ஒரு தடவை கூட தியேட்டரில ரிலீஸ் பண்ண முடியாது...

லவ்வர்ஸ் டே அன்னிக்கி லவ்வர்ஸ் கிஸ் பண்ணிப்பாங்க ஆனா
டீச்சர்ஸ் டே அன்னிக்கி டீச்சர்ஸ் கிஸ் பண்ணிப்பாங்களா?

என்ன தான் மு. கருணாநிதி தி.மு.கவில இருந்தாலும் அவர் வீட்டு மாடு என்னவோ "அம்மா"ன்னு தான் கத்தும்.

மதி
17-02-2006, 08:12 AM
ஏன்...ஏன்...?

தாமரை
17-02-2006, 08:44 AM
செருப்பு போட்டுகிட்டு சாப்பிட்டாலும் மீன் முள்ளு குத்ததான் செய்யும்.

sarcharan
17-02-2006, 12:13 PM
மதி
உங்க ஆதங்கம் எனக்கு புரியுது ஆனா எனக்கு அனுப்பிச்சவனை (வேற யாரு என் சக அலுவலக நண்பன் தான்)நான் என்ன பண்ண சொல்லுங்க...?

ஏன்...ஏன்...?

தாமரை
17-02-2006, 12:45 PM
முக்காலியில் உட்காரலாம் நாற்காலியில் உட்காரலாம்
ஆனால் தக்காளியில் உட்காரமுடியுமா?

தக்காளியில் உட்காரலாம்.. அப்புறம் மிஞ்சுவதை சட்னி பண்ணி விருந்தாளிகளுக்கு (பென்ஸூக்கு) போடலாம்.

என்ன தான் ஜாவாவில "த்ரெட்" இருந்தாலும் அதை வைச்சு துணி நெய்ய முடியுமா?

துணி நெய்ய முடியாது ஆனா நூலு விடலாம்

நாம அடிச்சா அது மொட்டை தானா விழுந்தா அது சொட்டை
எத்தனை பேரை அடிச்சீங்க மொட்டை?

மேல இருந்து கீழே விழுந்தால் அது அருவி
கீழே இருந்து மேல பறந்தால் அது குருவி

அப்போ நியூட்டன் தலையில் விழுந்தது அருவியா?
சந்திர மண்டலத்துக்கு அனுப்பினது குருவியா?

பாம்பு எத்தனை தடவை படம் எடுத்தாலும் அதால ஒரு தடவை கூட தியேட்டரில ரிலீஸ் பண்ண முடியாது...

சினிமா படம் எடுத்தா தியேட்டர்ல ஓடும்..
பாம்பு படம் எடுத்தா தியேட்டரே ஓடும்

என்ன தான் மு. கருணாநிதி தி.மு.கவில இருந்தாலும் அவர் வீட்டு மாடு என்னவோ "அம்மா"ன்னு தான் கத்தும்.

கலைஞர் மாடு தமிழ்-ல கத்துது. பரவாயில்லை. ராமதாஸ்(தமிழ் குடிதாங்கி) வீட்டு மாடு "மா" அப்படின்னு இந்தியில தானே கத்துது.

மன்மதன்
17-02-2006, 02:20 PM
லவ்வர்ஸ் டே அன்னிக்கி லவ்வர்ஸ் கிஸ் பண்ணிப்பாங்க ஆனா
டீச்சர்ஸ் டே அன்னிக்கி டீச்சர்ஸ் கிஸ் பண்ணிப்பாங்களா?

:D :D :D ஓஓஓஓஓஓஓஓவர் :D

மன்மதன்
17-02-2006, 02:21 PM
:D :D :D எல்லாமே சூப்பரபு :D

sarcharan
17-02-2006, 02:36 PM
எப்படி மன்மதன்
அதை மட்டும் கரெக்டா புடிச்சிருக்கீங்க....
ஹ்ம்ம் மன்மதன்,

:D :D :D ஓஓஓஓஓஓஓஓவர் :D

அறிஞர்
23-02-2006, 01:12 AM
சூப்பரோ சூப்பர் கலக்குறீங்க ராசாக்களே... இன்னும் கொடுங்கள்..

hai.selvam
08-03-2006, 12:29 PM
என்னதான் ஏர்டெல்,ஏர்செல் வைத்திருந்தாலும் தும்மும் போது ஹட்ச்னு தான் தும்மனும்.....

sarcharan
08-03-2006, 12:32 PM
கலக்குறீர் செல்வம் , ஹ்ம்ம் பிரமாதம்
:D :D :D :D

என்னதான் ஏர்டெல்,ஏர்செல் வைத்திருந்தாலும் தும்மும் போது ஹட்ச்னு தான் தும்மனும்.....

இளந்தமிழ்ச்செல்வன்
08-03-2006, 02:47 PM
மன்மஹன் நம்க்கு அனுப்பும் குறுந்தகவலை இங்கே அவிழ்த்து விடுங்களேன். மக்கள் மிக மகிழ்வார்கள்

sarcharan
09-03-2006, 03:02 AM
என்ன அது, குறுந்தகவல்....கேட்க ஆவல்...

மன்மஹன் நம்க்கு அனுப்பும் குறுந்தகவலை இங்கே அவிழ்த்து விடுங்களேன். மக்கள் மிக மகிழ்வார்கள்

தாமரை
09-03-2006, 03:17 AM
என்னதான் ஏர்டெல்,ஏர்செல் வைத்திருந்தாலும் தும்மும் போது ஹட்ச்னு தான் தும்மனும்.....
பேரைக் காப்பாத்துங்க செல்வம்:D :D :D

aren
18-03-2006, 08:17 AM
யானை மேல் ஏறினால் அது சவாரி
அது உங்கள்மேல் ஏறினால் ஒப்பாரி

காலண்டரில் தினமும் தேதி கிழிக்கலாம்
ஆனால் அந்த தேதியில் நீங்கள் என்ன கிழித்தீர்கள் என்பதுதான் முக்கியம்

தாமரை
20-03-2006, 09:20 AM
காலண்டரில் தினமும் தேதி கிழிக்கலாம்
ஆனால் அந்த தேதியில் நீங்கள் என்ன கிழித்தீர்கள் என்பதுதான் முக்கியம்
ஆமாம் என்ன கிழிச்சீங்க?

Mano.G.
20-03-2006, 11:03 AM
காலண்டரில் தினமும் தேதி கிழிக்கலாம்
ஆனால் அந்த தேதியில் நீங்கள் என்ன கிழித்தீர்கள் என்பதுதான் முக்கியம்

ஆகா அருமை அருமை ஆரேன் அருமை
விழிப்புணர்வுக்கு வேண்டிய ஒன்று

மனோ.ஜி

sarcharan
20-03-2006, 12:08 PM
செல்வம்.... ஹ்ம்ம்ம் ஆண்டவன் தான் காப்பாத்தணும்,,,,:confused: :confused: :confused:

பேரைக் காப்பாத்துங்க செல்வம்:D :D :D

hai.selvam
21-03-2006, 11:45 AM
யானை மேல் ஏறினால் அது சவாரி
அது உங்கள்மேல் ஏறினால் ஒப்பாரி

காலண்டரில் தினமும் தேதி கிழிக்கலாம்
ஆனால் அந்த தேதியில் நீங்கள் என்ன கிழித்தீர்கள் என்பதுதான் முக்கியம்
சிந்திக்க வேண்டிய தத்துவம்......பாராட்டுக்கள்

hai.selvam
21-03-2006, 11:45 AM
கப்பல் கேப்டன் : கரை வந்து விட்டது! கரை வந்து விட்டது!!

பிரயாணி : ஸர்ஃப் எக்ஸெல் போடுங்க. கரை போய்டும்.

sarcharan
21-03-2006, 11:47 AM
ஹ்ம்ம் செல்வம்ன்னு பேரு வைச்சிருக்கவங்க எல்லாம் ஒரு முடிவோட தான் மன்றம் வந்திருக்கீங்க....

கப்பல் கேப்டன் : கரை வந்து விட்டது! கரை வந்து விட்டது!!
பிரயாணி : ஸர்ஃப் எக்ஸெல் போடுங்க. கரை போய்டும்.

hai.selvam
21-03-2006, 11:48 AM
என்னதான் Blackல டிக்கெட் வாங்கினாலும்,

சினிமா Colourல தான் ஓடும்.

*********************************************
எட்டுக்கால் பூச்சிக்கு எட்டுக்கால் இருந்தாலும்,

ஒரு காலுக்கு கூட

ஷூவோ, செருப்போ மாட்ட முடியாது.
***************************************************
டீ கப்புக்குள்ள டீ இருக்கும்.

ஆனா

வேர்ல்ட் கப்புக்குள்ள வேர்ல்ட் இருக்காது.
***********************************************

டிவி செய்தி: இன்றைய பந்தினால், மாமூல் வாழ்க்கை பாதிப்பில்லை.

போலீஸ்காரர்: அப்பாடா.

************************************************

தொண்டர் 1 : நம்ம கோஷ்டிக்கு தலைவர் கிட்டே 4 டிக்கெட் கேட்டிங்களே என்ன ஆச்சு....

தொண்டர் 2 : நீ வேற வயித்தெரிச்சலை கிளப்பாதே.... தலைவா என் கோஷ்டிக்கு 4 டிக்கெட் கொடுன்னு கேட்டேன்... தலைவர், "யோவ் இருக்குற டிக்கெட்டையெல்லாம் ராமதாசும், வைகோவும் பிடுங்கிட்டு போயிட்டாங்க.... இப்போ மீதி இருக்கற டிக்கெட் இது தான்"னு சொல்லி பாசக்கிளிகள் படத்தோட டிக்கெட் 4 கொடுத்து அனுப்பிச்சிட்டாரு.....
************************************************************
மன்னர் : புலவரே என்னை புகழ்ந்து தாங்கள் பாடிய கவிதை சூப்பர்... ஆனால் க.கா.

புலவர் : அய்யகோ மன்னா... கி.கி.

சேவகன் 1 : மன்னர் க.கா.ன்னு சொல்றாரு, பதிலுக்கு புலவர் கி.கி.ன்னு சொல்லுறாரு... ஒண்ணுமே புரியலையே....

சேவகன் 2 : மன்னர் 'கஜானா காலி'ன்னு சொல்லுறாரு.... புலவர் பதிலுக்கு 'கிழிஞ்சது கிருஷ்ணகிரி'ன்னு சொல்லுறாருப்பா.......

***********************************************************
மன்னர்: எதிரி மன்னன் படையுடன் வருகிறானாமே? ஏற்பாடுகள் தயாரா?
மந்திரி: எல்லா வெள்ளைக் கொடிகளும் தயார்.

******************************************************
அம்மா அடிச்சா வலிக்கும், போலிஸ் அடிச்சா வலிக்கும், ஆனா சைட் அடிச்சா வலிக்குமா?
*******************************

பஸ்ல, கண்டக்டர் தூங்கினா யாரும் டிக்கெட் எடுக்க மாட்டாங்க, ஆனா டிரைவர் தூங்கினா எல்லோரும் டிக்கெட் எடுத்துடுவாங்க

********************************

கம்ப்யூட்டர் டீச்சர கணக்கு பண்ணலாம், ஆனா கணக்கு டீச்சர .கம்ப்யூட்டர் பண்ண முடியுமா?
***********************************

என்னதான் அஹிம்சாவாதியா இருந்தலும், சப்பாதிய சுட்டு தான் சாப்பிடனும்.

***********************************

நீ எவ்ளோ பெரிய வீரனா இருந்தலும், குளிர் அடிச்சா திருப்பி அடிக்க முடியாது.

*****************************

காசு இருந்தா கால் டாக்ஸி, காசு இல்லைன்னா கால்தான் டாக்ஸி.

தாமரை
21-03-2006, 11:56 AM
ஆஹா..ஆஹாஹா..பலே பலே

sarcharan
21-03-2006, 12:04 PM
***************************************************
டீ கப்புக்குள்ள டீ இருக்கும்.
ஆனா
வேர்ல்ட் கப்புக்குள்ள வேர்ல்ட் இருக்காது.
***********************************************

ஹ்ம்ம்.... அடுத்து கடலுக்குள்ள உப்பு இருக்கும் ஆனா உப்புக்குள்ள கடல் இருக்குமான்னு கேக்காதீங்க ப்ளீஸ்...

தொண்டர் 1 : நம்ம கோஷ்டிக்கு தலைவர் கிட்டே 4 டிக்கெட் கேட்டிங்களே என்ன ஆச்சு....

தொண்டர் 2 : நீ வேற வயித்தெரிச்சலை கிளப்பாதே.... தலைவா என் கோஷ்டிக்கு 4 டிக்கெட் கொடுன்னு கேட்டேன்... தலைவர், "யோவ் இருக்குற டிக்கெட்டையெல்லாம் ராமதாசும், வைகோவும் பிடுங்கிட்டு போயிட்டாங்க.... இப்போ மீதி இருக்கற டிக்கெட் இது தான்"னு சொல்லி பாசக்கிளிகள் படத்தோட டிக்கெட் 4 கொடுத்து அனுப்பிச்சிட்டாரு.....
************************************************************

இது நல்ல கடி....ஆனால் பாசக்கிளிகள் படத்த விட அல்ல...

அம்மா அடிச்சா வலிக்கும், போலிஸ் அடிச்சா வலிக்கும், ஆனா சைட் அடிச்சா வலிக்குமா?
*******************************

ஹி ஹி சரியா சொன்னீங்க போங்க....

பஸ்ல, கண்டக்டர் தூங்கினா யாரும் டிக்கெட் எடுக்க மாட்டாங்க, ஆனா டிரைவர் தூங்கினா எல்லோரும் டிக்கெட் எடுத்துடுவாங்க
********************************

பபபபபபூபூபூபூபூபூபூபூபூங்ங்ங்ங்ங்ங்ங்..... டிங்டிங்டிங்டிங்டிங்...

கம்ப்யூட்டர் டீச்சர கணக்கு பண்ணலாம், ஆனா கணக்கு டீச்சர .கம்ப்யூட்டர் பண்ண முடியுமா?
***********************************

நீங்க எப்படி...?
அதாவது நீங்க எப்படி இப்படி எல்லாம் யோசிச்சீங்கன்னு கேக்க வந்தேன்...

காசு இருந்தா கால் டாக்ஸி, காசு இல்லைன்னா கால்தான் டாக்ஸி.
11ம் நம்பர் நடராஜா சர்வீஸ்.....

sarcharan
21-03-2006, 12:07 PM
ம்ஹ்ம்ம்ம். அத பஸ் கண்டக்டருங்க கிட்ட தான் கேக்கணும்.

காலண்டரில் தினமும் தேதி கிழிக்கலாம்
ஆனால் அந்த தேதியில் நீங்கள் என்ன கிழித்தீர்கள் என்பதுதான் முக்கியம்

தாமரை
21-03-2006, 12:17 PM
ம்ஹ்ம்ம்ம். அத பஸ் கண்டக்டருங்க கிட்ட தான் கேக்கணும்.
ஓ நீங்க டிக்கட்டெ சொல்றீங்களா?

aren
13-04-2006, 03:14 PM
என்ஜீனியரிங் காலேஜிலே படிச்சு என்ஜீனியர் ஆகலாம். ஆனா ப்ரெசிடென்சி காலேஜில் படிச்சி ப்ரெசிடென்ட் ஆக முடியாது

ஏர்டெல் மொபை வைச்சிருந்தாலும் ஏர்செல் மொபைல் வைச்சிருந்தாலும், தும்மல் வந்தால் ஹட்ச்ன்னுதான் வரும்.

கோல்ட் வைச்சி கோல்ட் செயின் பண்ணலாம். ஆனால் சைக்கிள் வைச்சி சைக்கிள் செயின் பண்ண முடியாது

பஸ் ஸ்டாப் கிட்ட வெயிட் பண்ணா பஸ் வரும். ஃபுல் ஸ்டாப் கிட்ட வெயிட் பண்ணா ஃபுல் வருமா?

ஆட்டோ டிரைவரால ஆட்டோ ஓட்ட முடியும். ஆனால் ஸ்குரு டிரைவரால ஸ்குரு ஓட்ட முடியுமா?

முக்காலியில உக்காரலாம். நாக்காலியில உக்காரலாம். ஆனா தக்காளியிலே உக்கார முடியுமா?

என்னதான் ஜாவாலே தெரெட்ஸ் இருந்தாலும் அதை வைச்சி லுங்கி நெய்ய முடியுமா?

மின்னலைப் பார்த்தா கண்ணு போய்டும். பாக்கலைன்னா மின்னல் போய்டும்.

கீற்று என்ற இணைய தளத்திலிருந்து

gragavan
13-04-2006, 03:20 PM
அடடா! என்ன தத்துவம்...என்ன தத்துவம்....புல்லரிக்குது......

இளந்தமிழ்ச்செல்வன்
13-04-2006, 06:28 PM
என்ன அது, குறுந்தகவல்....கேட்க ஆவல்...

அது அனைத்தையும் இங்கே பதிய இயலாது. மன்மதன் சரவணன் மிக ஆவலாய் உள்ளார். தட்டிவிடுங்கள் ரசித்து மகிழட்டும்.

Mano.G.
23-05-2006, 03:29 AM
நேற்று இதை பார்த்து படித்தது உங்களுக்காக:

அன்று ஒரு நாள்....
மாலை நேரம்...........
சாலை ஓரம்..................
நாம் இருவர் கண்களாலும் ஒரே நேரத்தில்
சந்தித்த பொழுது........
உன் முகத்தில் எத்தனை எத்தனை உற்சாகம்....
அப்போது அந்த வார்த்தைகளை சொன்னாய்..........

"அம்மா தர்மம் போடுங்கம்மா"

மனோ.ஜி

அறிஞர்
23-05-2006, 01:46 PM
உன் முகத்தில் எத்தனை எத்தனை உற்சாகம்....
அப்போது அந்த வார்த்தைகளை சொன்னாய்..........

"அம்மா தர்மம் போடுங்கம்மா"

மனோ.ஜி தர்மம் போடும் கையை... உற்சாகமாய் நோக்கும் கண்கள்....

தாமரை
23-05-2006, 03:35 PM
தர்மம் போடும் கையை... உற்சாகமாய் நோக்கும் கண்கள்....
தர்மம் போடுவதும் கைகள் தான்
தர்ம அடி போடுவதும் கைகள் தான்

Raaga
25-05-2006, 08:40 AM
அட போங்கப்பா உங்க லொள் ஓவர்தான், படித்து சிரித்து சிரித்து வயறு புண்ணானதுதான் பாக்கி...

அன்பைத்தேடி என்ற சிவாஜி கணேசன் படத்திலே சோ சொல்லும் தத்துவம்தான் நினைவுக்கு வருகிறது...

சுவிட்ச்ச போட்டா லைட் எரியும், ஆனா லைட்ட போட்டா சுவிட்சு எரியாது...

தாமரை
25-05-2006, 09:01 AM
அட போங்கப்பா உங்க லொள் ஓவர்தான், படித்து சிரித்து சிரித்து வயறு புண்ணானதுதான் பாக்கி...

அன்பைத்தேடி என்ற சிவாஜி கணேசன் படத்திலே சோ சொல்லும் தத்துவம்தான் நினைவுக்கு வருகிறது...

சுவிட்ச்ச போட்டா லைட் எரியும், ஆனா லைட்ட போட்டா சுவிட்சு எரியாது...
லைட்ட போட்டா வயிறு எரியும்.. காசு வீணாகுதில்ல.

சுவேதா
26-05-2006, 02:21 AM
ஹி..ஹி.. சூப்பர் தத்துவங்கள் தொடர்ந்து தாருங்கள்!!

சுவேதா
26-05-2006, 02:22 AM
தலை இன்னும் சில பல தத்துவங்கள் இருக்கு. அதில நம்ம சுவேதா பேரோட ஒன்னு கூட இருக்கு. நான் தான் போனா போகுதுன்னு விட்டிட்டேன்.

என்னாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ எண்ட பெயரிலயாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ

சுவேதா
26-05-2006, 02:23 AM
தலை பேசாம இங்க பதிஞ்சிருங்க! நான் தப்பிச்சேன் அப்பா! சுவேதாவைக் காலை வாறறதுக்கு இத்தனை பேர் இருப்பீங்கன்னு தெரியாமப் போச்சு. என்னதான் எதிரணியாக இருந்தாலும் பொழைச்சிப் போகுதுன்னு விட்டிடலாமா. தலை தீர்ப்பு சொல்லுங்க!
ஆகாஆஆஅ ஏன் சொல்ல மாட்டிங்க??:eek:

சுவேதா
26-05-2006, 11:28 AM
ஹி...ஹி...ஹி....தனிமடல்....???:rolleyes:
ஆர்வத்துடன்
மணியா....:D

அய்யடாஆஆ இங்க பாருங்களேன் எண்ட தாத்தாவாஆஆஆஆஆஆஅ:cool: :eek: :D :p

pradeepkt
29-05-2006, 06:04 AM
அய்யடாஆஆ இங்க பாருங்களேன் எண்ட தாத்தாவாஆஆஆஆஆஆஅ:cool: :eek: :D :p
இப்பத்தானய்யா தெரியுது...
நிஜமாவே சுவேதாதான் வந்துருக்குறது.

ஓவியா
29-05-2006, 06:34 PM
அன்பர்களே 30 நிமிடம் நல்லாவே சிரிச்சேன்....
வாய்விட்டு சிரிக்க வச்சதுக்கு.. நன்றி..நன்றி

சுவேதா
30-05-2006, 02:01 AM
இப்பத்தானய்யா தெரியுது...
நிஜமாவே சுவேதாதான் வந்துருக்குறது.

:D :D அதில் என்ன சந்தேகம்??