PDA

View Full Version : மகாபாரதத்தில் சிறந்த மனிதர் யார்???

Pages : [1] 2

பென்ஸ்
18-12-2005, 04:03 PM
நண்பர்களே....

மகாபாரதத்தில் சிறந்த மனிதர் யார் என்று ஒரு கேள்வியை மன்றத்தில் வைக்கிறேன்... நீங்கள் ஒருவரை தேர்வு செய்யலாம்.. ஆனால் தயவு செய்து நீங்கள் அவரை தேர்வு செய்வதன் காரணம் என்ன என்று பதிவு செய்யவும்...

பென்ஸ்
18-12-2005, 04:13 PM
நானே தூவங்குகிறேன்....

துரியோதனன் தன்மானம் உள்ளவன்... பிறர் துன்பத்தியும் பார்க்க தேரிந்தவன்...
உதா: கர்ணனை அர்ச்சுனம் போட்டிகளத்தில் அவமானப்படுத்தும் போது அவனின் மனம் அறிந்து அவனை அரசனாக்கி ஒரு மனித மனம் காத்தவன்
துரியோதனன் பிறர் மேல் நம்பிக்கை கொண்டவன்:
உதா: கர்ணன் மற்றும் துரியோதனன் மனைவியிம் பகடையாட்டம் நிகள்ச்சி... "முத்துகளை கோர்த்து கொடுக்கவோ.. அப்படியே கொடுக்கவோ???"

இளசு
18-12-2005, 07:57 PM
தந்தை ஆசை நிறைவேற்ற இளமையில் துறவறம் பூண்டவரும்
கொண்ட நன்றி கொண்டாட கடைசி வரை உறுதியாய் நின்றவரும்
அம்புப்படுக்கையில் துயில் கொண்ட தீராதி தீரரும்
ஆசை நிறைவேறா அரம்பையர் சாபம் பெற்றவருமான

பீஷ்மரே என் தேர்வு..

(ஆனால் கர்ணன், துரியோதனையும் இந்த அளவுக்குப் பிடிக்கும்..
ஒருவர் என்றதால் இப்படி..)

mukilan
18-12-2005, 09:56 PM
நானே தூவங்குகிறேன்....

துரியோதனன் தன்மானம் உள்ளவன்... பிறர் துன்பத்தியும் பார்க்க தேரிந்தவன்...
உதா: கர்ணனை அர்ச்சுனம் போட்டிகளத்தில் அவமானப்படுத்தும் போது அவனின் மனம் அறிந்து அவனை அரசனாக்கி ஒரு மனித மனம் காத்தவன்
"
அன்பு நண்பர் பெஞ்சமின்
எனக்கு இக்கருத்தில் உடன்பாடு இல்லை. துரியோதணனை உங்களுக்குப் பிடிக்க வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால் பிறர் துன்பம் கண்டு மனம் வருந்துவதாய் இருந்தால் பாரதப் போரே இல்லையே! பாண்டவர்கள் துன்பம் கண்டு இரங்கியிருந்தால் அவர்கட்கு கொஞ்சமேனும் நிலம் கொடுத்திருக்கலாமே! பாஞ்சாலியைத் துகில் உரியச் செய்தது கருணை உள்ளத்தின் நிலைப்பாடா??கர்ணனை அர்ச்சுனன் அவமானம் செய்கையில் கர்ணனை அங்கத நாட்டு மன்னனாக்கி அழகு பார்த்தான் துரியோதணன். நட்புக்காக மட்டுமே செய்திருக்கலாம். ஆனால் நல்ல ஒரு வீரனை தன் பக்கமே வைத்துக் கொள்வதற்காகவே என்பதுவும் ஒரு காரணம் என எனக்குப் படுகிறது! மற்றபடி சிறு வயதில் தோன்றிய பொறாமைத் தீயை சகுனி போன்றோர் எண்ணையிட்டு வளர்த்து விட்டதாலேயே துரியோதணன் துஷ்டனாக மாறிப்போனான்.

mukilan
18-12-2005, 10:04 PM
குந்தியின் வயிற்றிலே பிறந்தாலும் தேர்ப்பாகனின் மகனாய் வளர்ந்து, துரியோதணனால் நட்பு பாராட்டப் பட்டதாலேயே அவனுக்காகப் போர்க்களத்தில் சொந்த தம்பியர் எனத் தெரிந்தும் செய்நன்றிக்காகச் செஞ்சோற்றுக்கடன் தீர்த்த கர்ணனே எனது தேர்வு. கர்ணன் ஒரு மாவீரன், தலை சிறந்த வள்ளல். இல்லையென்று சொல்லாமல் தன்னிடம் இருப்பது அனைத்தையையும் வாரி வாரி வழங்கிய வள்ளல். சூரியனின் மகன். ஆற்றல் மிக்க அவன் தாய்க்குச் சத்தியம் செய்ததாலேயே நாகாஸ்திரத்தை மறு பிரயோகம் செய்யாமல் விட்டான். சாவின் தருணத்திலேயும் தேவேந்திரன் இந்திரனுக்கு தன் கவச குண்டலங்கலைப் பெயர்த்துப் பிச்சையிட்டவன். ஏன்! பரமாத்மா கிருஷ்ணபகவானே கர்ணன் செய்த தர்மங்களின் பயனை பிச்சையாக யாசித்துத்தானே அவனைக் கொல்ல முடிந்த்தது! கர்ணனே எனது சாய்ஸ்!

aren
18-12-2005, 10:41 PM
எனக்குத் தெரிந்தவரை அதில் நல்லவன் "சகுனி" தான்.

மகாபாரதம் எழுதப்பட்டது பாண்டவர்களைச் சார்ந்தே. ஆனால் துரியோதனன் பக்கம் இருப்பவர்களையும் கொஞ்சம் பார்க்கலாமே?

சகுனி இல்லையென்றால் மகாபாரதமே கிடையாது. அதனால் மகாபாரதத்திற்கு மூலக்காரணமே சகுனிதான்.

சகுனியை நாம் பாண்டவர்கள் பக்கம் இருந்து பார்த்தால் அவன் கெட்டவனாக சித்தரிக்கப்படுகிறான். ஆனால் அதையே துரியோதனன் பக்கம் இருந்து பார்த்தால் அவன் மிகவும் விசுவாசியாக துரியோதனனுக்கு இருந்திருக்கிறான். அவனுடைய மூளை சாணக்கியன் மூளையைவிட பெரியது. அவன் சிந்தனையும் காயை நகற்றிய விதமும் அவனுடைய அறிவாற்றலை வெளிப்படுத்துகிறது.

ஒரு பிஸனஸை எடுத்துக்கொண்டால், நாம் வேலை செய்யும் கம்பெனிக்கு நன்மை வரும் முடிவுகளையே நாம் எடுப்போம் இல்லையா? நாம் நம்முடைய கம்பெனிக்கு என்னென்ன நன்மை வரும் என்று முன்பே யோசித்து அதற்கான முடிவையே எடுப்போம். சகுனியை ஒரு கம்பெனியின் மேனேஜராக எடுத்துக்கொண்டால் அவர் அந்த கம்பெனிக்கு நன்மை செய்யும் விதத்திலேயே நடந்துகொள்ளவேண்டும் அல்லவா? அதைத்தானே சகுனி செய்திருக்கிறார். துரியோதனனுக்கு ஆதரவாக எல்லா வேலைகளையும் செய்திருக்கிறார்.

ஆனால் நம் முன்னோர்கள் பாண்டவர்களைப் பற்றியே நன்றாக பேசவேண்டும் என்பதற்காக கதையில் வருபவர்களை கொஞ்சம் அவர்களுக்கு சாதகமாக மாற்றியிருக்கிறார்கள் என்பதே என் கருத்து. காரணம் கிருஷ்ணன் இருக்கும் அணியே வெல்லவேண்டும் என்பதே.

கதையை கவனித்தீர்களானால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இடத்தில் இடறும், அவர்களுடைய மனநிலை மாறும். ஆனால் சகுனியின் நினைப்பு எப்பொழுதும் துரியோதனன் வெல்லவேண்டும் என்பதிலேயே குறியாக இருக்கும். ஆகையால் எடுத்த/கொடுத்த வேலையை செவ்வனே முடிக்க வேண்டும் என்ற மன நிலை அவரிடம் இருந்தது.

அதனால் மகாபாரத்தத்தின் மூலகர்த்தாவான சகுனியே சிறந்தவர்.

நம் மக்கள் என்னை அடிக்க வருவார்கள் என்று தெரியும். ஆனால் நான் யோசித்தது இந்த காலத்து சிந்தனையின் அடிப்படையில்.

சண்டைக்கு வழிவகுத்துவிட்டு ஜகா வாங்கும்
ஆரென்

பரஞ்சோதி
19-12-2005, 03:13 AM
நான் நேற்றே அர்ஜீனனுக்கு வாக்களித்து விட்டேன், என்னைப் பொருத்தவரை அர்ஜீனனே மகாபாரதத்தில் மிகச் சிறந்தவர், அவர் மீது ஒரு குற்றமும் சொல்ல முடியாதவர், நீங்க சொன்ன அத்தனை பேரும் தவறானவர்கள், தவறு செய்தவர்கள்.

ஏன் அர்ஜீனன் சிறந்தவர் என்பதை பின்னர் விளக்குகிறேன்.

உதயா
19-12-2005, 03:33 AM
"கர்ணன்" என்பதே என் பதில். நண்பனுக்காகவே தன்னை இழந்தவன். நண்பர் முகிலனின் கருத்துக்கலோடு ஒத்துப்போகிறேன்.

gragavan
19-12-2005, 05:02 AM
கர்ணன் என்பதே எனது பதில். காந்தாரி, பீஷ்மர், துரியோதனன், தருமன், அர்ச்சுனன் என்பதே எனது வரிசை. இதற்குப் பெரிய விளக்கமும் கொடுக்கின்றேன்.

பரஞ்சோதி
19-12-2005, 05:45 AM
மிகச் சிறந்தவன் என்பதை ஒரு தகுதியை வைத்தே எல்லோரும் சொல்லுறீங்க, நல்லா சிந்தித்து சொல்லுங்க.

மகாபாரதம் மிகப் பெரிய காவியம், அதில் ஆயிரக்கணக்கில் கதாபாத்திரங்கள், அனைவரும் ஏதாவது ஒருவகையில் சிறந்தவர்களே!

ஏன் சல்லியன் கூட மிகச் சிறந்தவர். ஆக கர்ணனை நான் ஏற்றுக் கொள்ள முடியாது, இராகவன் அண்ணா, ஓட்டை மாற்றியிடவும்.

gragavan
19-12-2005, 06:05 AM
மிகச் சிறந்தவன் என்பதை ஒரு தகுதியை வைத்தே எல்லோரும் சொல்லுறீங்க, நல்லா சிந்தித்து சொல்லுங்க.

மகாபாரதம் மிகப் பெரிய காவியம், அதில் ஆயிரக்கணக்கில் கதாபாத்திரங்கள், அனைவரும் ஏதாவது ஒருவகையில் சிறந்தவர்களே!

ஏன் சல்லியன் கூட மிகச் சிறந்தவர். ஆக கர்ணனை நான் ஏற்றுக் கொள்ள முடியாது, இராகவன் அண்ணா, ஓட்டை மாற்றியிடவும்.இதென்ன கூத்தாயிருக்கு. எனக்குத் தோன்றியதை நான் போட்டிருக்கேன். ஓட்டையும் மாத்த முடியாது. பூட்டையும் மாத்த முடியாது.

நான் இன்னமும் விளக்கம் சொல்லவே இல்லையே. பொறுமை அவசியம். அதற்கு முன்னாடி நீ கர்ணனை ஏன் ஏற்றுக் கொள்ள முடியாது என்று சொல் பார்க்கலாம்.

mukilan
19-12-2005, 06:10 AM
சரியா கேட்டீங்க ராகவன். பரம்ஸ் அண்ணாச்சி " அண்ணன் கேள்விக்கென்ன பதில்?"

பரஞ்சோதி
19-12-2005, 06:14 AM
சரியா கேட்டீங்க ராகவன். பரம்ஸ் அண்ணாச்சி " அண்ணன் கேள்விக்கென்ன பதில்?"

ஏலே தம்பி, ஏதோ சகுனி வேலை செய்வது போலிருக்குது.:D

mukilan
19-12-2005, 06:18 AM
நாங்கள்லாம் கர்ணன் பரம்பரையாக்கும். சகுனியாம்ல சகுனி! கண்ணன் களவாணித்தனம் பண்ணலைனா அர்ச்சுனனுக்கு வெச்சிருப்பமய்யா ஆப்பு. ஏதோ தப்பிச்சீக!

பரஞ்சோதி
19-12-2005, 06:21 AM
தம்பி, நல்லவங்க பக்கம் தெய்வம் துணையிருக்கும், கெட்டவங்க அவங்களே அவங்களுக்கு ஆப்பு வைச்சிக்குவாங்க.

- ஆப்பு விற்கும் பரம்ஸ்

aren
19-12-2005, 06:40 AM
நாங்கள்லாம் கர்ணன் பரம்பரையாக்கும். சகுனியாம்ல சகுனி! கண்ணன் களவாணித்தனம் பண்ணலைனா அர்ச்சுனனுக்கு வெச்சிருப்பமய்யா ஆப்பு. ஏதோ தப்பிச்சீக!

கண்ணன் களவாணித்தனம் செய்யலாம், ஆனால் சகுனி செய்தால் அது தப்பா?

அப்போ கண்ணனையும் இந்த லிஸ்டில் சேர்த்துக்கொள்ளக்கூடாது.

பரஞ்சோதி
19-12-2005, 06:52 AM
யாரோ கர்ணனுக்கு கள்ள ஓட்டு போட்டிருக்காங்க, இதிலிருந்து தெரியலையா ?

mukilan
19-12-2005, 06:56 AM
கள்ள ஓட்டா? பயமய்யா உங்களுக்குப் பயம். எப்படியோ எங்ககிட்ட இருக்கிற கூட்டமெல்லாம் தானா சேர்ந்த கூட்டம்.கள்ளத்தனம் செஞ்சு சேர்த்த கூட்டமில்லை. எங்களோட சாம்ராஜ்யம் தனி சாம்ராஜ்யம். (டயலாக் எடுபடலையே!!)போய் சக்திக்கு உருப்படியா கர்ணன் சரிதையை சொல்ற வழியைப் பாருங்க.!

gragavan
19-12-2005, 07:18 AM
தம்பி, நல்லவங்க பக்கம் தெய்வம் துணையிருக்கும், கெட்டவங்க அவங்களே அவங்களுக்கு ஆப்பு வைச்சிக்குவாங்க.

- ஆப்பு விற்கும் பரம்ஸ்யய்யா பரஞ்சோதி....இந்தப் பேச்சு கெடக்கட்டும். மொதல்ல....எங் கேள்விக்கு வெடயச் சொல்லுவே!

பரஞ்சோதி
19-12-2005, 07:20 AM
கள்ள ஓட்டா? பயமய்யா உங்களுக்குப் பயம். எப்படியோ எங்ககிட்ட இருக்கிற கூட்டமெல்லாம் தானா சேர்ந்த கூட்டம்.கள்ளத்தனம் செஞ்சு சேர்த்த கூட்டமில்லை. எங்களோட சாம்ராஜ்யம் தனி சாம்ராஜ்யம். (டயலாக் எடுபடலையே!!)போய் சக்திக்கு உருப்படியா கர்ணன் சரிதையை சொல்ற வழியைப் பாருங்க.!

சக்திக்கு தோற்றுப் போனவர்களின் கதையை சொல்ல மாட்டேன், விஜயம் கிடைத்த விஜயனின் கதையை தான் சொல்லுவேன்.

gragavan
19-12-2005, 08:20 AM
சக்திக்கு தோற்றுப் போனவர்களின் கதையை சொல்ல மாட்டேன், விஜயம் கிடைத்த விஜயனின் கதையை தான் சொல்லுவேன்.கர்ணனா தோற்றவன். அடத் தம்பி! என்ன தவறான கருத்து. தருமனும் அருச்சுனனும் கண்ணனிடம் கையேந்தி வெற்றி பெற்றார்கள். ஆனால் கர்ணன் யாரிடமும் கையேந்தவில்லை. கடைசியில் கண்ணனே கர்ணனிடம் கையேந்தினான். கடவுளுக்குப் பிச்சை போட்ட பேராளன் ஐயா அவன்.

அண்ணனையே கொன்று விட்டேன் என்று புலம்பினான் நீ சொல்லும் விஜயன். அப்பொழுது கண்ணன் சொன்னான். "விஜயா! செத்த பாம்பை அடித்து விட்டுப் புலம்பாதே. கர்ணனை உன்னால் வென்றிருக்கவே முடியாது. முதலில் ஆற்றில் போட்டு குந்தி கொன்றாள். பிறகு சாபம் தந்து பரசுராமர் கொன்றார். பிறகு அவை நடுவே அவனை அவமானப்படுத்தி கிருபர் கொன்றார். அதற்குப் பிறகு கவசகுண்டலங்களை வாங்கி உனது தந்தை இந்திரன் கொன்றான். அதற்குப் பிறகு உன்மேல் இரண்டாம் முறை அஸ்திரம் போடக்கூடாது என்று வரம் வாங்கி குந்தி கொன்றாள். அதற்குப் பிறகு அவனைக் கோவப்படுத்தும் வகையில் பேசிச் சல்லியன் கொன்றான். அதற்குப் பிறகு உன்னைக் காக்க தேரை அழுத்தி நான் கொன்றேன். அதற்குப் பிறகு அவன் புண்ணியங்களையெல்லாம் தானம் பெற்று மீண்டும் கொன்றேன். அதற்குப் பிறகு செத்த பாம்பை அடித்து விட்டு, நான் கொன்றேன் என்று புலம்புகின்றாயே!"

இப்படிப்பட்ட விஜயனா வெற்றி வீரன்? இவனுக்கா ஓட்டுப் போடுவது? கும்பகருணனையும் சிங்கமுகனையும் குறைத்து மதிப்பிட்டவந்தானே தம்பி நீ! பல்குணனைப் போற்றுவதில் வியப்பில்லை.

(யப்பா மூச்சு வாங்குது...சோடா கொண்டாங்கய்யா!)

மதி
19-12-2005, 08:28 AM
கர்ணனா தோற்றவன். அடத் தம்பி! என்ன தவறான கருத்து. தருமனும் அருச்சுனனும் கண்ணனிடம் கையேந்தி வெற்றி பெற்றார்கள். ஆனால் கர்ணன் யாரிடமும் கையேந்தவில்லை. கடைசியில் கண்ணனே கர்ணனிடம் கையேந்தினான். கடவுளுக்குப் பிச்சை போட்ட பேராளன் ஐயா அவன்.

ச்சே..ஒருத்தனுக்கு இத்தனை சாவா..?
படிக்கவே மூச்சிரைக்குது..

பரஞ்சோதி
19-12-2005, 08:43 AM
ஆகா இராகவன் அண்ணா கர்ணனைப் பற்றி பெரிய பட்டியலே போட்டிருக்கீங்க, அத்தனையிலும் அவர் செய்த தவறுகளை மறைத்திருக்கீங்க. பேசுங்க பேசுங்க, நான் விளக்கம் அப்புறம் கொடுக்கிறேன்.

கர்ணனை எல்லோரும் போற்ற அவனது கொடை வள்ளல் திறமையும், நன்றிக்கடன் தீர்த்ததை தானே சொல்றீங்க, அவனது கெட்ட குணங்களை தைரியம் இருந்தால் உங்களால் பட்டியலிட முடியுமா?

பென்ஸ்
19-12-2005, 08:48 AM
எனக்கு இதில் கொஞ்சம் விவரம் குறைவு..
ஆனால் இதை எல்லாம் வாசித்து விட்டு ஆபிஸ் பிகர்களிடம் பீலா விடலாம் போல....

பரஞ்சோதி
19-12-2005, 08:52 AM
கர்ணனா தோற்றவன். அடத் தம்பி! என்ன தவறான கருத்து. தருமனும் அருச்சுனனும் கண்ணனிடம் கையேந்தி வெற்றி பெற்றார்கள். ஆனால் கர்ணன் யாரிடமும் கையேந்தவில்லை. கடைசியில் கண்ணனே கர்ணனிடம் கையேந்தினான். கடவுளுக்குப் பிச்சை போட்ட பேராளன் ஐயா அவன்.

அண்ணனையே கொன்று விட்டேன் என்று புலம்பினான் நீ சொல்லும் விஜயன். அப்பொழுது கண்ணன் சொன்னான். "விஜயா! செத்த பாம்பை அடித்து விட்டுப் புலம்பாதே. கர்ணனை உன்னால் வென்றிருக்கவே முடியாது. முதலில் ஆற்றில் போட்டு குந்தி கொன்றாள். பிறகு சாபம் தந்து பரசுராமர் கொன்றார். பிறகு அவை நடுவே அவனை அவமானப்படுத்தி கிருபர் கொன்றார். அதற்குப் பிறகு கவசகுண்டலங்களை வாங்கி உனது தந்தை இந்திரன் கொன்றான். அதற்குப் பிறகு உன்மேல் இரண்டாம் முறை அஸ்திரம் போடக்கூடாது என்று வரம் வாங்கி குந்தி கொன்றாள். அதற்குப் பிறகு அவனைக் கோவப்படுத்தும் வகையில் பேசிச் சல்லியன் கொன்றான். அதற்குப் பிறகு உன்னைக் காக்க தேரை அழுத்தி நான் கொன்றேன். அதற்குப் பிறகு அவன் புண்ணியங்களையெல்லாம் தானம் பெற்று மீண்டும் கொன்றேன். அதற்குப் பிறகு செத்த பாம்பை அடித்து விட்டு, நான் கொன்றேன் என்று புலம்புகின்றாயே!"

இப்படிப்பட்ட விஜயனா வெற்றி வீரன்? இவனுக்கா ஓட்டுப் போடுவது? கும்பகருணனையும் சிங்கமுகனையும் குறைத்து மதிப்பிட்டவந்தானே தம்பி நீ! பல்குணனைப் போற்றுவதில் வியப்பில்லை.

(யப்பா மூச்சு வாங்குது...சோடா கொண்டாங்கய்யா!)

கர்ணன் படத்தை இப்போ கொஞ்ச நாள் முன்னாடி தான் பார்த்தாராம், அது அவரை உயர்த்தி சொல்லப்பட்ட படம். வீரப்பனை உயர்த்தி சொல்லப்பட்ட படத்தை பார்த்து வீரப்பன், நல்லபன் என்று சொல்லுவீங்க போலிருக்குதே.

மகாபாரதத்தை மீண்டும் ஒரு முறை முதலிலிருந்து படிக்கவும்.

gragavan
19-12-2005, 09:14 AM
கர்ணன் படத்தை இப்போ கொஞ்ச நாள் முன்னாடி தான் பார்த்தாராம், அது அவரை உயர்த்தி சொல்லப்பட்ட படம். வீரப்பனை உயர்த்தி சொல்லப்பட்ட படத்தை பார்த்து வீரப்பன், நல்லபன் என்று சொல்லுவீங்க போலிருக்குதே.

மகாபாரதத்தை மீண்டும் ஒரு முறை முதலிலிருந்து படிக்கவும்.முதலிலிருந்தென்றால் பூமன்யுவிடமிருந்தா? காமதேனுவிடமிருந்தா? விளங்கச் சொல் தம்பி. அதே போல் எங்கு முடிக்க வேண்டும் என்றும் சொல்லி விடு தம்பி.

சரி. கர்ணன் செய்த தவறுகளைப் பட்டியலிடுக!

மதி
19-12-2005, 09:27 AM
எனக்கு இதில் கொஞ்சம் விவரம் குறைவு..
ஆனால் இதை எல்லாம் வாசித்து விட்டு ஆபிஸ் பிகர்களிடம் பீலா விடலாம் போல....
ஆபிஸ் பிகர்கிட்ட கம்பராமாயணம், மஹாபாரதம் எல்லாமா பேசுவீக..!:confused: :confused: :confused: :confused: :confused:

பரஞ்சோதி
19-12-2005, 09:33 AM
மதி, அது தானே பிகர்களுக்கு தெரியாத மேட்டர், தெரிஞ்சதை பேசினால் சுவாரஸ்யம் இருக்காதே.

அதான் பென்ஸ் புராணங்கள் பேசி பொழுதை போக்குகிறார்.

பரஞ்சோதி
19-12-2005, 09:35 AM
ஒருவர் நல்லவரா, கெட்டவரா என்று கேட்டால் நல்லது செய்தவரை நல்லவர் என்றும், கெட்டது செய்தவரை கெட்டவர் என்றும் சொல்லலாம்.

சிறந்தவர் என்று வரும் போது அனைத்தும் பார்த்து சொல்ல வேண்டும், என்ன இராகவன் அண்ணா புரியுதா?

aren
19-12-2005, 09:36 AM
(யப்பா மூச்சு வாங்குது...சோடா கொண்டாங்கய்யா!)

படிச்ச எனக்கே மூச்சு வாங்குது.

aren
19-12-2005, 09:37 AM
எனக்கு இதில் கொஞ்சம் விவரம் குறைவு..
ஆனால் இதை எல்லாம் வாசித்து விட்டு ஆபிஸ் பிகர்களிடம் பீலா விடலாம் போல....

இங்கேதான் பீலா விடுகிறீர்கள் என்று நினைத்தேன். அங்கேயுமா?

பென்ஸ்
19-12-2005, 09:39 AM
எப்படிதான் கண்டுபிடிக்கிறாங்களோ????
இருந்து யோசிப்பாங்களோ????

gragavan
19-12-2005, 10:10 AM
ஒருவர் நல்லவரா, கெட்டவரா என்று கேட்டால் நல்லது செய்தவரை நல்லவர் என்றும், கெட்டது செய்தவரை கெட்டவர் என்றும் சொல்லலாம்.

சிறந்தவர் என்று வரும் போது அனைத்தும் பார்த்து சொல்ல வேண்டும், என்ன இராகவன் அண்ணா புரியுதா?மக்கான்...நான் அந்த மாதிரித்தாமுல சொல்லுதேன். நல்லதையும் கெட்டதையும் சீர்தூக்கி மொத்தத்துல சிறந்தவன்னு சொல்றது கருணனத்தாமுல. நாங் கேட்ட கேள்விய விட்டுட்டு நீ பேச்ச மாத்தாதவே!

aren
19-12-2005, 11:34 AM
நல்ல சண்டை ஆரம்பமாகிவிட்டது.

நான் சொன்ன சகுனிக்கு ஏதாவது சர்ச்சை கிளம்பும் என்று நினைத்தால் இப்படி புஸ்வானமாகிவிட்டதே.

ilanthirayan
19-12-2005, 07:25 PM
நம்ம ஓட்டு காந்தாரி தேவிக்குத் தாமா .... தன் புருஷனால் பார்க்க முடியாத எதையும் தானும் பார்க்கக் கூடாது என்று தன் கண்களையே கட்டிக் கொண்டு வாழ்ந்த பெண்ணரசி -- உலகத்தின்பம் திளைப்பதில் ஐம்புலன்களில் முதன்மையானது கண் - அதனையே துறந்தவள்.

கற்புக்கரசி ஆனபடியால் _ஒரு சீதை
கணவன் சொல் தட்டாத் தன்மையினால் - ஒரு நளாயினி
கணவன் உயிர் துறந்தவுடன் தன்னுயிர் நீத்ததால் -ஒரு சத்திய மங்கை சாவித்திரி

aren
20-12-2005, 12:41 AM
கற்புக்கரசி ஆனபடியால் _ஒரு சீதை
கணவன் சொல் தட்டாத் தன்மையினால் - ஒரு நளாயினி
கணவன் உயிர் துறந்தவுடன் தன்னுயிர் நீத்ததால் -ஒரு சத்திய மங்கை சாவித்திரி

கற்புக்கரசி - ஒத்துக்கொள்கிறேன்.
கணவன் சொல் எப்பொழுதும் கேட்கவேண்டுமென்பதில்லை. அதில் இருக்கும் நல்லதை மட்டுமே கேட்கவேண்டும். தீமையாக இருந்தால் மெதுவாக எடுத்துச்சொல்லி கணவரின் கருத்தை மாற்றுபவளே உண்மையான துணைவியார்.
கணவன் உயிர் துறந்தவுடன் தன்னுயிர் நீத்ததால், தன் கணவன் செய்யமுடியாமல் விட்டுச்சென்ற காரியங்களை தான் முன்னிற்று செய்ய் முடியாமல் போனது. இதனால் கணவன் நினைத்த காரியங்கள் முடியவிவ்லை. ஆகையால் இதுவும் தவறு என்பது என்னுடைய கருத்து.

அடிக்கவராதீங்கப்பா!!!!

Mano.G.
20-12-2005, 01:20 AM
கர்ணன் என்பதே எனது பதில், தர்மமும் நட்பை பாராட்டவும், தெரிந்த ஒருவன். இறுதி காலத்தில் கூட தனது தர்மபலத்தை கண்ணனுக்கு தர்மமாக கொடுத்து உயிர் நீர்த்தவன்.

மனோ.ஜி

mukilan
20-12-2005, 02:59 AM
கர்ணன் என்பதே எனது பதில், தர்மமும் நட்பை பாராட்டவும், தெரிந்த ஒருவன். இறுதி காலத்தில் கூட தனது தர்மபலத்தை கண்ணனுக்கு தர்மமாக கொடுத்து உயிர் நீர்த்தவன்.

மனோ.ஜி
அண்ணா! கர்ணணுக்கு வாக்களித்தீர்களா?

aren
20-12-2005, 03:29 AM
அண்ணா! கர்ணணுக்கு வாக்களித்தீர்களா?

வாக்குகளை விலைகொடுத்து வாங்கக்கூடாது.

mukilan
20-12-2005, 03:47 AM
வாக்குகளை விலைகொடுத்து வாங்கக்கூடாது.

அதெல்லாம் அரசியல் வாதிகள் செய்யுறதண்ணோவ். நான் அவர் கர்ணணுக்கு வாக்குனு சொன்னதால, அப்படிக் கேட்டேன்!

gragavan
20-12-2005, 04:11 AM
அதெல்லாம் அரசியல் வாதிகள் செய்யுறதண்ணோவ். நான் அவர் கர்ணணுக்கு வாக்குனு சொன்னதால, அப்படிக் கேட்டேன்!அதெல்லாம் அப்படித்தான் முகிலன். அவங்க அணிக்கு யாரும் வாக்களிக்கலையேன்னு பொறாமை.

கர்ணனுடைய கெட்ட பண்புகளையும் அருச்சுனனோட நல்ல பண்புகளையும் பட்டியல் போடுறேன்னு நேத்துல இருந்து கூவுறாங்க...இதுவரைக்கும் ஒன்னையும் காணோம்.

aren
20-12-2005, 04:12 AM
அதெல்லாம் அரசியல் வாதிகள் செய்யுறதண்ணோவ். நான் அவர் கர்ணணுக்கு வாக்குனு சொன்னதால, அப்படிக் கேட்டேன்!

இப்படி ஜகா வாங்ககூடாது.

சரி போனால் போகிறது, விட்டுவிட்டேன்.

gragavan
20-12-2005, 05:55 AM
இப்படி ஜகா வாங்ககூடாது.

சரி போனால் போகிறது, விட்டுவிட்டேன்.ஆகா ஆரென் கர்ணனாகி விட்டார். அப்படியே வாக்கையும் போட்டுட்டா நல்லாயிருக்கும்.

pradeepkt
20-12-2005, 06:21 AM
நானும் கர்ணனுக்கு என் வாக்குகளை அளிக்கலாம் என்று இருந்தேன்.
ஆனா செஞ்சோத்துக் கடன், பீட்ஸாக் கடன் அதெல்லாம் சொல்லிக்கிட்டு அநியாயத்துக்குத் துணை போனான் கர்ணன். மத்தபடிக்கு எடுக்குறது கோக்குறது எல்லாம் சொல்லி அவனுக்கு வாக்குக் கேக்கக் கூடாது. ஆசிரியரிடம் பொய் சொல்லி வித்தை கற்றான். அவரு கடைசியில ஒரு ஆப்பு வச்சாரு. பலநாள் திருடன் ஒரு நாள் மாட்டிக்கிட்டான்...

அவனிடம் தனிப்பட்ட முறையில் எத்தனையோ நல்ல குணங்கள் இருந்தாலும் நண்பன் தவறான வழியில் செல்லும்போது அதைத் தட்டிக் கேட்டு அவனைத் திருத்த வேண்டியவன், துணை போனான்.

அதுனால அவனுக்கு என் ஓட்டு இல்லை.
இதே மாதிரி ஒவ்வொருத்தராப் பாத்தா எல்லாரும் ஒரு கணக்காத்தேன் இருக்காக. என்ன செய்யலாம்? செல்லாத ஓட்டு போட்டுறவா?

ராகவா,
நீங்க ஏன் கர்ணனை ஆதரிக்கிறீங்கன்னு எனக்குத் தெரியாதா? "உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா, கர்ணா ... வஞ்சகன் ராகவனா?" :D :D :D

mukilan
20-12-2005, 06:32 AM
நானும் கர்ணனுக்கு என் வாக்குகளை அளிக்கலாம் என்று இருந்தேன்.
:D :D :D

வாக்கு அளிக்கிறேன்னு சொல்லிக்கிட்டு வாக்கை அழிக்கிறீரய்யா! இதுக்கெல்லாம் நாங்க பயந்த ஆளா! நண்பன் போட்ட சோறு! கர்ணன் நிதமும் தின்னான் பாரு! நட்பைக்கூட கற்பைப் போல எண்ணினான். (அதான்யா நண்பனை எதிர்த்தே பேசலை!) உசிரை நண்பன் கேட்டான் கொடுத்திட்டான்யா. பொய் சொல்லி வித்தை கற்க துரியோதணன் சொல்கையில் அவனுக்கு விருப்பமில்லாவிடினும் அவன் நண்பன் என்பதற்காகத்தானய்யா செஞ்சான். கர்ணன் அர்ச்சுனன் போல் இல்லாமல் ஏக பத்தினி விரதனா இருந்தானே? இப்படி எத்துணையோ நல்ல குணங்கள்.!

பரஞ்சோதி
20-12-2005, 06:33 AM
இராகவன் அண்ணா,

மொதல்ல நீங்க கர்ணனைப் பற்றி எழுதுங்க, நான் பின்னர் சொல்கிறேன்.

தம்பி பிரதீப், நம்ம அர்ஜீனனைப் பற்றி பேச வாங்க. கர்ணனை இல்லை இல்லை இராகவனை போட்டு வாங்கலாம்.

pradeepkt
20-12-2005, 06:42 AM
வாக்கு அளிக்கிறேன்னு சொல்லிக்கிட்டு வாக்கை அழிக்கிறீரய்யா! இதுக்கெல்லாம் நாங்க பயந்த ஆளா! நண்பன் போட்ட சோறு! கர்ணன் நிதமும் தின்னான் பாரு! நட்பைக்கூட கற்பைப் போல எண்ணினான். (அதான்யா நண்பனை எதிர்த்தே பேசலை!) உசிரை நண்பன் கேட்டான் கொடுத்திட்டான்யா. பொய் சொல்லி வித்தை கற்க துரியோதணன் சொல்கையில் அவனுக்கு விருப்பமில்லாவிடினும் அவன் நண்பன் என்பதற்காகத்தானய்யா செஞ்சான். கர்ணன் அர்ச்சுனன் போல் இல்லாமல் ஏக பத்தினி விரதனா இருந்தானே? இப்படி எத்துணையோ நல்ல குணங்கள்.!
தின்னான், உண்மை, யாரு இல்லைன்னது? விதவிதமாத் துரியோதனன் சோறு போட்டான் இந்தப் பய தின்னான். தின்னுட்டு எதிர்த்தே பேசாம உசிரைக் குடுத்தான்.
ஏய்யா இந்த மாதிரி ஒருத்தனுக்கு நம்மூர்ல நண்பன்னு பேர் இல்லை - அடியாளுன்னு பேரு! நண்பன்கிறவன் யாரு? சோறு தின்னுட்டு பதிலுக்கு உசுரைக் குடுக்குறது மட்டுமில்லை, அந்த நண்பன் தப்பான வழியில போனா அவனைத் தடுத்து நல்வழிக்கு இட்டுச் செல்லணும். அத்தோட நாந்தான் சொல்லிட்டனே, தனிப்பட்ட முறையில் அவனுக்கு எத்தனையோ நல்ல குணங்கள் இருக்கலாம், அதெல்லாம் இங்க அடிபட்டுப் போயிருதே... இந்தப் பய பண்ண கிருத்துவத்துக்குத் துணையா இருந்தது மட்டுமில்லாம, திரௌபதிய (சொந்தத் தம்பி(கள்) பொண்டாட்டின்னு அப்பத் தெரியலை - நல்ல வேளை :D) மத்த பயக கூடச் சேந்துக்கிட்டு அவமானப் படுத்தினானே, அது நாலு பொண்டாட்டி கட்டுறதை விடக் கேவலமான வேலை இல்லையா? :D

என்னமோ போங்க, நீங்களும் உங்க கர்ண மகாராசாவும் :D

gragavan
20-12-2005, 07:13 AM
நானும் கர்ணனுக்கு என் வாக்குகளை அளிக்கலாம் என்று இருந்தேன்.
ஆனா செஞ்சோத்துக் கடன், பீட்ஸாக் கடன் அதெல்லாம் சொல்லிக்கிட்டு அநியாயத்துக்குத் துணை போனான் கர்ணன். மத்தபடிக்கு எடுக்குறது கோக்குறது எல்லாம் சொல்லி அவனுக்கு வாக்குக் கேக்கக் கூடாது. ஆசிரியரிடம் பொய் சொல்லி வித்தை கற்றான். அவரு கடைசியில ஒரு ஆப்பு வச்சாரு. பலநாள் திருடன் ஒரு நாள் மாட்டிக்கிட்டான்...

அவனிடம் தனிப்பட்ட முறையில் எத்தனையோ நல்ல குணங்கள் இருந்தாலும் நண்பன் தவறான வழியில் செல்லும்போது அதைத் தட்டிக் கேட்டு அவனைத் திருத்த வேண்டியவன், துணை போனான்.

அதுனால அவனுக்கு என் ஓட்டு இல்லை.
இதே மாதிரி ஒவ்வொருத்தராப் பாத்தா எல்லாரும் ஒரு கணக்காத்தேன் இருக்காக. என்ன செய்யலாம்? செல்லாத ஓட்டு போட்டுறவா?

ராகவா,
நீங்க ஏன் கர்ணனை ஆதரிக்கிறீங்கன்னு எனக்குத் தெரியாதா? "உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா, கர்ணா ... வஞ்சகன் ராகவனா?" :D :D :Dஇல்லை பிரதீப். தவறான புரிதல். கர்ணன் துரியோதனனுக்கு எவ்வளவு அறிவுரைகள் சொன்னான் என்பது மகாபாரதத்தைப் படித்தவர்களுக்குத் தெரியும். "சகுனியோடு சேராதே. அவர் உனக்கு நல்லது செய்ய மாட்டார்" என்று பலமுறை எடுத்துக் கூறுகின்றான். ஆனால் சகுனி அந்த இடத்திலும் ஒரு செக் வைக்கிறான். "நீ துரியோதனனுக்கு நண்பனா? உனக்கு இவ்வளவு கொடுத்தான். நீ அவனுக்கு நல்லது நினைக்க மாட்டாயா?" என்று கூறி வாயை அடைத்து விடுகின்றான். சொன்ன பேச்சு எடுபடாமல் போன பிறகுதான் கர்ணன் போரிட வேண்டிய நிலைக்கு ஆளாகின்றான்.

பீஷ்மர் முதலில் கர்ணனைப் படையிலேயே சேர்க்கவில்லை. ஏன் தெரியுமா? தனக்குப் பிறகு உண்மையிலேயே துரியோதனனுக்கு நல்லது நினைக்கின்ற ஒரே ஜீவன் என்பதால் அவனைச் சீண்டி விட்டு தானிருக்கும் வரைக்கும் போர்க்களம் நுழைய விடாமல் செய்கின்றார். அதை அம்புப் படுக்கையில் இருந்து கொண்டு அவனிடமும் சொல்கின்றார்.

கர்ணனும் சரி. கும்பகருணனும் சரி. சிங்கமுகாசுரனும் சரி. மூவருமே தவறை முதலில் எடுத்துச் சொல்கின்றார்கள். பிறகுதான் வேறுவழியில்லாமல் போர்க்களம் புகுகின்றார்கள்.

சரி. முதலில்தான் அண்ணன் தம்பிகள் விவரம் தெரியாது. அதற்குப் பிறகு குந்தி வந்து சொன்ன பின்பு கூட பதவி மீது ஆசைப்படாமல் (உண்மை தெரிந்திருந்தால் தருமனுக்குப் பதவி போகும். கர்ணனுக்குத்தான் மொத்த ராஜ்யமும். இதைத் தெரிந்த இன்னொருவன் சகதேவன். போரை நிறுத்த வழியென்று கர்ணனுக்கு முடி சூட்டுவதையே கண்ணனிடம் சொல்கின்றான் சகதேவன்.) உப்பிட்ட கடனைத் தீர்த்தானே.

குலம் குலம் என்று இழிவு மொழி பேசி கர்ணனைத் தாழ்த்திய அருச்சுனனா உயர்ந்தவன்? இல்லை.....போகின்ற போக்கிலெல்லாம் பெண்டாடிக் கொண்டாடிய விஜயனா உயர்ந்தவன்? அல்லி தூங்கும் பொழுது அவள் சம்மதமின்றியே தாலி கட்டிய கயவன் பார்த்தனா பெரியவன்?

எல்லாரும் ஒவ்வொரு சமயத்தில் தவறு செய்திருக்கின்றார்கள். ஆனால் ஒட்டு மொத்தமாக எடை போட்டுப் பார்க்கும் பொழுது கர்ணனே முன்னிற்கின்றான்.

பரசுராமரிடம் அவன் பொய் சொல்லவில்லை. காரணம். அவன் ஷத்ரியன் என்று அவனுக்கே தெரியாது. தேரோட்டி மகன் என்று சொல்லித்தான் சேர்கின்றான். ஆனால் பரசுராமருக்குத் தெரிந்து போகின்றது. இது எப்படி கர்ணனின் குற்றமாகும்?

kavinila
20-12-2005, 07:15 AM
என்னதான் சொன்னாலும் என் வாக்கு கர்ணனுக்கே.ஏனெனில் கர்ணந்தான் நட்புக்காக தன்னையே கொடுத்தவன் வாருங்கள் ராகவன்,முகிலன் பரம்சை ஒரு கை பார்த்து விடலாம்

gragavan
20-12-2005, 07:20 AM
தின்னான், உண்மை, யாரு இல்லைன்னது? விதவிதமாத் துரியோதனன் சோறு போட்டான் இந்தப் பய தின்னான். தின்னுட்டு எதிர்த்தே பேசாம உசிரைக் குடுத்தான்.
ஏய்யா இந்த மாதிரி ஒருத்தனுக்கு நம்மூர்ல நண்பன்னு பேர் இல்லை - அடியாளுன்னு பேரு! நண்பன்கிறவன் யாரு? சோறு தின்னுட்டு பதிலுக்கு உசுரைக் குடுக்குறது மட்டுமில்லை, அந்த நண்பன் தப்பான வழியில போனா அவனைத் தடுத்து நல்வழிக்கு இட்டுச் செல்லணும். அத்தோட நாந்தான் சொல்லிட்டனே, தனிப்பட்ட முறையில் அவனுக்கு எத்தனையோ நல்ல குணங்கள் இருக்கலாம், அதெல்லாம் இங்க அடிபட்டுப் போயிருதே...இல்லை இல்லை. அவன் துரியோதனனிடம் எல்லாவற்றையும் எடுத்துச் சொல்கின்றான். அங்கும் சகுனித்தனமே வெல்கின்றது. அரக்கு மாளிகைச் சமயத்திலிருந்தே கர்ணன் சகுனியைப் பற்றிச் சொல்கின்றான். ஆனால் பேச்சு துரியோதனனுக்கு ஏறவில்லை. ஒன்றும் சொல்லவேயில்லை என்பது பொய்.

அவன் எவ்வளவு நல்லவனாக இருந்திருந்தால், உண்மையானவனாக இருந்தால், பானுமதியின் இடையணி மேகலை உதிர்ந்த பொழுது எந்தச் சஞ்சலமும் இல்லாமல் நடந்து கொண்டிருப்பான் துரியன். அத்தனை பேர் கூடிய சபையில் சாதி என்ன என்று கேட்டுக் குரலெழுப்பிய அருச்சுனனையா கர்ணனுக்கு இணை வைக்கின்றீர்கள்? அந்தோ பரிதாபம்.

கர்ணன் தெரிந்தே செய்த தவறுகள் இரண்டுதான்.
1. பாஞ்சாலியை அவைக்கு இழுத்து வந்த பொழுது அவளை துரியன் மடியில் உட்காரச் சொன்னான். கண்டிப்பாக இது குற்றந்தான்.
2. அபிமன்யுவைக் கொன்றது. இங்கும் அவன் முதலில் தனியனைக் கொல்ல வேண்டாம் என்றே சொல்கின்றான். ஆனால் அங்கும் சகுனி வந்து கதையைக் கெடுத்தான். அருச்சுனனும் கர்ணனின் மகனைப் பின்னால் இருந்து அம்பெய்து கொன்றான் என்பதும் உண்மையே.

எல்லாரும் குற்றம் செய்திருக்கின்றார்கள். சந்தர்ப்பச் சூழ்நிலைகளை வைத்துப் பார்க்கையில் கருணனே சிறந்தவன்.

pradeepkt
20-12-2005, 07:26 AM
ஒவ்வொண்ணுக்கா இன்னும் பதில் சொல்றேன்.
நான் விஜயன் மட்டுமே உயர்ந்தவன் என்று சொல்லவில்லையே. கர்ணனும் ஒன்றும் விதிவிலக்கல்ல என்கிறேன். துரியோதனனுக்கு அத்தனை நல்லது சொல்கிறவன் சபையில் திரௌபதிக்கு அவமானம் நடக்கும்போது சும்மாவேனும் இருந்திருக்கலாமே... இல்லை.
அப்படிப் பார்த்தால் தனக்கென்று எண்ணாமல் தன் சகோதரி மகன் வாழ வேண்டும் என்று நினைத்த சகுனியும் நல்லவனே.

அர்ச்சுனன் செய்த தவறுகளும் ஒன்றல்ல இரண்டல்ல. ஏகலைவன் போன்றோர் அர்ச்சுனனை விட வில்வித்தையில் சிறந்தவர்களாகவே இருந்தனர். ஏன், கர்ணனே அர்ச்சுனன் மகன் அபிமன்யூவிடம் தோற்றதும் உண்டு. எனவே வீரத்தை மட்டும் அளவுகோலாய்க் கொள்ளக் கூடாது.

திரௌபதி அவமானம் மட்டுமல்லாது போர் நடத்தும் போதும் நிகழ்ந்த அநியாயங்கள் இரு பக்கமுமே சொல்லி மாளாது. துவந்த யுத்தங்கள் (அதாவது தேரோட்டி தேரோட்டியிடமும், யானையில் செல்பவர் யானையில் செல்பவருடனும்... மற்றும் இதே போல் போரிடுவது) பீஷ்மர் வீழ்ந்தவுடனே மாறியது. இதற்கு இரு தரப்பிலும் இருந்த தளபதிகளையே குறை சொல்ல வேண்டும். இந்தப் பக்கம் திட்டதுய்மனும் அந்தப் பக்கம் அவனது அதிவிரோதி துரோணரும் அப்படித்தான் வகுத்தார்கள்.

பத்மவியூகத்தில் மாட்டிக்கொண்ட அபிமன்யூ படுகொலை செய்யப்பட்டபோது சுற்றி நின்று கும்மியடித்தவர்களில் ஒருவன் கர்ணன். அந்த ஒரு பாவம் போதும். படுகளம் எனினும் தர்மங்கள் வாழ்ந்த காலம் அது. கலியுகம் துவங்காத காலம்! பின்னர் அந்த மகாவீரன் அதை நினைத்து வெட்கியதும் உண்டு. அவனைக் கடைசியில் காத்தது என்னவோ அவனது தர்மமே!

என்னைக் கேட்டால் இந்த ஐந்து பேரைத் தவிர நாம் வேறு சிலரையும் ஆராய வேண்டும் என்பேன்.

pradeepkt
20-12-2005, 07:32 AM
இல்லை இல்லை. அவன் துரியோதனனிடம் எல்லாவற்றையும் எடுத்துச் சொல்கின்றான். அங்கும் சகுனித்தனமே வெல்கின்றது. அரக்கு மாளிகைச் சமயத்திலிருந்தே கர்ணன் சகுனியைப் பற்றிச் சொல்கின்றான். ஆனால் பேச்சு துரியோதனனுக்கு ஏறவில்லை. ஒன்றும் சொல்லவேயில்லை என்பது பொய்.
இப்படி நான் சொல்லவேயில்லை. அவன் சொன்னான், சரி, ஆனால் அவன் வாதங்கள் எல்லாமே வலிமையற்றதாக இருந்தன. இப்போது நான் துரியோதனன் கர்ணன் நட்பின் மேலேயே சந்தேகப் பட நேர்கிறது. நான் சொல்வதை எல்லாம் சொன்னேன் ஆனால் அவன் கேட்கவில்லை என்பது நட்பா?

அவன் எவ்வளவு நல்லவனாக இருந்திருந்தால், உண்மையானவனாக இருந்தால், பானுமதியின் இடையணி மேகலை உதிர்ந்த பொழுது எந்தச் சஞ்சலமும் இல்லாமல் நடந்து கொண்டிருப்பான் துரியன். அத்தனை பேர் கூடிய சபையில் சாதி என்ன என்று கேட்டுக் குரலெழுப்பிய அருச்சுனனையா கர்ணனுக்கு இணை வைக்கின்றீர்கள்? அந்தோ பரிதாபம்.

இதையும் நான் சொல்லவேயில்லை. என்னுடைய அடுத்த பதிவைப் பாருங்கள். சரியா நான் புடிச்ச நேரம் உங்களுக்கும் எனக்கும் டெலிபதி வேலை செஞ்சிருக்குது.

கர்ணன் தெரிந்தே செய்த தவறுகள் இரண்டுதான்.
1. பாஞ்சாலியை அவைக்கு இழுத்து வந்த பொழுது அவளை துரியன் மடியில் உட்காரச் சொன்னான். கண்டிப்பாக இது குற்றந்தான்.
2. அபிமன்யுவைக் கொன்றது. இங்கும் அவன் முதலில் தனியனைக் கொல்ல வேண்டாம் என்றே சொல்கின்றான். ஆனால் அங்கும் சகுனி வந்து கதையைக் கெடுத்தான். அருச்சுனனும் கர்ணனின் மகனைப் பின்னால் இருந்து அம்பெய்து கொன்றான் என்பதும் உண்மையே.

எல்லாரும் குற்றம் செய்திருக்கின்றார்கள். சந்தர்ப்பச் சூழ்நிலைகளை வைத்துப் பார்க்கையில் கருணனே சிறந்தவன்.
ஐயா, இதை நான் மறுக்கிறேன்.
அபிமன்யூவைக் கொல்ல வேண்டாமென்று சொன்னவர் ஒரே ஒருவர்தான். அவர்தான் பத்ம வியூகத்தை வகுத்த ஆச்சாரியார் துரோணர். அவரே நான் அர்ச்சுனனுக்குச் சொல்லிக் கொடுத்தேன். ஆனால் அபிமன்யூவிற்கு அவன் வியூகத்தை விடுத்து வெளிவரச் சொல்லிக் கொடுக்கவில்லை என்கிறார். ஆனால் முதல் வரிசையிலேயே நின்று அபிமன்யூ வெளியே வர இயலாமல் ஜயத்ரதனுடன் நின்றவன் கர்ணன். அதிலும் ஒரு முறை அபிமன்யூவின் தாக்குதலைத் தாங்க இயலாது கர்ணன் மயங்கிச் சரிகிறான். அபிமன்யூ தன் தந்தை கொல்ல வேண்டியவன் என்று அவனை விட்டுச் செல்கிறான். இன்னொரு முறை நான் இன்றிரவு மகாபாரதத்தைப் படிக்கிறேன்.

gragavan
20-12-2005, 07:35 AM
இல்லை பிரதீப். தனது சகோதரி மகன் வாழ வேண்டுமென்று சகுனி அப்படிச் செய்யவில்லை. அதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அத்தினாபுரம் பெரிய அரசு. காந்தரமோ (இன்றைய ஆஃப்கானிஸ்தான்) சிறிய அரசு. ஒரு குருடனுக்கு வலுக்கட்டாயமாக தனது தங்கையைக் கட்டி வைத்த அத்தினாபுரத்தின் பெரியண்ணன் மனப்போக்கை ஒழிக்கவே சகுனியும் அத்தினாபுரம் வந்தான். துரியோதனன் வாழ வேண்டுமென்று அவன் ஒரு முறையேனும் நினைத்துப் பார்க்கவில்லை. பூமன்யு வழி வந்த குலம் வீழ வேண்டும் என்பது மட்டுமே அவன் குறிக்கோள். வேறொன்றுமில்லை.

அபிமன்யுவைக் கொன்றதையும் திரவுபதியை அவமானப் படுத்தியதையும் ஒத்துக் கொள்கின்றோமே. ஒட்டு மொத்தமாக செய்தவகளைக் கூட்டிக் கழித்துப் பார்க்கையில் கர்ணன் தட்டு கூட இருக்கிறது என்பதே எனது கருத்து.

இந்த ஐவரோடு வேறு சிலரையும் நீங்கள் விரும்பினால் சேர்க்கலாம். அவர்களைப் பற்றி நீங்களே சொல்லலாமே.

pradeepkt
20-12-2005, 07:38 AM
காந்தாரியை வலுக்கட்டாயமாகக் கட்டி வைத்தார்கள் என்பது புதுச்செய்தி. அதற்காகச் சகுனி பழி வாங்கினான் என்பதும் எனக்குப் புதுச் செய்தி.
நான் படித்துவிட்டுச் சொல்கிறேன்.
இன்னும் சிலரைப் பற்றி நினைத்திருக்கிறேன், சீக்கிரம் இன்னொரு பதிவில் இடுகிறேன்.

gragavan
20-12-2005, 07:41 AM
இப்படி நான் சொல்லவேயில்லை. அவன் சொன்னான், சரி, ஆனால் அவன் வாதங்கள் எல்லாமே வலிமையற்றதாக இருந்தன. இப்போது நான் துரியோதனன் கர்ணன் நட்பின் மேலேயே சந்தேகப் பட நேர்கிறது. நான் சொல்வதை எல்லாம் சொன்னேன் ஆனால் அவன் கேட்கவில்லை என்பது நட்பா?

துரியோதன் தன்னுடைய பேச்சைக் கேட்கவில்லை என்று கர்ணன் வருத்தப் படுகின்றான். அவனால் முடிந்த மட்டும் செய்கின்றான். கைக்கு மீறி காரியம் போகையில் யார்தான் என்ன செய்ய முடியும். அதனால்தான் தன்னுடைய உயிரையே தருகின்றான். துரியோதனன் கூட பீஷ்மர் வீழ்ந்ததும் கலங்கவில்லை. துரோணர் வீழ்ந்த போதும் கலங்கவில்லை. ஆனால் கர்ணன் வீழ்ந்ததும் கலங்கிப் போய் விடுகின்றான் ஐயா. உண்மையான நட்பு இல்லாமல் இருந்திருந்தால் அப்படி ஒரு உணர்ச்சி துரியனுக்கு வந்திருக்குமா? கர்ணனுடைய நட்பில் குறையில்லை. என்னைக் கேட்டால் கர்ணன் தன்னுடைய அண்ணன் என்று தெரிந்த பின்னும் போரை நடத்திய தருமனைப் போன்ற மகாபாவி இல்லையென்றே சொல்வேன்.

இதையும் நான் சொல்லவேயில்லை. என்னுடைய அடுத்த பதிவைப் பாருங்கள். சரியா நான் புடிச்ச நேரம் உங்களுக்கும் எனக்கும் டெலிபதி வேலை செஞ்சிருக்குது.
அது அப்படித்தானய்யா!

ஐயா, இதை நான் மறுக்கிறேன்.
அபிமன்யூவைக் கொல்ல வேண்டாமென்று சொன்னவர் ஒரே ஒருவர்தான். அவர்தான் பத்ம வியூகத்தை வகுத்த ஆச்சாரியார் துரோணர். அவரே நான் அர்ச்சுனனுக்குச் சொல்லிக் கொடுத்தேன். ஆனால் அபிமன்யூவிற்கு அவன் வியூகத்தை விடுத்து வெளிவரச் சொல்லிக் கொடுக்கவில்லை என்கிறார். ஆனால் முதல் வரிசையிலேயே நின்று அபிமன்யூ வெளியே வர இயலாமல் ஜயத்ரதனுடன் நின்றவன் கர்ணன். அதிலும் ஒரு முறை அபிமன்யூவின் தாக்குதலைத் தாங்க இயலாது கர்ணன் மயங்கிச் சரிகிறான். அபிமன்யூ தன் தந்தை கொல்ல வேண்டியவன் என்று அவனை விட்டுச் செல்கிறான். இன்னொரு முறை நான் இன்றிரவு மகாபாரதத்தைப் படிக்கிறேன். நானும் படிக்க வேண்டும். படித்து வருடங்கள் பல ஆகின்றன. இப்பொழுது என்னிடம் மகாபாரதமும் இல்லை. அடுத்த முறை கடைக்குச் செல்கையில் வாங்க வேண்டும்.

பென்ஸ்
20-12-2005, 07:44 AM
கர்ணன் தெரிந்தே செய்த தவறுகள் இரண்டுதான்.
1. பாஞ்சாலியை அவைக்கு இழுத்து வந்த பொழுது அவளை துரியன் மடியில் உட்காரச் சொன்னான். கண்டிப்பாக இது குற்றந்தான்.
.
அது தப்பே இல்லையப்பா...
"குருடனின் மகனும் குருடனா.. என்று தன் வயதில் மூத்த ஒருவரை கின்டலடித்த ஒரு அசிங்கமானவளை... சுதாட்டதில் தனக்கு அடிமையானவளை சொன்னதில் என்ன தப்பிருக்கிறது...

pradeepkt
20-12-2005, 07:45 AM
அதே போல் அர்ச்சுனன் மேல் இருக்கும் குற்றச்சாட்டுகள் இவை:
1. பல பெண்டாட்டி கட்டியது.
2. சாதியைச் சொல்லியும் சொல்லாமலும் பலமுறை கர்ணனை அவமதித்தது
3. தனது வித்தையின் மீது கொண்ட கர்வம்

கர்ணன் மேலுள்ளவை
1. நண்பனுக்கு உண்மையான நண்பனாக இல்லாதது - எத்தனை சமாதானம் சொன்னாலும் துரியோதனன் கேட்கவில்லை என்றால் அவன் கேட்கும்படி இவன் சொல்லவில்லை அல்லது அவர்கள் நட்பு இல்லை
2. ஒரு குலப்பெண்ணை நடு சபையில் அவமானப் படுத்தியது.
3. ஒன்றுமறியா ஒரு குழந்தையைக் காட்டுமிராண்டித் தனமாகக் கொன்ற கூட்டத்தில் இருந்தது. இதில் நான் பீமன் மகன் கடோத்கஜனைக் கொன்றதைச் சேர்க்கவில்லை. அர்ச்சுனனைக் கொல்ல வைத்திருந்த சக்தி ஆயுதத்தை வேறு வழியின்றி இரவில் போர் புரிந்த கடோத்கஜன் மேல் பிரயோகித்தான் கர்ணன். கடோத்கஜன் அப்போது புரிந்த போர் முறை அப்படி.

இதிலயும் பாருங்க, நீங்க அர்ச்சுனன் கையேந்தி வெற்றி பெற்றான் அப்படிங்கறீங்க, கர்ணன் தன் அந்தஸ்து நாடு வீடு அத்தனையையுமே கையேந்திப் பெறவில்லையா?

மற்றவர்களைப் பத்திச் சொல்றேன்.

pradeepkt
20-12-2005, 07:48 AM
அது தப்பே இல்லையப்பா...
"குருடனின் மகனும் குருடனா.. என்று தன் வயதில் மூத்த ஒருவரை கின்டலடித்த ஒரு அசிங்கமானவளை... சுதாட்டதில் தனக்கு அடிமையானவளை சொன்னதில் என்ன தப்பிருக்கிறது...
அவள் ஒண்ணும் கர்ணனைப் பாத்துச் சொல்லலையே... அதிலும் பீஷ்மரிலிருந்து அர்ச்சுனன் வரைக்கும் எத்தனையோ பேரு அவனைச் சாதி சொல்லிக் கேவலப் படுத்தினர். பாஞ்சாலி அப்படி அவனைச் சொன்னதாகச் செய்தியே இல்லை. அப்படி இருக்கையில் இவனுக்கு என்ன வந்தது, கேவலமாகப் பேசும்படி. எனவே இது மாபெரும் தவறுதான்.

அட அது இருக்கட்டும்யா.... அந்தா இந்தான்னு நம்ம பக்கங்களை எல்லாம் இங்கயே திருப்பி விட்டுட்டீரே... உம்ம பாணி நாரதரைத்தான் நான் சிறந்தவர்னு சொல்லலாமின்னு இருக்கேன் :D

gragavan
20-12-2005, 07:49 AM
அது தப்பே இல்லையப்பா...
"குருடனின் மகனும் குருடனா.. என்று தன் வயதில் மூத்த ஒருவரை கின்டலடித்த ஒரு அசிங்கமானவளை... சுதாட்டதில் தனக்கு அடிமையானவளை சொன்னதில் என்ன தப்பிருக்கிறது...அடிமையோ இல்லையோ...பெண்ணைப் பெண்ணாக நடத்தியே தீர வேண்டும். அந்த இடத்தில் கர்ணன் ஒரேயொரு இடத்தில்தான் சறுக்கினான். அது பாஞ்சாலியை அவமானப் படுத்தியதில்தான்.

அதே நேரத்தில் பாஞ்சாலியின் வாய்த்துடுக்கும் தவறே. ஆயிரம் இருப்பினும் ஒரு அரசனை அப்படிப் பேசுவது நாகரீகமன்று. ஏற்கனவே தந்தை குருடன் என்பதால்தான் வஞ்சிக்கப்பட்டார் என்று குமைந்து கொண்டிருக்கும் ஒருவனிடம் போய்.....

gragavan
20-12-2005, 08:04 AM
கர்ணன் மேலுள்ளவை
1. நண்பனுக்கு உண்மையான நண்பனாக இல்லாதது - எத்தனை சமாதானம் சொன்னாலும் துரியோதனன் கேட்கவில்லை என்றால் அவன் கேட்கும்படி இவன் சொல்லவில்லை அல்லது அவர்கள் நட்பு இல்லை

இல்லை பிரதீப். இதை ஒத்துக் கொள்ள முடியாது. கர்ணனுடைய நட்பு உண்மையானதாக இல்லாமலிருந்தால் அவன் என்றைக்கோ குந்தி வந்து கூப்பிட்டதும் பதவியை ஏற்றுக் கொண்டு போயிருக்கலாம். குந்தி முதலில் தாய்ப்பாசத்தைக் காட்டுகின்றாள். கர்ணன் விலை போகவில்லை. பதவியைக் காட்டுகின்றாள். ம்ஹூம். தம்பியர். சான்சே இல்லை. கர்ணனுடைய நடத்தையில் கூட குற்றம் இருக்கலாம். நட்பில் இருக்க முடியாது. வேண்டுமானால் சொல்கின்ற முறையில் சொல்லத் தெரியாத குற்றம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

இதிலயும் பாருங்க, நீங்க அர்ச்சுனன் கையேந்தி வெற்றி பெற்றான் அப்படிங்கறீங்க, கர்ணன் தன் அந்தஸ்து நாடு வீடு அத்தனையையுமே கையேந்திப் பெறவில்லையா?

மற்றவர்களைப் பத்திச் சொல்றேன்.
கையேந்தியா பெற்றான்? அத்தனை பேர் கூடிய சபையில் அவமானம் அழுந்த விழுந்தவன் கையில் வந்து விழுந்தது அத்தனையும். கேட்டுப் போகவில்லை. தேடி வந்தது. அந்த ஒரு நன்றிக்காகத்தானே ஐயா! அவன் தாயைத் தம்பியைப் பதவியை எல்லாம் உதறி விட்டு உயிரைக் கொடுத்தான். காலத்தினால் செய்த உதவி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது.

gragavan
20-12-2005, 08:09 AM
அவள் ஒண்ணும் கர்ணனைப் பாத்துச் சொல்லலையே... அதிலும் பீஷ்மரிலிருந்து அர்ச்சுனன் வரைக்கும் எத்தனையோ பேரு அவனைச் சாதி சொல்லிக் கேவலப் படுத்தினர். பாஞ்சாலி அப்படி அவனைச் சொன்னதாகச் செய்தியே இல்லை. அப்படி இருக்கையில் இவனுக்கு என்ன வந்தது, கேவலமாகப் பேசும்படி. எனவே இது மாபெரும் தவறுதான்.

இல்லை. பாஞ்சாலியும் கர்ணனை ஒருமுறை கேவலப்படுத்தியிருக்கின்றாள். அம்பெய்தால்தான் திரவுபதை என்று போட்டி. துரியோதனாதிகளோ வேறு அரசர்களோ வில்லை எடுக்க முடியவில்லை. கர்ணன் சுளுவாக வில்லை எடுத்து நாணையும் ஏற்றி விடுகிறான். அம்பு விட வேண்டியது மட்டுமே மிச்சம். அப்பொழுது சொல்கிறாள் திரவுபதை. "தேரோட்டியின் மாலையை ஏற்க முடியாது" என்று. எடுத்த வில்லையும் தொடுத்த அம்பையும் கீழே வைத்து விட்டு அவமானத்தில் குறுகி அவையை விட்டே வெளியே போய் விடுகின்றான் கர்ணன்.

pradeepkt
20-12-2005, 08:24 AM
ஹ்ம்ம்... ஆமா இதை நான் மறந்துட்டேன்...
ஆனால் சொன்னது திரௌபதின்னு எனக்குத் தோணலை. அவள் அங்கே மணமகள். இப்படிப் பேசியதாக நினனவில்லை. அங்கயும் பீஷ்மர்தான் என்னமோ சொன்னாரு. இதையும் நான் படிச்சிட்டு சொல்றேன்.

பரஞ்சோதி
20-12-2005, 11:34 AM
இராகவன் அண்ணா,

நீங்க என்னத்தான் சொல்லுங்க, கர்ணன் ஒரு மூடன், ஆத்திரக்காரன்.

கொடை வள்ளல் என்பதை வைத்து மட்டுமே அவன் சிறந்தவன் என்று சொல்வதும், பெற்ற தாய் அழைத்தும் போக வில்லை, நட்புக்காக உயிரையே கொடுத்தான் என்பதை வைத்து மட்டுமே அவன் சிறந்தவன் என்று எப்படி கூற முடியும்.

he is not a complete man. எல்லாவற்றிலும் சிறந்தது விளங்குபவனே சிறந்தவன் ஆவான்.

பரஞ்சோதி
20-12-2005, 11:35 AM
இராகவன் அண்ணா, நீங்க சும்மா சிம்பதி உண்டாக்கி கர்ணனை நல்லவனாக்குறீங்க.

கர்ணன் படத்தில் கர்ணனாக நம்பியார் நடித்திருந்தால் கர்ணனை நீங்க தேர்வு செய்திருக்க மாட்டீங்க.

அப்புறம் திரௌபதை பிறந்ததே அர்ஜீனனை மணக்க, அங்கே கர்ணனுக்கு என்ன வேலை?

pradeepkt
20-12-2005, 11:38 AM
அண்ணா,
நீங்க சரியான பாயிண்டுக்கு இப்பத்தேன் வந்திருக்கீங்க :D :D :D

பென்ஸ்
20-12-2005, 11:50 AM
:D நண்பர்களே... நாம் ஒருவரை ஒருவர் (கர்ணனையும், அர்சுனனையும்..) குறை சொல்லுவதை விட நாம் ஓட்டு அளித்தவரின் நிறைகளை சொல்லலாமே... :D

இல்லனா நம்ம தமிழ்நாடு அரசியல் மாதிரி இந்த பகுதி ஆயிடும்....:rolleyes: :rolleyes: :D :D :D

pradeepkt
20-12-2005, 11:51 AM
நிறை குறைகள் நிறைந்ததே வாழ்க்கை...
:D :D :D

பென்ஸ்
20-12-2005, 12:25 PM
நிறை குறைகள் நிறைந்ததே வாழ்க்கை...
:D :D :D

அப்படியா... சரி....
துரியோதனன் (பெஞ்ஜமின்): ஆஆ... அடுத்தவன் நிழலில் குளிர் காயும் அர்ச்சுனா (பரம்ஸ், பிரதிப்)... நான் என்ன சொல்ல வேன்டி இருக்கிறது பார் நல்ல கெட்டது அறிந்த மக்கள் சொல்லுகிறர்கள் நல்லவன் யார் என்று.. ஓட்டை பார்... என் நான்பன் கர்ணனுக்கு 6 உனக்கு 1... ஏன் உன்னுடைய ஓட்டு மட்டும் தான் பதிவானதா...

சகுனி (ஆரென்): இல்லை யப்பா, இவன் அவன் ஓட்டியும் அவன் அண்ணனுக்கு போட்டு விட்டு , கண்ணனின் கள்ள ஓட்டில் வாழ்கிறான்...

பீஷ்மர் (இளசு): கர்ணா... மூத்தவனே.. உன் தம்பிகள் பாவம், அவர்களுக்காக உனக்கு கிடைக்கும் வெற்றியை தானமா....

துரியோதனன்: என்ன பீஷ்மரே... இவ்வளவு நாள் இதே மாதிரி ஆப்பு அடிச்சது போதாதா....

துரியோதனன்: சகுனி... இந்த அர்ச்சுனன் தைரியம் இருத்தால் யாருடிய உதவியும் இல்லாமல் ஒத்திக்கு என் நண்பன் கர்ணனுடம் மோதி இருக்கலாமே... பயம்... விஜயன் என்றல் கர்ணனை வேன்றிருந்தால்... மற்றவர்களின் உதவியுடன் சதித்தவன்... விஜயனா?????

துரியோதனன்: என்னை போர் விதி முறையை மீறி தொடையில் அடித்து கொன்ற ஒரு மூதேவியின் சகோதரன் தானே நீ.....

துரியோதனன்: பெரியவரை மதிக்க தெரியாத ஒரு கூறு கெட்டவளை என் நண்பன் மனந்திருக்க வேண்டிய அவசியம் அவனுக்கு இல்லை அதிஷ்டசாலி இவன் ... மூதேவி விஜயன்.. அதனாள் தன் அவளை மனக்க வேண்டிய துர்பாக்கியம்...
என் நண்பனை அடியாள் என்கிறாய.. என்னில் ஒரு பாகம் அல்லவா அவன் ... என்னை கூட நான் சந்தேகித்திருப்பேன்.. அவனை ... நட்பு என்பதன் அர்த்தம் புரியுமா உனக்கு... உனக்கு ஒரு நண்பன் இருக்கிறன சொல்... உன்னை ஒரு நாய் கூட விரும்பாத போது என்னை உன்னை விட சிறந்தவன் மதித்தானே அப்படியானல்.. நானே உன்னைவிட சிறந்தவன் அல்லவா.....

சகுனி: நான் செஇதால் தப்பாம்.. இதயே கண்ணன் செய்தால் புதிய உத்தியாம்... என்னாங்கட சொல்லுறது....

துரியோதனன்: மானவர்களுக்கு இடையில் பாரபச்சம் பார்க்கும் ஒரு குருவின் இகள்ச்சியினால் என்னை சிறியவனாக்கி , நீ பெரியவன்னாய்...
கேவலமாக இல்லை உனக்கெ... உன்னையே நீ வீரன் என்று சொல்லி கொள்ள... போ... பிழைத்து போ....

pradeepkt
20-12-2005, 12:41 PM
என்னா அரசியலு...
சொல்றதையெல்லாம் சொல்லிட்டுத் தமிழ்நாட்டு அரசியலை இங்க நீங்களே கொண்டு வந்திட்டீகளேப்பூ :D

mukilan
20-12-2005, 02:40 PM
என்னதான் சொன்னாலும் என் வாக்கு கர்ணனுக்கே.ஏனெனில் கர்ணந்தான் நட்புக்காக தன்னையே கொடுத்தவன் வாருங்கள் ராகவன்,முகிலன் பரம்சை ஒரு கை பார்த்து விடலாம்
நன்றி கவிநிலா! அப்படியே உங்கள் வாக்குக்ளை கர்ணன் சின்னத்தில் இடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.:D :D அய்யோ பாவம் பிரதீப்பு! உங்களுக்கு அண்ணாச்சி ராகவன் வெச்சாரே ஒரு ஆப்பு!:eek: :eek: என்னய்யா இந்த பதில் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?

தலை தப்பிய
முகிலன்.

pradeepkt
20-12-2005, 03:01 PM
நல்லாப் பாருங்க ஆப்பு எங்க இருக்குன்னு உங்களுக்கே தெரியும்...
போற போக்குல ஆண்டிப்பட்டி இடைத்தேர்தல் மாதிரி ஆக்கிட்டீங்களே ராசா :D

பரஞ்சோதி
20-12-2005, 06:02 PM
இல்லை. பாஞ்சாலியும் கர்ணனை ஒருமுறை கேவலப்படுத்தியிருக்கின்றாள். அம்பெய்தால்தான் திரவுபதை என்று போட்டி. துரியோதனாதிகளோ வேறு அரசர்களோ வில்லை எடுக்க முடியவில்லை. கர்ணன் சுளுவாக வில்லை எடுத்து நாணையும் ஏற்றி விடுகிறான். அம்பு விட வேண்டியது மட்டுமே மிச்சம். அப்பொழுது சொல்கிறாள் திரவுபதை. "தேரோட்டியின் மாலையை ஏற்க முடியாது" என்று. எடுத்த வில்லையும் தொடுத்த அம்பையும் கீழே வைத்து விட்டு அவமானத்தில் குறுகி அவையை விட்டே வெளியே போய் விடுகின்றான் கர்ணன்.

இராகவன் அண்ணா, இந்த சம்பவம் இருவிதமாக சொல்லப்படுகிறது. திரவுபதை சொன்னதாகவும், வேறு விதமாக கர்ணன் வில்லை எடுத்து குறி வைத்து சரியாக அடிக்க முடியாமல் தோற்றதாகவும் படித்திருக்கிறேன், இதையே சோ அவர்கள் எழுதிய மகாபாரதத்திலும் சொல்லியிருக்கிறார்.

பரஞ்சோதி
20-12-2005, 06:03 PM
:D நண்பர்களே... நாம் ஒருவரை ஒருவர் (கர்ணனையும், அர்சுனனையும்..) குறை சொல்லுவதை விட நாம் ஓட்டு அளித்தவரின் நிறைகளை சொல்லலாமே... :D

இல்லனா நம்ம தமிழ்நாடு அரசியல் மாதிரி இந்த பகுதி ஆயிடும்....:rolleyes: :rolleyes: :D :D :D

பென்ஸ், உங்க ஆளு துரியின் நிறைகளை சொல்லுங்களேன் பார்ப்போம். :D

mukilan
20-12-2005, 10:36 PM
இராகவன் அண்ணா, நீங்க சும்மா சிம்பதி உண்டாக்கி கர்ணனை நல்லவனாக்குறீங்க.

கர்ணன் படத்தில் கர்ணனாக நம்பியார் நடித்திருந்தால் கர்ணனை நீங்க தேர்வு செய்திருக்க மாட்டீங்க.

அப்புறம் திரௌபதை பிறந்ததே அர்ஜீனனை மணக்க, அங்கே கர்ணனுக்கு என்ன வேலை?

பரம்ஸ் அண்ணா! திரௌபதி பிறந்தது அர்ச்சுனன் வழியாக ஐவரை மணக்க!! அப்புறம் சினிமா பார்த்து ஒரு கதாபாத்திரத்தை நல்லவர் கெட்டவர் எனத் தேர்வு செய்ய ஆரம்பித்து விட்டோமானால் வீரப்பன், பூலான் தேவி, மலையூர் மம்பட்டியான், சீவலப்பேரி பாண்டி, ஆட்டோசங்கர் (யாரேனும் கதையாக எடுத்தால்) எல்லாருமே நல்லவர்கள் ஆகி விடுவார்களே! சிம்பதி உருவாக்கி எல்லாம் கர்ணன் சிறந்தவன்(இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் கதாபாத்திரங்களில்) என நிரூபணம் செய்யத் தேவையில்லை. இங்கே கர்ணன் ஒரு முழுமையான மனிதன் இல்லை என்று கூறியதற்கு தங்களின் விளக்கம் என்னவோ? கர்ணன் தவறுகளே செய்யாத மனிதன் என்று கூற வரவில்லை.அவனது நற்குணங்களோடு ஒப்பிடும்பொழுது அவனே சிறந்தவன் என்பது என் வாதம்.

mukilan
20-12-2005, 10:42 PM
நிறை குறைகள் நிறைந்ததே வாழ்க்கை...
:D :D :D
என்னா தத்துவம்! அடடா! இமயமலையோட பாதிப்பு இவ்வளவு சீக்கிரத்தில வரும்னு நினைக்கலை. கர்ணனை காலை வாறி விட்டுக்கிட்டேயிருக்கீங்க. உங்க வாக்கு யாருக்குன்னு இன்னமும் சொல்லலியே!

mukilan
20-12-2005, 10:47 PM
தேர்தலின் போக்கு!

(நிர்மலா பெரியசாமி ஸ்டைலில் படிக்க) வணக்க்க்கம்ம்! இன்றைய்ய்ய மூக்கியச் செய்திக(ல்)ள். நடந்து கொண்டிருக்கும் மகாபாரதத் தேர்தலில் கொடைவள்ளல் கர்ணன் முண்ணனியில் இருக்கிறார். அவரை அடுத்து விரத வீரர் பீஷ்மர் இருக்கிறார். அருச்சுனனும் , துரியோதனனும் தலா ஒரு வாக்குகள் பெற்றிருக்கின்றனர். தர்மமகராசாவும் அவங்க பெரியம்மா காந்தாரியும் ஹி!ஹி டெபாசிட் இழக்கும் நிலையில் :D :D இருக்கிறார்கள்.வாக்காளர்கள் விரைந்து வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்(ல்)ள(ல)ப்படுகிறார்கள்.

mukilan
20-12-2005, 10:53 PM
ஹ்ம்ம்... ஆமா இதை நான் மறந்துட்டேன்...
ஆனால் சொன்னது திரௌபதின்னு எனக்குத் தோணலை. அவள் அங்கே மணமகள். இப்படிப் பேசியதாக நினனவில்லை. அங்கயும் பீஷ்மர்தான் என்னமோ சொன்னாரு. இதையும் நான் படிச்சிட்டு சொல்றேன்.
படிக்கிற புத்தகத்தை மின்பதிப்பாக பண்பட்டவர் பகுதியிலே போடுங்களேன்.:D :D மைக்ரோசாஃப்ட்ல உங்க டேமேஜர் கத்தினா முகிலன் சொன்னான் பிரதீப் செய்யுறான்னு சொல்லிப்பாருங்க பயந்திடுவார்.:cool:

aren
20-12-2005, 11:21 PM
இந்த தேர்தல் செல்லாது. ஓட்டுப்பதிவின் போது வாக்கு கேட்கக்கூடாது என்பது மறபு. அதை பின்பற்றவில்லை ஒரு சிலர். ஆகையால் இந்த ஓட்டு செல்லாதது என்று இளசு அவர்கள் அறிவிக்கவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

mukilan
20-12-2005, 11:45 PM
இந்த தேர்தல் செல்லாது. ஓட்டுப்பதிவின் போது வாக்கு கேட்கக்கூடாது என்பது மறபு. அதை பின்பற்றவில்லை ஒரு சிலர். ஆகையால் இந்த ஓட்டு செல்லாதது என்று இளசு அவர்கள் அறிவிக்கவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
குறிப்பிட்ட வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்கவில்லை. வாக்கு அளிக்கும் கடமையை ஒரு தேர்தல் ஆணையர் போல நினைவுபடுத்தினேன்.:D :D . ஆரென் அண்ணா உங்க வேட்பாளர்தான் போட்டியிலேயே இல்லைல்ல. அப்புறமும் ஏன் இப்படி:confused: :confused:

பரஞ்சோதி
21-12-2005, 03:05 AM
தமிழர்கள் எப்பொழுதும் அனுதாப அலைக்கு அடிமையாவார்கள் என்பது நமக்கு தெரிந்தது தானே.

மேலும் வெற்றி பெறும் அணி என்றால் அதன் கூடவே போய் சேர்ந்துக் கொள்வார்கள், அது நல்லதா, கெட்டதா என்று கூட பார்க்க மாட்டாங்க.

pradeepkt
21-12-2005, 04:08 AM
என்னா தத்துவம்! அடடா! இமயமலையோட பாதிப்பு இவ்வளவு சீக்கிரத்தில வரும்னு நினைக்கலை. கர்ணனை காலை வாறி விட்டுக்கிட்டேயிருக்கீங்க. உங்க வாக்கு யாருக்குன்னு இன்னமும் சொல்லலியே!
கடைசி வரைக்கும் சொல்ல மாட்டேனே :D

pradeepkt
21-12-2005, 04:10 AM
படிக்கிற புத்தகத்தை மின்பதிப்பாக பண்பட்டவர் பகுதியிலே போடுங்களேன்.:D :D மைக்ரோசாஃப்ட்ல உங்க டேமேஜர் கத்தினா முகிலன் சொன்னான் பிரதீப் செய்யுறான்னு சொல்லிப்பாருங்க பயந்திடுவார்.:cool:
சொல்லிப் பாத்தேன்... அதுவரைக்கும் சும்மாக் கத்திக்கிட்டு இருந்தவரு கடிக்க வந்திட்டாரு,
16 ஊசி போடணுமேன்னு சும்மா விட்டேன் :D

pradeepkt
21-12-2005, 04:11 AM
குறிப்பிட்ட வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்கவில்லை. வாக்கு அளிக்கும் கடமையை ஒரு தேர்தல் ஆணையர் போல நினைவுபடுத்தினேன்.:D :D . ஆரென் அண்ணா உங்க வேட்பாளர்தான் போட்டியிலேயே இல்லைல்ல. அப்புறமும் ஏன் இப்படி:confused: :confused:
வந்திட்டாருய்யா... வாக்குக் கேட்க...
ஆரென் அண்ணா இன்னும் சகுனிக்கு வாக்கு கேக்க ஆரம்பிக்கலையா?:eek:

pradeepkt
21-12-2005, 04:12 AM
தமிழர்கள் எப்பொழுதும் அனுதாப அலைக்கு அடிமையாவார்கள் என்பது நமக்கு தெரிந்தது தானே.

மேலும் வெற்றி பெறும் அணி என்றால் அதன் கூடவே போய் சேர்ந்துக் கொள்வார்கள், அது நல்லதா, கெட்டதா என்று கூட பார்க்க மாட்டாங்க.
அண்ணா,
என்ன கலைஞர் மாதிரி பேச ஆரம்பிச்சிட்டீங்க,;)
அவருதான் அவருக்கு ஓட்டுப் போட்ட தமிழன் பெரிய தில்லாலங்கடின்னும், அவருக்குப் போடலைன்னா தமிழன் அடிமுட்டாளாயிட்டான், பார்ப்பன ஆரிய பாசிச (இன்னும் என்ன என்னவோ:confused: ) சக்திகளின் ஆதிக்க வெறிக்கும் போலிப் பிரச்சாரத்துக்கும் மயங்கிட்டான் அப்படிம்பாரு :D

mukilan
21-12-2005, 04:12 AM
கடைசி வரைக்கும் சொல்ல மாட்டேனே :D

சொல்லலைன்னா உங்க ஓட்டை யாராவது போட்டிரப் போறாய்ங்க!:rolleyes:

gragavan
21-12-2005, 04:52 AM
இராகவன் அண்ணா,

நீங்க என்னத்தான் சொல்லுங்க, கர்ணன் ஒரு மூடன், ஆத்திரக்காரன்.
இது உண்மையில்லாத வாதம் தம்பி. அவன் மூடத்தனத்தையும் ஆத்திரக்காரன் என்பதையும் விளக்கும் ஒரு காட்சியை நீ பாரதத்தில் காட்டு. அந்தக் காட்சியில் அவன் செய்ததைக் கண்டிப்பாக விஜயனும் செய்திருப்பான்.

கொடை வள்ளல் என்பதை வைத்து மட்டுமே அவன் சிறந்தவன் என்று சொல்வதும், பெற்ற தாய் அழைத்தும் போக வில்லை, நட்புக்காக உயிரையே கொடுத்தான் என்பதை வைத்து மட்டுமே அவன் சிறந்தவன் என்று எப்படி கூற முடியும்.

he is not a complete man. எல்லாவற்றிலும் சிறந்தது விளங்குபவனே சிறந்தவன் ஆவான். நிச்சயமாக கர்ணன் முழுமையான மனிதன் இல்லை. யாருமே முழுமை இல்லை. தவறுகளையும் நல்லவைகளையும் கூட்டிக் கழித்துப் பார்த்துதான் முடிவுக்கு வர வேண்டும். நானே கர்ணன் செய்த தவறுகளையும் பட்டிய்லிட்டேன். அது சரிதான் என்று பெஞ்சமின் சொன்னபோது, இல்லை தவறே என்று அடித்தும் சொன்னேன். வெள்ளைத் தாளில் ரெண்டு சொட்டுக் கருப்புப் புள்ளி கர்ணன். கருப்புத்தாளில் ரெண்டு சொட்டு வெள்ளைத்துளி அருச்சுனனும் துரியனும். இந்தக் கருத்தில் மாறுபாடே கிடையாது.

gragavan
21-12-2005, 04:58 AM
இராகவன் அண்ணா, நீங்க சும்மா சிம்பதி உண்டாக்கி கர்ணனை நல்லவனாக்குறீங்க.

கர்ணன் படத்தில் கர்ணனாக நம்பியார் நடித்திருந்தால் கர்ணனை நீங்க தேர்வு செய்திருக்க மாட்டீங்க.

அடக்கடவுளே! எனக்குக் கர்ணன் படம் அறிமுகம் ஆகும் முன்னாடியே மகாபாரதம் அறிமுகம். அதத் தெரிஞ்சிக்கோ. கர்ணன் படத்தை நான் காலேஜில் படிக்கும் பொழுதுதான் பார்க்க நேர்ந்தது. ஆனால் பத்தாம் வகுப்பிலேயே வியாசர் விருந்தும் சக்கரவர்த்தித் திருமகனும் எனக்குப் பழக்கம்.

அப்புறம் திரௌபதை பிறந்ததே அர்ஜீனனை மணக்க, அங்கே கர்ணனுக்கு என்ன வேலை? இது நல்லாருக்கு. அப்புறம் ஏன் சொயம்வரம் வெக்கனும். பேசாம அருச்சுனன கூப்புட்டுக் குடுத்திருக்கலாமுல்ல. போட்டீன்னு வந்தாச்சு. அப்புறம் என்ன தேரோட்டி பேயோட்டின்னுகிட்டு. அவனும் ஒரு அரசன். அவனுக்கும் அழைப்பு போயிருக்கு.

gragavan
21-12-2005, 05:03 AM
இராகவன் அண்ணா, இந்த சம்பவம் இருவிதமாக சொல்லப்படுகிறது. திரவுபதை சொன்னதாகவும், வேறு விதமாக கர்ணன் வில்லை எடுத்து குறி வைத்து சரியாக அடிக்க முடியாமல் தோற்றதாகவும் படித்திருக்கிறேன், இதையே சோ அவர்கள் எழுதிய மகாபாரதத்திலும் சொல்லியிருக்கிறார்.தம்பி. நான் சோ எழுதியதைப் படித்ததில்லை. நான் படித்ததெல்லாம் வியாசர் விருந்துதான். வியாசர் சொன்னதெல்லாம் வைத்து சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியர் எழுதியதைப் படித்தது. அத்தோடு நான் வேறு பல பாரதங்களையும் படித்திருக்கின்றேன். போகிற போக்கில் சோவுக்கும் இராஜிக்கும் இப்பொழுது போட்டி வைக்க வேண்டியதுதான் போல. கர்ணன் வில்லை அடிக்க முடியாமல் தோற்றதாக நான் எங்கும் படித்ததில்லை.

gragavan
21-12-2005, 05:19 AM
பரம்ஸ் அண்ணா! திரௌபதி பிறந்தது அர்ச்சுனன் வழியாக ஐவரை மணக்க!! அப்புறம் சினிமா பார்த்து ஒரு கதாபாத்திரத்தை நல்லவர் கெட்டவர் எனத் தேர்வு செய்ய ஆரம்பித்து விட்டோமானால் வீரப்பன், பூலான் தேவி, மலையூர் மம்பட்டியான், சீவலப்பேரி பாண்டி, ஆட்டோசங்கர் (யாரேனும் கதையாக எடுத்தால்) எல்லாருமே நல்லவர்கள் ஆகி விடுவார்களே! சிம்பதி உருவாக்கி எல்லாம் கர்ணன் சிறந்தவன்(இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் கதாபாத்திரங்களில்) என நிரூபணம் செய்யத் தேவையில்லை. இங்கே கர்ணன் ஒரு முழுமையான மனிதன் இல்லை என்று கூறியதற்கு தங்களின் விளக்கம் என்னவோ? கர்ணன் தவறுகளே செய்யாத மனிதன் என்று கூற வரவில்லை.அவனது நற்குணங்களோடு ஒப்பிடும்பொழுது அவனே சிறந்தவன் என்பது என் வாதம்.அப்படிச் சொல்லுங்க முகிலன். கூட்டிக் கழிச்சிப் பாத்தா கணக்கு சரியா வரும். அத விட்டுட்டு சிம்பதி கிரியேட் பண்றாங்க. சிம்பொனி எழுதுறாங்கன்னா நல்லாவா இருக்கு.

அருச்சுனன் நல்லவன்னு சொல்றவங்க...அதுக்கு எதையாவது சொல்லுங்கப்பா. கர்ணன் கெட்டவன் கெட்டவன்னு திரும்பத் திரும்பச் சொல்றதால மட்டும் அருச்சுனன் நல்லவனாகி விட மாட்டான். கர்ணனும் கெட்டவனாகிவிட மாட்டான்.

pradeepkt
21-12-2005, 05:24 AM
அப்ப கர்ணன் கெட்டவன்னு ஒத்துக்கறீங்களா என்ன? :D

gragavan
21-12-2005, 05:27 AM
அப்ப கர்ணன் கெட்டவன்னு ஒத்துக்கறீங்களா என்ன? :Dநல்லாவே ஒளர்ரீங்க......விளக்கமாச் சொல்லுங்க.

pradeepkt
21-12-2005, 05:41 AM
கடைசியில கர்ணனும் கெட்டவனாகிவிட மாட்டான்னு ஒரு வரியை நைஸாச் சேத்துட்டீங்க... இருக்கட்டும் :D
நான் இன்னும் வேற யாரை நல்லவன்னு சொல்றதுன்னு யோசிச்சிட்டு இருக்கேன்... எல்லாருமே திரௌபதியக் கேவலப் படுத்துறதில ஒடந்தை. கிஸ்ணன் செஞ்சதை எல்லாம் சொல்லி மாளாது. சகுனி செஞ்சதுக்கு நீங்க ஒரு புது வெளக்கம் குடுத்துருக்கீங்க, அதைப் பாக்கணும். உத்தரன், விராடன் எல்லாம் சின்ன கேரக்டருங்க. ம்ம்ம்ம்... யோசிப்போம்

gragavan
21-12-2005, 06:00 AM
கடைசியில கர்ணனும் கெட்டவனாகிவிட மாட்டான்னு ஒரு வரியை நைஸாச் சேத்துட்டீங்க... இருக்கட்டும் :D
நான் இன்னும் வேற யாரை நல்லவன்னு சொல்றதுன்னு யோசிச்சிட்டு இருக்கேன்... எல்லாருமே திரௌபதியக் கேவலப் படுத்துறதில ஒடந்தை. கிஸ்ணன் செஞ்சதை எல்லாம் சொல்லி மாளாது. சகுனி செஞ்சதுக்கு நீங்க ஒரு புது வெளக்கம் குடுத்துருக்கீங்க, அதைப் பாக்கணும். உத்தரன், விராடன் எல்லாம் சின்ன கேரக்டருங்க. ம்ம்ம்ம்... யோசிப்போம்விகர்ணன்னு ஒரு தம்பி. துரியோதனுக்கு. அவனையும் பீமன் கொல்றான். கொன்னுட்டுச் சொல்றான்...ஐயோ தம்பி....உன்னையக் கொல்ல நேர்ந்ததேன்னு. கர்ணன் தப்பு செஞ்ச ரெண்டு எடத்துலயும் கூட விகர்ணன் சரியாச் செஞ்சிருக்கான். பாஞ்சாலிய சபைக்கே கொண்டு வரக்கூடாதுன்னு சொன்னவன் அவன். ஆனா போருன்னு வந்தப்புறம் வேற வழியில்லாம கர்ணனைப் போல துரியனுக்காக உயிர் கொடுக்கின்றான். அதத் தவிர அவனப் பத்தியும் நெறையத் தெரியாது.

மொத்தமாப் பாத்தா இன்னமும் கர்ணனே முன்னாடி இருக்காரு.

போர நிறுத்த என்ன வழின்னு சகதேவன் கிட்ட கண்ணன் கேக்குறாரு. அதுக்குச் சகதேவன் சொல்றான்.

1. மொதல்ல கர்ணனுக்குப் பட்டம் கெட்டனும்.
2. அருச்சுனனை நாடு கடத்தனும்.
3. பாஞ்சாலிக்கு மொட்டை அடிக்கனும்.
4. கடைசியா கண்ணனாகிய உன்னைக் கட்டிப் போடனும்.

சகதேவன் ஞானி. விஷயம் தெரிஞ்சவன். கண்ணன் போருன்னு முடிவெடுத்துட்டான்னு அவனுக்குத் தெரியும். அதுனாலயே கர்ணன் தன்னுடைய அண்ணன்னு சொல்லாம விட்டுர்ரான். ஆனா இவன் செஞ்ச நல்லதுன்னு எதையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியல.

சகதேவன் போன்ற ஞானிகளே கர்ணனுக்கு அந்த இடம் கொடுக்கனுமுன்னு நெனைக்கும் போது....நாங்கள்லாம் எந்த மாத்திரம். நீங்க???????

pradeepkt
21-12-2005, 06:03 AM
ஆமா விகர்ணனையும் கொல்ல நேர்ந்ததைப் பத்தி பீமன் வருத்தப் படுறான். அது அவன் செஞ்ச சபதத்தினால் வந்தது. கும்பகர்ணனைப் போல் அனைத்து நியாயங்களையும் எடுத்துச் சொல்லி அண்ணனிடம் அவமானப் பட்டு வீர மரணம் அடைந்தான் விகர்ணன். ஆனாக் கர்ணனைப் போலன்னு சொல்லக் கூடாது. கர்ணனுக்குச் செஞ்சோத்துக் கடன் இருந்துச்சு. இவனுக்கு துரியோதனனுக்கு இருந்த அத்தனை உரிமையும் இருந்தது. ஆனால் சகோதரனை விட்டுக் கொடுக்காமல் மாண்டான். ஒரு படி மேலன்னு வச்சிக்கிருங்களேன்.

சகதேவன் ஜோசியம் தெரிஞ்ச ஞானி, சரி! அவன் கர்ணனுக்கு இந்த இடத்தைக் குடுக்கணுமின்னு சொன்னான்னா உடனே குடுத்துறணுமா? இருங்க வேற யாரும் இருக்காங்களான்னு பாப்போம்.

pradeepkt
21-12-2005, 06:06 AM
நான் விதுரனைப் பத்தியும் யோசித்தேன்.
ஆனால் விதுரனும் பாஞ்சாலி சபையில் உதவி கேட்ட போது வேறு வழியில்லாமல் பல்லைக் கடித்துக் கொண்டு தலையைக் குனிந்து உட்கார்ந்திருந்தார். விகர்ணனிடம் பாஞ்சாலி உதவி கேக்கலை. ஒரு வேளை கேட்டிருந்தா அவன் கண்ணனுக்கு முன்னாலேயே ஏதாச்சும் ஒதவி செஞ்சிருப்பான்.

ஆனால் அவரு திருதராஷ்டிரனிடம் இதெல்லாம் வாணாம் கண்ணுனு நிறையச் சொல்லிப் பார்த்தார். அப்புறமும் ஒரு தேர்ந்த வர்ணனையாளரைப் போல் உணர்ச்சிகளைக் கலக்காமல் போரை திருதராஷ்டிரனுக்கு அவன் தவறுகளை உணரும்படி விளக்கினார்.

அப்புறம் விதுரநீதின்னு ஒரு பொஸ்தகம் வேற இருக்கு... :D

பென்ஸ்
21-12-2005, 06:09 AM
யோவ்... என்ன ரேம்ப ஓவரா துரியன் கெட்டவன் ....கெட்டவன் என்று டயலாக் வுடுறிங்க... நான் அவன் எவ்வளவு நல்லவன் என்று சொல்லுறேன்... அப்புறம் சொல்லுங்க....

gragavan
21-12-2005, 06:09 AM
ஆமா விகர்ணனையும் கொல்ல நேர்ந்ததைப் பத்தி பீமன் வருத்தப் படுறான். அது அவன் செஞ்ச சபதத்தினால் வந்தது. கும்பகர்ணனைப் போல் அனைத்து நியாயங்களையும் எடுத்துச் சொல்லி அண்ணனிடம் அவமானப் பட்டு வீர மரணம் அடைந்தான் விகர்ணன். ஆனாக் கர்ணனைப் போலன்னு சொல்லக் கூடாது. கர்ணனுக்குச் செஞ்சோத்துக் கடன் இருந்துச்சு. இவனுக்கு துரியோதனனுக்கு இருந்த அத்தனை உரிமையும் இருந்தது. ஆனால் சகோதரனை விட்டுக் கொடுக்காமல் மாண்டான். ஒரு படி மேலன்னு வச்சிக்கிருங்களேன்.அதுவும் உண்மைதான். கர்ணனுக்காவது துரியன் வாழ்வு கொடுத்தான். ஆனால் விகர்ணனை எப்பவும் திட்டிக்கிட்டே இருப்பான். ஒரு பேச்சு நல்ல பேச்சு பேசுனதில்லை. அவ்வளவு பாசம் விகர்ணன் மேல. இவனும் சிங்கமுகனும் இந்த விஷயத்துல ஒன்னு. அவனும் மொதல்ல இருந்தே சொல்றான். சூரங்கிட்ட திட்டும் வாங்குறான். அவனுக்காக உயிரும் கொடுக்குறான். அதுனாலதான் பானுகோபன் செத்தப்பக்கூட அழல சூரன். சிங்கன் மாண்டான்னு செய்தி வந்ததும் கோன்னு கதறி அழுறான்.

சகதேவன் ஜோசியம் தெரிஞ்ச ஞானி, சரி! அவன் கர்ணனுக்கு இந்த இடத்தைக் குடுக்கணுமின்னு சொன்னான்னா உடனே குடுத்துறணுமா? இருங்க வேற யாரும் இருக்காங்களான்னு பாப்போம். தேடுங்க...தேடுங்க...யாரும் அம்புட மாட்டீங்க. கடைசில நீங்களும் கருணனுக்கே முடி சூட்டுவீங்க.

pradeepkt
21-12-2005, 06:11 AM
ஏய்யா இந்தக் கணக்குப் படி பாத்தாலும் இப்ப விகர்ணனுக்குத்தானே மகுடம்?
போற போக்குல பென்ஸூ வேற துரிக்கு (செல்லப் பேரு வேற) ஏதோ வக்காலத்து ரெடி பண்ணிட்டு இருக்காப்பல... :D
இதே மாதிரி அடுத்து ராமாயணம், சிலப்பதிகாரம், மணிமேகலைக்கெல்லாம் ஒரு ஓட்டெடுப்பு வச்சாலே மன்றத்தில தினமும் 100 பதிவு விழும் :D

மதி
21-12-2005, 06:12 AM
தட்..தட்..தட்..

யாரங்கே...! இதுக்கு யாராச்சும் பஞ்சாயத்து பண்ணுங்கப்பா..

gragavan
21-12-2005, 06:12 AM
நான் விதுரனைப் பத்தியும் யோசித்தேன்.
ஆனால் விதுரனும் பாஞ்சாலி சபையில் உதவி கேட்ட போது வேறு வழியில்லாமல் பல்லைக் கடித்துக் கொண்டு தலையைக் குனிந்து உட்கார்ந்திருந்தார். விகர்ணனிடம் பாஞ்சாலி உதவி கேக்கலை. ஒரு வேளை கேட்டிருந்தா அவன் கண்ணனுக்கு முன்னாலேயே ஏதாச்சும் ஒதவி செஞ்சிருப்பான்.

ஆனால் அவரு திருதராஷ்டிரனிடம் இதெல்லாம் வாணாம் கண்ணுனு நிறையச் சொல்லிப் பார்த்தார். அப்புறமும் ஒரு தேர்ந்த வர்ணனையாளரைப் போல் உணர்ச்சிகளைக் கலக்காமல் போரை திருதராஷ்டிரனுக்கு அவன் தவறுகளை உணரும்படி விளக்கினார்.

அப்புறம் விதுரநீதின்னு ஒரு பொஸ்தகம் வேற இருக்கு... :Dவிதுரரைச் சேக்க முடியாது. அவரும் சும்மாதான் இருந்தாரு. அதே நேரத்துல போர் சமயத்துல தன்னோட வில்ல வேற ஒடச்சிட்டுப் போருக்குப் போகாம இருந்துட்டாரு.

விகர்ணன் பாஞ்சாலிய இழுத்துட்டு வரும் போது எகுறுறான். கத்துறான். அண்ணனத் திட்டுறான். மாமனத் திட்டுறான். ஆனா பாருங்க...அவங்க அண்ணந்தம்பி நூறு பேரு. மத்த பயலுக அவன பிடிச்சி வெச்சிக்கிராங்க. நூறு பேத்த மீறி வந்து காப்பாத்த அவன் பெரிய வீரன் இல்லை. அதையும் மீறி வந்தா துரியோதனனே கதையக் கொண்டு மண்டைல போட்டுருவான். அதுக்கப்புறம் கருணன். இத்தனையையும் மீறி அவனாக ஒன்னும் செஞ்சிருக்க முடியாது.

gragavan
21-12-2005, 06:13 AM
யோவ்... என்ன ரேம்ப ஓவரா துரியன் கெட்டவன் ....கெட்டவன் என்று டயலாக் வுடுறிங்க... நான் அவன் எவ்வளவு நல்லவன் என்று சொல்லுறேன்... அப்புறம் சொல்லுங்க....பெஞ்சமின் துரியன் கெட்டவனில்லை. கெட்டவனாக்கப்பட்டவன். தருமன் மாதிரி. அருச்சுனன் மாதிரி. அவ்வளவுதான். இதுக்கெல்லாம் டென்ஷன் படாதீங்க.

gragavan
21-12-2005, 06:15 AM
ஏய்யா இந்தக் கணக்குப் படி பாத்தாலும் இப்ப விகர்ணனுக்குத்தானே மகுடம்?
போற போக்குல பென்ஸூ வேற துரிக்கு (செல்லப் பேரு வேற) ஏதோ வக்காலத்து ரெடி பண்ணிட்டு இருக்காப்பல... :D
இதே மாதிரி அடுத்து ராமாயணம், சிலப்பதிகாரம், மணிமேகலைக்கெல்லாம் ஒரு ஓட்டெடுப்பு வச்சாலே மன்றத்தில தினமும் 100 பதிவு விழும் :Dவிகருணனுக்கு மகுடம் கொடுக்க முடியாது. ஏன்னா? அவன் செஞ்ச ஒரே நல்ல காரியம் திரவுபதைக்காகப் பேசிய ஒரே ஆளுங்கறதுதான். அண்ணனுக்காக செத்தான்னாலும் அது மத்த அத்தன தம்பிகளுக்கும் பொருந்துந்தானே.

gragavan
21-12-2005, 06:17 AM
இதே மாதிரி அடுத்து ராமாயணம், சிலப்பதிகாரம், மணிமேகலைக்கெல்லாம் ஒரு ஓட்டெடுப்பு வச்சாலே மன்றத்தில தினமும் 100 பதிவு விழும் :D

ஒரு ரகசியம் சொல்றேன் கேட்டுக்குங்க. இந்த ஓட்டெடுப்பு சிலப்பதிகாரத்துலயே நடந்திருக்கு. ஏன்னா....அன்னைக்கே கண்ணகியா கோப்பெருந்தேவியான்னு ஓட்டெடுப்பு நடத்தீருக்காங்க.

மகாபாரதம் முடியட்டும். நம்ம கண்ணகியா, மாதவியா, கோப்பெருந்தேவியான்னு புதுத்திரி போட்டிருவோம்.

பென்ஸ்
21-12-2005, 06:17 AM
ஆங்.. அது....

நம்மாளை கெட்டவன்னு சொல்லிட்டாங்கபா...
இனம் இனத்தோட தான் சேரும்.... நல்லவன் நல்லவனோட.... கர்ணன் துரியனோட....

"கெட்டவனாக்கபட்டவன்"... இது ஆப்பு மாதிரியில்ல தெரியுது....

pradeepkt
21-12-2005, 06:22 AM
நான் பேசாம நடுவரா இருந்துக்குறவா?
எல்லாரும் உங்க வாதத்தைச் சொல்லுங்க... ஏதாச்சும் குத்தம் சொல்லிட்டு தீர்ப்பைச் சொல்றேன்...
ஆனால் கலைஞர் மாதிரி "இது வழங்கப்பட்ட தீர்ப்பல்ல, வாங்கப்பட்ட தீர்ப்பு" அப்படின்னெல்லாம் யாரும் தர்ணா பண்ணப்படாது :D

gragavan
21-12-2005, 06:51 AM
ஆங்.. அது....

நம்மாளை கெட்டவன்னு சொல்லிட்டாங்கபா...
இனம் இனத்தோட தான் சேரும்.... நல்லவன் நல்லவனோட.... கர்ணன் துரியனோட....

"கெட்டவனாக்கபட்டவன்"... இது ஆப்பு மாதிரியில்ல தெரியுது....என்ன பெஞ்சமின்....இப்படி அப்செட்டாயிட்டீங்க.

துரியன் கிட்டயும் நல்ல விஷயங்கள் இருக்கு.

கர்ணனை நண்பனாக்கிக் கொண்டது.

நல்ல அரசனாக இருந்தது.

ஆனால் அவனுடைய பொறாமை உணர்ச்சியில் கர்ணனும் பொசுங்கி அவன் அரசும் பொசுங்கிப் போயிற்று.

gragavan
21-12-2005, 06:59 AM
நான் பேசாம நடுவரா இருந்துக்குறவா?
எல்லாரும் உங்க வாதத்தைச் சொல்லுங்க... ஏதாச்சும் குத்தம் சொல்லிட்டு தீர்ப்பைச் சொல்றேன்...
ஆனால் கலைஞர் மாதிரி "இது வழங்கப்பட்ட தீர்ப்பல்ல, வாங்கப்பட்ட தீர்ப்பு" அப்படின்னெல்லாம் யாரும் தர்ணா பண்ணப்படாது :Dஅதெல்லாம் முடியாது. இத ஒத்துக்கிர முடியாது. மூனு நடுவர் வேணும். தல, அறிஞர், இளசு இருக்கட்டும். அவங்கள்ல மெஜாரிட்டி ஓட்டு வாங்குனதையும் மத்தவங்க போட்ட ஓட்டையும் கூட்டி யாருக்கு நெறைய வருதோ...அவங்கதான் ஜெயிச்சவங்க.

பென்ஸ்
21-12-2005, 07:14 AM
அப்ப ஓட்டு தான் முக்கியாமா???? நான் இப்பவே ஒரு பத்து கள்ள ஓட்டு போடுறேன்....
அப்பா கர்ணா மன்னிச்சிக்கபா... (பிரகாஷ் ராஜ் ஸ்டைலில்)
சரி வேனாமோ.. நீ ஜேயித்தால் நானும் தானே ஜெயிப்பேன்...

பரஞ்சோதி
21-12-2005, 07:28 AM
மகாபாரதத்தில் அர்ஜீனன்.

மகாபாரதம் நம்முடைய இதிகாசங்களில் ஒன்று, அதுவும் இன்றியமையாத, ஈடு இணை இல்லாத காவியம்.

மகாபாரத்தில் சொல்லப்படாத விசயங்களே இல்லை என்றே சொல்லலாம், மகாபாரத்தை மட்டுமெ நன்கு புரிந்து கொண்டால், வாழ்வில் அனைத்து கட்டங்களிலும் திறம்பட செயல்பட்டு இந்த மனித வாழ்க்கையை நடத்தலாம்,

மகாபாரத்தில் எத்தனையோ கதாபாத்திரங்கள், ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்தவை, பீஷ்மராக இருக்கட்டும், விதுராக இருக்கட்டும், சிகண்டியாக இருக்கட்டும், அஸ்வத்தாமாவாக இருக்கட்டும், ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வகையில் சிறந்தவர்கள்.

என்னைப் பொருத்தவரை அர்ஜீனன் மிகச் சிறந்தவர், அவரது மொத்த வாழ்க்கையையும் பார்க்க வேண்டும், அனைத்திலும் சிறந்து விளங்குபவர் அர்ஜீனன் தான்.

நான் சொல்லும் சில விசய்ங்களை விமர்சத்திற்கு அப்பால் வைத்து விட வேண்டும்.

முதலில் பிறப்பு, அர்ஜீனனின் தந்தை இந்திரன், இந்திரன் யார் தேவர்களின் தலைவன் (இந்திரனைப்பற்றிய விமர்சனம் தேவையில்லை), தேவர்களின் தலைவனான இந்திரனின் மகன் அர்ஜீனன், ஆக பிறப்பாலேயே உயர்ந்து நிற்கிறார். இன்றைய அரசியல்வாதிகளின் மகன் மாதிரி பிறப்பை மட்டுமே வைத்து பதவியை பிடித்தவர் அல்ல அர்ஜீனன்.

தாய் குந்திக்கு நல்ல மகன் அர்ஜீனன், எல்லா தாய்களுக்கும் தன் மகனை சான்றோன் என்று கேட்டால் அதை விட சிறந்தது உலகில் எதுவும் இல்லை. அத்தகைய சந்தோசத்தை கொடுத்தவரில் ஒருவர் அர்ஜீனன், வில்லுக்கு விஜயன் என்ற பெயரும், உலகமே வியக்கும் வகையில் வெல்ல யாருமில்லாத ஒரே வீரன் என்ற பெயர் பெற்றவர். ஆக மகனாக பிறந்ததற்கு தாய்க்கு நல்ல மகனாக இருந்தவர் அர்ஜீனன்.

அடுத்த பருவம் மாணவப்பருவம், மாணவப்பருவத்தில் கற்றுக் கொடுத்த ஆசானுக்கு எது சந்தோசம் கொடுக்கும், தான் கற்று கொடுத்த வித்தைகளை சரியாக கற்றவனைக் கண்டால் ஆசானுக்கு மிக மிக பிடிக்கும். குருவை மிஞ்சிய சிஷ்யன் என்றால் பிடிக்கும்.

துரோணர் தன்னுடைய மாணவர்களில் யாருக்கு அனைத்தும் சொல்லிக் கொடுத்தார் என்று கேட்டால் அர்ஜீனனுக்கே, தன் மகனுக்கு தெரியாத வித்தைகளை கூட அர்ஜீனன் ஒருவருக்கே கற்று கொடுத்தார், அவர் கற்று கொடுத்த அத்தனையும் சிரத்தையாக படித்த ஒரே மாணவர் அர்ஜீனன்.

துரோணரின் சபதத்தை நிறைவேற்றியவர் யார்? அர்ஜீனன் தான், மத்த அனைவரும் துருபனும் சண்டையிட்டு மண்ணைக் கவ்வ, இறுதியில் அர்ஜீனனே அவரை வென்று, தேர்க்காலில் கட்டியிழுத்து வந்தார். குருவின் சபதத்தை நிறைவேற்றினார்.

அதன் பின்னரே துருபன் யாகம் செய்து அர்ஜீனனை மணக்க ஒரு மகள் கிடைக்கப் பெற்றார். ஆக திரவுபதை பிறந்தது அர்ஜீனன் கையால் மணமாலை வாங்கவே.

அது மாதிரியே துரோணர் இறுதி போரில் தன் மாணவனின் திறமையை கண்டு வியந்து நிற்கிறார். ஆக ஒரு ஆசானுக்கு மிக நல்ல மாணவனாக திகழ்கிறார்.

அர்ஜீனனின் வீர சாகசங்கள் :

அர்ஜீனனின் வீர சாகசங்கள் எண்ணற்றவை, கர்ணன் எத்தனையோ முறை அர்ஜீனனிடம் தோற்று ஓடியிருக்கிறார்.

ஒருமுறை துரியோதனன், கர்ணன் மற்றும் பலர் காந்தவர்களிடம் சண்டை போட்டு மயங்கி விழ, அந்த காந்தவர்களிடம் சண்டை போட்டு உயிரோடு மீட்டது அர்ஜீனன்.

ஒரு ஆண்டு தலைமறைவாக இருக்க, அதை தெரிந்து துரியோதனன், கர்ணன் போன்றோர் சண்டைக்கு வர பெண் வேடமிட்டிருந்த அர்ஜீனன் அவர்களை தோற்கடித்து ஓட வைத்தார்.

வேடன் வேடமிட்டு வந்த சிவபெருமானை ஒத்தைக்கு ஒத்தையாக நின்று சண்டையிட்டவர்.

மகாபாரதப்போரில் எண்ணற்ற வீரர்களை புறமுதுகு காட்டி ஓடச் செய்தவர். கர்ணனை பலமுறை தன் அம்புகளால் தாக்கி மயங்கச் செய்தவர்.

பீஷ்மர் மற்றும் பல மாவீரர்கள் அனைவரின் மரணத்திற்கு அடிகோலிட்டவர் அர்ஜீனன். பீஷ்மர் கீழே விழுந்த போது அர்ஜீனன் மட்டுமே அவரின் தேவை என்ன என்பதை உணர்ந்து செய்தார். பீஷ்மரும் நான் அடிப்பட்டு விழக்காரணம் சிகண்டி அல்ல அர்ஜீனன் என்றே சொன்னார்.

தன் மகன் அபிமன்யூவை சதி செய்து கொன்ற ஜெயத்ரதனை சபதமிட்டு அதே போல் செய்து முடித்தவர்.

பாரதப்போரில் அர்ஜீனன் ஒருவரே மாபெரும் வெற்றி வீரர்.

அர்ஜீனனின் மற்ற சிறப்புகள்:

மகாபாரதப் போர் தொடங்கியதும், அர்ஜீனன் போர்களத்திற்கு செல்கிறார், அங்கே எதிரோ போரிட வந்த உற்றார், உறவினர்கள், ஆசான்களை கண்டு கண் கலங்குகிறார், அங்கே தான் ஒரு சிறந்த மனிதராக தெரிகிறார்.

தன் ரத்த பந்தங்களையும், பிரியமானவர்களையும் கொன்று குவித்தா தனக்கு ராஜ்ஜியம் வேண்டும்,அது தேவையில்லை என்று கூறி வில்லை கீழே போட்டு விடுகிறார். இது போன்ற எண்ணம் வேற யாருக்குமே வரவில்லையே.

அர்ஜீனனாலேயே பகவத்கீதை என்ற அரும்பெரும் காவியம் கிடைத்தது.

மேலும் கடவுளின் அவதாரமான கண்ணன், சிவபெருமான், அனுமான் போன்ற அத்தனை பேரும் அர்ஜீனனையே விரும்பினார்கள்.

ஒரு ஆண்டு தலைமறைவாக இருக்க வேண்டிய காலத்தில் யாருமே ஏற்க தயங்கும் பெண்/அலி வேடமிட்டவர்.

பின்னர் அவர் அர்ஜீனன் என்று தெரிந்தப் பின்பு மணம் முடிக்க வந்த உத்திரையை தான் குருவாக இருந்தவன், ஆக நான் மணப்பது தவறு என்று சொல்லி தன் மகனுக்கு திருமணம் செய்து வைத்தவர்.

வெற்றி வீரர் ஜெய் அனுமான் அர்ஜீனனின் தேர்கொடியில் வந்து அமர்ந்தார்.

போருக்கு முன்பு களப்பலி கொடுக்க தான் முன் வந்தார், அர்ஜீனன் இல்லை என்றால் போரே இல்லை என்பதால் தன் மகன் அரவானின் விருப்பப்படி பலியிட சம்மதம் தெரிவித்தார்.

எத்தனையோ பெண்களை மணந்தாலும், அவர்களை எல்லாம் அர்ஜீனனை விரும்பியே திருமணம் செய்துக் கொண்டார்கள். ஒரு தாரம் இருந்தாலே தலையை பிய்த்துக் கொள்ளுபவர்களிடத்த்தில் பல தாரமிருந்தும் பிரச்சனை இல்லாமல் இருந்தவர். கர்ப்பக்காலத்தில் மனைவியோடு இருந்து, அவர்கலின் விருப்பம் என்ன என்பதை பார்த்துக் கொண்டவர், அதற்கு அபிமன்யூ சாட்சி.

இப்படி பல அரிய குணங்களையும் யாருமே வெல்ல முடியாத வீரமும் கொண்ட மாவீரன் அர்ஜீனனே மகாபாரத்தில் மிகச் சிறந்தவர் என்று சொல்லிக் கொண்டு சோடா குடிக்க போகிறேன்.

போகும் முன்பு, உங்க குழந்தைகளுக்கு மகாபாரதக்கதை சொல்லும் போது அவர்கள் அர்ஜீனனை போல் வீரமானவனாக, ஆசானுக்கு பிடித்தவனாக, பெரியவர்களை மதிப்பவனாக, வெற்றி நாயகனாக இருக்கவே சொல்லுங்க. துரியோதனன், கர்ணன் போன்றோரை சொல்லி அவர்களின் வாழ்க்கைக்கு ஆப்பு வைத்திடாதீங்க.

பென்ஸ்
21-12-2005, 07:47 AM
பரம்ஸ் கலக்கி போட்டிங்க... :p :p :p

பாவம் ராகவன் இன்னும் ரெம்ப படிக்கனும் போல...:rolleyes: :rolleyes: :rolleyes:
அப்படிதானே ராகவன்.. பரவாயில்லை ... :D :D :D
உங்கள் நேரத்தை நீங்களே எடுத்து கொள்ளுங்கள் (take your own time)....:rolleyes: :rolleyes: :D :D :D

துரியோதனனுக்கு உதவி செய்ய யாரும் இல்லியா????:confused: :confused: :confused: :eek: :eek:

பாவம் பிரதிப்பு... தாங்க முடியாம ஓடிட்டாபுலையா????:D :D :D :D

pradeepkt
21-12-2005, 08:27 AM
யோவ் என்னய்யா பெரிய சாலமன் பாப்பையான்னு நெனைப்பா...
உங்களுக்கும்தானே அண்ணா வச்சிருக்காரு ஆப்பைய்யா! :D

அண்ணா,
உங்கள் வாதத் திறமையை நான் பாராட்டுகிறேன்.
ராகவன் ஒரு ஞானி சொன்னாரு கர்ணனுக்கு மகுடமின்னா, நீங்க ஆண்டவனே சொல்லியாச்சு மாத்து யாருங்கறீங்க...
உண்மை, கர்ணன் பல தடவை அர்ஜூனனிடம் தோற்று ஓடியிருக்கிறான். குறிப்பாக உத்தரனைத் தேர்ச்சாரதியாகக் கொண்டு தன்னந்தனியாகப் பார்த்தன் ஒட்டுமொத்த கௌரவச் சேனையையும் (கர்ணன் உட்பட) புறமுதுகிடச் செய்தான். அவனது அந்த வீரத்தைப் பார்த்துத்தான் உத்தரனுக்கும் வீரம் பொங்கியது. பாண்டவர் சார்பாக யுத்தம் செய்து அவனும் உயிர் நீத்தான். அர்ஜூனனால் கர்ணனைக் கொல்ல முடியவில்லை என்பது உண்மைதான், ஆனால் அவனுக்கு அந்த வாய்ப்பு அளிக்கப் படவில்லை என்பதே உண்மை. கண்ணனும் அண்ணனைக் கொன்றேன் என்று அழுத அர்ஜூனனுக்குச் சொன்னதெல்லாம் சமாதானம்தான்.

கர்ணனுக்கு ஒரு மனைவிதான் இருந்தார் என்பதிலும் எனக்குச் சிறு சந்தேகம் உண்டு.

ஆனால், இது மட்டுமே விஜயனுக்கு விஜயம் தரக் கூடியவையா? என்பதுதான் என் கேள்வி. நல்ல மாணவந்தான், ஆனால் ஆச்சாரியார் அவனுக்குச் சில சலுகைகளையும் அளித்தார். பல தடவை துரி துரோணரிடம் நீங்கள் பார்த்தனுக்கு வித்தைகளை எங்களை விட அதிகமாகக் கற்றுக் கொடுத்தீர்கள் என்று குறை சொல்லி இருக்கிறான். ஒரு ஆசிரியர் அவ்வாறு இருந்திருக்கக் கூடாது.

பார்த்தனின் இயல்பான அகங்காரம்தான் அவனது பல தோல்விகளுக்குக் காரணம். சிவனிடம் பணிந்த அவன் வேறு எவனிடத்தும் தன் வித்தை குறித்த கர்வத்தை வெளியிடத் தயங்கியதில்லை. கர்ணனுக்குச் சூரியன் சக்தி ஆயுதத்தைக் கொடுத்தால் இந்திரனும் தன் பங்குக்கு பார்த்தனுக்குத் தன் அம்சமாக ஒரு ஆயுதத்தைக் கொடுத்தான்.

ஆனால் மொத்தத்தில் பூமித்தாயின் வேண்டுதல் நிறைவேறியது. மக்கள் கூட்டம் பாரதத்தால் பாரதத்தில் ஒழிந்தது.

gragavan
21-12-2005, 08:55 AM
அடேங்கப்பா! பெருச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சா போட்டதும் பெஞ்சமின் பயந்துட்டாரு. பெஞ்சமின், இப்ப பாருங்க. பரஞ்சோதியின் வாதங்களுக்கு வாதம் வரப் போவதை.

மகாபாரதத்தில் அர்ஜீனன்.

மகாபாரதம் நம்முடைய இதிகாசங்களில் ஒன்று, அதுவும் இன்றியமையாத, ஈடு இணை இல்லாத காவியம்.

மகாபாரத்தில் சொல்லப்படாத விசயங்களே இல்லை என்றே சொல்லலாம், மகாபாரத்தை மட்டுமெ நன்கு புரிந்து கொண்டால், வாழ்வில் அனைத்து கட்டங்களிலும் திறம்பட செயல்பட்டு இந்த மனித வாழ்க்கையை நடத்தலாம்,

மகாபாரத்தில் எத்தனையோ கதாபாத்திரங்கள், ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்தவை, பீஷ்மராக இருக்கட்டும், விதுராக இருக்கட்டும், சிகண்டியாக இருக்கட்டும், அஸ்வத்தாமாவாக இருக்கட்டும், ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வகையில் சிறந்தவர்கள்.

என்னைப் பொருத்தவரை அர்ஜீனன் மிகச் சிறந்தவர், அவரது மொத்த வாழ்க்கையையும் பார்க்க வேண்டும், அனைத்திலும் சிறந்து விளங்குபவர் அர்ஜீனன் தான்.

நான் சொல்லும் சில விசய்ங்களை விமர்சத்திற்கு அப்பால் வைத்து விட வேண்டும்.

முதலில் பிறப்பு, அர்ஜீனனின் தந்தை இந்திரன், இந்திரன் யார் தேவர்களின் தலைவன் (இந்திரனைப்பற்றிய விமர்சனம் தேவையில்லை), தேவர்களின் தலைவனான இந்திரனின் மகன் அர்ஜீனன், ஆக பிறப்பாலேயே உயர்ந்து நிற்கிறார். இன்றைய அரசியல்வாதிகளின் மகன் மாதிரி பிறப்பை மட்டுமே வைத்து பதவியை பிடித்தவர் அல்ல அர்ஜீனன்.
கர்ணனின் தந்தை சூரியன். சூரியனே உலகிற்கு ஒரு எனர்ஜி சோர்ஸ். சூரியன் இல்லைன்னா என்னாகும். இப்பத் தெரியும் கர்ணனோட அப்பா யாருன்னு. இந்திரன் மேல நூறு குற்றம். சூரியன் மேல ஒரு குற்றம் சொல்ல முடியுமா?

தாய் குந்திக்கு நல்ல மகன் அர்ஜீனன், எல்லா தாய்களுக்கும் தன் மகனை சான்றோன் என்று கேட்டால் அதை விட சிறந்தது உலகில் எதுவும் இல்லை. அத்தகைய சந்தோசத்தை கொடுத்தவரில் ஒருவர் அர்ஜீனன், வில்லுக்கு விஜயன் என்ற பெயரும், உலகமே வியக்கும் வகையில் வெல்ல யாருமில்லாத ஒரே வீரன் என்ற பெயர் பெற்றவர். ஆக மகனாக பிறந்ததற்கு தாய்க்கு நல்ல மகனாக இருந்தவர் அர்ஜீனன்.
நல்ல தாய்க்கு நல்ல மகனா அர்ஜுனன் இருந்ததில் வியப்பில்லை. ஆனா ஆத்துல தூக்கிப் போட்ட பேயா இருந்தவளானாலும் அத்தன வருசத்துக்கு அப்புறம் வந்ததும் பாசத்தோட ஏத்துக்கிட்டானே கர்ணன். கேட்டதெல்லாம் கொடுத்தானே. பதிலுக்கு என்ன வேணுமுன்னு கேட்டதும் "போர் வரத்தான் போகுது. ஒன்னு நான். இல்லைன்னா அர்ச்சுனன். அப்படி ஏதாவது ஆச்சுன்னா என்னைய மடியில வெச்சு மகனேன்னு கூப்பிட்டா போதும்"னு சொன்னானே. இப்படி ஒரு மகன் கிடைக்க என்ன தவம் செஞ்சிருக்கனும். கெடைச்சும் பாசம் காட்ட முடியாமப் போக என்ன பாவம் செஞ்சாளோ குந்தி!

அடுத்த பருவம் மாணவப்பருவம், மாணவப்பருவத்தில் கற்றுக் கொடுத்த ஆசானுக்கு எது சந்தோசம் கொடுக்கும், தான் கற்று கொடுத்த வித்தைகளை சரியாக கற்றவனைக் கண்டால் ஆசானுக்கு மிக மிக பிடிக்கும். குருவை மிஞ்சிய சிஷ்யன் என்றால் பிடிக்கும்.

துரோணர் தன்னுடைய மாணவர்களில் யாருக்கு அனைத்தும் சொல்லிக் கொடுத்தார் என்று கேட்டால் அர்ஜீனனுக்கே, தன் மகனுக்கு தெரியாத வித்தைகளை கூட அர்ஜீனன் ஒருவருக்கே கற்று கொடுத்தார், அவர் கற்று கொடுத்த அத்தனையும் சிரத்தையாக படித்த ஒரே மாணவர் அர்ஜீனன்.
கர்ணனுடைய ஆசான் பரசுராமர். பத்து அவதாரங்களில் ஒரு அவதாரம். அவ்வளவு பெரியவரிடம் பாடம் படிக்கும் தகுதி கூட அர்ச்சுனனுக்கு இல்லை. துரோணர் போன்ற மானிடர்களிடம் பாடம் படிக்குத் தகுதிதான் அர்ச்சுனனுக்கு இருந்தது. அதிலும் அர்ச்சுனனை விட சிறந்த ஏகலைவன் வந்ததும் அவன் கை விரலைக் கேட்டாரே துரோணர். அவரா நல்ல ஆசான்? அவரிடம் பாடம் படிப்பதும் நல்ல பெயர் எடுப்பதும் பெருமையா என்ன?

அவருடைய மகனுக்குச் சொல்லித் தராததை அர்ச்சுனனுக்குச் சொன்னார்னு சொல்றாங்க. அது தேவையேயில்லை. அஸ்வத்தாமன் அழியாத வரம் பெற்றவன். அவனுக்கு இறப்பே கிடையாது. இன்றைக்கும் இமயத்தில் தவம் செய்வதாகச் சொல்லப் படுகின்றவர். அதைப் பற்றி துரோணருக்கு நல்லாவே தெரியும். அப்புறம் என்னத்துக்குக் கத்துக் கொடுக்கனும்?

துரோணரின் சபதத்தை நிறைவேற்றியவர் யார்? அர்ஜீனன் தான், மத்த அனைவரும் துருபனும் சண்டையிட்டு மண்ணைக் கவ்வ, இறுதியில் அர்ஜீனனே அவரை வென்று, தேர்க்காலில் கட்டியிழுத்து வந்தார். குருவின் சபதத்தை நிறைவேற்றினார்.
துருபதனை கர்ணன் கையாலே பந்தாடும் வலிமை பெற்றவர். அர்ஜுனனால் கர்ணனை ஒன்றும் செய்ய முடியாது என்பது வியாசரே ஒத்துக் கொண்ட ஒன்று. அப்படியிருக்க துருபதனை வெல்வது கர்ணனுக்குப் பெருமையே இல்லை. புழுவைத் தேய்த்த வீரனே! கொசுவை நசுக்கிய நாயகனே! என்றெல்லாம் சொன்னால் அது புகழ்ச்சியா?

அதன் பின்னரே துருபன் யாகம் செய்து அர்ஜீனனை மணக்க ஒரு மகள் கிடைக்கப் பெற்றார். ஆக திரவுபதை பிறந்தது அர்ஜீனன் கையால் மணமாலை வாங்கவே.
அப்புறம் ஏம்ப்பு சுயம்வரம் வெச்சாங்க? நேரா அர்ச்சுனனைத் தேடிப் போயி பொண்ணு குடுக்க வேண்டியதுதானே!

அது மாதிரியே துரோணர் இறுதி போரில் தன் மாணவனின் திறமையை கண்டு வியந்து நிற்கிறார். ஆக ஒரு ஆசானுக்கு மிக நல்ல மாணவனாக திகழ்கிறார்.

அர்ஜீனனின் வீர சாகசங்கள் :

அர்ஜீனனின் வீர சாகசங்கள் எண்ணற்றவை, கர்ணன் எத்தனையோ முறை அர்ஜீனனிடம் தோற்று ஓடியிருக்கிறார்.

ஒருமுறை துரியோதனன், கர்ணன் மற்றும் பலர் காந்தவர்களிடம் சண்டை போட்டு மயங்கி விழ, அந்த காந்தவர்களிடம் சண்டை போட்டு உயிரோடு மீட்டது அர்ஜீனன்.

ஒரு ஆண்டு தலைமறைவாக இருக்க, அதை தெரிந்து துரியோதனன், கர்ணன் போன்றோர் சண்டைக்கு வர பெண் வேடமிட்டிருந்த அர்ஜீனன் அவர்களை தோற்கடித்து ஓட வைத்தார்.

வேடன் வேடமிட்டு வந்த சிவபெருமானை ஒத்தைக்கு ஒத்தையாக நின்று சண்டையிட்டவர்.

மகாபாரதப்போரில் எண்ணற்ற வீரர்களை புறமுதுகு காட்டி ஓடச் செய்தவர். கர்ணனை பலமுறை தன் அம்புகளால் தாக்கி மயங்கச் செய்தவர்.
அதே போல கர்ணனின் அம்புகளில் அர்ச்சுனனும் அடி வாங்கியிருக்கின்றான். ஆனால் பாருங்கள். ஒவ்வொரு முறையும் அந்த மாயாவிக் கண்ணன் அர்ச்சுனனைக் காப்பாற்றி இருக்கின்றான்.
ஒரு நாள் கர்ணனோடு சண்டை முடிந்ததும் கண்ணன் அர்ச்சுனனை தேரை விட்டு இறங்கச் சொன்னான். தேர்ச்சாரதிதானே முதலில் இறங்க வேண்டும் என்று நினைத்தான் அர்ச்சுனன். தன்னைப் பெரியவனாக நினைத்துக் கொண்டான். ஆனால் கிருஷ்ணர் அவனை வற்புறுத்தவும் வேறுவழியின்றி இறங்கினான். ஆனால் கிருஷ்ணர் இறங்கியதும் அந்தத் தேர் தீப்பிடித்தது. அப்பொழுது கிருஷ்ணர் இப்படிச் சொன்னார். "அர்ச்சுனா! கர்ணனோடு நீ சண்டையிட்டாய். அப்பொழுது அவனது பாணங்களில் ஒன்றும் உன் மீது விழாமல் காத்திருந்தேன். ஆனாலும் ஒன்று தேரில் விழுந்தது. நான் இருந்ததால் தேர் எரியவில்லை. அதனால் உன்னை முதலில் இறங்கச் சொன்னேன். நீ என்னடாவென்றால் உன்னைப் பற்றி ரொம்பவே பெருமை கொள்கின்றாயே!"

இப்படி கடவுளின் காப்பாற்றல் என்ற ஒன்றை மட்டுமே வைத்துக் கொண்டு பிழைத்தவன் அர்ச்சுனன். ஆனால் இந்திரன், கண்ணன் என்று அத்தனை கடவுளர்களுக்கும் தானம் கொடுத்தவன் கர்ணன். கண்ணன் காப்பாற்றாமல் இருந்திருந்தால் அர்ச்சுனன் என்றைக்கோ பரலோகம் போயிருப்பான். கடவுளின் கைப்பாவையாகிப் போனதால் பிழைத்தான். அவனையா மாவீரன் கர்ணனோடு ஒப்பிடுவது?

பீஷ்மர் மற்றும் பல மாவீரர்கள் அனைவரின் மரணத்திற்கு அடிகோலிட்டவர் அர்ஜீனன். பீஷ்மர் கீழே விழுந்த போது அர்ஜீனன் மட்டுமே அவரின் தேவை என்ன என்பதை உணர்ந்து செய்தார். பீஷ்மரும் நான் அடிப்பட்டு விழக்காரணம் சிகண்டி அல்ல அர்ஜீனன் என்றே சொன்னார்.
பீஷ்மர் மேல் பட்ட அம்பு வேண்டுமென்றால் அர்ச்சுனனோடதாக இருக்கலாம். ஆனால் பீஷ்மர் பதிலுக்கு அம்பு போடாமல் இருந்ததால்தான் அர்ச்சுனன் அம்பு அவரை கீழே தள்ளியது. அப்படி பதிலம்பு போடததற்குச் சிகண்டியே காரணம். பீஷ்மர் நினைத்திருந்தால் அர்சுனனைக் கொன்றிருக்கலாம். ஆனால் அவர் அதை விரும்பாததால் செய்யவில்லை. இதுவும் பாரதம் படித்தவர்களுக்குத் தெரியும்.

தன் மகன் அபிமன்யூவை சதி செய்து கொன்ற ஜெயத்ரதனை சபதமிட்டு அதே போல் செய்து முடித்தவர்.

பாரதப்போரில் அர்ஜீனன் ஒருவரே மாபெரும் வெற்றி வீரர்.
அடேங்கப்பா! ஜெயத்ரதனை எப்படிக் கொன்றான் என்று ஊருக்கே தெரியுமே. கண்ணன் மட்டும் சூரியனை மறைக்காமல் இருந்திருந்தால் அன்றைக்கே தீக்குளித்திருக்க வேண்டியவன் அர்ச்சுனன்.

அர்ச்சுனன் + கண்ணன் = வெற்றி உண்மைதான். ஆனால் அர்ச்சுனன் = 0 என்பதும் உண்மைதான்.

அர்ஜீனனின் மற்ற சிறப்புகள்:

மகாபாரதப் போர் தொடங்கியதும், அர்ஜீனன் போர்களத்திற்கு செல்கிறார், அங்கே எதிரோ போரிட வந்த உற்றார், உறவினர்கள், ஆசான்களை கண்டு கண் கலங்குகிறார், அங்கே தான் ஒரு சிறந்த மனிதராக தெரிகிறார்.

தன் ரத்த பந்தங்களையும், பிரியமானவர்களையும் கொன்று குவித்தா தனக்கு ராஜ்ஜியம் வேண்டும்,அது தேவையில்லை என்று கூறி வில்லை கீழே போட்டு விடுகிறார். இது போன்ற எண்ணம் வேற யாருக்குமே வரவில்லையே.
போட்ட வில்லை போட்டுப் போயிருந்தால் அவன் நல்ல மனதைப் பாராட்டலாம். ஆனால் என்னவாயிற்று? குழப்பவாதி அர்ச்சுனன். அதான் குழம்பி நடுங்கிப் போனான். கடைசியில் கண்ணன் அர்ச்சுனனின் தவறான குழப்பங்கள் எல்லாவற்றையும் எடுத்துச் சொல்லியும் உபதேசித்தும் போருக்குத் தயார் படுத்த வேண்டியிருந்தது. அந்தப் பக்குவம் மற்ற அனைவருக்குமே இருந்தது. ஆகையால் குழம்பாமல் எடுத்த எடுப்பிலேயே பக்குவ நிலையில் போருக்குத் தயாராக இருந்தார்கள் என்றுதான் கொள்ள வேண்டும்.

அர்ஜீனனாலேயே பகவத்கீதை என்ற அரும்பெரும் காவியம் கிடைத்தது.

மேலும் கடவுளின் அவதாரமான கண்ணன், சிவபெருமான், அனுமான் போன்ற அத்தனை பேரும் அர்ஜீனனையே விரும்பினார்கள்.
ஆனால் தருமதேவதை கர்ணனை விரும்பியது. இத்தனைக்கும் தருமதேவதை யுதிஷ்டிரனின் தந்தை வேறு. இருந்தாலும் தருமம் இருக்குமிடம் கர்ணனிடம் மட்டுமே என்பதால் தருமதேவதையின் அன்பிற்கு ஆளானான்.

ஒரு ஆண்டு தலைமறைவாக இருக்க வேண்டிய காலத்தில் யாருமே ஏற்க தயங்கும் பெண்/அலி வேடமிட்டவர்.
அது சாபத்தால் வந்தது. அதைச் சமயத்தில் பயன்படுத்திக் கொண்ட சமயோகித புத்தியைப் பாராட்த்தான் வேண்டும்.

பின்னர் அவர் அர்ஜீனன் என்று தெரிந்தப் பின்பு மணம் முடிக்க வந்த உத்திரையை தான் குருவாக இருந்தவன், ஆக நான் மணப்பது தவறு என்று சொல்லி தன் மகனுக்கு திருமணம் செய்து வைத்தவர்.
ஏற்கனவே ஊரூருக்கு இருக்கு. இதுல இது வேறையான்னு நெனச்சிருந்திருக்கலாம்.

வெற்றி வீரர் ஜெய் அனுமான் அர்ஜீனனின் தேர்கொடியில் வந்து அமர்ந்தார்.
அப்படி அவர் உக்காரதுக்கு முன்னாடி அவருகிட்ட வாயக் குடுத்து வாங்கிக் கட்டிக் கிட்ட கதை தெரியாதா?

போருக்கு முன்பு களப்பலி கொடுக்க தான் முன் வந்தார், அர்ஜீனன் இல்லை என்றால் போரே இல்லை என்பதால் தன் மகன் அரவானின் விருப்பப்படி பலியிட சம்மதம் தெரிவித்தார்.
பின்னே பதவி வேண்டுமே. மகனைக் கொடுத்தாவது பதவியைப் பிடிக்க ஆசைப்பட்டிருக்கின்றான். இதில் பெருமை வேறு.

எத்தனையோ பெண்களை மணந்தாலும், அவர்களை எல்லாம் அர்ஜீனனை விரும்பியே திருமணம் செய்துக் கொண்டார்கள். ஒரு தாரம் இருந்தாலே தலையை பிய்த்துக் கொள்ளுபவர்களிடத்த்தில் பல தாரமிருந்தும் பிரச்சனை இல்லாமல் இருந்தவர். கர்ப்பக்காலத்தில் மனைவியோடு இருந்து, அவர்கலின் விருப்பம் என்ன என்பதை பார்த்துக் கொண்டவர், அதற்கு அபிமன்யூ சாட்சி. அடக்கடவுளே! அபிமன்யுவுக்கு அரைகுறையாச் சொல்லிக் கொடுத்தது தெரியாதா? அதன் விளைவு தெரியாதா? தன்னுடைய மகனைப் பின்னால் இருந்து கொன்றார்கள் என்று கூவி விட்டு, கர்ணன் மகனைப் பின்னால் இருந்து கொன்றவனே இந்த வீரதீரன். ஊருக்கு ஒரு நியாயம். தனக்கொரு நியாயமா?

இப்படி பல அரிய குணங்களையும் யாருமே வெல்ல முடியாத வீரமும் கொண்ட மாவீரன் அர்ஜீனனே மகாபாரத்தில் மிகச் சிறந்தவர் என்று சொல்லிக் கொண்டு சோடா குடிக்க போகிறேன்.

போகும் முன்பு, உங்க குழந்தைகளுக்கு மகாபாரதக்கதை சொல்லும் போது அவர்கள் அர்ஜீனனை போல் வீரமானவனாக, ஆசானுக்கு பிடித்தவனாக, பெரியவர்களை மதிப்பவனாக, வெற்றி நாயகனாக இருக்கவே சொல்லுங்க. துரியோதனன், கர்ணன் போன்றோரை சொல்லி அவர்களின் வாழ்க்கைக்கு ஆப்பு வைத்திடாதீங்க.

அட ஆண்டவா! இப்படி அரிய குணங்கள் யாருக்கும் வேண்டாம். அப்புறம் உங்க வீட்டுப் பசங்களும் தூங்குற பொண்ணுக்குத் தாலி கட்டுவாங்க. இதையெல்லாம் நான் ஏன் சொல்றேன்னா......சோடா குடிக்கப் போனவங்க திரும்பி வரப் பயப்படனும். உண்மையை மறைக்க முடியாதுன்னு அவங்களுக்குத் தெரியனும். அதுக்குதான்.

pradeepkt
21-12-2005, 09:01 AM
ஒரு நாள் கர்ணனோடு சண்டை முடிந்ததும் கண்ணன் அர்ச்சுனனை தேரை விட்டு இறங்கச் சொன்னான். தேர்ச்சாரதிதானே முதலில் இறங்க வேண்டும் என்று நினைத்தான் அர்ச்சுனன். தன்னைப் பெரியவனாக நினைத்துக் கொண்டான். ஆனால் கிருஷ்ணர் அவனை வற்புறுத்தவும் வேறுவழியின்றி இறங்கினான். ஆனால் கிருஷ்ணர் இறங்கியதும் அந்தத் தேர் தீப்பிடித்தது. அப்பொழுது கிருஷ்ணர் இப்படிச் சொன்னார். "அர்ச்சுனா! கர்ணனோடு நீ சண்டையிட்டாய். அப்பொழுது அவனது பாணங்களில் ஒன்றும் உன் மீது விழாமல் காத்திருந்தேன். ஆனாலும் ஒன்று தேரில் விழுந்தது. நான் இருந்ததால் தேர் எரியவில்லை. அதனால் உன்னை முதலில் இறங்கச் சொன்னேன். நீ என்னடாவென்றால் உன்னைப் பற்றி ரொம்பவே பெருமை கொள்கின்றாயே!"

ஐயா, நல்லாப் படிச்சுட்டு வாங்க சாமி... வேணுமின்னா இன்னும் ரெண்டு சோடா கேட்டு வாங்கிக் குடிங்க :)
அது கர்ணன் மட்டும் போட்ட அம்பினால இல்லை... எத்தனையோ பேரு போட்ட அம்பு, பாரதப் போரே முடிஞ்சப்புறம்தான் இது நடந்துச்சு. உடனே குப்புனு அப்படியே மாத்திப் போடுறீங்க...

pradeepkt
21-12-2005, 09:06 AM
அடேங்கப்பா! ஜெயத்ரதனை எப்படிக் கொன்றான் என்று ஊருக்கே தெரியுமே. கண்ணன் மட்டும் சூரியனை மறைக்காமல் இருந்திருந்தால் அன்றைக்கே தீக்குளித்திருக்க வேண்டியவன் அர்ச்சுனன்.

அர்ச்சுனன் + கண்ணன் = வெற்றி உண்மைதான். ஆனால் அர்ச்சுனன் = 0 என்பதும் உண்மைதான்.

அடேயப்பா... ஜயத்ரதன் என்னா ஒரு நியாயவா (வியா)தி....
குழந்தையை அநியாயமாகக் கொன்ற கூட்டத்தில் அவனுக்குப் பெரும் பங்கு உண்டு.
அந்தக் கூட்டத்திலும் குழந்தையால் தோற்கடிக்கப் பட்டுப் பின் மற்றோருடன் சேர்ந்து கொன்றவனே கர்ணன்... அவரு வில்லாளி விஜயனை அப்படியே வென்றிருப்பாராக்கும்....

கடவுள்கிட்டயே பாடம் படிச்சவரு கர்ணன், உண்மைதான்யா... யாரு இல்லைன்னது

பாரதத்தில எத்தனை தடவை கர்ணன் வென்றிருக்கான், எத்தனை தடவை அர்ஜூனன் வென்றிருக்கான்னு பாருங்க. கடவுள்கிட்ட வித்தை கத்துக்கிட்டவனை ஆஃப்டரால் சாதாரண மானிடன்கிட்ட வித்தை கற்றவன் ஓட ஓட விரட்டிருக்கான்னு உங்களுக்கே தெரியவரும். இந்தக் கூத்தில நீங்க எப்படி அர்ஜூனன் = 0ன்னு சொன்னீங்கன்னுதான் தெரியலை. நாந்தான் விராட தேசத்துப் போரை வெலாவாரியா வெளக்கீருக்கேனே... இந்த மதிப்பீட்டை வச்சிப் பாத்தீங்கன்னா, கர்ணன் = -1 :)

ஆனாலும் பாருங்க அர்ஜூனந்தான் பாரதத்தில சிறந்தவன்னு எனக்குச் சொல்ல வரல்லையே :D

பென்ஸ்
21-12-2005, 09:06 AM
ஆஆ... நான் பேசாம.. கர்ணனுக்கு ஓட்டு போட்டிருந்திருக்கலாம்.... ராகவன் "மகாபாரத்தை" கரைத்து குடித்திருக்கிறிரோ????

பாவம்... பரம்ஸ், சோடா கடையிலையே செட்டில் ஆயிட்டாபிலை போல!!!!

பிரதிப்பு... பாவம் ராகவன் கொடுத்து பதிவில் மயங்கியவர்.. நாலு நாளைக்கு எழும்ப மாட்டார்...

pradeepkt
21-12-2005, 09:09 AM
அடக்கடவுளே! அபிமன்யுவுக்கு அரைகுறையாச் சொல்லிக் கொடுத்தது தெரியாதா? அதன் விளைவு தெரியாதா? தன்னுடைய மகனைப் பின்னால் இருந்து கொன்றார்கள் என்று கூவி விட்டு, கர்ணன் மகனைப் பின்னால் இருந்து கொன்றவனே இந்த வீரதீரன். ஊருக்கு ஒரு நியாயம். தனக்கொரு நியாயமா?

ஐயா, கர்ணன் மகனைப் பார்த்தன் பின்னாலிருந்து கொன்றதாக எப்படிச் சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. கர்ணன் படத்தில் அப்படிக் காட்டியிருந்தால் தவறு என்றே நினைக்கிறேன்.
வியாசர் விருந்து வாங்க வேண்டிய நேரம் வந்திருச்சு :D

pradeepkt
21-12-2005, 09:11 AM
ஆஆ... நான் பேசாம.. கர்ணனுக்கு ஓட்டு போட்டிருந்திருக்கலாம்.... ராகவன் "மகாபாரத்தை" கரைத்து குடித்திருக்கிறிரோ????

பாவம்... பரம்ஸ், சோடா கடையிலையே செட்டில் ஆயிட்டாபிலை போல!!!!

பிரதிப்பு... பாவம் ராகவன் கொடுத்து பதிவில் மயங்கியவர்.. நாலு நாளைக்கு எழும்ப மாட்டார்...
யப்ப்பு
அப்படியே நம்ம பதிலையும் படிச்சிட்டு நேரா சோடா பாக்டரிக்கே நீங்களும் ராகவனைக் கூட்டிக்கிட்டுப் போவலாம்.
நான் இன்னும் அர்ஜூனனைப் பத்தி ரொம்பச் சொல்லலை. ஏன்னா அவன் மகாபாரதத்தில் சிறந்தவனில்லை.

நீங்க துரியைப் பத்திப் பேசுங்க சாமி :D... ஜிஞ்சாச் சத்தம் தாங்கலை :D :D :D

pradeepkt
21-12-2005, 09:14 AM
அப்படி அவர் உக்காரதுக்கு முன்னாடி அவருகிட்ட வாயக் குடுத்து வாங்கிக் கட்டிக் கிட்ட கதை தெரியாதா?

ஐயா,
அங்கே வாயைக் குடுத்து வாங்கிக் கட்டிக்கிட்டவன் பீமன், அர்ஜூனன் இல்லைன்னு நினைக்கிறேன். :D
பீமன் அவரு வாலைத் தூக்க முடியாம கஷ்டப்பட்டு, அவரு அப்புறம் தம்பின்னு மன்னிக்க, இவன் நம்ம தம்பி கொடியில நீங்க ஒக்காரணுமின்னு சொன்னான்னு நினைக்கிறேன்

pradeepkt
21-12-2005, 09:15 AM
ஏற்கனவே ஊரூருக்கு இருக்கு. இதுல இது வேறையான்னு நெனச்சிருந்திருக்கலாம்.

ஆமாய்யா கர்ணன் மகாபாதகமா எதைச் செஞ்சாலும் செய்யலைன்னாலும் அவன் நல்ல நோக்கத்திலதான் செஞ்சிருப்பான், ஆனா அர்ஜூனன் நிஜமாவே ஒரு நல்ல நோக்கத்தில எதைச் செஞ்சாலும் அதுக்கு ஒரு உள்குத்து இல்லாம இருக்காது... என்னா நியாயம்யா இது? :D

pradeepkt
21-12-2005, 09:17 AM
இப்படி கடவுளின் காப்பாற்றல் என்ற ஒன்றை மட்டுமே வைத்துக் கொண்டு பிழைத்தவன் அர்ச்சுனன். ஆனால் இந்திரன், கண்ணன் என்று அத்தனை கடவுளர்களுக்கும் தானம் கொடுத்தவன் கர்ணன். கண்ணன் காப்பாற்றாமல் இருந்திருந்தால் அர்ச்சுனன் என்றைக்கோ பரலோகம் போயிருப்பான். கடவுளின் கைப்பாவையாகிப் போனதால் பிழைத்தான். அவனையா மாவீரன் கர்ணனோடு ஒப்பிடுவது?

இதையே ஒரு வாதமா வச்சிக்கிட்டாலும், யாரைய்யா கடவுள் காப்பாத்துவாரு... நல்லவனையா கெட்டவனையா? என்னமோ போங்க, ரொம்ப உணர்ச்சிவசப் படுறீங்க :D

pradeepkt
21-12-2005, 09:21 AM
போட்ட வில்லை போட்டுப் போயிருந்தால் அவன் நல்ல மனதைப் பாராட்டலாம். ஆனால் என்னவாயிற்று? குழப்பவாதி அர்ச்சுனன். அதான் குழம்பி நடுங்கிப் போனான். கடைசியில் கண்ணன் அர்ச்சுனனின் தவறான குழப்பங்கள் எல்லாவற்றையும் எடுத்துச் சொல்லியும் உபதேசித்தும் போருக்குத் தயார் படுத்த வேண்டியிருந்தது. அந்தப் பக்குவம் மற்ற அனைவருக்குமே இருந்தது. ஆகையால் குழம்பாமல் எடுத்த எடுப்பிலேயே பக்குவ நிலையில் போருக்குத் தயாராக இருந்தார்கள் என்றுதான் கொள்ள வேண்டும்.

என்ன அருமையான வாதம்யா இது? கீதை உபதேசிக்கப் படுபவருக்கு ஞானம் தரும் காவியம். நீங்க சொல்றது படி மத்த எல்லாரும் அந்த ஞானத்தை அடைஞ்சிருந்தாங்க ஆனா அர்ஜூனன் மட்டும் ஞான சூன்யமா இருந்தான், இல்ல? சூப்பரப்பு :D

அண்ணன் தம்பிகளுக்குத் தம்பிடி இடம் கூடக் கிடையாதுன்னு பேராசை பிடிச்சவன், செஞ்சோத்துக்காக அண்ணன் தம்பியக் கொல்லத் தயாரானவன், அதே சோத்துக்காக மாணவனைக் கொல்லத் தயாரானவர், பேரன்களைக் கொல்லத் தயாரானவர் இவங்க எல்லாரும் ஞானவான் ஆனால் இதன் உண்மையான நோக்கத்தை கடவுளிடம் உபதேசம் பெற்று உணர்ந்தவன் ஞான்சூன்யம் - அடடா, மெய் சிலிர்க்குதுங்கோ! :D

pradeepkt
21-12-2005, 09:25 AM
பீஷ்மர் மேல் பட்ட அம்பு வேண்டுமென்றால் அர்ச்சுனனோடதாக இருக்கலாம். ஆனால் பீஷ்மர் பதிலுக்கு அம்பு போடாமல் இருந்ததால்தான் அர்ச்சுனன் அம்பு அவரை கீழே தள்ளியது. அப்படி பதிலம்பு போடததற்குச் சிகண்டியே காரணம். பீஷ்மர் நினைத்திருந்தால் அர்சுனனைக் கொன்றிருக்கலாம். ஆனால் அவர் அதை விரும்பாததால் செய்யவில்லை. இதுவும் பாரதம் படித்தவர்களுக்குத் தெரியும்.

உண்மை. பார்த்தன் அம்புகள்தான் பிதாமகர் மேல் பாய்ந்தன. ஏனென்றால் அவரே இதைத்தான் விரும்பினார். இதுவும் பாரதம் படித்தவர்களுக்குத் தெரியும். பாரதத்தில் பல இடங்களில் இது போல் கொல்ல வாய்ப்பு இருந்தமை எல்லாம் வருகிறது. அர்ஜூனனும் விராடப் போரில் அனைவரையும் கொல்ல வாய்ப்பிருந்தும் கடைசியாக "மோகினி" அஸ்திரத்தை விட்டு அனைவரையும் மயங்கச் செய்து மட்டுமே கவர்ந்து செல்லப்பட்ட ஆநிரைகளை மீட்டு வருகிறான்.

எனவே என்னவோ போனால் போகிறதென்று பல பேர் போட்ட உயிர்ப்பிச்சையில் விஜயன் வாழ்ந்தது போலும், கர்ணன் முதலில் இருந்தே வீரனாக இருந்தது போலும் கற்பிக்காதீர்கள். பீமன், அபிமன்யூ எனச் சிலரிடம் கர்ணன் உயிர் போகுமளவு தோற்றிருக்கிறான். அவர்களும் அர்ஜூனன் கொல்ல வேண்டியவன் என்று அவனை விட்டு வைத்திருக்கின்றனர்.

பரஞ்சோதி
21-12-2005, 09:26 AM
இராகவன் அண்ணா,

நான் சொன்ன ஒவ்வொன்றிற்கும் கேலியாக சொல்லியிருப்பது படிக்க நல்லாவே இருக்குது, ஆனால் உண்மைகளை நீங்க மறைக்கப் பார்க்கிறீங்க.

அடுத்து கர்ணனின் வண்டவாளத்தத தண்டவாளத்தில் ஏத்துகிறேன்.

பரஞ்சோதி
21-12-2005, 09:27 AM
மகாபாரதத்தில் அனைத்து கதாபாத்திரங்களும் கடும் விமர்சனத்திற்குரியவை, ஆக எப்படி வேண்டும் என்றாலும் விவாதம் செய்யலாம்.

ஆக இராகவன் சொல்வதை படித்து அர்ஜீனனன் அவ்வளவு தான் என்று நினைத்தால் உங்களுக்கு தெரிந்த பாரதம் அவ்வளவு தான்.

gragavan
21-12-2005, 09:27 AM
அடேயப்பா... ஜயத்ரதன் என்னா ஒரு நியாயவா (வியா)தி....
குழந்தையை அநியாயமாகக் கொன்ற கூட்டத்தில் அவனுக்குப் பெரும் பங்கு உண்டு.
அந்தக் கூட்டத்திலும் குழந்தையால் தோற்கடிக்கப் பட்டுப் பின் மற்றோருடன் சேர்ந்து கொன்றவனே கர்ணன்... அவரு வில்லாளி விஜயனை அப்படியே வென்றிருப்பாராக்கும்....

கடவுள்கிட்டயே பாடம் படிச்சவரு கர்ணன், உண்மைதான்யா... யாரு இல்லைன்னது

பாரதத்தில எத்தனை தடவை கர்ணன் வென்றிருக்கான், எத்தனை தடவை அர்ஜூனன் வென்றிருக்கான்னு பாருங்க. கடவுள்கிட்ட வித்தை கத்துக்கிட்டவனை ஆஃப்டரால் சாதாரண மானிடன்கிட்ட வித்தை கற்றவன் ஓட ஓட விரட்டிருக்கான்னு உங்களுக்கே தெரியவரும். இந்தக் கூத்தில நீங்க எப்படி அர்ஜூனன் = 0ன்னு சொன்னீங்கன்னுதான் தெரியலை. நாந்தான் விராட தேசத்துப் போரை வெலாவாரியா வெளக்கீருக்கேனே... இந்த மதிப்பீட்டை வச்சிப் பாத்தீங்கன்னா, கர்ணன் = -1 :)

ஆனாலும் பாருங்க அர்ஜூனந்தான் பாரதத்தில சிறந்தவன்னு எனக்குச் சொல்ல வரல்லையே :Dஜயத்ரதன் செஞ்சது சரீன்னு சொல்லலை. ஆனால் எப்படிக் கொன்னான். போர் முடியப் போற நேரம் வரைக்கும் ஒன்னும் பண்ண முடியலைல்ல. கண்ணன் மட்டும் சூரியனை மறைக்கலைன்னா அன்னைக்கே அர்ச்சுனன் தீக்குளிச்சிருக்க வேண்டியதுதான்னு தெரியாதா? அதைத்தான் எடுத்துச் சொன்னேன். ஜயத்ரதன் ஏன் அப்படிச் செஞ்சாங்குறதுக்கும் ஒரு கதை இருக்கு. அது தெரியுமோ!

உண்மைதான். வீராடப் போரில் கர்ணன் தோற்றது உண்மைதான். கர்ணன் மட்டுமல்ல. அந்தப் போரில் கவுரவ சேனை தோற்றது உண்மைதான். அந்த ஒரு போரில்தான் அர்ச்சுனன் தன்னுடைய வீரத்தை முறையாகக் காட்டினான். அர்ச்சுனனின் வீரத்தைக் குறைத்து நானும் மதிப்பிட விரும்பவில்லை. அர்ச்சுனன் வீரனே. ஆனால் வீரமும் வெற்றியும் பெற்றவரே சிறந்தவர் என்று சொல்ல முடியாதே.

பாரதப் போர் என்று வரும் பொழுது, வீராடத்தில் வீழ்த்தி வென்ற அர்ச்சுனன் கொஞ்சம் குறைவாகத்தான் செய்தான் என்றே சொல்வேன். அந்த அளவிற்கு கண்ணன் புகுந்து விளையாடியிருக்கின்றார்.

கடவுள்கிட்ட வித்த கத்தவந்தான். ஆனா அத்தோட விட்டாங்களா? வித்தையோட சொத்தையா ஒரு சாபம் வேற. எப்பப்ப எல்லாம் ஒனக்குத் ரொம்பத் தேவையோ...அப்பப்ப எல்லாம் வித்த மறந்து போகுமாம். இத வெச்சுக்கிடும் இந்த அளவிற்குக் கலக்கீருக்கானே கர்ணன். அதைப் பாராட்ட வேண்டாமா?

தன்னுடைய தொடையை வண்டு துளைத்தாலும் தனது ஆசானின் தூக்கம் கெடக்கூடாதென்று நினைத்த கர்ணனா நல்ல சீடனாக நடந்து கொள்ளவில்லை? பிறப்பின் உண்மை அவனுக்கே தெரியாது. அதனால்தான் தேரோட்டி மகன் என்று சொல்லிச் சேர்ந்தான். அதில் அவன் குற்றம் என்ன இருக்க முடியும்?

pradeepkt
21-12-2005, 09:27 AM
பரம்ஸ் அண்ணா,
கர்ணன் சிறந்தவன் இல்லைங்கறதுக்கு நிறைய வச்சாச்சு...
அர்ஜூனன் எப்படின்னு பாப்போமா? :D

pradeepkt
21-12-2005, 09:30 AM
இந்தக் கூத்தைப் பார்த்தால் பேசாம அபிமன்யூவிற்கு ஓட்டுப் போட்டால் என்ன?

1. மகாவீரன்
2. மிகச் சிறிய வயதில் மகாரதன் என்ற பட்டத்தைப் பெற்றவன்
3. தந்தை சொல் மீறாதவன்
4. மற்றோர் மேல் சொல்லக் கூடிய கெட்ட பண்புகள் இல்லாதவன்
5. ஒரு பெண்டாட்டிக் காரன்

என்ன சொல்றீங்க?

gragavan
21-12-2005, 09:36 AM
ஐயா, நல்லாப் படிச்சுட்டு வாங்க சாமி... வேணுமின்னா இன்னும் ரெண்டு சோடா கேட்டு வாங்கிக் குடிங்க :)
அது கர்ணன் மட்டும் போட்ட அம்பினால இல்லை... எத்தனையோ பேரு போட்ட அம்பு, பாரதப் போரே முடிஞ்சப்புறம்தான் இது நடந்துச்சு. உடனே குப்புனு அப்படியே மாத்திப் போடுறீங்க...அப்படியா வரும். சரி. இத விடுங்க. நாகஸ்திரம் விட்டு அர்ச்சுனனைக் கொல்ல முடியும் பொழுது கண்ணன் காப்பாத்தித்தானே உயிர் பிழைச்சான் அர்ச்சுனன். அப்ப அர்ச்சுனனைக் கொல்லும் வலிமை அவன் கிட்ட இருந்திருக்குங்குறதும் உண்மைதானே.

அந்த வலிமை இல்லைன்னு குந்தி நம்பியிருந்தா, அர்ச்சுனனைத் தவிர யாரையும் கொல்லக் கூடாதுன்னு குந்தி வரம் வாங்குவாளா? அதுவும் அர்ச்சுனன் மேல நாகஸ்திரத்தை ஒரு தடவைக்கு மேல விடக்கூடாதுன்னும் வரம் வாங்குவாளா? ஆக குந்திக்கு கர்ணனின் பலம் தெரிந்தே இருக்கின்றது.

போரில் வெற்றியும் தோல்வியும் சகஜம். எந்தப் பின்னணியும் இல்லாமல் முன்னணிக்கு வந்தவன் கர்ணன் என்பதையும் மறக்கக் கூடாது. எல்லாரும் ஆப்பு வைத்தால்...கர்ணனுக்கு மட்டும் ஆப்பிலேயேதான் வாழ்வு இருந்திருக்கின்றது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். எல்லாம் எதிராகச் சென்ற பொழுது அத்தனையும் மீறி வந்த வல்லமை அவனுக்குத்தான் உரியது என்பதும் நினைவில் கொள்ள வேண்டும்.

பரஞ்சோதி
21-12-2005, 09:41 AM
அடேங்கப்பா! பெருச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சா போட்டதும் பெஞ்சமின் பயந்துட்டாரு. பெஞ்சமின், இப்ப பாருங்க. பரஞ்சோதியின் வாதங்களுக்கு வாதம் வரப் போவதை.

கர்ணனின் தந்தை சூரியன். சூரியனே உலகிற்கு ஒரு எனர்ஜி சோர்ஸ். சூரியன் இல்லைன்னா என்னாகும். இப்பத் தெரியும் கர்ணனோட அப்பா யாருன்னு. இந்திரன் மேல நூறு குற்றம். சூரியன் மேல ஒரு குற்றம் சொல்ல முடியுமா?

(ஆக மொத்தம் தந்தை தவறாக இருந்தாலும் மகன் சரியானவனாக இருப்பது தான் சிறந்தது, அதில் அர்ஜூனன் சிறந்து விளங்கியதே சிறப்பு)

நல்ல தாய்க்கு நல்ல மகனா அர்ஜுனன் இருந்ததில் வியப்பில்லை. ஆனா ஆத்துல தூக்கிப் போட்ட பேயா இருந்தவளானாலும் அத்தன வருசத்துக்கு அப்புறம் வந்ததும் பாசத்தோட ஏத்துக்கிட்டானே கர்ணன். கேட்டதெல்லாம் கொடுத்தானே. பதிலுக்கு என்ன வேணுமுன்னு கேட்டதும் "போர் வரத்தான் போகுது. ஒன்னு நான். இல்லைன்னா அர்ச்சுனன். அப்படி ஏதாவது ஆச்சுன்னா என்னைய மடியில வெச்சு மகனேன்னு கூப்பிட்டா போதும்"னு சொன்னானே. இப்படி ஒரு மகன் கிடைக்க என்ன தவம் செஞ்சிருக்கனும். கெடைச்சும் பாசம் காட்ட முடியாமப் போக என்ன பாவம் செஞ்சாளோ குந்தி!

(இதற்கு அப்புறம் பதில் சொல்கிறேன்)

[font=Latha][font=TheneeUni]
கர்ணனுடைய ஆசான் பரசுராமர். பத்து அவதாரங்களில் ஒரு அவதாரம். அவ்வளவு பெரியவரிடம் பாடம் படிக்கும் தகுதி கூட அர்ச்சுனனுக்கு இல்லை. துரோணர் போன்ற மானிடர்களிடம் பாடம் படிக்குத் தகுதிதான் அர்ச்சுனனுக்கு இருந்தது. அதிலும் அர்ச்சுனனை விட சிறந்த ஏகலைவன் வந்ததும் அவன் கை விரலைக் கேட்டாரே துரோணர். அவரா நல்ல ஆசான்? அவரிடம் பாடம் படிப்பதும் நல்ல பெயர் எடுப்பதும் பெருமையா என்ன?

(பரசுராமர் சத்திரியனுக்கு சொல்லிக் கொடுக்க மாட்டார், ஆக அங்கே அர்ஜூனன் வர வேண்டியது இல்லை, ஆனால் பொய் சொல்லி படித்தவன் எப்படி நல்ல மாணவனாக இருக்க முடியும், ஆசிரியரிடமே பொய், அதான் பரசுராமர் பெரிய ஆப்பாக வைத்தார், அவர் நினைத்தால் கர்ணனை சத்திரியன் என்று கொன்றிருக்கலாம்)

அவருடைய மகனுக்குச் சொல்லித் தராததை அர்ச்சுனனுக்குச் சொன்னார்னு சொல்றாங்க. அது தேவையேயில்லை. அஸ்வத்தாமன் அழியாத வரம் பெற்றவன். அவனுக்கு இறப்பே கிடையாது. இன்றைக்கும் இமயத்தில் தவம் செய்வதாகச் சொல்லப் படுகின்றவர். அதைப் பற்றி துரோணருக்கு நல்லாவே தெரியும். அப்புறம் என்னத்துக்குக் கத்துக் கொடுக்கனும்?

(எப்போவும் ஆசான் தனக்கு பிடித்தவருக்கு அதிக சொல்லிக் கொடுப்பதில் தவறில்லை, நல்ல முத்தாக தேர்வு செய்வது தானே ஆசிரியரின் வேலை)

[font=Latha][font=TheneeUni]
துருபதனை கர்ணன் கையாலே பந்தாடும் வலிமை பெற்றவர். அர்ஜுனனால் கர்ணனை ஒன்றும் செய்ய முடியாது என்பது வியாசரே ஒத்துக் கொண்ட ஒன்று. அப்படியிருக்க துருபதனை வெல்வது கர்ணனுக்குப் பெருமையே இல்லை. புழுவைத் தேய்த்த வீரனே! கொசுவை நசுக்கிய நாயகனே! என்றெல்லாம் சொன்னால் அது புகழ்ச்சியா?

(இதை சொன்னது, நான் ஆசிரியரின் சபதத்தை நிறைவேற்றிய சம்பவம், இதில் கர்ணனை இழுக்க தேவையில்லை, தன் ஆசையை நிறைவேற்றிய மாணவனுக்கு ஆசிரியர் அதிகம் சொல்லிக் கொடுப்பதில் தவறு இல்லை)

[font=Latha][font=TheneeUni]
அப்புறம் ஏம்ப்பு சுயம்வரம் வெச்சாங்க? நேரா அர்ச்சுனனைத் தேடிப் போயி பொண்ணு குடுக்க வேண்டியதுதானே!

(அர்ஜூனனை தேடி கண்டுபிடிக்கவே சுயம்வரம் வைத்தாங்க, எல்லோரும் இறந்து போயிட்டதாக நினைத்த போதும், துருபனும், திரவுபதையும் அர்ஜூனன் வருவான் என்று நம்பினார்கள், அதை கண்டுபிடிக்கவே சுயம்வரம் நடத்தினார்கள்)

[font=Latha][font=TheneeUni]
அதே போல கர்ணனின் அம்புகளில் அர்ச்சுனனும் அடி வாங்கியிருக்கின்றான். ஆனால் பாருங்கள். ஒவ்வொரு முறையும் அந்த மாயாவிக் கண்ணன் அர்ச்சுனனைக் காப்பாற்றி இருக்கின்றான்.
ஒரு நாள் கர்ணனோடு சண்டை முடிந்ததும் கண்ணன் அர்ச்சுனனை தேரை விட்டு இறங்கச் சொன்னான். தேர்ச்சாரதிதானே முதலில் இறங்க வேண்டும் என்று நினைத்தான் அர்ச்சுனன். தன்னைப் பெரியவனாக நினைத்துக் கொண்டான். ஆனால் கிருஷ்ணர் அவனை வற்புறுத்தவும் வேறுவழியின்றி இறங்கினான். ஆனால் கிருஷ்ணர் இறங்கியதும் அந்தத் தேர் தீப்பிடித்தது. அப்பொழுது கிருஷ்ணர் இப்படிச் சொன்னார். "அர்ச்சுனா! கர்ணனோடு நீ சண்டையிட்டாய். அப்பொழுது அவனது பாணங்களில் ஒன்றும் உன் மீது விழாமல் காத்திருந்தேன். ஆனாலும் ஒன்று தேரில் விழுந்தது. நான் இருந்ததால் தேர் எரியவில்லை. அதனால் உன்னை முதலில் இறங்கச் சொன்னேன். நீ என்னடாவென்றால் உன்னைப் பற்றி ரொம்பவே பெருமை கொள்கின்றாயே!"

(இந்த கதை எங்கே இருக்குது, அப்படி இருந்தாலும், போரில் அடிக்கடி மாறும் என்பது உண்மை, டெண்டுல்கர் எல்லா போட்டியிலுமா 100 அடிக்க முடியும், அதுக்காக வாஸ் பந்து போல்ட் ஆனார் என்பதற்காக அவர் சிறந்த பேட்ஸ்மேன் இல்லை என்று சொல்ல முடியுமா?)

இப்படி கடவுளின் காப்பாற்றல் என்ற ஒன்றை மட்டுமே வைத்துக் கொண்டு பிழைத்தவன் அர்ச்சுனன். ஆனால் இந்திரன், கண்ணன் என்று அத்தனை கடவுளர்களுக்கும் தானம் கொடுத்தவன் கர்ணன். கண்ணன் காப்பாற்றாமல் இருந்திருந்தால் அர்ச்சுனன் என்றைக்கோ பரலோகம் போயிருப்பான். கடவுளின் கைப்பாவையாகிப் போனதால் பிழைத்தான். அவனையா மாவீரன் கர்ணனோடு ஒப்பிடுவது?

(கடவுள் எப்போவும் நல்லவனோடு துணையிருப்பார், நல்லவனே சிறந்தவன், அர்ஜூனன் தனிப்பட்ட முறையில் யாரையும் கொல்ல சிறப்பு ஆயுதம் பெறவில்லை)

[font=Latha][font=TheneeUni]
பீஷ்மர் மேல் பட்ட அம்பு வேண்டுமென்றால் அர்ச்சுனனோடதாக இருக்கலாம். ஆனால் பீஷ்மர் பதிலுக்கு அம்பு போடாமல் இருந்ததால்தான் அர்ச்சுனன் அம்பு அவரை கீழே தள்ளியது. அப்படி பதிலம்பு போடததற்குச் சிகண்டியே காரணம். பீஷ்மர் நினைத்திருந்தால் அர்சுனனைக் கொன்றிருக்கலாம். ஆனால் அவர் அதை விரும்பாததால் செய்யவில்லை. இதுவும் பாரதம் படித்தவர்களுக்குத் தெரியும்.

(ஏன் விரும்பவில்லை, காரணம் அர்ஜூனன் நல்லவன், மாவீரன்)

[font=Latha][font=TheneeUni]
அடேங்கப்பா! ஜெயத்ரதனை எப்படிக் கொன்றான் என்று ஊருக்கே தெரியுமே. கண்ணன் மட்டும் சூரியனை மறைக்காமல் இருந்திருந்தால் அன்றைக்கே தீக்குளித்திருக்க வேண்டியவன் அர்ச்சுனன்.

அர்ச்சுனன் + கண்ணன் = வெற்றி உண்மைதான். ஆனால் அர்ச்சுனன் = 0 என்பதும் உண்மைதான்.

(இங்கே நீங்க சொல்வது கேலியாக இருக்குது, என்னாச்சு உங்களுக்கு, ஜெயத்ரதன் பேடியை போல் ஓடி ஒளிந்துக் கொண்டான், அவன் உண்மையில் ஆண்மகன் என்றால் போரிட அல்லவா வர வேண்டும், அர்ஜூனனை ஏமாற்றி, அதனால் அவர் தீ குளிக்க வேண்டும் என்று பேடித்தனமாக நினைத்தவர்கள் தானே கௌரவர்களும் கர்ணனும்)

[font=Latha][font=TheneeUni]
போட்ட வில்லை போட்டுப் போயிருந்தால் அவன் நல்ல மனதைப் பாராட்டலாம். ஆனால் என்னவாயிற்று? குழப்பவாதி அர்ச்சுனன். அதான் குழம்பி நடுங்கிப் போனான். கடைசியில் கண்ணன் அர்ச்சுனனின் தவறான குழப்பங்கள் எல்லாவற்றையும் எடுத்துச் சொல்லியும் உபதேசித்தும் போருக்குத் தயார் படுத்த வேண்டியிருந்தது. அந்தப் பக்குவம் மற்ற அனைவருக்குமே இருந்தது. ஆகையால் குழம்பாமல் எடுத்த எடுப்பிலேயே பக்குவ நிலையில் போருக்குத் தயாராக இருந்தார்கள் என்றுதான் கொள்ள வேண்டும்.

(இதைக்கூட குற்றம் சொல்ல கர்ணன் கோஷ்டியால் தான் முடியும்)

[font=Latha][font=TheneeUni]
ஆனால் தருமதேவதை கர்ணனை விரும்பியது. இத்தனைக்கும் தருமதேவதை யுதிஷ்டிரனின் தந்தை வேறு. இருந்தாலும் தருமம் இருக்குமிடம் கர்ணனிடம் மட்டுமே என்பதால் தருமதேவதையின் அன்பிற்கு ஆளானான்.

(கர்ணனின் தர்மத்தன்மை பற்றி பிறகு சொல்கிறேன்)

[font=Latha][font=TheneeUni]
அது சாபத்தால் வந்தது. அதைச் சமயத்தில் பயன்படுத்திக் கொண்ட சமயோகித புத்தியைப் பாராட்த்தான் வேண்டும்.

[font=Latha][font=TheneeUni]
ஏற்கனவே ஊரூருக்கு இருக்கு. இதுல இது வேறையான்னு நெனச்சிருந்திருக்கலாம்.

[font=Latha]
அப்படி அவர் உக்காரதுக்கு முன்னாடி அவருகிட்ட வாயக் குடுத்து வாங்கிக் கட்டிக் கிட்ட கதை தெரியாதா?

[font=Latha][font=TheneeUni]
பின்னே பதவி வேண்டுமே. மகனைக் கொடுத்தாவது பதவியைப் பிடிக்க ஆசைப்பட்டிருக்கின்றான். இதில் பெருமை வேறு.

[font=Latha][font=TheneeUni] அடக்கடவுளே! அபிமன்யுவுக்கு அரைகுறையாச் சொல்லிக் கொடுத்தது தெரியாதா? அதன் விளைவு தெரியாதா? தன்னுடைய மகனைப் பின்னால் இருந்து கொன்றார்கள் என்று கூவி விட்டு, கர்ணன் மகனைப் பின்னால் இருந்து கொன்றவனே இந்த வீரதீரன். ஊருக்கு ஒரு நியாயம். தனக்கொரு நியாயமா?

[font=Latha][font=TheneeUni]
அட ஆண்டவா! இப்படி அரிய குணங்கள் யாருக்கும் வேண்டாம். அப்புறம் உங்க வீட்டுப் பசங்களும் தூங்குற பொண்ணுக்குத் தாலி கட்டுவாங்க. இதையெல்லாம் நான் ஏன் சொல்றேன்னா......சோடா குடிக்கப் போனவங்க திரும்பி வரப் பயப்படனும். உண்மையை மறைக்க முடியாதுன்னு அவங்களுக்குத் தெரியனும். அதுக்குதான்.

நேரமில்லை, மீதியை அப்புறம் சொல்கிறேன்.

gragavan
21-12-2005, 09:49 AM
ஐயா,
அங்கே வாயைக் குடுத்து வாங்கிக் கட்டிக்கிட்டவன் பீமன், அர்ஜூனன் இல்லைன்னு நினைக்கிறேன். :D
பீமன் அவரு வாலைத் தூக்க முடியாம கஷ்டப்பட்டு, அவரு அப்புறம் தம்பின்னு மன்னிக்க, இவன் நம்ம தம்பி கொடியில நீங்க ஒக்காரணுமின்னு சொன்னான்னு நினைக்கிறேன்அது வேற. இது வேற. இதுவும் ஒன்னு.

பரஞ்சோதி
21-12-2005, 09:55 AM
நாகாஸ்திரம் என்பது அர்ஜூனனை கொல்வதற்கு என்று உருவான ஆயுதம், அது யாரிடம் இருந்தாலும் அதை வைத்து அர்ஜூனனை கொல்ல முடியும், ஆக அதை வைத்து கதை விட வேண்டாம்.

பரஞ்சோதி
21-12-2005, 09:56 AM
அர்ஜூனன் நினைத்தால் சிவனிடமே கர்ணனை கொல்ல ஒன்று, பீஷ்மரை கொல்ல ஒன்று, அஸ்வதாமாவை கொல்ல ஒன்று, இப்படி கேட்டு வாங்கியிருக்க முடியும், ஆனால் அர்ஜூனன் அப்படி வாங்கவில்லை, அப்படி வாங்கி பூச்சாண்டி காட்டவில்லை. தன் வில்லையே நம்பினார்.

gragavan
21-12-2005, 10:27 AM
நாகாஸ்திரம் என்பது அர்ஜூனனை கொல்வதற்கு என்று உருவான ஆயுதம், அது யாரிடம் இருந்தாலும் அதை வைத்து அர்ஜூனனை கொல்ல முடியும், ஆக அதை வைத்து கதை விட வேண்டாம்.அந்த நாகஸ்திரம் யார் மீது பாய்ந்தாலும் கொல்லும். அர்ச்சுனன் என்று இல்லை.

அர்ச்சுனன் கூட பாசுபதாஸ்திரத்தைக் கேட்டு வாங்கியது தெரியாதா? அது கேட்காமலே கர்ணனிடம் இருந்தது.

ஆயிரம் அஸ்திரங்கள் வாங்கியிருந்தாலும் அஸ்வத்தாமனைக் கொல்ல முடியாது.

gragavan
21-12-2005, 10:28 AM
அர்ஜூனன் நினைத்தால் சிவனிடமே கர்ணனை கொல்ல ஒன்று, பீஷ்மரை கொல்ல ஒன்று, அஸ்வதாமாவை கொல்ல ஒன்று, இப்படி கேட்டு வாங்கியிருக்க முடியும், ஆனால் அர்ஜூனன் அப்படி வாங்கவில்லை, அப்படி வாங்கி பூச்சாண்டி காட்டவில்லை. தன் வில்லையே நம்பினார்.பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லனும். காட்டுக்குப் போய் தவஞ் செஞ்சி அஸ்திர வரம் வாங்குனது தெரியாதா?

pradeepkt
21-12-2005, 10:31 AM
ஐயா
அண்ணா கேக்குறது வேற. நீங்க தெசை திருப்பாதீங்க..

அர்ஜூனனைக் கொல்லணுங்கிறதுக்காகவே சக்தி ஆயுதத்தை இந்திரன்கிட்ட இருந்து, அதாவது அர்ஜூனனின் அப்பாகிட்ட இருந்து வாங்கிட்டான் கர்ணன். அதை அதுக்காகவேதான் வச்சிருந்தான். ஆனாப் பாருங்க விதி கடோத்கஜன் ரூபத்தில வெளையாடீருச்சு. அன்னைக்கு ராத்திரி போர்ல மட்டும் கடோத்கஜனை உயிரோட விட்டு வச்சா அத்தனை பேருக்கும் சங்குதான்னு தெரிஞ்சுக்கிட்டுதான் கர்ணன் சக்தி ஆயுதத்தைப் பிரயோகிச்சான்.

அதேமாதிரி கர்ணனைக் கொல்லணுமின்னு அர்ஜூனன் ஒண்ணும் ஆயுதம் வாங்கினதாத் தெரியலையே. அப்படி வாங்கியிருந்தால் அது தருமத்தை மீறிக் கொன்னுருக்கணுமே...

gragavan
21-12-2005, 10:40 AM
ஐயா
அண்ணா கேக்குறது வேற. நீங்க தெசை திருப்பாதீங்க..

அர்ஜூனனைக் கொல்லணுங்கிறதுக்காகவே சக்தி ஆயுதத்தை இந்திரன்கிட்ட இருந்து, அதாவது அர்ஜூனனின் அப்பாகிட்ட இருந்து வாங்கிட்டான் கர்ணன். அதை அதுக்காகவேதான் வச்சிருந்தான். ஆனாப் பாருங்க விதி கடோத்கஜன் ரூபத்தில வெளையாடீருச்சு. அன்னைக்கு ராத்திரி போர்ல மட்டும் கடோத்கஜனை உயிரோட விட்டு வச்சா அத்தனை பேருக்கும் சங்குதான்னு தெரிஞ்சுக்கிட்டுதான் கர்ணன் சக்தி ஆயுதத்தைப் பிரயோகிச்சான்.

அதேமாதிரி கர்ணனைக் கொல்லணுமின்னு அர்ஜூனன் ஒண்ணும் ஆயுதம் வாங்கினதாத் தெரியலையே. அப்படி வாங்கியிருந்தால் அது தருமத்தை மீறிக் கொன்னுருக்கணுமே...ஓ கர்ணனுக்குன்னு குறிப்பாக் கேக்குறாரா? அப்பச் சரி. கர்ணன அர்ஜுனன் கொல்லவேயில்லையே? அப்புறம் எப்படிச் சொல்ல முடியும்? ஆயுதம் வாங்கம கர்ணனக் கொன்றிருந்தால் சரி. கொல்ல முடியாமத்தான இந்தாளு போயி தானம் வாங்குனாரு.

பீஷ்மரும் கூட விரும்புனாத்தான் சாவுன்னு வரம். அவரா விரும்பிப் போனாரு. அஸ்வத்தாமன் எல்லாரையும் கொன்னிருப்பான். அங்கயும் கண்ணன் புகுந்து விளையாண்டு அவன் சிரோன்மணிய வேறப் பிடிங்கிக் கிட்டு......அடடா! என்ன அரசியல்!

துரியோதனாதிகள் அத்தனை பேரையும் பீமந்தான் கொன்னான்.

துரோணாச்சாரிக்குன்னே காத்திருந்தவன் திட்டத்தும்மன். அங்கயும் "அஸ்வத்தாம ஹதகா..............பூஊஊஊஊஊஊஊஊஊஊஊம் குஞ்சரஹா!"

பென்ஸ்
21-12-2005, 10:59 AM
என்ன "குஞ்சாக்கோ" என்று என்னை திட்டுவது போல் இருக்கு:rolleyes: :rolleyes: :D :D :D :D

pradeepkt
21-12-2005, 11:02 AM
அப்புறம் திட்டாம... :D :D
இங்க ஆளாளுக்கு அர்ஜூனன், கர்ணன்னு ஆலாப் பறக்குறாங்க,
நீங்க என்னடான்னா துரியைப் பத்தி "என்னமோ எடுக்கவா கோர்க்கவா, பக்கத்து வீட்டு ஆசாரிகிட்ட குடுத்து சரி பண்ணித் தரவான்னு" எல்லாம் கேட்டான்னு ஒரு வரி சொல்லிட்டு ஆளு ஓடியேஏஏஏஏஏஏஏஏஏஏ போயிட்டீங்க...

வாங்கப்பூ, உங்க துரியைப் பத்தி அவுத்து விடுங்க, நம்ம அவனைக் கவனிப்போம்.

gragavan
21-12-2005, 11:09 AM
அப்புறம் திட்டாம... :D :D
இங்க ஆளாளுக்கு அர்ஜூனன், கர்ணன்னு ஆலாப் பறக்குறாங்க,
நீங்க என்னடான்னா துரியைப் பத்தி "என்னமோ எடுக்கவா கோர்க்கவா, பக்கத்து வீட்டு ஆசாரிகிட்ட குடுத்து சரி பண்ணித் தரவான்னு" எல்லாம் கேட்டான்னு ஒரு வரி சொல்லிட்டு ஆளு ஓடியேஏஏஏஏஏஏஏஏஏஏ போயிட்டீங்க...

வாங்கப்பூ, உங்க துரியைப் பத்தி அவுத்து விடுங்க, நம்ம அவனைக் கவனிப்போம்.ஆமாமா துரியப் பத்தியும் பேசுவோம். பெஞ்சு....வந்து துரிய பெஞ்சு மேல ஏத்துங்க.......

பென்ஸ்
21-12-2005, 11:13 AM
இம்ம்ம்... நானும் விரிவா தாறேன்... இப்போதாண் படிக்கிறேன்.... சரியா போடலைனா என்னை கிளித்து போடுவிங்களே.....

என்னதான் இருந்தாலும் துரி... சூப்பர் ஸ்டார்தான்...

ஒரு நல்லவனை வில்லன் ஆக்கி போட்டிங்க...

pradeepkt
21-12-2005, 11:20 AM
நாங்க வில்லன் ஆக்கலைப்பூ...
அவனா ஆயிட்டான். எந்த குணங்கள் நல்ல குணங்களை அழிக்குமோ, அத்தனையும் அவனிடத்தில் இருந்தன. என்ன செய்யிறது?
சரி நல்லாப் படிச்சிட்டு நாளைக்குக் கூட வந்து சொல்லுங்க... :D
இன்று போய் நாளை வா(ருங்கள்),
ராகவா, நீங்களும் இன்று போய் நாளை பென்ஸை வாருங்கள் :D :D :D

pradeepkt
21-12-2005, 11:25 AM
ஆமாமா துரியப் பத்தியும் பேசுவோம். பெஞ்சு....வந்து துரிய பெஞ்சு மேல ஏத்துங்க.......
இந்தக் கூத்தில இவங்களுக்கெல்லாம் வந்த நேரத்தைப் பாத்தீங்களா?
நம்மகிட்ட வந்து மாட்டிக்கிட்டு முழிக்கணுமின்னு எழுதீருக்கு :D :D

gragavan
21-12-2005, 11:44 AM
இந்தக் கூத்தில இவங்களுக்கெல்லாம் வந்த நேரத்தைப் பாத்தீங்களா?
நம்மகிட்ட வந்து மாட்டிக்கிட்டு முழிக்கணுமின்னு எழுதீருக்கு :D :Dஅது அவங்க தலையெழுத்து. நம்ம மாத்த முடியாது. நாளைக்கு வந்து இவங்கள இன்னும் ஒரு கை பார்க்கலாம்.

mukilan
21-12-2005, 02:11 PM
இந்தக் கூத்தைப் பார்த்தால் பேசாம அபிமன்யூவிற்கு ஓட்டுப் போட்டால் என்ன?

1. மகாவீரன்
2. மிகச் சிறிய வயதில் மகாரதன் என்ற பட்டத்தைப் பெற்றவன்
3. தந்தை சொல் மீறாதவன்
4. மற்றோர் மேல் சொல்லக் கூடிய கெட்ட பண்புகள் இல்லாதவன்
5. ஒரு பெண்டாட்டிக் காரன்

என்ன சொல்றீங்க?
பிரதீப்பு! நாமினேசன் தாக்கல் செய்யறதுக்கு கால அவகாசம் முடிஞ்சு போச்சு! இருக்கிற ஆளுங்களுக்குள்ள சொல்லுங்கய்யானா குட்டையைக் கிளப்பறதே வேலையாத் திரியிறீங்க!:mad: :mad: :angry: :angry:

aren
21-12-2005, 11:12 PM
இந்தப் பதிவை வேண்டிய அளவு அல்சியாச்சு. வேறு ஏதாவது ஒரு திரெட்டை ஆரம்பியுங்கப்பா. சண்டை போதும்.

mukilan
21-12-2005, 11:28 PM
அப்போ முடிவைச் சொல்லுங்க.

aren
22-12-2005, 12:08 AM
ஆரம்பித்தவர்களே முடிக்கலாமே.

என்னுடைய சாய்ஸ் லிஸ்டிலேயே இல்லை. ஆகையால் என்னால் ஓட்டே போடமுடியவில்லை. ஓட்டு போடாமலேயே செல்லாததாகிவிட்டது.

நொந்துகொண்டிருக்கும்
ஆரென்

pradeepkt
22-12-2005, 04:31 AM
பிரதீப்பு! நாமினேசன் தாக்கல் செய்யறதுக்கு கால அவகாசம் முடிஞ்சு போச்சு! இருக்கிற ஆளுங்களுக்குள்ள சொல்லுங்கய்யானா குட்டையைக் கிளப்பறதே வேலையாத் திரியிறீங்க!:mad: :mad: :angry: :angry:
அப்ப அது வழங்கப்பட்ட தீர்ப்பு அல்ல,
வாங்கப்பட்ட தீர்ப்பு...
ஜெ. யோட நாமினேஷனைத் தகுதி அடிப்படையில நிராகரிச்சப்ப என்ன நடந்தது என்பது வரலாறு. :angry: ;)

pradeepkt
22-12-2005, 04:32 AM
இந்தப் பதிவை வேண்டிய அளவு அல்சியாச்சு. வேறு ஏதாவது ஒரு திரெட்டை ஆரம்பியுங்கப்பா. சண்டை போதும்.
ஆனானப் பட்ட சண்டையா இன்னும் நிறைய பேர அலச வேண்டியிருக்கு, நீங்க என்னன்னா சட்டுனு முடிக்கச் சொல்றீங்க... :angry:

மதி
22-12-2005, 04:37 AM
ஆனானப் பட்ட சண்டையா இன்னும் நிறைய பேர அலச வேண்டியிருக்கு, நீங்க என்னன்னா சட்டுனு முடிக்கச் சொல்றீங்க... :angry:
மஹாஜனங்களே..!
சட்டுபுட்டுனு வாதங்கள் எடுத்து வையுங்கோ..!
எவ்வளவு நாள் தான் வாய்தா வாங்குவீங்க..?:D :D :angry: :angry: :angry:

தீர்ப்புக்கு நேரமாச்சு..(ஐ...நல்ல சினிமா பட பேர் மாதிரி இருக்கே..?!?!)B) B) B)

pradeepkt
22-12-2005, 04:54 AM
மதி,
இதில உங்க மஹாஜனம் வேற யாருமில்லை, பென்ஸூதான்.
அவருக்கு ஒரு போனைப் போட்டு மரியாதையா துரிக்கு வக்காலத்து வாங்கச் சொல்லுங்க.
இல்லைன்னா எல்லாருமா சண்டை போடாம அபிமன்யூவுக்கு மகுடம் சூட்டீட்டு அடுத்த திரிய ஆரம்பிங்க :)

பென்ஸ்
22-12-2005, 05:10 AM
வாரன்யா... வாரேன்...
கொஞ்சம் பொறுங்க....

mukilan
22-12-2005, 05:10 AM
மதி,
இதில உங்க மஹாஜனம் வேற யாருமில்லை, பென்ஸூதான்.
அவருக்கு ஒரு போனைப் போட்டு மரியாதையா துரிக்கு வக்காலத்து வாங்கச் சொல்லுங்க.
இல்லைன்னா எல்லாருமா சண்டை போடாம அபிமன்யூவுக்கு மகுடம் சூட்டீட்டு அடுத்த திரிய ஆரம்பிங்க :)

என்ன சைக்கிள் கேப்புல ட்ரெயின் ஓட்டறது போலத் தோணுது. கலைஞர் கூடச் சேராதீங்கன்னு சொல்லிட்டு நீங்களே அவரைப்போல பேச ஆரம்பிச்சிட்டீங்க. அதோட இப்போ (அர்ச்சுனன்) மகனுக்கு பட்டம் கொடு பேரனுக்குப் பதவி கொடுன்னு வேற கிளம்பியாச்சா!

pradeepkt
22-12-2005, 05:26 AM
என்னை விடுங்க,
அங்க மேல பாருங்க, ஒருத்தர் ரஜினிகாந்து மாதிரி வாரேன் வாரேன்னு டுபுக்கு வேலை காட்டிட்டு இருக்காரு :D :D

pradeepkt
22-12-2005, 05:31 AM
என்ன சைக்கிள் கேப்புல ட்ரெயின் ஓட்டறது போலத் தோணுது. கலைஞர் கூடச் சேராதீங்கன்னு சொல்லிட்டு நீங்களே அவரைப்போல பேச ஆரம்பிச்சிட்டீங்க. அதோட இப்போ (அர்ச்சுனன்) மகனுக்கு பட்டம் கொடு பேரனுக்குப் பதவி கொடுன்னு வேற கிளம்பியாச்சா!
உடன்பிறப்பே,
மகன் என்றாலும் பேரன் என்றாலும் தகுதியின் அடிப்படையிலேயே பதவிகள் பாய்ந்தோடி வந்திடும் ... என்ற கார்ல் மார்க்ஸின் கூற்றை அறியாத கூகரையா நீ?
முகிலனின் வாதங்களில் இருக்கும் முதன்மையான அழுக்காறைத் துடைத்திடுமாறு முடிந்த அளவு போராட இயலாத முட்டாளா நீ?
சைக்கிள் கேப்பு என்று பாடுபவர்கள் இன்று சைக்கிளும் கையுடன் இணைந்து உதயசூரியனைத் தொழுவதை அறியாத உன்மத்தம் உனக்கு எப்படி வந்தது?
அபிமன்யூவுக்கு இல்லாத பதவி யாருக்குமே இல்லை என்ற உனது கூற்று புரியாதவர்களா இங்கே போலித் தேர்தல் நடத்துபவர்கள்...
மகன் பேரன் என்று எள்ளுபவர்கள் வாயில் எள்ளைத் திணிப்போம் வா... பாய்ந்தோடி வா... பறந்தோடி வா... ஓடோடி வா... நடந்தோடி வா... குதித்தோடி வா... வா... வா... வா... (என்ன கொஞ்சம் மதுரை கான்சாமேட்டு சேட்டு வாசனை வீசுது:D :D)

பென்ஸ்
22-12-2005, 05:39 AM
பாண்டவர்கள் பான்டுவின் புத்திரர்களா????

அரசன் மகனோ இல்லை பேரனோ அரசாள்லாம்... யாரோ ஒருவனின் மகன் எதர்க்கு...

அப்படியானால் துரியின் மக்களுக்கு மட்டும் தானே மகுடம்....

gragavan
22-12-2005, 05:45 AM
உடன்பிறப்பே,
மகன் என்றாலும் பேரன் என்றாலும் தகுதியின் அடிப்படையிலேயே பதவிகள் பாய்ந்தோடி வந்திடும் ... என்ற கார்ல் மார்க்ஸின் கூற்றை அறியாத கூகரையா நீ?
முகிலனின் வாதங்களில் இருக்கும் முதன்மையான அழுக்காறைத் துடைத்திடுமாறு முடிந்த அளவு போராட இயலாத முட்டாளா நீ?
சைக்கிள் கேப்பு என்று பாடுபவர்கள் இன்று சைக்கிளும் கையுடன் இணைந்து உதயசூரியனைத் தொழுவதை அறியாத உன்மத்தம் உனக்கு எப்படி வந்தது?
அபிமன்யூவுக்கு இல்லாத பதவி யாருக்குமே இல்லை என்ற உனது கூற்று புரியாதவர்களா இங்கே போலித் தேர்தல் நடத்துபவர்கள்...
மகன் பேரன் என்று எள்ளுபவர்கள் வாயில் எள்ளைத் திணிப்போம் வா... பாய்ந்தோடி வா... பறந்தோடி வா... ஓடோடி வா... நடந்தோடி வா... குதித்தோடி வா... வா... வா... வா... (என்ன கொஞ்சம் மதுரை கான்சாமேட்டு சேட்டு வாசனை வீசுது:D :D)எனக்கு நல்லாத் தெரியும். இப்படித்தான் ஒங்களுக்கு ஆகுமுன்னு....பேசாம குற்றாலம் குணசீலம் மாதிரி நல்ல ஊருகளுக்கு டூரு போயிட்டு வர்ரது ஒங்களுக்கு ரொம்ப நல்லது.

பரஞ்சோதி
22-12-2005, 05:49 AM
கர்ணன்,

கர்ணன் கதாபாத்திரம் மகாபாரத்திலேயே அதிக விமர்சனங்களை கொண்டு வரும் கதாபாத்திரம்.

உண்மையில் கர்ணன் பாவப்பட்டவன், அன்னை, சகோதர பாசம், ராஜ்ஜியம் அனைத்தும் இழந்தவன். பலவகையில் அவமானப்பட்டவன், பலரால் வஞ்சிக்கப்பட்டவன், இவை அனைத்தும் பார்க்கும் போது பலரால் அவன் பாதிக்கப்பட்டவன், உண்மை தான், சிறந்தவன் என்பவன் எத்தனை கடுமையான சோதனைகள் வந்தாலும் அதில் வென்று தனித்தன்மையாக நிற்க வேண்டும்.

கர்ணன் பிறப்பே தவறானது, அது கர்ணனின் குற்றம் அல்ல, ஒவ்வொரு பிறவியும் முன்பிறவியின் பாவ புண்ணியங்களை வைத்து நிர்ணயம் செய்யப்படுகிறது, திருமணம் ஆகும் முன்பே குந்தி செய்த தவறு அது கர்ணனை பாதிக்குது, இதில் பஞ்ச பாண்டவர்களின் குற்றம் எதுவும் இல்லை, மேலும் அவன் குந்தியின் மகன் என்றாலும் கௌரவ, பாண்டவ ராஜ்ஜியம் ஆள என்னத்தகுதி இருக்குது, குந்திக்கு தான் மூத்த மகன், பாண்டு இராஜாவுக்கு இல்லை (மற்ற மகன்களும் குந்தி மற்றும் மற்ற தேவர்கள் மூலமாகவே பிறந்தவர்கள் என்பது தெரிந்த கதை) . ஆக அவனுக்கு ராஜ்ஜியம் கிடைக்கவில்லை என்று பேசுவது சரியில்லை, அப்படி இருந்தும் கர்ணன் தங்கள் அண்ணன் என்று முன்பே தெரிந்திருந்தால் மொத்த ராஜ்ஜியத்தையும் ஆள அவனை விட்டிருப்போம், சண்டை போட்டிருக்க மாட்டோம் என்று சொன்ன பாண்டவர்கள் உயர்ந்து விடுகிறார்கள்.

வளர்ப்பு ஒரு தேரோட்டியின் மகனாக இருந்தாலும், அவனது வளர்ப்பு பெற்றோர் அவனுக்கு நல்லதையே போதித்திருக்காங்க.

கர்ணனின் அழிவுக்கு மிக முக்கியம் அவனது மூடத்தனம் தான்.

பரசுராமருக்கு சத்திரியன் என்றாலே பிடிக்காது, மேலும் அவர் பிராணர்களுக்கு மட்டுமே கல்வி கற்று கொடுப்பவர், அவரிடம் போய் பொய் சொல்லி, தன்னை பிராமணன் என்று சொல்லி வில்வித்தை கற்கிறார். அவர் கற்றுக் கொடுத்த வித்தையை வைத்தே அவன் அர்ஜூனனுக்கு இணையாகிறான்.

பொய் சொன்னது தெரிந்ததும் சாபமிடுகிறார், இக்கட்டான அதுவும் உன் இறுதிக்காலத்தில் நீ கற்றது மறந்து போயிடும் என்கிறார், அது மாதிரியே அவனால் ஒன்றும் செய்ய முடியாமல் போகிறது, ஆக அவனது மரணம் முடிவு செய்யப்பட்டது, அது மாதிரியே வருகிறது, அர்ஜூனன் வில்லால் அடிக்கிறான். அடிபட்டு நசுங்கி போனப்பின்பும் உயிர் பிரியாமல் இருக்கவே கண்ணன் தன் வேலையை காட்டுகிறார்.

பரசுராமர் கடவுளின் அவதாரம் தானே தவிர அங்கே அவர் கடவுளாக இல்லை, சாதாரண மனிதன் தான், இல்லை என்றால் கர்ணன் சத்திரியன், குந்தியின் மகன் என்று தெரிந்திருக்குமே.

கர்ணனுக்கு ராஜ்ஜியம் கிடைக்கிறது, அதுவும் எப்படி, அர்ஜூனனை வெல்ல இவனால் தான் முடியும் என்று நினைத்த துரியோதனன் அவனுக்கு ராஜ்ஜியம் கொடுக்கிறான், வேற யாருக்கும் கொடுக்கவில்லையே ஏன், காரணம் கர்ணனல் மட்டுமே அர்ஜூனனை கொல்ல முடியும் என்று நம்புகிறான், அதாவது தனக்கு பிடிக்காதவனை அழிக்க நினைப்பதன் ஒரு தாதாவுக்கு ஏதாவது கொடுத்து தன் வசம் இழுக்கும் செயல் தானே இது, இது ஒன்றும் போற்றத்தக்க செயல் அல்ல, துரியோதனன் செய்ததில் அனைத்தும் சுயநலம் மிக்கது, ஆனால் அது கர்ணனுக்கு மிகவும் பெரிய அந்தஸ்தை கொடுக்கிறது, அதற்காகவே அவன் மடிகிறான்.

துரியோதனனும் கர்ணனை கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்கிறான். நட்பு பாராட்டுகிறான். மகாபாரதப் போரையே அவன் கர்ணன் ஒருவனையே நம்பி தொடங்குகிறான்,அதையும் அடிக்கடி சொல்லிக் காட்டுகிறான். மற்ற ஆச்சாரியர்கள், தாத்தாக்கள், உறவினர்கள் அனைவரும் பாண்டவர்கள் மீது பாசம் கொண்டவர்கள் என்று நம்புகிறான், கர்ணன் ஒருவனே பாண்டவர்கள் மீது தீராத பகை பாராட்டுபவன் என்று தெரியும்.

துரியோதனன், கர்ணனிடம் இருந்த நாகாஸ்த்திரமே அவனுக்கு மிகச் சிறந்த ஆயுதம் என்று நம்புகிறான்.

உண்மையில் கர்ணன் நண்பனுக்கு உயிர் கொடுக்கிறான், ஆனால் நட்புக்கு ஆப்பு வைக்கிறான்.

உண்மையான நண்பன் என்பவன் யார்? தன் நண்பன் தவறான வழியில் சென்றால் அறிவுரை சொல்லி நல்வழிப்படுத்த வேண்டும், ஆனால் கர்ணனோ அவனுக்கு தவறாக அறிவுரைகள் சொல்கிறான், அவனின் மூடத் தனத்தால் கர்ணன் பலரை இழக்கிறான்.

ஒரு ஊசி முனை நிலம் கூட கொடுக்க முடியாது என்று துரியோதனனை சொல்ல வைக்கிறான், திரவுபதையை துயில் உரிக்கும் போது உற்சாகப்படுத்துகிறான், இப்படி அனைத்து பாதகச் செயலிலும் உடன் இருக்கிறான், ஊக்கப்படுத்துகிறான், இதுவா நட்பு, இதுவா நல்ல நண்பனுக்கு அடையாளம்.

சித்தப்பா விதுரர் கண்ணனுக்கு விருந்து கொடுக்கிறார், அதை துரியோதனன் ஏளனம் செய்கிறான், அங்கே கர்ணன் அளவுக்கு அதிகமாக விதுரரை விமர்சனம் செய்ய அவர் வில்லை ஒடித்து விட்டு போகிறார்.

மற்ற இடங்களில் பீஷ்மரை மிகவும் கடுமையாக குற்றம் சாட்டுகிறான், துரோணாச்சாரியையும் கிருபரையும் கூட விட்டு வைக்கவில்லை.

பீஷ்மர் மகாபாரதப் போருக்கு சேனைகளையும் தளபதிகளையும் அறிவிக்கும் போது கர்ணனை அறிவிக்கவில்லை (அங்கே நம்ம சேப்பல் மாதிரி நடந்து கொள்கிறார்), உண்மையில் கர்ணன் என்ன செய்ய வேண்டும், நான் போரிட வர மாட்டேன், இந்த கிழம் பீஷ்மர் மடிந்த பின்னரே நான் போரிட வருவே என்கிறான், அதனாலேயே துரியோதனனின் அழிவுக்கு குழி தோண்டியாச்சு, அந்த குழியை தோண்டியதில் கர்ணனுக்கும் பங்குண்டு.

ஆக மொத்தம் பீஷ்மர் மடிய வேண்டும் என்பது கர்ணனின் எண்ணம், தன்னாலேயே துரியோதனன் வெல்ல வேண்டும் என்ற மடத்தனம்.

அப்புறம் பெத்த அம்மா வந்து கேட்டவுடன் நாகாஸ்திரத்தை ஒருமுறைக்கு மேல் ஏவ மாட்டேன், அர்ஜூனனை தவிர வேற யாரையும் கொல்ல மாட்டேன் என்று சத்தியம் செய்கிறான், அந்த நாகாஸ்திரத்தை தானே நம்பி துரியோதனன் இருக்கிறான், மேலும் பீமன் துரியோதனையும் மற்ற கௌரவர்களையும் கொன்று ரத்தம் குடிப்பேன் என்று சபதம் இட்டு இருக்கிறான், அப்படி இருக்கையில் பீமனை கொல்ல மாட்டேன் என்று சொன்னால், தன் நண்பன், மற்றும் அவனது சகோதரர்கள் பீமன் கையால் சாக வாய்ப்பு கொடுக்கிறான் என்று தானே அர்த்தம், அங்கேயும் துரியோதனுக்கு குழி தோண்டுகிறான், இதுவா நட்பு.

உண்மையில் பயங்கரமான குழப்பவாதி கர்ணன் தான், நல்லவனாகவும் இருக்க முடியவில்லை, கெட்டவனாகவும் இருக்க முடியவில்லை.

கொடைவள்ளல், ஆமாம் கர்ணன் எப்படி எல்லாம் கொடை வள்ளல் ஆனான் என்று சொல்ல முடியுமா?

கர்ணன் தேரோட்டியின் மகனாக இருந்தவரை அவனால் எதை கொடையாக கொடுத்திருக்க முடியும், நண்பர்களுக்கு அம்மா கொடுத்த முறுக்கு, சீடையை கொடுத்திருக்க முடியும், அதை விட பெரிதாக என்ன செய்திருக்க முடியும்.

அடுத்தது ராஜா ஆனதும் கொடை கொடுத்திருந்தால் அது பெரிய தவறு, துரியோதனன் கொடுத்த ராஜ்ஜியம், கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையருக்கு உடைத்த மாதிரி ஆகுது. ஆக அவன் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை கொடையாக கொடுக்கவில்லை, அவன் எப்படி கொடை வள்ளல் ஆக முடியும்.

இறுதியாக இந்திரனுக்கு கொடுத்த கவச குண்டலத்தை சொல்லலாம். அதில் பயங்கரமான மூடத்தனமும், அறிவிலியாகவும் இருக்கிறான். தன் தந்தை சொல்கிறார், மகனே! இந்திரன் வருகிறான், உன் எதிரியின் தந்தை வருகிறான், அவன் உன் உயிரையே எடுக்கும் வகையில் வருகிறான், ஜாக்கிரதை” இத்தனை சொல்லியும் பெருமைக்காக தன் கவச குண்டலங்களை கொடுக்கிறான், அங்கேயும் தன் நண்பன் துரியோதனனுக்கு துரோகம் செய்கிறான், அந்த கவச குண்டலங்களே அவனது உயிருக்கு உத்திரவாதம் என்று இருக்கும் போது, தான் பெரிய கொடை வள்ளல் என்று நிலை நாட்ட கொடுக்கிறான். தனக்கு மிஞ்சியதே தானம் என்று பெரியவங்க சொல்லியிருக்காங்க, அது தெரியாம கொடுத்தா அதை தானம் என்று சொல்வதை விட மூடத்தனம் என்றே சொல்ல வேண்டும்.

அப்புறம் இறுதியில் அவன் செய்த தானத்தின் பலனை கண்ணன் கேட்டு வாங்குகிறார், ஏற்கனவே குலையிர் குற்றுயிராக நிலைகுலைந்து கிடக்கிறான், அப்படியே போட்டு போனால் பீஷ்மர் மாதிரி உயிர் போகாமல் போர்களத்திலேயே கிடக்கப் போகிறான், ஏற்கனவே அவனுக்கு என்று நிர்ணயம் செய்யப்பட்ட மரணம் தகுனம் அது, ஏனேன்றால் பரசுராமர் சொன்ன மாதிரி வித்தைகள் மறந்து போகுது, இதை எல்லாம் தெரிந்த கண்ணன் தர்மபலனை வாங்கி நல்ல மரணம் கொடுக்கிறார்.

கர்ணனை அனைவரும் விரும்ப அவனது தானமும், நட்பும் தான், அந்த இரண்டுமே சரியில்லாதவை, கர்ணனுக்கு எப்போவும் தான் பெரிய கொடை வள்ளல் என்ற கர்வமும், மாவீரன் என்ற கர்வமும் உண்டு, அதுவே அவனை அழிவுக்கு கொண்டு சென்றது, நம்பிய நண்பனுக்கு துரோகம் மட்டுமே செய்திருக்கிறான், உண்மையில் நட்பை உயர்வாக நினைத்தால் தாய் என்று வந்த பேய்க்கு வாக்கு கொடுத்திருக்க மாட்டான், நயவஞ்சகமாக வந்த எதிரியின் தந்தைக்கு தன் உயிர் காக்கும் பொருளை கொடுத்திருக்க மாட்டான், சபையில் பீஷ்மர் அவமானப்படுத்திய போதும் நண்பனுக்காக பொறுத்திருந்தால் பாரதப்போரில் பலரை அவன் வென்றிருப்பான், அனைவரும் மடிந்தப் பின்னர் போராட வந்தத்தாலே துரியோதனின் பாதி சேனை அழிந்து போச்சு, அழிவும் நிச்சயமாச்சு.

துரியோதனன் சதி செய்து தன் பக்கம் இழுத்துக் கொண்ட திறமையான மன்னனான சல்லியனை சல்லி காசுக்கும் மதிக்கவில்லை, ஆக சல்லியனும் ஆப்பு வைக்கிறான்.

ஆக மொத்தம் கர்ணன் தனக்கு தானே அழிவை தேடியவன், அதுவும் அறிவில்லாமல் நடந்து கொண்டதால், ஒரு சிறந்தவன் என்றால் எல்லாவற்றிலும் சாணக்கியத் தனத்தோடு நடந்துக் கொண்டாலே வெற்றி பெற முடியும், குருட்டம் போக்கில் போன கர்ணன் எப்படி சிறந்தவன் ஆக முடியும்.

ஆக ஏதோ ஒன்று இரண்டு சிறப்பை (நட்பு, கொடை) சொல்லி ஏமாற்றுகிறீர்கள், அந்த இரண்டிலும் கர்ணன் சரிவர நடக்கவில்லை, கர்ணனை முழுமையாக பார்த்தால் அவன் மகாபாரத்தில் அனைத்து கதாபாத்திரங்களுடம் ஒப்பிடும் போது சிறப்பானவன் கிடையாது. ஆத்திரக்காரன், யாரையும் மதிக்க மாட்டான், நண்பனுக்கு நல்ல வழி காட்டுபவன் இல்லை, நம்பிய நண்பனுக்கு நம்பிக்கையாக இருக்கவில்லை, தன்னிடம் இருக்கும் விலை மதிப்பற்றவற்றை பாதுகாக்கத் தெரியாதவன், பாசமா, நட்பா என்று ஒரு முடிவுக்கு வரமால் குழம்பியவன், ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் வைத்தவன்.

இதுக்கு மேலும் கர்ணன் சிறந்தவன் என்று சொன்னால், சிந்தித்து பார்க்காமல் கண்ணை மூடிக் கொண்டு ஓட்டளிக்கும் கூட்டம் என்றே சொல்லுவேன்.

பரஞ்சோதி
22-12-2005, 05:50 AM
கர்ணனுக்கு ஓட்டளித்தவர்கள் எல்லாம் ஓட்டை மட்டும் போட்டு விட்டு போயிட்டாங்க, ஏன்னா, ஓட்டைக் காரணங்கள் தான் சொல்ல முடியும்.

இராகவன் அண்ணா, சும்ம சொன்னதை சொல்லியும், இல்லாத கதைகளை சொல்லியும், வாய் ஜாலம் காட்டி வர்ண ஜாலம் காட்டுகிறார்.

இதை எல்லாம் பென்ஸ் மாதிரி மகாபாரதம் முழுமையாக அறியாதவர்கள் ஏற்றுக் கொள்வார்கள், காரணம் அவர் சப்போர்ட் செய்வது கர்ணன் ஆச்சே, ஆக இங்கேயும் அதே கூட்டணி தொடருது.

gragavan
22-12-2005, 05:50 AM
பாண்டவர்கள் பான்டுவின் புத்திரர்களா????

அரசன் மகனோ இல்லை பேரனோ அரசாள்லாம்... யாரோ ஒருவனின் மகன் எதர்க்கு...

அப்படியானால் துரியின் மக்களுக்கு மட்டும் தானே மகுடம்....இதுல பெஞ்சமின்...இன்னொரு குழப்பமும் இருக்கு. திருட்டுராட்டிரன்...சீச்சீ....திருதராட்டிரனே விசித்திரவீரியனுக்கு மகன் இல்லை. பாண்டுவும் விசித்திரவீரியனுக்கு மகன் இல்லை. இன்னும் சொன்னால் விசித்திரவீரியனுக்குப் பிள்ளைகளே இல்லை. அம்பிகையையும் அம்பாலிகையையும் கட்டுனப் புறம் அவனுக்கு என்னவோ படாத எடத்துல பட்டு பட்டுன்னு போயிட்டான். அப்புறம் பிள்ள வேணுமேன்னுதான் சத்தியவதி.....தனக்குப் பிறந்த வியாசரக் கூப்பிட்டு...(இங்க பாருங்க...வியாசரும் சத்தியவதிக்கும் சத்தியவதி புருசன் சந்தது, அதாங்க பீஷ்மரோட அப்பாவுக்கும் பொறக்கலை.) அம்பிகைக்கும் அம்பாலிகைக்கும் பிள்ளை கிடைக்க ஏற்பாடு செஞ்சாரு. அதுல தப்பில்லைனே வெச்சுக்கோங்களேன். உண்மையிலேயே பரத வம்சம் தாய்வழிச் சமூகமாத்தான் இருந்திருக்கு.

பேசாம இந்த பீஷமரு மட்டும் சபதத்தத் தூக்கிப் போட்டுட்டு ஷேவிங் பண்ணீட்டுக் குடும்பம் நடத்தீருந்தா இந்தப் பிரச்சனையே இல்லை. அபிமன்யுவுக்கு வக்காலத்து வாங்குறங்க விட்டா பீஷ்மருக்கும் வாங்குவாங்க.

mukilan
22-12-2005, 05:53 AM
உடன்பிறப்பே,
மகன் என்றாலும் பேரன் என்றாலும் தகுதியின் அடிப்படையிலேயே பதவிகள் பாய்ந்தோடி வந்திடும் ... என்ற கார்ல் மார்க்ஸின் கூற்றை அறியாத கூகரையா நீ?
முகிலனின் வாதங்களில் இருக்கும் முதன்மையான அழுக்காறைத் துடைத்திடுமாறு முடிந்த அளவு போராட இயலாத முட்டாளா நீ?
சைக்கிள் கேப்பு என்று பாடுபவர்கள் இன்று சைக்கிளும் கையுடன் இணைந்து உதயசூரியனைத் தொழுவதை அறியாத உன்மத்தம் உனக்கு எப்படி வந்தது?
அபிமன்யூவுக்கு இல்லாத பதவி யாருக்குமே இல்லை என்ற உனது கூற்று புரியாதவர்களா இங்கே போலித் தேர்தல் நடத்துபவர்கள்...
மகன் பேரன் என்று எள்ளுபவர்கள் வாயில் எள்ளைத் திணிப்போம் வா... பாய்ந்தோடி வா... பறந்தோடி வா... ஓடோடி வா... நடந்தோடி வா... குதித்தோடி வா... வா... வா... வா... (என்ன கொஞ்சம் மதுரை கான்சாமேட்டு சேட்டு வாசனை வீசுது:D :D)

கழகத்தின் போர்வாளே!

குடும்ப அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் குள்ள நரிகளை அடையாளம் கண்டு கொள். திக்கெட்டும் வெற்றி முரசு கொட்டிய கர்ணனனை, கொடுத்துக் கரம் சிவந்த ஒரு மாவீரனை இழித்தும் பழித்தும் கூறிக் கொக்கரிக்கும் சூழ்ச்சியை அறியாமல் இல்லை நாம்.நாம் நடந்து வந்த பாதையில் பாண்டவ வஞ்சகர்கள் நமக்குச் செய்த இடையூறுகள், நாம் பட்ட இன்னல்கள் எத்துணை! செல்ல வேண்டிய தூரம் எவ்வளவு! அதையெல்லாமே இன்று நினைத்துப் பார்க்கிறேன். கர்ணனின் கரங்களை பலப்படுத்த ஆர்ப்பரித்து வாரீர்! காண்டீபன் கர்வமழிக்க லக்க லக்க லக்க வென வாரீர்.! ஒதல்லவா! ஒதல்லவா! நேனு ----அப்பாடி! கொஞ்ச நேரத்தில கிறுக்குப் பிடிக்க வெச்சிடுவேர் போல!

அய்யா! பென்ஸீ! வாக்களிக்க கடைசி நாள் ஒன்னு கொடுங்களேன். அப்புறமா எல்லா வாக்குகளையும் ஜனநாயகத்தை காக்கும் வகையில் எண்ணி ---:D

பரஞ்சோதி
22-12-2005, 05:56 AM
மக்கா, பக்கம் 8 பாருங்க.

mukilan
22-12-2005, 06:03 AM
மக்கா, பக்கம் 8 பாருங்க.

எட்டாம் பக்கம் எட்டி எட்டிப் பார்த்திட்டு வர்றேன். ஒன்னுமே தெரியலையே!

பென்ஸ்
22-12-2005, 06:03 AM
ஆமா... 02 ஜனவரி 06 அன்று இந்த திரியை ஒரு முடிவுக்கு கொண்டு வரலாம்....
அதுவரை நம் கருத்துகளை இடுவோம்...
இந்தனை வருடங்கள் தெரியாத விஷயங்கள் சில் பதிவுகளில் தெரிந்து கொண்டேனே, அப்படி இருக்க.. அதுக்குள்ள மூடிடுவேன என்ன???

இளசு
22-12-2005, 06:04 AM
தேர்தல் அடுத்த ஆண்டுதானே மக்கா...

தமிழும் வாதத்திறமையும் இரட்டை சடையாய் பின்ன, கிண்டல் பூ மணக்க... அமர்க்களப்படுத்திறீங்களே....

அன்பு பெஞ்சமின்,

அண்மையில் இத்தனை பரபரப்பை , பதிவுகளை இச்சரடு போல் வேறெதுவும் பெற்றதில்லை.

என் மகிழ்ச்சியான பாராட்டுகள் பென்ஸ்...

பரஞ்சோதி
22-12-2005, 06:04 AM
http://www.tamilmantram.com/vb/showpost.php?p=137767&postcount=159

முகிலன் இதை படியுங்க. பதில் சொல்லுங்க.

பென்ஸ்
22-12-2005, 06:06 AM
தலை, அறீஞர் ஆகியோர் இதர்க்கு நடுவராய் வந்து தீர்ப்பளிக்க கேட்ட்கிறேன்...

இளசு வேன்டாம், அவர் ஏற்க்கனவே தன் கருத்தை இட்டுள்ளார்...

அறீஞர் மற்றும் தலை நீங்கள் உங்கள் விருப்பங்களை சொல்லவும்...

mukilan
22-12-2005, 06:09 AM
பாஞ்சாலியைப் பார்த்து சிரித்தான் சிரித்தான் எனக் குறை கூறும் நண்பர்கள் ஒரு முக்கியமான விடயத்தை மறந்து விட்டுப் பேசுவதேன். மனைவியை வைத்து சூதாடும் ஆண்மை மிக்க பாண்டவர்களை விட பாஞ்சாலியை வேறு யாரும் அவமானப் படுத்தியிருக்க முடியாது. ஒரு பெண்ணை வெறும் பொருளாகப் பாவித்த அவர்களா அவள் காவலர்கள். கயவர்கள்.

கர்ணன் வெறும் முறுக்கு சீடை கொடுத்து இருப்பான். - பரம்ஸ் அண்ணா சொன்னது. கொடுக்கும் மனம் பெரிதாய்த் தோன்றவில்லை உங்களுக்கு. சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த கதை உங்களுக்கு மறந்தா போய்விட்டது. கண்ணப்பன் கொடுத்த பன்றி இறைச்சியை உண்டான் இறைவன். கண்ணப்பன் தன் கண் கொடுத்தான் "வெறும் கண் தானே கொடுத்தான் என்பதா?" இருப்பது அனைத்தையும் இல்லை என்று சொல்லவே சொல்லாத கர்ணனை விட பெரிய வள்ளல் யாராக இருக்க முடிய்ம். கர்ணன் பெரிய வள்ளல் என்பதை கண்ண பரமாத்மாவே சொல்லியிருக்கிறாரே!

பரஞ்சோதி
22-12-2005, 06:11 AM
முகிலன்,

தனக்கு மிஞ்சியதே தானம், அதை அறியாதது மூடத்தனம்.

கர்ணன் வள்ளல் தான் இல்லை என்று சொல்லவில்லை, அதனால் என்ன ஆச்சு, அதைத் தான் பார்க்க வேண்டும்.

உங்களால் அப்படி இருக்க முடியுமா? சிந்தித்து சொல்லுங்க.

pradeepkt
22-12-2005, 06:12 AM
அண்ணா,
உங்களை நினைச்சு எனக்குப் புல்லரிக்குது.
என்னமா எதிரணி வாதங்களை வெத்து பக்கவாதங்களாக்கித் தவிடு பொடி ஆக்கீருக்கீங்க...
எனக்கே ஒரு நிமிசம் வெற்றி வீரன் விஜயன் மட்டும்தான்னு முடிவாயிருச்சு... கர்ணனோட இன்னொரு அழுக்குப் பக்கத்தை அழுக்காறுப் பக்கத்தைத் துகிலுரிச்சிக் காட்டினீங்களே, உங்களை என்னான்னு சொல்லிப் பாராட்டுறது :) :)
ஆனாலும் ... ஹி ஹி

mukilan
22-12-2005, 06:13 AM
என்னால் மட்டுமல்ல அனைவராலேயும் முடியாததாலேயே கர்ணன் தனித்து நிற்கிறான்.

பென்ஸ்
22-12-2005, 06:13 AM
தனக்கு மிஞ்சியதை கொடுத்தால் அது தானம் இல்லை .. பிச்சை..

pradeepkt
22-12-2005, 06:14 AM
சரியாக் கேட்டீங்க அண்ணா,
இங்க தலைப்பே சிறந்த மனிதர் யாருங்கறதுதானே... வீரம் கொடை நட்பு அது இதுன்னு நிறைய நிறைகளையும், ஆத்திரம் மூடத்தனம் பிறன் மனை கேவலப் படுத்துதல் நட்பைக் கொச்சைப் படுத்துதல்னு நிறைய குறைகளையும் ஆராயணும்...

mukilan
22-12-2005, 06:14 AM
ஐயா! எட்டாம் பக்கத்தை நான் எப்போதோ பார்த்திட்டேன். இதெல்லாம் ஜீஜீபி! ஜிலேபி! அல்வா!

pradeepkt
22-12-2005, 06:15 AM
தனக்கு மிஞ்சியதை கொடுத்தால் அது தானம் இல்லை .. பிச்சை..
வாங்கய்யா..
அதைத்தானே துரி கர்ணனுக்குப் போட்டான்...
ஒடனே அவன் முத்தை எடுக்கவான்னு கோர்க்கவா தூக்கிப் போடவான்னு கேட்டதை ரொம்ப உயர்வாப் பேசினீங்க

mukilan
22-12-2005, 06:15 AM
தனக்கு மிஞ்சியதை கொடுத்தால் அது தானம் இல்லை .. பிச்சை..

என்ன இருந்தாலும் துரியோட ஆளூ! அதான் கர்ணனுக்கு சப்போர்ட்றார் பென்ஸீ! சும்மா நச்னு இருக்கு!

mukilan
22-12-2005, 06:20 AM
அண்ணா,
உங்களை நினைச்சு எனக்குப் புல்லரிக்குது.
என்னமா எதிரணி வாதங்களை வெத்து பக்கவாதங்களாக்கித் தவிடு பொடி ஆக்கீருக்கீங்க...
எனக்கே ஒரு நிமிசம் வெற்றி வீரன் விஜயன் மட்டும்தான்னு முடிவாயிருச்சு... கர்ணனோட இன்னொரு அழுக்குப் பக்கத்தை அழுக்காறுப் பக்கத்தைத் துகிலுரிச்சிக் காட்டினீங்களே, உங்களை என்னான்னு சொல்லிப் பாராட்டுறது :) :)
ஆனாலும் ... ஹி ஹி
கர்ணன் யாரைப் பார்த்தும் பொறாமைப் பட்டதாக எனக்குத் தெரியவில்லை. உங்களால் முடிந்தால் கர்ணன் மீது நீங்கள் கட்டிய அழுக்காறு அவதூற்றை நிரூபணம் செய்யுங்கள்.

mukilan
22-12-2005, 06:24 AM
ஆமா... 02 ஜனவரி 06 அன்று இந்த திரியை ஒரு முடிவுக்கு கொண்டு வரலாம்....
அதுவரை நம் கருத்துகளை இடுவோம்...
இந்தனை வருடங்கள் தெரியாத விஷயங்கள் சில் பதிவுகளில் தெரிந்து கொண்டேனே, அப்படி இருக்க.. அதுக்குள்ள மூடிடுவேன என்ன???

ஐயா பென்ஸீ நீங்க பெங்களூருலதான் இருக்கீங்க. ராகவன் அவர்களைப் பிடித்து சதா பாரதம் பற்றியே பேசி துரிக்கு ஒரு ரசிகர் மன்றம் வெச்சு,----. போதுமய்யா! இந்த வாரத்தோட நிறுத்திருவோம். வேண்டாம்! சொல்லிட்டேன்.

pradeepkt
22-12-2005, 06:34 AM
கர்ணன் யாரைப் பார்த்தும் பொறாமைப் பட்டதாக எனக்குத் தெரியவில்லை. உங்களால் முடிந்தால் கர்ணன் மீது நீங்கள் கட்டிய அழுக்காறு அவதூற்றை நிரூபணம் செய்யுங்கள்.
என்னால் மட்டுமென்ன, சிறு குழந்தையும் (சரி ஒரு வாதத்துக்கு நம்ம பென்ஸூன்னு வச்சுக்குங்களேன் :D) நிரூபணம் செய்யுமே...
மற்ற அரசகுமாரர்கள் வித்தை கற்றதைப் பார்த்து வந்த பொறாமைதானே பொய் சொல்லி வித்தை கற்க வைத்தது??
மற்ற அரசர்களைப் பார்த்து வந்த பொறாமைதானே "கொள் என்றல் உயர்ந்தன்று கொள்ளேன் என்றல் அதை விட உயர்ந்தன்று" என்ற பண்பை மீறி துரிக்கு ஆதரவு அளித்து அரச பதவியை வாங்கச் சொன்னது...???
தன்னைத் தோற்கடித்த மகாரதன் அபிமன்யூவின் வீரத்தைப் பார்த்து வந்த பொறாமை (இதைப் பயமின்னும் வச்சிக்கலாம்)தானே அந்தக் குழந்தையை மற்ற அரக்கர்களுடன் சேர்ந்து துச்சாதனன் மகனைத் தூண்டிக் கொலை செய்ய வைத்தது...???

இன்னும் ஓராயிரம் பரம்ஸ் அண்ணா சொல்லுவாரு... என்னமோ போங்கய்யா... :D

mukilan
22-12-2005, 06:37 AM

இதெல்லாம் பொறாமைன்னு சொன்னா பொறாமை இல்லாதவரே பாரதத்தில் இல்லை. நான் இன்றைய பாரதத்தையும் சேர்த்துதான் சொல்றேன்.

pradeepkt
22-12-2005, 06:40 AM
அப்ப அவரு நட்பைப் போல அவரு கொடையப் போல வீரத்தைப் போல உள்ளவங்க பாரதத்துல நிறைய இருக்காங்களே... நானும் இன்றைய பாரதத்தையும் சேத்துத்தான் சொல்றேன்.

பென்ஸ்
22-12-2005, 07:12 AM
புதிய நண்பர் கர்ணன் அவர்களை வருக வருக என்று வரவேற்கிறேன், பெயருக்கு ஏற்ப உங்க பதிவுகளை அள்ளித் தாங்க.

இங்கே பாருப்பா பரம்ஸ் சேம் சைடு கோல் அடிக்கிறத....

gragavan
22-12-2005, 07:13 AM
முகிலன்,

தனக்கு மிஞ்சியதே தானம், அதை அறியாதது மூடத்தனம்.

கர்ணன் வள்ளல் தான் இல்லை என்று சொல்லவில்லை, அதனால் என்ன ஆச்சு, அதைத் தான் பார்க்க வேண்டும்.

உங்களால் அப்படி இருக்க முடியுமா? சிந்தித்து சொல்லுங்க.தனக்கு மிஞ்சியது மட்டுந்தான் தானமா? தானம் கொடுக்கும் பொழுது எதைக் கொடுக்கின்றோம் யாருக்குக் கொடுக்கின்றோம் என்று தெரிந்தே கொடுத்தவன் கர்ணன். கேட்பவன் அர்ச்சுனைனைப் பெற்றெடுத்த தந்தை என்று தெரிந்தும் கொடுத்தான். ஏன்? பகைவரும் வந்து நின்றால் வேண்டியதைக் கொடுக்கும் உத்தம குணம். யாரிடமும் பகைமை பாராட்டாத நல்ல குணம். அவனிடமே தந்தையால் பிச்சை பெற்று விட்டு, அந்த நன்றியை மறந்து அம்பு விட்ட அர்ச்சுனனைப் போல நன்றி மறந்தவன் இல்லை கர்ணன்.

gragavan
22-12-2005, 07:17 AM
தனக்கு மிஞ்சியதை கொடுத்தால் அது தானம் இல்லை .. பிச்சை..நச்சுன்னு சொன்னாரய்யா நாகர்கோயில்காரரு. அப்படிப் போடுமய்யா!

gragavan
22-12-2005, 07:21 AM
வாங்கய்யா..
அதைத்தானே துரி கர்ணனுக்குப் போட்டான்...
ஒடனே அவன் முத்தை எடுக்கவான்னு கோர்க்கவா தூக்கிப் போடவான்னு கேட்டதை ரொம்ப உயர்வாப் பேசினீங்கதுரி கெட்டவனாக்கப்பட்டவனாக்கப் பட்டவனாக இருக்கலாம். ஆனால் அவனிடம் இருந்த ஒரே நல்ல குணம் உண்மையான நட்பைப் போற்றியது. அதையும் கொச்சையாகப் பேசுவதில் ஏனய்யா இந்த மகிழ்ச்சி. மட்டற்ற மகிழ்ச்சிக்கும் மட்டமான மகிழ்ச்சிக்கும் வேறுபாடு அர்ச்சுனனுக்குத்தான் தெரியாது.

gragavan
22-12-2005, 07:28 AM
என்னால் மட்டுமென்ன, சிறு குழந்தையும் (சரி ஒரு வாதத்துக்கு நம்ம பென்ஸூன்னு வச்சுக்குங்களேன் :D) நிரூபணம் செய்யுமே...
மற்ற அரசகுமாரர்கள் வித்தை கற்றதைப் பார்த்து வந்த பொறாமைதானே பொய் சொல்லி வித்தை கற்க வைத்தது??
மற்ற அரசர்களைப் பார்த்து வந்த பொறாமைதானே "கொள் என்றல் உயர்ந்தன்று கொள்ளேன் என்றல் அதை விட உயர்ந்தன்று" என்ற பண்பை மீறி துரிக்கு ஆதரவு அளித்து அரச பதவியை வாங்கச் சொன்னது...???
தன்னைத் தோற்கடித்த மகாரதன் அபிமன்யூவின் வீரத்தைப் பார்த்து வந்த பொறாமை (இதைப் பயமின்னும் வச்சிக்கலாம்)தானே அந்தக் குழந்தையை மற்ற அரக்கர்களுடன் சேர்ந்து துச்சாதனன் மகனைத் தூண்டிக் கொலை செய்ய வைத்தது...???

இன்னும் ஓராயிரம் பரம்ஸ் அண்ணா சொல்லுவாரு... என்னமோ போங்கய்யா... :Dதிரும்பத் திரும்ப பொய் சொன்னா எப்படி பிரதீப். கர்ணன் பரசுராமரிடம் பொய் சொல்லவேயில்லை.

1. கர்ணனின் திறமையைப் பார்த்து அவன் தந்தை தேரோட்டி கர்ணனை துரோணரிடம் அழைத்துச் செல்கின்றார். தந்தை மகற்கு ஆற்றும் உதவி அவையத்து முந்தி இருப்பச் செயல். அதற்குத்தான் நல்ல வாத்தியாருன்னு அங்க கூட்டீட்டுப் போறார். ஆனால் துரோணர் தேரோட்டிக்குக் கற்றுக் கொடுக்க முடியாது என்று மறுத்து விடுகின்றார். (இவரெல்லாம் வாத்தியாரு....)

2. படிக்க வேண்டுமென்ற ஆர்வம் கர்ணனுக்கு. இது பொறாமையாகத் தெரிகின்றது. (பொறாமை என்றே தவறாகக்ப் புரிந்து கொண்டாலும் அதற்குக் காரணம் யாரென்று உங்களுக்கே தெரியும்.) பிறகு பரசுராமரிடம் கர்ணனே சென்று கேட்கின்றான். அவர் சத்திரியர்களுக்கு எதிரி. ஆகையால் தேரோட்டி மகன் என்றதுமே கற்றுக் கொடுக்க ஒப்புக் கொள்கின்றார்.

3. ஆனால் பாருங்கள். அந்த வண்டு வந்து துளைத்ததும் பரசுராமருக்கு இவர் சத்திரியன் என்று தெரிந்து விடுகின்றது. தேரோட்டி மகன் என்று பொய சொல்லி விட்டானே என்று சபித்து விடுகின்றார். இதில் கர்ணனின் குற்றம் எங்கிருந்து வந்தது. ஆராயமல் சபித்த பரசுராமரின் மீதே முழுக் குற்றமும்.

அதை மறைத்து பொய் சொன்னான் சொன்னான் என்று இங்கு நீங்கள் பொய் சொல்கின்றீர்கள்.

pradeepkt
22-12-2005, 07:39 AM
தனக்கு மிஞ்சியது மட்டுந்தான் தானமா? தானம் கொடுக்கும் பொழுது எதைக் கொடுக்கின்றோம் யாருக்குக் கொடுக்கின்றோம் என்று தெரிந்தே கொடுத்தவன் கர்ணன். கேட்பவன் அர்ச்சுனைனைப் பெற்றெடுத்த தந்தை என்று தெரிந்தும் கொடுத்தான். ஏன்? பகைவரும் வந்து நின்றால் வேண்டியதைக் கொடுக்கும் உத்தம குணம். யாரிடமும் பகைமை பாராட்டாத நல்ல குணம். அவனிடமே தந்தையால் பிச்சை பெற்று விட்டு, அந்த நன்றியை மறந்து அம்பு விட்ட அர்ச்சுனனைப் போல நன்றி மறந்தவன் இல்லை கர்ணன்.
ஏய்யா உங்களுக்கு இந்த வேலை? சிகப்புச் சிகப்பாப் பொய் சொல்றீங்க?
அர்ஜூனனின் வீரத்தைப் பார்த்தும் அவன் மகன் வீரத்தைப் பார்த்தும் இவனுக்கு அவங்க மேலெல்லாம் பகைமையே வரல்லய்யா... பாவம், அவங்களுக்கெல்லாம் மோட்சம் தரலாமின்னுதான் அவன் நாகாஸ்திரத்தை வாங்கினான், குழந்தையைப் பின்னாலிருந்து கொன்றான்.

gragavan
22-12-2005, 08:04 AM
ஏய்யா உங்களுக்கு இந்த வேலை? சிகப்புச் சிகப்பாப் பொய் சொல்றீங்க?
அர்ஜூனனின் வீரத்தைப் பார்த்தும் அவன் மகன் வீரத்தைப் பார்த்தும் இவனுக்கு அவங்க மேலெல்லாம் பகைமையே வரல்லய்யா... பாவம், அவங்களுக்கெல்லாம் மோட்சம் தரலாமின்னுதான் அவன் நாகாஸ்திரத்தை வாங்கினான், குழந்தையைப் பின்னாலிருந்து கொன்றான்.போர்க்களத்துக்கு உள்ளே வெளியேன்னு பிரிச்சுப் பாருங்க. போர் விதிமுறைகளை இரண்டு பக்கத்துலயும் மீறியிருக்காங்க. போர்க்களத்துக்கு வெளிய பாருங்க.

1. வந்து கவசகுண்டலத்தைக் கேக்குறது அகலிகைய அசிங்கப்படுத்துன இந்திரன்னு நல்லா தெரியும். அவனும் அர்ச்சுனனுக்கு உதவியாத்தான் கேக்குறான்னு தெரியும். உண்மையிலேயே அர்ச்சுனனைப் பகைவனா நெனைச்ச்சிருந்தா அவன் இந்திரன வெரட்டி விட்டிருக்கலாம். ஆனா செய்யலை. கவச குண்டலத்தைக் குடுத்தானா இல்லையா!

2. அர்ச்சுனனைத் தவிர யாரையும் கொல்ல மாட்டேன்னு குந்திக்கு உறுதி மொழி குடுக்கலை. குடுத்த வாக்கையும் காப்பாத்தலை. இதெல்லாம் உங்களுக்குத் தெரியலை?

3. அப்பா தம்பிகளோடு வந்து சேரக் கூடாதான்னு குந்தி கதறிக் கேட்டும் மறுத்தானே. அம்மா நான் அன்னைக்கு அழுதப்ப நீ வரலை. துரிதான் வந்தான். அந்தச் சபையில் நீயுந்தான் இருந்தாய். அன்னைக்கு அத்தனை பேர் முன்னாடி மானத்தைக் காப்பாற்றிய நன்றி ஒன்றுக்காக துரியனுக்கு உயிரையும் கொடுப்பேன்னு சொன்னானே............அந்த உத்தமனையா இப்படிப் பேசுவது?

இவ்வளவு பேசுகின்றீர்களே...வில்லாதி வில்லன். சூராதி சூரனென்று. அந்த அர்ச்சுனன் போரில் தோற்று ஓடிய கதை உங்களுக்குத் தெரியுமோ? பாரதப் போர் முடிந்ததுமே கண்ணன் கைப்பாவையாக இருந்த அர்ச்சுனன் நிலை மாறி விடுகின்றது. வந்த வேலை முடிந்தது என்று கர்ணன் புறப்பட்டுப் போன பின் அர்ச்சுனன் துவாரகையிலிருந்தவர்களை இயற்கை அழிவிலிருந்து காப்பாற்றிக் கூட்டி வருகையில் எந்தப் போர் முறையும் கல்லாத திருடர்களிடம் அடிபட்டு மிதிபட்டு உதைபட்டு அனைத்தையும் இழந்து அவமானப் பட்டது தெரியாதா உங்களுக்கு.

gragavan
22-12-2005, 08:09 AM
சந்தடி சாக்குல யாரோ காந்தாரிக்கு ஓட்டுப் போட்டுட்டுச் சொல்லாமக் கொள்ளாம தப்பிச்சு ஓடப் பாக்குறாங்க. யாரு அது? வந்து காந்தாரி பக்கத்து நியாயத்தச் சொல்லுங்க.

gragavan
22-12-2005, 08:11 AM
அதே மாதிரி பீஷ்மருக்கு ரெண்டு பேரு ஓட்டு போட்டிருக்கிங்க...யாரு அந்த ரெண்டு பேரு. உண்மையச் சொல்லீருங்க. இல்லைன்னா பீஷ்மர் செஞ்ச தப்பையெல்லாம் நாங்க எடுத்துச் சொல்ல வேண்டி வரும்.

pradeepkt
22-12-2005, 08:15 AM
ஆமாமா,
காந்தாரி பீஷ்மர் பக்கம் ஓட்டுப் போட்டவுக வந்து அவுகவுக நியாயத்தை எடுத்துச் சொல்லுங்கப்பூ...
இல்லைன்னா அப்புறம் நல்லாருக்காது ஆமா சொல்லிட்டேன் :D :D :D

pradeepkt
22-12-2005, 08:17 AM
பைதிவே,
ராகவா, நான் ஒண்ணும் அர்ஜூனந்தான் மாவீரன், அவந்தான் சிறந்தவன்னு இன்னும் சொல்லலையே... நீங்க ஏன் என் பக்கம் திருப்புறீங்க?

இன்னொரு பக்கம் துரிக்கு வேற யாராச்சும் பேசுறீங்கன்னாலும் பேசீருங்க... பென்ஸூ பாவம் வேற நிறைய வேலை இருக்கு அவருக்கு... குறிப்பா முதியோர் கல்வி :D :D :D

மதி
22-12-2005, 08:19 AM
அது சரி...ராகவன் என்னிக்கு தீர்ப்பு சொல்லலாம் சொல்லுங்க...?!

pradeepkt
22-12-2005, 08:22 AM
முதல்ல
மிஸஸ் காந்து...
மிஸ்டர் பீஷ்மூ
பக்கம் ஓட்டுப் போட்டவுக வந்து காரணத்தைச் சொல்லணும்.
அப்புறம் so called தர்மதேவன் மிஸ்டர் தர்முவுக்கு ஏன் யாரும் ஓட்டுப் போடலைன்னும் சொல்லணும்... இன்னும் எத்தனை இருக்கு....???
அதுவும் இது ஒரு நல்ல திரி, நிறைய பாரத விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம்...
நீங்க அதுக்குள்ள கால்ல வென்னித்தண்ணியக் கொட்டின மாதிரி பறக்குறீங்க...

gragavan
22-12-2005, 09:27 AM
அது சரி...ராகவன் என்னிக்கு தீர்ப்பு சொல்லலாம் சொல்லுங்க...?!தீர்ப்ப என்னத்த சொல்றது. அதான் ஓட்டுப் போட்டு மக்களே சொல்லீட்டாங்களே. இதுக்கு மேல ஒரு தீர்ப்பு வேணுமா என்ன?

gragavan
22-12-2005, 09:31 AM
முதல்ல
மிஸஸ் காந்து...
மிஸ்டர் பீஷ்மூ
பக்கம் ஓட்டுப் போட்டவுக வந்து காரணத்தைச் சொல்லணும்.
அப்புறம் so called தர்மதேவன் மிஸ்டர் தர்முவுக்கு ஏன் யாரும் ஓட்டுப் போடலைன்னும் சொல்லணும்... இன்னும் எத்தனை இருக்கு....???
அதுவும் இது ஒரு நல்ல திரி, நிறைய பாரத விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம்...
நீங்க அதுக்குள்ள கால்ல வென்னித்தண்ணியக் கொட்டின மாதிரி பறக்குறீங்க...அதான காந்துவுக்கு கோந்து மாதிரி ஓட்டுப் போட்ட ஒருத்தரும், பீஷ்முவுக்கு ஓட்டுப் போட்ட ரெண்டு பேரும் வரனும். அவங்க நியாயத்தை எடுத்து வெச்சு அத நாங்க ஒத்துக்கக்கூடாது. அப்புறமா வாங்குன ஓட்டுகள வெச்சி முடிவுரை. அதுக்கு முன்னாடி நோ.

ஜொக்ஸ் அபார்ட். உண்மையிலேயே பாரதம் பற்றிய பல தகவல்களைப் பரிமாறியிருக்கின்றோம் என்பதும் உண்மை. இன்னும் கொஞ்சம் இந்தத் திரி ஓடட்டும்.

அதுக்கு பீஷ்மூ அண்டு கேங், காந்து அண்டு கேங் வந்து நியாயங்கள் சொல்லட்டும்.

ஒருத்தர்: ஏய்யா! அந்தாளு பேருல தருமம் வெச்சிருக்காரு. அவர ஒருத்தரும் சீண்ட மாட்டேங்கீங்களே!
இன்னொருத்தர்: அவரு பேருல மட்டுந்தாங்க தருமத்த வெச்சிருந்தாரு.

gragavan
22-12-2005, 09:33 AM
பைதிவே,
ராகவா, நான் ஒண்ணும் அர்ஜூனந்தான் மாவீரன், அவந்தான் சிறந்தவன்னு இன்னும் சொல்லலையே... நீங்க ஏன் என் பக்கம் திருப்புறீங்க?

இன்னொரு பக்கம் துரிக்கு வேற யாராச்சும் பேசுறீங்கன்னாலும் பேசீருங்க... பென்ஸூ பாவம் வேற நிறைய வேலை இருக்கு அவருக்கு... குறிப்பா முதியோர் கல்வி :D :D :Dசரி. அப்ப கருணனையும் அர்ச்சுனனையும் கொஞ்சம் ரெஸ்ட்டு எடுக்கச் சொல்லுவோம். அடுத்து பீஷ்மரப் பிடிப்போமா? நீங்க ஆதரவாப் பேசுறீங்களா? எதுராப் பேசுறீங்களா?

அறிஞர்
22-12-2005, 01:53 PM
அட மக்கா என்ன நடக்குது இங்கே... 3 நாளுக்குள்... 20 பக்கம் ஓட்டி விட்டீர்கள்

pradeepkt
22-12-2005, 02:04 PM
என்ன நடக்குதுன்னுதான் பாக்குறீங்களே...
நீங்களும் யாருக்காச்சும் ஓட்டுப் போடுறீங்களா

mukilan
22-12-2005, 03:47 PM
பீஷ்மருக்கு ஒரு ஓட்டு இளசு அண்ணா போட்டார். ஆனால் மற்றவர்தான் யாரென்று தெரியவில்லை.

அறிஞர்
22-12-2005, 04:13 PM
என்ன நடக்குதுன்னுதான் பாக்குறீங்களே...
நீங்களும் யாருக்காச்சும் ஓட்டுப் போடுறீங்களாயாரை பத்தியுமே ஒழுங்கா தெரியாது.. இதுல யாருக்கு ஓட்டு போடறது.....

பென்ஸ்
22-12-2005, 04:27 PM
அப்ப நடுவரா இருக்க்லாம் இல்லையா?????

gragavan
23-12-2005, 04:46 AM
அப்ப நடுவரா இருக்க்லாம் இல்லையா?????ஆகா! நடுவரா இருக்க ஒன்னுந் தெரியாம இருக்கனுமா!!!!!!!!!!!!!!!! அதுக்குதான் அறிஞரக் கூப்பிடுறீங்களா! இது ஐவரணியில விசாரிக்க வேண்டிய விஷயமாச்சே!

aren
23-12-2005, 06:21 AM
ஆகா! நடுவரா இருக்க ஒன்னுந் தெரியாம இருக்கனுமா!!!!!!!!!!!!!!!! அதுக்குதான் அறிஞரக் கூப்பிடுறீங்களா! இது ஐவரணியில விசாரிக்க வேண்டிய விஷயமாச்சே!

நடுவராக இருக்கவேண்டுமென்றால் ஒன்றும் தெரியாதவராக இருக்கவேண்டுமா?

அதான் "தலையை" நடுவராக இருக்கக்கூப்பிட்டீங்களா?

பிரச்சனையை திசைதிருப்ப நினைக்கும்
ஆரென்

gragavan
23-12-2005, 07:24 AM
நடுவராக இருக்கவேண்டுமென்றால் ஒன்றும் தெரியாதவராக இருக்கவேண்டுமா?

அதான் "தலையை" நடுவராக இருக்கக்கூப்பிட்டீங்களா?

பிரச்சனையை திசைதிருப்ப நினைக்கும்
ஆரென்உண்மைதான் ஆரென். தலைக்கு "கெட்டது" ஒன்றும் தெரியாது. :) இது எப்படி இருக்கு?

thirukanaga
25-12-2005, 12:40 AM
ippa avankaLellaam iruwthirukka veeNum
appa vaissirukeendaa..........

thirukanaga
25-12-2005, 12:41 AM
இப்ப அவன்களெல்லாம் இருந்திருக்க வேணும்
அப்ப வைச்சிருக்கேன்டா............

aren
26-12-2005, 12:10 AM
உண்மைதான் ஆரென். தலைக்கு "கெட்டது" ஒன்றும் தெரியாது. :) இது எப்படி இருக்கு?

ராகவன் நீங்கள் என்னமோ சொல்கிறீர்கள் என்று தெரிகிறது. ஆனால் புரியவில்லை.

குழப்பத்துடன்
ஆரென்

aren
26-12-2005, 12:11 AM
இப்ப அவன்களெல்லாம் இருந்திருக்க வேணும்
அப்ப வைச்சிருக்கேன்டா............

என்னசொல்லவருகிறீர்கள். யாரெல்லாம் இருந்திருக்கவேண்டும்.

பயங்கர குழப்பத்துடன்
ஆரென்

mukilan
02-01-2006, 05:34 AM
தர்மருக்கு போனா போகுதுன்னு யாரோ ஓட்டுப் போட்டிருக்கிறார்கள். சரி இந்த ஓட்டெடுப்பை இன்னைக்கோட முடிச்சிக்கலாமா?

aren
02-01-2006, 06:01 AM
தர்மருக்கு போனா போகுதுன்னு யாரோ ஓட்டுப் போட்டிருக்கிறார்கள். சரி இந்த ஓட்டெடுப்பை இன்னைக்கோட முடிச்சிக்கலாமா?

போனாப்போகுதுன்னா போட்டிருக்கிறார்கள். ஒரு முறை மறுபடியும் பாருங்கள். அது கள்ள ஓட்டாக இருக்கப்போகிறது.

pradeepkt
02-01-2006, 06:26 AM
என்னமோ போங்க,
அடுத்து ராமாயணத்தைப் பத்திப் பேசலாமா...
அட எங்கே ஓடறீங்க... :D

gragavan
02-01-2006, 06:41 AM
இராமாயணத்தைப் பத்திப் பேசனுமா? அத விட எங்கிட்ட சூப்பர் டாபிக் இருக்கு.

யார் மோசமான கணவன்னு? அதை பொங்கலுக்கு அப்புறமா தொடங்குறேன். அது வரைக்கும் கருண மகாராசன் புகழப் பாடுவோம்.

தாமரை
02-01-2006, 06:45 AM
இராமாயணத்தைப் பத்திப் பேசனுமா? அத விட எங்கிட்ட சூப்பர் டாபிக் இருக்கு.

யார் மோசமான கணவன்னு? அதை பொங்கலுக்கு அப்புறமா தொடங்குறேன். அது வரைக்கும் கருண மகாராசன் புகழப் பாடுவோம்.

அதுக்கு பதிலா அதிகம் பொய் சொல்வது ஆண்களா பெண்களான்னு ஆரம்பிக்கலாமே!!!

gragavan
02-01-2006, 06:55 AM
அதுக்கு பதிலா அதிகம் பொய் சொல்வது ஆண்களா பெண்களான்னு ஆரம்பிக்கலாமே!!!அது பத்தி நம்ம எல்லாரும் பொய் சொல்லலாமுன்னு சொல்றீங்களா?

தாமரை
02-01-2006, 07:33 AM
அது பத்தி நம்ம எல்லாரும் பொய் சொல்லலாமுன்னு சொல்றீங்களா?
இல்லை! பொய்யா பொய் சொல்ல முடியாது பாருங்க...

pradeepkt
02-01-2006, 11:04 AM
நெசமா, பொய்யச் சொல்லக் கூட இங்க பலருக்குத் திராணி கிடையாது.
நீங்க என்னடான்னா பொய்யாப் பொய்யச் சொல்லச் சொல்றீங்க :D

தாமரை
02-01-2006, 11:57 AM
பொய்யான ஒரு பொய்யை பொய்யாக சொல்வோருக்கு பரிசு அப்படின்னு தண்டோரா போட்டுருவோமா?

gragavan
03-01-2006, 04:19 AM
பொய்யான ஒரு பொய்யை பொய்யாக சொல்வோருக்கு பரிசு அப்படின்னு தண்டோரா போட்டுருவோமா?தண்டோரால்லாம் எதுக்கு....நேரா அந்தப் பரிசை ஒம்ம கையில குடுத்துரலாம் போல.

aren
03-01-2006, 04:21 AM
பொய்யான ஒரு பொய்யை பொய்யாக சொல்வோருக்கு பரிசு அப்படின்னு தண்டோரா போட்டுருவோமா?

அப்படின்னா நீங்க சாதாரணமாக பேசினாலே உங்களுக்கு பரிசு கிடைச்சுடும் இல்லையா?

mukilan
03-01-2006, 04:28 AM
பாருங்களேன். துரிக்கு கூட பீஸ்மருக்குச் சமமா வாக்குகள் கிடைத்திருக்கின்றன. என்ன இருந்தாலும் கர்ணனின் நண்பன் அல்லவா!

gragavan
03-01-2006, 04:30 AM
அப்படின்னா நீங்க சாதாரணமாக பேசினாலே உங்களுக்கு பரிசு கிடைச்சுடும் இல்லையா?எங்க????????? இந்நேரம் நீங்கள்ளாம் சேந்து இந்தா பிடி பரிசைன்னு குடுத்திருக்க வேண்டாம்........

aren
03-01-2006, 04:31 AM
எங்க????????? இந்நேரம் நீங்கள்ளாம் சேந்து இந்தா பிடி பரிசைன்னு குடுத்திருக்க வேண்டாம்........

இந்த பதிவை ஆரம்பித்தவர்தானே பரிசை கொடுக்கவேண்டும். அவரை கொடுக்கச்சொன்னால் போயிற்று.

aren
03-01-2006, 04:33 AM
பாருங்களேன். துரிக்கு கூட பீஸ்மருக்குச் சமமா வாக்குகள் கிடைத்திருக்கின்றன. என்ன இருந்தாலும் கர்ணனின் நண்பன் அல்லவா!

அப்படின்னா, துரியோதனன் கூட கர்ணனின் நண்பன் தானே?

தாமரை
03-01-2006, 05:10 AM
இந்த பதிவை ஆரம்பித்தவர்தானே பரிசை கொடுக்கவேண்டும். அவரை கொடுக்கச்சொன்னால் போயிற்று.

கர்ணனுக்கு ஓட்டுப் போட்டவங்க எல்லாம் பரிசை அள்ளித் தருவாங்க..
கவலையே இல்லை

gragavan
03-01-2006, 06:00 AM
கர்ணனுக்கு ஓட்டுப் போட்டவங்க எல்லாம் பரிசை அள்ளித் தருவாங்க..
கவலையே இல்லையார் யார் யார் யாருக்கு ஓட்டுப் போட்டாங்களோ அவங்க கிட்டயே அவங்க அவங்க பரிசு வாங்கிக்குங்க.

மதி
03-01-2006, 06:03 AM
மொத்தமா வெளியே நின்னு எல்லோருக்கும் ஆதரவளித்த எனக்கு பரிசு என்னப்பா..?

மதி
03-01-2006, 06:04 AM
யார் யார் யார் யாருக்கு ஓட்டுப் போட்டாங்களோ அவங்க கிட்டயே அவங்க அவங்க பரிசு வாங்கிக்குங்க.
சரியா போச்சு..! இதுக்காக எல்லோரும் கர்ணனை எங்கே போய் தேடுவாங்க..?:mad: :mad:

gragavan
03-01-2006, 06:11 AM
சரியா போச்சு..! இதுக்காக எல்லோரும் கர்ணனை எங்கே போய் தேடுவாங்க..?:mad: :mad:கர்ணன விடுங்க....துரி, பீஷ்மன், தருமன், காந்தாரி, அருச்சுனன் எல்லாரையும் தேடனும் போல. ஏன்னா தருமனுக்குக் கூட ஒரு ஓட்டு விழுந்திருக்கே.

மதி
03-01-2006, 06:13 AM
கர்ணன விடுங்க....துரி, பீஷ்மன், தருமன், காந்தாரி, அருச்சுனன் எல்லாரையும் தேடனும் போல. ஏன்னா தருமனுக்குக் கூட ஒரு ஓட்டு விழுந்திருக்கே.
ஆமா, அது என்னங்க திருகனகா எல்லார்க்கும் தன் ஓட்டை அள்ளி வீசி இருக்காங்க..:mad: :mad:
இதுலேயும் கள்ள ஓட்டா..?:D :D

தாமரை
03-01-2006, 06:33 AM
எங்க????????? இந்நேரம் நீங்கள்ளாம் சேந்து இந்தா பிடி பரிசைன்னு குடுத்திருக்க வேண்டாம்........

பேச்சை மாற்ற வேண்டாம்...

பரிசு எதுக்கு? பொய்யான ஒரு பொய்யை பொய்யாய் சொல்வதற்கு...
:D :D :D :D

mukilan
03-01-2006, 06:40 AM
ஆமா, அது என்னங்க திருகனகா எல்லார்க்கும் தன் ஓட்டை அள்ளி வீசி இருக்காங்க..:mad: :mad:
இதுலேயும் கள்ள ஓட்டா..?:D :D
திருக்கனகா அளித்த வாக்கு உங்களுக்கு எப்படித் தெரியும் மதி. இதில் ஏதோ உள் குத்து இருக்கோய்!

மதி
03-01-2006, 07:28 AM
திருக்கனகா அளித்த வாக்கு உங்களுக்கு எப்படித் தெரியும் மதி. இதில் ஏதோ உள் குத்து இருக்கோய்!
view Poll Results-ல் போய் பாருங்கள் அப்பு..பெறவு தெரியும்.:mad: :mad: :angry:

gragavan
03-01-2006, 07:44 AM
view Poll Results-ல் போய் பாருங்கள் அப்பு..பெறவு தெரியும்.:mad: :mad: :angry:ஐயா எனக்கு ஒன்னும் தெரியலையே...அதென்ன லிங்க்கு....அதக் குடுத்தா நாங்களும் போய்ப் பாக்குறோம்.

தாமரை
03-01-2006, 07:47 AM
தருமன் thirukanaga 1 6.67%
அர்ச்சுனன் பரம்ஸ், thirukanaga 2 13.33%
கர்ணன் பிரியன், வெற்றி, Aravind, gragavan, Mano.G., mukilan, pgk53, sarcharan, thirukanaga 9 60.00%
துரியோதனன் benjaminv, stselvan, thirukanaga 3 20.00%
பீஷ்மர் ilasu, kavinila, thirukanaga 3 20.00%
காந்தாரி தேவி ilanthirayan, thirukanaga 2 13.33%

மதி
03-01-2006, 07:49 AM
ஐயா எனக்கு ஒன்னும் தெரியலையே...அதென்ன லிங்க்கு....அதக் குடுத்தா நாங்களும் போய்ப் பாக்குறோம்.
ராகவன் இதில் முயற்சி செய்து பாருங்கள்.
http://www.tamilmantram.com/vb/poll.php?do=showresults&pollid=27

sarcharan
03-01-2006, 08:29 AM
என்ன இது?
திருக்கனகா எல்லாத்துக்கும் வாக்களித்து இருக்கார்.....
:eek:

ராகவன் இதில் முயற்சி செய்து பாருங்கள்.
http://www.tamilmantram.com/vb/poll.php?do=showresults&pollid=27

gragavan
03-01-2006, 08:43 AM
ராகவன் இதில் முயற்சி செய்து பாருங்கள்.
http://www.tamilmantram.com/vb/poll.php?do=showresults&pollid=27இது எப்படி சாத்தியமாகும்? ஒருவரே அனைத்திற்கும் ஓட்டுப் போடுவது முடியுமா?

சரி. அவர் யாரையும் விடவில்லை. எல்லாருக்கும் நல்லது செய்ய நினைத்திருக்கின்றார். அவ்வளவே. ஆகவே விஷயத்தை இத்தோடு விடலாம் என்று நினைக்கின்றேன்.

aren
03-01-2006, 08:46 AM
இந்த மாதிரி ஓட்டு போட்ட விஷயங்கள் தெரியக்கூடாது. தலைவர் அவர்களுக்கு இந்த பதிவை அனுப்பவேண்டும்.

இளசு அவர்களே, கொஞ்சம் கவனிக்கவும்.

pradeepkt
03-01-2006, 11:26 AM
இல்ல அது என்னான்னா...
இந்த ஓட்டு ஒருத்தர மட்டும் செலக்ட் பண்ற ரேடியோ பட்டனா இல்லல. அதுனால எல்லாத்திலயும் குத்து குத்துனு குத்திட்டாரு திருகனகா.
இவரல்லவோ நடுநிலையர்... :D :D :D

ஆரென் அண்ணா,
இதென்ன பெரிய ரகசிய வாக்கெடுப்பா... சட்டமன்றத்தில கையை உயர்த்துற மாதிரிதானே...பேரு தெரிஞ்சாத் தெரிஞ்சிட்டுப் போவுது

aren
03-01-2006, 11:30 AM
ஆரென் அண்ணா,
இதென்ன பெரிய ரகசிய வாக்கெடுப்பா... சட்டமன்றத்தில கையை உயர்த்துற மாதிரிதானே...பேரு தெரிஞ்சாத் தெரிஞ்சிட்டுப் போவுது

இப்போ ஒருவர் அனைவருக்கும் ஓட்டு போட்டது அம்பலமாகிவிட்டதல்லவா?

அதுபோல் யாருக்கு அதிக ஓட்டு இருக்கிறது என்று பார்த்து மற்றவர்களும் அவருக்கு ஓட்டு போடுவார்கள். ஆகையால் நடுநிலை இதில் இருக்காது.

pradeepkt
03-01-2006, 11:44 AM
ஒருத்தர் ஒருத்தருக்கே ரெண்டு தடவை ஓட்டுப் போடுற மாதிரி ஏதாச்சும் வழி இருக்கா...
ஹி ஹி எல்லாம் ஒரு முன்னேற்பாட்டுக்குத்தான் :D :D :D

மதி
03-01-2006, 11:56 AM
ஒருத்தர் ஒருத்தருக்கே ரெண்டு தடவை ஓட்டுப் போடுற மாதிரி ஏதாச்சும் வழி இருக்கா...
ஹி ஹி எல்லாம் ஒரு முன்னேற்பாட்டுக்குத்தான் :D :D :D
செஞ்சுட்டாப் போச்சு..:D :D

இளசு
03-01-2006, 07:44 PM
திருகனகா அவர்கள் மட்டும் எப்படி அனைவருக்கும் வாக்களிக்க முடிந்தது என எனக்கு விளங்கவில்லை.

மென்பொருள் தவறா?

முதலிலேயே அனைவருக்கும் வாக்கு அளித்து 'சப்மிட்' செய்ய இயலுமா?

முதலில் திருகனகா அவர்களே சொல்லட்டுமே...

aren
03-01-2006, 11:23 PM
ஒருத்தர் ஒருத்தருக்கே ரெண்டு தடவை ஓட்டுப் போடுற மாதிரி ஏதாச்சும் வழி இருக்கா...
ஹி ஹி எல்லாம் ஒரு முன்னேற்பாட்டுக்குத்தான் :D :D :D

ஜெயிக்கனும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கு. ஆனால் அதற்காக இப்படியா?

பிரதீப் நீங்கள் பிழைத்துக்கொள்வீர்கள். வாழ்த்துக்கள்.

gragavan
04-01-2006, 04:17 AM
பிரதீப்பின் பேராசைக்கு அளவே இல்லையா! நாங்கள்ளாம் ஒரு ஓட்டு போட்டாலும் திரு வோட்டா போடுவோம். நீங்க பல வோட்டு போட்டாலும் திருவோடுதான்.

pradeepkt
04-01-2006, 09:34 AM
திருவோடோ கருவாடோ... ஓட்டுக் கெடைச்சாச் சரி...
ஆமா திருவோடு வச்சிருக்கவுகளை என்னமோ கேவலமாப் பேசிப் புட்டீரு...
நம்மூர்ல இப்படி ஒருத்தர் நாலு வீடு நாலு சின்ன(?!) வீடு வச்சிருந்தது தெரியாதா? :D

gragavan
04-01-2006, 11:27 AM
திருவோடோ கருவாடோ... ஓட்டுக் கெடைச்சாச் சரி...
ஆமா திருவோடு வச்சிருக்கவுகளை என்னமோ கேவலமாப் பேசிப் புட்டீரு...
நம்மூர்ல இப்படி ஒருத்தர் நாலு வீடு நாலு சின்ன(?!) வீடு வச்சிருந்தது தெரியாதா? :Dஅதுவும் உண்மைதானய்யா! இந்த ஒலகத்தையே படைச்சுக் காத்து ரச்சிக்கிறவரு கையிலயும் திருவோடுதானாமுல்ல.

தாமரை
04-01-2006, 12:58 PM
சண்டையை அப்புறமா வச்சுக்கலாம்.. சட்டுன்னு அடுத்த டாபிக் ஆரம்பிங்க