PDA

View Full Version : காத்திருப்பு



ilanthirayan
17-12-2005, 11:59 PM
ஒரு சிகரட்
ஒரு தீக்குச்சி
காத்திருக்கின்றது
புகைத்தலுக்காய்
நுரையீரல் வேண்டி

ஒரு காழ்ப்பு
ஒரு வதந்தி
காத்திருக்கின்றது
புகைச்சலுக்காய்
சுவாசம் வேண்டி

இரண்டுமே
இருமித்
தொலைக்கின்றன
சமூகத்தின்
சாபக்கேடு

aren
18-12-2005, 01:41 AM
எனக்கு கொஞ்சம் புரியவில்லை. இரண்டாவது பத்தி என்னவென்று கொஞ்சம் சொல்லுங்களேன்.

அறிஞர்
18-12-2005, 03:20 AM
விடுகதை போல் போட்டு கவிதை எழுதிவிட்டீர்.... வித்தியாசமாக உள்ளது...

காழ்ப்பும், வதந்தியும் புகைந்து வெளிவருவதை... இருமல் போன்று அழைத்துள்ளீர்கள்.... அப்படிதானே அன்பரே

இளசு
18-12-2005, 07:21 AM
பரவலான பழக்கம்..

கெட்ட பழக்கம்..

பிடித்தால் விலகாது..

பக்கத்தில் உள்ளனையும் பாதிக்கும்..

பிடித்தவனையும் அழிக்கும்..


இளந்திரையன்....

அருமையாய்ச் சொன்னீர்கள்..

காழ்ப்பால் அடுத்தவர் வாழ்க்கையைக் கெடுக்கும் வதந்தி பரப்பும்
வஞ்சக புத்தி உள்ளவர்களால் அழிந்த குடும்பங்கள் எத்தனையோ..

மரம் அழித்து, ஓசோன் அழித்து, இதயம் கெட்டு, நாளம் அடைபட்டு,
நுரையீரல் சிதைபட்டு அழிந்த உயிர்கள் எத்தனையோ...


இரண்டு அழிப்பான்களும் அழிக்கப்படவேண்டியவையே..


பாராட்டுகள் இளந்திரையன்..

ilanthirayan
19-12-2005, 12:14 AM
இருமல் நோயின் அறிகுறி தான்... நோயல்ல இப்பழக்கமெல்லாம் சமூகத்தைப் பிடிச்ச நோய்ங்க ..... ஆரென் இப்போ வெளங்கியிருக்கும் என்று நம்புகின்றேன்....


அறிஞர், இளசு உங்கள் நல்லெண்ணத்திற்கு நன்றிகள்....

இளசு...

உங்களைப் போன்றவர்களின் புரிதலும் தெளிதலும் என்றும் இந்த மன்றத்தில் இருக்கும் வரை... நிச்சயம் தமிழ்த் தென்றல் வீசிக் கொண்டேயிருக்கும்.

நன்றியுடன் இளந்திரையன்

aren
19-12-2005, 12:38 AM
இப்பொழுது கொஞ்சம் புரிகிறது இளந்திரையன் அவர்களே.

எனக்கு கவிதைகளைப் படித்து புரிந்துகொள்ளும் அளவிற்கு அறிவில்லை. ஆகையால் நல்ல கவிதைகளை சரியாக புரிந்துகொள்ளமுடியாது.

RRaja
22-12-2005, 08:27 AM
இரண்டுமே
இருமித்
தொலைக்கின்றன
வார்த்தைப் பிரயோகம் அபாரம்!