PDA

View Full Version : நாடோடி வாழ்க்கை



அறிஞர்
16-12-2005, 03:13 PM
இது கவிதை அல்ல....

நாடோடி வாழ்க்கை

அப்பா நல்லாயிருக்க
தாத்தா
கிராமம் விட்டு
நகரம் வந்தார்.

நான் நல்லாயிருக்க
அப்பா
நகரம் விட்டு
சென்னை வந்தார்.

பிள்ளை நல்லாயிருக்க
நான்
சென்னை விட்டு
வெளிநாடு வந்தேன்.

பிள்ளை
என்ன செய்ய
போறானோ....

இந்த நாடோடி
வாழ்க்கையிலே...

thirukanaga
16-12-2005, 03:36 PM
திரும்ப சென்னை செல்வதுதானே
உலகம் உருண்டை

thirukanaga
16-12-2005, 03:38 PM
விட்டுச் செல்வது வாழ்வின் விடுகதையன்றோ
நன்னாய் சொன்னீங்க போங்கோ

kavinila
16-12-2005, 07:12 PM
இது கவிதை அல்ல என்று நிகழும் க(வி)தை;) ;) ;) :D :D :D :D :rolleyes: :rolleyes: :rolleyes:

Shanmuhi
16-12-2005, 07:44 PM
யதார்த்த வாழ்வு கவியாக மலர்ந்தது அருமை.

அறிஞர்
16-12-2005, 08:39 PM
திரும்ப சென்னை செல்வதுதானே
உலகம் உருண்டை செல்லலாம்.. காலம் விரைவில் பதில் சொல்லும்

அறிஞர்
16-12-2005, 08:40 PM
இது கவிதை அல்ல என்று நிகழும் க(வி)தை;) ;) ;) :D :D :D :D :rolleyes: :rolleyes: :rolleyes: நன்றி நண்பரே... சும்மா கிறுக்கினது....

அறிஞர்
16-12-2005, 08:40 PM
யதார்த்த வாழ்வு கவியாக மலர்ந்தது அருமை. வாழ்வே யாதார்த்தமானது.. நன்றி நண்பரே.

Narathar
16-12-2005, 11:48 PM
அட! எனக்கும் அச்சு அசலாக அப்படியே பொருந்துகிறது உங்கள் கவிதை................

Mano.G.
17-12-2005, 12:26 AM
உண்மை அனுபவத்தின் வெளிப்பாடுடன்
கூடிய ஆதங்கமோ அல்லது தயக்கமோ
நல்லதையே நினைப்போம் நல்லதே நடக்கும்


மனோ.ஜி

அறிஞர்
17-12-2005, 05:41 AM
அட! எனக்கும் அச்சு அசலாக அப்படியே பொருந்துகிறது உங்கள் கவிதை................ என்ன பண்ணுறது... சும்மா பயணம் செய்யும் போது.. என்ன இந்த வாழ்க்கை என சிந்திந்த போது மனதில் ஓடிய ஓட்டங்கள்

அறிஞர்
17-12-2005, 05:42 AM
உண்மை அனுபவத்தின் வெளிப்பாடுடன்
கூடிய ஆதங்கமோ அல்லது தயக்கமோ
நல்லதையே நினைப்போம் நல்லதே நடக்கும்
மனோ.ஜி நல்லது நினைப்போம் இறைவன் பார்த்துக்கொள்வார்.

kavitha
17-12-2005, 09:56 AM
கண்ணதாசனின் வீடு வரை உறவு... வரிகள் போல கவிதை மிக எதார்த்தம். விட்டால் தத்துவ ஞானி ஆகி விடுவீர்கள் போலிருக்கிறதே!
:) . நிறைய எழுதுங்கள் அறிஞரே.

aren
17-12-2005, 02:23 PM
நல்ல அனுபவிச்சு எழுதியதுமாதிரி இருக்கிறது. இப்பொழுது வெளிநாட்டவர்கள் மீண்டும் இந்தியா திரும்பி வருவதால் மீண்டும் சுழற்சி ஆரம்பமாகும்.

அறிஞர்
18-12-2005, 03:22 AM
கண்ணதாசனின் வீடு வரை உறவு... வரிகள் போல கவிதை மிக எதார்த்தம். விட்டால் தத்துவ ஞானி ஆகி விடுவீர்கள் போலிருக்கிறதே!
:) . நிறைய எழுதுங்கள் அறிஞரே. பெரிய கவிஞர்கள் நீங்களெல்லாம் வருவதில்லை.... ஏதோ மனதில் தோன்றியதை கிறுக்கினேன் அம்மிணி... அப்புறம் எங்க ஆளையே காணோம்

அறிஞர்
18-12-2005, 03:23 AM
நல்ல அனுபவிச்சு எழுதியதுமாதிரி இருக்கிறது. இப்பொழுது வெளிநாட்டவர்கள் மீண்டும் இந்தியா திரும்பி வருவதால் மீண்டும் சுழற்சி ஆரம்பமாகும். எல்லாரும் திரும்பலாம் என்ற நினைத்தாலும்.. இயற்கை சீற்றங்கள் பயமுறுத்துகின்றனவே....

aren
18-12-2005, 04:20 AM
எல்லாரும் திரும்பலாம் என்ற நினைத்தாலும்.. இயற்கை சீற்றங்கள் பயமுறுத்துகின்றனவே....

இயற்கையை எதிர்கொண்டு வெற்றிபெருவதே வாழ்க்கை.

ஹாலந்து நாட்டு மக்கள் கடல் மட்டத்திற்கு கீழேயிருக்கும் பூமையில் எப்படி வாழ்ந்துவருகிறார்கள். கடல் நாட்டிற்குள் வராமல் தடுப்புசுவர் எழுப்பி வெற்றி கண்டார்கள் அல்லவா? அதுமாதிரி நாமும் இயற்கையை எதிர்த்து நீச்சல்போட்டால் வெற்றி நிச்சயம்.

இளசு
18-12-2005, 07:37 AM
மீண்டும் கிராமமா?
செவ்வாய், புதன் கிரகமா?


உலகம் உள்ளங்கையாய்..
உள்ளமே பெரிய உலகமாய்...

அசத்தல் கவிதை அறிஞரே...


காலம் தொடரும் இக்கவிதையை...

இளந்தமிழ்ச்செல்வன்
18-12-2005, 07:51 AM
அழகாய் எளிமையாய் எதார்த்தத்தை சொல்லிவிட்டீர். அருமை.

இளசு
18-12-2005, 07:52 AM
பெரிய கவிஞர்கள் நீங்களெல்லாம் வருவதில்லை.... ஏதோ மனதில் தோன்றியதை கிறுக்கினேன் அம்மிணி... அப்புறம் எங்க ஆளையே காணோம்

அதே அதே... என்ன கவீ... பணிப்பளுவா?

ilanthirayan
18-12-2005, 02:42 PM
மாற்றம் என்ற சொல் தவிர்ந்த அனைத்தும் மாறுவன... அருமையான உதாரணம்...

அது சரி நாடோடி என்றால் நாடு விட்டு (இன்னுமொரு)நாடு போபவர்களைக் (ஓடுபவர்கள்) குறித்தென்றால் ஊர் விட்டு ஊர், நகரம் விட்டு நகரம் போபவர்களைக் குறிக்க ஏதாவது சொல் உண்டா?

mukilan
18-12-2005, 09:40 PM
ஊரோடி! இது சரியா இருக்கா?

ilanthirayan
18-12-2005, 11:52 PM
ஊரோடி! இது சரியா இருக்கா?

வெல்டன் முகிலன் ....நகரம் விட்டு நகரம்... அது நவராது என்னுறீங்க ..அப்பிடித்தானே...

பென்ஸ்
19-12-2005, 04:46 PM
ஆ... இவங்க தொல்லா தாங்கலை சாமி.....
வீடு விட்டு வீடு போனா அப்ப என்னானு எல்லாம் கேக்க கூடாது....

mukilan
19-12-2005, 06:15 PM
வீடோடி???? இது எப்படி இருக்கு. அப்பவும் ஏதாச்சும் சொல்லிக் கிட்டேதானே இருப்போம்.

ilanthirayan
19-12-2005, 07:08 PM
அப்போ பெஞ்சோடீ பெஞ்சமின்ன்னா ?

பெஞ்சு விட்டு பெஞ்சு ஓடியவரா ? இல்லை பென்ஸ் ஓடியவரா? அப்பிடீன்னு கேட்க வாரீங்க ..பெஞ்மின் .. அப்பிடித்தானே முகிலன்

kavitha
20-12-2005, 08:51 AM
Quote:
Originally Posted by அறிஞர்
அப்புறம் எங்க ஆளையே காணோம்


அதே அதே... என்ன கவீ... பணிப்பளுவா?
__________________
இந்த மன்றத்தில் ஓடிவரும்
தமிழ்த் தென்றலில் திளைக்கின்றேன்
- இளசு

அதே அதே அண்ணா!
எழுதி வைத்திருக்கிறேன் அறிஞரே.
பதிப்பதைவிட இப்போது நிறைய படிக்கவே மனம் நாடுகிறது!

சாராகுமார்
14-09-2007, 08:26 AM
வாழ்வின் உண்மை நிலைமையினை அறிஞர் அறிந்து சொல்லியுள்ளார். வயது ஆனவுடன் மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்புவோம் என்று நினைக்கிறேன்.

lolluvathiyar
14-09-2007, 10:41 AM
திரும்ப சென்னை செல்வதுதானே
உலகம் உருண்டை

திரும்ப சென்னை இல்ல கிராமத்துக்கே போய் சிவனே நு பத்து ஆட்டு குட்டி மேச்சு, மாசம் 10000 பாத்து சந்தோசமா காலம் தள்ளலாம். அதுல இருக்கர சுகம் சத்தியமா இந்த பனத்தாசையால் பூர்த்தி செய்ய முடியாது

சூரியன்
14-09-2007, 10:47 AM
திரும்ப சென்னை இல்ல கிராமத்துக்கே போய் சிவனே நு பத்து ஆட்டு குட்டி மேச்சு, மாசம் 10000 பாத்து சந்தோசமா காலம் தள்ளலாம். அதுல இருக்கர சுகம் சத்தியமா இந்த பனத்தாசையால் பூர்த்தி செய்ய முடியாது

சரியாக சொன்னீர் வாத்தியரே., அறிஞரே இதை கொஞ்சம் யோசித்து நல்ல முடிவு எடுங்க.

பூமகள்
14-09-2007, 10:53 AM
பிள்ளை
என்ன செய்ய
போறானோ....


நிலாவிற்கு செல்ல ஆயித்தங்கள் நடக்குதாமே அங்கு????!!! பிள்ளைகள் அங்கு செல்ல உத்தேசித்து இருப்பார்களோ????!!!:confused:

அக்னி
15-09-2007, 01:21 PM
நாடோடி வாழ்க்கை,
உலகத்தினுள் வரையறை...
நாளைய வாழ்க்கை,
பிரபஞ்சம் முழுவதும் விரிவாகுமோ..?

நீண்ட காலப் படைப்பாயினும்,
சமகாலத்துக்கும், வருங்காலத்துக்கும் கூட பொருத்தமான எதிர்வுகூறும் படைப்பு...
பாராட்டுக்கள் அறிஞரே...
(உங்கள் கவிதைகளை இனியும் தொடர வேண்டும் என்று அனைவர் சார்பிலும் கேட்டுக்கொள்கின்றேன்...)

ஆதவா
18-09-2007, 11:14 AM
மற்றவர்கள் சொன்னது போலத்தான் அறிஞரே! இனி செல்ல இடமெங்கே!!! பூமகள் நிலவில் பட்டா போட்டிருக்கிறாராமே!!!