PDA

View Full Version : நதியின் சலனங்கள்



bharathappriyan
12-12-2005, 04:24 PM
வேலையற்றவனின் சந்தோசம்
---------------------------
என்னால் முடியும் எனும் போதும்
ஒரு டம்ளர் தண்ணியென்று
தங்கையிடம் கேட்பேன்
தங்கையின் சந்தோசத்திற்காக.

பின் கழுத்தில் விரல் வைத்து
கூசச் செய்து விளையாடுவேன்
எப்போதாவது முகம் மலர்ந்து சிரிக்கும்
தாயின் சந்தோசத்திற்காக.

அம்மாவுக்கு பட்டுப்புடவை,
தங்கைக்கு கால் கொலுசு.
நிஜமாய் முடியாததால்
அவ்வப்போது
கனவில் வாங்கித் தருவேன்,
என்னுடைய சந்தோசத்திற்காக.

Narathar
12-12-2005, 06:21 PM
டீ ராஜேந்தரின் வண்ணநிலவே உன்னை உருக்கி தங்கச்சிக்கு தங்க நகை செய்திடவோ பாடலை நினைவூட்டியது உங்கள் கவிவரிகள்.

வாழ்த்துக்கள்

இளசு
13-12-2005, 05:57 AM
இந்த உலகில் மிக மிக உயர்வான, மனதை வருடும் மகிழ்ச்சிகள்
எல்லாமே பணத்தால் வாங்க முடியாதவை..

உங்கள் மயிலிறகு வருடல்களும் அந்த விலையில்லாப் பட்டியலில்.

அழகாய் எழுதுகிறீர்கள் பாரதப்ரியன். அன்பும் பாராட்டும்..