PDA

View Full Version : இன்பம்



kavinila
08-12-2005, 07:47 PM
சூரியஒளியில் தொடர்நிழல் போல்
சுற்றி வந்த சொந்தங்கள்
காரிருளாம் துன்பத்தில்
காணாமல் போனதெங்கே

பாரியாய் வந்தவளும்
மாரியாய் அன்பு தந்தாள்
சாரையாய் துன்பம் வர
தூரிகையாய் தொலந்ததெங்கே

விதிவழி வரும் சாவு
விரும்பியபோது வருவதில்லை
தேடி அதை நாம் போனால்
தெய்வமும் அருள்வதில்லை

துன்பங்கள் தொடர்வதில்லை
துணிந்தவனுக்கு துன்பமில்லை
இன்பமென்று ஏதுமில்லை
இடைவிடா துன்பங்களே
வாழ்க்கையில் இன்பங்கள்

பாரதி
11-12-2005, 01:54 PM
துன்பங்களை எதிர்கொள்ளும் மனதிடம் நமக்கு வேண்டும் என்கிற அடிப்படையில் இந்தக்கவிதையை ஏற்றுக்கொள்ளலாம் நண்பரே.

இளசு
11-12-2005, 04:26 PM
எல்லாம் சரி.. சாவைத் தேடிப்போகும் அந்த ஒன்று மட்டும் வேண்டாம்.. சரீங்களா கவிநிலா..

சொல்லழகு இருக்கிறது.. கவிதைகளை இன்னும் செதுக்குங்கள்..

அதிகம் வாசியுங்கள்..அதிகம் விமர்சியுங்கள்..அதிகம் எழுதுங்கள்..


வாழ்த்துகள்..

aren
12-12-2005, 12:37 AM
துனிந்தவனுக்கு துன்பமில்லை, அருமை. நிச்சயம் அனைவரும் கவனிக்கவேண்டிய வரிகள். பாராட்டுக்கள்.

gragavan
12-12-2005, 04:09 AM
துணிந்து விட்டால் கடலும் முழ ஆழம் என்று சொல்வார்கள். ஆனால் இந்தத் துணிவு மட்டும் வேண்டாம். பாரதி கேட்ட மாதிரி "வீழ்வேன் என நினைத்தாயோ" என்று வீறு கொண்டு எழுங்கள். உங்கள் கால் பட்ட இடங்களெல்லாம் வெற்றித் தடங்கள்.

ஆனால் சொல்ல வந்ததை அழகாகச் சொல்லியிருக்கின்றீர்கள். பாராட்டுகள்.