PDA

View Full Version : பூக்கள்!

நிலா
21-04-2003, 09:58 PM
தென்றலின் தழுவலில்
தரு தரித்த குழந்தைகள்!

இளசு
22-04-2003, 03:34 PM
வண்டு வந்து தழுவ
வந்து சேர்ந்த மகரந்தம்
ஒன்று சேர்ந்தல்லவா கரு தரிக்கும் தரு...?
அதை தாய்வேறு - சேய்வேறாய் பிரித்து
வாசம் மட்டும் கூலியாய்ப் பெறும்
மருத்துவச்சியல்லவா தென்றல்...!!!!!!

poo
22-04-2003, 03:58 PM
இருவரி இருவரி என போடாமல்.. ஒரே பதிவில் இரண்டு மூன்று முயற்சிக்கலாமே?!!

kaathalan
22-04-2003, 06:40 PM
தென்றலால் கூட கருத்தரிக்கும் மலர்கள் என்று கேள்விப்பட்டேன், எல்லா மலர்களும் வண்டுகளால் தான் கருத்தரிக்கும் என்று இல்லைதானே அண்ணலே. பிழை என்றால் தெரியப்படுத்துங்கள்.

இளசு
22-04-2003, 11:17 PM
தென்றலால் கூட கருத்தரிக்கும் மலர்கள் என்று கேள்விப்பட்டேன், எல்லா மலர்களும் வண்டுகளால் தான் கருத்தரிக்கும் என்று இல்லைதானே அண்ணலே. பிழை என்றால் தெரியப்படுத்துங்கள்.

தம்பியின் கருத்தே சரி!
என் கருத்து முழுமையான உண்மை அல்ல.
தாவரவியல் வல்லுநர்கள்தான் மேல்விளக்கம் தரவேண்டும்!

நிலா
23-04-2003, 01:06 AM
இருவரி இருவரி என போடாமல்.. ஒரே பதிவில் இரண்டு மூன்று முயற்சிக்கலாமே?!!
_________________

கருத்துக்கு நன்றி!அடுத்த பதிவிலிருந்து கடைபிடிக்கிறேன்!

இளசு
23-04-2003, 05:20 AM
இருவரி இருவரி என போடாமல்.. ஒரே பதிவில் இரண்டு மூன்று முயற்சிக்கலாமே?!!
_________________

கருத்துக்கு நன்றி!அடுத்த பதிவிலிருந்து கடைபிடிக்கிறேன்!

ஆக்கபூர்வமாய் எடுத்துக்கொண்டு
அதைச் செயல்வடிவில் கொடுத்த
நிலாவுக்குப் பாராட்டுகள்!

Narathar
23-04-2003, 07:03 AM
அட!! .....

puppy
08-01-2004, 05:14 PM
விவாத கவிதை.......தாவரவியல் அறிஞர்கள் யாராச்சும் இருக்கீங்களா

Nanban
08-01-2004, 05:27 PM
மகரந்தம் மிக மென்மையானது....... வண்டு இல்லாமல் கூட காற்றில் மிதந்து சென்று மற்ற மலர்களை அடைந்து கருத்தரிக்கச் செய்யும். அளவுக்கு அதிகமாக மிதக்கும் இந்த மகரந்ததால், ஆஸ்துமா நோயாளிகளுக்கு மகா தொல்லை......... மகரந்த துகள்களைச் சுவாசித்தால், அது irritation, allergy போன்றவைகளை உண்டாக்கலாம் - நுரையீரலில். பெங்களூரில் இந்த தொல்லை உண்டு....

கவிதையில் உள்ள தவறு - பூக்கள் மலர்ந்தால் தான் கருத்தரிக்க முடியும்.... கருத்தரிப்பில் பிறப்பது - பூக்கள் அல்ல, - மாறாக காய், பின்னர் அதிலிருந்து கனிகள்.........

இ.இசாக்
08-01-2004, 05:27 PM
தென்றலின் தழுவலில்
தரு தரித்த குழந்தைகள்!

புதுவகை சிந்தனை தான்

பப்பி அவர்களே
ஓரக்கண்ணால் பார்த்தாலே
புள்ளத்தாச்சி என்று எழுதிய கவிஞர்கள்
பெரியவர்கள்
புதுசா எழுதும் எங்கள் நிலா வின் கவிதை
விவாதத்துக்கு உரியதா

கொஞ்சம் வளர விடுங்கம்மா.

நிலா
08-01-2004, 05:45 PM
ஆதரவுக்கு ரொமப் நன்றி!இசாக்!

ஓரக்கண்ணால் பார்த்தாலே
புள்ளத்தாச்சி என்று எழுதிய கவிஞர்கள்
பெரியவர்கள்

இது பாயிண்ட்!

பப்பி,நண்பன்
நோஓஓஓஓஓஓ நன்றி உங்களுக்கு
:D

puppy
08-01-2004, 07:01 PM
ஓரகண்ணால் பார்த்தாள் பிள்ளை பிறக்கும் என்பதற்க்கு....சூரியன் அங்கிருந்து பார்க்க குந்திதேவி கர்ண்ணை பெற்றாள்ன்னு ஒரு வலுவான பாயிண்ட் இருக்கு...இதுக்கு இல்லையே இசாக்....நான் என்ன பண்ண ?

இ.இசாக்
09-01-2004, 11:26 AM
ஓரகண்ணால் பார்த்தாள் பிள்ளை பிறக்கும் என்பதற்க்கு....சூரியன் அங்கிருந்து பார்க்க குந்திதேவி கர்ண்ணை பெற்றாள்ன்னு ஒரு வலுவான பாயிண்ட் இருக்கு...இதுக்கு இல்லையே இசாக்....நான் என்ன பண்ண ?

பப்பி அவர்களே!

ஆதாரம் என்பது அறிவியல் பூர்வமாக இருக்க வேண்டும்.
கதைகளை வைத்து பேசலாமா..