PDA

View Full Version : விடைகொடு



kavinila
08-12-2005, 08:33 PM
நீ
அறிமுகமில்லாதவள்
அழகிலோ
அருவியானவள்
விதிவழி
விளைந்தவள்
என் மனம்
புகுந்தவள்
என்னையே
நுகர்ந்தவள்
விரைகிறேன்
உந்தன் பின்னால்
விடைகொடு
உந்தன் கண்ணால்

அறிஞர்
08-12-2005, 08:41 PM
விடைகொடு
உந்தன் கண்ணால்
விடை எதுக்கு அன்பரே.... :) ;)

kavinila
08-12-2005, 09:01 PM
புரியவில்லையா?
காதல் காதல் காதல்

அறிஞர்
08-12-2005, 11:49 PM
புரியவில்லையா?
காதல் காதல் காதல் காதல்ன்னு புரிஞ்சது.. சம்மதிக்கவா.. விடை...
சும்ம கலாய்த்தேன். தப்பாக எடுத்துக்கொள்ளாதீர்கள்..

பொதுவா... விடை கொடு என்று பிரிவுக்கு சொல்வர். இங்கு உபயோகித்த பாங்கு அருமை....

தொடருங்கள்... அன்பரே

gragavan
09-12-2005, 07:18 AM
விடை கொடு என்பதைப் பெரும்பாலும் பிரிவிற்குச் சொல்வார்கள். அதையே உறவுக்குக் கேட்ட கவிநிலவின் கவிப்பாங்கு ரசிக்கவைத்தது. அருமை அருமை.

kavinila
09-12-2005, 01:07 PM
பிரிவோ இணைவோ விடையில்தான் தெரியும்

Narathar
16-12-2005, 11:52 PM
சீக்கிரமே விடை கிடைக்கும்.............

Mano.G.
17-12-2005, 12:34 AM
"விடை கொடு" டூ ன் ஒன் போலவோ?
சரி என பதில் கொடு இல்லையேல்
என்னை அனுப்பி விடு.

அதானே அர்த்தம்.


மனோ.ஜி

அறிஞர்
17-12-2005, 05:38 AM
"விடை கொடு" டூ ன் ஒன் போலவோ?
சரி என பதில் கொடு இல்லையேல்
என்னை அனுப்பி விடு.

அதானே அர்த்தம்.
மனோ.ஜி ஆஹா புது தத்துவம் அண்ணா...