PDA

View Full Version : வாழ்கையில் நடந்த சுவையான சம்பவங்கள்



உதயா
15-12-2005, 01:16 PM
நண்பர்களே...

நம் வாழ்க்கையில் நடந்த எத்தனையோ சுவையான சம்பவங்களை இங்கு பதித்து வருகிறோம் இல்லையா? சில சம்பவங்கள் ஒரு வரியில் முடிந்து விடுவது போல் இருக்கும். அப்படி பட்ட சம்பவங்களை இங்கு முன் வையுங்களே.... சரியா?

நான் துவங்குகிறேன்.

நான் எட்டாவது/ஒன்பதாவது படிக்கும் போது விளையாட்டு தலைவராக இருந்தேன். அதே போல் பெண்கள் பிரிவிலும் ஒரு பெண் தலைவராக இருந்தார்.

தமாஸ் என்ன தெறியுமா... அவர் எபோது போட்டியில் கலந்து கொண்டாலும் என் டவுசரை தான் வாங்கி செல்வார். அதுக்காக நீங்கள் எல்லோரும் நான் போட்டிந்ததையா கலற்றி கொடுத்தேன் என்று கேட்காதீர்கள்.

aren
15-12-2005, 02:13 PM
நண்பர்களே...

அதுக்காக நீங்கள் எல்லோரும் நான் போட்டிந்ததையா கலற்றி கொடுத்தேன் என்று கேட்காதீர்கள்.

எங்களுக்கு எப்படித்தெரியும். நீங்கள்தான் சொல்லவேண்டும், அல்லது அந்தப் பெண் வந்து இங்கே சொல்லவேண்டும்.

பரஞ்சோதி
15-12-2005, 03:14 PM
நான் பெண் வேடம் போட துணி வாங்கி, அது முதல் எங்கள் இருவரையும் எல்லோரும் ஓட்டுவாங்க.

பென்ஸ்
15-12-2005, 04:08 PM
வேண்டாம் மக்கா வேண்டாம்....
தயவு செய்து என் பழைய நினைவுகளை கிளராதிர்கள்...

இன்று நானே நம்பமுடியாத சில நாற்றங்கள்....
குறும்பாக இருப்பது எல்லாம் நினைத்து சிரிப்பேன்..
ஆனால் பல விஷயங்கள்,விஷமமானவை...

வாலிப வயசின் அக்கிரமங்கள் பல செய்து இருக்கவேண்டாமோ
என்று இன்னும் அரித்து கொண்டு இருக்கின்றன...:angry: :angry:

தொடருங்கள் நண்பர்களே... நானும் பகிரலாம் என்று உள்ள சில விஷயங்களை பதிக்கிறேன்....:D :D :D :D

அறிஞர்
15-12-2005, 04:35 PM
மலரும் நினைவுகள் என்றும் இனிமையே....

பாரதி, பரம்ஸ் பலமுறை பதிந்துள்ளனர்... இப்போ வெற்றி.....

அன்பர்களே பதிக்கும்போது கொஞ்சம் கவனமா பதியுங்கள்... தேவையற்ற ஆபாச வார்த்தைகளை தவிருங்கள்

உதயா
15-12-2005, 05:48 PM
அன்பர்களே பதிக்கும்போது கொஞ்சம் கவனமா பதியுங்கள்... தேவையற்ற ஆபாச வார்த்தைகளை தவிருங்கள்
எங்கேயும் வந்ததாக தெறியவில்லையே!

Shanmuhi
15-12-2005, 06:19 PM
மனதைத் தாலாட்டும் இனிய நினைவுகள்...

pradeepkt
16-12-2005, 04:25 AM
இளமையே இனிமை.
அதை அசைபோடுவது இனிமையிலும் இனிமை.
இன்னும் எனக்குள் தூங்கிக் கொண்டிருக்கும் இவற்றை மெல்ல மெல்ல வெளியே கொண்டு வர வேண்டும். சரியான வடிவம் வராமல் தவித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கென்று தனி பாணி எழுத்து வேறு இல்லை. என்ன செய்வது? :D
அவ்வப்போது மக்களுடன் கலந்து இடுகிறேன்.