PDA

View Full Version : எப்படி வாடிக்கையாளர்களை கவர்வது,



rajasi13
14-12-2005, 08:30 AM
எப்படி வாடிக்கையாளர்களை கவர்வது,
நான் கடந்த வாரம் நியூ யார்க் சென்று வரும்போது முதல் வகுப்பு காத்திருக்கும் அறையில் பில்கேட்ஸ் உட்கார்ந்து ஒரு பானத்தை சுவைத்துக்கொண்டிருந்தார். நான் ஒரு முக்கியமான வாடிக்கையாளருக்காக காத்திருந்தேன். அவ்வாடிக்கையாளர் மூலம் எனக்கு நல்ல வியாபாரம் கிடைக்க வழியுண்டு. நான் மெதுவாக பில்கேட்ஸிடம் போய் அறிமுகப்படுத்திக்கொண்டு . "கிரு கேட்ஸ் எனக்காக நீங்கள் ஒரு உதவி செய்ய முடியுமா?" "ம்" சொல்லுங்கள்", என் நண்பர் ஒருவர் வருவார், அவரிடம் அந்த இருக்கையில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது நீங்கள் என்னருகே வந்து எப்படி இருக்கிறாய் தாமஸ் என்றால் போதும்". அவரும் சரி என்றார். என் நண்பர் வந்து அவருடன் நான் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது என் தோளில் கை வைத்து பில் கேட்ஸ் எப்படி இருக்கிறாய் தாமஸ் என்றார், நான் உடனே எழுந்து shutup kets, நான் முக்கியமான ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கிறேன் தெரியவில்லையா என்றேன்.

இது ஆங்கிலத்தில் வந்த மெயிலின் மொழி பெயற்ப்பு, படிச்சுட்டு யாரும் அடிக்க வராதீங்க

mania
14-12-2005, 08:35 AM
அருமை .....அருமை....:D :D
அன்புடன்
மணியா...:D :D

gragavan
15-12-2005, 05:07 AM
பில் கேட்சுக்கு இதுவும் வேணும். இன்னமும் வேணும். ஹி ஹி. பிரதீப் இதப் படிக்கலைல்ல............

pradeepkt
15-12-2005, 06:31 AM
நான் படிச்சிட்டேன்...
இது மாதிரியே கொஞ்சம் முன்னாடி ஒரு அசைவமான ஒண்ணு படிச்சேன்... அதைப் போட வேண்டாமின்னு விட்டுட்டேன் :D
கேட்ஸுக்கு என்ன வந்தா எனக்கென்ன :)

gragavan
15-12-2005, 07:37 AM
நான் படிச்சிட்டேன்...
இது மாதிரியே கொஞ்சம் முன்னாடி ஒரு அசைவமான ஒண்ணு படிச்சேன்... அதைப் போட வேண்டாமின்னு விட்டுட்டேன் :D
கேட்ஸுக்கு என்ன வந்தா எனக்கென்ன :)ஆமாமா எனக்கும் அது தெரியும். :D :D :D

rajasi13
15-12-2005, 11:34 AM
சொல்லுங்கப்பா நானும் தெரிஞ்சுக்கறேன்.

அறிஞர்
15-12-2005, 06:28 PM
சொல்லுங்கப்பா நானும் தெரிஞ்சுக்கறேன். ரொம்ப ஆவல்தான்... இன்னும் கொடுங்கள் அன்பரே

Narathar
16-12-2005, 12:30 AM
உண்மையிலேயே நம்ம ராஜாசி கேட்ஸை சந்த்தித்திருப்பாரோ என்று நினைத்தால்.........
அட!!! மொழிமாற்றம், நன்றி

pradeepkt
16-12-2005, 04:36 AM
நீங்க எல்லாம் ரொம்ப விரும்பிக் கேட்டதுனாலதான் குடுக்குறேன். அப்புறம் என்னைய வையக்கூடாது ஆமா சொல்லிட்டேன் :)

gragavan
16-12-2005, 04:42 AM
நீங்க எல்லாம் ரொம்ப விரும்பிக் கேட்டதுனாலதான் குடுக்குறேன். அப்புறம் என்னைய வையக்கூடாது ஆமா சொல்லிட்டேன் :)அதெல்லாம் இங்க குடுக்கக் கூடாது. ஆமாம். ஸ்டிரிக்கிட்டா சொல்லிப்புட்டேன்.

pradeepkt
16-12-2005, 04:42 AM
ஒரு வாலிபன் மெல்ல அந்த நடன அரங்கத்தினுள் நுழைந்தான்.

ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம், ஒரே ஒரு அழகிய யுவதி மட்டும் அமைதியாக ஒரு ஓரமாக உட்கார்ந்திருந்தாள். அவனுக்கு அவளிடம் பேச வேண்டுமென்று ஆசை! அவளையே பார்த்தான். அவள் மெல்ல அவனைப் பார்த்துப் புன்முறுவல் பூத்தாள். அட என்ன ஆச்சரியம், மெல்லக் கண்ணாலேயே அவனை அருகிலும் அழைத்தாள்.

மெல்ல அவள் பக்கத்தில் போய், "நான் உங்களுக்கு ஒரு பானம் வாங்கித் தரலாமா?" என்று மெதுவாகக் கேட்டான். அவ்வளவுதான்!

பொங்கி எழுந்தவள், "என்ன தைரியம் இருந்தால் என்னை ராத்திரி கூப்பிடுவ, ராஸ்கல், என்னதிது சின்னப் புள்ளைத்தனமா இருக்கு" என்று கத்திக் கூப்பாடு போட்டாள். இவன் அவமானத்தில் குன்றிப் போனான். மன்னிப்புக் கேட்டுவிட்டு இன்னொரு மேசையில் அமர்ந்து குடிக்க ஆரம்பித்தான்.

சில நிமிடங்கள் கழித்து அந்த யுவதி அவன் அருகில் வந்தாள்.
மன்னிப்புக் கேட்கும் தோரணையில் மென்மையான குரலில், "மன்னிச்சிருங்க, நான் ஒரு உளவியல் மாணவி, இந்த மாதிரி தர்மசங்கடமான சூழலில் மனிதர்களின் செயல்பாட்டைக் குறித்து ஆய்வதற்காகத்தான் இப்படி செய்தேன். வேணுமின்னா எனக்கு ஒரு பானம் வாங்கிக் குடுங்க"

இப்ப அவன் பொங்கி எழுந்தான். கட்டையான குரலில் அனைவருக்கும் கேட்கும்படி கத்தினான்.
"என்ன திமிர் உனக்கு, உன் ரேஞ்சுக்கு மணிக்கு 20 டாலர் அதிகமின்னு உனக்கே தோணலை?"

pradeepkt
16-12-2005, 04:43 AM
ராகவா,
நீங்க குடுக்கக் கூடாதுன்னு சொன்னது இது இல்லைல்ல? :D

gragavan
16-12-2005, 05:32 AM
ஆமாம். இது இல்லை. இது இல்லை. ஆனால் எனக்கு இதுவும் தெரியும். இதுவும் தெரியும்.

mania
16-12-2005, 05:38 AM
ஆமாம். இது இல்லை. இது இல்லை. ஆனால் எனக்கு இதுவும் தெரியும். இதுவும் தெரியும்.

:rolleyes: :rolleyes: ரொம்பவே இதுனுக்கிறீங்களே ரெண்டு பேரும்.....:rolleyes: :D :D
அன்புடன்
அது இது எல்லாம் தெரிந்த :rolleyes: :rolleyes: :D
மணியா...:D :D

aren
16-12-2005, 05:48 AM
பிரதீப்,

இது ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பவும் பழசாச்சே.

புதுசா ஏதாவது இருக்குதா? (ஆனந்தவிகடன் மட்டும் இருக்குது என்று சொல்லாதீர்கள்).

pradeepkt
16-12-2005, 05:52 AM
வேற என்ன செய்யிறது,
தப்பித் தவறி ஏதாச்சும் புதுசாக் குடுக்கலாமின்னா அதுக்குத்தான் எத்தனை எதிர்ப்பு??? :)