PDA

View Full Version : பேர் படும் பாடு



pradeepkt
14-12-2005, 12:16 PM
இது நிஜமாகவே நொந்து போன ஒருவரின் ஆங்கில வலைப்பூவில் இருந்து எடுக்கப் பட்டது. எனக்கு மின்னஞ்சலில் வந்தமையால் சரியான வலைப்பதிவைக் கண்டறிய இயலவில்லை. வலைப்பதிவர் அமெரிக்காவில் வாழ்பவர் என்று மட்டும் அறிகிறேன்.

இப்போது அவர் மூலமாகவே இதைச் சொல்கிறேன்.

என் முழுப்பெயர் கலைவாணி கலைக்கு அதிபதியின் பெயர். தூய தமிழ்ப் பெயர். நான் என்னைக் கலை என்று அழைத்துக் கொள்வேன் உடனே அன்பே சிவம் மாதவன் அன்பரசை அர்ஸ் என்று அழைப்பது போலா என்று கேட்காதீர்கள். அது பெரிய கதை.

என் பெயரின் பல்வேறு வடிவங்களை இந்த டாலர் தேசத்துக்கு வந்து அறிந்தபின்னரே தங்கத் தமிழில் இவ்வெழுத்துகளை இஷ்டத்திற்கு மாற்றியமைத்தால் கிடைக்கும் அருமையான சொற்களை அடையாளம் காண முடிந்தது. அதற்காக அவர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். ஒவ்வொரு வடிவத்திற்கும் அடைப்புக் குறிக்குள் என் தனிப்பட்ட கருத்துகளை இணைத்திருக்கிறேன்.

முதல் அடி பல்கலைக் கழகத்துக்குள் நுழையும் முன்னரே விழுந்தது. பேராசிரியரிடமிருந்து வந்த மின்னஞ்சல் இப்படித் துவங்கியது:
செல்வி. கலவாணிக்கு, (உபயோகம்: களவாணிப் பய!)

சரி அதையாச்சும் பெருசுக்காகவும் அது குடுக்க வேண்டிய ஸ்காலர்ஷிப்புக்காகவும் பெருசுபடுத்தாம ஃப்ரீயா விட்டுட்டேன்

ஒரு வருஷம் கழிச்சு ஒரு நிறுவனத்தில நேரடித் தொழில் அனுபவத்துக்காக (intern அப்படிங்கறதுக்கு என்ன யோசனை செய்ய வேண்டியிருக்கு மக்கா) சேர முடிவு செஞ்சேன். அதுக்கு முன்னாடி அந்தப் பயக நான் அங்கு சேர்வதற்கு முன் எடுக்க வேண்டிய தேர்வுகள் பற்றிச் சொல்லக் கூப்பிட்டாங்க.
ஹலோ அது செல்வி. கிலவாணிங்களா? (உம்: கிழபோல்ட்டு, எட்செட்ரா இந்த செல்விக்கு ஒண்ணும் கொறைச்சல் இல்லை!)
இல்லைங்க இது கலைவாணி
ஓ மன்னிச்சிக்கிருங்க களவாணி (மறுபடியும் இப்படி எத்தனை பேருடா கெளம்பீருக்கீங்க?)

சரி என் பேரு பெத்த பேரா இருக்கிறதுனாலதானே இத்தனை குழப்பம்னு நானே ஆராய்ச்சி செஞ்சு கண்டுபுடிச்சேன். அங்க புடிச்சது புதுச்சனி. என்னை நானே கலைன்னு கூப்பிட்டுக்க ஆரம்பிச்சேன். காலைப் புடிச்ச பாம்பு கழுத்தைக் கவ்வாம விட்டிருமா என்ன?

ஒரு வழியா வேலைக்குச் சேர்ந்தேன். முதல் நாள் அறிமுகப் படலம். டொக்கு மேனேஜர் என்னைக் கூட்டத்துக்கு அறிமுகப் படுத்தி வைக்கிறாரு!
உங்கள் அனைவரின் சார்பிலும் நமது அலுவலகத்திற்குப் புதிதாக அங்கம் வகிக்க வந்திருக்கும் செல்வி. குலையை வரவேற்கிறேன். (உ.ம்: குலை குலையாய் வாழைப்பழம்)
கைதட்டல்கள் சிரிப்பொலிகள் (டேய் என்னாங்கடா எல்லாரும் சேந்து காமெடி பண்றீங்களா?)

அன்னைக்கு ஆரம்பிச்சது
ஒரு நாள் என் பாஸும் நானும் ஒரு ப்ராஜக்ட் பத்திப் பேசிட்டு இருந்தோம். மீட்டிங் முடிந்தவுடன், அவரு,
சரி கலி, நீ இங்கு வந்ததில் சந்தோஷம்! (உ.ம்: கலி முத்திப் போச்சு)
நான் வாயை வச்சிக்கிட்டுச் சும்மா இருக்காம,
அது கலி இல்லைங்க, கலை! (எனக்கு இது தேவையா)
ஓ காலி (உம்: பத்திரகாளி அனேகமா இன்னும் கொஞ்ச நேரத்தில அந்த அவதாரம்தான் எடுக்கப் போறேன், அப்புறம் நீ காலி!)
நான் உடனே ஹி ஹி.. வெரி க்ளோஸ் (போடாஆஆஆஆஆஆஆங்)

அன்றிலிருந்து என் பெயரைத் திருத்துவதை நிறுத்திவிட்டேன்.

கவிஞர்கள் அரைத்தூக்கத்திலும் துக்கத்திலும் வர்ணிக்கும் ஒரு இளம் காலை, நான் மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தேன் (ஒரு மாற்றத்துக்கு அலுவலக வேலை)
ஹேய் கிலை! எப்படிப் போவுது? Howzat goin? (உ.ம்: மரக்கிளை) (எனக்குத் தண்ணி தண்ணியாப் போவுதுடா ராஸ்கல்!)
ஹ்ம்ம் நல்லாப் போவுது (சொல்லிட்டுத் திரும்பிட்டேன். நமக்கு எதுக்கு இந்த பேர் திருத்துர பிசினஸ்ஸூ?)
நீ உன் பேரை இப்படித்தான் சொல்லுவியா? (ஆகா, ஆரம்பிச்சிட்டாய்ங்கடா ஆரம்பிச்சிட்டாய்ங்கடா)
உஹ் அது கலை
கொலாய்? (உம்: கொழாயடிச் சண்டை) (வேணாம்.)
கொலை? (உன்னை அதைத்தாண்டா செய்யப் போறேன் முண்டம்!) (வேணாம்)
களை? (உம்: களை புடுங்குறது) (வலிக்கு அழுதுருவேன்)
மேபீ, உன் பேரை நான் நல்லாச் சொல்றதுக்குப் பயிற்சி எடுத்துக்குறேன் (டேய் இதெல்லாம் ரொம்ப ஓவருடா தமிழில் பாத்தா இது ரெண்டே ரெண்டு எழுத்துதாண்டா வெள்ளைப் பன்னி!)
என்னடா சந்திரமுகியில தலைவர் துர்கா பேரை நக்கலடிக்கிற மாதிரி நம்ம பேர் ஆயிருச்சேன்னு நெனைக்கும் போது என் நண்பன் ஒருத்தன் ஒரு புத்திசாலித்தனமான யோசனை சொன்னான்.
அதாவது என் பேரை ஆங்கிலத்தில இருக்கிற அதே ஒலி வருகிற இன்னொரு வார்த்தையோட ஒப்பிட்டுச் சொல்லச் சொல்றது.
நான் உடனே கலைடாஸ்கோப் ல இருக்கிற மாதிரி கலைன்னு சொல்ல ஆரம்பிச்சேன். அங்கயும் வந்தது சனி. பயலுவ கலாய்னு தைரியமா நேராவே கலாய்க்க ஆரம்பிச்சிட்டாங்க.


ஹேய் கலாய்!
ய்யா?
சும்மா உன் பேரைக் கூப்பிட முயற்சி பண்ணிப் பாத்தேன். ஹா ஹா ஹா
ஓ.. ஹௌ ஸ்வீட்? (தூத்தேறி!)
ஏதோ வாந்தி எடுக்கிற எஃபெக்டுல பேர் இருந்தாலும், என் வாழ்க்கை சுகமாகத்தான போயிட்டு இருந்துச்சு ரெண்டு நாளைக்கு முன்னாடி வரைக்கும்

என் இண்டர்நெட் கனெக்சன் அவுட்டு. ஒரு கஸ்டமர் சர்வீசைக் கூப்பிட்டேன் என் கிரகம், அது சென்னை கால் செண்டருக்குப் போச்சு! எனக்கு அந்த விசயமே தெரியலை. நேரா என் அமெரிக்க பாணியிலயே பேச ஆரம்பிச்சேன். முன் செய்த ஊழ்வினை!

உங்க பேரு மேடம்?
கலாய்!
என்னது? இன்னொரு முறை சொல்லுங்க! (விளம்பரம் நினைவுக்கு வருதா)
கலைடாஸ்கோப்பில வருமில்லங்க கலாய்
உங்க பேரு புரியலை, உங்க நம்பர் குடுங்க, நான் ரெக்கார்டுகளைப் பாத்திட்டுச் சொல்றேன்
பெருமூச்சோடு நம்பரைக் குடுத்தேன்.
ஓ கலைவாணி, சரியாங்க? (ஒரு குத்தலான குரலில் கேட்டான்)
அடப் பாவி மக்கா, நீ நம்மூரா???? எல்லா அமெரிக்கத்தனத்தையும் மூட்டை கட்டி வச்சிட்டு ஒழுங்கா இந்தியன் மாதிரி பேசினேன்.

மறுமுனையில அவன் என்ன நினைச்சான்னு எனக்குத் தெளிவாப் புரிஞ்சுது. பேரப் பாத்தா 'urs pammingly' னு போடற கூட்டம் மாதிரி இருக்கு, ஆனா சீன் போடுறது மட்டும் இளவரசி டயானா ரேஞ்சுக்கு இருக்கே

அண்ணா, சத்தியமா நான் அந்த மாதிரி இல்லீங்ணா!

பென்ஸ்
14-12-2005, 12:55 PM
ஐயோ ஐயோ.... இப்பிடிதான் பெஞ்ஜமின்(benjamin) எங்கிற பெயரு "ஜாக்"(Jack) ஆகி போச்சு....

rajasi13
14-12-2005, 01:06 PM
சரி பெஞ்சமீன் உங்க கதையையும் உடுங்க.

பென்ஸ்
14-12-2005, 01:21 PM
அடப்பாவிகள .. இதுதான்ட ஆபீஸ் வரகூடாதுன்னு சொல்லுறது....
இன்னைக்கு புல்லா என் கதையா கேட்டே நேரம் போச்சா உங்களுக்கு....

ம்ம்ம்.. என்னத சொல்லுறது...

பெஞ்ஜமின் என்ற மயக்கும் பெயருடன் கல்லூரிக்கு போனேன்... கூப்பிடுரதுக்கு கஷ்டமா இருக்கு இன்னு அதை "பெஞ்சா" என்று மாத்துனானுக....
(பொண்ணுக மட்டும் ":பெஞ்ச்" என்று செல்லமா (பயத்தில்) கூப்பிடுவாங்க)

"பெஞ்சா" என்கிறது கஷ்டமா இருக்கிறத சொல்லி "குஞ்சா" என்று மாதினானுக....

காதலுக்கு மரியாதையின் மலையாள "அனியத்தி பிறாவு" சக்கை போடு போட... "குஞ்சா" என்னும் பெயர் "குஞ்சாக்கோ" ஆயிற்று...

"குஞ்சாக்கோ" வும் கூப்பிட கஷ்டமாக இருப்பதாக சொல்லி அதை "சாக்கோ" என்று மாத்தினானுக....

இந்தநேரத்தில் எல்லா கல்லூரி பொறுக்கியை போல் நானும் முடியை வளத்து குடுமி கட்டி கொன்டு நடந்த நேரம்..."டைடானிக்" பட வர...
(ஐயோ ஐயோ) என் பெயரை "ஜாக்" என்று மாற்றி... கூப்பிடானுகா... இருந்தாலும் "குஞ்சாக்கோ" ரெம்ப அதிகமாக அழைக்கபட்டது...

mukilan
15-12-2005, 01:02 AM
இந்த பிரச்னைக்காகத்தான்யா "ராஜமோகன் சந்திரசேகரன்" "ராஜ்" னு ஆயிட்டான்!

அறிஞர்
15-12-2005, 01:50 AM
நல்ல சிரிப்பான அனுபவம்...

என்னுடைய பெயரை சைனீஸில்.. கொலை பண்ணுவார்கள்..

இந்தியாவை விட்டு வெளியே வந்தால்.... எல்லா பேருக்கும் திண்டாட்டம்தான்

mania
15-12-2005, 02:50 AM
:D :D :D ஹா....ஹா...ஹா.....நல்ல நகைச்சுவை . எனக்கு "ஹூ இஸ் த சைனீஸ் ப்ரைம் மினிஸ்ட்டர்" என்ற ஃபேமஸ் ஜோக் நினைவுக்கு வந்தது...:D :D
அன்புடன்
மணியா...:D

gragavan
15-12-2005, 03:58 AM
இந்தக் கொடுமைய எங்க போய்ச் சொல்ல. வெளிநாடு போன எல்லாருக்கும் இப்படிக் கண்டிப்பா ஆயிருக்கும்.

பெல்ஜியம்ல அல்காடெல் ஆபீசுல நாங்க பெங்களூருல இருந்து மூனு பேரு போனோம். நானு. ஒரு ராஜ்புத். ஒரு மலையாளி. ஒவ்வொரு நாளும் வீட்டுக்குப் போறதுக்கு ஒவ்வொருத்தர் டாக்சி புக் பண்ணுவோம்.

ராகவன் அப்படீங்கற என்னோட பேர்ல ஒவ்வொரு ரெண்டு எழுத்துக்கும் நடுவுல a வர்ரதால ரேகேவேன்னு ஓரளவுக்குத் திருத்தமா உச்சரிச்சிருவாங்க. அடுத்தவன் அமித். அவன் அமிட்டாயிட்டான். அடுத்து வந்தான் கிருஷ்ணன். ஒரு நாளு அவன் செக்யூரிட்டியக் கூப்புட்டு அவன் பேரச் சொல்லி டாக்சி புக் பண்ணீருக்கான்.

நாங்க ஆஃபீசு வாசல்ல வந்து நிக்குறோம். ரொம்ப நேரமா டாக்சி வரலை. ஒரு டாக்சி ஏற்கனவே வெயிட்டிங்ல நிக்குது. நாங்க போய் கேட்டா யாரோ புக் பண்ணீருக்காங்கன்னு சொன்னான். சரீன்னு காத்திருந்தோம். கொஞ்ச நேரங் கழிச்சி யாரு புக் பண்ணீருக்கான்னு டிரைவர் கிட்ட கேட்டோம். யாரோ கிரிஸ்மேன் புக் பண்ணீருக்காருன்னு சொன்னான். இதுதாய்யா அந்த கிரிஸ்மேன்னு கிருஷ்ணனக் காட்டி டாக்சி ஏறுனோம்.

கடைசியா டிரைவர் சொன்னான். "when i heard the name, I thought itz some eatable." அன்னைக்கு ராத்திரி கிருஷ்ணன் ஒழுங்காத் தூங்கிருப்பான்னு நெனைக்கிறீங்க?

aren
15-12-2005, 05:38 AM
செம்ம கலக்கல் நண்பர்களே. இந்த மாதிரி பெயர்ப்பிரச்சனை எனக்கும் நிறைய நடந்திருக்கிறது. அவர்கள் சொதப்பும் விதத்தைப் பார்த்து சில சமயங்களில் நொந்திருக்கிறேன், பல சமயங்களில் சிரித்திருக்கிறேன். விதி நமக்கு அப்படியாகிவிட்டது. என்ன செய்வது.

எப்படி வேண்டுமானாலும் கூப்பிட்டுக்கொள் என்று விட்டுவிட்டேன். நாம் அவர்கள் பெயரை கொஞ்சம் மாற்றிக்கூறினால் கடுப்பாகிவிடுவார்கள். அதுமாதிரி தானே நமக்கும் இருக்கும் என்று ஏனோ அவர்கள் நினைப்பதில்லை.

ilanthirayan
15-12-2005, 02:34 PM
அட.. ப்ரதீப்புக்கு கலவாணின்னும் ஒரு பேரா... சொல்லவெயில்லீயே...ஹா..ஹா....

அறிஞர்
15-12-2005, 03:51 PM
:D :D :D ஹா....ஹா...ஹா.....நல்ல நகைச்சுவை . எனக்கு "ஹூ இஸ் த சைனீஸ் ப்ரைம் மினிஸ்ட்டர்" என்ற ஃபேமஸ் ஜோக் நினைவுக்கு வந்தது...:D :D
அன்புடன்
மணியா...:D சிரிங்க சிரிங்க... நல்ல சிரிப்பு தான்.. அது... அவர்களுடன் வாய்ப்பு கிடைத்தால் நேரத்தை பகிர்ந்து பாருங்கள்.. அதை விட சிறந்த காமெடி டைம் வேறு தேவையில்லை

pradeepkt
16-12-2005, 04:06 AM
உள்ளது போதாதுன்னு இப்ப என் பேரை வேற இழுக்க ஆரம்பிச்சாச்சா...
ஐயா, இது நான் எங்கிருந்தோ மொழி மாற்றம் செய்தது.
அங்கங்கு கமெண்டுகளை மட்டும் தெளித்திருக்கிறேன் :D

mania
16-12-2005, 04:14 AM
சிரிங்க சிரிங்க... நல்ல சிரிப்பு தான்.. அது... அவர்களுடன் வாய்ப்பு கிடைத்தால் நேரத்தை பகிர்ந்து பாருங்கள்.. அதை விட சிறந்த காமெடி டைம் வேறு தேவையில்லை

:D :D :D அதுக்கு அவ்வளவு தூரம் எதுக்கு.....:rolleyes: :rolleyes: :D :D எங்களுக்கு உங்களோடயே (அறிஞர், மைத்து , தேம்பா, சுவேது )ஒரே காமெடி டைமா தானே இருந்தது.....:rolleyes: :rolleyes: :D :D இப்போத்தான் கொஞ்ச நாளா உங்க அணியினர் தலையே காட்டாம இருக்காங்க.....!!!!:D :D
அன்புடன்
மணியா...:D :D

அறிஞர்
17-12-2005, 05:48 AM
:D :D :D அதுக்கு அவ்வளவு தூரம் எதுக்கு.....:rolleyes: :rolleyes: :D :D எங்களுக்கு உங்களோடயே (அறிஞர், மைத்து , தேம்பா, சுவேது )ஒரே காமெடி டைமா தானே இருந்தது.....:rolleyes: :rolleyes: :D :D இப்போத்தான் கொஞ்ச நாளா உங்க அணியினர் தலையே காட்டாம இருக்காங்க.....!!!!:D :D
அன்புடன்
மணியா...:D :D என்ன பண்ணுறது மக்கள் கொஞ்சம் பிஸி.. பம்பாய் சுற்றி.. மைத்து இப்பதான் வந்திருக்கிறார். சுவேதாவுக்கு பரீட்சை..... தேம்பா.. தெம்பா இந்தியாவில்.....

இளசு
18-12-2005, 07:51 AM
அடப்பாவி ப்ரதீப்...

சரியான ஒரு பதிவை எடுத்து, நச் நச்சுன்னு கமெண்ட்டுகள் கொடுத்து..


இப்போ நான் கடைவீதி போகணும்..


தனக்குத்தானே சிரித்துக்கொள்ளப்போகும் எனக்கு என்ன என்ன பிரச்சினைகள் வரப்போகுதோ?

வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் வன்முறை வளர்க..

(உங்கள் ரசனை மிக ரசிக்கவைக்கிறது பிரமாத பிரதீப்.)

இளந்தமிழ்ச்செல்வன்
18-12-2005, 08:09 AM
கலக்கல் ரகம். பாவம் "கலைவாணி" (நாமாவது ஒழுங்கா கூப்பிடுவோம்). குஞ்சாக்கோ..... இப்போ எப்டி?

அறிஞரே உங்களும் பிரச்சினையா?

இதுவரை நான் ஏதோ சிறு காயங்களுடன் தப்பிவருகிறேன்.

pradeepkt
19-12-2005, 04:45 AM
மிக்க நன்றி இளசு அண்ணா, இதசெ.
உங்கள் ஊக்கம்தான் வேற என்ன? இன்னும் இப்படி ஏதாச்சும் மாட்டினாக் கலாய்ச்சிருவோம்.
எனக்கு சான்ஃபிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் பிரதீப் குமார் திருமலை அரசன் கிற பெயரைச் சொல்ல மிகச் சரியா 1 நிமிஷம் எடுத்த அதிகாரி அதுக்கப்புறம் ஒரு வார்த்தை சொல்லலையே... நச்சுனு சீலை (என் மொகரைக் கட்டைன்னு நினைச்சிருப்பாரு I94 படிவத்தை) குத்தித் தொரத்தி விட்டுட்டாரு :D

மன்மதன்
19-12-2005, 06:44 AM
பதிவு சும்மா நச்சுன்னு இருக்கு.. காமெடி கலந்து சூப்பரா எழுதியிருக்கு...

pradeepkt
19-12-2005, 11:58 AM
ரெம்ப டேங்க்ஸூங்கோவ்...

தாமரை
02-01-2006, 08:37 AM
என்னோட கல்லுரி வாழ்க்கையிலும் இதே லொள்ளுதான்

தளபதி ஸ்ரீனிவாசன்
தாமரை செல்வன்
திருநடனசிகாமணி

தமிழ் அறிந்த ஆசிரியர்களே இரண்டு மூன்று நாட்கள் தட்டுத் தடுமாறி திக்கித் திணறி இந்த மூணு பேரையும் தாண்டுவாங்க..

அமெரிக்கா போனா.. அப்பா பேரையும் சேர்த்து (சித்தேஸ்வரன்)ரொம்பவே கஷ்டம்தான்...
எப்படியொ கஷ்டப்பட்டு தமாரை சில்வன் ஸிட்ஹேஸ்வரான் என்று படித்து விட்டு வெற்றிப்புன்னகை புரிவார்கள் பாருங்கள்...

Mathu
02-01-2006, 09:36 AM
பிரதீபு என்னையா இது? மனுசன் வீட்டை தவிர வேற எந்த இடதில்
இருந்தும் இந்த பக்கம் வரக்கூடாது என்று முடிவு பண்ணிட்டீரா?

அதுக்குள்ள கொசுறா ஒரு கொமண்ட் வேற...!

பறவாய் இல்ல நாங்க வீட்டில் இருந்தே வந்துகிறம் நீர் தொடரும்.

4 எழுத்தில் பேர் இருக்கிறவங்களுக்கே இந்த பாடு என்றா 20
எழுத்தில் பேர வச்சிட்டு நாம என்ன பாடு படுவம் நினச்சு பாருங்க மக்கா. தினம் தினம் வாள்வீச்சு தான்.

;) :mad: :rolleyes:

pradeepkt
02-01-2006, 11:08 AM
இப்படித்தான்யா நடக்குது ... என்ன செய்யிறது.
ஆந்திராவுல ஃபனி (phani) அப்படிங்கற பேரு ரொம்ப பேமசு... என் பழைய கம்பெனியில அந்தப் பேரோட ஒரு பய சேந்தான்.
என் கம்பெனியில அவனை ரொம்ப நாளா ஃபன்னின்னுதான் கூப்பிட்டுட்டு இருந்தோம்.
ராகவன் மட்டும் நான் ஆங்கில ஃப (f ஒலி) உபயோகிக்க மாட்டேன்னு அவனை விவகாரமாக் கூப்பிட்டுட்டு இருந்தார். நல்ல வேளை அவனுக்கு அதுக்குத் தமிழ் அர்த்தம் தெரியலை :D :D :D

gragavan
02-01-2006, 11:24 AM
இப்படித்தான்யா நடக்குது ... என்ன செய்யிறது.
ஆந்திராவுல ஃபனி (phani) அப்படிங்கற பேரு ரொம்ப பேமசு... என் பழைய கம்பெனியில அந்தப் பேரோட ஒரு பய சேந்தான்.
என் கம்பெனியில அவனை ரொம்ப நாளா ஃபன்னின்னுதான் கூப்பிட்டுட்டு இருந்தோம்.
ராகவன் மட்டும் நான் ஆங்கில ஃப (f ஒலி) உபயோகிக்க மாட்டேன்னு அவனை விவகாரமாக் கூப்பிட்டுட்டு இருந்தார். நல்ல வேளை அவனுக்கு அதுக்குத் தமிழ் அர்த்தம் தெரியலை :D :D :Dஅட பனியச் சொல்றீங்களா! அவரு பனித்துளி போலன்னு அப்படிக் கூப்புட்டேன். வேறென்ன செய்யச் சொல்றீங்க?

மதி
02-01-2006, 11:24 AM
இந்த வகையில நான் புண்ணியம் செஞ்சவன்யா...!
பேர்ல இருக்குற நெடிலெல்லாம் விட்டுட்டு கூப்பிடுவாங்க..!

sarcharan
02-01-2006, 12:11 PM
ஹைய்யா,

பிரதீப்பூஊஊஉ

என்ன ஒரு நல்ல(!!!!) பெயர்....:rolleyes:

அறிஞர்
04-01-2006, 10:12 PM
எப்படியொ கஷ்டப்பட்டு தமாரை சில்வன் ஸிட்ஹேஸ்வரான் என்று படித்து விட்டு வெற்றிப்புன்னகை புரிவார்கள் பாருங்கள்... ஆஹா... இப்படி படித்ததே.. பெரிய சாதனையல்லவா.... கலக்குங்க...

அறிஞர்
04-01-2006, 10:13 PM
அட பனியச் சொல்றீங்களா! அவரு பனித்துளி போலன்னு அப்படிக் கூப்புட்டேன். வேறென்ன செய்யச் சொல்றீங்க? பனின்னு கூப்பிட்டிங்களா... பன்னின்னு கூப்பிட்டீங்களா... உங்க பேரை அவன் கொலை பண்ணலையா

அறிஞர்
04-01-2006, 10:14 PM
ஹைய்யா,

பிரதீப்பூஊஊஉ

என்ன ஒரு நல்ல(!!!!) பெயர்....:rolleyes: என்னது.. அடுப்புக்கு ஊதுகுழல் போல.. ஊதல்....

ஓவியா
23-09-2006, 01:44 PM
பிரதீப் குமார் திருமலை அரசன்
அருமையான பதிவு போட்டிருகின்றீர்கள்
நல்லா ரசிச்சி சிரிச்சி படித்தேன்..

இளசுவின் பாராட்டு சும்மா லட்டுபோல் உள்ளது,
(ஒரு மூனு நாள் தூக்கம் இல்லாமல் இருந்துச்சா, மக்கா)


ஜப்பான் வின்வெளி பல்கலைகலக்கதில் ஒரு அதிகாரியை சந்திதேன்
அவர் சட்டையில் இப்படி குறித்திருந்தது......K7
பின்புதான் அறிந்தேன் அவர் பெயர் கேசவன் என்று......

pradeepkt
25-09-2006, 05:04 AM
அடங்கொக்கமக்கா... :)

ஓவியன்
26-02-2008, 05:30 AM
ஹா,ஹா...!!

கலைவாணி என்ற பெயரிலே இத்தனை வில்லங்கமா...??
இரசனையான இந்தப் பதிவாலே பெஞ்சமின் சாக்கோ ஆன கதையும் வெளியே வந்திட்டுதே...!! :D:D:D

ஜெயாஸ்தா
26-02-2008, 07:31 AM
தூசிதட்டி எடுக்கும் சில திரிகளில் இப்படி சுவாரசியமான விசயங்களும் இருக்கத்தான் செய்கிறது.

மனோஜ்
26-02-2008, 08:25 AM
அருமையான பதிவு

என்ரூமில் ஒரு இந்தேனேஷியா நண்பர் தங்கி இருக்கிறார் அவர் என்பெயரை மனோஜ் என்பதற்கு பதில் மஞ்சோஞ் என்று அழைப்பார்

அனுராகவன்
26-02-2008, 11:42 PM
அருமையான பதிவு

என்ரூமில் ஒரு இந்தேனேஷியா நண்பர் தங்கி இருக்கிறார் அவர் என்பெயரை மனோஜ் என்பதற்கு பதில் மஞ்சோஞ் என்று அழைப்பார்

அப்ப அவர் பெயரை நீங்க கூப்பிடுவிங்க..
நாமும் அப்படிதான்..
நல்ல பதிவுகள்

மனோஜ்
27-02-2008, 09:31 AM
அப்ப அவர் பெயரை நீங்க கூப்பிடுவிங்க..
நாமும் அப்படிதான்..
நல்ல பதிவுகள்
அவரு பேரு டீசான்டே
நான் கூப்பிடுவது டீசைடே:icon_b: