PDA

View Full Version : ஒரு வரவுக்காய் நானும்



ilanthirayan
20-12-2005, 03:58 PM
அன்றைப் போலவே
இன்றும் எல்லாம்
முடிந்து விட்டது

சிரிப்பும் சிறுகெக்கலிப்பும்
கம்மலும் இருப்பும்
கதவு சாத்திப்போய்விட்டது

ஒரு வரவுக்காய்
நானும்
ஒரு செலவுக்காய்
இவர்களும்
மூடிய அறைகளுக்குள்

பதினாறு வயதில்
திருவிழா போலவே
இருந்தது
முப்பது வயதிலும்
முடியாமல் போனது

கூண்டுக்குள்
அடைபட்ட கிளி
சிறகடித்துச் சிறகடித்துச்
சிறகுதிர்த்தது

கூண்டைக் கொத்தி
இரும்பை வளைக்கும்
முயற்சியில்
சொண்டு மட்டும்

பச்சைப் பசேல் காடும்
பறந்து திரியும்
உரிமையும்
கிளிக்கு மட்டும்தானா?

பென்ஸ்
20-12-2005, 04:18 PM
அருமையான கவிதை...

வரவினால் செலவும்...

சிறகொடிந்த கிளியின் அழுகை...

போ.. பறந்து போ.. சிறு கூடு தாண்டி பற... உன் துனையை தேடிக்கொள்...

thirukanaga
20-12-2005, 07:41 PM
கூண்டுக்குள்
அடைபட்ட கிளி
சிறகடித்துச் சிறகடித்துச்
சிறகுதிர்த்தது

கூண்டைக் கொத்தி
இரும்பை வளைக்கும்
முயற்சியில்
சொண்டு மட்டும்


ஆகா அருமையான வரிகள்
நன்றாய் இருக்கிறது

mukilan
21-12-2005, 04:34 AM
இது மணம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் முதிர் கன்னியின் ஏக்கமா! அருமையான வரிகளில் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள் இளந்திரையன். வாழ்த்துக்கள்.

kavitha
21-12-2005, 08:47 AM
அமெரிக்காவில் இருந்துகொண்டு இப்படி ஒரு கவிதையா? எல்லோருக்கும் பறவையாகிவிடத்தான் ஆசை. என்றால் மனிதராகப் பிறந்ததன் உன்னதம் என்னவாகும்?"ஒரு வரவுக்காக நானும்ஒரு செலவுக்காக இவர்களும்மூடிய அறைகளுக்குள்" அர்த்தம் விளங்கவில்லையே!

பென்ஸ்
21-12-2005, 08:56 AM
ஒரு வரவு... ஆண்மகனின் வரவு...
ஒரு செலவு... கல்யாண செலவு
மூடிய அறையில் இவள் கனவுகளுடன் காத்திருக்கிறள்...
அவர்கள் காசுகளின் கணக்கிடுகிறார்கள்...

சரிதானே???? இளந்திரையன்....

ramanionline
21-12-2005, 09:48 AM
i need to Download the Manase relax please.
But i cant download please healp me.

மதி
21-12-2005, 12:59 PM
அருமை இளந்திரையன்...
முதிர்கன்னியின் ஏக்கங்களும் எதிர்பார்ப்புகளும்..
அடைபட்ட கூண்டுக்கிளிகள்..இன்றும் நிறைய உள்ளன..
அவற்றின் குமுறல்களாய் இது உள்ளது..

இளசு
22-12-2005, 06:50 AM
கைநீராய் காலம் ஒழுக
பதினாறு முப்பதாக...

அன்றாட சத்தங்களில்
அமுங்கிவிடும் விசும்பல்கள்..

------------------------------------


குலமாதர் யாரும்
தனியாக வாடும்
நிலை என்றும் இல்லை மறவாதே

என்று ஓங்கி சொன்னார் கண்ணதாசன்..


அந்த வாக்கு பல நல்ல உள்ளங்களின் வாழ்வில்
பொய்த்துப்போன காட்சிகள் உண்டு..


ஏன் இப்படி?


காலத்தின் சில கணக்குகள்

புரியாத புதிர்.


----------------------------

மீண்டும் உங்கள் முத்திரைக்கவிதையால்
கவர்ந்துவிட்டீர்கள் இளந்திரையன்.. பாராட்டுகள்..