PDA

View Full Version : வெற்றியும் கபடியும்உதயா
15-12-2005, 01:03 PM
எங்கள் ஊரில் மாலை நேரங்களில் கபடியும், சிலம்பாட்டமும் விளையாடுவோம். என் ஆள் கிடைத்த புதிதில் கபடி விளையாடும் இடத்திற்கு சென்றிருந்தேன், பார்க்க போனால் பார்த்துவிட்டு வரவேண்டியது தானே.

சும்மா இருக்கமுடியாமல், அங்கிருந்த சில்லர செட்டுகள் எல்லோரும் எங்கலோடு விளையாடுங்கள் என்று கூற, நானும் சரி சின்ன பசங்க தானே என்று கோதாவில் இறங்க... ஆட்டம் துவங்கியது.

இரண்டாவது முறையாக பாடி போகும் போது சின்ன பசங்க என்ன பிடிச்சுட்டாங்க..... அய்யோ.................. கஷ்டம்.

நான் வீட்டிற்கு போகும் முன், என்னவளுக்கு தகவல் கிடைத்து சுடு தண்ணீர் வைத்து காத்திருக்கிறாள். மௌன சிரிப்பு வேறு.

இது எப்படி??

pradeepkt
15-12-2005, 01:05 PM
ஆனால் நீங்க கபடி ஆடுறதில பெரிய சூப்பர்மேன்னு சொல்லி வைக்கலை இல்ல?

உதயா
15-12-2005, 01:06 PM
ஆனால் நீங்க கபடி ஆடுறதில பெரிய சூப்பர்மேன்னு சொல்லி வைக்கலை இல்ல?
எங்க சொல்லி வைக்கலன்னு கேக்குறீக?? :)

pradeepkt
15-12-2005, 01:16 PM
உங்க வீட்டுலதான்....
அனேகமா ஏற்கனவே ஒரு நமட்டுச் சிரிப்பு சிரிச்சிருக்காக...
அதுனால கேட்டேன்... :)

பாரதி
15-12-2005, 01:51 PM
சின்னப்பசங்க புடிச்சத விட வீட்டம்மா சிரிச்சதுதான் கஷ்டமாப் போச்சாக்கும்..? ஹஹஹா...

aren
15-12-2005, 02:11 PM
உங்களைப் பற்றி ஏதோ தெரிந்திருக்கிறது அவர்களுக்கு. அதான் அந்த நமட்டுச் சிரிப்பு.

பரஞ்சோதி
15-12-2005, 03:06 PM
சின்னப்பசங்க புடிச்சத விட வீட்டம்மா சிரிச்சதுதான் கஷ்டமாப் போச்சாக்கும்..? ஹஹஹா...

பாரதி அண்ணா உங்களுக்கும் அனுபவம் இருக்கும் போலிருக்குது.

பரஞ்சோதி
15-12-2005, 03:10 PM
நான் சின்னவயசில் நல்ல கபாடி ஆட்டக்காரன், ஒரு முறை நான் பாடி போகும் போது திடிரென்று உள்ளே நுழைந்த ஒருவனின் பல் என் மண்டையை பதம் பார்த்து கடைசியில் 8 தையல். இன்னமும் காயத்தழும்பு இருக்கிறது. அத்தோடு கபாடிக்கு டாட்டா சொல்லியாச்சு.

அப்புறம் பள்ளியில் ஒரு முறை விளையாட ஆள் கிடைக்காமல் என்னை அணியில் சேர்க்க கடைசி ஆளாக நான் நின்றேன், எதிரணி கேப்டன் ஸ்டாலின் என்னை விரட்டி விரட்டி தொட வந்தான், நான் வந்தவரை வரட்டும் என்று ஒரு கிடுக்கி பிடி போட அவன் மாட்டிக் கிட்டான், கடைசியில் அவன் சோத்துகத்தாலை என்று தெரிந்தது, அத்தோடு அவன் அணியும் காலி, வெற்றி எங்களுக்கு, பள்ளியில் கொடுத்த சான்றிதழ் வேற கிடைச்சுது.

உதயா
15-12-2005, 04:29 PM
நானும் தம்பி ஆனந்த்தும் எப்போதும் வலப்பக்கம் மூலையிலேயே இருப்போம். ஆனந்த் கிடுக்கு பிடி போடுவார், நான் என் இடது கையால் பாட வந்தவரை அப்பேஸ் செய்து விடுவேன். ஆனந்த் கை வைத்தால் எங்கள் பக்கம் ஒரு பாயிண்டை குறித்துகொள்ளவேண்டியது தான். அவ்வளவு சிறப்பாக பிடிப்பார்.

அறிஞர்
15-12-2005, 04:32 PM
நல்ல கபடி விளையாட்டு.. நினைவுகள்... சின்ன வயசுல.. சும்மா விளையாண்டது.... என்ன பரம்ஸ் எந்த விளையாட்டையும் விட்டு வைக்கலை போல....

பரஞ்சோதி
15-12-2005, 05:20 PM
நல்ல கபடி விளையாட்டு.. நினைவுகள்... சின்ன வயசுல.. சும்மா விளையாண்டது.... என்ன பரம்ஸ் எந்த விளையாட்டையும் விட்டு வைக்கலை போல....

என்ன அறிஞரே! ஏதோ போட்டு வாங்குவது போல் இருக்குது.

pradeepkt
16-12-2005, 04:17 AM
அதெல்லாம் அறிஞரு தெளிவாச் செய்வாரு..
அண்ணா, நீங்க நிஜமாவே பெரிய தில்லாலங்கடியாத்தான் இருந்திருக்கீங்க... என்னவோ நமக்குக் கதைப் புத்தகம் படிக்கிறது, கதை சொல்றது, சின்னப் பசங்களை அதிகாரம் பண்றது இதை விட வெளையாட்டு முக்கியமில்லாமப் போச்சு.... இப்ப வருத்தப் படுறேன்.

mania
16-12-2005, 04:28 AM
நல்ல கபடி விளையாட்டு.. நினைவுகள்... சின்ன வயசுல.. சும்மா விளையாண்டது.... என்ன பரம்ஸ் எந்த விளையாட்டையும் விட்டு வைக்கலை போல....

:D :D :rolleyes: :rolleyes: அது என்ன விளையாட்டு பாஸ்.....:rolleyes: :rolleyes: ??? கொஞ்சம் விவரமா சொல்லுங்களேன்.....எங்களை போலவங்களுக்கு புரியர மாதிரி.....!!!!:rolleyes: :D :D
அன்புடன்
மணியா...:D :D

பரஞ்சோதி
17-12-2005, 04:15 AM
அதெல்லாம் அறிஞரு தெளிவாச் செய்வாரு..
அண்ணா, நீங்க நிஜமாவே பெரிய தில்லாலங்கடியாத்தான் இருந்திருக்கீங்க... என்னவோ நமக்குக் கதைப் புத்தகம் படிக்கிறது, கதை சொல்றது, சின்னப் பசங்களை அதிகாரம் பண்றது இதை விட வெளையாட்டு முக்கியமில்லாமப் போச்சு.... இப்ப வருத்தப் படுறேன்.

ஊரில் இருந்தவரை தீபாவளி, பொங்கல், ரமதான், கிறிஸ்துமஸ், கோயில்கொடை என்ற விழாக்கள் வந்தாலே கொண்டாட்டம் தான். சைக்கிள் போட்டி, பானை ஒடைக்கிறது, ஓட்டம், வாலிபால், என்று ஒன்றும் விடுவதில்லை, வீட்டு உபயோகத்திற்கு தம்ளர், கொடம், தட்டு முட்டு சாமான்கள் பரிசாக கிடைக்கும்.

பள்ளியில் பாட்மிண்டன் போட்டிகளில் நிறைய பரிசுகள் வாங்கியிருக்கிறேன், அதான் பள்ளியில் அனுமதிக்கப்பட்ட விளையாட்டு, கிரிக்கெட் என்பது பள்ளிக்கு வெளியே தான்.

rajasi13
17-12-2005, 12:14 PM
நானும் பள்ளி நாட்களில் கபடி விளையாடி இருக்கிறேன். பைத்தியமாகவே இருந்தேன்னு சொல்லலாம். தென்காசி சூப்பர் செவன் என்று பெயர் சொன்னால் நல்ல பெயர். எல்லா ஊருக்கும் போய் விளையாடி வருவோம். முதலில் நான் சும்மா கூட போய் கொண்டு இருந்தேன். அப்போதெல்லாம் அணி கேப்டன் அலி அண்ணன். அப்புறம் பழக்கடை அண்ணன் என்று சொல்லுவோம், பிறகு கண்ணன். இவங்கதான் முக்கியமானவர்கள். ஒவ்வொரு போட்டிக்கும் வண்டி பிடிச்சு போவோம். எனக்கு கண்ணன் உறவினர்ங்கறதால ரொம்ப மரியாதை.மாவட்ட கபடி போட்டியில் மிக்கதும் சூப்பர் செவன் வெற்றிபெரும். பரிசு 2001, 1501, 1001 என்று இருக்கும். ஒரு முறை நான் விளையாடிய மூன்றாம் போட்டியில் ஒரு சாதாரண அணி என்பதால் நாங்கள் முழு அணியாக இறங்காமல் இரண்டாம் தர வீரர்கள் இறங்கினோம். என்னை நடுவில் விட்டு விளையடும்போது தேர்டு ரைடில் எதிர் அணியை நோக்கி புதிதாக இறங்கிய பையன் போனான். நன்றாக ஆடியவன் புள்ளியை விடக்கூடாது என்பதற்க்காக நேரம் முடியும்போது நடுவில் ஆடியவரை நோக்கி நாங்கள் திரும்ப சொல்லியும் கேட்காமல் முன்னேர வளைத்து விட்டார்கள். சரியான உடற்பயிற்சி மற்றும் அனுபவம் இல்லாமையால், தோல்வியின் பிடியில் இருந்த எதிரணியினரில் ஒருவன் அவன் தொடை மேல் விழ தொடை எலும்பு முறிந்து விட்டது. உடனே எங்கள் ஆட்டத்தை நிறுத்தி அவனை மருத்துவ மனையில் சேர்த்தோம். அன்று என் வீட்டில் போட்ட தடை என் கபடி ஆசைக்கு முடிவு கட்டியது. என் கவனமும் செஸ் பக்கம் திரும்பியது.

aren
17-12-2005, 02:18 PM
கபடி ஆடாத மக்களே தமிழ்நாட்டில் இருக்கமாட்டார்கள் என்று நினைக்கிறேன். சென்னையிலும் கபடி பிரமாதம்.

நாங்கள் பள்ளி படிக்கும்பொழுது சாப்பாட்டு இடைவேளையின் பொழுது கிரிக்கெட் ஆட்டம் இல்லையென்றால் கபடி ஆடுவோம். வெறும் கபடி கபடி என்று சொல்லாமால் வேறு பல விதமாகவும் சொல்லுவோம்.

ஆங்கிச்சு பூங்குச்சு - அடுத்த வரி மறந்துவிட்டது. இந்த மாதிரி சொன்னால் நீண்ட நேரம் தம் பிடித்து இருக்கமுடியும்.

பழைய நினைவுகளையெல்லாம் தொகுத்து நானும் ஒரு பதிவு செய்யவேண்டும் என்று நினைத்திருக்கிறேன். நேரம் கிடைத்தால் நிச்சயம் எழுதுகிறேன்.

மன்மதன்
17-12-2005, 06:36 PM
நான் இதுவரை கபடி விளையாடியதில்லை :D

aren
18-12-2005, 01:34 AM
நான் இதுவரை கபடி விளையாடியதில்லை :D

மன்மதரே, நீங்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர். நிச்சயமாக தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்க மாட்டீர்கள் என்று தெரிகிறது.