PDA

View Full Version : நதியின் சலனங்கள்



bharathappriyan
12-12-2005, 05:16 PM
காதல் புலம்பல்
--------------
* கண் மை கொண்டே
எனைக் கடத்திச் செல்லும்
மந்திரவாதி நீ.
மாற்று மருந்துண்டு
உண்மையான மந்திரவாதியின் மையிக்கு.
ஆனால் எனக்கு?

* உன்னையுமறியாமல்
என் ஆயுளைக் குறைக்கிறாய்
உன் ஒவ்வொரு சிரிப்பினாலும்.

* உன் உதட்டின் வார்தைகளுக்காகவே
உன் முகம் தேடும்
என் இதயம்
உனைப் பார்த்தவுடன்
பட்டாம்பூச்சியாய் படபடப்பது ஏனோ?

* மெலிந்த தேகம் கொண்டு
என்னையும்
மெலிய வைக்கிறாய்.

* கயிறு அறுபட்ட காற்றாடி போல்
அலைந்து கொண்டிருக்கிறது
மனது நிலையில்லாமல்,
உன் ஒற்றைப் பார்வையால்.

* விக்கல் வரும் போதெல்லாம்
நீ தான் நினைக்கிறாய் என்று
அடுத்த விக்கலை
எதிர்பார்க்கிறது மனது.

* இப்பூமியெங்கும் வியாபித்திருக்கும்
காற்றைப் போல்
எத்தனையோ பெண்கள்.
அதில் நீ,
என் உயிர்க் காற்று.
என்னை சுவாசிக்க வைப்பதால்.

* தினமும் உனது எடையை
சரி பார்க்கிறேன்
எடை பார்க்கும் இயந்திரத்தில்.
ஏனெனில்,
என்னில் தானே நீ இருக்கிறாய்.

*சொல்லி விடத் துடிக்கிறது
மனது,
தரையிலிட்ட மீனாய்.
என் முகம் பார்த்துச் சிரிக்கும்
என் கண்ணடி பிம்பம் ஒரு புறம்.
என் காதல் உணர்வுகளை
ஏளனமாய் பார்க்கும்
நமது நட்பு மறுபுறம்.

தீயிலிட்ட புழுவாய்த் துடிக்கிறேன்.
மரணத்தின் வாசல்களை மிதிக்கிறேன்.
காலத்தின் கைகளில்
காதலைக் கொடுத்து விட்டு
காத்திருக்கிறேன்,
காத்திருப்பேன்,
என் ஆயுள் முழுமைக்கும்.

Narathar
12-12-2005, 06:23 PM
நண்பனுக்கு ஒரு கவிதை.............
தாய் சகோதரிக்கு ஒரு கவிதை..............
காதலிக்கோ கவிதை தொகுப்பு....... ம்கூம்
நன்னயிருக்கு! நன்னாயிருக்கு

இளசு
13-12-2005, 06:02 AM
ஏனோ...

இந்த வியாதி அடுத்தவங்களுக்கு வந்தா
இந்த வைத்தியனுக்குக் கொண்டாட்டம்..

கவிதை வருமானம் கொட்டுதில்ல...


நட்பு -காதல் ஊசலாட்டம்..
நீ - நான் ஆள் மாற்றம்
சுவாசமே அவளான நிலை..

ஆகா... அதுவும் நோய் முத்திப்போன நிலையில் இருப்பவர்களால்தான்
காதல் கவிதை துறையே கொழிக்கிறது..


வளர்க உங்கள் நோய்... வாழ்த்துகள் பாரதப்ரியன்..

Narathar
14-12-2005, 11:44 PM
ஏனோ...
இந்த வியாதி அடுத்தவங்களுக்கு வந்தா
இந்த வைத்தியனுக்குக் கொண்டாட்டம்..


சரி இப்போ யாரு நோயாளி யாரு வைத்தியன்???

RRaja
22-12-2005, 08:31 AM
சரி இப்போ யாரு நோயாளி யாரு வைத்தியன்???
இது இத்தனை நாள் தெரியாமல்... நீங்கள் சீனியர் மெம்பர் தானே!

வைத்தியர் இளசு, சீக்கிரம் பிரியனின் நோயைக்குணப்படுத்த வழிகளைச் சொல்லிவிடுங்கள்.