PDA

View Full Version : வெற்றியின் கிரிக்கெட் நினைவுகள்



உதயா
15-12-2005, 09:41 AM
நண்பர் பரம்ஸ்சின் கிரிக்கெட் நிணைவுகளை படித்ததும், என் மனதிலும் என் கிரிக்கெட் நிணைவுகள் தலை தூக்கியதின் பிரதிபளிப்புதான் இது. தவறுகளை பொருத்தருள்க.

நாட்டுபுறம் என்றால் கபடி,சிலம்பாட்டம், நீச்சல் இப்படி தான் நடந்து கொண்டிருந்தது. இப்படி இருந்த நாட்டுப்புறம் இப்போது எங்கு பார்த்தாலும் கிரிக்கெட் கிரிக்கெட் மட்டுமே.

எங்கள் ஊரும் கபடி போட்டியை மாற்றி கிரிக்கெட் போட்டி வைக்கலாம் என்று முடிவெடுத்தோம். எவ்வளவு சந்தோஷம். வசூல் வேட்டை துவங்கியது. நான் இருக்கும் தைரியத்தில் (துபாய் பணம் )வசூல் செய்யும் எங்கள் மன்ற ஒருப்பினர்கள் அனைவரும் கிடைத்ததையும், கொடுத்ததையும் அன்போடு பெற்றுக்கொண்டார்கள்.

அந்நாளும் வந்தது. ரேடியோ நீள குலாய்கள் அங்கும் இங்குமாய் கட்டப்பட்டது. தொலைதூர பேருந்துகள் கூட போட்டி நடக்கும் இடத்தில் நிருத்த சம்மத்தித்தனர்.கூட்டம் வரத்துவங்கியது.குச்சி ஐஸ்சும், பால் ஐசும், சர்பத்துகளும் ஆங்காங்கே விற்கப்பட்டது. ஒரு விசேசத்திற்கு என்னனென்னவெல்லாம் வேண்டுமோ அவை அனைத்தும் அங்கே இருந்தது.

பல ஊர்களில் இருந்தும் ஆட்ட வீரர்கள் வரத்துவங்கியதும், முதல் சுற்று 6 ஓவர் என்று நிர்ணயம் செய்யப்பட்டது. இருதி ஆட்டம் 12 ஓவர் என்று நிர்ணயிக்கப்படது. இரண்டு நாள் ஆட்டம்.

முதல் பரிசு : ரூ.1111
இரண்டாம் பரிசு : ரூ.999
மூன்றாம் பரிசு : ரூ.888

தொடர் ஆட்ட நாயகன் விருது :ரூ.777

இதோ எங்கள் டீம் :
1) காசிநாதன் - கேப்டன்
2) கோபி - துணை கேப்டன்
3) பாலா
4) வெள்ளைபூசாரி
5) திருமாறன்
6) கலாநிதி
7) மகேந்திரன்
8)9)10)11)கண்ணன் (வெற்றி) நான் தாங்க..

எங்கள் ஊர் பக்கம் கமிட்டி டீம் என்று இரு டீம் இருக்கும், அவர்கள் இருதி ஆட்டத்தில் மட்டுமே விளையாடுவார்கள். எவ்வளவோ தூரத்தில் இருந்து வரும் வீரகளுக்கு, இப்படி ஒரு டீம் இருதியாட்டத்தில் விளையாடுவதால், நன்றாக விளையாடக்கூடிய சில டீம்கள் இந்த முறையால் வெளியேர வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் நான் இந்த ஒரு முறையை அனுமதிக்கவில்லை. இதனால் எனக்கும் என் மருமகனுக்கும் கூட மனவருத்தம். பின் மருமகனை சமாதானப்படுத்தி விளையாட வைத்ததது வேறு கதை.

முதல் நாள் ஆட்டம்:-
முதல் ஆட்டம் (எங்களுக்கு போட்டியை கவணிக்கும் வேலைகள் அதிகம் இருந்ததால் முதலில் நாங்கள் விளையாண்டோம் )எங்களுக்கும் வேறொரு டீமுக்கும் நடந்தது.

முதல் ஓவர் டு காசிநாதன் 0.0.0.0. (ஆடியன்ஸ் கோஷம்.. காசி என்னப்பா ஆச்சு....)
ஐந்தவது பந்து 4
ஆறாவது பந்து 4.

ஆட்டம் அதிரடியாக நடந்தேறியது.வெற்றி மிக சுலபமாக இருந்தது. காரணம் காசிநாதன், கோபி, பாலா இவர்கள் எல்லோரும் அதிரடி ஆட்டக்காரர்கள். காசிநாதன் university லெவலில் விலையாடக்கூடியவர்.
காசிநாதன் என்ன சொல்லுகிறாரோ அதே போல் டீம் உருப்பினர்கள் அனைவரும் செய்யக்கூடியவர்கள் அத்தனை டீம் ஒற்றுமை. இப்படியாக மூன்று ஆட்டங்கள் விளையாண்ட நாங்கள் அனைத்திலும் வெற்றியே.

முதல் நாள் ஆட்டம் முடிவடைந்தது. ஊரில் ஒரே பேச்சு.. நம்ம பசங்க முதல் பரிச வாங்கிருவாங்கப்பா...

இரண்டாவது நாள் ஆட்டம்:-
இரண்டாவதாக நாங்களும், எங்கள் ஊருக்கு பக்கத்தில் உள்ள ஊருக்கும் நடந்தது. மிக மிக போராடி வெற்றி பெற்றோம். அவர் வெளி ஆட்டக்காரர்களெல்லாம் அழைத்து வந்திருந்தார்கள்.

இப்படியாக இருதியாட்டமும் வந்தது. 12 ஓவர். டாஸ் வின் செய்து அவர்களை பேட்டிங்செய்ய எங்கள் கேப்டன் கேட்டுக்கொண்டார்.

முதல் ஓவர்... கோபி போடுகிறார். 0.0.0.0.0.0
இரண்டாவது ஓவர் காசிநாதன் போடுகிறார்.. 0.0.0.0.0.0

கீப்பராக : திருமாறன்

பார்வையாளர்களின் ஆக்ரோஷத்துக்கு சொல்லவேண்டுமா...உள்ளூர் டீம் வேறு. இப்படி விருவிருப்பாக சென்ற ஆட்டம் 62 ஓட்டங்களுடன் முடித்து விட்டோம். 63 to Win.

கண்ணனும்...கோபியும் (இரண்டு ஓவர்களில் கோபி அவுட்)

கண்ணனும்...மகேந்திரன் ( நான்காவது ஓவரில் கண்ணன் அவுட்)எங்கள் டீம் மிகவும் என்னை நம்பியிருந்தது. (இங்கே கார்க் பந்தில் விளையாடி விட்டு அங்கு ரப்பர் பந்தில் விளையாடும் போது ஒன்னுமே தெறியவில்லை)

காசிநாதனும்...மகேந்திரனும் (7வது ஓவர்ருக்கு பிறகு மகேந்திரன் அவுட்)விக்கெட் விழுந்து கொண்டிருக்கிறது, ரன்கள் ஏறிக்கொண்டிருந்தது.

காசிநாதன்...பாலா
காசிநாதன்...வெள்ளைபூசாரி
காசிநாதன்...திருமாறன்
காசிநாதன்...7
காசிநாதன்...8
காசிநாதன்...9
காசிநாதன்...கலாநிதி நல்ல ஆட்டம்.

சின்ன ஆளாக இருந்தாலும் கலாநிதி நல்ல ஆட்டம் கொடுத்துக்கொண்டிருந்தார். அவருடைய வேலை ஒரு ரன் மட்டுமே. மற்றவேலை எல்லாம் காசிநாதன் கவணித்துக்கொண்டார்.

இரண்டு ஓவர்.. 5 ரன்கள். (ஆளாலுக்கு அட்வய்ஸ், நிதான நிருத்தி விளையாடுங்கள், வெற்றி நமக்கு தான் என்று)

காசிநாதன்...கலாநிதி

11வது ஓவர் முதல் பந்து.. 0.0.W. காசிநாதன் அவுட்... 5 ரன்களில் தோற்றோம்.

சதி செய்துவிட்டார் அம்பையர். பேட்டில் படவேயில்லை பந்து. அவுட் கொடுத்துவிட்டார்.
ஓன்றுமே கூறவில்லை காசிநாதன். வெளியேறிவிட்டார்.

ஏன் அவுட் கொடுத்தார் என்ற காரணங்கள் பின்புதான் தெறியவந்தது.இரண்டு காரணங்கள்.

1) நாங்கள் அவர்களின் டீமை தோற்க அடித்திருந்தோம்.
2) எங்களை எதிர்த்து இருதி ஆட்டம் ஆடிய டீம் அவருக்கு மிகவும் வேண்டிய டீமாம்.

எங்கள் ஊர் நண்பர்கலோ ஒரே சப்த்தம். ஏண்டா அவன போயி அம்பயர நிருத்தினீங்க என்று. என்ன செய்ய எல்லாம் நடந்தேறிவிட்டது.

இரண்டாம் பரிசு எங்களுக்கு. இப்படியாக எங்களின் முதலாம் ஆண்டு கிரிக்கெட் விழா நடந்தேறியது.

எப்படிங்க என் கிரிக்கெட் அனுபவம்.

பரஞ்சோதி
15-12-2005, 10:01 AM
வெற்றி, வெற்றி, அபார வெற்றி.

வெற்றியை அருமையான கட்டுரை எழுத வைத்த எனக்கு வெற்றி.

வெற்றி, கலக்கி இருக்கீங்க. அருமையான அனுபவம், படிக்க சுவையாகவும், பி.டி.சாமி நாவல் படித்த மாதிரி இருந்தது.

நாளை எனக்கு போட்டி இருக்குது, விளையாடி விட்டு முடிந்தால் அதையும் இங்கே கொடுக்கிறேன்.

பாராட்டுகள். அடுத்த ஆண்டு அம்பயரை எங்க ஊரிலிருந்து தேர்வு செய்யுங்க, கப்பு உங்களுக்கு, ஆப்பு எதிரணிக்கு.

aren
15-12-2005, 10:04 AM
வெற்றி நல்லாயிருக்கு படிக்க. மாட்ச் பார்க்க வேறு ஊர்லேயிருந்தெல்லாம் மக்கள் வருவார்களா? உங்களுக்கு 7, 8 மற்றும் 9ஆம் வரிசையில் வரும் ஆட்டக்காரர்களை பிடிக்காது போலிருக்கிறது. அவர்களுடைய பெயரைப் போடவில்லையே.

இந்த மாட்ச் எப்பொழுது நடந்தது. துபாய் பணம் என் பணம் என்கிறீர்கள், அப்படியானால் இந்த மாட்ச் நடந்தது நீங்கள் விடுப்பிற்கு ஊருக்கு சென்றிருக்கும்பொழுதா?

pradeepkt
15-12-2005, 10:27 AM
சூப்பரப்பு..
எனக்குச் சின்ன வயசில் இருந்தே கிரிக்கெட்டுன்னா (வேற வெளையாட்டுன்னா மட்டும் என்னாவாம்) அலர்ஜி.
ஒரு தடவை ரஞ்சி டிராஃபி நேரு ஸ்டேடியத்தில நடந்துச்சு. நானும் என் பிரண்டு இம்ரானும் போனோம். போகையிலயே நான் வீட்டில இருந்து சுண்டல், முறுக்கு, மொளகாப்பொடி போட்ட இட்லி எல்லாம் கட்டிக்கிட்டேன்.

அங்க போனா ஸ்ரீகாந்து வெளையாடுறாரு வெளையாடுறாரு வெளையாடிக்கிட்டே இருக்காரு... நான் கொண்டு போன தின்பண்டங்கள் எல்லாம் தீந்தவுடனே இந்தப் பயலை நச்சரிச்சு ஒரு வழியா வீடு வந்து சேந்தேன்...

மத்தபடி கிரிக்கெட்டு மேட்ச் எல்லாம் சின்ன வயசில நானே ரூல் போட்டு (எங்கப்பா மட்டை பந்து வாங்கிக் கொடுத்த உபயம்) வெளையாடிய காலத்தோட ஓஞ்சுது.

gragavan
15-12-2005, 11:44 AM
அடடா! என்ன வெளையாட்டு! என்ன வெளையாட்டு! அருமையாச் சொன்னீங்க வெற்றி. இன்னும் என்னென்னவெல்லாம் சொல்ல வெச்சிருக்கீங்க. அத்தனையும் எடுத்து விடுங்க.

உதயா
15-12-2005, 12:40 PM
வெற்றியை அருமையான கட்டுரை எழுத வைத்த எனக்கு வெற்றி.
தங்களின் ஊக்கத்திற்கு ரெம்ப நன்றி நண்பரே

அடுத்த ஆண்டு அம்பயரை எங்க ஊரிலிருந்து தேர்வு செய்யுங்க, கப்பு உங்களுக்கு, ஆப்பு எதிரணிக்கு.
சிரிச்சு சிரிச்சு வயிறு வலி எடுத்துருச்சு

உதயா
15-12-2005, 12:45 PM
வெற்றி நல்லாயிருக்கு படிக்க. மாட்ச் பார்க்க வேறு ஊர்லேயிருந்தெல்லாம் மக்கள் வருவார்களா?
ஆம் நண்பரே.. 18 பட்டி என்று சொல்வார்கள் இல்லையா? அது போல் தான் பக்கத்தில் உள்ள மக்கள் எல்லோரும் வருவார்கள்.


உங்களுக்கு 7, 8 மற்றும் 9ஆம் வரிசையில் வரும் ஆட்டக்காரர்களை பிடிக்காது போலிருக்கிறது. அவர்களுடைய பெயரைப் போடவில்லையே.
எல்லோரையும் பிடிக்கும், பெயர்கள் ஞாபகம் இல்லை அவ்வளவே. மேலும் இதில் நான் குறிப்பிட்டு இருந்த நபர்கள் எல்லாம் என்ன செய்கிறார்கள் என்பதையும் குறிப்பிட நினைத்தேன், ஆனால் சுய விளம்பரம் போல் ஆகிவிடும் என்பதான் எடுத்து விட்டேன்.


இந்த மாட்ச் எப்பொழுது நடந்தது. துபாய் பணம் என் பணம் என்கிறீர்கள், அப்படியானால் இந்த மாட்ச் நடந்தது நீங்கள் விடுப்பிற்கு ஊருக்கு சென்றிருக்கும்பொழுதா?
ஆம் தாங்கள் கூறியுள்ளது சரியே. நான் விடுப்பில் தாயகம் சென்றிருந்த போது நடத்தியது.

உதயா
15-12-2005, 12:47 PM
சூப்பரப்பு..
அங்க போனா ஸ்ரீகாந்து வெளையாடுறாரு வெளையாடுறாரு வெளையாடிக்கிட்டே இருக்காரு..
டெஸ்டு மேச்சா பாக்கபோனிய...? அப்படினா தீணி பத்தாது

aren
15-12-2005, 01:04 PM
டெஸ்டு மேச்சா பாக்கபோனிய...? அப்படினா தீணி பத்தாது

அவர் டெஸ்ட் மாட்ச் பார்க்க போனார்னு நீங்கள் நினைத்தால் அவர் என்ன செய்வார்.

pradeepkt
15-12-2005, 01:06 PM
ஆரென் அண்ணா,
என்னதான் சொல்ல வரீங்கன்னு புரியலையே

பாரதி
15-12-2005, 01:53 PM
உங்க கிரிக்கெட் நினைவுகள் அனைவரின் நினைவுகளையும் தூண்டிய வகையில் வெற்றிதான் வெற்றி. எழுதுங்கள்... எழுதுங்கள்... எழுதுங்கள்.

aren
15-12-2005, 02:07 PM
ஆரென் அண்ணா,
என்னதான் சொல்ல வரீங்கன்னு புரியலையே

டெஸ்ட் மாட்ச் சாக்கில் எடுத்துவந்தவற்றை சாப்பிடத்தான் என்று சொன்னேன்.

aren
15-12-2005, 02:08 PM
ஆரென் அண்ணா,
என்னதான் சொல்ல வரீங்கன்னு புரியலையே

இரண்டு முறை வந்துவிட்டது.

pradeepkt
16-12-2005, 03:54 AM
இப்ப ரெண்டு தடவை புரிஞ்சிருச்சு :D