PDA

View Full Version : சீயான் கங்கூலிமதி
21-12-2005, 04:15 AM
இது இன்று மின்னஞ்சலில் வந்தது....
யாருடைய ரசிகரையும் புண்படுத்துவதற்கில்லை..

கங்கூலி - சீயான்
சேப்பல் - அபித குசலாம்பாள்.
(கங்கூலி சேப்பல் தான் செலக்சன் கமிட்டியோட சேர்மன்னு நெனச்சு, அவர கடத்திடறார்.
ஒரு ரூம்ல போட்டு அடச்சு பேசுறார்.)

"ஒரு காலத்துல ரொம்ப சந்தோசமா இருந்தேன்யா..!!
என்னிக்கு உன்னய செலக்ட் பண்ணி, இந்திய டீம் கோச்சா அப்பாய்ண்ட் பண்ணினாங்களோ..அன்னிக்கு புடிச்சது இந்த சனியன்...

நானும் முன்னாடி நெனப்பேன், "ஏண்டா இப்படி, மொட்டை வெயில்ல, லோக்கல் கவுண்டி மேட்ச்ல, பசங்க ரஞ்சி டிராபி கிரிக்கெட் வெளயாடராங்களோ தெரியல.." அப்படின்னு...

ஆனா, உங்ககிட்ட மாட்டிகிட்டு, டீம் லிஸ்ட்ல பேர் வருமா...? வராதா...?அப்படினு கொஞ்சம், கொஞ்சமா வெரல கடிச்சிகிட்டு இருக்கரதுக்கு பதிலா, கவுண்டி மேட்ச்ல கட்டய போடுறதி எவ்வளவோ மேல்....போலருக்கே..

பயப்படாத...
உன்னய நான் கிள்ளிவுட மாட்டேன்..
ஏன்னா....நீ BCCI சேர்மன்..ஆச்சே....!
என்னடா..........இவன் சேர்மன் அப்படி இப்படினு பேசறானு பாக்கறியா..

"உன்னய எப்பவோ சேர்மன் ஆக்கிட்டாங்க தெரியுமா..???
நான் செஞ்சுரி அடிச்சு 3 ஆஸ்திரெலிய சீரிஸ் கூட வின் பண்ணியாச்சு..

நான் world cup வாங்கிட்டு வரேன்..ஆனா டாஸ் போட்ட காசு தான் வேணுமின்னு நீ அடம் புடிக்கிற..ஒரு நாள் உனக்கு உடம்பு முடியாம போய்டுது..உடனே நான் உனக்கு வேப்பில்லை அடிக்கிறேன்.." இப்படி கனவுலேயெ வாழ்ந்த்தாச்சு..இனி முடியாதுனு ஒன்னும் இல்லெ..அது டீம்லிஸ்ட்ல என்னோட பேரு தான்..
(சேப்பல் தப்பிக்க பாக்க..கங்கூலி அவர புடிச்சு செவித்துல சாத்தறார்..)

பாரு..!! போட்டு தள்றதுக்காக..உன்னய நான் இங்க கடத்திட்டு வரல..உன்கூட பேசனும்..அவ்ளோ தான்..
உன் கூட இருப்பானே ராகுல் திராவிட்...!
அவன் நல்ல பேட்ஸ்மன் தான்..நான் இல்லனு சொல்லல..
ஆனா..பொல்லாக் பால்ல அவனால எப்படி சிக்ஸர் அடிக்க முடியும்...

பாரு..
வெட்டியா பிட்சுல நின்னு கட்டய போட வேண்டியது தான்....இப்டி..இப்டி...(கங்கூலி பேட்டால் ஸ்ட்ரோக் பண்ணி காட்றார்.)

திராவிட் ஓப்பனிங் எறங்கறத நெனச்சாலே....ஆ..ஹ்...தலயே வெடிச்சுடும் போலருக்கு...

புரிஞ்சுக்கோ...!!
மனசு...!
வலிக்குது....!!!!!(பிண்ணனி இசை..ஹோ...ஹொ..ஹோ..)

நீயெல்லாம் ஆஸ்திரேலியன் டீமுக்கு கோச்சா இருக்க வேண்டியவர்..
உனக்கு எந்த கஷ்டமும் வராம நான், என் பேமிலி, கோகோகோலா எல்லாரும் பாத்துப்போம்...
என்னமோ இதெல்லாம் எனக்காக மட்டும் தான் சொல்றேனு நெனக்காத..உ..உனக்கும்..50% தர்றேன்..

பாரு...
நீ எப்பவும்..பேட்டும் பாலுமா இருக்கனும்..எனக்கு கோச்சிங் குடுத்துகிட்டே இருக்கனும்..அதான் என்னோட ஆச..
(உண்ர்ச்சிவசத்துடன்...)

இவ்ளோ சொன்னதுக்கப்பறமும் ....

இல்ல..
நீ பார்ம்ல இல்ல..
கல்லி பொசிசன்ல அவுட் ஆயிடரேள்..நேக்கு ஒன்னும் உன்னய டீம்க்கு சஜஸ்ட் பண்ண தோணல..அப்டினு சொன்னேனு வச்சிக்கோ....!
(கங்கூலி பாக்கெட்டில் இருந்து சீப்பை எடுக்கறார்..)

உன்னோட தலய சீவிடுவேன்..

உன் தலய சீவிட்டு அப்பறம் எனக்கென்ன வேல..ரிட்டயர் ஆக வேண்டியது தான்..
ரொம்ப ரண வேதனையா இருக்குயா...!

உன்னைய கெஞ்சி கெட்டுக்கறேன்..
(சேப்பல் கங்கூலி காலில் விழுந்து முணுமுணுக்கறார்..)

கங்கூலி : என்ன ஆச்சு..ஏன் அழற..சேத்துக்கறயா....???
சேப்பல் : ஹம்....
கங்கூலி : அப்போ..சேத்துக்கறையா......?
சேப்பல் : ம்ம்ம்ம்ம்ம்ம்...ம்ம்.....
கங்கூலி : அது போதும்..எனக்கு...அய்யா...ஜாலி..

(பிண்ணனியில்..: நெனச்சு நெனச்சு தவிச்சு தவிச்சு உருகி உருகி கிடந்த மனசு விலகி ஓடுதே...)

mania
21-12-2005, 04:20 AM
:D :D :D :D நல்ல தமாசு....:D :D
அன்புடன்
மணியா...:D

பரஞ்சோதி
21-12-2005, 04:25 AM
இப்போதைய சீசனுக்கு இது சரியாகப் படவில்லை, ஆனால் நல்ல நகைச்சுவையாக இருக்குது.

இதை விட கைப்புள்ள கங்குலி தான் கலக்கல்.

mukilan
21-12-2005, 04:30 AM
ஒரு காலத்தில புலியா இருந்தவரை இப்போ பூனையாக்கி என்னா வெளையாட்டுப்பா! எனக்கே மனசு கஷ்டமாயிருக்கே! கங்குலி இன்னாமா பீலிங்ஸ் வுடுவாரு! இன்னைக்கு சரத்பவார் வீட்டுக்கு வேற போயிருக்கார். சண்டைக்காரன் கால்ல விழாம சாட்சிக்காரன் கால்லேன்னா விழறார்!

மதி
21-12-2005, 04:32 AM
முதல்வன் பட பாணியில்..
கங்கூலி : கடசீல என்னியும் அரசியல்வாதி ஆக்கிப்பிட்டானுவளே...!

pradeepkt
21-12-2005, 05:23 AM
எது எப்படியோ கங்குலி சரத்பவாரைப் போய்ப் பாத்துட்டாரு.
அனேகமா அவரு வீட்டில இந்தப் பதிவில சொன்ன மாதிரி ஏதாச்சும் நடந்திருக்க வாய்ப்பிருக்கு.
அடுத்து கங்குலி ஜனவரி 2006ல பாகிஸ்தான் போயி ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்ல விழ வேண்டியதுதான் பாக்கி :D

gragavan
21-12-2005, 06:37 AM
என்னவோ நடக்குது. பெங்கால் டைகருன்னாங்க. கடைசில புல்லத் திங்குதே..........

pradeepkt
21-12-2005, 06:42 AM
வயித்தை வலிச்சா...
புலியும் புல்லைத் தின்னுதானே ஆவணும் :D

மன்மதன்
18-11-2007, 11:51 PM
வேற பதிவுக்கு படிக்க பழச தோண்டினா இது மாட்டிகிடிச்சி.. கலக்கலா ரிமிக்ஸியிருக்கீங்க மதி..

நேசம்
19-11-2007, 02:55 AM
காலம் தாழ்த்தி படிச்சாலும் அப்போதைய சூழ்நிலை மனதில் கொண்டு நினைத்து பார்க்கும் போது நல்ல நகைச்சுவையாக இருக்கிறது.பகிர்தலுக்கு நன்றி மதி

அமரன்
19-11-2007, 08:16 AM
ஏங்க மதி இதுபோல இன்னும் தாரது.

மலர்
19-11-2007, 08:21 AM
நல்ல நகைச்சுவை..
மதி உங்களிடம் இருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்..

அக்னி
20-11-2007, 01:30 AM
இன்றும் சிரித்து மகிழ வைக்கும் உல்டா உரையாடல்...
நண்பர்களின் வேண்டுகோளே எனது வேண்டுகோளும்...
தரவேண்டும் மதி அவர்களே இதுபோல இன்னுமின்னும்...

மதி
20-11-2007, 04:51 AM
இதென்ன வம்பா போச்சு...
ஏற்கனவே சொன்ன மாதிரி இது என் சொந்த சரக்கே இல்ல...
ஏதாவது வந்தா கண்டிப்பா தர்றேன்..

விகடன்
20-11-2007, 04:53 AM
உங்களுடைய நல்லகாலம் அவர்களுக்கு தமிழ் வாசிக்கத்தெரியாது.

மின்னஞ்சலை ஒரு தடவை கிளறிப்பாருங்கள். இன்னும் பல பொக்கிஷங்கள் இருக்கக்கூடும்.

பகிர்விற்கு நன்றி.

அக்னி
20-11-2007, 05:00 AM
ஏற்கனவே சொன்ன மாதிரி இது என் சொந்த சரக்கே இல்ல...
ஏதாவது வந்தா கண்டிப்பா தர்றேன்..
அப்போ திரும்பவும் இதுபோலக் கனவு கண்டு, வந்ததும் தாங்கோ...:D