PDA

View Full Version : டாக்டரும் மெக்கானிக்கும்



மதி
08-12-2005, 11:14 AM
ஒரு மெக்கானிக் காரின் எஞ்சினை கழற்றி பழுது பார்க்கும்பொழுது அவ்வழியே அவ்வூரின் தலைசிறந்த இதயநோய் நிபுணர் வருவதைக் கண்டார்.
அவரிடம் சென்று " டாக்டர்! உங்ககிட்ட ஒரு கேள்வி. இங்க பாருங்க.. நானும் வண்டியோட இதயம், எஞ்சினை தான் பழுது பார்க்கிறேன். வால்வ் ரிப்பேர் பண்றேன். ஆனா ஒரே மாதிரி வேல பார்த்தும் உங்களுக்கு மட்டும் ஏன் இவ்வளவு பணம் கிடைக்குது?"
டாக்டர் சொன்னார்...

"எஞ்சின் ஓடும் போது பழுது பார்க்க முயன்று பார்..தெரியும்"

இளசு
13-12-2005, 12:39 AM
மனமே மந்திரம்..உடலே யந்திரம் எனப் பாடினாலும்..

உயிருள்ள இயந்திரத்தை பழுதுபார்க்கும் பணி....?!!!!

என் பணியை ஒட்டிய கருத்துக்கு பாராட்டும் நன்றியும் ராஜேஷ்குமார்..

sarcharan
06-03-2006, 08:54 AM
இது துணுக்காக இருந்தாலும் சிந்திக்க வைக்கும் உண்மை.
மாற்றுக்கருவி கிட்டாத கட்டம் மருத்துவரது வாழவு.
துடித்துக்கொண்டிருக்கும் இருதயத்தோடு மருத்துவர்களது போராட்டம்....

எனக்கு ராக்கெட்டும், விமானமும் துணுக்குதான் ஞாபகத்துக்கு வருகிறது...

இனியவன்
13-06-2006, 12:00 PM
சும்மா சொல்லக் கூடாதப்பு விவரமான டாக்டரு தான்.
நெத்திப் பொட்டுல அடிச்ச மாதிரியே சுள்ளுன உரைச்சுருக்காரு.
இடம் பொருள் ஏவல் அப்படிங்கிறது இது தானா?

mgandhi
10-08-2006, 07:09 PM
டக்டர்கள் திறமை சாலி என்பதை நிருபித்து விட்டார்

ஓவியா
11-08-2006, 04:33 PM
மனமே மந்திரம்..உடலே யந்திரம் எனப் பாடினாலும்..

உயிருள்ள இயந்திரத்தை பழுதுபார்க்கும் பணி....?!!!!

என் பணியை ஒட்டிய கருத்துக்கு பாராட்டும் நன்றியும் ராஜேஷ்குமார்..


ஓ நீங்கள் ஒரு மெக்கானிக்கா.......

எஞ்சின் ஓடும் போது பழுது பார்க்கும் மெக்கானிக்..........:D

ஓவியா
11-08-2006, 04:35 PM
எப்படி மதி
உங்களுக்கு மட்டும் இந்த வயசுல இப்படியெல்லாம் தததுவமா வருது...

நல்ல கருத்து......நன்றி

பரஞ்சோதி
12-08-2006, 05:59 AM
நல்ல கருத்துள்ள பதிவு.

இது மாதிரி சமீபத்தில் என்னை ஒருத்தர் கேட்டார். நாம இருவரும் ஒரே வேலை தான் செய்கிறோம், பின்ன ஏன் உனக்கு மட்டும் சம்பள உயர்வு?

நீ ஒரு மாதம் விடுமுறை கேட்டால் மேலாளர் இரண்டு மாதம் எடுத்துக் கொள் என்கிறார். அதுவே நான் 2 மாதம் கேட்டால் ஏன் ஒரு மாதம் தான் தருகிறார்?

மதி
14-08-2006, 03:31 AM
எப்படி மதி
உங்களுக்கு மட்டும் இந்த வயசுல இப்படியெல்லாம் தததுவமா வருது...

நல்ல கருத்து......நன்றி
ஏன் நாங்கல்லாம் தத்துவம் பேசக்கூடாதா..???

aren
14-08-2006, 03:43 AM
எப்படி மதி
உங்களுக்கு மட்டும் இந்த வயசுல இப்படியெல்லாம் தததுவமா வருது...

நல்ல கருத்து......நன்றி

அவர் வயதிற்கு தகுந்தமாதிரிதான் வருகிறது. என்ன மதி நான் சொல்வது சரிதானே

sarcharan
14-08-2006, 07:28 AM
அவர் வயதிற்கு தகுந்தமாதிரிதான் வருகிறது. என்ன மதி நான் சொல்வது சரிதானே


காதல்ல தோத்தவன் சூப்பராக தத்துவம் சொல்வான் என்று சினிமாக்களில் சொன்னதுண்டு என்று சொல்ல வருகின்றீரோ ஆரென் அண்ணா..... ஹி ஹி

ஓவியா
14-08-2006, 01:01 PM
ஏன் நாங்கல்லாம் தத்துவம் பேசக்கூடாதா..???


பேசலாமே...
பேசுங்கோ.....பேசுங்கோ.....:D :D :D

ஓவியா
14-08-2006, 01:07 PM
காதல்ல தோத்தவன் சூப்பராக தத்துவம் சொல்வான்
என்று சினிமாக்களில் சொன்னதுண்டு என்று சொல்ல வருகின்றீரோ ஆரென் அண்ணா..... ஹி ஹி


ஹி ஹி..ஹி ஹி..ஹி ஹி

அப்ப தோத்தாச்சா......
ஆழ்ந்த அனுதாபங்கள் மதி.....;) :D

sarcharan
14-08-2006, 02:12 PM
ஹி ஹி..ஹி ஹி..ஹி ஹி

அப்ப தோத்தாச்சா......
ஆழ்ந்த அனுதாபங்கள் மதி.....;) :D


இதைப் பாருங்கய்யா மதி தோத்தா இவுகளுக்கு சந்தோசமா...

pathman
24-10-2006, 06:40 AM
டாக்டர் டாக்டர் தான் எப்படி ஒரே வார்த்தையில் புரிய வைத்துவிட்டார்