PDA

View Full Version : எதிர்பார்த்து காத்திருப்பேன்



thirukanaga
12-12-2005, 08:42 PM
சுற்றியவலையில்
சிக்கிய வலியில்
பற்றிய துயரம்
பார்வையில் பாரம்

கண்கள் பார்த்திருக்க
காலமும் அதைமறைக்க
எண்ணத்தில் இல்லாத
ஏதேதோ நடந்ததென்ன

யாராரோ வருகின்றார்
யாலங்கள் காட்டுகின்றார்
ஆறுதல் அவர் சொன்னால்
மாறுதல் மனத்திலன்றோ

நண்பனென்றிருந்தவனே
நம்பிக்கையில் நஞ்சு வைத்தால்
நெஞ்சத்திலே விஞ்சும் துன்பம்
நினைவினையே நிறுத்தி எஞ்சும்

நட்புதனை வலையாய் விரித்து
நம்பிக்கையை தீனியாக்கி
அன்புகொண்டு வந்தவனாம்
என்னையதில் வீழவைத்தாய்

வீழ்ந்த நான் விழுவதென்று
விதியிலே இருக்குமென்றால்
எழுவதற்கு ஒரு நாளை
எழுதி அதில் வைத்திருப்பார்

இன்று மண்ணைப்பார்க்கும் கண்கள்
எழுந்துலகைப் பார்ப்பதற்கு
இனியொரு நாள் வருமென்று
எதிர்பார்த்து காத்திருப்பேன்

சிக்கியது நானென்றாலும்
சிதைந்தது நட்புதானே
பட்டதுன்பம் விரவிலாறும்
பழிகொண்ட நெஞ்சு பார்த்து நிற்கும்

பென்ஸ்
13-12-2005, 03:01 AM
என் வாழ்வில் எதையோ நியாபகபடுத்துகிறிர்கள் திருகனகா...

பாராட்டுகள்

மதி
13-12-2005, 03:11 AM
என் வாழ்வில் எதையோ நியாபகபடுத்துகிறிர்கள் திருகனகா...

பாராட்டுகள்
வலிகளும் துயரங்களும் இயற்கை தானே பென்ஸ்...

நல்ல கவிதை..
பாராட்டுக்கள் திருகனகா..

இளசு
13-12-2005, 05:37 AM
துரோகத்தின் வலி -வடு ஆழமானதுதான்.

அந்த வலி இந்த வரிகளில்...

மீண்டும் கண்ணதாசனை நினைவுபடுத்துகிறீர்கள்.

குறிப்பாய் -

சிக்கியது -சிதைந்தது வரிகளில்..

(கடலில் விழுந்த நண்பனுக்கு
கைகொடுத்தேன் நான் கரையேற
கரைக்கு அவனும் வந்துவிட்டான்
கடலில் நான் தான் விழுந்துவிட்டேன்..

--என்பார் கவியரசு)

பாராட்டுகள் திருகனகா...

thirukanaga
13-12-2005, 08:53 AM
நன்றி அனைவருக்கும்

kavinila
13-12-2005, 09:10 AM
அருமையான கவிதை திருகனகா. நட்பு என்றால் நம்பிக்கை அன்பு பற்று இருக்க வேண்டும். இல்லையெல் அது நட்பல்ல வலிகளை மறந்துவிட்டு புலியாக எழுங்கள்