PDA

View Full Version : Unforgiven

பென்ஸ்
19-12-2005, 09:43 AM
MATALLICA என்னும் ஒரு ஆங்கில ராக் குழுவின் "UNFORGIVEN" என்னும் ஒரு பாடலினால் உந்தபட்டு வந்த கவிதை...
!~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மடியில் விழுந்த
நாள் முதல்
மண்ணுக்குள் போகும்
நாள் வரை
கொடிய உலகின்
விடியா பயணம்..

மரணிக்க வேண்டி
வாழும் வாழ்க்கையில்
ஜீரனிக்கமுடியாத
கட்டுபாடுகள்.....

உணர்வுகளை
சட்டங்களால்
கட்டி போட்டுகொண்டு
மரணித்து வாழ்கிறேன்...

என் கனவுகளுக்கு
வேலி எழுப்பினாய்
என் அடிமன ஆசைகளுக்கு
ஆணி அடித்தாய்....

கடவுளின் பெயரில்
காசு பார்க்கிறாய்,
உள்ளே ஒன்று வைத்து
வேளியே ஒன்று பேசுகிறாய்...

எத்தனை நாள்
உன்முகமூடியை
நான் அனிவது.....
கொதிக்கும் வெறியுடன்
நான் நானாக ஒரு
முடிவில்லா போராட்டம்,

மனதை புதைத்து
கொண்டு நீங்கள் அங்கே....
மரணத்தை வெற்றியாய் கொண்டு
நான் புதைந்து இங்கே...
சுதந்திரமாய்.......

aren
19-12-2005, 09:45 AM
வாவ்!! அருமையாக உள்ளது.

மொழிபெயர்ப்பாக இருந்தாலும் நன்றாக மொழிபெயர்த்து இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

பென்ஸ்
19-12-2005, 09:46 AM
மொழி பெயர்ப்பல்ல...
கரு மட்டும் அவர்களுடையது....

aren
19-12-2005, 09:52 AM
மொழி பெயர்ப்பல்ல...
கரு மட்டும் அவர்களுடையது....

அப்படின்னா இரட்டிப்பு பாராட்டுக்கள் உங்களுக்கு.

மதி
19-12-2005, 09:55 AM
மிக மிக அருமை பென்ஸ்.
கலக்கிட்டீங்க..
நான் கல்லூரியில் கவிதை எழுதியதில்லை-னு நீங்க சொன்னதை இன்னும் நம்ப முடியல்ல..
உங்க பாணியில் என் சிந்தனைகளை நானும் முயற்சிக்கிறேன்..

பென்ஸ்
19-12-2005, 10:08 AM
எங்கோ கேட்ட சில வரிகள்....................

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
"அன்பு பெஞ்சமின்.
இங்கே யாரும் 'தொழில்முறை' எழுத்தாளர்களல்லர்.
எல்லாரும் உந்துதலில் மனதில் வந்ததை எழுதும் ஆர்வலர்கள் மட்டுமே.
ஆகையால் ,
மன்றம் ஒரு கணினிப்பலகை.
எழுதிப்பழகுவோம்.
ஆக்கமாய் விமர்சித்து வளர்வோம்.
அன்பும், தமிழும் சேர்ந்து பரிமாறிக்கொள்வோம்."
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
"ஒரு நல்ல கவிதை படிப்பவனையும் கவிதை எழுத வைக்குமாம்.."
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இது உன்மைதான் மதி...

நான் தமிழ் இங்குதான் படித்து வருகிறேன்...

aren
19-12-2005, 10:11 AM
எங்கோ கேட்ட சில வரிகள்....................

~
நான் தமிழ் இங்குதான் படித்து வருகிறேன்...

அப்போ மன்றத்திலிருந்து ஒரு பில் அனுப்பிவிடலாமா?

நம் மன்ற மக்கள் நன்றாக தமிழ் சொல்லிக்கொடுக்கிறார்கள் போலிருக்கிறது.

பென்ஸ்
19-12-2005, 10:14 AM
இதற்க்கு விலை இருக்கிறது என்று நினைக்கிறிர்களா ஆரென்?????

gragavan
19-12-2005, 10:16 AM
அட பென்சோட புதிய மாடல் அவதாரமா இது. நல்லாருக்கு பென்சு. நல்ல முயற்சி. இப்படியே முயன்று பாருங்கள். நீங்களே ரெண்டு கவிதை எழுதுவீர்கள். என்னுடைய வாழ்த்துகள்.

aren
19-12-2005, 10:37 AM
இதற்க்கு விலை இருக்கிறது என்று நினைக்கிறிர்களா ஆரென்?????

ஏதாவது ஒன்று போட்டு அனுப்பவேண்டுமல்லவா?

உங்களுடைய இரண்டாவது பதிவை இங்கிருந்து அகற்றிவிட்டேன்

ilanthirayan
19-12-2005, 12:43 PM
ராகவன்... "கொடிய உலகின் விடியா பயணம்" ஆ

"கொடிய உலகில் விடியா பயணம்" ஆக வருமா? அடக்குதலும் (அரசு இயந்திரம்) அடக்கப் படுதலும் குறித்த கவிதை என்பது என் விளங்குகை.

எல்லோருக்கும் உள்ள ஆதங்கம் .சட்டம் சம்பிரதாயம் என்ற கடுக்கோப்புகளால்.

அன்புடன் இளந்திரையன்

அறிஞர்
19-12-2005, 03:30 PM
மொழி பெயர்ப்பல்ல...
கரு மட்டும் அவர்களுடையது.... தமிழ் பெயர் ஒன்று வைக்கலாமே.... சொல்லுங்கள் மாற்றிவிடுகிறேன்

பென்ஸ்
19-12-2005, 04:36 PM
நன்றி அறிஞரே... கவிதை தலைப்பு தமிழில் தான் இருக்க வேன்டும்.. இந்த வார்த்தையின் தமிழாக்கம் தெரியவில்லை....

Unforgiven-னை யாராவது தமிழில் பொருள் மாறாமல் சொல்லுவார்களானால் வைத்திவிடலாம் .....

mukilan
19-12-2005, 06:13 PM
மன்னிக்காத " (மன்னிப்பு கிட்டாத) என்பது இச்சொல்லின் தமிழாக்கம். ஆனால் முற்றுப் பெறவில்லையே.இதைத் தழுவி நீங்கள் கூற வந்த தலைப்பை தமிழ் படுத்துங்களேன்.

aren
20-12-2005, 12:46 AM
நன்றி அறிஞரே... கவிதை தலைப்பு தமிழில் தான் இருக்க வேன்டும்.. இந்த வார்த்தையின் தமிழாக்கம் தெரியவில்லை....

Unforgiven-னை யாராவது தமிழில் பொருள் மாறாமல் சொல்லுவார்களானால் வைத்திவிடலாம் .....

Unforgiven என்ற வார்த்தையே நன்றாக இருக்கிறது. கவிதைக்கு கிடைக்கவேண்டிய பஞ்ச் இருக்கிறது. அதை தமிழ்படுத்தினால் அதே பஞ்ச் கிடைக்குமா என்று தெரியாது.

mukilan
20-12-2005, 12:53 AM
மன்னிக்க முடியாதவை! என்பது ஆங்கிலத்தில் unforgivable, imperdonable என்றல்லவா வரவேண்டும். Unforgiven என்பது இன்னமும் மன்னிக்காத( மன்னிக்கலாம், மன்னிக்காமலும் போகலாம்) என்றுதானே வரவேண்டும். எனவே தமிழ்ப் படுத்துதலில் குழப்பம் தவிர்க்க நீங்கள் என்ன நினைத்தீரோ அதற்குப் பொருத்தமான தமிழ் வார்த்தையை இடலாம். இல்லையேல் ஆரென் அண்ணா சொல்லிய படி அப்படியே ஆங்கிலத்திலேயே விட்டு விடலாம்.

அறிஞர்
20-12-2005, 03:01 AM
Unforgiven என்ற வார்த்தையே நன்றாக இருக்கிறது. கவிதைக்கு கிடைக்கவேண்டிய பஞ்ச் இருக்கிறது. அதை தமிழ்படுத்தினால் அதே பஞ்ச் கிடைக்குமா என்று தெரியாது. ஆரென் நன்றாக இருக்கும் பட்சத்தில்.. நீங்களே எடிட் பண்ணி மாற்றிவிடுங்கள்.... தவறில்லை....

சிலருக்கு ஆங்கிலத்தில் பதியலாம் என்ற எண்ணம் வந்துடும். அதான் யோசித்தேன்.

aren
20-12-2005, 03:30 AM
ஆரென் நன்றாக இருக்கும் பட்சத்தில்.. நீங்களே எடிட் பண்ணி மாற்றிவிடுங்கள்.... தவறில்லை....

சிலருக்கு ஆங்கிலத்தில் பதியலாம் என்ற எண்ணம் வந்துடும். அதான் யோசித்தேன்.

இங்கே தமிழில்தான் பதிவு செய்யவேண்டும். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் சில விஷயங்கள் இந்த மாதிரி பிரச்சனையை கிளப்பிவிடுகின்றன. இளசு அவர்கள் என்ன சொல்கிறாரோ அதன்படி செய்யலாம்.

pradeepkt
20-12-2005, 06:10 AM
என்னய்யா இப்படி திடீருன்னு இருந்தாப்பல பொங்கி எழுந்திட்டீரு.
சரி, இன்னும் பல பாதிப்புகளோடும் பாதிப்புகள் இல்லாமயும் நெறைய எழுதுங்க.

இளசு
20-12-2005, 07:26 AM
அன்பு பெஞ்சமின்,

என்னை மன்னிக்கவேண்டும். இப்போது கிடைத்த நேரத்தில் நேற்றைய -இன்றைய பதிவுகளை ---திருப்பாவை உட்பட...... வாசிக்கமட்டுமே இயன்றது.

கருத்துகள் பின்னர்.

அன்பின் ஆரென், அறிஞர்,

தலைப்பு அப்படியே இருக்கட்டும். அடைப்புக்குறிக்குள் உள்தலைப்பாய் தமிழீடு கொடுக்கலாம்.

முகிலன் சொன்ன வழியில் யோசிக்கலாம்..சரியான ஈடு சட்டென சிக்கவில்லை எனக்கும்...

kavitha
20-12-2005, 08:38 AM
எத்தனை நாள்
உன்முகமூடியை
நான் அணிவது.....
....
மனதை புதைத்து
கொண்டு நீங்கள் அங்கே....
மரணத்தை வெற்றியாய் கொண்டு
நான் புதைந்து இங்கே...
சுதந்திரமாய்.......

அழுத்தமான வரிகள். ஆனால் மரணத்தில் மட்டுமே விடுதலை என்பது சோகமான முடிவு.

மன்மதன்
20-12-2005, 02:58 PM
அபாரம் பெஞ்சமின்......... கவிதையிலேயும் கலக்குறீங்க.. பாராட்டுகள்..

பென்ஸ்
20-12-2005, 03:20 PM
பிறந்த நாள் முதல் நீ இப்படிதான் வாழ வேண்டும் என்று வேலி அமைக்கின்ற இந்த சமுதாயத்தில் பிறந்த ஒரு சாதாரன மனிதனான எனக்கும் தோன்றிய ஒரு சிந்தனைதான் இதுவும் இதை பாடலாய் கெட்ட போது கவிதையாய் வடித்தால் என்ன என்று ஒரு கேள்வி என்னுள் எழ அதன் விளைவு தான் இந்த unforgiven. இந்த உணர்வுகளை நியாயபடுத்த விரும்பவில்லை.

நூல் கயிற்றில் கட்டப்பட்ட யானையாய் என் ஆசைகள், பாகனையும் வதம் செய்து சுதந்திரமாய் திரியலாம் என்று நினைக்கும் எண்ணம் வந்தாலும், மதம் பிடித்ததாய் வேடிக்கை பார்பர், ஒரு நிமிட சுதந்திரத்திற்க்காக தன்மானம் விட்டு அடங்கவேண்டும், இல்லையென்றல் அடக்கபடுவேன் அல்லது புதைக்கபடுவேன் இது வெற்றி காண முடியாத போராட்டம் தான்,

என் சிந்தனைகள் சிறகுகளாய் பிடுங்கபடுகின்றன பறக்கமுடியாமல் சுற்றி சுற்றி வருகிறேன் சிறு கூண்டிற்க்குள்ளையே எனக்கு உணவும் போடுகிறாகள்.. சிறகுகள் முளைக்கிறன.. இருப்பினும் இந்த சிறு கூண்டின் இன்பம் பிடித்து போயிற்றோ??? மீண்டும் பறக்கதான் நினைக்கிறேன், பிடுங்கபட்ட சிறகுகள் ஒடிக்கபடுகின்றன.

இந்த சமுதாயமும் சட்டங்களும் என்னை பாதுகாக்கவா இல்லை சிறுகூண்டினுள் அடைத்து வைக்கவா????

பென்ஸ்
20-12-2005, 03:27 PM
ராகவன்... "கொடிய உலகின் விடியா பயணம்" ஆ

"கொடிய உலகில் விடியா பயணம்" ஆக வருமா? அடக்குதலும் (அரசு இயந்திரம்) அடக்கப் படுதலும் குறித்த கவிதை என்பது என் விளங்குகை.

எல்லோருக்கும் உள்ள ஆதங்கம் .சட்டம் சம்பிரதாயம் என்ற கடுக்கோப்புகளால்.

அன்புடன் இளந்திரையன்

நீங்கள் சொன்னமாதிரி தான் எழுதியிருக்கனும்... எழுதியபிறகு (நீங்கள் சொன்ன பிறகு) இப்படியும் இருக்கலாம் என்றதால் விட்டு விட்டேன்...

பென்ஸ்
20-12-2005, 03:34 PM
அழுத்தமான வரிகள். ஆனால் மரணத்தில் மட்டுமே விடுதலை என்பது சோகமான முடிவு.

இதற்க்கு இதுதான் முடிவு என்று சொல்லவில்லை...
இதுவாகதான் இருந்துவருகிறது என்று சொல்லுகிறேன்....

பென்ஸ்
20-12-2005, 03:36 PM
நன்றி..... ஆரென், மதி, ராகவன்,இளந்திரையன், முகில்ஸ், அறிஞர், இளசு, கவிதா மற்றும் மன்மதன்.... உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி...

இளசு இன்னும் உங்கள் கருத்துவரவில்லையே... நேரம் இருத்தால் மட்டும் பதிக்கவும்... ஆனால் கண்டிப்பாக பதிக்கவும்....

pradeepkt
20-12-2005, 03:38 PM
நன்றி..... ஆரென், மதி, ராகவன்,இளந்திரையன், முகில்ஸ், அறிஞர், இளசு, கவிதா மற்றும் மன்மதன்.... உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி...

இளசு இன்னும் உங்கள் கருத்துவரவில்லையே... நேரம் இருத்தால் மட்டும் பதிக்கவும்... ஆனால் கண்டிப்பாக பதிக்கவும்....
ஒரு முடிவோடதான்யா திரியுறீரு... :D
இளசு அண்ணா கண்டிப்பாகத் தனது கருத்துகளை இடுவார்.

பென்ஸ்
20-12-2005, 03:45 PM
ஒரு முடிவோடதான்யா திரியுறீரு... :D
இளசு அண்ணா கண்டிப்பாகத் தனது கருத்துகளை இடுவார்.

அவரிடம் இருந்து கற்றதுதான் .. அவருடைய "என் தோட்டம்.." கவிதையில் சிலவரிகள்

*/.........................................
என்னைப் புரிந்துகொள்..
............................................
செய்யாவிட்டால்..?
நஷ்டம் ஒன்றுமில்லை..

..................................................
உறக்கம் தழுவாமல்
புரண்டுகொண்டிருப்பேன்..
.................../*

விட்ட அம்பு அவரை நோக்கியே போகுது.....

இளசு
22-12-2005, 07:22 AM
பிறந்த நாள் முதல் நீ இப்படிதான் வாழ வேண்டும் என்று வேலி அமைக்கின்ற இந்த சமுதாயத்தில் பிறந்த ஒரு சாதாரன மனிதனான எனக்கும் தோன்றிய ஒரு சிந்தனைதான் இதுவும் இதை பாடலாய் கெட்ட போது கவிதையாய் வடித்தால் என்ன என்று ஒரு கேள்வி என்னுள் எழ அதன் விளைவு தான் இந்த unforgiven. இந்த உணர்வுகளை நியாயபடுத்த விரும்பவில்லை.

நூல் கயிற்றில் கட்டப்பட்ட யானையாய் என் ஆசைகள், பாகனையும் வதம் செய்து சுதந்திரமாய் திரியலாம் என்று நினைக்கும் எண்ணம் வந்தாலும், மதம் பிடித்ததாய் வேடிக்கை பார்பர், ஒரு நிமிட சுதந்திரத்திற்க்காக தன்மானம் விட்டு அடங்கவேண்டும், இல்லையென்றல் அடக்கபடுவேன் அல்லது புதைக்கபடுவேன் இது வெற்றி காண முடியாத போராட்டம் தான்,

என் சிந்தனைகள் சிறகுகளாய் பிடுங்கபடுகின்றன பறக்கமுடியாமல் சுற்றி சுற்றி வருகிறேன் சிறு கூண்டிற்குள்ளேயே எனக்கு உணவும் போடுகிறாகள்.. சிறகுகள் முளைக்கிறன.. இருப்பினும் இந்த சிறு கூண்டின் இன்பம் பிடித்து போயிற்றோ??? மீண்டும் பறக்கதான் நினைக்கிறேன், பிடுங்கபட்ட சிறகுகள் ஒடிக்கபடுகின்றன.

இந்த சமுதாயமும் சட்டங்களும் என்னை பாதுகாக்கவா இல்லை சிறுகூண்டினுள் அடைத்து வைக்கவா????

அன்பு பெஞ்சமின்,

பெரிய பெரிய கேள்விகளை
ஓரிரு வரிகளில் சர்வசாதாரணமாய் கேட்டுவிடுவது

உங்களுக்குக் கைவந்த கலை..

உங்கள் கேள்விகள் - நம் எல்லாருக்கும் உண்டு.

பதில்கள்தான் ----!!!???????

எல்லாக்கோடுகளும் ஒரு நிறையல்ல..

சாலையின் மஞ்சள் கோடு...

சாடிஸ்ட் கணவன் கட்டிய மஞ்சள் கோடு..

ஒன்றைத்தாண்டாதது பொதுநோக்கு ஒழுக்கம்..

ஒன்றைத்தாண்டாதது - குரல்வளை நெறிக்கும் 'சமூக, அழுத்தம்.

-------------------------------------

ஒவ்வொரு வயதில், ஒவ்வொரு கட்டத்தில்
சில கோடுகள் சிறைச்சுவர்களாய், சின்ன நூல்கண்டாய்
மைதான எல்லையாய், மூச்சுவாங்குதலின் இளைப்பாறலாய்

மாறி மாறி...

மாற்றம் ஒன்றே மாறாமல்...

------------------------------------------

இந்தக் கவிஞனின் பார்வையில் இந்தக்குமுறல் ....

மரணத்தீர்வில் கொக்கரிப்பதை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும்
புரிந்துகொள்கிறேன்..

-------------------------------------

கருவை எடுத்து அழுத்தமாய் சொன்ன விதத்துக்கு
என் ஆழ்ந்த பாராட்டுகள்..

சொல்சிற்பி பெஞ்சமின்...,
வாழ்த்துகள்..!

பென்ஸ்
22-12-2005, 04:26 PM
வேறும் பாராட்டுகள் அல்லாது மனதில் இருந்து வரும் கருத்துகளை இந்த மனதாலும் புரிந்த்து கொள்ள முடிகிறது.... மன்றத்தில் என்னை இதுதான் இழுத்து காட்டி போட்டு வைத்திருக்கிறது...

*/சாலையின் மஞ்சள் கோடு...
சாடிஸ்ட் கணவன் கட்டிய மஞ்சள் கோடு..
ஒன்றைத்தாண்டாதது பொதுநோக்கு ஒழுக்கம்..
ஒன்றைத்தாண்டாதது - குரல்வளை நெறிக்கும் 'சமூக, அழுத்தம்./*

நல்லதிர்க்கும் கேட்டதிற்க்கும் எது கோடு, எதர்க்காக???? அருமை...

*/இந்தக் கவிஞனின் பார்வையில் இந்தக்குமுறல் ....
மரணத்தீர்வில் கொக்கரிப்பதை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும்
புரிந்துகொள்கிறேன்../*

:) :) :) :) :) "perfect" இளசு...

இளசு
03-07-2006, 11:08 PM
இன்று மீண்டும் வாசித்தேன் பென்ஸ்..

வீரியம் கூடித்தான் இருக்கிறது... குறையவில்லை..

ஆழ்ந்த படைப்புகள் அப்படித்தான்..

lolluvathiyar
18-07-2007, 10:18 AM
ஆழ்மனதின் உன்மைகளை
ஆபாசமில்லாமலும்
யாரையும் தூற்றாமலும்
கவிதை வடிவில் கொண்டு வந்திருகிறீர்கள்
கரு எங்கிருந்து எடுக்க பட்டது என்பது முக்கியமில்லை
அதை விளக்க பயன் படுத்த பட்ட வார்த்தைகள் தான் இங்கு
விளையாடி, எங்களையும் புல்லரிக்க செய்து விட்டது.
அடுத்த சிக்மென்ட் பிராய்டு
வாழ்த்துகள் 50 இபணத்துடன்

ஓவியன்
18-07-2007, 06:26 PM
அண்ணா உங்கள் வரிகளால் அசந்தேன், அருமையாக இருந்தது....

அதிலும் நீங்கள் தந்த வரிகள்.......

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
"அன்பு பெஞ்சமின்.
இங்கே யாரும் 'தொழில்முறை' எழுத்தாளர்களல்லர்.
எல்லாரும் உந்துதலில் மனதில் வந்ததை எழுதும் ஆர்வலர்கள் மட்டுமே.
ஆகையால் ,
மன்றம் ஒரு கணினிப்பலகை.
எழுதிப்பழகுவோம்.
ஆக்கமாய் விமர்சித்து வளர்வோம்.
அன்பும், தமிழும் சேர்ந்து பரிமாறிக்கொள்வோம்."
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
"ஒரு நல்ல கவிதை படிப்பவனையும் கவிதை எழுத வைக்குமாம்.."
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

...

எவ்வளவு உண்மையான வாசகங்கள் அவை, இந்த மன்றம் தானே என்னைப் போன்றோரையும் கவி எழுதத் தூண்டியது...........

தங்க வரிகளை எங்களுடன் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள் அண்ணா!.