PDA

View Full Version : கும்பளாம்பிகையும் நானும்....பென்ஸ்
19-12-2005, 12:02 PM
கும்பளாம்பிகையும் நானும்....

+2 -வில் எக்கசக்கமாய் மதிப்பெண் எடுத்ததால் எனக்கு நாகர்கோவிலில் உள்ள போக்கத்த கல்லூரியில் கூட எனக்கு B.A. (தமிழ்) கூட கிடைக்கவில்லை.... வேறு வழி இல்லாமல் என்னை புங்கறை என்னும் ஊரில் என்னை ஆட்டோமொபைல் டிப்பளமோவில் சேர்த்தனர்.... மூன்று வருடங்கள் இப்போது சென்சார் செய்ய படுகிறது....

இங்கு ஏதோ நல்ல மதிபென் எடுப்பேன் என்று தெரியும்... எனவே பொறியியல் படிக்க நான் அம்மாவிடம் கேட்க அவர் வீட்டின் அடுத்துள்ள கல்லூரியில் எனக்கு இலவச சீட் கிடைத்தால் போகலாம் என்று கூற... நான் வழக்கம் போல் பேயாட ஆரம்பித்தேன்.... எனக்கு எப்படியாவது சென்னையில் உள்ள பெரிய கல்லூரியில் சேர்ந்து படிக்கவேன்டும் என்று இருந்தது... ஆனால் எனக்கு அப்போது வீட்டை பற்றி கவலை பட மனசு வரவில்லை... அம்மாவில் இயலாமை என் கண்ணுக்கு தெரியவில்லை. சரி என்று அம்மாவிடம் சண்டை இட்டு விட்டு பக்கத்து வீட்டு நண்பன் ஒருவனுடன் கேரளவில் உள்ள அவனது கம்பெனியில் சேர்ந்தேன்...
அவனுக்கு உதவியாளனாய்...

அவன் வேலை-- கொத்தன்
நான்.. கையாள்

கும்பளாம்பிகை என்னும் அழகான ஊர்.. என் பாட்டி வீட்டை நியாபக படுத்தும் ஒரு சிறிய வீடு, முன்னாள் ஒரு சிறு கிணறு அதை தொட்டடுத்த நீரோடை... வந்த முதல் நாள் என்னை வேலைக்கு அழைத்து செல்லவில்லை... அங்கு என் கல்லூரி நண்பன் ஒருவன் இருக்க அவனை எல்லாம் கண்டு நலம் விசாரித்தேன்....

ஆடுத்த நாள் விடியல் என் வாழ்வின் மற்றொரு விடியலுக்கு காரனமாய் இருந்தது...

வடசேரிகரை என்னும் இட்த்தில் ஒரு பெரிய கட்டடம் கட்டி கொண்டு இருந்தனர். 4 மாடிவரை பில்லர் வார்க்க பட்டு எலும்பு கூடாய் நின்றது அந்த கட்டடம், அதன் பில்லர்களில் உள்ள கப்பிகளை சிறிய பில்லருக்காய் வளைக்க வேன்டும்.. நாங்கள் இருவராய் 4வது மாடியில் எந்த பாதுகாப்புன் இல்லாமல் கம்பி வளைத்தோம்... மூன்று நாட்ட்கள் சென்ற பணி... உடம்பெல்லாம் வலித்தது.... மனசு மட்டும் கல்லாய்...

அடுத்த 2 நாட்ட்கள் மழை வர வேலை இல்லை... மழை நின்றவுடன் கம்பெனியில் உள்ள எல்லோரையும் வேறு இடத்துக்கு அவசர வேலையாக அனுப்பினர்.. என்னை மட்டும் அதே கட்டடத்தில் வார்ப்பத்ர்க்காக வைத்திருந்த பலகைகளை மாற்ற சொல்லி அனுப்பினர்....
மொத்த பலகைகள் சுமார் 2000,
இருக்கும் இடம் ஒரு பழைய கழிப்பிடம்...
சரி.... என்று என் வேலையை துவங்க ஆரம்பித்தேன்...
முதல் சில பலகைகள் வேகமாக போனது .. மேலே இருக்கும் பலகைகள் தீர தீர என் அதிஷ்டம் எட்டிபார்க்க ஆரம்பித்தது...
புழுக்கள்...
மர புழுக்கள்...
தந்தம் கலரில் மண்புழுவைபோல் ஆனல் 3/4 இன்ச் நீளத்திற்க்கு பலகையில் தவழ ஆரம்பித்தது.... நான் நிற்க்கும் இடத்தின் நாற்றம் என்னை குமட்டி கொண்டிருக்க , புழுக்கள் என் மேல் தவள ஆரம்பித்தன... முதலில் தட்டி தள்ளீனேன், பிறகு எனக்கு பழக்கமாகி இருந்தது... ஆனல் அந்த புழுக்களின் கடிதான் வலித்திருந்தது.... மனசும்....

நன்பனின் திருமணம் ஒன்று திருவனந்தபுரத்தில் வைத்து இருப்பது ஆரித்து , அதை சாக்காய் வைத்து வீட்டிற்க்கு கிளம்பி விடலாம் என்று இருந்த போது (கல்யாணத்திற்க்கு இன்னும் 2 நாள் இருந்தது) ஒரு கோவில் டேரஸ் வார்க்கை என்று கூறி என்னையும் அழைத்து சென்றனர்... மண் அரிப்பதற்க்காகதான் என்னை அழைத்து சென்றனர்... ஆனால் அங்கு காங்ரீட் எறிந்து கொடுக்கும் ஒருவர் காயப்பட என்னை அங்கு அனுப்பினர்... புழுக்களின் கடி வேதனை கூட எனக்கு பெரியதாய் தெரியவில்லை... காங்கிரீட் சட்டியின் உரசல் என் கைகளை புண் ஆக்கி இருந்தது.. என் கல் மனதையும்தான்....


இரண்டு நாள் சித்திரவதை தீர திருவனந்தபுரம் வந்தேன்... நண்பர்கள் என் நிலையை கண்டு பரிதாபத்தோடு கண்டித்தனர்.... அடுத்த பஸ் ஏறீ வீடு வந்ந்தேன்... அம்மா சிரித்து கொண்டெ ஒரு கடிதத்தை கொடுக்க அதில் எனக்கு என் வீட்டின் அருகில் உள்ள நான் படித்த கல்லூரியில் இலவச சீட் கிடைத்திருப்பதாக இருந்தது... என் பிடிவாதம் இப்போது சந்தோசமாக மாறி இருக்க அம்மாவை சந்தோசத்தில் கட்டிபிடித்தேன்...

gragavan
20-12-2005, 05:50 AM
பெஞ்சமின்....கும்பளாம்பிகை என்று பெயரைப் பார்த்ததும் நான் ஏதோ நகைச்சுவைக் கதையென்று ஓடி வந்தேன். வந்து பார்த்தால்........ஒருவர் வாழ்க்கையில் என்ன கஷ்டப்பட்டாலும் முன்னுக்கு வந்த பிறகு அந்தக் கஷ்டங்களை நினைத்துப் பார்ப்பது என்பது ஒரு நல்ல பாடமே. அன்று பட்ட துன்பங்களுக்கெல்லாம் இன்று விடை கிடைத்திருக்கிறதே. அனைத்தும் இறையருள் என்றே கொள்க.

pradeepkt
20-12-2005, 06:34 AM
அருமையாச் சொல்லீருக்கீங்க பென்ஸூ.
இப்ப ஆண்டவன் என்னை ஒரு நல்ல நிலைமையில வச்சிருக்கான். ஆனால் இதே ஒரு எட்டு வருடங்களுக்கு முன் என் தந்தை இறந்த போது நாங்கள் கண்ணிருந்து குருடாக்கப் பட்டவர்கள். வாழ்ந்து கெட்டவர்கள். வாழ்வின் அதல பாதாளத்தையும் கண்ணால் கண்டோம். கண்ணின் மதிப்பு, பார்வையின் மதிப்பை உணர்ந்தோம். இன்றும் எங்கள் வாழ்க்கையில் உலகை உணர்ந்த பாடம் இருக்கிறது. வேறொரு சமயத்தில் விளக்கமாகச் சொல்கிறேன்.

ஒரு விஷயம் என் அனுபவத்தில கண்டது. சுலபமாக் கெடைக்கிற எதுக்குமே நமக்கு மதிப்புத் தெரியாது. அதே விஷயத்தை நீங்க கொஞ்சம் கஷ்டப் பட்டு பலவித அனுபவங்களோட அடைந்து பாருங்க. அதன் மதிப்பே தனி, மேலும் அதைக் காப்பாத்திக்க நீங்க போராட ஆரம்பிச்சிருவீங்க.

நம்ம ஒவ்வொருத்தர் வாழ்க்கையும் ஒரு பாடம்! இனிமேல் மகிழ்ச்சி மட்டுமே பொங்கட்டும். :) கொஞ்சம் சீரியஸாத்தேன் பேசிப்புட்டேன்... :D

பென்ஸ்
20-12-2005, 03:48 PM
உண்மைதான் பிரதிப்... கஷ்ட படாத சமயத்தில் அமிர்தமே கிடைத்தாலும் கசக்கும்....

நெல்லிக்காய் தின்று நீர் குடிப்பது போன்றது எனக்கு இந்த சம்பவம்....

மதி
21-12-2005, 01:17 PM
உண்மைதான் பிரதிப்... கஷ்ட படாத சமயத்தில் அமிர்தமே கிடைத்தாலும் கசக்கும்....

நெல்லிக்காய் தின்று நீர் குடிப்பது போன்றது எனக்கு இந்த சம்பவம்....
நல்ல அனுபவம் பென்ஸ்...
பல சமயங்களில் அமிர்தமும் கசந்திருக்கிறது..அது தேவைக்கதிகமாய் இருந்த போது..
எனக்கென்று தனிப்பட்ட அனுபவங்கள் இல்லாவிட்டாலும் உங்கள மாதிரி பலரின் அனுபவங்கள் வாழ்வில் வழிகாட்டியாய் அமைகிறது...

பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி..

aren
21-12-2005, 11:27 PM
பென்ஸ், வாழ்க்கையில் நீந்தி வெற்றி பெற்றிருக்கிறீர்கள். படிக்கும்பொழுது மனதிற்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும், இதே பென்ஸ் இப்பொழுது நல்ல நிலமையில் இருப்பதால் சந்தோஷமாக இருக்கிறது.

இதைப் படிக்கும் மற்றவர்களுக்கும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற ஆவல் நிச்சயம் வரும்.

நீங்கள் மேன்மேலும் உயர என் வாழ்த்துக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

kavitha
22-12-2005, 03:27 AM
இதைப் படிக்கும் மற்றவர்களுக்கும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற ஆவல் நிச்சயம் வரும்.

உண்மை தான் அண்ணா. இவர் பட்ட கஷ்டங்களைப்பார்க்கும்போது நாம் என்ன கஷ்டப்பட்டுவிட்டோம்? இதெல்லாம் ஒரு கஷ்டமா? என்றே தோன்றுகிறது.

மென்மேலும் உயர வாழ்த்துகள் பெஞ்சமின் :)

இளசு
22-12-2005, 05:42 AM
சுட்டு சுட்டு தங்கமாய்
அறுபட்டு பட்டு வைரமாய்...

அன்பு பென்ஸும், பிரதீப்பும்.....எத்தனை கிண்டல், கேலி, பொல்லாப்பில்லா போட்டிப்பேச்சுகள்..

இத்தனை ஜொலிப்புக்கும் பின்னால் இந்த பொன்வைரங்கள் கடந்துவந்த கஷ்டங்கள்..


அடடா முகிலன்...

நெல்லிக்காய் அல்ல.. ஆலகால விஷம் உண்டு நீலகண்டத்துடன் சிரித்தவன் நினைவே வருகிறது..


என் கண்ணில் நீர்... ஏனோ கூடவே பெருமிதமும்...

hugiker
22-12-2005, 12:32 PM
i dont speak the language i just thought it looked cool so i joined, if you speak english could you help me out by giving me a few translations until i get the hang of it, im a quick learner.

பாரதி
31-12-2005, 06:10 PM
தாமதமான பதிவுக்கு மன்னிக்கவும் பெஞ்சமின்.

எத்தனை முறைதான் வீட்டுக்கு "கடுக்காய்" கொடுத்தீர்கள்..? அத்தனையும் நெஞ்சில் வடுக்களாய் இருப்பது தெரிகிறது. பிரதீப் சொன்னது போல எளிதாய் கிடைப்பதை விட சிரமப்பட்டு கிடைப்பதில் உள்ள திருப்தியே தனிதான்.

வள்ளுவர் சொன்ன வாக்குதான் எல்லோருக்கும்:
தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன்
மெய்வருத்தக் கூலி தரும்

sarcharan
03-01-2006, 12:55 PM
ஆம் 100% உண்மை.

இதைத்தான் ஆங்கிலத்திலும் அருமையாய் சொல்லியுள்ளார்கள்.

No pains, No gains

அருமையாச் சொல்லீருக்கீங்க பென்ஸூ.
இப்ப ஆண்டவன் என்னை ஒரு நல்ல நிலைமையில வச்சிருக்கான். ஆனால் இதே ஒரு எட்டு வருடங்களுக்கு முன் என் தந்தை இறந்த போது நாங்கள் கண்ணிருந்து குருடாக்கப் பட்டவர்கள். வாழ்ந்து கெட்டவர்கள். வாழ்வின் அதல பாதாளத்தையும் கண்ணால் கண்டோம். கண்ணின் மதிப்பு, பார்வையின் மதிப்பை உணர்ந்தோம். இன்றும் எங்கள் வாழ்க்கையில் உலகை உணர்ந்த பாடம் இருக்கிறது. வேறொரு சமயத்தில் விளக்கமாகச் சொல்கிறேன்.

ஒரு விஷயம் என் அனுபவத்தில கண்டது. சுலபமாக் கெடைக்கிற எதுக்குமே நமக்கு மதிப்புத் தெரியாது. அதே விஷயத்தை நீங்க கொஞ்சம் கஷ்டப் பட்டு பலவித அனுபவங்களோட அடைந்து பாருங்க. அதன் மதிப்பே தனி, மேலும் அதைக் காப்பாத்திக்க நீங்க போராட ஆரம்பிச்சிருவீங்க.

நம்ம ஒவ்வொருத்தர் வாழ்க்கையும் ஒரு பாடம்! இனிமேல் மகிழ்ச்சி மட்டுமே பொங்கட்டும். :) கொஞ்சம் சீரியஸாத்தேன் பேசிப்புட்டேன்... :D

தாமரை
16-03-2006, 06:37 AM
உண்மைதான் பிரதிப்... கஷ்ட படாத சமயத்தில் அமிர்தமே கிடைத்தாலும் கசக்கும்....

நெல்லிக்காய் தின்று நீர் குடிப்பது போன்றது எனக்கு இந்த சம்பவம்....
ஆமாம் இதற்குப் பின் தானே உங்க ராக்கிங் அனுபவம்????:rolleyes: :rolleyes: :rolleyes:

sarcharan
16-03-2006, 06:47 AM
பிரதீப்பு பண்ணினத சொல்லுறீங்களா இல்ல பிரதீப்ப அவன் சீனியர்ஸ் ராகிங் பண்ணினத சொல்லுறீங்களா...?;) ;) ;)

ஆமாம் இதற்குப் பின் தானே உங்க ராக்கிங் அனுபவம்????:rolleyes: :rolleyes: :rolleyes:

பென்ஸ்
16-03-2006, 03:12 PM
ஆமாம் இதற்குப் பின் தானே உங்க ராக்கிங் அனுபவம்????:rolleyes: :rolleyes: :rolleyes:

நான் அவ்வளவு சீக்கிரமா திருந்துற ஆளு இல்லை அப்படின்னு
உங்களுக்கு இப்போ நல்லா புரிந்து இருக்குமே???:D :D :D :D

சுகந்தப்ரீதன்
16-01-2008, 08:55 AM
அண்ணா.. ஏன்னே தெரியல.. ரொம்ப பாதிச்சிடுச்சி உங்களோட இந்த பதிவு என்னை..! உங்க அளவுக்கு எனக்கு அனுபவம் இருக்கான்னு தெரியல.. இருக்குற அனுபவத்தகூட இங்க எல்லாம் எழுதனுமான்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன்..! சில விசயங்கள் வெளிபடுத்திட்டா மனசுக்கு ஒரு அமைதி கிடைக்கும்.. அப்படிதான் இதை நீங்களும் சொல்லி இருப்பீங்கன்னு நினைக்கிறேன்..! உங்க மனசு வலிச்சத என்னால முழுசா உணர முடியுது.. ஏன்னா அதே வலியை நானும் என்வாழ்க்கையில உணர்ந்திருக்கேன்.. எல்லாமே வயதுக்கு மீறிய அனுபவங்கள்..! அதிலிருந்து கத்து கொண்டது கொஞ்சம்தான் ஆனா கண்ணீர் விட்டது அதிகம்..! யவனி அக்கா கவிதையில சொன்ன மாதிரி நானும் உங்களை போல ஒரு களிமண்ணுதான்..!