PDA

View Full Version : தூத்துக்குடியும் நானும்....



பென்ஸ்
14-12-2005, 07:14 AM
எனக்கு கதை மாதிரி எல்லாம் போடதெரியாதா.. அதானால்... ஒரு வரிகளில்...

+2 செய்முறை பரிச்சை இன்னும் 10 நாட்களில்....
அப்புறமா "xxxxx" வை பார்க்கமுடியாது...
முடிவேடுத்துவிட்டேன்... என் காதலை எப்படியாவது சொல்லி விடுவது என்று..."xxxxx" என்னுடைய பள்ளியில் புதியதாக சேர்ந்து இருந்த ஆசிரியைகளில் ஒருவர்...
எனக்கு ஆங்கிலம் நடத்தினார்... அவர் பாடத்தின் போது சொல்லும் சிறு சிறு ஜோக்குகள்... பாடத்தை கதையாக சொல்லுவது.. எல்லாம் எனக்கு பிடித்து போயிருந்தது, அதர்க்கு மேல் அவரையும் தான்.....

இரவு முழுக்க கண்விழித்து.. புல் ஸ்கேப் பேப்பரில் 3 பக்கத்திற்க்கு ஒரு கடிதம் எழுதி அவருக்கு கொடுத்தேன்... அவர் அதை அப்படியே என் வகுப்பு ஆசிரியையிடம் கொடுக்க... அவர் அதை என் வகுப்பில் அனைவர் முன்னே வாசிக்க... என் மானம் கப்பலேறியது....

இது ஒரு புறம் இருக்க.... என் வகுப்பு மானவர்கள் 9 பேர் சேர்ந்து பனக்கள்ளு குடிக்க சென்றனர்... அதில் 4 பேர் முதலில் சென்று நிரைய குடித்து விட்டு, தூரமாக ந்ன்ற 5 பேரையும் காண்பித்து அவர்கள் காசு கொடுப்பார்கள் என்று கூறிவிட்டு சென்றனர்... ஆனால் இவர்கள் 4 பேரும் அந்த 5 பேரிடம் சென்று "நாங்கள் 100 ரூபாய் கொடுத்து இருக்கிறேன்.. குடித்து விட்டு, மீதியை வாங்கி வாருங்கள்" என்று சொல்லி விட்டு எஸ்கேப் ஆக.... அப்பாவி பயக்க 5 பேரும் நல்ல குடித்துவிட்டு.."ஓய்.. மீதி பைசா..." என்று கேட்க... அந்த வியபாரி... அதில் ஒருவனின் சட்டையையும், ரிக்காட் புக்கையும் வங்கி வைத்து விட்டு அனிப்பி விட.. இதை அந்த பையன் வீட்டினர் அறிய.. அவர்கள் பள்ளிக்கு வர..அதுவும் ஒரு பிரச்சினையாக... இப்படியாக... ஒரு ஊரைவிட்டு ஓடிபோகும் திட்டம் எங்கள் நாலு பேருக்கு வந்தது...

அப்படியே பெங்களுர் வந்திரலாம் என்று வீட்டில் இருந்த காசு திருடிவிட்டு (சத்தியமா..அதுதான் முதலும் கடைசியும்) நண்பர்களை தேடி சென்றல்.. ஒருவன் வீட்டில் மாட்டி விட... மற்ற மூவரும் பஸ் நிலையம் வர... அதில் அடுத்தவனும் எஸ்கேப் ஆக... "தமிழன் முன் வைத்த காலை பின் வைக்கமாட்டான்" என்று துவங்கியது என் பயனம்...
நாகர்கோவில் வந்து ஒரு நண்பன் விட்டில் சீருடையை மாற்றி மீண்டும்... திருநேல்வேலி பஸ் நிலையம் வந்து.."எங்களை தேட வேண்டம்" என்று வீட்டிற்க்கு ஒரு கடைதம் எழுதி போட்டு விட்டு... இருக்கும் போதேய்... என்னுடம் இருக்கும் அன்பு நண்பன் "ஜீவா" ..நான் +1 வரை படித்த இடம் தூத்துகுடி அங்கு முதலில் செல்லலாம் என்று கூற... சரி... என்று நாங்கள் தூத்துகுடிக்கு பஸ் ஏறினோம்....

இரவு 11 மணிக்கு தூத்துகுடி பஸ் நிலையம் வந்த நாங்கள், அவன் படித்த "கால்டுவேல்" பள்ளீக்கு சென்று சுவர்ரேறி குதித்து கஸ்டல் சென்றோம்... அங்கு எல்லோரும் நைட்டு ஒருமணிக்கும் உட்கார்ந்த்து ரெக்காட் எழுதிகொண்டு இருந்தார்கள்.... சரி என்று அஙு படுத்தோம்.. காலை 4 மணிக்கு ஒரு மானவன் வந்து எங்களை எழுப்பி "வார்டன் வார நேரம்...அதனாலா போயிடுங்க என்று சொல்ல... திரும்பவும் சுவறேறி குத்தித்து... ரயில் நிலையம் வந்து பிளாட் பாரமில் படுத்தோம்...

ஜீவா... நாம் செய்வது எவ்வளவு முட்டாள் தனம் என்பதை சென்டிமென்டலாக கூற... சரி திரும்பி செல்லலாம் என்று முடிவேடுத்தோம்.... ஆனால்... வந்ததே வந்தாச்சு... நல்லா ஊரு சுத்தி பாத்திட்டு போகலாம் என்று முடிவேடுத்தோம்....

மறு நாள் கலை ..ஜீவாவின் தூத்துகுடி நன்பர்கள் எல்லம் எனக்கும் நண்பர்கள் ஆனார்கள்.... ஸ்பிக், கார்பர் எஸ்டேட், டேர்மல் என்று எல்லா பகுதியிலும் உள்ள நண்பர்களையும் சேர்த்து கொண்டு.. கும்மாளம் துவங்கியது...

மாத கோவில் பக்கம் கண்ணன் என்று ஒரு நண்பர் டீ கடை வைத்திருந்தார்.. அவர் கடை எங்கள் இருப்பிடம் ஆனது... ஒரு TVS50 எங்கள் புல்லட் ஆனது... (அதில் எப்போதுமே மூன்று பேர் தான்)...
நாங்கள் வீடு திரும்புவதர்க்கு முந்தய தினம்... கார்பர் சென்று கப்பள் பார்க்க வேன்டும் என்று நான் சொல்ல ... நண்பன் ஒருவன் எப்படியோ அனுமதி வாங்கி வந்தான்...

நான், ஜீவ, தேவ்வானத் என்று மூரு பேயரும் அந்த TVS50 யில் கப்பலை சுற்றி பாற்ற்க சென்றோம்... கப்பலில் அறைகள் எப்படி இருக்கும் என்று பார்க்க நான் ஒரு அறையை திறக்க, அங்கு ஒரு காலி பீர் பட்டிலும் ஒரு பாக்கேட் சிகரெட்டும் இருந்தது.. அதை ஜீவ அமுக்க, பயந்து வெளீயெ வந்தோம்.. அப்போது ஒரு ஆபிசர் சீருடையில் வந்து "என்ன?" என்று கேட்டார்... நாங்கள் "உங்கள் அறையை கான்பிக்க முடியுமா??" என்று கெட்ட்க , அவர் சரி என்று எங்கோ அழைத்து சென்றார்... பயந்து பயந்து நாங்கள் சென்றது "கட்டுப்பாட்டு அறை"... அஙு இருந்த ரேடார் எல்லாம் பத்துக்கிட்டு... வேளியே வர ..ஆரம்பித்தது பிரச்சினை....

வேற ஒன்னும் இல்லை மழை... கொடும் காற்றுடன் மழை... கப்பலின் படியை மேலே தூக்கிவிட்டார்கள்... அதுவேர பயமா போச்சு... சரி நல்ல மழையா இருக்கே என்று ஜிவா தன் பாக்கேட்டில் இருது திருடிய சிகரெட் பாக்கெட்டை எடுத்து பிரிக்கு... அதனுள்ளே ஒரு "பீடி"....

கடிசியா மழை நின்றது... வெளியே வந்து நம்ம புல்லட்டை ஸ்டர்ட் பன்னினால்.. என்னை பார்த்து "போடங்கோய்யா!!! என்று சிறித்தது.... கடைசியில் கஸ்டபட்டு ஸ்டர்ட் செய்து வேலியே வரும் வளீயில் ரோடு முடுக்க தண்ணிர்... எதிரே வந்த லாரி தண்ணிரை மேலே அடித்து விடுவானோ என்று நான் கையை காண்பிக்க... அவன் நிறுத்தினான்... நிறுத்தி முறைத்தான்... எனக்கு கோபம் வர... அசிங்கமான கேட்ட வார்த்தையில் நான் அவனை திட்ட... அவன் அப்படியே அந்த லாரியை அந்த சிறிய ரோடில் திருப்பி எங்களை துரத்தினான்... நாங்கள் எங்கள் TVஸ்50 நல்லா விரட்டிதாண் பாத்தோம்... கடைசியா வண்டியை ஓட்டிய ஜீவாவுக்கு ஒரு ஐடியா வந்து வண்டியாய் ரோடின் எதிர் புறம் சென்று நிறுத்தினான்... லாறி ஓட்டுனன் ஒரு கம்பியை எடுதுக்கோன்டு எங்களை அடிக்க வர.. அப்ப பாத்து போலிஸ் வர.. அப்படா.... தப்பிச்சோம்...

அன்று இரவு மீண்டும் வண்டி பிடித்து வீடு வந்தோம்... காலை 4 மணிக்கு என் வீட்டில் விளக்கு எரிந்து கொண்டு தாண் இருந்தது...நான் வீட்டின் கதவை தட்ட... அண்ணனும் அம்மாவும், அக்காவும் கதவை திறந்தார்கள்... அவர்கள் உறங்கி இருக்கவில்லை... எதுவுமே சொல்லாமல் என்னை பார்த்த என் அண்ணனிம் ஏதோ கிடைக்காதது கிடைத்த திருப்தியும்... அக்காவின் விம்மலும்... என் வாழ்க்கையை மாற்றி இருந்தன... அழுது கொண்டே என்னை கட்டிபிடித்த அம்மாவின் கண்ணீர் என்னில் இன்னும் ஈரமாய்.....

mukilan
14-12-2005, 07:25 AM
பென்ஸீன் அப்பா: பள்ளிக் கூடத்திலே சேர்த்தேன். டீச்சருக்கு லவ் லட்டர் கொடுத்தே!

பென்ஸ்: அது அறியாத வயசு!
---
நினைத்து மகிழக்கூடிய நிகழ்வுகள்.

mania
14-12-2005, 07:27 AM
நல்லாத்தானே (சுவையாய்) எழுதியிருக்கிறாயே பெஞ்சமின்...!!!!:D நேற்று நடந்தது போல நினைவாக சொல்லியிருக்கிறாயே.....பாராட்டுகள்.:D நீ சொன்னதை வைத்து பார்த்தால் அடிக்கடி பள்ளியில் பெஞ்சு மேலேயே நின்றதால் உன் பெயர் பெஞ்சமின் என்று ஆனதோ....???:rolleyes: :rolleyes: :D
அன்புடன்
மணியா...:D

பென்ஸ்
14-12-2005, 07:38 AM
நான் பெஞ்ச் மேலே நின்றது இல்லை.. :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: ஆனால் பள்ளியில் வீட்டுபாடம் செய்யவில்லை என்றால் என் மற்றோரு அழகான ஆசிரியை கையில் பிடுங்குவார்... அவரிடம் பிடுங்கு வாங்கவே நான் வீட்டு பாடம் செய்வதில்லை...:D :D :D :D :D :D

pradeepkt
14-12-2005, 08:46 AM
பென்ஸு...
பெரிய தில்லாலங்கடிதானய்யா நீரு... என்னா மேரி கலாய்ச்சிருக்கீங்க...
பள்ளிக்கொடத்துல டீச்சருக்கு லெட்டரு... எல்லாம் கடலோரக் கவிதைகள் பாத்துக் கெட்டுப் போயிட்டீரு... :D
ஆனா அந்த பீடித் துண்டு உங்களுக்கு ஆப்பாயிருச்சே...

ஆமா, தூத்துக்குடின்னதும் ஒருத்தரு தாவித் தாவி வருவாரே, அவரை எங்க காணோம்.... :D

pradeepkt
14-12-2005, 08:47 AM
பென்ஸீன் அப்பா: பள்ளிக் கூடத்திலே சேர்த்தேன். டீச்சருக்கு லவ் லட்டர் கொடுத்தே!

பென்ஸ்: அது அறியாத வயசு!
---
நினைத்து மகிழக்கூடிய நிகழ்வுகள்.
ஏய்யா நீங்க இப்படி ஏதாச்சும் மகிழக் கூடிய நினைவுகள் வச்சிருக்காப்லயா?

gragavan
14-12-2005, 08:55 AM
பென்ஸு...

ஆமா, தூத்துக்குடின்னதும் ஒருத்தரு தாவித் தாவி வருவாரே, அவரை எங்க காணோம்.... :Dவந்துட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேங்க்க்க்க்க்க்க்க்க்...

ஐயா பெஞ்சமீனு....என்னா வெளையாட்டு வெளையாடியிருக்கீக...இப்படியெல்லாம் எதுவுமே நான் செஞ்சதில்லையே.........சரி. கொடுப்பினை அவ்வளவுதான்.

கால்டுவெல் பள்ளிக்கூடத்துலயா ஒங்க பிரண்டு படிச்சாரு...மாதா கோயிலு.....அது இதுன்னு சொல்லைல எனக்கு ஊரு அப்படியே கண்ணுல வருது..........எப்பேர்ப்பட்ட ஊரு அது.

டீச்சருக்கே கடிதம் கொடுத்த பெஞ்சமீன்னு பட்டம் கொடுத்திரலாமா? கொஞ்சம் பெரிசா இருக்கு.

நீங்க தூத்துக்குடிக்கு வந்தப்ப ஒரு பஸ்டாண்டுதான். இப்பத்தான் ரெண்டு ஆயிருச்சி. வடக்க போக ஒன்னு. தெக்க போக ஒன்னுன்னு.

பென்ஸ்
15-12-2005, 08:27 AM
ஐயா பெஞ்சமீனு....என்னா வெளையாட்டுவெளையாடியிருக்கீக... இப்படியெல்லாம் எதுவுமே நான் செஞ்சதில்லையே......... சரி. கொடுப்பினை அவ்வளவுதான்.

சும்மாவ... +2 மார்க்கும் என்னொட பயங்கரமா விளையாடிடிச்சு இல்ல

கால்டுவெல் பள்ளிக்கூடத்துலயா ஒங்க பிரண்டு படிச்சாரு...மாதா கோயிலு.....அது இதுன்னு சொல்லைல எனக்கு ஊரு அப்படியே கண்ணுல வருது..........எப்பேர்ப்பட்ட ஊரு அது..

பின்னா.. பின்னா... இல்லாமலா...

நிழல் தேடி ஓடும் மரங்கள்...
மர நிழல் தேடி ஓடும் சூரியனும்...
கடல் நீரை போர்வேல் பொட்டு குடிநீர் என்பதும்...
குடி நீருக்காக போர் பொட்டால் உப்பள நீ வருவதும்.. அதிசயம் அல்லவா???

ரோச் என்றொரு பீச்...
இரவில் மட்டும் எங்காவது இருவர் தென்படுவர்
ஆனல் அவருக்கே தெரியாது அவர்
உக்காந்திருப்பது உச்சாவா.. இல்லை சுச்சாவா என்று...

நேரு பூங்கா நாறும்...
காக்கைகளின் வேடந்தாங்கல்..
வருடத்திற்க்கு ஒரு முறை மட்டும் இங்கு
சிலை கழுவி மாலை போட மக்கள் வருவர்...
என்ன அருமையான ஊரு....

*/ ராகவ கடுப்பாயிட்டிங்களா...
இல்லையா.... சத்தியமா எனக்கு தூத்துக்குடி பிடிக்கும்... சார்லஸ், கிளியோப்பட்ட்ரா, ராஜ் தியட்டர்கள்... மாதா கோவில் வாசல் கிரிக்கெட் ஆட்டம்... இன்னும் நிறைய/*

pradeepkt
15-12-2005, 08:40 AM
யோவ் சொல்றதை எல்லாம் சொல்லிட்டு... என்னா பேச்சு இது?
ராகவா,
என்னதான் நான் தூத்துக்குடிக்குப் போவலைன்னாலும் இப்படியாய்யா என்கிட்ட கதை அளக்குறது? என்னமோ போங்க :D

gragavan
15-12-2005, 08:52 AM
யோவ் சொல்றதை எல்லாம் சொல்லிட்டு... என்னா பேச்சு இது?
ராகவா,
என்னதான் நான் தூத்துக்குடிக்குப் போவலைன்னாலும் இப்படியாய்யா என்கிட்ட கதை அளக்குறது? என்னமோ போங்க :Dஐயகோ பிரதீப்! இப்படி ஒரு நாகர்கோயில் சதி இருக்குமுன்னு நான் நெனைக்கலையே!
தூத்துக்குடி தண்ணி டாங்கி தெரியுமா.................
தூத்துக்குடி தெருமலு தெரியுமா............
தூத்துக்குடி சிவங் கோயிலு தெரியுமா..........
தூத்துக்குடி மாதா கோயிலு தெரியுமா.........
குடிக்கக் கெடைக்கிற நல்ல மணிமுத்தாத்துத் தண்ணி தெரியுமா........
பொங்கல் சமயத்துல கெடைக்கிற கெட்டிப் பனங்கெழங்கு தெரியுமா...
கூறுகூறா கட்டி விக்கிற மீனு தெரியுமா................
கௌரி சங்கரு ஓட்டலு தெரியுமா................
வீஃபோரஸ்சு தெரியுமா............
அழகிரிசாமி செட்டியாரு நகைக்கட தெரியுமா..........
தருமராஜ் நாடாரு மளிகைக்கட தெரியுமா.............
பத்ரகாளியம்மங் கோயிலு தெரியுமா..........
WGC ரோடு தெரியுமா......................
கலெக்டர் ஜீப்புக்கே குண்டு போட்டோந் தெரியுமா........(ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் தப்பாச் சொல்லீட்டேன்.)
கலெக்டர் ஆபிசுக்கே ரோடு போட்டோந் தெரியுமா........
பாஞ்சாலங்குறிச்சி இந்தப் பக்கம்.......
எட்டயபுரம் அந்தப் பக்கம்.......
ஓட்டப்பிடாரம் இன்னொரு பக்கம்.......
மணியாச்சி இந்தாக்குல.......
திருச்செந்தூரு அந்தாக்குல.......
குலசேகரன்பட்டிணம் அந்தமானிக்கு.......

pradeepkt
15-12-2005, 09:21 AM
என்னய்யா நீங்க என்னை ஏச்சுப்பிட்டியன்னு நெனைச்சிட்டனே.. தப்பாத்தான் நெனைச்சிட்டனோ...
விட்டா அடுத்து
பெருமா கோயிலு தெரியுமா
அதுக்கு முன்னாடி பொட்டலு தெரியுமா
பக்கத்துல வடக்குத் தெரு தெரியுமா
அதுக்குள்ளாற மூக்கப்பிள்ளை சந்து தெரியுமா
அதில எங்க மச்சினியைக் கட்டிக் குடுத்த பெரியம்மா வீடு தெரியுமா
அங்க நான் போனப்ப குடுத்த காப்பியத் தெரியுமா
அந்தக் காப்பிக் கொட்டை வாங்கின ராசப்ப நாடார் கடையத் தெரியுமா
பால் கறந்து குடுத்த பெரியமூக்கி மவனைத் தெரியுமா
நமத்துப் போன சீனி வாங்கின ரேசன் கடையத் தெரியுமா

இன்னும் நிறைய தெரியுமாம்பீக... :D

பென்ஸூ,
இன்னும் நெறைய சங்கதி இருக்கப்போவ்...
நீங்க இன்னும் என்ன மிச்சம் வச்சிருக்கீங்க :D

aren
15-12-2005, 09:29 AM
கலக்கல் பென்ஸ். இளமை நினைவுகள் என்றுமே மறக்காது. படிக்கும்பொழுது நேற்று நடந்தது போலிருக்கிறது.

தூத்துக்குடி உங்களுக்கு அவ்வளவாக பிடிக்காதா அல்லது ராகவனை பிடிக்காதா?

டீச்சருக்கு எப்படி லவ் லெட்டர் கொடுத்தீர்கள். ரொம்பவும் குசும்புதான் உங்களுக்கு.

பீடி நல்லா பிடிப்பீர்களோ. அதைப்போய் சுட்டிருக்கிறீர்களே.

நல்ல கலக்கல். தொடருங்கள்.

gragavan
15-12-2005, 10:08 AM
தூத்துக்குடி உங்களுக்கு அவ்வளவாக பிடிக்காதா அல்லது ராகவனை பிடிக்காதா?
அவ்வளவா பிடிக்காதா? அவ்வளவும் பிடிக்காதான்னு கேளுங்க ஆரென்.

gragavan
15-12-2005, 10:11 AM
இன்னும் நிறைய தெரியுமாம்பீக... :D

பென்ஸூ,
இன்னும் நெறைய சங்கதி இருக்கப்போவ்...
நீங்க இன்னும் என்ன மிச்சம் வச்சிருக்கீங்க :Dஅட என்ன பிரதீப்பு இப்படிச் சொல்லீட்டீக. அந்த வழியாப் போன சிவாசி என்னையப் பாத்துக் கையாட்டுன பெருமை மிக்க ஊருல்ல தூத்துக்குடி.

ஹெவி வாட்டர் பிளாண்ட் இருக்கு. காப்பர் ஸ்மெல்டிங் பாக்டரி இருக்கு. தெர்மல் பவர் பிளாண்ட் இருக்கு. ஷிப்பிங் ஹார்பர் இருக்கு. பிஷ்ஷிங் ஹார்பர் இருக்கு. என்னான்ன இருந்துருக்கு.....அதுக்கு மேல அந்தக் காலத்துல கட்டபொம்மன் தூத்துக்குடி வழியாத்தான் திருச்செந்தூரு போனாராம் தெரியுமா? சிதம்பரம் பிள்ள கப்பலு விட்டது எங்கூருலதான!

பாரதி
15-12-2005, 02:04 PM
கால்டுவெல் பள்ளி, மாதா கோவில், தூத்துக்குடி பேருந்து நிலையம், ஸ்பிக், ஹார்பர், தெர்மல்,ரோச் பூங்கா, நேரு பூங்கா, சார்லஸ், கிளியோபாட்ரா, ராஜ் - கண்ணீர் - ஈரம்... நினைவுக்காற்று வருடிக்கொண்டுப்போகிறது பெஞ்சமின்.

பென்ஸ்
15-12-2005, 06:00 PM
=தூத்துக்குடி உங்களுக்கு அவ்வளவாக பிடிக்காதா அல்லது ராகவனை பிடிக்காதா?

நீங்க வேற,, :rolleyes: :rolleyes: தூத்துக்குடி எனக்கு பிடிக்காதுதான்.. :mad: :mad:
ஆனா, அது ராகவன் ஊருன்னு தெரிஞ்ச பிறகு... நாகர்கோவிலை விட ரோம்ப பிடிச்ச ஊரு அதுதாங்க.....;) ;) :rolleyes: :rolleyes:

ராகவா, இப்போ உங்க வீட்டுக்கு வந்தா குடிக்க தண்ணீர் குடுப்பீங்க தானே???:confused: :confused: :rolleyes: :rolleyes: :D :D

பென்ஸ்
15-12-2005, 06:04 PM
விட்டா அடுத்து
பெருமா கோயிலு தெரியுமா
அதுக்கு முன்னாடி பொட்டலு தெரியுமா
பக்கத்துல வடக்குத் தெரு தெரியுமா
அதுக்குள்ளாற மூக்கப்பிள்ளை சந்து தெரியுமா
அதில எங்க மச்சினியைக் கட்டிக் குடுத்த பெரியம்மா வீடு தெரியுமா
அங்க நான் போனப்ப குடுத்த காப்பியத் தெரியுமா
அந்தக் காப்பிக் கொட்டை வாங்கின ராசப்ப நாடார் கடையத் தெரியுமா
பால் கறந்து குடுத்த பெரியமூக்கி மவனைத் தெரியுமா
நமத்துப் போன சீனி வாங்கின ரேசன் கடையத் தெரியுமா

இன்னும் நிறைய தெரியுமாம்பீக... :D

பென்ஸூ,
இன்னும் நெறைய சங்கதி இருக்கப்போவ்...
நீங்க இன்னும் என்ன மிச்சம் வச்சிருக்கீங்க :D

ஓஓஓ.. ரும்ப டாங்க்ஸ்மா.... ஐ மீன் தாங்ஸ்
கலக்கிட்ட...
ஆனா கடைசியில எனக்கு ஆப்பு வச்சிட்டியே.....

பென்ஸ்
15-12-2005, 06:06 PM
கால்டுவெல் பள்ளி, மாதா கோவில், தூத்துக்குடி பேருந்து நிலையம், ஸ்பிக், ஹார்பர், தெர்மல்,ரோச் பூங்கா, நேரு பூங்கா, சார்லஸ், கிளியோபாட்ரா, ராஜ் - கண்ணீர் - ஈரம்... நினைவுக்காற்று வருடிக்கொண்டுப்போகிறது பெஞ்சமின்.

இன்னும் நான் விட்ட இடங்களை எல்லாம் ராகவன் சொல்லிவிட்டார்....

pradeepkt
16-12-2005, 04:23 AM
பென்ஸூ,
உங்களுக்கு எங்கய்யா நான் ஆப்பு வச்சேன்...?? நான் என்ன செஞ்சாலும் அது இப்படித்தான் முடியுது.
எனக்கும் தூத்துக்குடி பாக்கணுமின்னு ரொம்ப ஆசை, மதுரை, அருப்புக்கோட்டை தாண்டி கீழே போனதே கொஞ்ச இடங்கள்தான். நாகர்கோயில், திருச்செந்தூரு, கன்னியாகுமரி எல்லாம் சுற்றுலாவுக்குச் சென்றிருக்கிறேன். நான் பார்க்க வேண்டிய இடங்களில் தூத்துக்குடியும் ஒன்று. பார்ப்போம்!

இளசு
18-12-2005, 07:10 AM
அறிவுக்கும் ரசனைக்கும் தொடர்பு உண்டாம்..

ஒரு டீச்சர் கையில் கடிதம்
இன்னொடு டீச்சர் கையால் கிள்ளல்..


பெஞ்ச்சுக்கு +2 வயசிலேயே பி.எச்.டி. அளவு அறிவப்பா..
அதான் ரசிப்பும் அதுக்குத்தக்கன...

பிஎச்டி எப்படி பிளஸ்டூ மார்க் அதிகம் வாங்கும்... பொருத்தமான பரீட்சை இல்லையில்லா...


சிகரட் பாக்கெட்டில் பீடி
துரத்தி அடிக்க வரும் லாரி


அண்ணாவின் நெகிழ்ச்சி
அம்மாவின் கண்ணீர்

வாழ்க்கை சமன்பாடுகள் ஏதோ ஒரு கணக்கில் சரியாகவே..



குசும்பு பெஞ்சமின்...

கன்னத்தைக் காட்டுங்க... கிள்ளணும்.

கொஞ்சம் கண்டிப்பும் - நிறைய கரிசனமுமாய்..


----------------------------------------------------------


ராகவன், பிரதீப்

தூத்துக்குடி முன்பாட்டு, பின்பாட்டு -
ஒரு நாட்டுப்புறக்கவிதையாய் பின்னிப்பூ வைக்குது மக்கா..

---------------------------------------------------------------

சிவாஜி கைக்காட்டினாரா? ஆஹா... ராகவன்..

அன்று சுபதினமா?

இளந்தமிழ்ச்செல்வன்
18-12-2005, 08:26 AM
பெஞ்சமின் பெரிய ஆளு நீரு. கத்துக்க வேண்டியது நிறையவே இருக்கு உங்ககிட்ட. பழைய நினைவுகள் மகிழ்ச்சி தருவதாய் அமைந்தால் நாம் இருமுறை வாழ்ததாய் அர்த்தம் என்று எங்கோ படித்தது நினைவுக்கு வருகிறது. கூடவே நான் மாட்டிக்கொண்டு முழித்த சில நிகழ்வுகளும்.

பென்ஸ்
18-12-2005, 03:06 PM
பென்ஸூ,
நாகர்கோயில், திருச்செந்தூரு, கன்னியாகுமரி எல்லாம் சுற்றுலாவுக்குச் சென்றிருக்கிறேன். நான் பார்க்க வேண்டிய இடங்களில் தூத்துக்குடியும் ஒன்று. பார்ப்போம்!

நேரம் கிடைச்சா சொல்லுங்க நானே கூப்பிட்டுகொண்டு போகிறேன்...

aren
18-12-2005, 03:12 PM
நேரம் கிடைச்சா சொல்லுங்க நானே கூப்பிட்டுகொண்டு போகிறேன்...

எதுக்கு நீ ராகவன் கிட்டே அடி வாங்குவதைப் பார்க்கவா அல்லது பிரதீப்புக்கும் ராகவன் கொஞ்சம் கொடுக்கவா?

தூத்துக்குடியைப் பற்றி இப்படி எழுதிவிட்டு அங்கே வேறு போகிறேன் என்றுவேறு சொல்கிறீர்கள். நம்ம பசங்க சும்மா விடுவாங்களா?

பென்ஸ்
18-12-2005, 03:17 PM
அண்ணாவின் நெகிழ்ச்சி
அம்மாவின் கண்ணீர்

வாழ்க்கை சமன்பாடுகள் ஏதோ ஒரு கணக்கில் சரியாகவே..

குசும்பு பெஞ்சமின்...

கன்னத்தைக் காட்டுங்க... கிள்ளணும்.

கொஞ்சம் கண்டிப்பும் - நிறைய கரிசனமுமாய்..


உங்களை போல அன்பும், கன்டிப்பும் கரிசனமும் கொன்டு சிலர்
இருப்பதால் தான் நான் செய்த தப்புகள் மன்னிக்கபட்டன...

கடவுளை நீ பார்த்திருக்கிறாயா என்று கேட்டால்... "ஆம்".. என்பது தான் என் பதில்...
கடவுளே தான் பல சமயம் என்னை மானிதர்களக வந்து காப்பாற்றி இருக்கிறார்...

என்னில் இன்னும் மன்றத்தில் பகிர குடிய சில விஷயங்களை
பதிக்கிறேன்.. பாரமும் குறையும்.. சிலருக்கு பாடமாகவும் இருக்கும்....

தாமரை
23-03-2006, 01:08 PM
எனக்கு கதை மாதிரி எல்லாம் போடதெரியாதா.. அதானால்... ஒரு வரிகளில்...


இரவு முழுக்க கண்விழித்து.. புல் ஸ்கேப் பேப்பரில் 3 பக்கத்திற்க்கு ஒரு கடிதம் எழுதி அவருக்கு கொடுத்தேன்... அவர் அதை அப்படியே என் வகுப்பு ஆசிரியையிடம் கொடுக்க... அவர் அதை என் வகுப்பில் அனைவர் முன்னே வாசிக்க... என் மானம் கப்பலேறியது....

வாசிக்கற மாதிரிதான் எழுதி இருந்தீகளா?




இப்படியாக... ஒரு ஊரைவிட்டு ஓடிபோகும் திட்டம் எங்கள் நாலு பேருக்கு வந்தது...

அப்படியே பெங்களுர் வந்திரலாம் என்று வீட்டில் இருந்த காசு திருடிவிட்டு (சத்தியமா..அதுதான் முதலும் கடைசியும்)



உங்க ஓடிப்போன கதைகளுக்கே ஒரு தனி மன்றம் போடணும் போல இருக்கே.. (வித விதமா... ஆபத்துக்கு ஓடறது, வீம்புக்கு ஓடறது.. பயந்து ஓடறது.. மறைந்து வாழ்வது, காணாமல் போறது..யார் பின்னாலவது ஓடறது.. யப்பா.. ) ம்ம்ம்... :D :D



அன்று இரவு மீண்டும் வண்டி பிடித்து வீடு வந்தோம்... காலை 4 மணிக்கு என் வீட்டில் விளக்கு எரிந்து கொண்டு தாண் இருந்தது...நான் வீட்டின் கதவை தட்ட... அண்ணனும் அம்மாவும், அக்காவும் கதவை திறந்தார்கள்... அவர்கள் உறங்கி இருக்கவில்லை... எதுவுமே சொல்லாமல் என்னை பார்த்த என் அண்ணனிம் ஏதோ கிடைக்காதது கிடைத்த திருப்தியும்... அக்காவின் விம்மலும்... என் வாழ்க்கையை மாற்றி இருந்தன... அழுது கொண்டே என்னை கட்டிபிடித்த அம்மாவின் கண்ணீர் என்னில் இன்னும் ஈரமாய்.....

கடைசி வரிகளில் பொய் சொல்வதை குறைத்துக் கொள்ளுங்கள். அப்புறம் இப்படி எல்லாம் ஹைலைட் பண்ண வேண்டியது இருக்கும். (கடவுள் என்னை ஏன் படைத்தான் என்ற கேள்விக்கு இப்படி வந்து பதில் கொடுக்கிறீர்களே!)

சுகந்தப்ரீதன்
16-01-2008, 08:36 AM
மேலெழுப்பிய தாமரை அண்ணாவுக்கு எனது நன்றிகள்..!

பெரும்பாலான மாணவர்களுக்கு இது போன்ற ஓடிபோகும் எண்ணங்கள் பள்ளி படிக்கையில் வருவதுண்டு..! ஆனால் ஒருசிலர் மட்டுமே அதை செய்வது உண்டு.. மற்றவர்கள் அப்படி ஓடிவிடுவது இல்லை ஏனெனில் பயம் பயம் பயம்,,! அப்படி பயந்து போய் ஓடாமல் காலாததை ஓட்டியவனில் நானும் ஒருவன்.. ஆனால் பென்ஸ் அண்ணா.. ஓடிபோய் ஒரு வாழ்க்கை அனுபவத்தை பெற்று வந்து நமக்கு தந்திருக்கிறார்..! ரசிக்கும்படியான எழுத்துநடை... வாழ்த்துக்கள் பென்ஸ் அண்ணா..!

சூரியன்
17-01-2008, 06:07 AM
சில மாணவர்கள் வீட்டில் எதாவது திட்டி விட்டால் உடனே வீட்டில் கோபித்துகொண்டு வெளியே வருகிறார்கள்.
இது கொஞ்ச நேரத்தில் தானாக சரியாகி விடும்.

பென்ஸ்
17-01-2008, 08:31 AM
மேலெழுப்பிய தாமரை அண்ணாவுக்கு எனது நன்றிகள்..!

பெரும்பாலான மாணவர்களுக்கு இது போன்ற ஓடிபோகும் எண்ணங்கள் பள்ளி படிக்கையில் வருவதுண்டு..! ஆனால் ஒருசிலர் மட்டுமே அதை செய்வது உண்டு.. மற்றவர்கள் அப்படி ஓடிவிடுவது இல்லை ஏனெனில் பயம் பயம் பயம்,,! அப்படி பயந்து போய் ஓடாமல் காலாததை ஓட்டியவனில் நானும் ஒருவன்.. ஆனால் பென்ஸ் அண்ணா.. ஓடிபோய் ஒரு வாழ்க்கை அனுபவத்தை பெற்று வந்து நமக்கு தந்திருக்கிறார்..! ரசிக்கும்படியான எழுத்துநடை... வாழ்த்துக்கள் பென்ஸ் அண்ணா..!
நன்றி ப்ரிதன்...
பட்டு திருந்துபவர்களில் நானும் ஒருவன்...

பென்ஸ்
17-01-2008, 08:33 AM
சில மாணவர்கள் வீட்டில் எதாவது திட்டி விட்டால் உடனே வீட்டில் கோபித்துகொண்டு வெளியே வருகிறார்கள்.
இது கொஞ்ச நேரத்தில் தானாக சரியாகி விடும்.
சரியே சூரியன்...
உங்களை மாதிரி முதிர்ச்சி இருந்திருதால் நான் செய்திருக்க மாட்டேன்.. என்ன செய்ய...!!!??

சூரியன்
17-01-2008, 08:55 AM
சரியே சூரியன்...
உங்களை மாதிரி முதிர்ச்சி இருந்திருதால் நான் செய்திருக்க மாட்டேன்.. என்ன செய்ய...!!!??

அப்படி இல்லை அண்ணா நான் பட்ட அனுபவத்தை சொன்னேன்.

ஓவியன்
17-01-2008, 09:08 AM
நடந்தவற்றை நடந்த படி எழுத தைரியம் வேண்டும், அது பென்ஸ் அண்ணாக்கு நிறையவே...

பட்டுத் தெளிந்த பட்டறிவு அது...
காச்ச காச்ச தான் பொன் சுடர் விட்டு பிரகாசிக்கும்...
நம் பென்ஸ் அண்ணாவும் அப்படியே... :icon_b:

________________________________________________________________________________________________________________

இந்த வேளையில் திட்டமிட்டு இந்த திரியை மேலெழுப்பிய செல்வருக்கு...!! :sprachlos020:

மயூ
22-01-2008, 01:59 AM
இரவு முழுக்க கண்விழித்து.. புல் ஸ்கேப் பேப்பரில் 3 பக்கத்திற்க்கு ஒரு கடிதம் எழுதி
உங்க தீசிசுக்கு கூட இம்புட்டு நேரம் செலவழித்தீரோ?


என் வகுப்பு மானவர்கள் 9 பேர் சேர்ந்து பனக்கள்ளு குடிக்க சென்றனர்
நல்ல நண்பர்கள்.. ஹா.. ஹா....!!! :lachen001:


வீட்டில் இருந்த காசு திருடிவிட்டு (சத்தியமா..அதுதான் முதலும் கடைசியும்)
சரி.. நம்பிடுறோம்!!! :traurig001:



வந்ததே வந்தாச்சு... நல்லா ஊரு சுத்தி பாத்திட்டு போகலாம் என்று முடிவேடுத்தோம்....
என்னாப் பரந்த மனசு??? வாழ்க.. வாழ்க :traurig001: :sauer028:


அழுது கொண்டே என்னை கட்டிபிடித்த அம்மாவின் கண்ணீர் என்னில் இன்னும் ஈரமாய்.....
எங்கள் கண்ணிலும்தான்!!!