PDA

View Full Version : பெங்களூர்aren
12-12-2005, 12:34 AM
பெங்களூர் பெயரை Bangalore என்பதிலிருந்து Bengalure என்று மாற்றப்போகிறார்களாம்.

சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய பெயர்கள் கொஞ்சம் எளிதாக மற்றவர்களுக்கு சொல்லவரும், ஆனால் Bengalure என்பது கொஞ்சம் கடினமாக இருக்கும்.

நகரத்தை விருத்தி செய்வதை விட்டு விட்டு ஏன் இந்த அரசியல்வாதிகள் இப்படி சீப்பான ஆதாயத்தைத் தேடுகிறார்கள் என்று தெரியவில்லை.

இந்த கர்நாடக அரசியல்வாதிகளின் குளறுபடியினால் சென்னைக்கு லாபம் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

gragavan
12-12-2005, 04:23 AM
ஓ பேர மாத்தப் போறாங்களா? மாத்தட்டும். மாத்தட்டும். இதுவும் கிட்டத்தட்ட பெங்கேளூர் என்றுதானே உச்சரிக்க வருகின்றது. பார்க்கலாம் இந்தப் பெயர் மாற்றம் எவ்வளவு ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்று!

gragavan
12-12-2005, 04:58 AM
இனிமேல் பேங்களூர் என்பது பெங்களூரு என்று அழைக்கப்படுமாம். தமிழில் நாம் ஏற்கனவே பெங்களூர் என்றுதான் சொல்கின்றோம். ஒரு உவைக் கூட்டிக் கொள்ள வேண்டியதுதான்.

நேற்று நான் பைக்கில் அறுபது கிலோமீட்டர் தொலைவில் இருந்த காட்டி சுப்பிரமணியா என்ற கோயிலுக்குத் தனியாகச் சென்றேன். இதுவரை நான் சென்ற பொழுதெல்லாம் சாலை மிகச்சிறப்பாக இருந்தது. இப்பொழுது குண்டும் குழியுமாக இருக்கின்றது. கிட்டத்தட்ட நூற்று இருபது கி.மீ பயணம் செய்து விட்டு வீட்டிற்கு வந்தால் மேல்வலி. அப்பாஆஆஆஆஆ! இதைச் சரிசெய்ய வழியைக் காணோம்.

என்னோட பைக் கிட்ட மானசீகமா மன்னிப்பு வேற கேட்டுக்கிட்டேன். வேற என்ன செய்ய.......

அது சரி...இந்தப் பேரு மாத்தமெல்லாம் நம்மளும் செஞ்சோமே......

aren
12-12-2005, 11:25 AM
என்னோட பைக் கிட்ட மானசீகமா மன்னிப்பு வேற கேட்டுக்கிட்டேன். வேற என்ன செய்ய.......

அது சரி...இந்தப் பேரு மாத்தமெல்லாம் நம்மளும் செஞ்சோமே......

பாவம், பைக் நிஜமாகவே வாழ்க்கையை வெறுத்திருக்கும். அதிலும் உங்க வெயிட்டைவேறு தாங்கிக்கொண்டு. நிஜமாகவே பாவம்தான்.

நாமும் பேரை மாத்தினோம். இல்லையென்று சொல்லவேயில்லை. ஆனால் நம்முடைய பெயர் உச்சரிப்பதற்கு ஒன்றும் அவ்வளவு கஷ்டமாக இருக்கவில்லை. எனக்கு மெட்ராஸ் என்று சொல்வதுதான் இன்றும் பிடித்திருக்கிறது.

pradeepkt
12-12-2005, 12:50 PM
சென்னைப் பெயர் மாற்றம் நாங்கள் தில்லிக்குச் சுற்றுலா சென்றிருந்த நேரத்தில் ஏற்பட்டது.
திரும்பி வந்து மெட்றாஸ் செல்லும் தமிழ்நாடு விரைவு வண்டியைக் கண்டு பிடிக்கப் பட்ட பாடு...
சரி, ரோஜாவை எந்தப் பெயர் சொல்லிக் கூப்பிட்டாலும் மணக்கும், சாக்கடையை எந்தப் பெயர் சொல்லிக் கூப்பிட்டாலும்....
இந்தக் கூத்தில் பெங்களூரை என்ன செய்யப் போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

அறிஞர்
12-12-2005, 07:03 PM
வித்தியாசமான அரசியல்வாதிகள்....... தங்கள் ஆட்சி நிலைக்க நியூமராலாஜி... படி செய்கிறார்களோ... என்னவோ

gragavan
13-12-2005, 04:45 AM
பாவம், பைக் நிஜமாகவே வாழ்க்கையை வெறுத்திருக்கும். அதிலும் உங்க வெயிட்டைவேறு தாங்கிக்கொண்டு. நிஜமாகவே பாவம்தான்.

நாமும் பேரை மாத்தினோம். இல்லையென்று சொல்லவேயில்லை. ஆனால் நம்முடைய பெயர் உச்சரிப்பதற்கு ஒன்றும் அவ்வளவு கஷ்டமாக இருக்கவில்லை. எனக்கு மெட்ராஸ் என்று சொல்வதுதான் இன்றும் பிடித்திருக்கிறது.ஆரென், பெங்களூர் பெயர் மாற்றத்திலும் உச்சரிப்புப் பேதம் மிகக்குறைவு. பெங்களூரு என்று அழைக்கப் போகின்றார்கள். அவ்வளவே.

சென்னைப் பெயர் மாற்றம் வந்த தருணத்திலிருந்தே நான் சென்னை என்றே சொல்லிப் பழகிக் கொண்டேன். எல்லாரும் மெட்ராஸ் என்று சொன்ன பொழுது நான் மட்டும் விடாமல் சென்னை சென்னை என்றே சொல்லிக் கொண்டிருந்தேன். இப்பொழுது அதுவே ஃபாஷன் மாதிரி ஆகிவிட்டது.

இளசு
13-12-2005, 05:48 AM
நேற்று நாம்.. இன்று அவர்கள்.. நாளை?

பழமையை புதுப்பிக்கும் இது ஒரு தொடர்கதை..

பஞ்சதந்திரம் படத்தில் சிம்ரன் ஒரு காட்சியில் பிசினஸ் எனச் சொல்லி உடனே..'பிசினஸ்ஸு' என நக்கலடிப்பாரே... அது ஏனோ நினைவுக்கு வருகிறது.


அதுபோகட்டும் அன்பின் ஆரென்..

ராகவனின் எடை தாங்கிய அறுபது கிமீ பைக் பயணத் தகவலில்
தனியாக 'தனியாக ' என வருகிறதே.. கவனித்தீர்களா?

பென்ஸ்
13-12-2005, 08:43 AM
நேற்று நாம்.. இன்று அவர்கள்.. நாளை?

ராகவனின் எடை தாங்கிய அறுபது கிமீ பைக் பயணத் தகவலில்
தனியாக 'தனியாக ' என வருகிறதே.. கவனித்தீர்களா?

கவனிச்சாசுயில்லை... இனிமேல் PGK அவர்களிடம் இருந்து துப்பறியும் "கண்ணாயிரம்" முகவரியை வாங்க வேண்டும்... :p :p :D :D

யாரை ஏமாத்துறிங்க..:rolleyes: :rolleyes: :D :D

அழகன்
10-01-2006, 05:26 AM
ஓகோ அப்படியா விசயம் எப்ப மாத்துறாங்களாம்

அறிஞர்
10-01-2006, 07:53 PM
ஓகோ அப்படியா விசயம் எப்ப மாத்துறாங்களாம் மன்றத்துக்கு தான் நீண்ட விடுமுறை எடுத்து வந்தீர்கள் என்று நினைத்தேன். உலகச்செய்திகளுக்குமா.... :confused: :confused:

தாமரை
27-01-2006, 04:49 AM
பெந்த காளூரு என்று மாற்றாமல் ஏன் பெங்களுரு என்று தெலுங்கில் மாற்றுகிறார்களாம்.. (அட கடைசியில் உ சேர்த்தால் தெலுங்கு தானே????)