PDA

View Full Version : பிரிவு



kalvettu
13-12-2005, 07:14 AM
மறந்திராத
stay in touch
i will miss u
இப்படி பிரிவுக்கான
எத்தனையோ வரிகளில்
ஒன்றுகூட உச்சரிக்கப்படாமல்
நிகழ்ந்துவிட்டது
நம் பிரிவு

நிதர்சனம் உடைத்த கண்ணாடியில்
முகம் பார்த்து
தன்னைத்தானே
அடையாளம் காணமுடியாமல் தவிக்கிறது
காதல்

உன் பெயரை
சப்தமில்லாமல் உரக்க அழைத்தில்
வலிக்கிறது மனது
வலியினூடே ரகசியமாய்
கேட்க நினைக்கிறது
"என் நினைவுகள் உனக்கு வருமா??"

இயல்பாய்....
பிரிந்து போனாய்
உன் நினைவுகளை விட்டுவிட்டு
பிரிவதற்கான கடைசி நேரங்களில்
என் கண்ணில் நிலைகுத்தி நின்ற
உன் பார்வை
'புரிகிறது' என்று சொன்னதாய்
புரிந்துகொள்கிறது மனது.

நீ இல்லாத போதும்
நினைவுகளில் உன் இருப்பை
கண்காணித்துக் கொண்டே இருக்கிறது
உன் கண்கள்

இன்று இல்லாவிட்டாலும்
என்றைக்காவது சொல்லிப்போ..
புரிந்து கொண்டதாய்
இல்லையென்றாலும்
தெரிந்து கொண்டதாய்
என் காதலை

- பிரேம்

பென்ஸ்
13-12-2005, 09:20 AM
வாருங்கள் கல்வேட்டு...
ரெம்ப நாளைக்கு அப்புறம் வந்து ஒரு கலாசல் கவிதை....
*/உன் பெயரை
சப்தமில்லாமல் உரக்க அழைத்தில்
வலிக்கிறது மனது
வலியினூடே ரகசியமாய்
கேட்க நினைக்கிறது
"என் நினைவுகள் உனக்கு வருமா??"/*
எதார்த்தமான எதிர்பாப்புகள்....ஏக்கங்கள்

*/இயல்பாய்....
பிரிந்து போனாய்
உன் நினைவுகளை விட்டுவிட்டு
பிரிவதற்கான கடைசி நேரங்களில்
என் கண்ணில் நிலைகுத்தி நின்ற
உன் பார்வை
'புரிகிறது' என்று சொன்னதாய்
புரிந்துகொள்கிறது மனது./*


இதுக்கு மேல் அவள் என்ன சொல்ல வேன்டும்யா...

இளசு
14-12-2005, 06:14 AM
கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
என்ற கூக்குரல்களிடையே ..

பார்வை ஒன்றே போதுமே...
பல்லாயிரம் சொல் வேண்டுமா...

என்ற பக்குவ வரிகள்..

----------------------------------------------

சொல்லாமல் பிரிவதென்பது
முடியாத கோலம்..
முடிக்க முடியுமா...
என மனம் ஏங்குவது நியாயம்....


---------------------------------


அரவணைக்கப்படுவது
அடுத்த கட்டம்..
அங்கீகரிக்கப்பட்டோமா
என்பதே முதல் கட்டம்..
-------------------------

முழுமடையாத ஆயுள்..
நினைவு முருங்கைகளின் மேல்
அலைபாயும் காதல்...
நிகழ்ந்தது -- காதலின் மரணமா?
இடைவேளையா?


உங்கள் ரணவலி
படிக்கும் எனக்கும்..



பாராட்டுகள் கல்வெட்டு அவர்களே...