PDA

View Full Version : ராமாயணத்தில் ஒரு சந்தேகம்..



ஜீவா
18-12-2005, 09:51 AM
இன்று, என்னையும் ஒரு இலக்கியம் அறிந்தவன் :D என்று என் நண்பன் நம்பி இந்த கேள்வியை கேட்டான்.. நான், கொஞ்ச நேரம் பொறு நண்பா என்று சொல்லி விட்டு மன்றத்துக்கு ஓடி வந்து விட்டேன்..:D :D

கேள்வி என்னவென்றால்,

ராமாயணத்தில், சீதை ராமனை வயது மூத்தவரா?? ஆம் என்றால் எத்தனை வருடங்கள்..

ராகவன் அண்ணா, நீண்ட விளக்கம் கொடுப்பார் என நம்புகிறேன்..

பரஞ்சோதி
18-12-2005, 09:54 AM
ஜீவா, ரொம்ப முக்கியமான சந்தேகம். இது தேவை தானா? இதனால் என்ன பயன்?

வேற ஏதாவது நல்ல விசயத்தில் சந்தேகம் கேளுங்களேன்.

ஜீவா
18-12-2005, 10:03 AM
அய்யோ பரம்ஸ் அண்ணா.. இது நகைச்சுவைக்காக கேட்கலை.. நண்பன் ஒரு பொண்ணை காதலிக்கிறான்.. அவள், அவனை விட மூத்தவள்.. அவன் ஏதோ ஒரு அர்த்தத்தில் என்னிடம் கேட்டான்.. என்னால், இணைய தளத்தில் கண்டு புடிக்க முடியவில்லை.. அதான் இங்கே கேட்டேன்..

இளந்தமிழ்ச்செல்வன்
18-12-2005, 11:14 AM
அய்யோ பரம்ஸ் அண்ணா.. இது நகைச்சுவைக்காக கேட்கலை.. நண்பன் ஒரு பொண்ணை காதலிக்கிறான்.. அவள், அவனை விட மூத்தவள்.. அவன் ஏதோ ஒரு அர்த்தத்தில் என்னிடம் கேட்டான்.. என்னால், இணைய தளத்தில் கண்டு புடிக்க முடியவில்லை.. அதான் இங்கே கேட்டேன்..

அப்படின்னா அந்த பெண்ணை எத்தனை வயது வயது வித்தியாசமோ அத்தனை பழைய 10 பைசாவை முழுங்கச் சொல்லுங்க. அப்புறம் கல்யாணம் கட்டிக்கலாம்.

மேலே சொன்னது சும்மா உலுலாயிக்கு.

பரஞ்சோதி
18-12-2005, 04:41 PM
இ.த.செவிடம் நிறைய பழைய காசுகள் இருக்கிறதாம்.

aren
18-12-2005, 10:45 PM
இ.த.செவிடம் நிறைய பழைய காசுகள் இருக்கிறதாம்.

சோழன் சேரன் பாண்டியன் காலத்து காசுகள் இருந்தால் எனக்கு கொஞ்சம் கொடுங்கப்பா.

ilanthirayan
19-12-2005, 12:05 AM
இது பற்றி நம்ம சர்தாஜியிடம் கேட்டேன். அவரு தன் அனுபவத்தை சொன்னார். உங்களுக்கு சரின்னுபட்டா... உங்க நண்பன் கிட்ட சொல்லுங்க ஜீவா...

நம்ம சர்தாஜியும் ஒரு பொண்ணைக் காதலிச்சார். அந்த பொண்னை திருமனம் செய்ய விரும்புவதாக அந்தப் பென்ணிடமே கேட்டாரு.

அந்தப் பொண்ணும் திருமணம் செய்துக்கலாம் தான் ... ஆனா நீ என்னை விட ஒரு வயசு கொறைச்சலாச்சே அதான் யோசிக்கிறேன்னா...

நம்ம சர்தாஜி தானே அறிவுக் கொழுந்தாசே.... உடனும் சொன்னாரு... சரி ஒரு வருஷம் பொறுத்திருப்போம்..... அடுத்த வருஷம் எனக்கும் உன் வயசாயிடும். அப்போ .கல்யாணம் செய்துக்குவோம்ன்னாரு...

அப்படியே கல்யாணம் செய்து அவங்க சந்தோஷமா இருக்காங்கப்பா...

mukilan
19-12-2005, 12:19 AM
அட என்ன ஜீவா! இதுக்குப் போயி அலட்டிக்கலாமா? காந்திஜியின் மனைவி காந்தியை விட மூத்தவராம். டெண்டுல்கரின் மனைவி அஞ்சலி 5 வயது மூத்தவர். முகமது நபிகளும் தன்னை விட வயது முதிர்ந்த அம்மையாரைத் திருமணம் செய்து கொண்டார். சார்லஸ் (இங்கிலாந்து இளவரசர்) இப்போ கல்யாணம் கட்டிக்கிட்டவங்க அவரை விட பல வருஷம் மூத்தவங்களாம். எல்லாத்துக்கும் மேல சூப்பர்ஸ்டார் மருமகன் சுள்ளான் 3 வயது மூத்த அம்மிணியைத்தான் கட்டிக்கிட்டார். இதுக்கும் மேல உதாரணம் வேணுமின்னா பாலச்சந்தர் சார் கிட்ட கேட்கலாம். மனசு ஒத்துப் போனா சாதி, மதம், பொருளாதாரம் எப்படி தடையில்லையோ அது போல வயசெல்லாம் ஒரு ஜூஜூபி தான்!

aren
19-12-2005, 12:40 AM
முகிலன் உங்கள் விளக்கம் அருமை. அந்த காலத்தில் நடந்த விஷயங்களையும் இந்த காலத்தில் நடந்த விஷயங்களையும் அழகாக எடுத்துச்சொல்லி எந்த காலத்திலும் நம்மைவிட வயதில் அதிகமான ஒரு பெண்மனியை மணமுடிக்கலாம் என்று சொன்னது நன்றாக இருந்தது.

பென்ஸ்
19-12-2005, 04:58 AM
முகிலன் உங்கள் விளக்கம் அருமை. அந்த காலத்தில் நடந்த விஷயங்களையும் இந்த காலத்தில் நடந்த விஷயங்களையும் அழகாக எடுத்துச்சொல்லி எந்த காலத்திலும் நம்மைவிட வயதில் அதிகமான ஒரு பெண்மனியை மணமுடிக்கலாம் என்று சொன்னது நன்றாக இருந்தது.

பின்னா பின்ன... நம்ம வில்லியம் சேக்ஸ்பியர் கூட வயதில் முதியவரைதான் கல்யானம் பன்னி இருந்தார்.... தப்பே இல்லை... மருத்துவ ரீதியான சில சிக்கல்களை மட்டும் சொல்லுவர்..(இளசு... அப்பிடியா??)
ஒருமுறை நம்முடைய சேக்ஸ்பியர் நன்பர்களுடன் தன் வீட்டின் வேளியெ உள்ள புல்வேளியில் இருந்து பேசி கொண்டிருந்தார், அவருடைய வீட்டு அம்மனி ஏதோ கோபத்தில் இருக்க, சேக்ஸ்பியரை அழைத்தார்... இவர் நண்பர்களுடன் ஜாலியாக பேசி கொண்டிருததால் செவிமடுக்கவில்லை.. இதனால் அம்மையாருக்கு ஆவேசம் வந்து கத்தினார்.... ஆனாலும் சேக்ஸ்பியர் செவிமடுக்கவில்லை... ரெம்ப கோபம் வந்த அம்மையார் ஒரு வாளி நிறைய தண்ணிரை எடுத்து மாடியில் இருந்து அவர் தலையில் கொட்டினார்....;) ;) ;)

இதை வாங்கிகொண்டு சேக்ஸ்பியர் வடிவேல் ஸ்டைலில் சமாளித்து கொண்டு..."முதலில் இடி இடித்தது, இப்போது மழை பொழிகிறது" என்றர்... பாவம் வேறு என்ன சொல்ல முடியும்...:rolleyes: :rolleyes: :rolleyes:

சரி எல்லாம் விடுங்க... நன்ன சீதை ராமனை விட மூத்தவரா இல்லையா????:confused: :confused: :confused:

குறிப்பு: எல்லோரும் வயதில் மூத்தவரை கல்யாணம் பண்ணுவது தப்பில்லை என்று கூற, யாராவது குழப்ப வேனும் இல்லியா.. அதுதான் :-):D :D :D :D

ஜீவா
19-12-2005, 05:12 AM
சரி எல்லாம் விடுங்க... நன்ன சீதை ராமனை விட மூத்தவரா இல்லையா????:confused: :confused: :confused:
):D :D :D :D

நன்னா சொன்னீங்க பெஞ்சு.. யாரும் நம்ம கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல மாட்டிக்கிறாங்க.. :rolleyes: :rolleyes:

தாமரை
02-01-2006, 10:38 AM
இதிலிருந்து என்ன தெரியறதுன்னா பொண்ணுங்க வயச மறைக்கிறது அந்த காலத்தில இருந்தே இருக்குது...

gragavan
02-01-2006, 10:48 AM
ஜீவாவோட கேள்வியில நியாயம் இல்லாம இல்லை. சீதைக்கு இராமரை விட வயசு கூடன்னு எங்கையோ படிச்ச நினைவு இருக்கு. சரியா நினைவுக்கு வரலை. ஏன்னா.....அவதாரம் பண்ணனுமுன்னு முடிவெடுத்த உடனேயே தாயார் குழந்தையா ஜனகன் கைல கெடச்சிட்டாரே. ஆனா ராமரு பத்து மாசம் வயித்துல இருந்துதான வந்தாரு. அதுனால பத்து மாசம் மூப்புன்னு வெச்சிக்கலாம்.

வயது மூத்தது இளையது என்று பார்க்க வேண்டியதுதான். ஆனால் காதலும் சூழ்நிலைகளும் ஒத்துக்கொண்டால் வயதில் மூத்த பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்றே எனக்குத் தோன்றுகின்றது.

தாமரை
02-01-2006, 10:55 AM
வயதில் மூத்த பெண்ணை திருமணம் செய்யலாமா அப்படியென்பது தான் கேள்வியெனில் ..

செய்யலாம். என் தாய் என் தந்தையை விட இரண்டு வருடம் மூத்தவர்...(காதல் திருமணம் அல்ல. பெரியவர்களால் நிச்சயக்கப்பட்டு நடந்த திருமணம்.)

இதில சங்கடப்பட எதுவும் இல்லை

pradeepkt
02-01-2006, 11:10 AM
இதெல்லாம் நம்ம ஊருல சகஜமப்பா...

இராவணன்
10-01-2006, 02:18 PM
இராவணன் என்ற பெயரை வைத்ததால் என்னை பெருமையாகப் பேசுவதாக நினைக்கவேண்டாம். அண்ணா தொடக்கம் பலர் சொல்வது என்னவென்றால் சீதை இராவணனின் மகள்.

அதனால் தான் அவள் காட்டில் கஸ்டப்படும் போது இலங்கைக்கு அழைத்துச் சென்றார்!
அவள் மீது கைபடவில்லை!

மேலும் ஜனக மன்னர் பேழையில் இருந்து தான் அவளை எடுத்ததாகக் கூறப்படுகின்றது!
அக்காலப்பகுதியில் பிறப்பறியாத பெண்ணை எந்த இளவரசன் மணந்து கொள்ளுவான்!

ஆக திரிவுபடுத்தப்பட்டிருப்பது தான் உண்மை

அறிஞர்
10-01-2006, 07:51 PM
எப்படியோ வயது கூடவோ, குறைவோ... கல்யாணம் கட்டி நிம்மதி வாழ்ந்தா போதும்..

இடையில் வந்த சர்தார்ஜி ஜோக் அருமை..

இராகவனின் கூற்றும் சரியாக தோன்றுகிறது......

இராவணனின் புது வியூகத்திற்கு தெளிவான பதில் தாங்க அன்பர்களே

தீபன்
17-01-2006, 12:43 PM
னானும் இராவண்ன் பக்கம்தான் நண்பர்களே... ஏனெனில், செவிவளி பரம்பலடைந்த கதைகளை உதாரண்ம் காட்டி கதைப்பது அர்த்தமற்றது...

mayakrishnan
29-01-2008, 10:11 AM
அட பதிப்பிற்கு யாரும் பதில் சொல்லலையே! ஆனா இது புது சந்தேகமா தான் இருக்கு! யாருக்குமே பதில் தெரியாதா?

sarcharan
29-01-2008, 10:37 AM
உண்மைதான் ராமனை விட சீதை வயதில் மூத்தவள் தான். எங்கோ படித்த நினைவு.

மலர்
29-01-2008, 10:43 AM
அட போங்கப்பா....
ஜீவா அண்ணாவோட பிரண்டுக்கு கல்யாணம் ஆகி புள்ளைஎல்லாம் பிறந்தாச்சாம்....
ஆனா இன்னும் உங்க சந்தேகம் மட்டும் தீர்ந்த பாடில்லை....
ராமாயாணத்தை கரைச்சி குடித்த யாராச்சும் கொஞ்சம் தீர்த்து வைங்கப்பா... இந்த சந்தேகத்தை..... :confused::confused:

அமரன்
29-01-2008, 10:48 AM
அட பதிப்பிற்கு யாரும் பதில் சொல்லலையே! ஆனா இது புது சந்தேகமா தான் இருக்கு! யாருக்குமே பதில் தெரியாதா?
அன்பரே!
உங்களது ஆர்வமான அகழ்வாரச்சியினால் மன்றத்தில் திரிகள் மேலெழுப்பட்டுவது கண்டு மட்டற்ற மகிழ்ச்சி..

திரியின் நோக்கத்தை திரிபறச்சொல்லி உள்ளார் ஜீவா.
அதற்கும், நோக்க ஊடகத்துக்கும் மன்ற மக்கள் பதில் சொன்னதன் பின்னரும் பதிலிடப்படவில்லையே எங்கின்றீர்களே இது ஞாயமா?.

ஆதி
29-01-2008, 10:54 AM
அட போங்கப்பா....
ஜீவா அண்ணாவோட பிரண்டுக்கு கல்யாணம் ஆகி புள்ளைஎல்லாம் பிறந்தாச்சாம்....
ஆனா இன்னும் உங்க சந்தேகம் மட்டும் தீர்ந்த பாடில்லை....
ராமாயாணத்தை கரைச்சி குடித்த யாராச்சும் கொஞ்சம் தீர்த்து வைங்கப்பா... இந்த சந்தேகத்தை..... :confused::confused:


இராமயணக் கேள்விக்கு பதில் சொல்வது சுலபம் இல்லை மலர்..

இராமயணத்தை நிறையப்பேர் எழுதிருக்காங்க..

ஆனால் இராமாயணம் பற்றி சொல்ல வரும் போது ஒரு பெருமையான விடயத்தை இங்கு பகிரலாம் என நினைக்கிறேன்..

உலகத்தின் தலைசிறந்தப் பத்துக்காவியங்களில் கம்பராமாயணமும் ஒன்று..

இது தமிழர்களான நமக்கு மிகப் பெருமையே..

ராமனின் பிறப்புக்கு முன்பே சீதைப் பிறந்துவிட்டாள்.. சீதை.. இராவணனின் மகள்தான் இதில் எந்த ஐய்யமுமில்லை.. பிறந்தப் பெண்பிள்ளை வளர்ந்து திருமணம் முடிக்கும் பட்சத்தில் இராவணனின் உயிருக்கு ஆபத்து என்று கணிதர்கள் சொல்லுவர் அதனாலேயே பிறந்த மழலையை கொன்றுவிட வேண்டும் என்று இராவணனின் உடன் பிறப்புகள் துடிப்பர்..

ஆனால் இராவணன் மனமின்றி.. ஒரு பேழையில் வைத்து கடலில் விட்டுவிடச் சொல்வான்.. பின் ஜனகனின் வளர்ப்பு மகளாய் சீதை வளர்ந்து இராமனுடன் காட்டுக்கு செல்வாள்.. கானகத்தில் தன் மகள் கடினமுறுகிறாள் என்று நாரதன் மூலம் அறிந்த இராவணன் நான் தான் உன்னைப் பெற்றவன் என்று சொல்லாமல் தூக்கி கொண்டுபோவான்..

ராமனின் பிறப்புக்கு முன்பே சீதைப் பிறந்தவள் என்பதால் ராமன் இளையவனே..

அன்புடன் ஆதி

mayakrishnan
29-01-2008, 03:02 PM
...திரியின் நோக்கத்தை திரிபறச்சொல்லி உள்ளார் ஜீவா. அதற்கும், நோக்க ஊடகத்துக்கும் மன்ற மக்கள் பதில் சொன்னதன் பின்னரும் பதிலிடப்படவில்லையே எங்கின்றீர்களே இது ஞாயமா?.

ராமன் சீதை பற்றி விஷயத்திற்கு யாரும் ஆதாரபூர்வமாய் பதில் சொல்லவில்லையே! அதனால் வினவினேன். தவறாக இருந்தால் மன்னித்து கொள்ளுங்கள்!

pathman
10-03-2008, 11:01 AM
விஞ்ஞான ரீதியாக பார்த்தால் ஆண் பெண்ணை விட 2 அல்லது 3 வருடங்கள் மூத்தவனாக இருப்பதே நலம்

ஏனெனில் ஆண் வயது முதிர்வதற்கு எடுக்கும் காலம் சற்று அதிகமாகும்