PDA

View Full Version : கோயிஞ்சாமியும் சில கொஸ்டின்களும்



роЬрпАро╡ро╛
16-12-2005, 09:01 AM
லொள்ளு தர்பார்:

கோயிஞ்சாமியும் சில கொஸ்டின்களும்

கற்பனை: முகில்

கோயிஞ்சாமி "சும்மா போட்டுத்தான் பாப்போமே'ன்னு ஒரு போட்டித் தேர்வுக்கு அப்√ள பண்ணினாரு. தேர்வுக்கு நாலு நாளைக்கு முன்னாடி ஹாலு டிக்கெட்டும் குஜாலா வந்து சேர்ந்துச்சு. ஒரு மண்ணும் படிக்கல கோயிஞ்சாமி. பரிட்சைக்கு முந்தின நாள் இரவு
படிக்காத துக்கத்துல, தூக்கம் வராம ரெண்டு மாத்திரையைப் போட்டுத் தூங்கினாரு

கோயிஞ்சாமி. அப்ப கனவுல "கலகல'ன்னு ஒரு கொஸ்டின் பேப்பர் வந்துச்சு. அதப்பார்த்து
வெலவெலத்துப் போயிட்டாரு கோயிஞ்சாமி. அதான்யா இது!

1. உங்கள் பெயர் கோயிஞ்சாமியா?
அ) ஆமா ஆ) ஒத்துக்கறேன் இ) சரி

2. நியூட்டனின் மூன்றாவது விதியைக் கண்டுபிடித்தவர் யார்?
அ) கொலம்பஸ் ஆ) கோயிஞ்சாமி இ) குட்டிச்சாமியார்

3. இந்தியாவின் கேப்பிடல் (இஅடஐபஅக) எது?
அ) ஐய்க்ண்ஹ ஆ) ஐசஈஐஅ இ) ஐசஈண்ஹ

4. த.பி.பா (தயவுசெய்து பின்னால் பார்க்கவும்) என்பதன் விரிவாக்கம் என்ன?
அ) தயவுசெய்யாமல் பின்னால் பார்க்கவும் ஆ) தயவுசெய்து பிராண்டிப் பார்க்கவும் இ)த.பி.பா

5. 1, 0, 1, 1, 1, 1, 1, 1, ? -இந்த வரிசையில் "?' இடத்தில் என்ன எண் வரும்?
அ) ? ஆ) ? இ) ?

6. சூரியன் இரவு நேரத்தில் எங்கே போய் தங்குகிறது?
அ) இருட்டான இடத்தில் ஆ) தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் இ) அறிவாலயத்தில்

7. இந்தக் கேள்வியின் எண் என்ன?
அ) 8 ஆ) 10 இ) 15

8. அயும் ஆயும் அக்கா தங்கச்சி. ஆயும் இயும் ஒண்ணுவிட்ட தங்கச்சி. இயும் ஈயும்
உறவுமுறை. ஈக்கு அ அத்தை. உ க்கு ஈ சகலை. இ க்கு உ சம்பந்தி முறை. ஆ யை ஈ
கல்யாணம் பண்ணினா ஆ க்கு ஈ என்ன வேணும்?
அ) தூரத்துச் சொந்தம் ஆ) பக்கத்துவீட்டுக்காரன் இ) பங்காளி


9. ஒரு வேலையை 12 பேர் 8 நாட்களில் செஞ்சு முடிக்கமுடியும். 16 பேர் 6 நாட்களில்
செஞ்சு முடிக்கமுடியும். 20 பேர் 4 நாட்களில் செஞ்சு முடிக்கமுடியும். அப்படின்னா, அந்த
வேலையை யாருமே செய்யலைன்னா அந்த வேலை எப்ப முடியும்?
அ) நேத்திக்கி ஆ) நாளைக்கி இ) அமாவாசை அன்னிக்கி

10. இந்த கேள்விக்கு நீங்க என்ன பதில் அளிக்க விரும்புறீங்க?
அ) ஆ) ஹிஹி இ) டுர்ர்ர்...

11. ஐஸ் கட்டி தயாரிக்க என்ன மூலப்பொருள் தேவை?
அ) பெரிய ஐஸ் கட்டி ஆ) மூளை இ) அடுப்பு
12. 3 + 3 = ?
அ) ஆறு ஆ) 6 இ) யஐ

13. சென்னைல இருந்து எக்ஸ்பிரஸ் அ மணிக்கு 300 கி.மீ வேகத்துல தூத்துக்குடிக்கு
காலைல 7 மணிக்கு கிளம்புது. (மொத்த தூரம் 650 கி.மீ) அதேநேரத்துல எக்ஸ்பிரஸ் ஆ
மணிக்கு 250 கி.மீ வேகத்துல டெல்லியில இருந்து மும்பைக்கு கிளம்புது. (மொத்த தூரம்
குத்துமதிப்பா 77777777 செ.மீ. எக்ஸ்பிரஸ் அயும் ஆயும் எங்க, எந்த நேரம் சந்திக்கும்?
அ) தண்டவாளத்துல, மத்தியான நேரத்துல
ஆ) லாலு வீட்டுக்குப் பின்னாடி சாயங்காலம்
இ) சத்யம் தியேட்டர்ல, ரெண்டாவது ஆட்டத்துக்கு!

14. "எக்ஸ்' என்பது ஒரு இரட்டை எண். அதை "ஒய்' ஆல் பெருக்கினால் 12 வரும்.
3320 என்பது "எக்ஸின் ஐந்தரை மடங்கு. "ஒய்' மற்றும் "இஸட்'டின் இரு மடங்குக்
கூட்டுத்தொகை "எக்ஸின்' மூன்று மடங்கு பெருக்குத்தொகையின் நாலில் ஒரு பங்கு.
"எக்ஸ், ஒய், இஸட்' -இவற்றின் மதிப்புகளைக் கண்டறிந்து, இரண்டால் பெருக்கி, 7-ஐக்
கழித்தால் இறுதியில் என்ன வரும்?
அ) எரிச்சல் ஆ) தலைவலி இ) மனநோய்

15. கோழியின் தயாரிப்பான பின்வரும் பொருள்களில் எது முதலில் வந்தது?
அ) ஆம்லெட் ஆ) முட்டை புரோட்டா இ) ஆஃப் பாயில்

16. முதல் உலகப்போருக்கும் இரண்டாம் உலகப்போருக்கும் இடையில் எத்தனை உலகப்
போர்கள் நடந்தது?
அ) 33 ஆ) 1/2 இ) 0.0147

17. கீழ்க்கண்டவற்றில் "உயிர்' எழுத்துகள் எவை?
அ) கடசதபற ஆ) ஞஙணநமன இ) உயிர்

18. நீங்கள் இறுதிக் கேள்வியை அடைந்துவிட்டீர்களா?
அ) தெரியவில்லை ஆ) புரியவில்லை இ) அறியவில்லை

рокрпЖройрпНро╕рпН
16-12-2005, 10:07 AM
சாரி .. இரண்டு முறை வந்துடுசு...

рокрпЖройрпНро╕рпН
16-12-2005, 10:07 AM
யோவ்.... :D :D
என்னயா இன்போஸிஸ் (INFOSYS) கோஸ்டின் பேப்பர கொடுத்துட்டு கோயிஞ்சாமிக்கு கனவுல வந்த கோஸ்டின் பேப்பர்ன்னு கதவுடுகிறிரு...:rolleyes: :rolleyes:

யாருக்கிட்ட கத வுடுகிறிரு..
இதமாதிரி எத்தன .....எத்தன .....
கோஸ்டிஅன் பேப்பற இன்பொஸிஸில் பாத்திருக்கிறேன்..:D :D :D :D

aren
16-12-2005, 10:22 AM
இப்போ தெரியுதா நான் ஏன் எந்த போட்டியிலும் கலந்துகொள்வதில்லையென்று.

செம்ம சுத்தலப்பா

gragavan
16-12-2005, 10:30 AM
கோவிந்தசாமியை go-wind-சாமியா மாத்துன கேள்வித்தாளு இதுதானா? அதான் காத்தோட காத்தா காணாமப் போயிட்டாரு.

mania
16-12-2005, 10:34 AM
:rolleyes: :rolleyes: :confused: :confused: என்னா கொஸ்டின் சாமி....???? கோவிந்தா......கோஓஓஓஒவிந்தா சாமியோஓஓஓவ்.....:D :D :D
அன்புடன்
மணியா...:D

роЙродропро╛
16-12-2005, 10:52 AM
இத படிச்ச எனக்கு இன்னக்கி ராத்திரிக்கு தூக்கம் வராது.... அதனால எனக்கு ரெண்டு தூக்க மாத்திர கொடுங்க.

роЕро▒ро┐роЮро░рпН
17-12-2005, 05:46 AM
சூப்பர்தான்.. நம்மாளு கண்டிப்பா பாஸ்தான்..

உறவு முறை கேள்வி சூப்பரோ சூப்பர்.. எழுதிய அன்பருக்கு நன்றி.

பதித்த உமக்கும் நன்றி

рооройрпНроородройрпН
17-12-2005, 06:36 PM
செம கலாட்டா......... ஜீவா பதிவுகள் என்றாலே தனி ரகம்தான்... சிரிச்சி சிரிச்சி வந்தா ஜீவா மாமாதான்..:D :D♦♦

aren
18-12-2005, 01:45 AM
:rolleyes: :rolleyes: :confused: :confused: என்னா கொஸ்டின் சாமி....???? கோவிந்தா......கோஓஓஓஒவிந்தா சாமியோஓஓஓவ்.....:D :D :D
அன்புடன்
மணியா...:D

இப்போ தெரியுதா!!! நீங்கள் பேசினால் ஏன் நம் மக்கள் அப்படி தலையை பிச்சிக்கிட்டு ஓடுகிறார்கள் என்று.

தலைக்கு புரியவைத்த ஜீவாவிற்கு நன்றிகள்.

தலையை கிளப்பிவிட்டு வேடிக்கைபார்க்கும்
ஆரென்

роЕро▒ро┐роЮро░рпН
18-12-2005, 03:32 AM
தலைக்கு புரியவைத்த ஜீவாவிற்கு நன்றிகள்.
தலையை கிளப்பிவிட்டு வேடிக்கைபார்க்கும்
ஆரென் அப்ப ஜீவா சொல்லும்வரை தலை புரியாமல் தான் இருந்தாருன்னு.. சொல்ல வர்றீங்களா... ஆரென். :rolleyes: :rolleyes: :rolleyes:

aren
18-12-2005, 04:17 AM
அப்ப ஜீவா சொல்லும்வரை தலை புரியாமல் தான் இருந்தாருன்னு.. சொல்ல வர்றீங்களா... ஆரென். :rolleyes: :rolleyes: :rolleyes:

நீங்கள் இல்லை என்கிறீர்களா?

роЗро│роЪрпБ
18-12-2005, 08:15 PM
அசத்தல் கேள்வித்தாளப்பா...

அருமை ஜீவா.. (முகில் சரக்கா இதுவும்? அவரை மன்றம் வரவைங்கப்பா..
)


சூரியன் கேள்வி டாப்..


தலை பற்றிய அன்பின் ஆரென் கருத்துக்கு தலைவணங்குகிறேன்...