PDA

View Full Version : வணக்கம் தமிழ் கு(ம)யில்களே...



kavinila
12-12-2005, 09:06 AM
பிறந்தது
இந்து சமுத்திரத்தின் முத்தில்
இருப்பது
நள்ளிரவுச் சூரியனாட்டில்
இழத்தது
எல்லாம் எண்ணில்லாதவை
இருப்பது ஒன்றே
நான் கற்ற தமிழ்
இணைப்பது எம்மை அக்
கன்னித் தமிழ்

Narathar
12-12-2005, 09:39 AM
உங்களை பிரியாமல் ஒட்டிக்கொண்டிருக்கும் அந்த கன்னித்தமிழ் உலகத்தின் எந்த மூலைக்கு நீங்கள் சென்றாலும் உங்களை வாழவைக்கும்........

கவலை வேண்டாம்!!!!!!!

மன்றத்துக்குள் வருக வருக என வரவேற்கின்றேன்...............

பென்ஸ்
12-12-2005, 09:49 AM
வாருங்கள் கவிநிலா....

தங்கள் கவிதைகளை படித்து வருகிறேன்.. அருமை...

இந்துசமுத்திரத்தின் முத்தில் பிறந்த நீர் இம்மன்றத்தின் சொத்து...

மதி
12-12-2005, 10:09 AM
வாருங்கள் கவிநிலா,
தங்கள் வரவு நல்வரவாகட்டும்...

நண்பன்,
மதி

பாரதி
12-12-2005, 12:03 PM
உலகமே உள்ளங்கை கணினியில் அடங்கி விட்டது.
அடங்காத்தமிழ் நம் அனைவரையும் அரவணைத்துக்கொண்டிருப்பதால் ஒரே வீட்டில் இருப்பதைப் போலத்தான் உணர்கிறோம் நண்பரே. உங்கள் கவிதைச்சாரல்கள் தொடர்ந்து தூறட்டும்.

அறிஞர்
12-12-2005, 07:00 PM
வாருங்கள் அன்பரே... தமிழர் என்ற உணர்வே நமக்கு தெம்பு.

தமிழின் அருமையை இங்கு குடும்பமாய் உணர்வோம்....

Shanmuhi
12-12-2005, 07:21 PM
வணக்கம் வாருங்கள் கவிநிலா...
எப்படி நலமா...? ? ?

இளசு
13-12-2005, 12:14 AM
இனிய வரவேற்பு கவிநிலா அவர்களே..

தமிழ் .... நம் பாலம்... இணைவோம் வாருங்கள்..

உதயா
13-12-2005, 03:07 AM
கவி.. நிலா... நிலாவே கவிதை படிக்கிறது (பதிக்கிறது) அருமை.. தொடறட்டும்.

kavinila
13-12-2005, 09:19 AM
பாராட்டுக்கு நன்றிகள்

kavinila
13-12-2005, 09:23 AM
வணக்கம் வாருங்கள் கவிநிலா...
எப்படி நலமா...? ? ?
நான் நல்ல சுகம் நல்ல குளிர் சண்முகி தாங்கள் எப்படி சுகம் சண்முகி?

இளந்தமிழ்ச்செல்வன்
18-12-2005, 11:50 AM
வாருங்கள் கவிநிலா. பெயருக்கேற்றார் போல் தலைப்பும், அறிமுகமும். அருமை

அழகன்
04-01-2006, 08:08 AM
வணக்கம் கவிநிலா அவர்களே உங்களை மன்றத்தில் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி.

pradeepkt
04-01-2006, 10:02 AM
கவிநிலா உங்களுக்குத் தாமதமானது என்றாலும் அன்பான வரவேற்புகள்