PDA

View Full Version : பழைய மன்றம்!poo
12-12-2005, 08:05 AM
அன்பு நிர்வாகிகளே /நண்பர்களே

என்னால் பழைய மன்றத்தில் உள்ளவற்றை படிக்க முடியவில்லை. எழுத்துரு மாறியுள்ளது. எப்படி அதை படிப்பது?!!

aren
12-12-2005, 08:32 AM
எனக்கும் அந்த பிரச்சனை இருக்கிறது.

அறிஞர்
12-12-2005, 09:43 PM
முழுவதும் யுனிகோட் கன்வெர்ட் பண்ணிதான் படிக்கவேண்டும். எந்த பகுதி வேண்டும் எனச்சொல்லுங்கள்.

poo
13-12-2005, 07:08 AM
ரோஜா மன்றத்தில் முக்கிய தகவல்கள் நிறைய இருக்கின்றன..

கணினிக்கட்டுரைகள் பகுதி வேண்டும் அறிஞரே... இதுபோன்ற முக்கிய பகுதிகளை முதலில் மாற்றம் செய்தால் பயனுள்ளதாக இருக்குமே?!

இராசகுமாரன்
13-12-2005, 07:57 AM
பழைய மன்ற பதிப்புகளை எனக்கு படிக்க முடிகிறதே? ஒருவேளை என் கணணியில் அதற்கு தேவையான எழுத்துரு இருக்கிறதோ? நான் சோதித்து பார்த்துவிட்டு கூறுகிறேன்.

அறிஞர்
13-12-2005, 01:40 PM
பழைய மன்ற பதிப்புகளை எனக்கு படிக்க முடிகிறதே? ஒருவேளை என் கணணியில் அதற்கு தேவையான எழுத்துரு இருக்கிறதோ? நான் சோதித்து பார்த்துவிட்டு கூறுகிறேன். நான் யுனிகோட் மாத்திரம் வைத்துள்ளேன். என்னால் படிக்க இயலவில்லை. இதற்கு மேலும் சில... எழுத்துருக்கள் தேவையென நினைக்கிறேன். இராசகுமாரன் கண்டுபிடித்துக்கொடுங்கள்.

பாரதி
13-12-2005, 02:04 PM
எனக்கும் எந்தப்பிரச்சினையும் இன்றி தெளிவாக காண முடிகிறது. TSc Avarangal எழுத்துருவை வைத்திருக்கவேண்டுமோ..?

இராசகுமாரன்
14-12-2005, 06:24 PM
அறிஞரே,

Murasu Anjal, அல்லது TSC_Avarangal இரண்டில் ஏதாவது ஒரு மென்பொருள் இருந்தால் நிச்சயம் தெரியும். முயற்சித்துப் பாருங்கள்.

aren
15-12-2005, 02:16 AM
நானும் முயற்சி செய்கிறேன்.

poo
16-12-2005, 06:03 AM
நான் இரண்டு (முரசு மற்றும் ஆவாரங்கல்) மென்பொருள் மற்றும் எழுத்துருக்களை முறையே நிறுவி சோதனை செய்தேன்.. படிக்க முடியவில்லை. முன்பு யுனிகோட் படிக்க முடியவில்லை என வட்டார மொழியை மாற்றம் செய்து, இங்கே உலாவியிலும் எழுத்துருவை யுனிகோட் என (யூசர், தமிழ், லடின் மூன்றிலும்) மாற்றினேன். அதனனல் இப்படி நிகழ்ந்ததா?! ஆனால் இப்போது அதை மாற்றினாலும் படிக்க முடியவில்லை!

aren
26-01-2006, 03:47 PM
நானும் பலமுறை முயற்சி செய்துவிட்டேன், ஆனால் நேராக படிக்கமுடியவில்லை. காரணம் தெரியவில்லை.

இளசு
27-01-2006, 10:10 PM
முரசு அஞ்சல் பின்னணியில் இருந்தால் தெரிகிறதே அன்பின் ஆரென்?

aren
28-01-2006, 02:30 PM
முயற்சி செய்துவிட்டேன் இளசு அவர்களே. ஒன்றும் முடியவில்லை. ஏதோ செட்டிங்கில்தான் மாற்றம்தேவை என்று நினைக்கிறேன். எப்படி செய்வது என்று தெரியவில்லை.

kavitha
20-03-2008, 11:10 AM
பழைய மன்ற பதிவுகளை எங்கு சென்று படிப்பது? பழைய சுட்டியை சொடுக்கினால், எனக்கு பயனாளர் உரிமை இல்லை என்ற பிழைச்செய்தி வருகிறது. கண்காணிப்பாளர்களை உதவ வேண்டுகிறேன்.

அமரன்
20-03-2008, 11:15 AM
அக்கா..
சென்ற வருடம் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினைத் தொடர்ந்து, அவை வேறு இடத்தில் பத்திரப்படுத்தப்பட்டன. கொஞ்சம் கொஞ்சமாக ஒருங்குறிக்கு மாற்றி வருகின்றோம். விரைவில் எல்லாத்தையும் மாற்ற முயல்கின்றோம்.

ஓவியன்
20-03-2008, 12:39 PM
பழைய மன்ற பதிவுகளை எங்கு சென்று படிப்பது? பழைய சுட்டியை சொடுக்கினால், எனக்கு பயனாளர் உரிமை இல்லை என்ற பிழைச்செய்தி வருகிறது. கண்காணிப்பாளர்களை உதவ வேண்டுகிறேன்.

திஸ்கி எழுத்துருவிலுள்ள பதிவுகளில் உங்களுக்கு உடனடியாகத் தேவைப்படும் பதிவுகளைக் குறிப்பிட்டு பொறுப்பாளர்களில் யாருக்காவது தனிமடலிடுங்கள் அக்கா, பொறுப்பாளர்கள் நாம் அந்த திரிகளை ஒருங்குறிக்கு மாற்றி உங்களால் பார்வையிட ஆவன செய்யக் காத்திருக்கின்றோம்.

இளசு
20-03-2008, 07:04 PM
கவீயின் பிரசினை எனக்கும்..

படிக்க முடிந்தால்தானே இன்னின்ன திரிகள் தேவையெனச் சொல்ல?

தேனியூனி இறக்கியும் எனக்கு எல்லாம் கட்டம்கட்டமாய்த் தெரிகிறது.

எதை இறக்கி பழையனவற்றை வாசிக்க இயலும் எனத் தெரியவில்லை.

அன்புரசிகன்
20-03-2008, 08:10 PM
உங்களின் திஸ்கி பதிவுகளை படிக்கவேண்டுமாயின் முதலில் உங்கள் கணினி உலாவியின் என்கோடிங் ஐ western european (ISO) ற்கு மாற்றி பின்னர் அந்த பதிவை copy செய்து கீழே உள்ள மாற்றிமூலம் மாற்றி படிக்கலாமே...

அக்னி
20-03-2008, 08:19 PM
உங்களின் திஸ்கி பதிவுகளை படிக்கவேண்டுமாயின் முதலில் உங்கள் கணினி உலாவியின் என்கோடிங் ஐ western european (ISO) ற்கு மாற்றி பின்னர் அந்த பதிவை copy செய்து கீழே உள்ள மாற்றிமூலம் மாற்றி படிக்கலாமே...
ISO வில் என்கோடிங்கை நிரந்தரமாக வைக்க முடியுமா...
அப்படியானால் எப்படி?
ஏனென்றால், அடுத்த பக்கம் போனாலோ, அல்லது பக்கத்தைப் புதுப்பித்தாலோ மீண்டும் UTF8 இற்குத் தானாகவே வந்து விடுகின்றதே...

அன்புரசிகன்
20-03-2008, 08:21 PM
அவ்வாறுதான் வரும். User defined இனால் செய்யலாம் என்று நினைக்கிறேன்...

அன்புரசிகன்
20-03-2008, 08:35 PM
தேனியூனி இறக்கியும் எனக்கு எல்லாம் கட்டம்கட்டமாய்த் தெரிகிறது.

எதை இறக்கி பழையனவற்றை வாசிக்க இயலும் எனத் தெரியவில்லை.

இதற்கு இவ்வாறு செய்துபாருங்கள். எனக்கு IE ற்கு சரிவரவில்லை. ஆனால் நெருப்பு நரியில் Tools > Option > Content ல் Fonts and Colour இல் யுனிதேனி ஐ தெரிவுசெய்யுங்கள்.... பின்னர திஸ்க்கி பதிவுக்கு வந்தவுடன் பக்கத்தின் என்கோடிங் ஐ western european (ISO) ற்கு மாற்றிடுங்கள். இப்போது உங்களால் படிக்க முடியும்...

IE ல் இவ்வாறு செய்தும் படிக்க முடியல....

இளசு
20-03-2008, 08:47 PM
நன்றி அன்பு நன்றி அக்னி

பாரதியின் உதவிப்படி இதையெல்லாம் செய்துபார்த்தால்..
இப்போ கொம்பு கொம்பாய் தெரியுது.....

kavitha
25-03-2008, 10:39 AM
உங்களுக்கு உடனடியாகத் தேவைப்படும் பதிவுகளைக் குறிப்பிட்டு பொறுப்பாளர்களில் யாருக்காவது தனிமடலிடுங்கள் அக்கா,

நன்றி ஓவியன்.
இளசு அண்ணாவின் 'நதிக்கரையில் இளவரசி' கவிதை.
அறிஞர் அவர்களின் 'அம்மா' சிறுகதை - இரண்டும் வேண்டும்.
பாரதி அவர்களின் உதவியால் நண்பனின் கவிதை மட்டும் கிடைத்திருக்கிறது. இவை மூன்றும் மின்னிதழுக்கு பரிந்துரைக்கப்பட்ட பதிவுகள்.


"படிக்க முடிந்தால்தானே இன்னின்ன திரிகள் தேவையெனச் சொல்ல?"
சரியாகச் சொன்னீர்கள் அண்ணா. எனது கவிதைகள் அனைத்தும் ஏற்கனவே சேமிக்கப்பட்டு இருப்பதால் கவலை இல்லை. பிறரின் பதிவுகளை நான் எப்படித்தேட...?ம்!:traurig001::mini023::icon_rollout:

அறிஞர்
25-03-2008, 01:39 PM
நன்றி ஓவியன்.

அறிஞர் அவர்களின் 'அம்மா' சிறுகதை - இரண்டும் வேண்டும்.


இளசு அண்ணாவின் 'நதிக்கரையில் இளவரசி' கவிதை.

அம்மா (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5155) இங்கு உள்ளது.

இளசுவின் கவிதையை விரைவில் தருகிறோம்.

அமரன்
25-03-2008, 03:38 PM
இதோ அண்ணனின் நதிக்கரை இளவரசி.
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=2628

kavitha
27-03-2008, 10:29 AM
அறிஞருக்கும், அமரனுக்கும் எனது கோடி நன்றிகள். :icon_b:

சூரியன்
30-03-2008, 01:33 PM
பழைய மன்றத்திலுள்ள பதிப்புகளை சரிசெய்வது எப்போது?

அமரன்
30-03-2008, 03:17 PM
பழைய மன்றத்திலுள்ள பதிப்புகளை சரிசெய்வது எப்போது?
வெகு விரைவில்..