PDA

View Full Version : மற்றத்தளங்களின் செய்திகள்

அறிஞர்
16-12-2005, 02:46 PM
அன்பர்களே,

இந்த ஐந்து ஆண்டுகளில் இணையத்தளங்களில் தமிழ் அசூர வளர்ச்சி அடைந்துள்ளது. தளங்கள் பல நல்ல எழுத்தாளர்களை, இளம் எழுத்தாளர்களை உலகிற்கு காட்டுகின்றன. அவர்களை ஊக்குவிப்பது தமிழர்களின் கடமை. மன்றம் பல எழுத்தாளர்களை, கவிஞர்களை ஊக்குவித்துள்ளது... இன்னும் ஊக்குவிக்கிறது என்பதை மனதில் கொள்ளுங்கள்.

மன்றத்தில் மற்றத்தளங்களில் வரும் எழுத்தாளர்களின் செய்தியை பதித்தால், உண்மையான எழுத்தாளருக்கு நன்றி கூறுங்கள் (விரும்பினால் தளத்தின் முகவரி கொடுங்கள்). http கொண்டு நேரடியாக முகவரி கொடுக்கவேண்டாம்.

தினமலர், தினகரன் படைப்புக்களை இங்கு கொடுத்தால்.. நன்றி-தினமலர், நன்றி-தினகரன் என தெரிவியுங்கள்....

மற்றத்தளங்களில் வரும் படங்களை பதிக்க விரும்பினால், நேரிடையாக லிங்க் கொடுப்பதை தவிருங்கள். போட்டோபக்கெட் போன்ற தளத்தில் தங்கள் முகவரியில் படத்தை ஏற்றி இங்கு லிங்க் கொடுங்கள்....

மேலும் தங்களின் கருத்துக்களை இங்கு பதியுங்கள்

aren
16-12-2005, 02:49 PM
நல்ல பதிவு அறிஞர் அவர்களே. நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. வரவேற்கிறேன்.

இளசு
18-12-2005, 07:17 AM
நல்ல பதிவுகளைத் தேடி இங்கே முறையுடன் தர அழைக்கும்
அறிஞரின் கருத்தை வரவேற்கிறேன்.

பிறதள கலைச்செல்வம் கொணர்ந்திங்கு சேர்ப்போம்..

அழகன்
04-01-2006, 08:13 AM
நல்ல விசயம் இதை தனி தலைப்பாக எங்கே பதிக்கலாம் என்று கொஞ்சம் விளக்கினால் நன்றாக இருக்கும்.

அறிஞர்
12-01-2006, 03:37 PM
நல்ல விசயம் இதை தனி தலைப்பாக எங்கே பதிக்கலாம் என்று கொஞ்சம் விளக்கினால் நன்றாக இருக்கும்.
இலக்கியங்கள், புத்தகங்கள் என்ற தலைப்பில் கொடுக்கலாம். முன்பு அவ்வாறு நண்பர்கள் செய்துள்ளனர்.

அழகன்
13-01-2006, 11:22 AM
அப்படியே ஆகட்டும் நல்ல கட்டுரைகளை நல்ல இலக்கியங்களை நீங்கள் சொல்லிய இடத்திலேயே பதிக்கிறேன் அறிஞர் அவர்களே, உங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றி.

வணக்கம்
அன்புடன்
அழகன்

aren
14-01-2006, 03:04 AM
சில தளங்களில் இருக்கும் விஷயங்களை இங்கே போடலாம் என்று நினைத்தால் அதை எப்படி மாற்றுவது என்று தெரியவில்லை.

அழகன்
14-01-2006, 05:16 AM
சில தளங்களில் இருக்கும் விஷயங்களை இங்கே போடலாம் என்று நினைத்தால் அதை எப்படி மாற்றுவது என்று தெரியவில்லை.

மாற்றமுடியும் ஆரென் அவர்களே உ.ம் (தினமலரை எடுத்துக்கொள்வோம்) அங்கே காப்பி செய்து நம் யுனிகோட் கன்வெர்டரின் மூலம் LIBI ல் கிலிக்கினால் யுனிகோடிற்கு மாறிவிடும்.

சென்னை : தொழிற்படிப்புகளில் சேருவதற்காக தமிழக அரசு ஆண்டுதோறும் நடத்தி வந்த நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். சி.பி.எஸ்.இ., உள்ளிட்ட இதர பாடத் திட்டத்தின் கீழ் பயின்ற மாணவர்களுக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட உள்ளது...

aren
14-01-2006, 06:12 AM
மாற்றமுடியும் ஆரென் அவர்களே உ.ம் (தினமலரை எடுத்துக்கொள்வோம்) அங்கே காப்பி செய்து நம் யுனிகோட் கன்வெர்டரின் மூலம் LIBI ல் கிலிக்கினால் யுனிகோடிற்கு மாறிவிடும்.

தினமலரிலிருந்து முடியும். நானே அப்படி நிறைய இங்கே கொடுத்திருக்கிறேன். ஆனால் தினத்தந்தி, தினகரன் போன்ற தினசரிகளில் இருக்கும் விஷயங்களை இங்கே பதிவு செய்வது எப்படி என்று தெரியவில்லை. யாராவது உதவினால் நன்றாக இருக்கும்.

நன்றி வணக்கம்
ஆரென்

அழகன்
15-01-2006, 03:36 AM
தினமலரிலிருந்து முடியும். நானே அப்படி நிறைய இங்கே கொடுத்திருக்கிறேன். ஆனால் தினத்தந்தி, தினகரன் போன்ற தினசரிகளில் இருக்கும் விஷயங்களை இங்கே பதிவு செய்வது எப்படி என்று தெரியவில்லை. யாராவது உதவினால் நன்றாக இருக்கும்.

நன்றி வணக்கம்
ஆரென்

வணக்கம் ஆரென் அவர்களே தினதந்தி, தினகரன் போன்ற தினசரிகளை மாற்ற இங்கே சென்று இதை உபயோகபடுத்தலாம். ஆனால் தினதந்தியை மாற்றும் போது சில எழுத்துபீழைகள் வருகிறது நீங்கள் பார்த்துவிட்டு சொல்லுங்கள்.

http://www.jaffnalibrary.com/tools/tamilconverter.htm

நன்றி

aren
15-01-2006, 05:54 AM
நன்றி அழகன் அவர்களே. முயற்சி செய்து பார்க்கிறேன்.

நன்றி வணக்கம்
ஆரென்