PDA

View Full Version : நான்!



நிலா
21-04-2003, 09:56 PM
என் மனம் இரும்பல்ல
இடிந்துரைகளை உறுதியாக்கிக்கொள்ள!
நிலாச்சோறு உண்டவளல்ல
நித்திரையில் நினைவிழக்க!
உணர்வற்ற ஜடமல்ல
உதாசீனங்களை உதறித்தள்ள!
இதயமுள்ளவள்
இயலாது என்றும்
அக்னிப் பிரவேசம்!

kaathalan
21-04-2003, 10:15 PM
பாராட்டுக்கள், அருமையான கவிதையில் எங்களை நனையவிட்டமைக்கு. கடைசி சொல்லிலே ஒரு பெரிய அக்னி குண்டைப்போட்டுவிட்டீர்கள். இடித்துரைகள் மற்றும் உதாசீனங்களை உதறித்தள்ளலாம் ஆனால் அக்னிப்பிரவேசம்
அனுமதிக்கவே முடியாது தான்...

lingam
21-04-2003, 10:34 PM
அழகான கவிதை

நிலா
23-04-2003, 07:10 PM
பாராட்டிய காதலன் அவர்களுக்கும்,லிங்கம் அவர்களுக்கும் என் நன்றிகள்!

poo
23-04-2003, 07:16 PM
அழகு நிலா... பாராட்டுக்கள்!!!

இந்தக் காலத்தில் இது சாத்தியமா?!!..
இண்டர்நெட் வந்தாலும்
இதயங்கள் இன்னமும் இதயமாகத்தான்..
ஆனாலும் அக்னிப் பிரவேசம் அதிகம்தான்..

இதோ..
கலியுக சீதை கற்பை நிருபிக்க..
தீக்குண்டம் நோக்கியல்ல..
மகப்பேறு மருத்துவரை தேடி!!

இளசு
23-04-2003, 09:13 PM
என் மனம் ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள், அதன் தொடர்ச்சி கங்கை எங்கே போகிறாள் இவைக்கெல்லாம் மூலம்
அவர் ஆரம்பத்தில் எழுதிய சிறுகதை: அக்கினிப்பிரவேசம்...
ஒரு சிறுகதைக்கு அவ்வளவு விமர்சனப் புயல் எழுந்து தமிழ் எழுத்துலகம் பார்த்திருக்காது.... அந்த கதை எழுப்பிய அதீத உணர்வை உங்கள் கவிதையின்
கடைசிவரி ஏற்படுத்தியது... சுரீரென சாட்டை பட்டு எரியுமே அப்படி ஓர் உணர்வை! பாராட்டுகள் சகோதரிக்கு!!!

gans5001
24-04-2003, 01:41 AM
கற்பெனில் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைப்போம்

Nanban
02-06-2003, 12:28 PM
தன்னம்பிக்கை ஊற்றாய் பொங்கும் உங்களின் நான்-ல் சற்று பலவீனம் தெரிகிறதே? மீண்டும் பலம் பெற்று எழ வாழ்த்துகள்.....

நிலா
02-06-2003, 09:20 PM
நான்-ல் சற்று பலவீனம் தெரிகிறதே?

பிறருக்கு என் பலத்தை உணர்த்தவே இந்தக்கவிதை.நன்றி நண்பரே!

gankrish
03-06-2003, 05:06 AM
நிலா கவிதை அருமை

இளைஞன்
03-06-2003, 11:17 AM
நிலாச்சோறு உண்டவளல்ல
நித்திரையில் நினைவிழக்க!


வணக்கம் நிலா...
இந்த வரிகளை விளங்கிக் கொள்ள முடியவில்லை...
சற்று விளக்குங்கள்! இறுதியாக எழுதப்பட்ட வரிகள் அருமை (கருத்து ஒன்றை வலியுறுத்துகின்றன). நிலாச் சோறு உண்டவர்கள் எல்லோரும் நித்திரையில் நினைவிழப்பார்களா?


கற்பெனில் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைப்போம்
வணக்கம் கான்ஸ்...
நீங்கள் பொதுவென்று கருதும் கற்பு என்றால் என்ன என்பது பற்றிய விளக்கம் தேவைப் படுகிறது. அறியத் தருவீர்களா?

முத்து
03-06-2003, 04:10 PM
நிலா அவர்களே....பாராட்டுக்கள். மற்றும் நன்றிகள்....என்னதான் நாம் எதையும் தாங்கும் இதயம் என்று சொன்னாலும்.. யதார்த்தம் இதுதானே....